youtube

6 November 2019

தனவசிய மாந்திரிக ரகசிய குறிப்புகள்

தனவசிய மாந்திரிக ரகசிய குறிப்புகள்.
********************************************

மல்லிகை பூவை பணம் வைக்கும் இடத்தில்
வைத்தால் பணம் பெருகும்

விட்டு வாசல்படியில் நற்பவி என்று எழதி வைக்க நன்மைகள் நடக்கும்

வலம்புரி சங்கின் சப்தம் கேட்டும் இடத்தில்
பணபுழக்கம் அதிகரிக்கும்

பிராமணர்களுக்கு அன்னதானம் அளகத்தால் சகல தோஷங்களும் நீங்கும் செல்வ செழிப்பு உண்டாகும்.

தினமும் சுத்தமான பசும்சாண விபூதி நேற்றியில் உடலில் பூசிவந்தால் லக்ஷ்மி கடாஷம் உண்டாகும்.

வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் துளசி செடி வில்வம் மரம் நெல்லி மரம்
மல்லிகை செடி வளர்த்து வந்தால் செல்வம் அதிகரிகாகும்.

வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடத்தில்
சாளகிராமம் ருத்திராச்சம் தாமரை பாதரசம்
பசும்சாணம் வைத்தால் செல்வ செழிப்பு உண்டாகும்

வெள்ளிக்கிழமை அன்று வரும் பெளர்ணமி
அன்று சுக்ர ஹோரையில் வில்வம் துளசி செந்நாயுருவி செடிகளுக்கு முறையாக காப்புகட்டி இதன் வேர்களை தன்னிடம்
வைத்து இருந்தாலும் வீட்டில்தொழில் செய்யும் இடத்தில் பணம் வைக்கும்
இடத்தில் வைத்தால் அவன் பணக்காரனாவது உறுதி.

நம் வீட்டின் 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எட்டி திசைகளிலிருந்தும் ஆறு குளம் ஏரி கடல் போன்ற இடங்களிலிருந்து நீர்
எடுத்து செம்புப் பாத்திரத்தில் செம்பில்
நீரப்பி வீட்டின் எட்டு திசைகளிலும் புதைக்க சகல சுபிட்சங்களும் உண்டாகும்.

கரையான்புற்று பாம்பு புற்று தேன்கூடு குருவி கூடு இவைகனை கலைக்கக்கூடாது
கலைத்தால் குழந்தை பாக்கியம் உண்டாகாது.

பெளர்ணமி அன்று சுக்ரஹோரையில் செந்நாருவி செடிளின் வேரை எடுத்து இவ்வேரில் தினமும் காலையில் பல்துலக்கி
வரவும் இப்படி 48 நாட்கள்
பல்துலக்கி வரவும் பல் துலக்கிய சக்கையை தனியே சேர்த்து வைத்து பெளர்ணமி அன்று அதை புது சட்டியில் போட்டு எரித்து சாம்பலாக்கி அதனுடன் ஜவ்வாது கலந்து நெற்றியில் இட்டு வரவும் இந்த வேரில் பல் துலக்கும் போது வாய் புண்ணாகி விடும் எனவே பல் துலக்கியவுடன் பச்சை பசும்பாலில் வாய் கொப்பளித்து பச்சை பாலை 1டம்ளர் அருந்திவும்.
இப்படி 48நாட்கள் செய்துவர முகத்தில் வசிய சக்தி ஏற்படும் தொழில் வசியம் ஏற்படும் லட்சுமி வசியம் உண்டாகும்
பணப்பிரச்சனை தீரும் பணப்புழக்கம் ஏற்பட்டு தனவசியம் உண்டாகும்.

ஆட்டின் கால் தூசு , கழுதையின் புழுதி
விளக்குமாற்றின் புழுதி , பெண்கள் நடக்கும் போது ஏற்படும் புழுதி இவைகள் யார்மீது படுகிறதோ அவர்களுக்கு பணக்கஷ்டம் தரித்திரம் உண்டாகும்.

வீட்டில் பப்பாளி மரம் , கருவேப்பிலை செடி ,
வளர்க்க கூடாது. கருவேப்பிலை செடி ஆண்களுக்கும் பப்பாளிமரம் பெண்களுக்கும் பாதிப்பை உண்டாக்கும்.

தலைமுடியில் இருந்து வழியும் வியர்வை துணியை அலசி பிழியும் தண்ணீர் துடைப்பதின் புழுதி புடைக்கும் முறத்தின் காற்று உடலில் பட்டால் தரித்திரம் உண்டாகும்.

நகம் தலைமுடி மிதக்கும் தண்ணீரை குடிக்கக்கூடாது.

உடலின் பின்பகுதியில் (புட்டம்) தாளம்
போடக்கூடாது நகத்தால் புல்லை கிள்ளக்கூடாது பூமியில் காலால் கையால்
கீறக்கூடாது உடலினை தட்டி தாளம் போடக் கூடாது.

தினம் தூய்மையான உடை அணிய வேண்டும். இருட்டிலும் விளக்கு இல்லாத இடத்திலும் படுத்து தூங்கக்கூடாது.

விளக்கேற்றிய பின் குப்பையை பெருக்கக் கூடாது. எச்சில் கையால் தலையை தொடக்கூடாது.

நகம் முள் கரித்துண்டு சாக்பீஸ் துண்டு ரத்தம் தண்ணீர் இவற்றால் தரையில் எழதுவதோ கோலம் போடுவதோ கூடாது.

அசுத்தமாக இருக்கும் போது சூரிய சந்திரனை பார்க்கக் கூடாது.

பகலில் உடலுறவு கொள்ளக்கூடாது சிக்கு விழந்த முடியுடனும் தலைமுடி விரித்துக் கொண்டும் இருக்கக் கூடாது.

மலம் ஜலம் கழித்த பிறகு திரும்பிப் பார்க்கக் கூடாது.

கை கால் கழவாமல் படுக்கக் கூடாது.

காலை காலால் தேய்த்து கழவக்கூடாது
ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.

நீர்வாணமாக படுத்து உறங்கக்கூடாது
நகத்தினை தரையில் கிறுக்கக் கூடாது
தண்ணீர்ரால் தரையில் கிறுக்கக் கூடாது
உடைந்த ஆசனப் பலகையை பயன் படுத்தக் கூடாது.

வாசலில், மிளகாய் எலுமிச்சை, கரி கட்டுவது ஏன்?*

*வாசலில், மிளகாய் எலுமிச்சை, கரி கட்டுவது ஏன்?*



நாம் கடைபிடித்து வந்த ஒவ்வொரு சிறிய விஷயங்களுக்கு முன்பும், ஏதோ ஒரு நல்ல விஷயம் புதைந்திருக்கிறது. காலப்போக்கில் அவற்றை மறந்து, நாம் அதை மூட நம்பிக்கை என கூற துவங்கிவிட்டோம்.

அதில் ஒன்று தான், வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டுவது. இதை நமது முன்னோர்கள் எதற்காக செய்தனர்; மூட நம்பிக்கையா; நிச்சயம் இல்லை, இதன் பின்னணியிலும் அறிவியல், மருத்துவ காரணங்கள் புதைந்துள்ளன.

எலுமிச்சை, சிவப்பு மிளகாய், கரி சேர்த்து வீடு, அலுவலகம் வாசலில் கட்டுவது ஏன் என்று கேட்டால். பெரும்பாலும் அனைவரும், அலட்சுமி கதை தான் கூறுவார். அலட்சுமி என்பது, மஹாலட்சுமியின் சகோதரி மூதேவியாவாள். இவள், வீட்டில் உள்ள செழிப்பை எடுத்து சென்று விடுவாள் என கூறுவர்.

புளிப்பு, காரம், சூடான பொருட்களை அலட்சுமி விரும்புவாள். அதனால் வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டி வைப்பதால், அவருக்கு பிடித்தமான இவற்றை சாப்பிட்டு, வீட்டுக்குள் நுழையாமல் சென்றுவிடுவாள். இதனால், செழிப்பு தங்கும் என நம்புகிறார்கள்.
சரி அறிவியல் என்ன கூறுகிறது

எலுமிச்சை மற்றும் மிளகாயில், ‘வைட்டமின் சி’ சக்தி அதிகம் உள்ளது. இதில் கயிறு கோர்த்து கட்டும் போது. காட்டன் கயிறு அந்த ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிக் கொள்ளும். மெல்ல, மெல்ல அது ஆவியாக வெளிப்படும்.

இவ்வாறு வெளிப்படும் காற்றை சுவாசிப்பதால் சில ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. எலுமிச்சை, மிளகாயில் இருந்து வெளிப்படும் வாசம், வீட்டுக்குள், விஷ சக்திகள், நுழையாமல் பாதுகாக்கின்றன. இதனால், நோய் தொற்றுகள் அண்டாமல் பாதுகாப்பாக இருக்க முடியும்.

வாசலில் கட்டி வீசிய பழைய எலுமிச்சை, மிளகாயை காலால் மிதிக்க கூடாது. மிதித்துவிட்டால், கால்களை கழுவாமல் அப்படியே வீட்டுக்குள் வரக் கூடாது என கூறுவார். கழற்றி எறிந்த பழைய எலுமிச்சை ,மிளகாயில், நிறைய நச்சுக்கள் அடங்கியிருக்கும். இதை மிதித்து ,அப்படியே

வீட்டுக்குள் வந்தால் நச்சுக்கள் பரவும் என்பதால் தான். இதை மிதிக்க கூடாது என்கிறார்கள்.இப்போது, புரிந்திருக்கும், நமது முன்னோர்கள் எவ்வளவு கெட்டிக்காரர்கள் என்பது.

5 November 2019

ஸ்ரீசீதா தேவி தந்த மந்திரம்

ஸ்ரீசீதா தேவி தந்த மந்திரம்

மாமாத்ய தேவோ வடமூல வாஸிம்
க்ருபா விசேஷாத் க்ருதஸன்னிதான :
ஓம்கார ரூபாம் உபதிஸ்ய வித்யாம்
அவித்ய கத்வாந்தம் அபாகரோது.”

பெண்கள் தங்கள் குடும்பங்களில் நிலவுகின்ற துன்பங்களையும், சச்சரவுகளையும் முன்கூட்டியே அறிந்து கொள்வார்கள் எனில், அவைகளின் விளைவுகளிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள இயலுமல்லவா? ஆனால், இது நடைமுறையில் சாத்தியமானதா? என்ற கேள்வி எழலாம்.

இச்சுலோகத்தை உச்சரிப்பவர் இல்லத்தில் சுற்றுப்புற சூழ்நிலையின் தீய சக்திகள் தணிகின்றன. இந்த ஆன்மீக்ச் சூழ்நிலையில் இந்த சுலோகத்தின் மஹிமையால் நமக்கு வரவிருக்கின்ற பிரச்சனைகளை, மனோரீதியில் முன்னரே அறியும்  [TELEPATHY] மன ஆற்றல் உருவாகிறது. ”             
இவ்வாறு மனோரீதியாக உணர்ந்தபின் நம்முடைய பூஜைகளை நெறிப்படுத்தி ஜப தப முறைகளைப் பெருக்கி, அவற்றை எதிர்கொள்ளத் தயாராகிறோம். இது அபரிமிதமான மனோ வலிமையையும், எத்துயர்வரினும் சாந்தத்துடன் அணுகும் தன்மையையும் அளிக்கின்றது. இதனால், உயர் குறை இரத்த அழுத்தம் [High & Low Blood Pressure] நரம்புத் தளர்ச்சி [ Nervous Weakness] குடல் வீக்கம், மாரடைப்பு, [Heart Attack] போன்ற நோய்களையும் அறவே தடுக்கலாம். இந்த எளிதான ஸ்லோகம் கலியுகப் பெண்களுக்கு நலன்கள் அனைத்தையும் தரவல்ல ஒரு வரப்பிரசாதமாகும்.
சீதாதேவியை நினைத்து இந்த மந்திரத்தை ஜபித்துப் பெண்கள் தங்கள் குடும்ப பிரச்சனைகள் தீர நல்வழி காணுவார்களாக!