குடும்பப் பிரச்சினைகளை தீர்க்கும் பகளாமுகி காயத்ரி மந்திரம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து பகளாமுகி தேவியை வழிபாடு செய்து வந்தால் நன்மைகள் பல அடையலாம்.
பகளாமுகி தேவி என்பவர், ருத்ர பகவானுக்கு உதவி செய்தவள். மஞ்சள் நிறப் பூ போன்ற மேனியைக் கொண்டவள். இவள் எட்டுக் கரங்களை கொண்டவள். இடது கரங்களில் பாசம், அங்குசம், சக்தி, வரம் ஆகியவற்றையும், வலது கரங்களில் வஜ்ரம், கதை, நாக்கு, அபயம் ஆகியவற்றையும் ஏந்தி இருக்கிறாள்.
இவள் அணியும் அனைத்தும் மஞ்சள் நிறம் கொண்ட பொருட்களே. மஞ்சள் நிறம் கொண்ட இந்த தேவி எப்போதும் மகாவிஷ்ணு போன்று பீதாம்பரம் தரிசித்திருப்பதால், ‘பீதாம்பசா’ என்றும் அழைக்கப்படுகிறாள்.
மகா விஷ்ணு பகளாமுகி காயத்ரி மந்திரத்தை பிரம்மாவிற்கும், பிரம்மா சாங்க்யாயனர் என்ற மகரிஷிக்கும் உபதேசித்தார். இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து பகளாமுகி தேவியை வழிபாடு செய்து வந்தால் நன்மைகள் பல அடையலாம்.
பகளாமுகி காயத்ரி மந்திரம் :
‘ஹ்ரீம் ப்ரம்ஹாஸ்தர வித்யாயை வித்மேஹே
பீதாம்பராயை தீமஹி
தன்னோ பகளாஹ் ப்ரசோதயாத்’
பிரம்மாஸ்திர வித்தைக்கு உரியவளை அறிந்து கொள்வோம். பீதாம்பரத்தை உடுத்தியிருக்கும் அந்த தேவி மீது தியானம் செய்வோம். பகளாமுகி தேவியான அவள் நமக்கு எல்லா நன்மைகளையும் தந்து அருள் செய்வாள் என்பது இதன் பொருள்.
இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்து வந்தால், ஆபத்துகள் விலகும். நண்பர்கள் உதவுவார்கள். குடும்பப் பிரச்சினை தீரும்.
சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.