youtube

10 February 2017

அம்பிகையின் அருள் பெற சப்த கன்னியர் - காயத்ரி மந்திரங்கள் , தியான சுலோகங்கள்அம்பிகையின் அருள் பெற சப்த கன்னியர் - காயத்ரி மந்திரங்கள் , தியான சுலோகங்கள்

இந்த கட்டுரை முழுக்க  - அம்பிகையின் அருள் பெற , உறுதுணையாக நிற்கும் சப்த மாதாக்கள் , காயத்ரி மந்திரங்கள் , தியான சுலோகங்கள் பற்றியே..

சப்தமாதாக்கள் அல்லது சப்தகன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற கிராமிய தெய்வ வழிபாடு ஆகும். சக்தி அம்சத்தில் சப்த மாதர்கள் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது.

அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண் பெண் இணைவில் பிறக்காமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த கன்னிகைகள். அவர்கள் ப்ராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

ப்ராம்மி

அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி. மேற்கு திசையின் அதிபதி.கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள். நான்முகனின் அம்சமாய்த் தோன்றியவள். நான்கு முகங்கள், நான்கு கரங்கள். மஞ்சள் வண்ணம் பிடித்த வண்ணம். கமண்டலம், அக்ஷமாலையைப் பின்னிரு கரங்களில் ஏந்தி முன்னிரு கைகளில் அபயவரதம் காட்டுவாள். ருத்திராக்ஷ மாலை தரித்து அன்னவாகனத்தில் அமர்ந்திருப்பவள்.

மான் தோல் அணிந்திருப்பவள்.ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள். இவளது காயத்ரி மந்திரத்தை படிக்கும் மாணவர்கள் தினமும் ஜபித்து வந்தால்,ஞாபக மறதி நீங்கிவிடும். (அசைவம் தவிர்க்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.) ஐ.ஏ.எஸ்., வங்கிப்பணி, அரசுப்பணி முதலானவற்றிற்கு தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்துவந்தால் வெற்றி நிச்சயம்.

தியான சுலோகம்

தண்டம் கமண்டலும் சச்சாத் அஷஸீத்ரமதா பயம்

பிப்ரதி கனகச்யா ப்ராஹீ க்ருஷ்ணா ஜீனோஜ்வலா

மந்திரம்

ஓம் ப்ராம் ப்ராம்ஹ்யை நம:

ஓம் ஆம் க்ஷாம் ப்ராம்ஹீ கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே

தேவர்ணாயை தீமஹி

தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்.

மகேஸ்வரி

அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார். மகேசனின் சக்தி இவள். முக்கண் படைத்தவள். ஜடா மகுடத்துடன் காட்சியளிப்பாள். மான், மழு ஏந்தி, அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் இருப்பாள். தூய வெண்ணிறமே பிடித்த வண்ணம். வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்து வருபவள்.

இவளை வழிபட்டால்,நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள்.இவளது வாகனம் ரிஷபம் ஆகும். அம்பிகையின் இன்னொரு அம்சமாக போற்றப்படுகிறாள்.

இவர் ஐந்து முகங்களையும், ஒவ்வோர் முகத்திலும் மூன்று கண்களையும் கொண்டிருப்பார் என ஸ்ரீ தத்துவநிதி, விஷ்ணுதர்மோத்திர புராணம் என்பனவற்றிற் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீதத்துவநிதி இவருக்குப் பத்துக் கரங்கள் காணப்படுமெனவும், அவற்றுள் வலது பக்கத்திலுள்ள ஐந்து கரங்களில் ஒன்று அபய முத்திரையிலிருக்க ஏனையவற்றில் வாள், வஜ்ரம், திரிசூலம், பரசு என்பன காணப்படுமெனவும், இடது பக்கத்திலுள்ள கரங்களிலொன்று வரத முத்திரையிலிருக்க ஏனையவற்றில் பாசம், மணி, நாகம், அங்குசம் என்பன இடம் பெற்றிருக்கும் எனவும் கூறுகின்றது.  எருதினை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.

தியான சுலோகம்

சூலம் பரச்வ்தம் க்ஷீத்ர துந்துபிம் ந்ருகரோடிகாம்

வஹிந்த் ஹிம ஸங்காசா த்யேயா மஹேச்வரி சுபா.

மந்திரம்

ஓம் மாம் மாஹேச்வர்யை நம:

ஓம் ஈளாம் மாஹேச்வரி கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே

சூல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்கௌமாரி

கவுமாரி. கவுமாரன் என்றால் குமரன். குமரன் என்றால் முருகக்கடவுள். ஈசனும், உமையாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் எனப்படும் முருகக்கடவுள். முருகனின் அம்சமே கவுமாரி.

இவளுக்கு சஷ்டி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு. மயில் வாகனத்தில் வருபவள். அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே. கடலின் வயிறு கிழியுமாறு வேற்படையைச் செலுத்திய சக்தி இவள். இவளை வழிபட்டால், குழந்தைச் செல்வம் உண்டாகும். இளமையைத் தருபவர்தியான சுலோகம்

அங்குசம் தண்ட கட்வாங்கெள பாசாம்ச தததீகரை

பந்தூக புஷ்ப ஸங்காசா கவுமாரீ காமதாயினி

பந்தூக வர்ணாம் கரிகஜாம் சிவாயா

மயூர வாஹாம்து குஹஸ்ய சக்திம்

ஸம் பிப்ரதீம் அங்குச சண்ட தண்டெள

கட்வாங்கர செள சரணம் ப்ரபத்யே!

மந்திரம்

ஓம் கெளம் கெளமார்யை நம:

ஓம் ஊம் ஹாம் கெளமாரீ கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் சிகி வாஹனாயை வித்மஹே

சக்தி ஹஸ்தாயை தீமஹி

தன்னோ: கெளமாரி ப்ரசோதயாத்.வைஷ்ணவி

அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. இவள் விஷ்ணுவின் அம்சம். கருடனை வாகனமாக கொண்டவள். வளமான வாழ்வு தருபவர். சகல சவுபாக்கியங்கள்,செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும்.விஷ்ணுவின் சக்தியான இவர் நீல நிறமானவர். ஆறு கரங்களைக் கொண்டிருப்பார். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றைய கரங்களில் கதா, தாமரை என்பன காணப்படும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்டுவதாகவும் மற்றையன சங்கு, சக்கரம் ஏந்தியவாறும் காணப்படும். வைஷ்ணவி அழகிய கண்களையும், முகத்தினையும், மார்பினையும் கொண்டிருப்பார். மஞ்சள் ஆடை அணிந்திருப்பார். விஷ்ணுவிற்குரிய ஆபரணங்களை அணிந்து கருடனை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.

தியான சுலோகம்

சக்ரம் கண்டாம் கபாலம்ச சங்கம்ச தத்திகண:

தமால ச்யாமளா த்யேயோ வைஷ்ணவி விப்ரமோஜ்வகை.

மந்திரம்

ஓம் வை வைஷ்ணவ்யை நம:

ஓம் ரூம் ஸாம் வைஷ்ணவீ கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாம வர்ணாய வித்மஹே

சக்ர ஹஸ்தாயை தீமஹி

தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்

 வாராஹி

பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.

அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள். எருமையை வாகனமாக உடையவள்.

கலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பின்னிரு கரங்களில் தாங்கி அபயவரதம் காட்டுவாள். லலிதாம்பிகையின் படைத்தலைவி இவளே. தண்டினி என்ற பெயருடன் சிம்ஹ வாஹினியாய்க் காட்சி கொடுப்பாள். இவளை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும்.

வராகமூர்த்தியின் சக்தி. கறுப்பு நிறமானவர். பன்றியின் பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினையும் பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார். இவருக்கு ஆறு கரங்கள் காணப்படும். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றையனவற்றில் தண்டம், வாள் என்பன இடம் பெற்றிருக்கும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்ட மற்றையன கேடயம், பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறு காணப்படும். இவர் எருமையை வாகனமாகக் கொண்டிருப்பார் .

தண்டநாத வராகி பொன்னிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தைக் கொண்டிருப்பார். இவரது கரங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் என்பன காணப்படும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.

சுவப்ன வராகி மேக நிறமானவர். மூன்று கண்களைக் கொண்டிருப்பார். பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். வாள், கேடயம், பாசம், அரிவாள் என்பன கரங்களில் இடம்பெற்றிருக்கும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.

சுத்த வராகி நீல நிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினைக் கொண்டவர். வெண்மையான பற்கள் வெளியே நீட்டப்பட்டவாறிருக்கும். தலையில் பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். சூலம், கபாலம், உலக்கை, நாகம் என்பன கரங்களிற் காணப்படும்.தியான சுலோகம்

முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்

கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:

மந்திரம்

ஓம் வாம் வாராஹி நம:

ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாமளாயை வித்மஹே

ஹல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ வாராஹி ப்ரசோதயாத்இந்திராணி:

இந்திரனின் அம்சம். கற்பகமலர்களை கூந்தலில் சூடியவள். யானை இவளது வாகனம். சொத்து சுகம் தருபவர். தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத் தருவதிலும், மிகவும் தலைசிறந்த அதேசமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே!.

மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால், அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால், மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.

இந்திரனின் சக்தியான இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயகரம் காட்டுவாள். சத்ரு பயம் போக்குபவள். மாகேந்திரி என்ற பெயரையும் கொண்டவள்.இவரது வாகனமாகவும், கொடியாகவும் யானை இடம்பெற்றிருக்கும்.தியான சுலோகம்

அங்குஸம் தோமரம் வித்யுத் குலசம் பிப்ரதீசரை

இந்திர நீல நிபேந்திராணி த்யேயா ஸர்வஸம் ருத்திதர:

மந்திரம்

ஓம் ஈம் இந்திராண்யை நம:

ஓம் ஐம் சம் இந்திராணி கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே

வஜ்ர ஹஸ்தாயை தீமஹி

தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்.

சாமுண்டி

ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள், தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள். இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தாள்.

பதினாறு கைகள், பதினாறு விதமான ஆயுதங்கள், மூன்று கண்கள், செந்நிறம், யானைத் தோலால் ஆன ஆடையை அணிந்திருப்பவள். சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் இவளே! சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள். மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே!

இவளை வழிபட்டால்,எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு,நமக்குத் தேவையான சகல பலங்கள்,சொத்துக்கள்,சுகங்களைத் தருவாள். இனி வேறுவழியில்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது, இவளை அழைத்தால், புதுப்புது யுக்திகளைக் காட்டுவதோடு, முடியாததையும் முடித்துவைப்பாள்.

கறுப்பு நிறமானவர். பயங்கரமான தோற்றம் கொண்டவர். இறந்த மனித உடலை இருக்கையாகக் கொண்டவர். பாம்புகளை உடலில் அணிந்திருப்பார், ஒட்டிப்போன மெலிந்த வயிறு, குழிவிழுந்த கண்களைக் கொண்டிருப்பார்.

தியான சுலோகம்

சூலம் க்ருபாணம் ந்ருசிர: கபாலம் தததீகரை

முண்ட ஸ்ரங் மண்டி தாத்யேய சாமுண்டா ரக்த விக்ரஹா

சூலம் சாதததீம் கபால ந்ருசிர: கட்கான்ஸ்வ ஹஸ்தம்புஜை.

நிர்மாம் ஸாபிமனோ ஹராக்ருதிதரா ப்ரேதே

நிஷண்ணசுவா!

ரக்தபா கலசண்ட முண்ட தமணீ தேவிலலா போத்பவா

சாமுண்ட விஜயம் ததாது நமதாம் பீதிப்ரணா சோத்யதா.

மந்திரம்

ஓம் சாம் சாமுண்டாயை நம:

ஓம் ஓளம் வாம் சாமுண்டா கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே

சூல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ சாமுண்ட ப்ரசோதயாத்
🌺ஓம் சாமுண்டீஸ்வரியே நம:

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

அம்பிகையின் அருள் பெற சப்த கன்னியர் - காயத்ரி மந்திரங்கள் , தியான சுலோகங்கள்

🌺ஓம் சாமுண்டீஸ்வரியே நம:🌺

🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

6 February 2017

காமாக்ஷிய தர்ஶனம் பண்ணிட்டு போ!

காமாக்ஷிய தர்ஶனம் பண்ணிட்டு போ!

பெரியவாளை தர்ஶனம் செய்வதற்காக ஒரு தம்பதி தங்கள் ஐந்து வயதுப் பெண் குழந்தையுடன் காரில் காஞ்சிபுரம் கிளம்பினார்கள். அவர்களோடு அந்த பக்தரின் அப்பாவும் கிளம்பினார்.

சுங்குவார் சத்திரம் அருகில் வரும்போது, கூட வந்த தாத்தாவுக்கு சிறுநீர் கழிக்க வேண்டியிருந்ததால், ரோடின் ஒரு ஓரமாக வண்டியை நிறுத்திவிட்டு, அப்பாவும் மகனும் ரோடைக் க்ராஸ் பண்ணி எதிர் பக்கம் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஐந்து ஸெகண்டுக்கு ஒருமுறை குறைந்தது இரண்டு வண்டிகளாவது போய்க் கொண்டிருந்தன.

காருக்கு வெளியே தன் அம்மாவுடன் நின்று கொண்டிருந்த குழந்தை, எதிர்பக்கம் வரும் தாத்தாவை பார்த்து விட்டு, ஏதோ இப்போதுதான் புதுஸாகப் பார்ப்பது போல், "தாத்தா!.." என்று கத்திக் கொண்டு, திடீரென்று ஒரேயடியாகத் துள்ளிக் கொண்டு ரோடை க்ராஸ் செய்ய ஆரம்பித்தாள் !

வண்டிகளைப் பற்றிய பயமே அந்தக் குழந்தைக்கு இல்லை!

அம்மாவும் அப்பாவும் தாத்தாவும் பதறிப் போன ஸமயம், வேகமாக வந்த லாரி, அந்தக் குழந்தையை தூக்கி வீசி எறிந்தது!

கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட இந்த விபத்து அத்தனை பேரையும் ஸ்தம்பிக்க வைத்துவிட்டது!

அலறிக்கொண்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டு காஞ்சிபுரத்தில் ஒரு ஹாஸ்பிடலில் சேர்த்தனர்.

"கொழந்தையை ஒடனே மெட்ராஸுக்கு கொண்டு போய்டுங்க! ரொம்ப ஸீரியஸ் கேஸ்!.."

டாக்டர்கள் கைவிரித்து விட்டு, ஏதோ முதலுதவியைச் செய்தனர்.

விஷயத்தை கேள்விப்பட்டு, காஞ்சிபுரத்தில் இருந்த அவர்களுடைய ஸொந்தக்காரர் ஆஸ்பத்ரிக்கு ஓடி வந்து குழந்தையைப் பார்த்து விட்டு, நேராக பெரியவாளிடம் ஓடினார்.

"பெரியவாளைப் பாக்கறதுக்காக வர்றச்சே... வழில கொழந்தை மேல லாரி மோதிடுத்து! டாக்டர்.. கைவிரிச்சுட்டார்! பெரியவாதான் கொழந்தையைக் காப்பாத்தணும்.."

அழுதார்........

"என்னைப் பாக்க வரச்சேயா ஆக்ஸிடென்ட் ஆய்டுத்து?..."

பெரியவா...சற்று நேரம் கண்களை மூடிக் கொண்டிருந்தார். அப்புறம், பக்கத்தில் இருந்த ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்து அவர் கையில் ப்ரஸாதமாகப் போட்டார்....

"மெட்ராஸுக்கு கொழந்தையப் பாக்க போறச்சே... இதக் குடு !.......போறதுக்கு முன்னாடி, காமாக்ஷிய தர்ஶனம் பண்ணிட்டுப் போ!..."

உறவினரும் உடனேயே காமாக்ஷி கோவிலுக்குச் சென்று தர்ஶனம் பண்ணப் போனார். ஆனால், நடை சார்த்தும் நேரம் என்பதால், அவரால் ஒரே ஒரு க்ஷணம் மட்டுமே அம்பாளை தர்ஶனம் பண்ண முடிந்தது.

நெய்தீபச் சுடரில் ஸர்வாலங்கார பூஷிதையாக பச்சைப் பட்டுப் புடவையுடன், அருள் பொழியும் முகத்தோடும் அமர்ந்திருந்த அம்பாளை ஒரு க்ஷணமே தர்ஶனம் பண்ணினாலும், மனஸில் அந்தக் கோலத்தை இருத்தியபடி மெட்ராஸுக்கு பஸ் ஏறினார்.

நேராக ஹாஸ்பிடலுக்கு சென்று, ICU வில் இருந்த குழந்தையின் தலைமாட்டில் பெரியவா அனுக்ரஹித்துக் கொடுத்த ஆப்பிளை, எப்படியோ வைத்து விட்டார். அழுது கொண்டிருந்த பெற்றோரிடம் பெரியவாளிடம் விஷயத்தைச் சொன்னதைப் பற்றி கூறினார்.

"கொழந்தை coma-க்கு போய்ட்டா! மணிக்கணக்கோ, நாள்கணக்கோன்னு டாக்டர் சொல்றார்...."

அம்மா கதறினாள்.

சில மணி நேரங்கள் கழிந்தது. ICU வாஸலில் குடும்பமே அமர்ந்திருந்தது.

இதோ! குழந்தையின் உடலில் சிறு சிறு அசைவுகள்!

"Coma, மணிக்கணக்கு, நாள்கணக்கு"... என்று பெரிய பெரிய டாக்டர்கள் சொன்னதையெல்லாம் அடித்து த்வம்ஸம் பண்ணிவிட்டு, "அம்மா!..." என்று குழந்தையை அழைக்க வைத்தது... தெய்வத்தின் அனுக்ரஹம் !

அழுகையெல்லாம் நிமிஷத்தில் காணாமல் போனது. ஓரிரண்டு நாட்களில் ஓரளவு நன்றாகத் தேறிய குழந்தையை, தனி ரூமுக்கு ஷிப்ட் பண்ணினார்கள். ஆப்பிள் கொண்டு வந்த உறவினரும் கூடவே இருந்தார்.

"அம்மா....."

தீனமாகக் கூப்பிட்டாள் குழந்தை.

"என்னம்மா?...."

"எங்கூட இருந்த பாப்பா எங்கம்மா?..."

"பாப்பாவா? இங்க ஏதும்மா... பாப்பா? நீ ஆஸ்பத்ரிலன்னா இருக்க! இங்க பாப்பா யாரும் இல்லியேடா!.."

குழந்தை சிணுங்கினாள்.

"அந்தப் பாப்பா எங்கம்மா? எனக்கு... அவகூட வெளையாடணும்.."

ஏதோ அரைகுறை ஞாபகத்தில் உளறுகிறாள் என்று எண்ணி அவளை ஸமாதானப்படுத்தினாள் அம்மாக்காரி...

"எந்தப் பாப்பா? எப்டி இருந்தா சொல்லு! நா.... கூட்டிண்டு வரேன்"

"பச்சைப் பட்டுப்பாவாடை கட்டிண்டு எங்கூடவே இருந்தாளே! அந்த பாப்பாதான்!..."

மற்றபேருக்கு புரியாவிட்டாலும், ஆப்பிள் கொண்டு வந்த உறவினருக்கு பொட்டில் அடித்தார்ப்போல் புரிந்தது!

"போறதுக்கு முன்னாடி, காமாக்ஷியை தர்ஶனம் பண்ணிட்டுப் போ!..."

பெரியவா சொன்னதும், அம்பாள் ஒரு க்ஷணமே தர்ஶனம் தந்தாலும், ஹ்ருதயத்தை விட்டு அகலாவண்ணம், பச்சைப் பட்டுப் புடவையில் காஷி அளித்ததும் அவருக்குப் புரிந்தது!

மேனியெல்லாம் புல்லரித்தது!

பெரியவா சொன்னதுக்கு எத்தனை மஹத்தான அர்த்தம்!

அம்பாளே, ஒரு குழந்தை உருவில் வந்து கூட விளையாடி, விளையாட்டாகவே... அந்தக் குழந்தைக்கு உயிரூட்டியிருக்கிறாள்!

மேனியெல்லாம் புல்லரிக்கிறது!

உறவினர், மற்றவர்களுக்கு இதைச் சொன்னதும், திக்கற்றோருக்கு துணை வரும் பெரியவா இருந்த காஞ்சிபுரம் நோக்கி, விழுந்து விழுந்து நமஸ்கரித்தனர்.

பெரியவா நினைத்தால், ஆப்பிளில் கூட அம்பாளை ஆவாஹனம் பண்ண முடியும்.

ஸர்வம் ப்ரஹ்மமயம் ரே ரே!

அணுவில் இருப்பவள் ஆப்பிளில் மட்டும் இல்லாமலா போவாள்?

அம்மா...! அம்பிகே!..... நம்பிக்கை போதும்.....!

நமக்கெதற்கு மனக்கவலை? நம் தாய் நம்முடன் இருக்கும் போது!

ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்

நம்பியவரைக் காப்பது என் கடமை'

நம்பியவரைக் காப்பது என் கடமை'

கண்ணனும், பலராமனும் மாடுகளை ஓட்டிக் கொண்டு மேய்ச்சலுக்குப் புறப்பட்டனர்.

கண்ணனின் நண்பன் ஸ்ரீதாமா உள்ளிட்ட சிறுவர்களும் உடன் சென்றனர். செல்லும் வழியில் ஸ்ரீதாமா கண்ணனிடம், "கண்ணா! இதோ தெரியும் பனந்தோப்பில் கிடைக்கும் பழத்தின் சுவை அபாரமாக இருக்கும்'' என்றான்.
கண்ணனும் ஆவலுடன் வேகமாக நடை போட்டான்.

""கண்ணா! ஜாக்கிரதை! இங்கே அவ்வளவு எளிதில் யாரும் நுழைந்து விட முடியாது! இதனுள், தேனுகாசுரன் என்னும் கொடியவன் இருப்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவன் மனிதர்களை அப்படியே விழுங்கி விடுவானாம். பார்த்துப் போ! அதேநேரம், நீ மனது வைத்தால் நண்பர்களாகிய எங்களின் ஆசை நிச்சயம் நிறைவேறும்,'' என்றான்.
கண்ணன் சிரித்தபடி தோப்புக்குள் நுழைந்தான்.

பலராமனும் கண்ணனைப் பின்தொடர்ந்தான். அண்ணன் தம்பி இருவரும் பழங்களைப் பறித்துப் போட்டனர்.

பனை மரங்களில் உண்டான சலசலப்பு ஒலி அசுரனின் காதில் விழுந்தது. கோபத்துடன் ஓடி வந்தான். சிறுவர்கள் அஞ்சி ஓடினர். ஆனால், எதிர்த்து நின்ற பலராமன், கண்ணனையும் அவன் தாக்க வந்தான். கழுதை வடிவில் தன்னை உருமாற்றிக் கொண்டான்.

கால்களால் அவர்களை உதைக்க வந்தான். ஆனால், கிருஷ்ண பலராமர், அதன் பின்னங்கால்களைச் சுழற்றி மரத்தில் மோதச் செய்து கொன்றனர். பின், அசுரனின் உறவினர்கள் அனைவரும் கழுதைகளாக உருவெடுத்து அவர்களைத் தாக்க வந்தனர். அத்தனை கழுதைகளையும் அவர்கள் கொன்று குவித்தனர். நண்பர்களோடு சேர்ந்து கண்ணனும், பலராமனும் பழங்களை சாப்பிட்டனர்.

" நம்பியவரைக் காப்பது என் கடமை' என்பதை கண்ணன் இதன் மூலம் நிரூபித்தான்.

ஜோதிடமும் நோய்களும்

ஜோதிடமும் நோய்களும்

நோய் வராமல் தடுக்க மருத்துவ ரீதியாக எத்தனையோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டாலும் அவரரின் ஜெனன ஜாதக அமைப்பு என்று ஒன்றிருக்கின்றதல்லவா? அதில் அமையும் கிரகங்களின் நிலைப்படி நோய்கள் அந்ததந்த கிரகங்களின் தசா புக்தி நடைபெறும் காலங்களில் வந்தே தீரும்.

என்ன தான் விஞ்ஞான வளர்ச்சிகள் நோயினை குணப்படுத்தி விடும் என்றாலும் ஜோதிட  ரீதியாக நம்மை ஆளும் நவகிரகங்களும் நம்முடைய ஜனன ஜாதக ரீதியாக பலமாக அமைய வேண்டும். என்ன தான் மருத்துவ செலவுகள் செய்தாலும் குணமாகாத நோய்கள் கூட அம்மன் கோயில் வேப்பிலையால் குணமானதாக கேள்விப்பட்டிருக்கிறோம். அதற்கு காரணம் ஜோதிட ரீதியாக எந்த கிரகம் பாதிக்கப்பட்டிருக்கிறதோ அந்த கிரகத்திற்குரிய  பரிகாரத்தின் மூலம் நலம் கிட்டும். உதாரணமாக ராகுவால் பாதிக்கப்பட்ட ஒருவர் அம்மன் வழிபாடு மேற்கொண்டு அதன் மூலம் கிட்டும் நற்பலனை வேப்பிலையால் குணமானதாக எடுத்துக் கொள்கிறார்.

உடல் காரகனான சந்திரன், உயிர் காரகனான சூரியன், ஆயுட்காரகனான சனி போன்ற கிரகங்கள் பலம் பெற்றும், லக்னாதிபதியும் பலமாக அமையப்பெற்றும் இருந்தால் நோய் நொடி தாக்காமல் ஆரோக்கியமாக வாழு முடிகிறது. அப்படியே சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனடியாக நிவர்த்தியாகி விடுகிறது.  நவகிரகங்களின் திரு விளையாட்டினால் தான் இத்தகைய செயல்கள் நடைபெறுகின்றன. பொதுவாக முற்பிறவியில் அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப கிரக அமைப்புகளும், கிரக அமைப்புகளுக்கேற்ப நோய்களும் உண்டாகின்றது. எப்பொழுதுமே நல்ல ஆரோக்கியமாக வாழ்பவர்களும் உண்டு. எப்பொழுதாவது சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகளை சந்திப்பவர்களும் உண்டு. தினம் தினம் நோய் நொடியால் அவதிப்படுபவர்களும் உண்டு.

நோய்களால் பாதிக்கப்படுவர்கள் அந்தந்த நோய்களுக்குரிய தெய்வ பரிகாரங்களை மேற்கொள்வது மூலம் நோய் பாதிப்புகளிலிருந்து ஒரளவுக்கு தப்பித்துக் கொள்ளலாம்.நம் ஜாதகத்தில் சாதகமாகவோ, பாதகமாகவோ அமைந்திருக்கின்றது. ஒவ்வொரு கிரகமும் தனக்கென சில தனித் தன்மையுடன் செயல்படுகின்றன. பாதகமாக அமைந்த கிரகங்களின் தசா புக்தி காலங்களில் அதனதன் காரகத்துவத்திற் கேற்ப நோய்கள் உண்டாகிறது.

ஜெனன ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 6&ஆம் வீடானது ருண ரோக ஸ்தானமாகும். இது நோய், தேக ஆரோக்கியம் போன்றவற்றை அறிய உதவும் ஸ்தானமாகும். இதில் அமைகின்ற கிரகங்களின் அமைப்பினை கொண்டு நோய்கள் ஏற்படுகின்றன.

சூரியன்
சூரியனால் உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்கள், காய்ச்சல், வயிறு கோளாறு மூலம், இருதய நோய் தோல்வியாதி, நெருப்பால் கண்டம், எதிரிகளால் கண்டம், மரம், விஷம் மற்றும் பாம்பால் கண்டம், திருடர்களால் கண்டம், கண் நோய், தெய்வக் குற்றம் மூலம் உடல் நிலையில் பாதிப்பு போன்றவை உண்டாகும்.

சந்திரன்
சந்திரனால் மஞ்சள் காமாலை, ஜல தொடர்புடைய நோய்கள், தூக்கமின்மை, சோம்பேறித்தனம், மனநிலை பாதிப்பு, உணவு செரிக்காத நிலை, தைரிய குறைவு, சீதபேதி, குடல் புண், முகப்பரு, சுவையை அறியும் தன்மை இழக்கும் நிலை உண்டாகும். ஜலத்தால் கண்டம், தண்ணீரில் உள்ள மிருகத்தால் கண்டம், பெண்களால் பாதிப்பு, ரத்தத்தில் தூய்மை இல்லாத நிலை போன்ற பாதிப்புகளும். சளி, காய்ச்சல் போன்ற நோய்களும் ஏற்படும்.

செவ்வாய்
செவ்வாய் பகவானால் கண்களில் பாதிப்பு, குடல்புண், காக்காய் வலிப்பு, உஷ்ண நோய், தோல் நோய்கள் உண்டாகும். விஷம் மற்றும் ஆயுதத்தால் கண்டம் உண்டாகும். எதிரிகளிடமும்   உடன்பிறப்புகளிடமும் சண்டை போடும் போது உடலில் காயம் உண்டாக கூடிய நிலை தொழுநோய், தோலின் மேல் பாகத்தில் நோய் போன்றவை உண்டாகும்.

புதன்
புதனால் வாய்ப்புண், கண்களில் பாதிப்பு, தொண்டை மற்றும் மூக்கில் பாதிப்பு,  மனநிலை பாதிப்பு,திக்குவாய், இயற்கை சீற்றத்தால் உடல்நிலையில் பாதிப்பு, விஷத்தால் கண்டம், மூளையில் பாதிப்பு,  தோல் வியாதி, மஞ்சள்காமாலை, கனவால் மன நிலை பாதிப்பு ஏற்பட்டு நோய்கள் உண்டாகும்.

குரு
குருபகவானால் ஞாபக மறதி, காதுகளில் பாதிப்பு, குடல் புண், மற்றும் பூச்சிகளால் பாதிப்பு, பிராமணர்கள் மற்றும் பெரியோர்களின் சாபத்தால் உடல்நிலை பாதிப்பு, வறுமையால் உடல்நிலை பாதிப்பு, கோவில் விவகாரங்களில் ஈடுபடுவதால் உடல்நிலையில் பாதிப்புகள் போன்றவை உண்டாகும்.

சுக்கிரன்
சுக்கிர பகவானால் சர்க்கரை வியாதி, சிறுநீரகக்கோளாறு, கண்களில் கோளாறு ரத்தசோகை, ரகசிய உறுப்பில் பாதிப்பு, சர்க்கரை நோய் போன்ற நோய்கள் ஏற்படும். பெண்களுடன் உடல் உறவு கொள்ள முடியாத நிலை, உடல் உறவு கொள்ள பயப்படும் நிலை, பெண்களால் பயம், போன்ற நோய்களும் ஏற்படும்.

சனி
சனிபகவானால் எலும்புகளில் பாதிப்பு ஏற்பட்டு உடலில் ஊனம் உண்டாகக்கூடிய நிலை, வயிற்றுக் கோளாறு, உடலில் உஷ்ணம் அதிகரித்து அவைகளால் நோய் உண்டாகக்கூடிய அமைப்பு, உடலில் மந்தமான நிலை, சோர்வு எதிர்பாராத விபத்துகளை சந்திக்கும்நிலை மனநிலை பாதிப்பு, காக்காய் வலிப்பு, டி.பி. சர்க்கரை நோய் போன்றவை உண்டாகும். விபத்துகளால் உடல் ஊனம், இயற்கை சீற்றத்தால் உடல் நிலையில் பாதிப்பு போன்றவைகள் உண்டாகும்.

ராகு
ராகுபகவானால் தொழுநோய், மூளையில் நோய், இருதய கோளாறு, நெருப்பால் பயம் ,விஷத்தால் கண்டம், எதிரிகளால் பாதிப்பு விபத்தால் கண்டம், மனச்சோர்வு, விபத்தால் கண்டம், தோல் வியாதிகள், மிருகங்களால் கண்டம், அஜீரண கோளாறு, புற்று நோய்,  தேவையற்ற சேர்க்கையால் தவறான பழக்கங்களுக்கு அடிமையாக கூடிய உண்டாகும்.

கேது
கேது பகவானால் உடலில் வெட்டு காயம், விஷத்தால் கண்டம், அஜீரண கோளாறு, குடல் புண் போன்ற நோய்கள் உண்டாகின்றன. வயிறு கோளாறு, இல்லற வாழ்வில் ஈடுபாடு குறைவு, பூசாரி மற்றும் பிராமணர்களால் தொல்லை போன்றவைகளும் உண்டாகும்.

ஜென்ம லக்னத்திற்கு ஆயுள் ஆரோக்கிய ஸ்தானமான 8ம் வீட்டில் பலஹீனமாக கிரகங்கள் அமையப் பெற்றாலும் 8ம் அதிபதியுடன் கிரகங்கள் பலஹீனமாக இருந்தாலும் நோய்கள் உண்டாகும். மேற்கூறியவாறு கிரக காரகத்துவ ரீதியாக 8ல் சூரியன் இருந்தால் உஷ்ண நோய்கள், இருதய சம்பந்தப்பட்ட பாதிப்புகள், தேய்பிறை சந்திரனிருந்தால் ஜல சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் தண்ணீரால் கண்டமும் செவ்வாய், சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கைப் பெற்றால், வெட்டு காயங்கள் விபத்து போன்ற அனுகூலப் பலன்களும் எட்டுக்கு 8ம் வீடான மூன்றிலோ, எட்டிலோ பாவிகள் அமையப் பெற்றால்  கண்களில் பாதிப்பும் ஏற்படுகிறது. 8ல் அமையப் பெறுகின்ற கிரகங்களின் தசாபுக்தி காலங்களில் நம் ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எப்படி 8ல் கிரகங்கள் பலஹீனமாக இருந்தால் அக்கிரகங்களின் காரகத்துவதத்திற்கேற்ப நோய்கள் ஏற்படுகிறதோ, அதுபோல 6ல் பாவ கிரகங்கள் பலஹீனமாக இருந்தாலும் நோய்கள் உண்டாகிறது.

குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா?

குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா?

நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஓர் உண்மை மறைந்திருக்கும்.

முறையாக சொன்னால் யாரும் பின்பற்றமாட்டார்கள் என்று நம் முன்னோர்கள் செய்த வேலை தான் இது.

அதில் குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது என்பது ஒன்று.

பலரும் இது ஓர் குடும்ப வழக்கம், நேர்த்திக்கடன் என்று நினைத்து பின்பற்றி வருகிறார்கள்.

ஆனால் இதற்கு பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்னவென்று யாருக்காவது தெரியுமா?

தெரியாதெனில், உங்களது எண்ணத்தை மாற்றி, இனிமேலாவது உண்மையான காரணத்தைத் தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.

#கருவறையில் 10 மாதம்
பிறக்கும் முன் தாயின் கருவறையில் இருக்கிறோம். இந்த கருவறையில் என்ன சந்தனமும், பன்னீருமா நம்மைச் சுற்றி இருக்கும். இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் நாம் இருப்போம்.

#கடல்_நீர்
சாதாரணமாக கடல் நீரில் கை விரல்களை 5 நிமிடம் ஊற வைத்து, பின் அவற்றை நன்கு துடைத்துவிட்டு வாயில் வைத்தால் எப்படி உப்பு அப்படியே இருக்கிறது. 5 நிமிடம் ஊற வைத்த கை விரல்களிலேயே உப்பு இருக்கையில், 10 மாதம் இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் இருந்த நம் உடலில் அவை எவ்வளவு ஊறியிருக்கும்.

#வெளியேறும்_வழி
உடலினுள் சேரும் இந்த கழிவுகள் நம்மை விட்டு எளிதில் வெளியே வந்துவிட்டாலும், நம் தலையில் சேரும் கழிவுகள் மயிர் கால்கள் வழியாகத் தான் வெளியேற முடியும். ஆனால் அதற்கான வழிகள் குறைவு. அதற்காகத் தான் குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் மொட்டைப் போடுகின்றனர்.

#மொட்டை_போடாவிட்டால்?
ஒருவேளை அப்படி மொட்டை போடாவிட்டால், அக்கழிவுகள் தலையில் அப்படியே தங்கி, பிற்காலத்தில் அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

#நேர்த்திக்கடன்
இப்படி உண்மைக் காரணத்தைச் சொன்னால், பலரும் அலட்சியப்படுத்தி பின்பற்றமாட்டார்கள். எனவே தான் நேர்த்திக்கடன் என்ற பெயரில் நம் முன்னோர்களால் அது பரப்பப்பட்டது.

#மூன்று_வயதில்_ஓர்_மொட்டை
சிலர் தங்கள் குழந்தைக்கு மூன்று வயதில் ஒரு மொட்டையைப் போடுவார்கள். இதற்கு காரணம், முதல் மொட்டையின் போது சில கிருமிகள் விடுபட்டிருந்தால், இரண்டாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்பதற்காகத் தான்.

#ஆன்மீக_ரீதிக்கே_மரியாதை
நம் மக்களிடையே அறிவியல் ரீதியாக சொல்வதை விட, ஆன்மீக ரீதியாக சொன்னால், கட்டாயம் செய்வார்கள் என்பதை நம் முன்னோர்கள் நன்கு அறிந்துள்ளனர். எப்படியோ, இப்போதாவது உண்மையான காரணத்தை தெரிந்து கொண்டோமே. அதுவே போதும்.

: பொதுவாக, குளங்களிலும் நீர்நிலைகளிலுல் நாம் காசுகளைப் (நாணயங்களை) போடுவோம். இப்பழக்கம் தொன்று தொட்டே நம்மிடம் இருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று கேட்டால், அவ்வாறு செய்வதால் ஆகூழ் (அதிர்ஷ்டம்) வந்து சேரும் என்று கூறுவார்கள்.

உண்மையில் இதன் பின்னால் ஓர் அறிவியல் கூறு மறைந்திருக்கிறது. இப்பொழுது, துருப்பிடிக்கா எஃகால் செய்யப்படும் காசுகள் போல் அல்லாமல், முற்காலத்தில் காசுகள் செம்புகளால் தான் செய்யப்பட்டன. செம்பு நம் உடலுக்கு மிகவும் அவசியமான ஒரு கனிமம் ஆகும். செம்பு தாது குறைபாடால் மூட்டுவலி, மாரடைப்பு என்று பல கோளாறுகள் ஏற்படும். எனவே, நம் முன்னோர்கள் செம்பு காசுகளை குளங்களில் போட்டனர். செம்புக் காசுகளில் இருக்கும் செம்பு அணுக்கள் நீருடன் கலக்கும், அதைக் குடிக்கும் மக்கள் உடலுக்கும் செம்பு தாது சேரும். முற்காலத்தில் குளத்து நீர்தான் ஊர்மக்கள் எல்லாருக்கும் குடிநீராகப் பயன்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே பழக்கம் நாளடைவில் பொருளிழந்து தற்பொழுது நாமும் துருப்பிடிக்கா எஃகால் ஆன காசுகளைக் குளங்களில் போடுகிறோம்.

பின்னர், கனிமநீரை (mineral water) வாங்கி அருந்துகிறோம்.

செம்பு குடங்களில் நீரைப் வைத்து அருந்துவது சிறப்பு. செம்பு நீர், புற்றுநோயைத் தவிர்க்கும் பண்புடையதாக அறிவியல் உலகம் கூறுகிறது.

 ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும். உண்மையான விளக்கம் இதுதான் !!

ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.

இது ஒரு பழமொழி என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் இது ஒரு மருத்துவக் குறிப்பு.

இதனின் ௨ட்பொருள்;
ஆனையைப் பிாித்தால் ஆ + நெய். அதாவது ' ஆ ' என்பதற்கு பசு என்று பொருள் உண்டு. அதாவது பசுவின் நெய் என்று பொருள் கொள்ள வேண்டும். பசு நெய்யை நாற்பது வயது வரை தாராளமாக ௨ணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்குமேல் பசுவின் நெய்யை படிபடியாக குறைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை குறைக்காமல் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சத்து உடலில் சோ்ந்து மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது.

அதே போல்,பூ னைக்கு என்பதை பூ + நெய் என்று பிாித்துப் பாா்க்கும்போது, பூவில் இருந்து எடுக்கக்கூடிய தேனுக்கும் ஒரு காலம் வரும். அதாவது நாற்பது வயதுக்குமேல் நெய்யை சுருக்கி தேனை ௯டுதலாக சாப்பிட வேண்டும் என்பதன் அா்த்தமாகும். தேன் எளிதில் ஜீரணமாகும் உணவு மற்றும் மருத்துவ குணம் நிறைந்ததாகும்.

பழமொழியின் பொருள் நாற்பது வயது வரை பசும் நெய்யையும், நாற்பது வயதுக்குமேல் தேனையும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
ஆயுளும் வளரும்...

: சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...???

இந்த செய்தி பல பேருக்கு தெரிந்திருக்கும்..!!
தெரியாதோர்க்காகஇந்தப் பதிவு...

தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது.

இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது.

விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது.

முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம். ஆனால் இப்போது டைனிங் டேபிள்.

இது சரியா..? தவறா..?

முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன..?

என்பதைத் தெரிந்துக் கொள்வோம்:-

சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது காலைத் தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது.

காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால்...சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும்.

ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.

எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்தபட்டது...!!!

: ஆதி தமிழர்கள் பாம்பிற்குப் பால் ஊற்றுவது மற்றும் முட்டை வைப்பதன் காரணம் என்ன..?

உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.

பின்னர் எதற்குப் புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்..?

ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக பாம்புகள் இருந்தன. காரணம் அடர்ந்த காடுகள் மத்தியில் மனித நடமாட்டம் மிகமிகக் குறைவு. மனிதனை விடப் பாம்புகள் அதிகம் காணப்பட்டது .

ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை. அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள். ஆகவே அதனைக் கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும்.அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பைத் தேடி வரும்.

பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையைக் கட்டுப்படுத்தும் வேலையைப் பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது . ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.

இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள்.

அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

பலரை சென்றடைய தயவுசெய்து பகிருங்கள் உறவுகளே...

: பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும்.

மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.

ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.

மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கு பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.

பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.

அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக்கூடாது என்றார்கள்.

நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இதுபோன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடைபிடிக்கிறோம்.

பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும் திரிக்கப்பட்டுவிட்டது.

பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக்கூடாது என்ற விஷயத்தை கடைபிடிக்கவேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை.

இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்..?

பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்...!

செய்வினை தவிக்கும்

https://www.youtube.com/watch?v=nAY_cSqpl8I&t=30s

செய்வினை வைத்திருப்பதை எப்படி கண்டுபிடிக்கலாம்? அதற்கான அறிகுறிகள் இவைகள் தான்https://www.youtube.com/watch?v=nAY_cSqpl8I&t=30s

...
 செய்வினை வைத்திருப்பதை எப்படி கண்டுபிடிக்கலாம்?https://www.youtube.com/watch?v=nAY_cSqpl8I&t=30sஅதற்கான அறிகுறிகள் இவைகள் தான்
செய்வினை என்ற வார்த்தையைக் கேட்டதுமே சிலருக்கு பயமும் பலருக்கும் சிரிப்பும் வரலாம். ஏவல், பில்லி, சூனியம் ஆகியவை நமக்கு உண்டாகியிருக்கிறதா இல்லையா என்று கண்டுபிடிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாமா?

பாசிட்டிவ் எனர்ஜி, நெகட்டிவ் எனர்ஜி இரண்டையும் அறிவியல் ரீதீயாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதில் உள்ள நெகட்டிவ் எனர்ஜி எப்படி நம்மைத் தாக்குகிறது. நம்முடைய
 
தேவையில்லாமல் காரணமே இல்லாமல் உறவினர்கள் உங்களையோ நீங்கள் அவர்களையோ ஒதுக்கி வைப்பது...

நீங்கள் பணிபுரியும் இடங்களில் உங்களால் சௌகரியமாக இருக்க முடியாமல் இருப்பது. வேலையை செய்ய முடியாமல் அதிக அசதியாக இருப்பது

திடீரென சம்பந்தமே இல்லாமல் நோய் தாக்குவது. தோள் பட்டைகளில் வலியும் தாங்க முடியாத பாரமும் இருப்பது

காரணமில்லாமல் மூட்டு, எலும்புகளில் வலி உண்டாவது...

தொடர்ந்து தோல்விகளைச் சந்திப்பது...

மருத்துவக் காரணம் ஏதுமில்லாமல், முடி ஏராளமாகக் கொட்டிப்போவது...

உடலில் எந்த பிரச்னையும் இல்லாதபோதும் நகங்கள் மட்டும்
  கருத்துப் போவது...

ஒரே அறையில் இருக்க விரும்புவது, அந்த அறையை விட்டு வெளியே வர விருப்பமில்லாத மனநிலை உண்டாவது

திடீரென சம்பந்தமே இல்லாமல் தற்கொலை எண்ணம் தோன்றுவது...

இந்த அறிகுறிகள் வந்துபோனால் செய்வினை இருப்பதற்கான அறிகுறிகளாகக் கூறப்படுகிறது
https://www.youtube.com/watch?v=nAY_cSqpl8I&t=30shttps://www.youtube.com/watch?v=nAY_cSqpl8I&t=30s.

மந்திரங்கள்

மந்திரங்கள்https://www.youtube.com/watch?v=vW72Yx-3zIQஸ்ரீ விநாயகர் மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்

திருவேங்கடனின் திருநாமங்கள்
வேங்கடாசா வாசுதேவ:
வாரி ஜாஸந வந்தித:
ஸ்வாமி புஷ்கரிணி வாஸ:
சங்கு சக்ர கதாதர:
பீதாம் பரதரோ தேவ:
கரூடா ரூட சோபித:
விஸவாத்மா விஸ்வலோகச:
விஜயோ வேங்கடேஸவரா:

குபேரக ஸ்துதி
ஓம் யசஷாய குபேராய வைஸ்வரணாய
(தனதாந்யாதி பதயே)
தனதாந்ய ஸ்ம்ருத்திம்மே தேஹி-(காப்ய ஸ்வாஹ்)
ஆதித்ய ஹிருதய மந்திரம்
நமஹா உக்ராய வீராய
ஸாராங்காய நமோ நமஹா
நமஹா பத்ம ப்ரபோதாய
மார்த்தாண்டாய் நமோ நமஹா.

ஸ்ரீ தட்சணாமூர்த்தி மந்திரம்
குரூவே ஸர்வ லோகானாம்
பிஷ்ஜே பவ ரோகினாம்
நித்யே ஸர்வ வித்யானாம்
தட்சணாமூர்த்தி குருவே நமஹா

ஸ்ரீ ஹயக்ரிவர் மந்திரம்
ஓம் வாகீசஸ்வராய வித்மஹே
ஹயக்ரிவரய தீமஹி
தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்

ஸ்ரீ வாஸ்து பகவான் மந்திரம்
ஓம் அநுக்ரக ரூபாய வித்மஹே
பூமி புதராய தீமஹி
தந்நோ:வாஸ்து புருஷ் ப்ரசோதயாத்

ஜோதிர்லிங்க அர்ச்சனை
ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நம்ஹா.
ஓம் ஸ்ரீ மல்லிகார் ஜுணேஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ ஓங்காரம் மலேஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ இரமேஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ நாகேஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ விஸ்வேஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ த்ரியம் பகேஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வாரய நம்ஹா.
ஓம் ஸ்ரீ குஸ்ருணேஸ்வாரய நம்ஹா.

யாரும் அனாதை இல்லை
த்வமேவ மாதாச பிதா த்வமேவ.
த்வமேவ பந்துச்ச குருஸ் த்வமேவ.
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ.

த்வமேவ ஸர்வம் மமதேவ தேவா

ராஜ ராஜேஸ்வரி மந்திரம்

ராஜ ராஜேஸ்வரி மந்திரம் 

48 நாட்கள் விரதம் இருந்து மந்திரத்தை உச்சாடணம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பு ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு உரிய மந்திரத்தை மனப்பாடம் செய்த பிறகு , விரதம் ஆரம்பிப்பது மந்திரத்தை உச்சாடணம் செய்வதற்கு எளிமையாக இருக்கும் .

ஓம் சங்கு, ராங்கு, சடாட்சர நமசியவ தேவி ,
பிரணவ வாலை , அகார உகார மகார ,
ஸ்திரி , ஸ்ரீPம், ஐம், மனோன் மணி ,
ருத்திரா ,ருத்திரி சர்வலோக தயாநிதி ,
சர்வ ஜீவ வசிகரி ,
சர்வ மோக மோகினி வா வா , வருக வருக ,
சர்வ சகல வசி, வசி, ராஜ மோக வசி ,
சர்வ லோக , சர்வ புவன ,
ராஜ ராஜேஸ்வரி வசி வசி .

சங்கு , ராங்கு , சடாட்சர நமசியவ தேவி ,
பிரணவ வசிய வசி ,

முக வசியம் உண்டாக மந்திரம்

முக வசியம் உண்டாக மந்திரம்
   
நமது முகத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகுவதற்கும் மற்றவர்கள் எம்முடன் கோபப்படாமலும் நன்றாக பழக இம் முகவசிய முறையினை பயன்படுத்தலாம்.
மந்திரம்
ஓம் வெள்ளி என்முகம் வியாழன் என்முகம் திங்கள் என்முகம் திசைகள் எட்டும் என்முகம் காளி என்முகம் காயத்ரி என்முகம் நீலி என்முகம் நீலகண்டி என்முகம் ராமரும் லட்சுமணரும் போலே அம்மா தாயே லட்சுமணர் எல்லோரும் பார்த்தால் போலே சிரித்த முகமும் சீதாதேவியார் நிற்க சிதம்பர அட்சரத்தின் மேல் ஆணை ஐந்தெழுத்து பஞ்சாட்சரமும் என்முகத்தில் நிற்கவே சுவாகா.
பவுர்ணமி தினத்தில் உரு 108 கொடுத்து சித்திசெய்து கொள்ளவும்.
பின்னர் பிரயோகிக்கும் போது 21 தரம் சொல்லி விபூதி சாத்தவும்

கஸ்டங்களை போக்கும் காயத்ரி மந்திரம்https://www.youtube.com/watch?v=nAY_cSqpl8I&t=30s

ஓம் பூர்புவ ஸ்வஹh
தத் ஸ்விதூர் வரேணியம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோநஹ ப்ரசோதயாத்
– இதுதான் காயத்ரி மந்திரமாகும். இதன் பொருள் என்ன தெரியுமா? ‘‘பூ உலகம், மத்திய உலகம், மேல் உலகம் மூன்றுக்கும் சக்தியான அந்தப் பரம ஜோதி சொரூபமான சத்தியத்தை நான் தியானிக்கிறேன். அந்த பரம சக்தி ஒளி என் அறிவைத் தூண்டி என்னை உண்மையை அறிந்த நிலைக்கு உயர்த்தட்டும்’’ என்பதாகும். காயத்ரி மந்திரம் சூரியனை குறித்தே உருவாக்கப்பட்டது என்பது சிலரது வாதமாகும். ஆனால் பரம்பொருளிடம் வேண்டுவதாகவே இது உள்ளது என்பது பெரும்பாலனவர்களின் கருத்தாகும்.
காயத்ரி மந்திரம் உலகுக்கு பொதுவானது. பொதுவான பரம்பொருளை தியானிக்க சொல்வதால் எல்லாரும் இந்த மந்திரத்தை உச்சரித்து பயன் பெறலாம். காலை, மதியம், மாலை மூன்று நேரமும் காயத்ரி மந்திரம் சொல்வது நல்லது. ஆலய வழிபாடுகளின் போது ஒவ்வொரு சன்னதிலும் இறை மூர்த்தத்துக்கு ஏற்ப காயத்ரி மந்திரம் சொன்னால் உயர்ந்த பலன்கள் கிடைக்கும். காயத்ரி மந்திரத்தை நம் இஷ்டத்துக்கு உச்சரிக்கக் கூடாது. 5 இடங்களில் நிறுத்தி ஜெபிப்பதே சரியான முறையாகும்.
முதலாவது நிறுத்தம் – ஓம், இரண்டாவது நிறுத்தம் – பூர் புவஸ்வஹ. மூன்றாவது நிறுத்தம் தத் ஸ்விதூர் வரேணியம். நான்காவது நிறுத்தம் – பர்கோ தேவஸ்ய தீமஹி. ஐந்தாவது நிறுத்தம் ‘‘தியோ யோ நஹ ப்ரசோதயாத்’’ என்று இருத்தல் வேண்டும். காயத்ரி மந்திரத்தை முதலில் சொல்லத் தொடங்கும் போது 9 தடவை சொல்ல வேண்டும். அடுத்த வாரம் அதை 18 ஆக உயர்த்த வேண்டும். மூன்றாவது வாரம் 27 தடவை சொல்ல வேண்டும். இப்படி ஒன்பது ஒன்பதாக உயர்த்தி தினமும் காயத்ரி மந்திரத்தை 108 தடவை சொல்லும் வகையில் உங்களை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். காயத்ரி மந்திரம் 27 அட்சரங்களைக் கொண்டது.
இது ஏற்படுத்தும் ஒலி அதிர்வுகள் மிக, மிக சக்தி வாய்ந்தவை. காயத்ரி மந்திரத்தில் இருந்துதான் வேதங்கள் தோன்றின. எனவே வேதங்களுக்கு மூலமாக காயத்ரி மந்திரம் கருதப்படுகிறது. காயத்ரி மந்திரம் எப்படி தோன்றியது என்ற கேள்வி உங்கள் மனதில் ஏற்படலாம். ஒரு சமயம் ஞானம் பெற விரும்பிய முனிவர்கள் வேதக் கடலைக் கடைந்தனர். அப்போது ‘‘த்ரயீ’’ என்ற வேதசாரம் கிடைத்தது. அதை காரணமதி எனும் மத்தினால் கடைய அது காயத்ரி வடிவமாக உருவம் பெற்றது.
காயத்ரி தேவிக்கு 5 முகங்கள் உண்டு. பஞ்ச பூதங்களும் காயத்ரி தேவியில் அடக்கம் என்பதை இந்த உருவம் உணர்த்துகிறது. காயத்ரி தேவி ரத்தின மாலை அணிந்து, கமண்டலம், தாமரை, ஜெபமாலை ஆகியவற்றை ஏந்தி தாமரை ஆசனத்தில் வீற்றிருப்பாள். காயத்ரி மந்திரத்துக்கு சாவித்திரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. எனவே இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், மதியம் சாவித்திரிக்காகவும், மாலையில் சரஸ்வதிக்காகவும் ஜெபிக்க வேண்டும்.
காலையில் காயத்ரிதேவி குழந்தை வடிவமாக காட்சி அளிப்பாள். அப்போது அவள் ரிக் வேதம் உச்சரிப்பாள். மதியம் நடுத்தர வயது பெண் போல காயத்ரி காட்சி அளிப்பாள். அப்போது அவள் யஜுர் வேதத்தை சொல்வாள். மாலையில் காயத்ரி முதிர்ந்த பெண்ணாகத் தோன்றுவாள். அப்போது சாமவேதம் உச்சரிப்பாள். இதன் மூலம் காயத்ரி எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் ஆகிறாள். ஆகையால் எப்போதும் காயத்ரி மந்திரத்தை உச்சரித்த பிறகே மற்ற மந்திரங்களை சொல்ல வேண்டும்.
காயத்ரி ஜெபம் செய்யாமல் வேறு எந்த மந்திரம் கூறினாலும், ஆராதனை செய்தாலும் அது பலன் தராது விடும் என்பார்கள். காயத்ரி மந்திரத்தை யார் ஒருவர் தினமும் விடாமல் சொல்லி வருகிறாரோ… நிச்சயம் அவர் செல்வந்தர் ஆகி விடுவார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. பலர் வாழ்வில் இது நடந்துள்ளது. ஆனால் காயத்ரி மந்திரம் சொல்வதற்கு மனத்தூய்மையும் உடல் தூய்மையும் மிக, மிக அவசியம். சுத்தமான இடத்தில் இருந்து தான் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
காயத்ரி மந்திரத்தை எப்போது சொல்லத் தொடங்கினாலும் 27 தடவை சொல்வது மிகவும் நல்லது. காயத்ரி மந்திரத்தை வெளியில் கேட்கும்படி உச்சரித்தால் 10 மடங்கே பலன் கிடைக்கும். உதடுகள் மட்டும் அசைந்தபடி கூறினால் 100 மடங்கு பலன் கிடைக்கும். ஆனால் உதடு கூட அசையாமல் மனதுக்குள் காயத்ரி மந்திரத்தை சொல்லி வந்தால் ஆயிரம் மடங்கு பலன் உண்டாகும். வீட்டில் இருந்து சொல்வதை விட ஆலயத்தில் ஒரு இடத்தில் அமர்ந்து காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால் அப்போது கிடைக்கும் பலன் அளவிட முடியாதது.
குறிப்பாக அம்மன் சன்னதிகளில் கிழக்கு நோக்கி அமர்ந்தபடி அல்லது நின்றபடி காயத்ரி மந்திரத்தை ஜெபித்தால் அதனால் கிடைக்கும் பலன்கள் இந்த ஜென்மத்து தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30-6 மணி வரையிலான ராகு காலத்தில் காயத்ரி மந்திரத்தை கூறினால் நாம் எதிர்பார்க்கும் பலன்கள் வந்து சேரும்.
தினமும் காயத்ரி மந்திரம் சொல்லி வருபவர்களுக்கு ‘‘ஆத்மசுத்தி’’ கிடைக்கும். ஆலயத்தின் எந்த பகுதியில் நின்றும் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கலாம். ஆனால் மனம் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெறும் போது யாக சாலைகள் அருகில் அமர்ந்து காயத்ரி மந்திரம் சொல்லாம். இது 100 மடங்கு பலன்களை அதிகமாக தரும். காயத்ரி மந்திரத்தை சொல்ல, சொல்ல குடும்பத்தில் மங்களம் உண்டாகும். அதோடு நான்கு வேதங்கள் ஓதியதன் பலன் கிடைக்கும்.
ஆலயத்துக்கு செல்லும் போது, அந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால் நல்ல பலன்கள் உங்களைத் தேடி வரும். ஒவ்வொரு ஆண்டும் ஆவணி அவிட்டத்துக்கு மறுநாள் காயத்ரி ஜெபம் வரும். அன்று 1008 தடவை காயத்ரி மந்திரம் ஜெபிக்க வேண்டும் என்பது மரபு. காயத்ரி மந்திரத்தை நீங்கள் எந்த அளவுக்கு ஜெபிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு அறிவுக் கூர்மை உண்டாகும். இவ்வுலகில் எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்ய வல்லது காயத்ரி மந்திரம் மட்டுமே என்று தேவிபாகவதம் சொல்கிறது.
‘‘மூன்று வருடங்கள் காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வருவர், வாயு போல சுதந்திரமாக இயங்கி பிரம்மத்தை சென்று அடைவார் என்று மனுஸ்மிருதி நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆலயத்துக்கு செல்லும் போதும், மற்ற நேரங்களிலும் காயத்ரி மந்திரத்தை ஜெபித்து மனம் பக்குவப்பட்டு விட்டால், அவர் எந்த ஒரு செயலிலும் நிதானமாகவும் தெளிவாகவும் இருப்பார். காயத்ரி மந்திரத்தை தினமும் மூன்று நேரம் உச்சரிப்பவர்கள் எல்லா விஷயங்களிலும் மிகச் சரியான முடிவு எடுப்பவர்களாக இருப்பார்கள்.
சத்தியவான் உயிரை காப்பாற்ற சாவித்திரி தேவிக்கு காயத்ரி மந்திரமே உதவியது. முனிவரின் சாபத்துக்கு எதிராக கால கதியையே ஸ்தம்பிக்க வைத்த நளாயினிக்கு உதவியது காயத்ரி மந்திரமே. மும்மூர்த்திகளின் சோதனையை அனுசுயா தேவி அறிந்து கொள்ள காயத்ரி மந்திரமே உதவியாக இருந்தது. 14 ஆண்டுகள் வனவாசம் சென்ற ராமர்-லட்சுமணர் இருவரு¢க்கும் சோர்வு ஏற்படாமல் இருக்க காயத்ரி மந்திரமே உதவியாக இருந்தது.
சுருக்கமாக கூறினால், அவரவர் கோரிக்கைக்கு ஏற்ப, அந்தந்த தெய்வத்துக்கு உரிய காயத்ரி மந்திரங்களை ஆலய வழிபாடுகளின் போது சன்னதி முன்பு அமர்ந்து ஜெபித்தால், வாழ்வில் எந்த கஷ்டமும் வராது. சில ஆலயங்களில் காயத்ரி தேவிக்கு தனி சன்னதி இருக்கும். அங்கு காயத்ரி மந்திரத்தை ஜெபித்தால் முழுமையான பலன்களைப் பெறலாம். கடவுளுடன் மிக, மிக எளிமையாக நம்மை இணைப்பது காயத்ரி மந்திரங்கள்தான். எனவே காயத்ரி மந்திரங்களை தெரிந்து கொண்டு ஆலய வழிபாடுகளின் போது அவற்றை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.