youtube

2 January 2016

குண்டலினியும் .....  சாதகனும்
குண்டலினி என்பது மாயமோ, மந்திரமோ இல்லை. அது ஒரு வகையான உள்நிலை உளவியல் தொழில்நுட்பம். இதை புரிந்து கொள்ள முயற்சிப்பதில்தான் இதன் செயலாக்கம் மற்றும் தொழிற்படுதல் சித்திக்கிறது. இந்த பயிற்சியில் நமது உடலில் நிலை கொண்டிருக்கும் ஆற்றலை மாற்றுவதையே உயர்த்துதல் என்கிறோம். உயர்த்துதல் என்பதை விட பரவுதல் என்கிற வார்த்தை பிரயோகம் சரியானதாக இருக்கும்.

குண்டலினியை எழுப்பிட பல்வேறு உத்திகளை நமது முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர். அது பற்றி பின்னர் பார்ப்போம். இத்தகைய பயிற்சியை மேற் கொள்வோருக்கான தகுதிகளை பற்றி சித்தர் பெருமக்கள் விரிவாகவே கூறியிருக்கின்றனர்.

குண்டலினியை எழுப்ப முயற்சிக்கும் சாதகன் முதலில் மெய்யான குருவினை கண்டறிய வேண்டும். இதற்கு அவன் ஆசைகளை குறைத்தவனாக இருப்பது மிகவும் அவசியமாம். தீவிர வைராக்கியமுள்ளவனாகவும் இருக்க வேண்டும். சுத்தமான மனமுள்ளவனும், மனத்தின் ஆவேசமான ஆசைகளைத் துறந்தவனை மெய்யான குரு தானாகவே அண்மிப்பார் என்கின்றனர். மேலும் அவரே முன்னின்று அரவனைத்து வழி நடத்துவார். இத்தகைய குருவின் வழிகாட்டுதலில் பயிலும் சாதகனே குண்டலியை எழுப்புவதால் உண்டாகும் முழுப் பலனையும் அடைவான் என்கின்றனர்.

நிறைந்த அழுக்குள்ள ஒருவன் ஆசனம், பிராணாயாமம், மத்ரை இவற்றின் பலத்தால் மாத்திரம் சக்தியை எழுப்பினானால், அவன் இடறி விழுந்து தன்னையே கெடுத்துக் கொள்வான் என்கின்றனர். யோக ஏணியில் ஏற அவன் சக்தியற்றுப் போவானாம். இதுவே, சிலருக்குத் தேகத்தில் பல ஊனங்கள் (குறைவுகள்) ஏற்படவும், வழி பிசகவும் காரணமாய் அமையும் என்கின்றனர்.

யோகத்தில் ஒன்றும் கெடுதல் இல்லை. ஆனால் மக்கள் முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டும். பயிற்சியின் பூரண அறிவு இரண்டாவதாகத் தேவை. பிறகு ஒரு தக்க ஆசிரியன் அவசியம். கடைசியாக நிதானமானதும் குண்டலினி எழுப்பப்படும்போது சாதகனுக்கு வழியில் பல தவறுகள் செய்ய ஆவல் (சோதனை) உண்டாகும். ஆதலால் சாதகன் ஒழுக்கமானவனாக இல்லாவிடில் அந்த ஆவலைத் தகர்க்கத்தக்க சக்தியற்றவனாகி விடுவான்.

குண்டலினி பயிற்சியைப் போலவே அந்த சம்பந்த முழு விபரமும் தெரிந்திருக்க வேண்டியது மிக அவசியம். குண்டலினி பற்றிய விபரங்களோ விளக்கங்களோ முழுமையாக தெரியாதவர்கள் இதில் வெற்றியடைவது கடினம். இதன் பொருட்டே இத்தனை நீளமாக குண்டலினி பற்றிய அறிமுகத்தினை பகிர நேர்ந்தது.

இனி வரும் பதிவுகளில் குண்டலினியை எழுப்பிடும் வழி வகைகளைப் பார்ப்

1 January 2016

சூரியனில் இருந்து ஓம் எனும் சப்தம் வெளிவருகிறது,

b

பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து நமது முன்னோர்கள் ஆன்மீகத்தில் பயின்று வந்த, பயன்படுத்தி வந்த "ஓம்" போன்ற ஒலி சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புறத்தில் இருந்து வெளிவருகிறது என்று நாசாவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. "இந்து" மதமா? மனித இனத்தின் பரிமாணமா? அறிவியல் ஒப்பீடுகள்!!! நாசாவின் ஆய்வுக்கு முன்னர், ஷெபீல்ட் பல்கலைக்கழகதின் வானியல் ஆய்வாளர்களும் ஓர் ஆய்வின் மூலமாக இதை உறுதி செய்துள்ளனர். ஓம் எனும் ஒலி மனதை அமைதியாக உணரவும், மனநிலையை ஒருமுகப்படுத்தவும் உதவுகிறது. நாடி ஜோதிடத்தின் வரலாற்று இரகசியங்கள் மற்றும் உண்மை தகவல்கள்!!! சீக்கியர்கள், புத்த மதத்தினர், இந்துக்கள் காலம், காலமாக கடவுளை வணங்கும் போது மந்திரமாக ஜபித்து வரும் "ஓம்" எனும் சொல் அல்லது ஒலி, சூரியனில் இருந்து வெளிவருகிறது என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.....

ஷெபீல்ட் பல்கலைக்கழகதின் வானியல் ஆய்வாளர்கள் சூரியனின் வளிமண்டலத்தில் வெளிவரும் காந்த அலைவரிசையின் மூலம் உருவாகும் அதிர்வுகளை வைத்து ஓர் ஒலியை கண்டறிந்தனர்..

காந்த சுழல்கள்...
சூரியனின் வளிமண்டல வெளிப்புறத்தில் இருந்து பெரிய காந்த சுழல்கள் எனப்படும் ஒளிவட்ட சுழல்கள் கண்டறியப்பட்டது. இது ஒலியின் அலைவரிசையை போல பயணிப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இசை சரங்களில் இருந்து அதிர்வுகள் வெளிவருவதை போன்று அது இருந்தது..

நேரடியாக பதிவு செய்ய முடியாது.....
விண்வெளி வெற்றிடமாக இருப்பதால் சப்தத்தை பதிவு செய்ய முடியாது. இதனால் சூரியனின் வளிமண்டலத்தில் இருந்து வெளிவரும் சப்தத்தை நேரடியாக பதிவு செய்ய முடியவில்லை

காந்த சுழல்கள் புகைப்படம் எடுக்கப்பட்டது..
இதனால், ஷெபீல்ட் பல்கலைக்கழகதின் வானியல் ஆய்வாளர்கள் செயற்கை கோளின் உதவியோடு, வெண்வெளியில் ஆயிரம் மைல்களுக்கு பரவியிருந்த பெரிய காந்த சூழல்களை புகைப்படம் எடுத்தனர். பின்னர் அந்த அதிர்வுகளின் அளவை கணக்கிட்டு, அதை ஒலியாக மாற்றினர்.

ஏதோ ஒலி என்ற கணிப்பு....
சூரியனின் வளிமண்டலத்தில் இருந்து வெளிவரும் அந்த ஒலியானது ஏதோ இசையை போல இருப்பதாக வானியல் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதெல்லாம் கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த ஆய்வில் கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நாசாவின் ஆராய்ச்சி....
"வாயேஜர் 1" என்ற நாசாவின் ஆய்வறிக்கையில், சூரியனின் சப்தத்தை பதிவு செய்யப்பட்டது என அக்டோபர், 2012 மற்றும் ஏப்ரல் 2013- னில் "Interstellar plasma music" என்ற தொகுப்பு வெளியிடப்பட்டது. இதில் சூரியனில் இருந்து "ஓம்" என்ற ஒலி வெளிவருவதாக கூறப்பட்டிருந்தது.

ஓம் - முக்கியத்துவம்....
ஓம் என்பது இந்து மதம் சார்ந்த, பண்டைய காலத்தில் இருந்து ஆன்மீக ஒலியாக கருதப்படும் ஓர் சப்தம் ஆகும். ஹிந்து, ஜெயின், புத்த மதம், சீக்கியர்கள் போன்றவர்கள் "ஓம்" என்ற ஒலி உணர்வை கட்டுப்படுத்த, மேலோங்க வைக்க உதவும் சப்தமாக கருதுகிறார்கள்.

சூரியனில் இருந்து ஓம் எனும் ஒலி....
2010 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் சூரியனில் இருந்து "ஓம்" அல்லது "ஓம்" என்பது போன்ற ஒலி வெளிவருகிறது என்பதை காந்த சூழல்களின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்...
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே "ஓம்" என்ற சொல் அல்லது ஒலியை இந்து மதத்தில் மிக பரவலாக பயன்படுத்தப்பட்டது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில், வேறு எந்த உலக மொழிகளிலும் "ஓம்" என்ற சொல் கிடையாது.

பல்வேறு பதிவுகள்....
நாசா இதுகுறித்து பல பதிவுகளை செய்துள்ளது. இதில் பெரும்பாலும் "ஓம்" என்ற சப்தம் வெளிவந்தாலும் கூட, ஒருசில பதிவுகளில் ஓம் என்ற ஒலி போன்ற இசை அல்லது வேறு இசைகளும் தென்படுவதாய் கூறப்பட்டுள்ளது.

அமைதியை தரவல்லது...
அடிப்படையில் "ஓம்" எனும் ஒலி மனதிற்கு அமைதியையும், மனநிலையை ஒருமுகப்படுத்தவும் உதவுகிறது என ஆன்மீக ரீதியாக மட்டுமின்றி அறிவியல் ரீதியாகவும் கூறப்படுகிறது.

பதிவு செய்யப்பட்ட ஒலி
சூரியனில் இருந்து பதிவு செய்யப்பட்ட ஓம் என்பது போன்ற ஒலி

31 December 2015

அமெரிக்காவில் திருவண்ணாமலை

அமெரிக்காவில் திருவண்ணாமலை

ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் உடலில் புற்று மண் மூடும் அளவு 12 ஆண்டுகள் தவம் செய்தார். சிவனை நேரில் கண்டார். அவர் முன் மயில், பாம்பு, பூனை, எலி முதலான பல விலங்குகள் தனது பகை மறந்து ஒற்றுமையாக இருந்தன. தன்னை வந்து தாக்கிய தீயவர்களை கூட இவர் சபிக்கவில்லை. போலீசில் புகாரும் கொடுக்கவில்லை. அத்தகையோரிடமும் அன்பை காட்டி திருத்தினார். பலரின் நோய்களை இவர் குணப்படுத்தினார். அதே சமயம். இவர் தனக்கு வந்த புற்று நோயை குனப்படுத்த இவர் தனது தபோ வலிமையை பயன்படுத்த வில்லை. எனது கர்ம வினையை நான் அனுபவித்தே தீர வேண்டும் என்று அவர் உறுதியாக இருந்தார்.

இந்த துறவியின் உத்தரவை தட்ட முடியாமல். மயக்க மருந்து கொடுக்காமல் தான் கேன்சர் கட்டியை நீக்கும் அறுவை சிகிச்சையை இவருக்கு டாக்டர்கள் செய்தார்கள். அந்த துறவி துளி கூட கத்தவில்லை. அவ்ளவு ஏன். ஒரு சொட்டு ரத்தம் கூட அந்த துறவிக்கு அறுவை சிகிச்சை செய்யும் பொழுது வரவில்லை. இத்தகைய ஒரு அதிசய நபரை அதுவரை அந்த மருத்துவர்கள் சந்தித்தது இல்லை. இனி சந்திக்கபோவதும் இல்லை. அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு இருந்த பதட்டத்தில் ஒரு சதவீதம் கூட அந்த துறவிக்கு இல்லை. மலர்ந்த தாமரை போன்ற சிரித்த முகத்தோடு அந்த துறவி இருந்தார்.

நான் யார் என்ற கேள்வியை தனக்கு தானே கேட்டு கொண்டு. அதற்கு விடையையும் கண்டு. முற்றும் உணர்ந்த ரமண மஹரிஷிக்கு இந்த கேன்சர் கட்டி எம்மாத்திரம்.

இவர் ஒரு உண்மையான ஞானி என்றால். இவருக்கு எவ்வாறு? புற்று நோய் வரும். தனது நோயை குணப்படுத்தும் சக்தியே இந்த ஞானிக்கு இல்லையா என்று ஒரு அரசியல் வாதி இவரை அண்ணா ந்து பார்த்து கேலி செய்தார். அந்த அரசியல் வாதி ஒண்டரை ஆண்டுகள் மட்டுமே தமிழக முதல்வராக இருந்து புற்று நோயால் இறந்தார் என்பது தனி கதை.

நியூட்டனின் மூன்றாம் விதி சொல்வது என்ன? ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. ரமண மஹரிஷி போன்றவர்கள் இது போல் தன்னை பழிப்பவர்களை சபிக்க மாட்டார்கள். அதே சமயம் நமது பாவ, புண்ணிய பலன்களை நாம் அனுபவித்தே தீர வேண்டும்.அதில் இருந்து தப்பவே முடியாது என்று தான் சித்தர், புத்தர் என அனைவரும் சொல்லும் விஷயம்.

ரமண மஹ ரிஷிக்கு எதனால் புற்று நோய் வந்தது என்பதை பற்றி ஓஷோ ரஜனீஷ் என்ன சொல்கிறார் என்றால்.
ஒரு ஞானிக்கு ஏற்படும் துன்பங்களும்,மகிழ்ச்சியும் அவரது உடலுக்கே ஏற்படுபவை.அவை அவர் ஆத்ம சாட்சாத்காரம் அடைவதற்கு முன் துலங்கிய கர்ம பலன்களின் தொடர்ச்சியே.ஒரு கனவில் விதைக்கப்பட்ட விதைகள் கனவிலேயே வளர்ந்து விதை கொடுக்கலாம். நான் விழித்து எழுந்த பின் இவை கனவுக் கனிகள் என்றே உணர்கிறேன். நான் கனவிலேயே தொடர்ந்து இருந்தால் அந்தக் கனிகளை அறுவடை செய்து,அதன் விதைகளை அடுத்த பயிர்வரை விதைத்து இருப்பேன்.விழித்தெழுந்துவிட்ட நானோ இந்தப் பயனற்ற செயலில் ஈடுபட மாட்டேன் அல்லவா ? அந்தக் கனவுக் கனிகள் பழுத்து உதிர்ந்து விட்டன.அவற்றுடன் எவ்விதத் தொடர்பும் இல்லை.அது போன்றே,ஞானிக்கு ஏற்படும் இன்ப,துன்பங்களும் பழைய கர்ம பலங்களின் தொடர்ச்சி என்கிறார் ஓஷோ.

பூகோளம், வரலாறு, அறிவியல் என அனைத்தை பற்றியும் ரமணருக்கு தெரியும். இவரிடம் யார் எந்த மொழியில் பேசினாலும் அந்த மொழியில் இவர் அவர்களிடம் பேசுவார். இவை எல்லாம் ரமணர் எப்பொழுது கற்று கொண்டார் என்பது இவருக்கு நெருக்கமானவர்களுக்கே தெரியாத ஒன்று. ஒருமுறை அமெரிக்காவில் இருந்து ஒரு தம்பதியர் ரமணரை தரிசிக்க வந்து இருந்தனர். திருவண்ணாமலைக்கு நிகராக ஏதேனும் எங்கள் அமெரிக்காவில் ஒரு புனித ஸ்தலம் இருக்கின்றதா என்று அந்த தம்பதியர் ஆவலோடு கேட்டனர். ரமணர் சில நொடிகள் கண் மூடி பின்னர் புன்னகை தவழும் முகத்துடன் இருக்கின்றது. அது கலிபோர்னியாவில் உள்ள Mount Shasta என்றார்.

திருவண்ணாமலை, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Mount Shasta இரண்டுமே ஒரு காலத்தில் எரிமலையாக இருந்தது. தொடர்ந்து பத்தாயிரம் ஆண்டுகளாக ஒரு எரிமலையில் இருந்து எரிமலை குழம்பு வரவில்லை என்றால். அந்த எரிமலை Extinct Volcano. திருவண்ணாமலை, Mount Shasta இரண்டுமே Extinct Volcano என்பதை முதற்கொண்டு அந்த அமெரிக்க தம்பதியினருக்கு ரமண மகரிஷி சொன்னது தான் அவர்களுக்கு ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

தமிழ் நாட்டை தாண்டாத இவருக்கு கலிபோர்னியாவில் அப்படி ஒரு மலை இருப்பது எவ்வாறு தெரிந்தது.

இன்று அமெரிக்காவில் உள்ள புனித ஸ்தலங்களில் Mount Shasta வும் ஒன்று. திருவண்ணாமலை போல் அந்த மலையையும் பல பக்தர்கள் கிரிவலம் செய்கிறார்கள். மேலும் புராணத்தில் குறிப்பிடப்படும் பாதாள உலகம் என்பது தனியாக உள்ள உலகம் அல்ல. அது இந்த பூமியின் மறு பகுதியான அமேரிக்கா. இங்கே பகல் என்றால் அமெரிக்காவில் இரவு வர காரணம் அது தான். புராணத்தில் குறிப்பிடப்பட்ட கபிலாரண்ய ஷேத்ரம் தான் இன்றைய கலிபோர்னிய

மகாபாரதம் சொல்லும் பயனுள்ள வாழ்க்கைப் பாடங்கள்

மகாபாரதம் சொல்லும் பயனுள்ள வாழ்க்கைப் பாடங்கள்

கிருஷ்ணர்: செல்லும் வழியைக் கொண்டு முடிவு நிர்ணயிக்கப்படுவதில்லை மகாபாரதப் போரில் பாண்டவர்களை வெற்றி கொள்ளச் செய்வதற்காக, விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணர் எண்ணற்ற முறையற்ற செயல்களைச் செய்துள்ள...ார். அவருடைய பொய்களும், புரட்டுகளும் பாண்டவர்கள் போரில் வெற்றி பெறச் சாதகமாக இருந்தாலும், அந்த போராட்டத்தில் பாண்டவர்கள் இழந்தது மிகவும் அதிகமாகும். போருக்குப் பின்னர், ஆஸ்தினாபுரம் விதவைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் வசிக்கும் இடமாக மாறி விட்டது.

பீஷ்மர்: சுயநலமற்றவர், ஆனால் தொலைநோக்கு பார்வை இல்லை அஸ்தினாபுரத்து இராஜகுடும்பத்தின் மூத்த பெரியவர் மற்றும் வீரமிக்க போர்வீரரான பீஷ்மருக்கு தன்னுடைய மக்களையும், அரசையும் காப்பாற்ற சில வாய்ப்புகள் கிடைத்தன. பீஷ்மருடைய சிற்றன்னை பலமுறை அரசைப் பெற்றுக் கொள்ளுமாறும் மற்றும் திருமணம் செய்து கொள்ளுமாறும் மன்றாடிக் கேட்டும் பாராமுகமாய் இருந்து தன்னுடைய பிரம்மச்சரியத்தை அவர் கைவிடவில்லை. சுய-நேர்மை மிக்கவராக இல்லாத காரணத்தால், இவராலும் கூட போரைத் தவிர்க்க இயலவில்லை.

அர்ஜுனர்: ஒரு பெண்ணின் கோபத்தை விட மோசமானது எதுவும் இல்லை தேவலோக நாட்டிய கன்னியான ஊர்வசியின் முன்னேற்றத்தை அலட்சியம் செய்தார் அர்ஜுனர். இதன் காரணமாக ஒரு வருட காலத்திற்கு அர்ஜுனர் தனது ஆண்மையை இழந்து விடுவார் என்று அவள் சபித்தாள். வீரமிக்க அர்ஜுனர் ஒரு ஆண்டு காலத்திற்கு அலியாக காலம் தள்ளினார். எனவே, பெண்களை யாரும் இழிவுபடுத்த வேண்டாம்.

திரௌபதி: வாழ்க்கையில் உங்களுக்கு எல்லாமே இருப்பதில்லை தன்னுடைய முற்பிறப்பில் செய்த தவத்தின் பலனாக, தனக்கு வீரமிக்க, நேர்மையானவனாக, உடல் உறுதியானவனாக, மிகவும் கற்றறிந்தவனாக மற்றும் உலகிலேயே மிகவும் அழகானவனாக இருப்பவனே தன்னுடைய கணவனாக வர வேண்டும் என்ற வரத்தை சிவபெருமானிடம் கேட்டாள். அவள் கேட்டது கிடைத்தது, ஆனால் 5 வேறு வேறு கணவர்களிடம் இருந்து. ஒரே மனிதனிடம் இந்த 5 குணங்களும் இருக்காது மற்றும் நீங்கள் விரும்பியதெல்லாமே உங்களுக்கு கிடைத்திடுவதில்லை என்பது தான் இந்தக் கதையின் நீதியாகும்.

அபிமன்யு: அரை அறிவு ஆபத்தானது அர்ஜுனரின் மகனான அபிமன்யுவிற்கு சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே புக மட்டுமே வழி தெரியும், ஆனால் அதை விட்டு எப்படி வெளியே வர முடியும் என்று தெரியாது. எனினும், இந்த கடுமையான போர் வடிவத்திற்குள் புகுந்து செல்ல முயற்சி செய்ததன் பலனான தன்னுடைய உயிரையே விட்டு விட்டார் அபிமன்யு. இதன் காரணமாகத் தான் அரை அறிவு ஆபத்தானது என்று சொல்கிறார்கள். நீங்கள் எதைக் கற்றாலும் முழுமையாக கற்றுக் கொள்ளுங்கள் என்பது நீதி!

குந்தி : செய்யும் முன் கவனியுங்கள் திரௌபதியின் சுயம்வரத்தில் அர்ஜுனர் வெற்றி பெற்ற பின்னர், அவளை குந்தியிடம் அழைத்து வந்த போது, குந்தி தேவி சமைத்துக் கொண்டிருந்தாள். அர்ஜுனன் வெற்றி பெற்ற பரிசு என்ன என்பதை கவனிக்காமல், அவன் வென்ற பரிசை, சகோதரர்கள் அனைவரும் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று அவள் கூறி விட்டாள். எனவே, நீங்கள் சொல்லும் வார்த்தையின் விளைவுகள் என்ன என்று அறியாமல், எந்தவொரு வார்த்தையையும் விட்டு விடாதீர்கள்.

திருதராஷ்டிரர் : கண்மூடித்தனமான அன்பு ஆபத்தானது அஸ்தினாபுரத்தின் பார்வையற்ற அரசரான திருதராஷ்டிரரும் கூட ஒரு தவறை செய்திருக்கிறார். அவர் தன்னுடைய பிள்ளைகளை மிகவும் நேசித்ததால், யாரையும் கண்டிக்கவில்லை. ஓவ்வொரு தந்தை மற்றும் தாய்க்கும் தேவையான பாடமாக இது உள்ளது. உங்களுடைய குழந்தைகள் முழுமையாக கெட்டுப் போகும் முன்னர், அவர்களை சரியான நிலைக்கு கொண்டு வாருங்கள். கண்மூடித்தனமான அன்பினால் எந்தவிதமான பலனும் கிடையாது.

இந்தியாவின் மாபெரும் காவியமான மகாபாரதத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களாக இவை உள்ளன.

ஹரிவராசனம் விஸ்வமோகனம் - பொருள் - தமிழ் விளக்கத்துடன்

>> ஹரிவராசனம் விஸ்வமோகனம் - பொருள் - தமிழ் விளக்கத்துடன் <<
ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
மிகச் சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவரும், பிரபஞ்சத்தையே தன் முறுவலால் மோகிக்கச் செய்பவரும், ஹரிதம் என்னும் குதிரையில் (ஹரித: என்றால் சூரியன், அவனது தேரில் உள்ள ஏழு குதிரைகளின் பெயர் ஹரிதம்)
பவனி வரும் சூரியனால் ஆராதிக்கப்படும் பாதங்களை உடையவரும், சத்ருக்களை அழிப்பவரும்,
சரணகீர்த்தனம் சக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
சரணகோஷத்தால் மகிழ்பவரும், பிரபஞ்சத்தின் இயக்கத்திற்காக நடனமாடுபவரும், உதிக்கும் சூரியனொத்த ஒளிமயமானவரும், பூத நாயகனுமாகிய ஹரி-ஹர புத்ர தேவனை
ப்ரணயஸத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
உலகின் உண்மைப் பொருளாகவும், உலக உயிர்களுக்கு நாயகனாகவும் தன்னை சரணடைந்தவர்க்கு எல்லாவளமும் அளிப்பவரும், ஓங்கார மந்த்ரமாய் இருப்பவரும், இசையில் ப்ரியம்/நாட்டம் உடையவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.
துரகவாகனம் ஸுந்தரானனம்
வரகதாயுதம் வேதவ-வர்ணிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
குதிரை வானரும், அழகிய முகமுடையவரும், கதாயுதம் ஏந்தியவரும்,தேவர்களால் வர்ணிக்கப்படுபவரும், குருவைப் போல ப்ரியம் உள்ளவரும், கீர்த்தனங்களில் ப்ரியமுடையவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்
த்ரனயனப்ரபும் திவ்யதேசிகம்
த்ரிதசபூஜிதம் சிந்திதப்ப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
மூன்றுலகிலும் அர்ச்சிக்கப்படு
பவரும், எல்லா தெய்வங்களின் அம்சமாக விளங்குபவரும், மூன்று கண்களை உடையவரும், சிறந்த குருவாக விளங்குபவரும், வேண்டுவதை அளிப்பவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.
பவபயாவஹம் பாவகாவுகம்
புவனமோகனம் பூதிபூஷணம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
சம்சார பயத்தை போக்குபவரும், பக்தருக்கருள்வதில் தந்தை போலும், உலகத்தை தன் மாயையால் மயக்குபவரும், விபூதி தரித்தவரும், வெள்ளை யானையை வாகனமாக கொண்டவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன
களம்ருதஸ்மிதம் ஸுந்தரனானம்
களபகோமளம் காத்ரமோஹனம்
களபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
மதுரமான, மிருதுவான புன்முறுவல் உடையவரும், சுந்தர முகமுடையவரும், இளமையும், மென்மையும் உடையவரும், மயங்க வைக்கும் உடலமைப்புக் கொண்டவரும், யானை, சிங்கம், குதிரை போன்ற்வற்றை வாகனமாக கொண்ட
ஹரி-ஹர புத்ர தேவனை
ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதிவிபூஷணம் ஸாதுஜீவனம்
ச்ருதிமனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
சரணடைந்தவர்களிடத்து அன்புடையவரும், நினைத்ததை உடனே அளிப்பவரும், வேதங்களை ஆபரணமாக அணிந்தவரும், ஸாதுக்களிடத்து
வசிப்பவரும், வேதகோஷங்களில் மகிழ்பவரும், கீதங்களில் லயிப்பவருமான ஹரி-ஹர புத்ர தேவனை சரணடைகிறேன்.

30 December 2015

"சிவாயநம

"சிவாயநம"

ஒருமுறை நாரதர் பிரம்மாவிடம் சென்றார். ""தந்தையே! சிவநாமங்களில் உயர்ந்தது "சிவாயநம' என்கிறார்கள். இதன் பொருளை எனக்கு எடுத்துரையுங்கள்,'' என்றார்.
பிரம்மா அவரிடம்,""மகனே! அதோ! அந்த மலத்தில் அமர்ந்துள்ள பூச்சியிடம் போய் அதைக்கேள்,'' என்றார்.
நாரதரும் அப்படியே கேட்டார்.
இதைக் கேட்டதோ இல்லையோ, வண்டு சுருண்டு விழுந்து இறந்தது. நாரதருக்கு அதிர்ச்சியாகி விட்டது. அவர் பிரம்மாவிடம் ஓடிவந்து, ""தந்தையே! சிவாயநம என்பதன் பொருளைத் தெரிந்து கொண்டேன். இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் இறந்து போவார்கள்,'' என்றார்.
பிரம்மா சிரித்தபடியே,"" நாரதா! நீ தவறாகப் புரிந்து கொண்டாய். அதோ! அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையிடம் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.
நாரதர் பயந்தபடியே அதனிடமும் இதே கேள்வியைக் கேட்க, அதுவும் அதே போல கீழே விழுந்து உயிர்விட்டது. நாரதர் பதறிவிட்டார்.
பிரம்மா அவரிடம் ""நாரதா! இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் முயற்சி செய்து விட்டு நீ கிளம்பலாம். அதோ! அந்த அந்தணர் வீட்டில் இப்போது தான் பிறந்துள்ள அந்த கன்றுகுட்டியிடம் போய் கேள், அது பதிலளிக்கும்,'' என்றார்.
""தந்தையே! கன்றுக்கு ஏதாவது ஒன்றானால், அந்தணர் என்னை சும்மா விடமாட்டார். வேண்டாம், வேண்டாம்,'' என நடுங்கினார்.
""நீ போ!' ' என தள்ளாத குறையாக அவரை அனுப்பவே, கன்றிடமும் இதே கேள்வியைக் கேட்டார். அன்று பிறந்த கன்று அன்றே மாய்ந்தது.
நாரதர் விக்கித்துப் போனார். இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமா இது! ஐயோ! பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் கதி இப்படி! மனிதனிடம் கேட்டால் இன்னுமல்லவா சிக்கலாகும்!'' என நினைத்த போதே, பிரம்மா அவரிடம்,""கன்றும் இறந்து விட்டதா! பரவாயில்லை.
இன்று இந்நாட்டு மன்னனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது.
அந்தக் குழந்தையிடம் போய் இதற்கு விளக்கம் கேள்,'' என்றதும், ""அப்பா! என்ன இது! மன்னன் என்னைக் கொன்றே விடுவான். அது மட்டுமல்ல, அந்த பச்சைப்பிள்ளை பலியாவதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? என்றாலும், பிரம்மா விடவில்லை.
""இதுவரை இறந்தவைக்கு என்னால் எழுதப்பட்ட விதி முடிந்து விட்டது. அவ்வளவு தான். அதனால் குழந்தையிடம் கேள். பொருள் நிச்சயம் தெரியும்,'' என்றார்.
நாரதர் கைகால் நடுங்க குழந்தையிடம் இதைக் கேட்டார்.
அந்தக் குழந்தை பேசியது. ""முனிவரே! இந்த மந்திரத்தைக் கேட்டதால் வண்டாக இருந்த நான் ஆந்தையானேன். பிறகு கொக்கானேன். அதன்பின் கன்றானேன். இப்போது மனிதன் ஆனேன்.
பிறவியில் உயரிய மானிடப்பிறப்பை இந்த மந்திரம் எனக்குத் தந்தது. இந்தப் பிறவியே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும்.
சிவாயநம என்பதை
"சிவயநம'
என்றே உச்சரிக்க வேண்டும்.
சி- சிவம்;
வ- திருவருள்,
ய-ஆன்மா,
ந-திரோதமலம்,
ம-ஆணவமலம்.
திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள். "நான்' என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு சுத்தம் செய்து ,சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள்.
சுருக்கமாகச் சொன்னால், "சிவாயநம' என்று உளமார ஓதுபவர்கள் பிறவியில் இருந்து விடுபடுவர்,'' என்றது. பிறவிப்பிணியில் இருந்து விடுபட "சிவாயநம' என்போம்.....

ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தர்

(பொறுமை)

உங்களுக்கு விரோதி நீங்களேதான்.   அது உங்களுக்கே தெரியாது.   நீங்கள் அமைதியாக அமர்ந்திருக்கக் கற்றுக் கொள்வதில்லை.    உங்களுக்கு இறைவனுக்கு நேரம் ஒதுக்கத் தெரியவில்லை.    நீங்கள் பொறுமையற்று இருக்கிறீர்கள்.  மேலும் சுவர்கத்தை உடனடியாக அடையவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.  புத்தகங்களைப் படிப்பதாலோ, அல்லது சொற்பொழிவுகளைக் கேட்பதாலோ அல்லது தர்ம காரியங்களைச் செய்வதாலோ அதை நீங்கள் அடைய முடியாது.    ஆழ்ந்த தியானத்தில் உங்களுடைய நேரத்தை அவனுக்குக் கொடுப்பதன்                 மூலம் தான் அதை அடைய முடியும்.

-- ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தர்

29 December 2015

பணம் மற்றும் செல்வவரவு தரும் ஸ்ரீ தனவர்ஷினி லக்ஷ்மி மந்திர பிரயோகம்

பிரயோக முறை :-

1.ஏதேனும் ஒரு வளர்பிறை புதன்கிழமை அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்ததில் எழுந்து குளித்து முடித்துப் புத்தாடை அணிந்து மஞ்சள் நிறத்   துணி விரித்து அதில் சிறிது பன்னீர் தெளித்து அதன் மீது கிழக்கு  நோக்கி அமரவும்.

2.நெய் விளக்கேற்றி ஸ்ரீ லக்ஷ்மி யந்திரத்தைக் குங்குமம் மற்றும் பன்னீர் கலந்த நீரால் கழுவி,ஒரு பலகையின் மேல் வெள்ளைத்துணி விரித்து அதில் ஒரு செம்பு அல்லது பித்தளைத் தட்டின் மேல் அந்த யந்திரத்தை வைத்து யந்திரத்திற்கு அட்சதை,குங்குமம் ,பூக்களால் மூலமந்திரம் 108 தடவை ஜெபித்து அர்ச்சனை செய்யவும்.

3.வெற்றிலை,பாக்கு,பால்,பழங்கள்,பாயசம் படைக்கவும்.

4. பின்னர் வலது உள்ளங்கையில் சிறிது நீர் ஊற்றி ஸ்ரீ லக்ஷ்மி தேவியை மந்திரம் சித்தியாக வேண்டி மூன்று முறை மூலமந்திரம் ஜெபித்து அந்த நீரை அருந்தி துளசி மாலையால் மந்திரம் ஜெபிக்கத் தொடங்கவும்.

தியான ஸ்லோகம் :-

ப்ராஹ்மீம் ச வைஷ்ணவீம் பத்ராம் சதுர் புஜாம் ச சதுர்முகீம் |
த்ரிநேத்ரம் கட்க த்ரிசூல சக்ர கதா தராம் |
பீதாம்பர தராம் தேவீம் நானாலங்கார பூஷிதாம் |
தேஜபுஞ்ச தரீம் ஸ்ரேஷ்டம் த்யாயேத் பால குமாரிகாம் ||


மூலமந்த்ரம் :-

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தனவர்ஷிணி |
லக்ஷ்மீர் ஆகச்ச ஆகச்ச |
மம க்ருஹே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா |

ஒரு மாதம் கழித்து பூஜைக்கு உபயோகித்த பொருள்களை ஆற்றில் விட்டு விடவும் .நாளுக்கு நாள் செல்வம் பெருகத் தொடங்கும்.

ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் பற்றிய சில ஆன்மீக தகவல்கள்

ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் பற்றிய சில ஆன்மீக தகவல்கள் தினம்தோறும் ஸ்ரீவேங்கடேசஸ்ரீவேங்கடேசஅதிகாலையில் திருப்பதி-திருமலையில் நடை திறக்கும் போது பதிவு செய்யப்பட்ட ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதத்தை இசைக்க விடுகிறார்கள் தேவஸ்தானத்தார்.இந்த வேளையில் நடைபெறும் தரிசனத்துக்கு, ‘சுப்ரபாத தரிசனம்’ அல்லது ‘விஸ்வரூப தரிசனம்’ என்று பெயர். சுமார் 200-லிருந்து 250 பக்தர்கள் வரை இந்த தரிசனத்துக்கு அனுமதி உண்டு. இதற்கான முன்பதிவை, ஆன்லைனிலும் நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம்.‘சுப்ரபாத சேவை’ தரிசனம் அரை மணி நேரம் மட்டுமே. இந்த சேவையின் முடிவில், வாத்திய முழக்கங்களுடன் ஸ்ரீவேங்கடவனின்கருவறைக்கு முன்னால் உள்ள தங்கக் கதவுகள் திறக்கப்படும். திருமலா ஸ்ரீமடத்தின் ராமானுஜ ஜீயர் கற்பூரத்தை ஏற்றி கருவறையில் இருக்கும் பிரதான அர்ச்சகரிடம் தருவார். அவர் அதை வாங்கி, மூலவர்ஸ்ரீவேங்கடாசலபதிக்கு ஸ்ரீமந் நாராயணனின் திருநாமங்களை ராகத்துடன் சொல்லி ஆரத்தி செய்வார்.மார்கழி மாதம் மட்டும், திருமலை - திருப்பதியில் பெருமாள் சன்னிதானத்தில் சுப்ரபாதம் ஒலிப்பதில்லை. காரணம் - அந்த ஒரு மாதம் மட்டும் சுப்ரபாதத்துக்குப் பதிலாக ஆண்டாளின் திருப்பாவைபாடப்படுகிறது.பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார்இந்த ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் எனும் வைணவப் பெரியவரால் எழுதப்பட்டது. ஐநூறு வருடத்துக்கும் பழமையான மூல ஸ்லோகத்தை அடிப்படையாகக் கொண்டும், ஆழ்வார் பாசுரங்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டும், இந்த சுப்ரபாதத்தை இயற்றி இருக்கிறார் இந்தப் பெரியவர்.சுப்ரபாதத்தை இயற்றிய பெருமைக்கு மட்டும் அண்ணங்கராச்சாரியார் சொந்தமல்ல. அவரது குரலில்தான் ஸ்ரீவேங்கடேச சுப்ரபாதம் திருமலை திருச்சன்னிதியில் நீண்ட காலமாக ஒலிபரப்பப்பட்டுவந்தது.தினமும் சுப்ரபாத சேவை தொடங்கப்படும் வேளையில் அண்ணங்கராச்சாரியார் குரலில் ஆலயப் பகுதியில் சுப்ரபாதம் ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கிவிடும். இதற்கென இவரது குரலில் சுப்ரபாதத்தைப் பதிவு செய்து வைத்திருந்து, அதை ஒலிபரப்புவது தேவஸ்தானத்தாரின் வழக்கம். அப்போதெல்லாம் சுப்ரபாத சேவைக்கு டிக்கெட் வாங்கி, பெருமாளின் விஸ்வரூப தரிசனத்துக்குக்காத்திருக்கும் பக்தர்கள், அண்ணங்கராச்சாரியாரின் குரலோடு இணைந்து மனம் உருகி சுப்ரபாதம் பாடுவது வழக்கம்.வைணவத் துறைக்கு எண்ணற்ற சேவைகள் புரிந்த இந்த வைணவ மேதை காஞ்சிபுரத்தில்வாழ்ந்தவர். ‘பிரதிவாதி பயங்கரம்’ என்பது இவரது பட்டப் பெயர். எதிராளியுடன் நடக்கும் வாதப் போரில், எதிர் அணியினருக்குப் பயங்கரமானவராக இருப்பவர் என்ற பொருளில் இந்தப் பட்டப் பெயர் இவருக்கு அமைந்தது. 1983, ஜூன் 21-ஆம் தேதி இவர் இவ்வுலக வாழ்வை நீத்தார்.இவருக்கு நான்கு மொழிகளில் புலமை உண்டு. வைணவர்களால் ஓர் ஆழ்வாராகவே மதித்துப் போற்றப்பட்டவர் இவர். தன் காலத்தில் 1,207 புத்தகங்கள் எழுதி இருக்கிறார் என்பது ஆச்சரிய மூட்டும் தகவல். ஒரே நேரத்தில் வலது கையால் தமிழிலும், இடது கையால் சம்ஸ்க்ருதத்திலும் எழுதும் வல்லமை இவருக்கே உரித்தான சிறப்பம்சம்.1975-லிருந்துதான் எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் குரலில் திருமலையில் சுப்ரபாதம் ஒலிக்கத் தொடங்கியது. அதற்கு முன்வரை, பிரதிவாதி பயங்கரம் ஸ்வாமியின் குரலில்தான், சுப்ர பாதம் திருமலையில் ஒலித்துக் கொண்டிருந்தது.

1. அர்ஜூனனுக்கு முதலில் கடினமான

1. அர்ஜூனனுக்கு முதலில் கடினமான
சொற்களின் மூலம் அறிவுறுத்த எண்ணினார் பகவான் கிருஷ்ணர்.
"உனக்கு என்ன ஆகி விட்டது இப்பொழுது? இந்த எண்ணம் தவறான நேரத்தில் உனக்கு எப்படி வந்தது?
அனைவரும் நீ போர்க்களத்தில் இருந்து புறமுதுகிட்டு ஓடி விட்டாயென சொல்லுவர். அதனால் உனக்கு பேரிழுக்கு ஏற்படும்.
2. இவ் வார்த்தைகள் அர்ஜுனனை போரிட தயார் படுத்தவில்லை.
ஆதலால் இந்த உடல் மற்றும் ஆன்மாவின் இயல்பை அர்ஜுனனுக்கு
விளக்க ஆரம்பித்தார் பகவான் கிருஷ்ணர்.
3. நமது உண்மையான இயல்பு ஆன்மாவே - உடல் அல்ல. இந்த
உடல் தற்காலிகமானது அழியக்கூடியது
ஆனால் ஆன்மா நிரந்தரமானது,
அழிக்கமுடியாதது. ஆதலால் இவ்வுடலில் இறப்பிற்கு துக்கப்பட
வேண்டியதில்லை. ஏனெனில் நமது ஆன்மா இறப்பதில்லை.
4. இது ஞான யோகத்தின் கண்ணோட்டம். கர்ம யோகத்தின் பார்வையிலும் நாம் நமது கடமையை
செய்ய வேண்டும். ஒரு வீரனின் கடமை போர் செய்வது. நியாயமான
மக்களை காப்பது. எவன் ஒருவன் தனது கடமையை செவ்வனே செய்து அதன் பலனை பரிபூரணமாக எனக்கு
அர்ப்பணிக்கிறானோ அவனுக்கு அதனால் எந்த பாவமோ பந்தமோ
ஏற்படுவதில்லை.
5. சமநோக்குடன் இப்போரில் பங்கேற்கும் கடமையை செய். உன்னத
நிலையை அவ்வாறே அடைவாய்.
சீரான மனநிலை உடையவர்கள் வழியும் அதுவே.
6. இந்த சீரான மனநிலை உடையவர்களை எப்படி அடையாளம்
கண்டு கொள்வது என்று தெரிந்து கொள்ள அர்ஜூனன் ஆவல் கொண்டான்
7. பகவான் கிருஷ்ணர் அத்தகைய
மனிதரிடம் நான்கு குணங்களை சுட்டிக்காட்டினார். முதன்மையானது
- அவர் தன் மனதின் ஆசைகளை துறந்து, எந்நேரமும் தன் ஆத்மாவுடன் இணைந்து மகிழ்ச்சியாக இருக்கிறார்.
8. இரண்டாவதாக அவர் கோபம், தாபம், பயம் முதலியவற்றில் இருந்து விடுபட்டு சுகத்திலும் துக்கத்திலும்
சமமாக வாழ்கிறார்.. , தன் உணர்வுகளை
அதைத் தூண்டும் பொருள்களில் இருந்து காத்துக்கொள்ள , ஆபத்தின்
அறிகுறி தெரியும் போதே சுதாரிக்கும்
ஆமையைப் போல பின் வாங்கிக்கொள்கிறார்.

28 December 2015

நாழிக்கிணறு.

நாழிக்கிணறு..!

திருச்செந்தூரின் அதிசயமாக திகழ்வது நாழிக்கிணறு ஆகும். நாழிக்கிணறு கடலுக்கு மிக அருகாமையில் உள்ளது. ஆனால், இந்த கிணற்றின் தண்ணீர், நல்ல தண்ணீராக உள்ளது. திருச்செந்தூருக்கு வரும் அனைத்து பக்தர்களும் கடலில் நீராடிவிட்டு, பின்பு இந்த கிணற்று நீரில் நீராடிய பிறகே முருகனைத் தரிசிக்கச் செல்கிறார்கள். இந்த செயலுக்குப் பின்னால் உள்ள புராண வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.

அசுர இனத்தைச் சார்ந்தவர்களான தாரகாசூரனும், சூரபத்மனும் இறையருள் பெற்று தேவர்களை அடிமைப்படுத்தினர். வடக்கே தாரகாசூரனும், தெற்கே சூரபத்மனும் மக்களைக் கொடுமைப்படுத்தி ஆட்சி செய்தனர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க முருகன் தாரகாசூரனை வீழ்த்திவிட்டார். தெற்கே சூரபத்மனை வீழ்த்த திருச்செந்தூருக்கு வருகை புரிந்தார். முருகனின் மயில் வாகனமாக இந்திரன் விளங்கினார்.

சூரபத்மனோடு ஐந்து நாட்கள் கடும் போர் நடந்தது. இந்தப் போரில் சூரபத்மனின் படைகளும், அவனது சகோதரர்களும் அழிக்கப்பட்டனர். போரின் ஆறாம் நாள் அன்று சூரபத்மன் மட்டும் தனியாக போருக்கு வந்தான். தனது சக்திகள் முழுவதையும் பயன்படுத்திப் போர் புரிந்தான். ஆனால், முருகனின் சக்திக்கு முன்னால், அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. இறுதியில் கடலுக்கடியில் உள்ள தனது அரண்மனையில் ஒளிந்து கொண்டான். பின்பு மாமரமாக உருமாறித் தாக்கினான். கார்த்திகேயன் தனது வேலால் மரத்தை இரண்டாகப் பிளந்தார். பத்மாசூரன் உருமாறிய மாமரத்தின் ஒரு பகுதி சேவலாகவும், மற்றொன்று மயிலாகவும் மாறியது. இதற்குப் பின்பே முருகன்,சேவல் கொடியுடனும், மயில் வாகனத்தோடும் காட்சி புரிந்தார்.

போர் முடிந்த பின்பு, தனது படை வீரர்களுக்கு தீராத தாகம் ஏற்படவே, முருகன் தனது வேலால் கிணறு ஒன்றினை உருவாக்கினார். அக்கிணறே நாழிக்கிணறு ஆகும். 14அடி சுற்றளவு கொண்ட இந்த சதுரமான கிணறு அதிசயத்தினுள் ஓர் அதிசயம். இந்த கிணற்றின் நீர் உப்பாகவும் கருகிய நிறத்தில் இருக்கும். இந்த கிணற்றின் உள்ளேயே மற்றொரு கிணறு உள்ளது. ஒரு அடி மட்டுமே உள்ள இந்த கிணற்றின் நீர் தெளிவாகவும் மிகவும் சுவையானதாகவும் இருக்கும். ஒரே கிணற்றுப் பகுதியில் இருவேறு சுவை கொண்ட கிணறு அமைந்தது அதிசயத்தினுள் அதிசயம் ஆகும்.

இந்த அதிசயத்தை நேரில் காண திருச்செந்தூர் வாருங்களேன்...!