youtube

10 November 2012

தீபாவளி என்றாலே செல்வத்தின் அதிதெய்வம் திருமகளின் நினைவும் கூடவே வரும்.

தீபாவளி என்றாலே செல்வத்தின் அதிதெய்வம் திருமகளின் நினைவும் கூடவே வரும். தீபாவளி நாளன்று நாடெங்கும் லட்சுமி பூஜை கொண்டாடப்படுகிறது.

திருமகளாம் மகாலட்சுமிக்கும் ஆந்தைக்கும் தொடர்புண்டு என்று தென்னகத்தின் ஆன்மிகவாதிகளிடம் கூறினால் வியப்படைவார்கள். ஆனால் வடக்கே வாழ்பவர்கள் அலைமகளுக்கும் ஆந்தைக்கும் தொடர்புண்டு என உறுதிபட நினைக்கின்றனர்.

இந்துமதக் கடவுளரில் வாகனம் இல்லாத தெய்வம் இல்லை. சரஸ்வதி- பிரம்மாவின் வாகனமாக அன்னப் பறவையும்; பார்வதி- பரமேஸ்வரனின் வாகனமாக ரிஷபமும் உள்ளதைப் போன்று, லட்சுமி- மகாவிஷ்ணுவின் வாகனமாக கருடன் உள்ளது. ஆனால் லட்சுமியின் பிரத்யேக வாகனம் ஆந்தை என்று பாரதத்தின் வடக்குப் பகுதிவாழ் மக்கள் நம்புகின்றனர். அவர் களுக்கு ஆந்தை ஒரு மங்களகரமான பறவை.

தீபாவளி தின இரவில் எவர் வீட்டுக்கேனும் ஆந்தை வருவதை மிக மிக சுபச் சகுனமாக அவர்கள் கருதுகின்றனர். மற்ற நாட்களில் வெளியில் கிளம்பும்போது ஆந்தை கண்ணில் பட்டால், போகும் காரியத்தில் வெற்றி நிச்சயம் எனத் தீர்மானமாகச் சொல்லுகின்றனர்.

தீபாவளி தினம் என்றில்லை; சாதாரண நாட் களிலும் இரவில் ஒரு வீட்டில் ஆந்தை வந்தமர்ந்து குரல் எழுப்பினால், அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு விரைவில் பொருளாதார ரீதியில் அதிர்ஷ்டம் வரும் என்று உறுதியாகக் கூறுகிறார்கள். அப்படி வந்து அமரும் ஆந்தை குரல் எழுப்பாமல் அமைதி காத்தால் மிகவும் சங்கடப் படுவார்கள்.

ஒரு வீட்டுக்கு வந்த ஆந்தை அங்கேயே கூடு கட்டி வசிக்கத் தொடங்கி, இரவு பகலாகக் குரல் கொடுத்தால் அல்லது அவ்வீட்டின் எல்லைக்குள் உள்ள கோவிலில் இப்படி நிகழ்ந்தாலும் அந்தப் பகுதிவாழ் மக்களுக்கு லட்சுமி கடாட்சம் நிச்சயம். பொதுவாக சந்தியா காலம் அல்லது இரவு நேரத்தில் ஆந்தை குரல் எழுப்புவது சுபமாகக் கருதப்பட்டாலும், அது எழுப்பும் குரல் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும் என்று வட மாநிலங்களில் சொல்கின்றனர். அதனால் ஆந்தை குரல் கொடுக்கும்போது அதை எண்ணி, அதற்கேற்றபடி பலனா, பரிகாரமா என முடிவெடுக்கின்றனர். இதோ அந்த விவரம்...

ஒருமுறை: மஹா மிருத்யுஞ்ஜய ஹோமம் செய்வார்கள்.

இரண்டு முறை: சந்திரனின் எண். நற்பலன் விளையும். வெகு சீக்கிரத்தில் ஒரு நற்செயலில் வெற்றி கிட்டும்.

மூன்று முறை: குருவின் எண். வீட்டில் எவருக்காவது விரைவில் திருமணம் நடக்கும். குடும்பத்தில் புதிய நபர் ஒருவரின் வருகைக்கு வாய்ப்பு உண்டு.

நான்கு முறை: ராகுவுக்கு சாந்தி செய்வார்கள்.

ஐந்து முறை: புதனின் எண். குடும்பத் தலைவருக்குப் பயணத்தால் யோகம். அது புனிதப் பயணமாகவும் அமையலாம்.

ஆறு முறை: சுக்கிரனின் எண். குடும்பத்துக்கு உறவினர் அல்லது உறவு இல்லாத- வேண்டிய அல்லது வேண்டாத நபர் திடீர் விருந்தாளியாக வருவார்.

ஏழு முறை: கேதுவுக்கு சாந்தி செய்வார்கள்.

எட்டு முறை: இதற்கும் உடனடியாக மிருத்யுஞ்ஜய ஹோமம் செய்வார்கள்.

ஒன்பது முறை: செவ்வாயின் எண். குடும்பத் தில் மங்கள நிகழ்வுகள் ஏற்படும். விரைவில் சாதகமான பலன்கள் உருவாகும். நல்ல செய்தி கள் வரும்.

ஆந்தை ஒரு நிஸிசர- அதாவது இரவில் அலைந்து திரிந்து இரை தேடும் பறவை. பகலில் அதற்குக் கண் தெரியாது. கூட்டுக்குள் உறங்கி ஓய்வெடுக்கும்.

பறவை சாஸ்திரப்படி ஆந்தை விஷமத் தனம் நிறைந்த- அறிவுள்ள பறவை. மனிதனைப் போன்ற சமதள முகம்; அமைதி, தீவிரம் உடைய கம்பீர முகச்சாயல்; சுற்றும் முற்றும் ஆராயும் விழிப்பு; சிமிட்டாமல் உற்றுப் பார்க்கும் இரு கண்கள்; பின்புறம் 270 டிகிரி வரை செலுத்தி நன்கு திரும்பிப் பார்க்க வல்ல கழுத்து. எனவே பறவைகளில் ஆந்தைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இதற்கு "இரவின் அரசன்' என்றே பெயர். விவசாயத்துக்குத் தீங்கு செய்யும் எலி, பூச்சிகள், நத்தை போன்றவற்றை வேட்டையாடி அழிப்பதால் அதை "விவசாயியின் நண்பன்' என்றும் சொல்வார்கள்

நெல்லிக்காயனது அருமருந்தாகும்.

அன்றாடம் உட்கொள்ளும் நெல்லிக்காயனது அருமருந்தாகும். இது வாதம்,பித்தம், கபம் ஆகியவற்றை போக்கவல்லது. இதனாலேயே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதன் பெருமை பற்றி ஆயுர்வேத சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது. நமது முன்னோர்கள் இதனை ரசாயனம் என்றே அழைத்துள்ளனர்.
தினசரி உணவில் நெல்லிக்காயை சேர்த்துக்கொண்டால் நூறு ஆண்டுகள் வரை இளமையுடன் வாழலாம் என்று சித்தர்கள் தங்களின் குறிப்புகளில் எழுதி வைத்துள்ளனர். உடல் நலத்திற்கு ஏற்ற நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.   கடுக்காயைப்போலவே இதில் பல வகையுண்டு பெருநெல்லி, கருநெல்லி, அருநெல்லி, என்பன. இதில் கருநெல்லி கிடைக்காதது. மற்றவை கடைகளில் கிடைக்கும்.
ஆறு சுவைகளில் இனிப்பு, புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, உவர்ப்பு என்னும் அய்ந்தும் நெல்லிக்காயில் உள்ளன. இதில் உள்ள இனிப்பும், உவர்ப்பும், பித்தத்தையும், புளிப்பு, கைப்பு, கபம் ஆகியவற்றையும் போக்க வல்லது.
உயிர்ச்சத்துக்களான ஏ,பி,சி என்ற மூன்றும் அடங்கியுள்ளன. சாத்துக்குடிச் சாற்றில் உள்ள வைட்டமின் சத்து 20 மடங்கு இதில் உள்ளது. நெல்லிக்காய் வாடிய போதிலும் சிறிதளவும் குறைவதில்லை. நோயற்றவராக மனிதர் வாழ தினசரி 50 மில்லிகிராம் வைட்டமின் சி சத்து தேவை. இதற்கு 4 சாத்துக்குடி சாறோ, 8 அவுன்ஸ் தக்காளிச்சாறோ சாப்பிடவேண்டும். ஆனால் இந்த 50 மில்லிகிராம் வைட்டமின் சி, அரை அவுன்ஸ் நெல்லிக்காயில் கிடைக்கிறது.
ஜீரணக்கோளாறு, பித்த மயக்கம், ஆரோடசிகம், காமாலை, கண் நோய், இரத்த சோகை போன்றவைகளுக்கு நெல்லிக்காய் மருந்தாகும் இதனை ஊறுகாயாக செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் இதனால் பித்தம் தணியும் உணவு எளிதில் ஜீரணமாகும்.
நீண்ட நாட்களாகியும் ஆறாமல் இருக்கும் புண்கள் ஆறிவிடும். கட்டிகள் பழுக்கும். அப்போது அதனை அரைத்து விழுதாக்கி உருட்டி உலர வைத்து அதனை சாப்பிட்டு வந்தால் குணம் தெரியும். புழுபூச்சிகளை அகற்றிவிடும் சக்தி உள்ளது நெல்லிக்கனி.
கருவுற்றவர்களுக்கு ஏற்றது
நெல்லிக்காயில் இரும்புச்சத்து உள்ளது இரத்தத்தைச் சுத்தஞ் செய்து இருதயத்தை வலுப்படுத்தும். எனவே கருவுற்றவர்கள் முதல் மாதம் தொட்டு 9 மாதங்கள் வரை காலை, மாலை, ஒரு நெல்லிக்காய் அல்லது நெல்லி ஊறுகாய் உட்கொண்டால் அடிக்கடி வரும் வாந்தி நிற்கும். நல்ல பசியும் எடுக்கும். நெல்லிக்காயில் உள்ள இரும்பு சத்தும், சுண்ணாம்பு சத்தும் நல்ல உடல் ஆரோக்கியத்தையும், ரத்த விருத்தியையும், கருவுற்றவர்களிடையே ஏற்படுத்துகிறது. மேலும் கருவில் உள்ள சிசுவுக்கும் சத்தான ஆகாரம் கிடைக்கிறது.
நினைவாற்றல் கூடும்
பிறந்த குழந்தைகளின் உணவில் நெல்லிக்காய் சாற்றினைக் சேர்த்து வந்தால் வளரும் குழந்தைகள் தேக ஆரோக்கியத்துடன் திகழ்வார்கள். மாணவர்கள் இதனை தவறாது உட்கொண்டால் நினைவாற்றல் அதிகரிக்கும் கண்பார்வை தெளிவாகும். புத்திக் கூர்மையை ஏற்படுத்தும். குழந்தைகளுக்குக் கோணலாக முளைத்த பற்களுக்கும், காலத்தில் முளைக்காத பற்களுக்கும் கூட நெல்லிக்காய் ஏற்றது.

பணம் வீட்டில் தங்க வாஸ்து சாஸ்திரம் சொல்லும் ரகசியம்


உங்கள் விட்டில் எப்பவும் காசு பணம் தங்க வாஸ்து சாஸ்திரம் சொல்லும் ரகசியம் என்ன என்பதை பார்போம்.

உங்கள் விட்டு பணப்பெட்டி அல்லது லாக்கரை தெற்கு திசை நோக்கி வைத்தால் பண பெட்டி எப்பவும் காலியாகத்தான் இருக்கும். அதில் வைத்து எடுக்கிற அளவிற்கு பண வருவாய் வராது. வந்தாலும் தங்காது.

வட கிழக்கு திசையை நோக்கி பண பெட்டியை வைத்தால் வந்ததெல்லாம் கொள்ளும் மகராசன் கப்பல் மாதிரி போய் கிட்டே இருக்கும். வரவுக்கு மிறிய செலவு வரும்.

தென் கிழக்கில் பண பெட்டியை வைத்தால் அக்கினியில் போட்ட மாதிரி உடனே கரையும்.

உங்கள் விட்டு பூஜை அறையில் சாமி படங்ககளை மேற்கு திசை நோக்கி .வைத்தால் கூட வரவும் செலவும் சரியாக இருக்கும்.சாமி அறைதான் பணம் வைத்து எடுக்க சரியான இடம் என்று பூஜை அறையில் வைத்திர்களானால் பணம் வருவதும் போவதும்மாக இருக்கும் தங்கவே தங்காது.

பண பெட்டியை அல்லது லாக்கரை வடக்கு திசை நோக்கி வைப்பது நலம், அல்லது நேர் கிழக்கு திசை நோக்கி வைப்பது இன்னும் சிறப்பு.

வாஸ்து சாஸ்திரம் ஆதி இந்தியாவின் அரிய பொக்கிஷம் :

வாஸ்து சாஸ்திரம் ஆதி இந்தியாவின் அரிய பொக்கிஷம் : ஆதிகால கலையாகிய வாஸ்து ஞானத்தின் ஒரு பிரிவு. கல்வியுடன் அனுபவமும் நம்பிக்கையும் மிகுந்த இந்தியாவின் சிறந்த கலை. அதன் சக்தியும், விரும்பிய நன்மை அளிக்கும் திறமையும் உலகு அறிந்த ஒன்று. வாஸ்து சாஸ்திரம் பண்டைய இந்தியாவில் தோன்றியது. இதன் சிறப்பு, யாதெனில் உடல், மனது, ஆவி மூன்றும் உயர்வடையும். பொதுவான நோக்குடன் ஒரே மொழியில் உருவானது. இது தானாகவே மனிதனுக்கும், பஞ்சபூதங்களுக்கும் இடையே எல்லையை வரையறுத்து, நன்றாக திட்டமிட்டு வீடுகட்டுவது மிகவும் அவசியமானதாக ஆயிற்று. அவ்வாறு உருவாக்கப்பட்ட வாஸ்து சாஸ்திரம் தடைகளை அகற்றி பஞ்சபூதங்களை சரியான முறையில் கிரஹிக்க ஏதுவாக திட்டமிட்டு வீடு கட்டப்பட்டது. வாஸ்து சாஸ்திரம் அழியாக் கொள்கைகளை ஆதாரமாகக் கொண்டு, சுற்றுச் சூழ்நிலைகளில் ஆனந்தமான வாழ்க்கை வாழ வழிகாட்டுகிறது. இதனால் மனித உடல்நலம் பஞ்ச -பூதங்களின் பெரும்பாதிப்புக்கு உட்பட்டது என்பது எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. இயற்கையின் நியதியோடு இணைந்து வாழ்வதாலும் வாஸ்து சாஸ்திர முறைப்படி கட்டப்பட்ட வீட்டில் வசிப்பதாலும் நடுநிலை நகலம் அடைய முடிகிறது. (பதினாறும் பெற்று பெருவாழ்வு பெறுதல்) உடல், மனது இவற்றை பாதிக்கும் காஸ்மிக் சக்தி இருப்பதை உறுதியாக கூறுகிறது. சுருங்கச் சொல்ல வேண்டுமாயின் வாஸ்து சாஸ்திரம் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது. இவ்விரண்டும் சரியான முறையில் செயல்படுத்தப்பட்டால் உடல், மனது நலம் காக்கும் வல்லமை உடையது என்பது உறுதி. இந்தியாவின் வாஸ்து சாஸ்திரம், இந்தியாவின் அரும் பொக்கிஷம் ஆதி இந்தியாவின் அரும் பெரும் பொக்கிஷங்களில் வாஸ்து சாஸ்திரம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக நம்பப்படுகிறது. அது வேதங்களின்று வெளிப்பட்டு உருவாக்கப்பட்டது. வேதாந்த தத்துவங்களில் வேரூன்றிய வாஸ்து எனும் வார்த்தையின் பொருள் வசிக்க என்பது பாஸ்து சாஸ்திரம் என்பது திட்டமிட்டு செய்து உருவகம் செய்தும் வீடு கட்டி உதவும் புனிதமான ஆழந்த அறிவு. (விஞ்ஞானம்) வீடு -Cosmos (micro-macro cosm) இவற்றின் இடையே நடுநிலை நிறுத்தி செயல்படுவதை குறிக்கோளாகக் கொண்டது. இது உடல்நலம் செல்வம், ஆனந்தம் அளிக்க வல்லது. உடல் நலமும், உள்ளத்தில் மகிழ்ச்சியும், உணவில் கிடைப்பதல்ல. மனது கவலையுற்றதால் நடுநிலை நிறுத்தி செயல் படுவதை குறிக்கோளாகக் கொண்டது. இது உடல்நலம் செல்வம், ஆனந்தம் அளிக்கவல்லது. உடல்நலமும், உள்ளத்தில் மகிழ்ச்சியும், உணர்வாலும், உடற்பயிற்சியாலும் மட்டும் கிடைப்பதல்ல. மனது கவலையுற்றதால் நடுநிலை இயக்கத்திலிருந்து உடல் தூக்கி எறியப்பட்டு நோயைத் தூண்டுகிறது. உடலில் உள்ள நாடிகள் ஆராய்ந்து அறிய சிரமமான பிராணா ஒழுங்காக இயங்க வாஸ்து வழிவகுக்கிறது. நல்ல உடல்நலமும், செல்வமும், ஆனந்தமும் அருளுகிறது. வாஸ்து சாஸ்திர அறிவை யார் புறக்கணிக்கிறார்களோ அவர்கள் தொடர்ந்து துன்பமும், ஏமாற்றமும் அனுபவிக்க வேண்டி இருக்கிறது. வாஸ்துவின் தொடக்கம் உலக இயற்கையின் நியதி பற்றிய வியக்கத்தக்க ரகசியங்களை மனிதர்கள் பவினக் கதைகள் மூலம் பல்லாயிரம் ஆண்டுகளாக விவரித்து வந்தார்கள். சரித்திரம், தத்துவம், விஞ்ஞானம் இவை மூன்றின் சிறு பிரிவுகளால் தொகுப்பட்டவைகளே புவினக் கதைகள். இக்கதைகள் விண்வெளியில் சூரியன், நட்சத்திரங்கள் இவற்றின் சுழற்சி பற்றியும் (Spring, Summer, Autumn and Winter) போன்ற ஒரு ஆண்டில் மாறுகின்ற 4 காலங்களைப் பற்றியும் விவரிக்கப்படாத உலக இயற்கை முறைகளை ஆதிகால மனிதர்கள் அறிந்துகொள்ள உதவியது. இயற்கையின் நியதிகள் பற்றிய புவினதத்துவங்கள் கற்பனை கதைகள் மூலமாக உண்மையான விஷயங்களை தூண்டுதல்கள் செய்வதுபோல வாஸ்து சாஸ்திரமும் தத்துவம் மிகுந்த நம்பிக்¬யின் அடிப்படையில் உருவானது. (Superstition) வாஸ்து பகவான் உருவான வரலாறு வாஸ்து பகவான் தலை பாகம் வடகிழக்கு ஈசானிய பகுதியில் இருபாதம் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. தேவர்களை அசுரர்கள் துன்புறுத்தி சொல்லொனாத் துயரத்தில் ஆழ்த்திய போது கெடு மதி படைத்த அந்த அசுரர்களை ஒன்றும் செய்ய இயலாமல் தவித்த தேவர்கள். சிவபெருமானை அணுகித் தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டுகின்றனர். சிவபெருமான் கடுங்கோபம் கொள்ள அரவது உடலில் இருந்து வெளிப்படுகிறார் வாஸ்து பகவான். வாஸ்து பகவானால் அசுரர்கள் அழிக்கப்படுகின்றனர். அசுரர்களை அழித்தபின் பூமியெங்கம் கெடுமதியாளர்களின் உடல் பரவிக் கிடக்க, சிவபெருமானை வணங்கி நின்ற வாஸ்து பகவான், தங்கள் உடலில் இருந்து தோன்றிய நான் தங்களது ஆணையை ஏற்று நின்கிறேன் என்று கூறுகிறார். உடனே சிவபெருமான் வாஸ்து பகவானை நோக்கி பூமியெங்கும் இறந்து கிடக்கும் அசுரர்களின் உடல்களை அப்புறப்படுத்து என்று கட்டளையிட வாஸ்து பகவான் கட்டளையை ஏற்று அவ்வாறே இட்ட பணியினை செய்து முடிக்கிறார். பணியினை முடித்தவர் மீண்டும் சிவபெருமானை அணுகி அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் என்று வினவ சிவபெருமான். வாஸ்து பகவானிடம் பூமியில் படுத்துறங்கி வருடத்தில் எட்டு நாட்கள் மட்டும் விழித்தெழுந்து என்னை பூஜை செய் என்று கூறுகிறார். வாஸ்து விழிக்கும் நேரம் மக்கள் அவரை வழிபட்டு வந்தால் மாந்தர்கள் வாழும் பூமி மக்கள் பயன்பாடு உள்ள இடங்கள், கட்டடங்கள், புதுமனை போன்ற இடங்களில் உள்ள தோஷங்கள் நீங்கி நன்மைகள் ஏற்படும். வதம் செய்த அரக்கர்களின் உடல்களை அகற்றி பூமியை சுத்தப்படுத்தியது போன்று, மக்கள் வாழும் இடத்தில் கேடுகள் அகன்று ஐஸ்வர்யம் ஏற்படும் என்பது வாஸ்து புராணம் கூறும் உண்மையாகும். வாஸ்துவின் கொள்கைகள் புராணக் கதைகளிலிருந்து வாஸ்துவின் கொள்கைகள் பிறந்தது. பழங்கால வையகத்தின் சட்டத்தால் திணிக்கப்பட்டாலும், காலத்தால் மாறாதது. 5000 ஆண்டுகளுக்கு முன்னிருந்ததே போல் இன்றும் உள்ளது. வாஸ்து முறைப்படி உள்ளும் புறமும் மாற்றிக் கொள்ளும் தகுதி உடையவை காற்று நெருப்பு போன்ற மூலக் கூறுகளிலும் மனித உடல் உறுப்புகளிலும் அடங்கியுள்ள அடிப்படை சக்திகள் ஒன்றே ஒன்று. கட்டடங்களும், உருவங்களும் சிஷீsனீவீநீ கொள்கைகளின் அடிப்படையில் ஒத்து போகக் கூடியவை என வாஸ்து கூறுகிறது. வையகத்து பாகங்களின் அமைப்புகளில் ஒரு பிரிவாக அவைகள் விளங்குகின்றன. ஒரு நியைதியில் அதிர்வு ஏற்படுத்துகிறது. நல்ல அதிர்வுகள் வீட்டில் வசிப்பவர்களுக்கு நற்பலன் அளிக்கிறது. வாஸ்துவில் குறுக்கு நெடுக்கு குவியல்களாக சக்திகோடுகள் பூமியின் குறுக்கே வடக்கிருந்து தெற்காகவும், கிழக்கிலிருந்து மேற்காகவும் பயணம் செல்கின்றன. நாம் வசிக்கும் இடத்திலும் வேலை செய்யும் இடத்திலும் இந்த திசையைப் பொறுத்து அமைந்துள்ளது. இவை வீட்டில் வசிப்பவர்களின் மீது நேரிடை பலன் அளிக்கவில்லை. சூரியன் உதிக்கும் கிழக்கு திசை எல்லா ஆரம்பத்திற்கம் குறிக்கிறது (Represent). மாலை சூரிய அஸ்தமனம் முடிவை குறிக்கிறது. அறியாமையும், இருளையும் குறிக்கிறது. துருவ நட்சத்திரம் உள்ள இடம் வடக்கு திசையைக் குறிக்கிறது. இந்த ஆகாயத்தின் ஒரு நிலையான இடம் நிலையான பாதுகாவலான நிலையைக் குறிக்கிறது. தெற்கு கடந்த காலத்தையும் நமது முன்னோர்களையும் குறிக்கிறது. (எதிலிருந்து எல்லா உருவம் தோன்றுகிறதோ அந்த முக்கியமான இடம் பூமியையும், பூமியின் மேற்பரப்பையும் இணைப்பதே வாஸ்து விஞ்ஞானம் முழுமையானது) சரியான முறையில் பயன்படுத்தப்பட்டால் உலக வாழ்க்கைக்கு அளவற்ற ஆனந்தம் அளிக்கும். விசை Cosmic Forcesன் தூண்டுதல்கள் Cosmic Forces எவை? வாஸ்து சாஸ்திர முறைப்படி கண்ணுக்கு புலப்படாத ஒரு சக்தி உலக முழுவதும் பரவி உள்ளது Tangible that can be touched or real prealent = wide spread, predominant எதை தொட்டு உணர முடியாதோ, எது எங்கும் பரவி உள்ளதோ, எது அளக்க முடியாத அளவுக்கு சிறயதோ, Self Evident ஆக உள்ளதோ முடியாததோ எப்போதும் (சுய சாட்சி) அழியாதிருப்ப சக்தி என்று சரியான பெயர் கொண்டதோ என முண்டக உபநிஷத் விவரிக்கிறது. அது அப்பொருளைச் சமமான சக்தியுடன் தாங்கிக் கொண்டிருக்கிறது. வையகம் ஒரு சக்தியாக ஆரம்பித்து (Matter) ஆக (பொருளாக) மாற்றப்பட்டது. அப்பொருளின் உருவங்கள் இருக்கமாக கட்டப்பட்டுள்ள சக்தியே பார்க்க முடியாத சக்தியின் பிம்பம் உலகிலுள்ள எல்லாவற்றிலுள்ளும் உள்ளது. ஆகவே புருஷன் Cosmic Foreces சூரியன் சக்தியின் உள்ளும், கிரணங்களின் சுழற்சியிலும், பூமியின் காந்த அலைகளிலும் (field) உள்ளது. வாஸ்துபடி அவை எல்லாம் Macro and Micro Cosmic புவியின் மீது செயல்பாடுகளை, ஊக்குவிக்கிறது. இந்த (Cosmic Forces) காஸ்மிக் போர்சஸ்களுக்கு ஏற்ப வீடுகள் டிசைன் செய்தால் அது சகல நன்மையும், நிம்மதியும் அளிக்கிறது. சூரியனின் செயல்பாடுகள் (The Influence of the Sun) பூமியில் வாழும்¢ எல்லா உயிர்களுக்கும் சூரியன் ஷிஷீuக்ஷீநீமீ ஆக உள்ளது. கடவுளை ஒத்த உருவம் உடையவன் மனிதன். காலை சூரியன் Ultraviolett கதிகளை வீசுகிறது. அது பகலின் மற்ற நேரத்தைக் காட்டிலும் அதிக ஒளியும் குறைந்த சூடும் உள்ளது. அது கிருமிகளை அழிக்கிறது. வைட்டமின் டி உற்பத்திக்கு உதவுகிறது. சூரியன் கிழ்திசைக் கடவுள், வீட்டின் வடகிழக்கு Quarterல் வசிக்கிறார். சூரியன் மேற்கில் நகருகிறபோது சூடு அதிகமாகிறது. அதிக இன்ப்ராரெட் கதிர்களை வெளியேற்றுகிறது. அது உடல் நலனுக்கு தீமை விளைவிக்கூடியது. வாஸ்து சாஸ்திரத்தில் கூறியுள்ள படி அதிக இட, அதிக கதவுகளும், அதிக ஜன்னல்களும், அதிக பல்கனிகளும், அதிக தாழ்வாராங்களும் வடக்கு திசையிலும், கிழக்கு திசையிலும் அமைக்க வேண்டும். அதனால் சூரியனின் காலை ஒளிக்கதிர் தடையின்றி வீட்டினுள் வீசும். இதனால் பெரிய மரம், செடி, கொடிகள், உயர்ந்த சுவர்கள், சூரிய ஒளியைத் தடுக்கும். மற்றவையும் வடக்கிலும், கிழக்கிலும் இல்லாது அமைத்தல் வேண்டும். வடக்கிலும், கிழக்கிலும் தரைமட்டம் சற்று குறைவாக இருப்பது நல்லது. வழக்கமாக வடகிழக்கு மூலை தியானம் செய்ய ஏற்றதாக உபயோகப்படுகிறது. காரணம் The Sun also represents the inner or true self. The Influence of the moon and the planets பண்டைய மனிதர்கள் விண்வெளியில் கிரகங்களின் சுழற்சியைக் கண்டு அறிந்தனர். அவற்றின் இருப்பிடம் ஒவ்வொரு தனி மனிதரிடத்தின் மீது Subtle yet profound influence அறியமுடியாத ஆனால் ஆழமான (தூண்டுதல்) மாற்றங்கள் செய்கின்றன என்பதை அறிந்திருந்தனர். ஒவ்வொரு கிரஹமும் வாழும் உயிராகவும், பயப்படக்கூடிய தோற்றமாகவும், திருப்தி அடைந்தால் ஒரு மனிதனுடைய தின வாழ்க்கையில் உயர்வும், சுகமான வாழ்வுக்கு உத்திரவாமும் அளிப்பதாகவும் இருந்தன. 1. சந்திரன் உயிர்கொடுக்கும் சக்தி. மிஸீstவீஸீநீtவீஸ்மீ ணீநீtவீஷீஸீமீக்ஷீtவீமீs, suதீநீஷீஸீsநீவீஷீus இரண்டுக்கும் அரசன். பொலிவும், புத்துணர்வும் அளிக்கும் இடமான குறியல் அறை சந்திரனால் ஆளப்படுகிறது. அவனது (சந்திரன்) நிறம், வெள்ளை, வெளிர் நீலம் அல்லது பச்சை. 2. யிuஜீவீtமீக்ஷீ (குரு) : அஞ்ஞானம் அகற்றுபவர், அறிவு, கல்வி, ஞானம் அளிப்பவர். தேவர்களுக்கு ஆசிரியர், கல்வி அல்லது நூலகத்தில் வாழ்பவர். அறிவைத் தூண்டும் மஞ்சள் நிறத்துடன் தொடர்புடையவர். ஆபரணம், பணம் மற்றும் அதிக மதிப்புள்ள சொத்துக்களைக் காப்பவர். இவர் வீட்டின் வடதிசையில் அல்லது வடக்கில் உள்ள அறையில் வைக்கப்பட வேண்டியவர். 3. விமீக்ஷீநீuக்ஷீஹ் (புதன்) : சிறிய கிரஹம். சூரியனுக்கு அருகில் உள்ளவர் விரைவில் சுழல்வது. மாற்றக்கூடியவைகளுக்கும் ஓய்வு அற்றவைகளுக்கும் தூதுவர். சமஸ்கிருதத்தில் அவர் பெயர், புத்தி என்னும் சொல்லிலிருந்து வந்த பெயரே புதன். முக்கிய ஆலோசனை நடத்தப்படும் இடமான அமரும் அறை அல்லது உணவு உண்ணும் அறை போன்ற பொது இடத்தில் சுறுசுறுப்பாக இயங்குபவர். 4. க்ஷிமீஸீus (சுக்கிரன்) : ஆகாயத்தில் ஒளி வீசும் வெளிச்சம் உள்ள கிரஹம் மனிதனின் இயற்கையான கொண்டாட்டம், அன்பு பொறுமை, அழகுக்கலை போன்ற ஆபரணம் உடுத்தும் அறையிலும், படுக்கை அறையிலும் சுக்கிரனின் தூண்டுதல்கள் இருக்கும். பிடித்த நிறம் வெளிர் நீலம், பிங்க், வெளிர் மஞ்சள். ரிuழீணீ ஷீக்ஷீ விணீக்ஷீs: சிகப்பு கிரஹம் நெருப்பு போர் இவற்றுடன் தொடர்புடையது. நிரந்தரமற்றது. அழிக்கும் இயல்புடையது. தென்கிழக்கு மூலை (அக்னி)யில் வாசம் செய்பவர் விவாதத்திற்கு எதிராகக் காப்பவர். அவருக்கு உகந்த இடம் சமையல் அறை. ஷிணீtuக்ஷீஸீ (சனி) சட்டமும் வரையறுத்தலுக்குமுள்ள கிரஹம், பூமிக்கு வெகு தொலைவில் உள்ளது. மிகவும் மெதுவாக மாறுவது, கரிய நிறம் கொண்டது. வீட்டின் இருண்ட இடமான அலமாரிகள், பூமிக்க கீழ் உள்ள தளம் (கீழ்தளம்) வாசம் செய்வது. பூமியின் செயல்பாடுகள் Influence வாஸ்துப்படி சச்தியுள்ள அலைகள் பூமியின் மீது வலைபோல் பின்னிக் கொண்டு இருக்கிறது. மின்காந்த வடக்கிலிருந்து தெற்காகவும், கிழக்கிலிருந்து மேற்காகவும், சூரியன் பிரயாணம் செய்யும் பாதையில் உள்ளது. நான்கு பெரும் திசைகாட்டி, திசைகள் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ரேகைகள் ஒன்றை ஒன்று 90 டிகிரி கோணத்தில் சந்திக்கின்றன. சராசரியாக 15 டிகிரி அடைவதற்கு பூமியின் அச்சு 23.5 டிகிரி கோணத்திலிருந்து 360 டிகிரி ஆக முன்னோர்கள் பிரித்தனர். ஆகையால் முக்கிய திசைகளின் 90 டிகிரி யின் மூலைகளிலிருந்து 15 டிகிரி கோணம் எடுக்கப்பட்டு மொத்தமாக 30 டிகிரி போக 60 டிகிரி விடப்பட்டது. ஆகையால் முக்கிய திசைகள் 60 டிகிரி உள்ளதாக கணக்கிடப்பட்டது- ஒவ்வொரு திசைகளின் விகிதங்களை கணக்கிட்டு, இடத்தின் எந்த ஒரு பகுதியிலும் பல திசைகளின் செயல்பாடுகளை முன்னோர்கள் கணக்கிட முடிந்தது. நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்டடால் ஒரு வீடு, நன்மை செய்யும் எல்லா இயற்கை சக்திகளையும் ஈர்க்கிறது. நன்மையும், மன திருப்தியும் வீட்டில் வாழ்பவருக்கு உறுதியாக அளிக்கிறது. இயற்கையாகவே அந்த வீடு வையகத்தின் ஒரு பிரிவாக பின்னிப் பிணைக்கப்பட்டு அத்துடன் ஒன்றி சகல நன்மைகளுடன் ஆனந்தமாக அதிர்வில் அசைந்தாடுகிறது. Vibration (அதிர்வு): பூமியின் மின்காந்த அலை முடிவாக எல்லா கிரஹங்களுக்கம் நன்மை அளிக்கிறது. முழு பூமி கிருஹத்துக்கு சக்தி செயல்பாடுகள் போல சதுர, செவ்வக வடிவில் உள்ள வீட்டு மனைகளும், கட்டடங்களும் காண்பிக்கின்றன. காந்த சக்தியின் செயல்பாடுகள் Influence of Magnetic Forces பண்டைய மனிதர்கள் பூமியின் மின் காந்த அலைகள் பற்றிய அறிவு பெற்றிருந்தார்கள். மனித உடல், மனது இவற்றை பாதிக்கம் எளிதில் அறிய முடியாத அதிர்வின் அளவையும் அறிந்திருந்தார்கள். காரணம் மனித உடலும், மின் காந்த துண்டு போன்ற குணங்கள் உடையது. மனிதன் தலையை வடதிசை வைத்து உறங்கும்போது வித்தியாசமான இரு துருவங்கள் ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்வதால் தூக்கம் கெடுகிறது. ஆதலால் வடதிசை தலைவைத்து உறங்குவது கூடாது என்று வாஸ்து கூறுகிறது. ஆயிரம் இதழ்கள் உடைய தாமரை உள்ள தலை உச்சி வழியாக, அறிய முடியாத மின்காந்த சக்தி பரவுகிறது. இது தண்டு வடம் வழியாக கீழே உள்ள எல்லா நரம்பு மண்டலங்களுக்கும் பரவுகிறது. இந்த சக்தி சரியான விகிதத்தில் இன் பேலன்ஸ் வைத்திருப்பதால் நல்ல உடல் நலம் காப்பாற்றப்படும். பூமி காந்த அலை சரியாக அமைத்து கட்டப்படும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு சகல நன்மையும் அளிக்கிறது. வாஸ்துக்க ஏற்ப வீட்டில் வசிக்கும் இடம் Living Spacess வடதிசையில் (True North) ல் உள்ளது. காலை சூரியனின் நன்மை பயங்கும் கதிர்கள் கிழக்கிலிருந்து நுழைகிறபோது பூமியின் மின்காந்த விசை வடக்கு நோக்கி இழுக்கிறது. அப்போது வடகிழக்கிலிருந்து தென்மேற்காக காஸ்மிக் எனர்ஜி நகருவதை பண்டைய மனிதர்கள் கண்டறிந்தார்கள். வடகிழக்கு திசை ஈசான்யம் எனப்படும். ஈசான்யம் என்றால் பரிசுத்தம். அது வையகத்தில் உள்ள எல்லா நல்லவைகளையும் குறிக்கிறது. வீட்டில் தென்மேற்கு மூலையில் கதவு அல்லது வெளியேறும் வாசல் வைக்கக்கூடாது என வாஸ்து கண்டிப்பாக கூறுகிறது. இது வடகிழக்கு மூலையிலிருந்து தென்சக்தியை வெளியே செல்ல விடாமல் தடுப்பதற்காகவே. இருக்குமிடம் Orientation வாஸ்துவில் இருப்பிடம் முக்கியத்துவம் உடையது. வீட்டு வழியாக சக்தி நகர வழி கொடுக்கிறது. உள் பாகங்கள் பூமியின் காந்த சக்திக்கு ஏற்ப ஒத்துப் போக வீட்டில் வழி செய்கிறது. பூமியும் அதன் எட்டு திசைகாட்டி திசைகளும் குறிக்கும் நான்கு பக்கமுள்ள சதுர கட்டடத்தில் பூமியின் சக்தி பரவுவது ஒழுங்காக சமநிலை செய்யப்படுகிறது. (Ideally Balanced)) என்பதை முன்னோர்கள் கண்டறிந்தார்கள். வீட்டு மனையைப் பற்றி நன்கு ஆராய்ந்து வீடுகட்ட திட்டமிட வேண்டும். வீடாக இருந்தாலும், பல அடுக்கு மாடிக்கட்டடம் ஆனாலும் அவற்றில் உள்ள பிரானா (Prana) வடகிழக்கிலிருந்து வடமேற்கு நோக்கி நகருகிறது. இது தென்மேற்கு திசைக்கு நகருமுன் ஏற்படுகிறது. கட்டடம் சதுரமாக இருந்தால் அது சக்தியின் அடர்த்தியை வடகிழக்கு தென்மேற்கில் சமநிலை வகிக்கச் செய்கிறது. கோடுகளும், திசைகளும் Lines and Directions முன் சொல்லப்பட்டது போல சதுரம் பூமியைக் குறிக்கிறது. கிழக்கு&மேற்கு, வடக்கு&தெற்கு திசைகள் அவற்றின் சந்திப்பான வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு திசைகளைக் குறிக்கிறது. இருப்பிடமும் அதன் திசையும் வாஸ்துவின் இரு முக்கிய கொள்கைகள். வாஸ்துப்படி வடக்கு&தெற்கு கோடு நெருப்புக்கோடு & அக்னி ரேகை மேல் நோக்கு திசையுடையது. அது வையகத்தின் முதுகு எலும்பு போன்றது. கிழக்கு&மேற்கு கோடு தண்ணீர் கோடு. விரிவடையும் உணர்வோடு நிலையாக சமநிலையில் உள்ளது. வடகிழக்கு&தென்மேற்கு திசைகள் காற்றுக்கோடு விணீக்ஷீutணீ வேகமான நகருவதற்கு உதவுகிறது. இந்தக் கோடுகள் ஒரு குறுக்குப் புள்ளியில் சந்திக்கிறது. இது (பிரம்மாகுறி) (பிரம்மஸ்தானம்) கருப்பை என அழைக்கப்படுகிறது. இது உருவங்களின் முழுத்தோற்றங்களையும் பிறக்க வைக்கிறது. எட்டுதிக்குகள் பயனுள்ள சக்தியளிக்கும் திசைகள் கடவுள் உருவில் காக்கும் தேவதைகளாக நம் முன்னோர்களால் விவரிக்கப்பட்டன. ஒவ்வொரு தேவதையும் தனித்தன்மை மிக்கது. மனித வாழ்க்கையின் செயல்பாடுகளை இவை கட்டுப்படுத்தி வையகத்தின் ஆளும் நியதிகளை நிர்வகிக்கிறது. தேவர்களின் அரசன் இந்திரன். கிழக்கின் அதிபதி தெய்வங்களில் உயர் நிலையில் உள்ளவராக கருதப்படுபவர். ஒரு உயிரை அழித்து உயிர் மாற்றம் செய்யும் எமன் தென்திசை அதிபதி. விதிக்கு ஏற்ப எதிர்பாராத செயல்களை செய்பவரும், வையகத்தின் சட்டதிட்டங்களுக்கு உதவுபவருமான வருணபகவான் மேற்கு திசையின் அதிபதி. இவரது கண் சூரியன் காற்று அவரின் மூச்சு. செல்வமும், புகழும் அருளும் குபேரன் வடக்கு திசையின் அதிபதி. தேவர்களின் அரசன் இந்திரன். கிழக்கின் அதிபதி தெய்வங்களில் உயர் நிலையில் உள்ளவராக கருதப்படுபவர். ஒரு உயிரை அழித்து உயிர் மாற்றம் செய்யும் எமன் தென்திசை அதிபதி. விதிக்க ஏற்ப எதிர்பாராத செயல்களை செய்பவரும், வையகத்தின் சட்டதிட்டங்களுக்கு உதவுபவருமான வருணபகவான் மேற்கு திசையின் அதிபதி. இவரது கண் சூரியன் காற்று அவரின் மூச்சு, செல்வமும், புகழும் அருளும் குபேரன் வடக்கு திசையின் அதிபதி. இருகோடுகளின் சந்திப்பாகிய மூலை வாஸ்துவின் அதிக சக்திக்கு சொந்தமானது. ஒவ்வொரு மூலைக்கும், தனி குணமும் தனி தேவதையும் உண்டு. வடகிழக்கு தேவதை ஈசானியன் தேவர்களில் இனியவர். காரணம் வடகிழக்கிலிருந்து தான் காஸ்மிக் எனர்ஜி இயற்கையாகவே பாய்கிறது. நெருப்பு தேவதை அக்னி வீட்டிலுள்ள பெண்களின் உடல் நலம் காப்பவர். இவர் தென்கிழக்கு மூலையின் அதிபதி. சுபகாரியங்களுக்கு உரியவர். (கன்னி) நிருதி அழிக்கும் பெண் தெய்வ அரக்கர்களின் தெய்வம். தென்மேற்கு மூலையின் அதிபதி. இவர் தலைவன், தலைமகள் அதிகாரம், உடல் ஆரோக்யம் வருமானம் இவைகளுக்கு அதிபதி. காற்று தேவதை வாயு வடமேற்கு மூலையின் அதிபதி. இவர் உடல்நலம், முன்னேற்றம் போன்றவைகளுக்கு அதிபதி. வருணன் மழைக்கு அதிபதியானவர் என கூறுகிறது. இந்திரன், இளம் வயதினர்க அதிபதியானவர். எமன், உயிர் உடலுக்கு அதிபதியானவர். குபேரன், செல்வத்திற்கு அதிபதியானவர். இந்த தேவதைகளின் செயல்பாடுகள் அவைகள் ஆளும் மூலையின் உடல் உள்ளம் இவற்றின் குணங்களை குறிப்பிட்டுக் காட்டுகிறது. பஞ்சபூதங்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் ஐந்து இயற்கை பூதங்களும், மஹா பூதங்கள் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு பூதமும் தனித்தனி குணங்கள் பெற்றிருப்பினும் அவைகள் ஒன்றோடொன்ற சேர்க்கப்படும்போது முற்றிலும் வித்தியாசமான முறையில் செயல்படுகிறது. பஞ்சபூதங்களும் பெருமளவில் வீட்டில் இருக்க வேண்டும். அப்போதுதான் நல்லவை செய்யும் சக்தி வீடெங்கும் பெருகி அதிர்வு அலைகள் அருளும். ஆகாயம் மற்ற நான்கு பூதங்களும் தடையின்றி சுழல்வதற்கு உதவுகிறது. மனிதனி¢ன் கேட்கும் திறமையும் இதைப் பொறுத்தே உள்ளது. இனிய, மென்மையான ஒலிக்கின்ற அமைதியான இடமாக வீடு இருக்க வேண்டும். வீட்டின் வடகிழக்கு பகுதியில் ஆகாயம் ஆட்சி புரிகிறது. நன்மைகளை ஊக்குவிக்கும் காஸ்மிக் கதிர்கள் வீட்டில் ஊடுருவ வடகிழக்கு பாகம் திறந்த நிலையில் விசாலமாக இருக்க வேண்டும். நிம்மதியாக தன்னைத்தானே அறிந்து கொள்வதற்கம் தியானம், யோகா செய்வதற்கும் கல்வி, நற்காரியங்களுக்கும் வடகிழக்கு திசை தலைசிறந்தது. வாயு வாயு அல்லது காற்று புருஷாவின் மூச்சு அக்னியுடன் கூட்டுறவு கொண்டது. காரணம் காற்று நெருப்பை ஊக்குவிக்கும். இவ்விரண்டு பூதங்களும் சதா அசைந்து கொண்டிருக்கும் குணம் உடையவை. மனித உடலைத் தொடும் உணர்வினால் அறியப்படுகிறது. ஆதலால் அழகிய தோற்றமும், பொலிவும் நல்ல காற்றோட்டமும் மிகுந்த வீடுகள் அமைத்தல் நல்லது. வீட்டின் வடமேற்கு பகுதியின் ஸ்தானதிபதி ஈரப்படாத காற்று அல்லது தண்ணீர். நெருப்பு அல்லது அக்னி பஞ்சபூதங்களில் மிக முக்கியமானது. வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது. மனிதனின் பார்வைக்க தொடர்புடையது. வீட்டினில வெளிச்சம் பற்பல வண்ணங்கள் தட்பவெப்பநிலை மிக முக்கியமான அம்சங்கள் நெருப்பு முக்கோணமான வடிவில் உள்ள வீட்டுமனையை தவிர்க்க வேண்டும். அது விரும்பி வேண்டாத நெருப்பை தூண்டும். வீட்டின் தென்கிழக்கு பாகம் நெருப்பின் அதிகாரத்திற்கு உட்பட்டது. சமையல் அறைக்கு உகந்த இடம் அக்னி. நமது ஜீரண உறுப்புகளோடும் சம்பந்தப்பட்டது. ஆதலால் வீட்டின் தென்கிழக்கு பாகத்தில் சமைக்கப்பட்டது. உணவு, உடல் நலம் காக்கும் என்பதன் உறுதி செய்கிறது. நீர் நீர். திரவ லநயில் உள்ளதால் ஓயாது அசைந்து கொண்டே இருக்கும். அது வட்டத்தால் குறிப்பிடப்படுகிறது. வட்டவடிவமான கட்டம் ஓய்வு அற்ற நிலையின் உணர்வை உண்டாக்குகிறது. உதாரணம் (பார்லிமென்ட் கட்டடம்&டெல்லி) இது சுவை நீரைக் குறிக்கிறது. வாசனை அறியும் உணர்வுடன் தொடர்வுடையது. வீட்டில் தண்ணீர் குழாய் பாதையையும் ஒளி பிரதிபலிக்-கும் வெள்ளி முலாம் பூசப்பட்ட கண்ணாடியின் மேல்மட்டம். முலாம் பூசாத கண்ணாடியின் மேல்மட்டத்தையும் குறிப்பிடுகிறது. வடமேற்க பாகம் குளியல் அறை, விருந்தினர் அறை அமைக்க மிகச் சிறந்த இடம். இங்கு பலதரப்பட்ட ஜனங்கள் அதிக நாள் தங்காது வந்து போகும் வாய்ப்பு உள்ளது. பூமி நிலம் அமைப்பின் குணத்தை குறிப்பிடுகிறது. பூமியின் மீதுள்ள நீர், நெருப்பு, காற்று இவற்றின் செயல்பாடுகளைப் பொருத்து வாசனை அறியும் உணர்வை அடிப்படையாகக் கொண்டது. நல்ல மணமும், நல்ல மணம் பரப்பும் (அரோமஸ்) மிகுந்த அளவில் வீட்டில் இருக்க வேண்டும். தென்மேற்கு (மூலை) பாகம் பூமியால் ஆளப்படுகிறது. பூமியின் ஒத்துப் போகும் குணம் அதிக எடை தாங்கும் குணம் உடையது. மதிப்பு மிகு மரச்சாமான்களும், சேமிப்பு அலமாரிகளும் வைக்க மிகவும் சிறந்த இடம் தென்மேற்கு. இந்த (ஐந்து) பஞ்சபூதங்களும் ஒன்றையொன்று அனைத்து செல்லும்போது முழுசக்தியின் தோற்றம் உருவாகிறது. இது வாஸ்து புருஷ மண்டலம் என அழைக்கப்படுகிறது. இது அளிவின் அடிப்படையில் கருதாது ஒவ்வொரு பூதங்களும் செயல்படும் பங்கு அளவின் விகித அடிப்படையில் அறிந்துகொண்ண வேண்டும். இது ஒரு குறிப்பிட்ட பாகத்தில் பல அடுக்கு சக்திகளின் செயல்பாடுகளைக் குறிக்கிறது. வாஸ்து புருஷ மண்டலம் கட்டடமோ அல்லது ஒரு அறையோ வரைபடம் இல்லாமல் கட்டக்கூடாது. வாஸ்துவில் உபயோகப்படும் வரைப்படம் (வீட்டு பிளான் வாஸ் புருஷ மண்டலம் என்பது இது ஒரு தனிமனிதன் வடகிழக்கு&தென்மேற்கு வட்டத்தில் முகம் பூமியைப் பார்க்கும் நிலையில் குப்புறப்படுத்திருக்கும் நிலையை குறிப்பிடுகிறது. குறிப்பிட்ட ஒரு பகுதியில் காஸ்மிக் சக்தி செயலாற்றும் உருவைக் குறிக்கிறது. வாஸ்து புருஷ மண்டலம் கோயில், வீடு, கட்டடம் திட்டமிட வழிவகுக்கிறது. இது மைக்ரோகோசம் (Microcosm) மைக்ரோ கோசத்துடன் சரியாக அமையவும், சூரிய ஒளி பரவுதலால் அதிக நன்மை அடையவும் உதவுகிறது. கட்டடம் உருவம் பெரியது. சிறியதுவாக இருக்க வேண்டுமெனும் கட்டுப்பாடில்லை. இது தனிக்கட்டடங்கள் திட்டமிடவும் முழு அளவில் பெரிய நகரம் திட்டமிடவும் உதவுகிறது. இடங்களின் அமைப்பு, ஒரு கட்டடத்தில் ஒவ்வொரு பகுதியின் விகிதாச்சாரம் அது கட்டப்படும் இடம், அதன் சுற்றுச்சூழல் எல்லாம் வாஸ்து சொல்கிறது. மண்டலத்தின் வரைப்படத்திலிருந்து எந்த ஒரு வாழ்கின்ற, இயங்குகின்ற நிலையையும் சரியாக அமைக்கிறது. மண்டலம் ஒரு சதுரமாக இருப்பது. இது பூமியின் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தில் திசை காட்டியின் எட்டுதிசைகளைக் குறிக்கிறது. ஒரு கட்டத்திற்கு உயிர் கொடுக்க வேண்டுமானால் அதன் ஒவ்வொரு பாகத்திற்கும் அதி முக்கியத்துவம் தர வேண்டும். வீட்டின் சில குறிப்பிட்ட பாகம் மர்மஸ்தானம் என அழைக்கப்படுகிறது. இவை வாஸ்து புருஷனின் தலை, இருதயம், மார்பகங்கள், நாபிக்கமலம்(தொப்புள்) போன்றவற்றை குறிக்கிறது. இந்த பாகங்களுக்-கு எந்த ஒரு தொந்தரவுமின்றி, இடருமின்றி அமையும் படிச் செய்ய வேண்டும். அதிக எடையோ அல்லது அதிக கல்கட்டு வேலையோ மேற்கூறிய பாகங்களில் இருக்கக்கூடாது. உதாரணமாக, வாஸ்து புரு-ஷனின் தலையாகிய வடகிழக்கு மூலையில் சமையல் அறை அமைக்கக்கூடாது. இது வீட்டில் வசிப்பவர்களுக்கு அடிக்கடி நோயைத் தரும். வாஸ்து புருஷனின் முகம் பூமியைப் பார்த்து இருப்பது ஆரம்ப நிலையாக இருந்தபோதிலும், அது வேறு இரு உடல்களை உடையது. ஒன்று நித்ய வாஸ்து என அழைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு மூன்று மணிக்கு ஒருமுறை கடிகாரம் சுற்றும் திசையில் சுற்றுகிறது. மற்றது சரவாஸ்து கடிகாரம் சுற்றும் திசையில் சுற்றுகிறது. இது ஒவ்வொரு நிலையிலும் மூன்று மாதங்கள் ஒய்வெடுத்து பிறகு சுற்றுகிறது. பூமியின் மீது ஏற்படும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப இந்த அசைவு ஏற்படுகின்றது. சூரியன் பூமியின் அரை கோளத்திலிருந்து தென் அரை கோளத்திற்கு நகரும்போது வீட்டுக்கு கிடைக்கும் வெப்பம், வெளிச்சம் (காற்று வீசும் திசை கூட) போன்றவை மாறுகிறது. சில காலநிலை மாற்றம் குறிப்பிட்ட திசைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை வடக்கு முக்கியத்துவம் பெறுகிறது. ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை தெற்கு முக்கியத்துவம் பெறுகிறது. டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை மேற்கு முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பிட்ட திசையில் உள்ள வீட்டில் காலநிலைக்கேற்ப ஜன்னல் கதவை திறந்து வைப்பது போன்ற சிறு மாற்றங்கள் நமக்கு நலன் அளிக்க வல்லது. முன்னோர்களின் காரணம் அறிந்து காரியம் செய்யும் முறை The Logic of the Amients ஒருநாளில் ஒவ்வொரு நேரத்தின் இயல்புக்கேற்ற மனதும், உடலும் பலவிதமான வேலைகளைச் செய்கின்றது என்பதனை ஆதி மனிதர்கள் அளிந்திருந்தனர். பூமியின் குழற்சிக்கேற்பவும், குறிப்பிட்ட நேரத்தில் சூரியன் இருக்கும் நிலைக்கேற்றப்படி மனிதனின் இயக்கத்தில் மாற்றம் நடப்பதும் நன்கு அறிந்து, அதன்படி சூரியனால், மனிதனுக்கு கிடைக்கும் நன்மையை அதிகரிக்கும் நோக்கத்தை கருத்தில் கொண்டு வீட்டின் ஒவ்வொரு பாகங்களையும் நன்கு திட்டமிட்டு வீடு அமைத்தனர். 24 மணி நேரங்களை 8 பிரிவாகப் பிரித்தார்கள். எட்டு திசைகளை கருத்தில் கொண்டு இவ்விதம் செய்தனர். ஒவ்வொரு செயல்பாடுகளின் இயல்பு ஒவ்வொரு திசைகளின் குணங்களைப் பொறுத்தே அமைகிறது. இதற்கு ஏற்ப நன்கு அமையாத வீடுகள் அமைதியின்மை போன்ற இன்னல்களைத் தரும். நேரமும் செயல்களும் Time and Activity அதிகாலை 2 மணி 3 மணியிலிருந்து 6 மணி வரை பிரம்ம முகூர்த்தம் என அழைக்கப்படுகிறது. இந்நேரத்தில் சூரியன் வீட்டின் வடகிழக்கு பகுதியில் இருக்கிறது. இந்த அமைதியான நேரம் படிக்கவும், யோகா&தியாகம் செய்யவும் சிறந்த நேரம். காலை 2 மணி முதல் 9 மணி வரை. சூரியன் வீட்டின் கீழ்பாகத்தில் இருக்கிறது. கீழ்வானத்திலிருந்து வரும் நன்மை பயக்கும் சூரிய ஒளிக்கதிர்களை Ultra Violet Rays உகந்த நேரம். குளியல் அறைக்கு சிறந்த திசை கிழக்கு. காலை 9லிருந்து மதியம் 12 வரை சூரியன் வீட்டின் தென்கிழக்கு பாகத்தில் உள்ளது. இந்நேரம் உணவு சமைக்கவும், மதியத்திற்குபின் உணவு சாப்பிடவும் உகந்த நேரம். ஒரு வீட்டில் சமையல் அறை குளியல் அறை இரண்டும் தண்ணீரால் ஈரமாக்கப்படும். காய்ந்த உலர்ந்த இடமாகவும் இருக்க, சூரிய ஒளியை முழுமையாக பெறும் வசதியுடன் அமைக்கப்பட வேண்டும். மதியம் மணி 12லிருந்து பிற்பகல் 3 வரை விஷ்ராந்தி அல்லது ஓய்வு நேரம் என அழைக்கப்படுகிறது. இது உணவுக்குப் பின் ஓய்வு பெறும் நேரம். சூரியன் தென்திசையில் உள்ளது. இது உறங்கும் அறைக்-குச் சிறந்த இடம். மாலை மணி 3லிருந்து 6 வரை, படிக்க வேலை செய்ய சிறந்த நேரம். இப்போது சூரியன் வீட்டின் தென்மேற்கு பாகத்தில் உள்ளது. படிக்கவும் நூலகம் வைக்கவும் சிறந்த இடம். மாலை 6லிருந்து 9 வரை உண்ணவும், உட்காரவும், படிக்கவும் உகந்த நேரம் வீட்டின் மேற்கு பாகம் உண்ணவும், உட்காரவும் உகந்த இடம். மாலை 2 மணி 9லிருந்து நள்ளிரவு வரை. சூரியன் வீட்டின் வடமேற்கு பாகத்தில் உள்ளது. மாட்டுக் கொட்டகைக்கு ஏற்ற இடம். ஆடு, மாடு போன்றவற்றை கவனிக்க சிறந்த நேரம். வடமேற்கு பாகம் உறங்கும் அறை அமைக்க சிறந்த இடம். நள்ளிரவு முதல் அதிகாலை 2 மணி 3 மணி வரை சூரியன் வீட்டின் வடபாகத்தில் உள்ளது. இது இருண்ட நேரம் ரகசியத்திற்கு உரிய நேரம். விலைமதிப்புள்ள ஆபரணங்கள், பணம், போன்றவற்றை காப்பாற்றி மறைத்து வைக்க வீட்டின் வடக்கு பாகம் சிறந்த இடம். வீட்டுமனை தேர்வு வடிவங்கள் (shapes) சதுரமும், செவ்வக வடிவ மனை வசிப்பதற்கு ஏற்றது சக்தி அலைகள் சதுர வடிவ மனையில் அதிகம் செவ்வக வடிவமனையில் சிறிது குறைவு இவை இரண்டும் அதிக நன்மையும் சுகமும் அளிப்பவை. முக்கோண வடிவமனை முழுதும் தவிக்க வேண்டும். இந்த முக்கோண வடிவம் அக்னியுடன் தொடர்புடையது. ஆதலால் தீயின் தீமையை வரவேற்பது நல்லதல்ல. செங்குத்து முக்கோண வடிவ மனை, சதுர பக்கங்களை அடிப்படையாகக் கொண்டது நல்ல செயல்திறன் மிக்கது. சக்திமிகு அமைப்பு உடையது. இது வியாபார ஸ்தலம் அமைக்கச் சிறந்தது. வீடு கட்ட தகுதி அற்றது. வட்ட வடிவம் நீரைக் குறிப்பது அமைதி இன்மையை அளிக்கும். (Activity) (Sports Club GYM) போன்றவை அமைக்க நல்லது. ஓய்வுபெற உகந்த இடம் அல்ல. ஒழுங்கான வடிவம் இல்லாத மனை நல்லதல்ல. வடகிழக்கு மூலை நீண்டிருந்தால் ஒழிய, அதன் மூலை 90 கோணத்திலிருந்து மாறுபடுகிறதோ Either of Long or Rhombus அது ஒதுங்கற்ற வடிவமுள்ள கட்டடம் அல்லது அறையாக கருதப்படுகிறது. மனை மட்டம் சமமாக இருக்க வேண்டும். நடுவில் உயர்ந்து ஆமையின் முகுதுபோல் வளைந்தோ அல்லது நடுமனை உள்வளையாக குழிந்தோ இருக்கக்கூடாது. Inclinical மனை பரவாயில்லை. மேற்கு சிறிது உயர்ந்தும் கிழக்கு சிறிது தாழ்ந்தும் உள்ள மனை அல்லது தெற்கில் சிறிது உயர்ந்து வடக்கில் மூலை சிறிது தாழ்ந்து இருக்கும் இது நல்லது. ஒரு மலைக்குன்று தெற்கிலோ அல்லது மேற்கிலோ இருந்தால் நலம். வடக்கு கிழக்கு வடகிழக்கில் இருக்கக்கூடாது. இது நல்லதும், செல்வமும், அருளும், சூரிய ஒளி வடக்கிழக்கிலிருந்து வருவதையும் தடுக்கும். தண்ணீர் இயற்கையாகவே அருகில் இருப்பது நல்லது. தெற்கிலிருந்து வடக்காகவோ அல்லது மேற்கிலிருந்து கிழக்காகவோ நீர்பாயும் நீர் ஓடை இருப்பதுவும் நல்லது. மயானமாக இருந்த இடமும் கொலையுண்ட மனையும், விபசார விடுதியாக இருந்த கட்டிடம், மனையும் வசிக்க ஏற்றது அல்ல என்று வாஸ்து கண்டிப்பாக கூறுகிறது. இவை நம் இடத்தில் இருந்து தென்மேற்கு, தெற்கு மேற்கு பகுதியில் அமைந்து இருந்தால் நன்மை.

அம்பிகையின் அருள் பெற சப்த கன்னியர் - காயத்ரி மந்திரங்கள் , தியான சுலோகங்கள்

| Sep 22, 2011
இந்த கட்டுரை , ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் . பல சூசகமான விஷயங்கள் அடங்கி இருக்கின்றன. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் சப்த கன்னிகள் பற்றி ஒரு அருமையான நாவல் எழுதி இருக்கிறார். வெகு நாட்களுக்கு முன்பு வந்த , மிக சுவாரஸ்யமான நாவல்.
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQFuLgRGsJ4Zntt53AfFC4Ehfbmch5KWHLyBiBKH2V5yOf3Tq-9

அதை அவர் எழுதி , லட்சக் கணக்கில் வாசகர்கள் படித்து இருந்தாலும், அதை எவ்வளவு பேர், சீரியஸாக எடுத்து வழிபாடு செய்து இருப்பார்கள் என்று தெரியவில்லை.


நம் வாசகர்களுக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். எனக்குத் தெரிந்த ஒரு பெரியவர் , ஸ்ரீ வராஹி உபாசகர். மாதத்தில் , சில குறிப்பிட்ட தினங்களில் - வராஹி அம்மனை , நேரில் தரிசிப்பதாக கூறுகிறார். பல நேரங்களில் , மனம் குழப்பமடைந்து , முடிவெடுக்க தடுமாறும் தருணங்களில், இவரிடம் ஆலோசனை கேட்டு , பிரச்னைகளை சுமுகமாகத் தீர்த்த அநேகம் பேர் - இன்று மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.

கடவுள் இல்லை , கடவுளை நம்புபவன் முட்டாள் - என்று இவர்களிடம் சொன்னால், ஏதோ வேற்றுக்கிரக ஜந்துவைப் போல் ஒரு பார்வை பார்க்கிறார்கள். நல்லதுங்க தம்பி., உங்க வேலையை நீங்க பாருங்க. எங்க வேலையை நாங்க பார்க்கிறோம்னு  சொல்லிவிட்டு , அமைதியாக செல்கிறார்கள். இதே வராஹி மந்திரம் ஜெபித்து - வசியம், மாந்திரீகம் என்று ஒரு கூட்டமே பல அமானுஷ்யங்களை நிகழ்த்திக் கொண்டும் இருக்கிறது.

கடவுளை பார்த்தால் தான் நம்புவேன் என்று ஆசைப்படும் அன்பர்கள், இந்த மந்திரங்களை ஜெபித்து , உருவேற்றினால் - கன்னிமார்கள் பிரசன்னம் நிச்சயம் உண்டு.

ஸ்ரீ வராஹி மாலை என்று - தமிழில் 32  பாடல்கள் மட்டுமே கொண்ட சுலோகம் , நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள பொக்கிஷம் ஒன்று உண்டு. இதை முழு நம்பிக்கையுடன் பாடி , வராஹியை தரிசித்தவர்கள்  ஏராளம். ஆனால், இவர்கள் யாரும் இதை வெளியில் காட்டிக் கொள்வதே இல்லை.. !

வராஹி மாலைக்காக பலப்பல வருடங்களாக தேடிக்கொண்டு இருப்பவர்களும் உள்ளனர். நமக்கு வாய்ப்பு கிடைக்கும்போது , நமக்கு கண்டிப்பாக கிடைக்கும். அபூர்வமான சில விஷயங்கள், எளிதில் கிடைப்பதில்லை. ஆனால், ஒன்று முயற்சி செய்யலாம்... நீங்கள் சந்திக்க விரும்பும் தேவதைக்குரிய காயத்ரியை , மனதுக்குள் உங்களால் முடிந்தவரை ஜெபித்துக் கொண்டு இருங்கள்.. ! அதன் பிறகு நீங்களே உணர்வீர்கள்.. !

இந்த கட்டுரை முழுக்க  - அம்பிகையின் அருள் பெற , உறுதுணையாக நிற்கும் சப்த மாதாக்கள் , காயத்ரி மந்திரங்கள் , தியான சுலோகங்கள் பற்றியே..

சப்தமாதாக்கள் அல்லது சப்தகன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற கிராமிய தெய்வ வழிபாடு ஆகும். சக்தி அம்சத்தில் சப்த மாதர்கள் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது.

அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண் பெண் இணைவில் பிறக்காமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த கன்னிகைகள். அவர்கள் ப்ராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

ப்ராம்மி

அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி. மேற்கு திசையின் அதிபதி.கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள். நான்முகனின் அம்சமாய்த் தோன்றியவள். நான்கு முகங்கள், நான்கு கரங்கள். மஞ்சள் வண்ணம் பிடித்த வண்ணம். கமண்டலம், அக்ஷமாலையைப் பின்னிரு கரங்களில் ஏந்தி முன்னிரு கைகளில் அபயவரதம் காட்டுவாள். ருத்திராக்ஷ மாலை தரித்து அன்னவாகனத்தில் அமர்ந்திருப்பவள்.

மான் தோல் அணிந்திருப்பவள்.ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள். இவளது காயத்ரி மந்திரத்தை படிக்கும் மாணவர்கள் தினமும் ஜபித்து வந்தால்,ஞாபக மறதி நீங்கிவிடும். (அசைவம் தவிர்க்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.) ஐ.ஏ.எஸ்., வங்கிப்பணி, அரசுப்பணி முதலானவற்றிற்கு தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்துவந்தால் வெற்றி நிச்சயம்.

தியான சுலோகம்

தண்டம் கமண்டலும் சச்சாத் அஷஸீத்ரமதா பயம்
பிப்ரதி கனகச்யா ப்ராஹீ க்ருஷ்ணா ஜீனோஜ்வலா

மந்திரம்

ஓம் ப்ராம் ப்ராம்ஹ்யை நம:
ஓம் ஆம் க்ஷாம் ப்ராம்ஹீ கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே
தேவர்ணாயை தீமஹி
தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்.

மகேஸ்வரி

அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார். மகேசனின் சக்தி இவள். முக்கண் படைத்தவள். ஜடா மகுடத்துடன் காட்சியளிப்பாள். மான், மழு ஏந்தி, அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் இருப்பாள். தூய வெண்ணிறமே பிடித்த வண்ணம். வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்து வருபவள்.

இவளை வழிபட்டால்,நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள்.இவளது வாகனம் ரிஷபம் ஆகும். அம்பிகையின் இன்னொரு அம்சமாக போற்றப்படுகிறாள்.

இவர் ஐந்து முகங்களையும், ஒவ்வோர் முகத்திலும் மூன்று கண்களையும் கொண்டிருப்பார் என ஸ்ரீ தத்துவநிதி, விஷ்ணுதர்மோத்திர புராணம் என்பனவற்றிற் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீதத்துவநிதி இவருக்குப் பத்துக் கரங்கள் காணப்படுமெனவும், அவற்றுள் வலது பக்கத்திலுள்ள ஐந்து கரங்களில் ஒன்று அபய முத்திரையிலிருக்க ஏனையவற்றில் வாள், வஜ்ரம், திரிசூலம், பரசு என்பன காணப்படுமெனவும், இடது பக்கத்திலுள்ள கரங்களிலொன்று வரத முத்திரையிலிருக்க ஏனையவற்றில் பாசம், மணி, நாகம், அங்குசம் என்பன இடம் பெற்றிருக்கும் எனவும் கூறுகின்றது.  எருதினை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.

தியான சுலோகம்

சூலம் பரச்வ்தம் க்ஷீத்ர துந்துபிம் ந்ருகரோடிகாம்
வஹிந்த் ஹிம ஸங்காசா த்யேயா மஹேச்வரி சுபா.

மந்திரம்

ஓம் மாம் மாஹேச்வர்யை நம:
ஓம் ஈளாம் மாஹேச்வரி கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்


கௌமாரி

கவுமாரி. கவுமாரன் என்றால் குமரன். குமரன் என்றால் முருகக்கடவுள். ஈசனும், உமையாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் எனப்படும் முருகக்கடவுள். முருகனின் அம்சமே கவுமாரி.

இவளுக்கு சஷ்டி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு. மயில் வாகனத்தில் வருபவள். அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே. கடலின் வயிறு கிழியுமாறு வேற்படையைச் செலுத்திய சக்தி இவள். இவளை வழிபட்டால், குழந்தைச் செல்வம் உண்டாகும். இளமையைத் தருபவர்


தியான சுலோகம்

அங்குசம் தண்ட கட்வாங்கெள பாசாம்ச தததீகரை
பந்தூக புஷ்ப ஸங்காசா கவுமாரீ காமதாயினி
பந்தூக வர்ணாம் கரிகஜாம் சிவாயா
மயூர வாஹாம்து குஹஸ்ய சக்திம்
ஸம் பிப்ரதீம் அங்குச சண்ட தண்டெள
கட்வாங்கர செள சரணம் ப்ரபத்யே!

மந்திரம்

ஓம் கெளம் கெளமார்யை நம:
ஓம் ஊம் ஹாம் கெளமாரீ கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் சிகி வாஹனாயை வித்மஹே
சக்தி ஹஸ்தாயை தீமஹி
தன்னோ: கெளமாரி ப்ரசோதயாத்.


வைஷ்ணவி

அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. இவள் விஷ்ணுவின் அம்சம். கருடனை வாகனமாக கொண்டவள். வளமான வாழ்வு தருபவர். சகல சவுபாக்கியங்கள்,செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும்.


விஷ்ணுவின் சக்தியான இவர் நீல நிறமானவர். ஆறு கரங்களைக் கொண்டிருப்பார். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றைய கரங்களில் கதா, தாமரை என்பன காணப்படும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்டுவதாகவும் மற்றையன சங்கு, சக்கரம் ஏந்தியவாறும் காணப்படும். வைஷ்ணவி அழகிய கண்களையும், முகத்தினையும், மார்பினையும் கொண்டிருப்பார். மஞ்சள் ஆடை அணிந்திருப்பார். விஷ்ணுவிற்குரிய ஆபரணங்களை அணிந்து கருடனை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.

தியான சுலோகம்

சக்ரம் கண்டாம் கபாலம்ச சங்கம்ச தத்திகண:
தமால ச்யாமளா த்யேயோ வைஷ்ணவி விப்ரமோஜ்வகை.

மந்திரம்

ஓம் வை வைஷ்ணவ்யை நம:
ஓம் ரூம் ஸாம் வைஷ்ணவீ கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாம வர்ணாய வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத்

 வாராஹி

பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.

அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள். எருமையை வாகனமாக உடையவள்.

கலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பின்னிரு கரங்களில் தாங்கி அபயவரதம் காட்டுவாள். லலிதாம்பிகையின் படைத்தலைவி இவளே. தண்டினி என்ற பெயருடன் சிம்ஹ வாஹினியாய்க் காட்சி கொடுப்பாள். இவளை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும்.
வராகமூர்த்தியின் சக்தி. கறுப்பு நிறமானவர். பன்றியின் பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினையும் பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார். இவருக்கு ஆறு கரங்கள் காணப்படும். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றையனவற்றில் தண்டம், வாள் என்பன இடம் பெற்றிருக்கும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்ட மற்றையன கேடயம், பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறு காணப்படும். இவர் எருமையை வாகனமாகக் கொண்டிருப்பார் .

தண்டநாத வராகி பொன்னிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தைக் கொண்டிருப்பார். இவரது கரங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் என்பன காணப்படும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.

சுவப்ன வராகி மேக நிறமானவர். மூன்று கண்களைக் கொண்டிருப்பார். பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். வாள், கேடயம், பாசம், அரிவாள் என்பன கரங்களில் இடம்பெற்றிருக்கும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.

சுத்த வராகி நீல நிறமானவர். பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினைக் கொண்டவர். வெண்மையான பற்கள் வெளியே நீட்டப்பட்டவாறிருக்கும். தலையில் பிறைச்சந்திரனைச் சூடியிருப்பார். சூலம், கபாலம், உலக்கை, நாகம் என்பன கரங்களிற் காணப்படும்.


தியான சுலோகம்

முசலம் கரவாளம்ச கேடகம் தத்தீஹலம்
கனரர் சதுர்பிர் வாராஹி த்யேயாகா லக்னச்சவி:

மந்திரம்

ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்


இந்திராணி:

இந்திரனின் அம்சம். கற்பகமலர்களை கூந்தலில் சூடியவள். யானை இவளது வாகனம். சொத்து சுகம் தருபவர். தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத் தருவதிலும், மிகவும் தலைசிறந்த அதேசமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே!.

மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால், அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால், மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.

இந்திரனின் சக்தியான இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயகரம் காட்டுவாள். சத்ரு பயம் போக்குபவள். மாகேந்திரி என்ற பெயரையும் கொண்டவள்.


இவரது வாகனமாகவும், கொடியாகவும் யானை இடம்பெற்றிருக்கும்.


தியான சுலோகம்

அங்குஸம் தோமரம் வித்யுத் குலசம் பிப்ரதீசரை
இந்திர நீல நிபேந்திராணி த்யேயா ஸர்வஸம் ருத்திதர:

மந்திரம்

ஓம் ஈம் இந்திராண்யை நம:
ஓம் ஐம் சம் இந்திராணி கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
வஜ்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்.

சாமுண்டி

ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள், தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள். இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தாள்.

பதினாறு கைகள், பதினாறு விதமான ஆயுதங்கள், மூன்று கண்கள், செந்நிறம், யானைத் தோலால் ஆன ஆடையை அணிந்திருப்பவள். சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் இவளே! சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள். மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே!

இவளை வழிபட்டால்,எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு,நமக்குத் தேவையான சகல பலங்கள்,சொத்துக்கள்,சுகங்களைத் தருவாள். இனி வேறுவழியில்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது, இவளை அழைத்தால், புதுப்புது யுக்திகளைக் காட்டுவதோடு, முடியாததையும் முடித்துவைப்பாள்.

கறுப்பு நிறமானவர். பயங்கரமான தோற்றம் கொண்டவர். இறந்த மனித உடலை இருக்கையாகக் கொண்டவர். பாம்புகளை உடலில் அணிந்திருப்பார், ஒட்டிப்போன மெலிந்த வயிறு, குழிவிழுந்த கண்களைக் கொண்டிருப்பார்.

தியான சுலோகம்

சூலம் க்ருபாணம் ந்ருசிர: கபாலம் தததீகரை
முண்ட ஸ்ரங் மண்டி தாத்யேய சாமுண்டா ரக்த விக்ரஹா
சூலம் சாதததீம் கபால ந்ருசிர: கட்கான்ஸ்வ ஹஸ்தம்புஜை.
நிர்மாம் ஸாபிமனோ ஹராக்ருதிதரா ப்ரேதே
நிஷண்ணசுவா!
ரக்தபா கலசண்ட முண்ட தமணீ தேவிலலா போத்பவா
சாமுண்ட விஜயம் ததாது நமதாம் பீதிப்ரணா சோத்யதா.

மந்திரம்

ஓம் சாம் சாமுண்டாயை நம:
ஓம் ஓளம் வாம் சாமுண்டா கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் க்ருஷ்ண வர்ணாஹை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ சாமுண்ட ப்ரசோதயாத்

ஆஞ்சநேயர் ஆலயம்

ரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது. ஊருக்கு செல்லும்போது யாரிடமாவது வழி கேட்டால் ,  ஆஞ்சநேயர் கோவிலுக்கா , இல்லை சிவன் கோவிலுக்கா என்று கூட கேட்கின்றனர். திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலின் அருகில் உள்ளது நவநீத கிருஷ்ணன் ஆலயம் . இங்கு தான் இந்த ஆஞ்சநேயர் அருள் பாலிக்கிறார்.

இந்த கோவிலில் என்ன விசேஷம் என்று கேட்கிறீர்களா... கோவிலில் நுழையும்போதே , ஒரு சில பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்வது போல , அர்ச்சகர் , நீங்கள் வந்த காரியத்தை கூறி திகைப்பில் ஆழ்த்திவிடுகிறார். உங்கள் காரியம் ஜெயம் உண்டாகட்டும் என்று மனமார வாழ்த்தி , ஆஞ்சநேயரை மனமுருக துதிக்கிறார்.

மிக முக்கியமான விஷயமாக , இங்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு - நீண்ட நாட்களாக , எட்டாக் கனியாக இருந்து வரும் திருமணப் பிரச்னை , உடனடியாக தீர்ந்து விடுகிறது... இதுஎன்னிடம் பல பேர் சொன்ன, முற்றிலும் உண்மையான விஷயம். 

தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு - உடனடியாக வரம் அளிப்பதில் , பிரசித்தி பெற்றவராக இந்த ஆஞ்சநேயர் விளங்குவதால் , வாய்ப்பு கிடைக்கும்போது - நீங்களும் ஒருமுறை சென்று வாருங்கள்.. !

இத் தலத்தில், வெகு அபூர்வமாக வடக்கு நோக்கிய திருமுகம் கொண்டு காட்சி தருகின்றார் ராம பக்த காரிய சித்தி அனுமன். மட்டை உரிக்காத தேங்காயை துணி கொண்டு இச் சந்நதியில் கட்டி விட்டு வந்தால் வேண்டுபவரின் காரியங்கள் இனிதே நிறைவேறும். இவருக்கு அபிஷேகம் செய்யும் பொழுது திருமுகம் படிப்படியாய் செந்தூர நிறத்திற்கு மாறுவதையும் காணலாம்.

விஷ்ணு அலங்காரப் பிரியர். சிவ பெருமான் அபிஷேகப் பிரியர். அனுமனோ ஸ்தோத்திரப் பிரியர். "ஸ்ரீராம ஜெய ராமா. ஜெய ஜெய ராமா" என்ற ஸ்தோத்திரம் எங்கெல்லாம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் பிரசன்னமாகின்றவர். தினம் இதனை 21 முறை உச்சரிக்க அனுமனின் ஆசி பரிபூரணமாய் கிடைத்திடும்.

பஞ்ச முக அனுமன் வழிபாடு குடும்பத்தில் ஒற்றுமையை தந்து வாழ்வை வளமாக்கிடும். நெடு நாட்களாக தீராத நோய்கள் அனைத்தையும் தீர்த்திடும். வினைகளால் ஏற்பட்ட ரோகங்களை போக்கிடும். ஜோதி சொரூபமான இவரை வழிபட்டால் குடும்பத்தில் நிலவும் கஷ்டங்கள் அனைத்தையும் தீர்ப்பார் என்பது நிச்சயம்.

அனுமனை பூஜித்தால் மனதில் உள்ள குழப்பங்கள் யாவும் தீரும். பணக் கஷ்டங்கள் விலகும். ஆஞ்சநேயர் பூஜை மற்றும் விரதங்களுக்கு ஏற்ற நாள் செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளும்தான். இவ்விரு நாட்களும் அனுமன் கோவிலில் அமர்ந்து அனுமன் சாலீஸா அல்லது ராம சரிதம் படிக்கலாம். அனுமனுக்கு இஷ்ட நாமமான ராம நாமம் பாராயணம் செய்யலாம்.
====================================

ஹனுமான் அருள் பெற வேண்டுமென்று எண்ணுபவர்கள் - ஸ்ரீ ராம ஜெயம் - என்று பேப்பரில்  - 1008 , அல்லது 10008 , அல்லது 100008 முறை - எழுதி , அதை மாலையாக தொடுத்து , ஆஞ்சநேயருக்கு அணியலாம். 

குழந்தைகளுக்கு நல்ல கல்வி, மதிப்பெண் பெற வேண்டுவோர் , உயர் கல்வி வேண்டுவோர் ,  IIT - IIM , UPSC என்று எய்ம்  பண்ணுபவர்களுக்கு ஸ்ரீ ராம ஜெய மாலை அணிவித்தல் மிக நல்ல பலன்களைத் தரும். 

குழந்தையாக இருக்கும்போது , அருகில் இருக்கும் ஆஞ்சநேயருக்கு மாலை சாத்துவதாக வேண்டிக்கொண்டு , குழந்தை வளர்ந்து எழுத படித்தவுடன் , அதன் கையாலேயே எழுதி நேர்த்திக்கடன் செலுத்துவது நல்லது.

ஆஞ்சநேயர் வந்து பரீட்சை எழுதுவாரா என்று முட்டாள் தனமாக யோசிக்க வேண்டாம். என்னுடைய சிறு வயதில், என் அக்காள் எனக்காக வேண்டிக்கொண்டு ,  நானே ஸ்ரீ ராம ஜெய மாலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆஞ்சநேயருக்கு அணிவித்து இருக்கிறேன். படிக்கும் காலத்தில் வகுப்பில் ஒவ்வொரு வருடமும் முதல் மதிப்பெண் பெற்றுக் கொண்டு இருந்தேன். அதற்க்கு காரணம்,  என்னுடைய முயற்சியும், உழைப்பும் மட்டும் தான் என்று எனக்கு தோன்றவில்லை.

நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாமே .... !

9 November 2012

sa

திருமாலுக்கு பிரியமான பாரிஜாதம்

Parijatham
வெண்மையான இதழ்களைக் கொண்டதும் ஆரஞ்சு நிற காம்புகளைக் கொண்டதுமான மலர் பவளமல்லிகை. தேவலோக மரமான பாரிஜாதமே பூலோகத்தில் பவளமல்லிகையாக வளர்ந்துள்ளது என்கின்றன புராணங்கள். இரவில் மலர்ந்து காலையில் உதிர்ந்து விடும் இந்த பூக்கள் இரவு முழுவதும் சுகந்த மணத்தை பரப்பும் தன்மை கொண்டது.
வருந்தும் மரம்
உலகிற்கே ஒளிதரும் சூரியனிடம் காதல் கொண்டாள் ஒரு அரசகுமாரி. அந்த காதலை ஏற்க மறுத்த சூரியனை எண்ணி மனமுடைந்து தன்னையே மாய்த்துக் கொண்டாளாம். அவளின் அஸ்தியிலிருந்து இம்மரம் உருவாகியதாகவும், இம்மரம் வளர்ந்ததும் சூரியனின் பார்வையைத் தாங்க முடியவில்லை என்றும் கர்ண பரம்பரைக் கதை ஒன்று உண்டு. இதன் காரணமாக இந்த மரம் இரவிலே பூக்களை மலர்வித்து காலையிலே
பூக்களையெல்லாம் உதிர்த்து விடுகிறது என்றும் கூறப்படுகிறது. இவ்விதம் வருத்தமுடன் வாழும் பவள மல்லிகையைக் குறிப்பிட வருந்தும் மரம் என்கின்றனர்.
மகாபாரத கிளைக்கதை
பாரிஜாத மலரின் மீது ருக்மணிக்கு கொள்ளைப் பிரியம். இதனை அறிந்த கிருஷ்ணர் தேவலோகத்தில் இருந்து பாரிஜாத செடியை கொண்டு வந்து ருக்மணியின் தோட்டத்தில் நட்டு வைத்தார். ஆனால் அந்த மரம் நன்றாக வளர்ந்து சத்யபாமாவின் அரண்மனையில் பூக்களைச் சொரிந்தது. இதனால் ருக்மணி வருத்தமுற்றதாலேயே இதனை வருத்தமரம் என்று அழைக்கின்றனர்.
திரௌபதியின் விருப்பப்படியே பீமன் தேவலோகத்தில் இருந்து பாரிஜாத மரத்தை கொண்டு வந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
திருமாலுக்கு உகந்த மலர்
சிரஞ்சீவியாக திகழும் ஆஞ்சநேயர் பவளமல்லி வேரில் வசிப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் பகவான் கிருஷ்ணன் பாரிஜாத மரத்தடியில் வீற்றிருப்பவன். இந்த மரத்தில் பூக்கும் சுகந்தமான மலர் திருமாலுக்கு ஏற்றது. பவள மல்லிகை, மருக்கொழுந்து, போன்ற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து திருமாலின் அருளைப் பெறமுடியும்.
திருமாலிற்கு பிரியமானதுமான பவள மல்லிகையை ஆலய நந்தவனங்களிலும், வீட்டுத் தோட்டங்களிலும் நட்டு வளர்ப்போம். இதன் மூலம் திருமாலின் அர்ச்சனைக்குகந்த இப்பூக்களையும் பெறுவதுடன் பவள மல்லிகையின் இனிய மணத்தை இரவு முழுவதும் நுகர்ந்து, நம் சூழலையும் பசும் போர்வையாக்குவோம்.
ஆடி மாதம் எத்தனை எத்தனையோ பண்டிகைகள். அதில் ஒன்றுதான் நாக சதுர்த்தி விரதம்.. அதாவது கருட பஞ்சமி விரதம். ஆடி மாதம், வளர்பிறை நான்காம் நாளாகிய சதுர்த்தி திதியில் நாக சதுர்த்தியையும், ஐந்தாம் நாளாகிய பஞ்சமி திதியில் நாக கருட பஞ்சமியையும் கொண்டாடுவார்கள்.

நம் இந்து சமயத்தில் மலைகளையும், மரங்களையும், பூமியையும், விலங்குகளையும் கடவுளாகக் கொண்டாடுகிறோம். பயம் தரும் பாம்பையும் நாம் தெய்வமாகக் கொண்டாடுகிறோம். அப்படி பாம்பை பூஜை செய்யும் தினம்தான் நாகசதுர்த்தியும் நாகபஞ்சமியும் ஆகும்.

இந்த நாக சதுர்த்திக்கு செவி வழிச்
செய்தி ஒன்று இருக்கிறது.

ஒரு பெண்ணிற்கு ஐந்து சகோதரர்கள் இருந்தார்கள். அவர்கள் வயலில் வேலை செய்யும் விவசாயிகள். ஒருநாள் பாம்பு கடித்து அவர்கள் உழவு செய்யும் சமயம் இறந்து விட்டார்கள். அந்தப் பெண் துக்கப்பட்டாள். இறந்து போன தன் அண்ணன்களை உயிர்ப்பிக்க நாகராஜாவானி ஆதிசேடனை பூஜை செய்தாள். அண்ணன்மார்கள் பிழைத்து எழுந்தார்கள்.

இதிலிருந்து கொண்டாடப்படுவது தான் நாகசதுர்த்தி_நாக பஞ்சமி விரதங்கள். சகோதரர்கள் நல்வாழ்விற்காக சகோதரிகள் கொண்டாடுகின்ற விரதம் இது.

இந்த விரதத்தைப் பற்றி புராணத்தில் என்ன
சொல்லப்பட்டிருக்கிறது என்று
பார்க்கலாம்.

சுனந்து முனிவர் சதானிக மன்னரிடம் பஞ்சமி விரத உபவாசம் பற்றிக் கூறுகிறார்.

இந்தப் பஞ்சமி விரதம் நாகங்களுக்கு மிகவும் இஷ்டமான விரதம். என்ன கேட்டாலும் கொடுக்கக் கூடிய விரதம். இந்த விரதம் இருந்தால் குழந்தை இல்லாதவர் கூட குழந்தை பெறும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள். அதிலும் நல்ல குழந்தைகளைப் பெறும் பாக்கியமும் கிடைக்கும். இதில் உள்ள இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த விரத மகிமையில் நம் முன்னோர்களின் வரலாறும் பிணைந்திருக்கிறது.

இந்த நாக பஞ்சமி விரதம் நாகலோகத்தில் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் நாகங்கள் வசிக்கும் புற்றுக்களுக்கு பூஜை செய்பவர்களுக்கும், பிரதிஷ்டை செய்த நாக சிலைகளுக்கு ஸ்நானம், பானம், அபிஷேகம், நைவேத்யம் செய்கிறவர்களுக்கும் அவர்களின் குலத்தையே நாக தேவதைகள் காப்பாற்றுகின்றன.

வாசுகி, தக்ஷகன், காளியன், மணிபத்ரன், ஐராவதன், திருதிராஷ்ட்ரன், கார்க்கோடகன், அனந்தன், தனஞ்சயன் போன்ற பெரிய நாகங்கள். நம்மைக் காக்கின்றன. செல்வங்களை வாரி வழங்குகின்றன.

ஒரு சமயம் தாயின் சாபத்தால் நாக லோகத்தில் ஜலவறட்சி ஏற்பட்டது. அதனால் நாகங்கள் தாகத்தால் தவித்தன. அதனால் தான்-நாகர்களுக்கு ஸ்நானம் செய்வித்து பசும் பால் ஊற்றினால் சர்ப்பங்களுக்கு தாக வறட்சி தீர்ந்து மனமும் குளிர்கிறது என்று அபிஷேக ஆராதனைகளைச் செய்கிறோம். அத்துடன் சர்ப்பதோஷம், பாம்பு பயம் எல்லாம் நிவர்த்தியாகிறது.

மன்னர் சதானிகர் குறுக்கிட்டுக் கேட்டார். ``மகரிஷியே, தாய் சாபமிடும் அளவுக்கு என்ன நேர்ந்தது?''

மகரிஷி சொல்லலானார்.

தக்ஷப் பிரஜாபதிக்குப் பல பெண்கள். அவர்களில் விந்தை, கர்த்ரு என்ற இரண்டு பெண்கள் காஸ்யப முனிவரை மணந்தார்கள். அவரைத் திருமணம் செய்து கொண்ட திதி, அதிதி போன்ற சகோதரிகள் எல்லோருக்கும் குழந்தைகள் பிறந்திருந்தன. தங்கள் இருவருக்கும் குழந்தைகள் இல்லையே என்று ஏங்கினர்.

இறைவன்அருளால் விந்தைக்கு அருணன், கருடன் என்ற இருவரும் பிறந்தார்கள். கர்த்ருவுக்கு ஆதிசேடன், வாசுகி, தக்ஷகன், கார்கோடகன் போன்ற ஆயிரம் நாகங்கள் பிறந்தன. ஆனால் சுபாவத்தில் கர்த்ரு கெட்ட எண்ணம் கொண்டவள். விந்தை சுபாவத்தில் மிகமிக நல்லவள்.

ஒருநாள் கர்த்ருவும்,விந்தையும் நந்தவனத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள்.அப்பொழுது வானத்தில் தேவேந்திரனின் உச்சைஸ்ரவஸ் என்னும் குதிரை சென்று கொண்டிருந்தது. அமுதம் பெறப் பாற்கடலைக் கடைந்த பொழுது சந்திரன், ஐராவதம், லக்ஷ்மி தேவி, பாரிஜாத மலர், தன்வந்தரி பகவான் என்று வெளி வந்த பொழுது இக்குதிரையும் வெளியே வந்தது.

``கர்த்ரு, மேலே போகும் குதிரையைப் பார்த்தாயா! பாற்கடலில் தோன்றியதால் தானே என்னவோ முழு வெண்மையாக இருக்கிறது'' என்றாள்.

விந்தை கூறியதை கர்த்ரு ஏற்கத் தயாராக இல்லை. மறுத்தாள்.

``ரொம்ப அழகுதான் நீ பார்த்த லட்சணம். அதன் வாலில் கருப்பு இருக்கிறதே. நீ அதைச் சரியாகப் பார்க்கவில்லை. உனக்கு கண் சரியாகத்தெரியவில்லை என்று தெரிகிறது'' என்று கர்த்ரு மறுத்துக் கூறினாள்.

சற்று நேரம் விந்தையும், கர்த்ருவும் தாங்கள் சொன்னதே சரியென்று வாதிட்டனர். கடைசியில் கத்ரு பந்தயம் கட்டினாள்.

``இதோ பார் விந்தை, நாளை இதே வழியாக இந்த உச்சைஸ்ரவஸ் போகும் பொழுது பார். அந்தக் குதிரை முழுதும் வெளுப்பாக இருந்தால் நான் உனக்கு அடிமையாக இருப்பேன். அதே சமயம் வாலில் கருப்பு இருந்தால் நீ எனக்கு அடிமையாக வேண்டும். சம்மதமா விருதை'' என்று கத்ரு கேட்டாள்.

விந்தையும் ``சம்மதம்'' என்றாள்.

விந்தையிடம் தான் தோற்கக் கூடாது என்று எண்ணிய கத்ரு சதி திட்டத்தைத் தீட்டினாள். தன் புதல்வர்கள் நாகர்களை அழைத்தாள். தன் சதித் திட்டத்தைக் கூறினாள்.

``என்னருமைப் புதல்வர்களே நீங்கள் உங்கள் தாயாருக்கு என்ன வேண்டுமானாலும் செய்வீர்கள் அல்லவா!''

``என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் தாயே''

``குழந்தைகளே, உங்களில் ஒருவன் அந்த உச்சைஸ்ரவஸ் குதிரையின் வாலில் சுற்றிக் கொள்ள வேண்டும். நாங்கள் பார்க்கும் பொழுது வால் கருப்பாகத் தெரியும். நான் விந்தையிடம் கூறியது சரியாகி விடும். பிறகென்ன? விந்தை எனக்கு அடிமையாகி விடுவான்.''

இதைக் கேட்ட புதல்வர்கள் துடித்துப் போய் விட்டார்கள். ``தாயே, தாங்கள் கூறிய அசாத்தியமான காரியத்தை நாங்கள் செய்ய முடியாது'' என்று மறுத்துக் கூறினார்கள்.

கர்த்ரு அதீத கோபம் அடைந்தாள். தன் அருமைப் புதல்வர்கள் என்றும் பாராமல் சாபமிட்டாள்.

``நீங்கள் என் பிள்ளைகளே இல்லை. அதனால் பாண்டவ வம்சத்தில் பிறக்கப் போகும் ஜெனமே ஜெய மகாராஜா சர்ப்ப யாகம் செய்யும் பொழுது நீங்கள் எல்லோரும் அதில் பலியாகக் கடவது'' என்றாள்.

நாக கணங்கள் நடுங்கினார்கள். பாற்கடலைக் கடையும் பொழுது வாசுகி உதவியதால் வாசுகியை அழைத்துக் கொண்டு பிரம்மாவிடம் சென்று முறையிட்டார்கள்.

``கவலைப்பட வேண்டாம். ஒரு யோசனை சொல்லுகிறேன். உங்கள் இனத்தைப் படைத்தவன் நானே. யாயவர் வம்சத்தில் ஜரத்காரு என்ற தபஸ்வி தோன்றுவார். அவருக்கு உங்கள் சகோதரியை மணம் செய்து கொடுங்கள். அவர்களுக்குப் பிறக்கும் `ஆஸ்திகர் என்ற புதல்வன் ஜெனமேஜெயன் செய்யும் சர்ப்ப யாகத்தைத் தடுப்பான்.''

இதைக் கேட்ட நாகர்கள் நிம்மதியாக நாகலோகம் திரும்பினார்கள்.

பிரம்மா கூறியபடியே நடந்தது. ஆஸ்தீக முனிவர் நாகங்களை இந்த வேள்வித் தீயிலிருந்து காப்பாற்றியது இந்தப் பஞ்சமி திதியன்றுதான். அதனால்தான் நாகங்களுக்குப் பஞ்சமி திதி உகந்த நாள்.

சர்ப்ப தோஷம் இருப்பதினாலேயே ஒரு மனிதன் சர்ப்பத்தால் அடிபடுகிறான். இந்தப் பஞ்சமி திதிபூஜையை 12 மாதம் செய்து அதன் பின் சதுர்த்தியன்று ஒருவேளை சாப்பிட்டுப் பஞ்சமியன்று நாக பூஜை செய்ய வேண்டும். நாகங்களை தங்கத்தினாலோ, மரத்தினாலோ, மண்ணாலோ செய்ய வேண்டும். அரளி, தாமரை, மல்லிகை போன்ற மலர்களால் அர்ச்சித்து தூப தீப, நைவேத்தியங்கள் வைத்துப் பூஜை செய்ய வேண்டும். ஐந்து பிராமணர்களுக்கு போஜனம் செய்ய வேண்டும். 12 நாகங்களுக்கும் 12 மாதங்கள் பூஜை செய்ய வேண்டும்.

இம்மாதிரி ஒரு வருஷம் வரையில் பூஜை செய்து விரத பாரணை செய்ய வேண்டும். முடிந்தால் பிராமணர்களுக்குத் தங்கத்தால் ஆன நாகர்களைத் தானம் செய்யவும். ஜனமே ஜெயன் மன்னனும்அவருடைய பிதா பரிக்ஷித்தும் இந்த விரதத்தைச் செய்தார்கள். ஏராளமான தங்க நாகர்களை தானம் செய்தார்கள்.இதனால் இவர்களுடைய பித்ருக் கடன்கள் நிவர்த்தியாயிற்று. இந்த நாக பஞ்சமி விரதத்தை நியமத்துடன் செய்து, நாக பஞ்சமி கதையைக் கேட்கிறார்களோ அவர்கள் சர்ப்ப தோஷங்களிலிருந்து விடுபடுகிறார்கள். குலம் விருத்தி அடையும்.''

அதன் பின்பு சுனந்தர் மன்னர் சதானந்த மன்னருக்கு நாகங்களின் வர்ணங்கள், ஜாதிகள், விஷ வகைகள் எல்லாவற்றையும் விவரித்தார்.

நாக பிரதிஷ்டை எப்படிச் செய்வது?

ஒரு கருங்கல்லில் ஒரு படம் பாம்பு முகம், அல்லது இருபடம் உள்ளனவாக பாம்புகள் வரைந்து அச்சிலையை ஜலவாசஞ் செய்து - அன்றிரவு தம்பதிகள் உபவாசம் இருந்து மறுநாள் நாகசிலைக்கு பூஜை முதலியன செய்து அரச மரத்தடியில் பிரதிஷ்டை பண்ண வேண்டும்.பிராமண போஜனமும், பக்தர்கள் போஜனமும் செய்ய வேண்டும். குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்குக் குழந்தை பிறக்கும். சுமங்கலிகள் செய்ய வேண்டிய பூஜை இது. சர்வ மங்களம் உண்டாகட்டும்.
தந்திர சாஸ்திரத் தத்துவத்தின் படி, தூய உணர்வு நிலையானது முழு பிரபஞ்சத்தின் வெளிப்பாடு ஆகும். பிரபஞ்சம் வெளிப்படுத்த்தும் இந்த தூய உணர்வு நிலை, இரண்டு துருவங்கள் அல்லது அம்சங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று மற்றது இல்லாமல் இருக்க முடியும்.

ஒரு அம்சமானது சிவம் (Shiva) ஆகும், ஆண் நிலை, நிலையான, இயக்கமற்ற (Static) தன்மை கொண்டது மற்றும் வெளிக்காட்டப்படாத உணர்வு அடையாளமாக உள்ளது. சிவம் முழுமையான ஆற்றல் கொண்டது. ஆனால் உருவாக்கவோ அல்லது மாற்றவோ முடியாதது.

மற்ற அம்சமானது சக்தி (Shakthi) ஆகும், பெண் நிலை, இயங்கக் கூடியது (Dynamic). சுறுசுறுப்பு, படைப்பு தன்மையுடையது. பிரபஞ்சத்தின் மாபெரும் தாய். அவளிடம் இருந்து அனைத்து வடிவங்களும் பிறந்தன. sri yantra

தந்திர சாஸ்திரத் தத்துவத்தின் படி, மனிதன் ஒரு சிறிய பிரபஞ்சம் ஆவான். பிரபஞ்சத்தில் காணப்படும் அனைத்தும் ஒவ்வொரு தனி மனிதனிடமும் காணப்படும். பிரபஞ்சத்தில் பொருந்தும் ஏல்லாக் கொள்கைகளும் தனிப்பட்ட மனிதன் விஷயத்திலும் பொருந்தும்.

மனித உயிர்களின் மீது, சக்தியின் பெண்மையை அம்சம் குண்டலினி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றல் முதுகு தண்டு அடிப்பகுதியில் ஓய்வு பெறுவதாகக் கூறப்படுகிறது. குண்டலினி-யோகாவின் தந்திர பயிற்சியின் நோக்கம், இந்த அண்ட ஆற்றலை மேலே எழுப்பச்செய்து முதுகெலும்பு அச்சில் உள்ள சக்கரங்கள் எனப்படும் உணர்வு திறன்கள் மையங்கள் வழியாக செலுத்துவதாகும். பிறகு சிவம் எனப்படும் தலையில் உள்ள கிரீடம் போன்ர தூய உணர்வு நிலை கொண்ட இடத்தில் சேர்ப்பதாகும். இவ்வாறாக சிவம், சக்தியை ஒன்றினைப்பதின் மூலம் நாம் பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ள முடியும். உலகத்தின் பந்தங்களிலிருந்து விடுதலை பெறக்கூடிய நிலையை அடைய முடியும்.
மந்திரங்கள் - ஸ்ரீ மஹாலட்சுமி அஸ்டோத்திரம்
அர்ச்சனை

அர்சுத்தியான தியானந்தீம் த்ரீலோதனம்
ஹாரந்தீம் லக்ஷ்மீம் தேவி விதிந்தேம்


இது வேதத்தில் உள்ள அதி சூட்சுமமான ரகசியம்.
 1. ஓம் ஸ்ரீ பார்வதி சரஸ்வதி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 2. ஓம் ஸ்ரீ விஷ்ணு ப்ரியே மஹாமாயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 3. ஓம் ஸ்ரீ கமலே விமலேதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 4. ஓம் ஸ்ரீ காருண்ய நிலையேதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 5. ஓம் ஸ்ரீ தாரித்திர துக்க சமனி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 6. ஓம் ஸ்ரீ ஸ்ரீதேவி நித்ய கல்யாணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 7. ஓம் ஸ்ரீ சமுத்திரா தனயே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 8. ஓம் ஸ்ரீ ராஜலக்ஷ்மி, ராஜ்யலக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 9. ஓம் ஸ்ரீ வீர லக்ஷ்மி, விஸ்வ லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 10. ஓம் ஸ்ரீ மோக மந்த்ரீ மந்த்ர ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 11. ஓம் ஸ்ரீ மஹிசாசுர சம்கர்த்தீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 12. ஓம் ஸ்ரீ மதுகைடப நித்ராவே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 13. ஓம் ஸ்ரீ சங்கு சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 14. ஓம் ஸ்ரீ வைகுண்ட ஹிருதய வாசே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 15. ஓம் ஸ்ரீ பக்ஷ்சேந்திர வாகனே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 16. ஓம் ஸ்ரீ தான்ய ரூபே, தான்ய லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 17. ஓம் ஸ்ரீ ஸ்வர்ண ரூபே ஸ்வர்ண லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 18. ஓம் ஸ்ரீ வித்ய ரூபே வித்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 19. ஓம் ஸ்ரீ ஹரிப்ரியே வேத ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 20. ஓம் ஸ்ரீ பல ரூபே பல ஹாத்திரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 21. ஓம் ஸ்ரீ நிஷ் குல்லே நிர்மலே நித்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 22. ஓம் ஸ்ரீ ரத்ன ரூபே ரத்ன லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 23. ஓம் ஸ்ரீ சீதரூபே சீதா லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 24. ஓம் ஸ்ரீ வேத ரூபியே நாத ரூபியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 25. ஓம் ஸ்ரீ பிராண ரூபே பிராண மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 26. ஓம் ஸ்ரீ பிராணமானந்த மகஸ்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 27. ஓம் ஸ்ரீ பிரம்ம ரூபியே பிரம்ம தாத்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 28. ஓம் ஸ்ரீ ஜாத வேத சொரூபிணியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 29. ஓம் ஸ்ரீ ஆதார ஹர்ஸ நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 30. ஓம் ஸ்ரீ ஸூஸ்மாந்த்ரா சுசிலாந்தஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 31. ஓம் ஸ்ரீ யோகானந்த பிரதாயின்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 32. ஓம் ஸ்ரீ செளந்தரியே ரூபிணி தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 33. ஓம் ஸ்ரீ சித்த லக்ஷ்மி சித்த ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 34. ஓம் ஸ்ரீ சர்வ சந்தோஷ சத் ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 35. ஓம் ஸ்ரீ துசிதே புசிதே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 36. ஓம் ஸ்ரீ ராஜ ராஜார்த்திய பதயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 37. ஓம் ஸ்ரீ சார சொரூபே திவ் யாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 38. ஓம் ஸ்ரீ தாரித்திர திவ்ய சுத்தாக்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 39. ஓம் ஸ்ரீ வேத குஹே சுபே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 40. ஓம் ஸ்ரீ தர்மார்த்த காம ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 41. ஓம் ஸ்ரீ மோட்ச சாம்ராஜ்ய நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 42. ஓம் ஸ்ரீ சர்வகமே சர்வ ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 43. ஓம் ஸ்ரீ மோகினி மோக ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 44. ஓம் ஸ்ரீ பஞ்ச பூதாந்திரஸ்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 45. ஓம் ஸ்ரீ நாராயண ப்யதமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 46. ஓம் ஸ்ரீ காருணி கார்ய ரூபிணியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 47. ஓம் ஸ்ரீ ஆனந்த சர்ப்ப சயனி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 48. ஓம் ஸ்ரீ லோகைக ஜனனீ வந்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 49. ஓம் ஸ்ரீ சம்பு ரூபே சம்பு முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 50. ஓம் ஸ்ரீ ப்ரம்ம ரூபே ப்ரம்ம முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 51. ஓம் ஸ்ரீ விஷ்ணு ரூபே விஷ்ணு மாயே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 52. ஓம் ஸ்ரீ ஆக்ஞ்யா சக்ராப்த்ய நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 53. ஓம் ஸ்ரீ ஆகார ரேக சக்ராம்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 54. ஓம் ஸ்ரீ ஹிருதய பூஜ தீபாத்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 55. ஓம் ஸ்ரீ ஆதார மூல நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 56. ஓம் ஸ்ரீ ப்ரம்ம கிரந்தி பிரகாசாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 57. ஓம் ஸ்ரீ குண்டலினி சயனா நந்தி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 58. ஓம் ஸ்ரீ ஜீவாத்மா ரூபிணி மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 59. ஓம் ஸ்ரீ ஸ்தூல சூசும பிரகாஸ் சித்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 60. ஓம் ஸ்ரீ ப்ரம்மாண்ட பாண்ட ஜனனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 61. ஓம் ஸ்ரீ அஸ்வத்தா ப்ரஷ சந்துஷ்டே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 62. ஓம் ஸ்ரீ காரிண்ய பூர்ணே ஸ்ரீதேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 63. ஓம் ஸ்ரீ மூர்த்தித்தியே சொருபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 64. ஓம் ஸ்ரீ பானு மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 65. ஓம் ஸ்ரீ சூர்ய ப்ரகாச ரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 66. ஓம் ஸ்ரீ சந்திர மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 67. ஓம் ஸ்ரீ வஹி மண்டல மத்யஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 68. ஓம் ஸ்ரீ பீதாம்பர தர தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 69. ஓம் ஸ்ரீ திவ்ய ஆபரண சோபாடே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 70. ஓம் ஸ்ரீ ப்ராமண ஆராதனா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 71. ஓம் ஸ்ரீ நரசிம்ஹக்ரவா சிந்தோ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 72. ஓம் ஸ்ரீ வரதே மங்களே மன்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 73. ஓம் ஸ்ரீ பட் மாடவி நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 74. ஓம் ஸ்ரீ வியாசாதி திவ்ய சம்பூஜே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 75. ஓம் ஸ்ரீ ஜெய லக்ஷ்மி சித்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 76. ஓம் ஸ்ரீ ராஜ்ய முத்ரே விஷ்ணு முத்ரே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 77. ஓம் ஸ்ரீ சர்வார்த்த சாதகி நித்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 78. ஓம் ஸ்ரீ ஹனுமன் பக்தி சந்துஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 79. ஓம் ஸ்ரீ மகநீ கீத நாதஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 80. ஓம் ஸ்ரீ ரதி ரூபே ரம்ய ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 81. ஓம் ஸ்ரீ காமத்மி காம ஜனனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 82. ஓம் ஸ்ரீ சுதா பூர்ணே சுதா ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 83. ஓம் ஸ்ரீ இந்திர வன்யே தேவ லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 84. ஓம் ஸ்ரீ அஷ்ட ஐஸ்வர்ய சொரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 85. ஓம் ஸ்ரீ தர்ம ராஜ சொரூபிணி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 86. ஓம் ஸ்ரீ ரட்சோவர புரி லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 87. ஓம் ஸ்ரீ ரத்னாகர ப்ரபாகரமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 88. ஓம் ஸ்ரீ மருது புர மஹானந்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 89. ஓம் ஸ்ரீ குபேர லக்ஷ்மி மாதாங்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 90. ஓம் ஸ்ரீ ஈசான லக்ஷ்மி சர்வேசி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 91. ஓம் ஸ்ரீ ப்ரம்ம பீடே மஹா பீடே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 92. ஓம் ஸ்ரீ மாயா பீடஸ்திதே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 93. ஓம் ஸ்ரீ சக்ர வாசினி கன்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 94. ஓம் ஸ்ரீ அஷ்ட பைரவ சம்பூஜே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 95. ஓம் ஸ்ரீ அஸ்திதானந்த பூரி நாதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 96. ஓம் ஸ்ரீ சித்த லட்சுமி மஹா வித்யே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 97. ஓம் ஸ்ரீ புத்தீந்திராதி நிலையே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 98. ஓம் ஸ்ரீ லோக தாரித்ர சமனீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 99. ஓம் ஸ்ரீ மிருத்யூ சந்தாப நாசினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 100. ஓம் ஸ்ரீ பதி ப்ரியே பதி விரதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 101. ஓம் ஸ்ரீ சதுர் புஜே கோமாளங்கி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 102. ஓம் ஸ்ரீ பட்ச ரூபே முக்தி தாத்நீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 103. ஓம் ஸ்ரீ ஜனா நந்த மயே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 104. ஓம் ஸ்ரீ பக்தி ப்ரியே பக்தி கமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 105. ஓம் ஸ்ரீ ஸ்தோத்ரப்ரியே ரமே ராமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 106. ஓம் ஸ்ரீ ராம நாம ப்ரிய தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 107. ஓம் ஸ்ரீ கங்காப்ரியே சுத்த ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 108. ஓம் ஸ்ரீ விஷ்வ பர்த்தி விஷ்வ மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 109. ஓம் ஸ்ரீ க்ருஷ்ணப்ரியே க்ருஷ்ணரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 110. ஓம் ஸ்ரீ கீத ரூபியே ராக மூர்த்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 111. ஓம் ஸ்ரீ சாவித்ரீ பூத சாவித்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 112. ஓம் ஸ்ரீ காயத்ரீ ப்ரம்ம காயத்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 113. ஓம் ஸ்ரீ ப்ரம்மே சரஸ்வதி தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 114. ஓம் ஸ்ரீ சுகாலினி சுத்தாக்னி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 115. ஓம் ஸ்ரீ வீணாதர ஸ்தோத்ர ஹமே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 116. ஓம் ஸ்ரீ அஃஞாதரி ப்ருக்ஞானே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 117. ஓம் ஸ்ரீ வேதாந்த வன சாராங்கி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 118. ஓம் ஸ்ரீ நாதாந்த ரஷ புயஸ்ஸே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 119. ஓம் ஸ்ரீ திவ்ய சக்தி மஹாசக்தி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 120. ஓம் ஸ்ரீ ந்ருத்த புரியே நிருத்த லக்ஷ்மி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 121. ஓம் ஸ்ரீ சதுர் சஷ்டி கலா ரூபே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 122. ஓம் ஸ்ரீ திவ்ய சுந்தாகரங்கினி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 123. ஓம் ஸ்ரீ முக்திதே முக்தி தேகஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 124. ஓம் ஸ்ரீ யக்ஞ சாரார்த்த சுத்தாக்னீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 125. ஓம் ஸ்ரீ அஷ்ட லஷ்மியே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 126. ஓம் ஸ்ரீ ஸர்வ மங்கள சம்பூர்ணே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
 127. ஓம் ஸ்ரீ ஸர்வ மங்கள மந்த்ர புஷ்பம் ஸமர்ப்பயாமி.

செம்பருத்தியின் மருத்துவக் குணம்

 

பொன்னம்மாவுக்கு சதா தன் மகள் பூரணி பற்றித்தான் கவலை. அவள் வயதொத்த பெண்களெல்லாம் பூப்பெய்தி, கல்யாணத்திற்கு வரிசையாக நிற்க... பூரணி மட்டும் இன்னும் வயதுக்கு வராமல் இருந்தாள். எங்கெங்கோ காட்டிவிட்டாள்... என்னென்ன மருந்தோ கொடுத்துவிட்டாள்... ஆனால், மொட்டு மலரத்தான் காணோம். இந்த விஷயம் தெரிந்து பொன்னம்மாவின் அண்ணன் மகன் வடிவேலுவுக்கு வேறு இடத்தில் பெண் பார்க்கத் தொடங்கி விட்டார்கள். பிறந்ததில் இருந்தே பூரணிக்கும் வடிவேலுக்கும்தான் கல்யாணம் என்று ஆசை காட்டி வந்ததால், அது நிறைவேறாமல் போய் விடுமே என்ற வருத்தம் அவளையும் மகள் பூரணியையும் வாட்டி வதைத்தது. பக்கத்து வீட்டுப் பெரியம்மாவிடம் இதைப் பற்றிச் சொல்லி அழுதாள்.

‘‘பயப்படாதே பொன்னம்மா. உன் மகளுக்கு வந்திருக்கிற பிரச்னையை நான் சரி செய்யறேன்’’ என்று சொல்லிவிட்டு, அருகில் இருந்த பூந்தோட்டத்தில் இருந்து, தினமும் மூன்று செம்பருத்தி பூவைப் பறித்து வந்து, அவற்றை நெய்யில் வறுத்து பூரணிக்குச் சாப்பிடக் கொடுத்தாள். தொடர்ந்து ஒருமாதம் இப்படிக் கொடுத்து வந்திருப்பாள்... எண்ணி முப்பத்திரண்டாவது நாள்... வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பூரணி, ‘‘அய்யோ! அம்மா!’’ என்று வயிற்றைப் பிடித்தபடி உட்கார்ந்துவிட்டாள். ஆமாம், பூரணி பெரிய மனுஷியாகி விட்டாள். செய்தியறிந்த உடனே பொன்னம்மா பக்கத்து வீட்டுப் பெரியம்மாவுக்கு நன்றி சொல்லப் போனாள்.

‘‘பெரியம்மா, எம் பொண்ணு உங்க வைத்தியத்தால பெரிய மனுஷியாயிட்டா... ரொம்ப நன்றிம்மா’’ என்று கண்ணீர் மல்க நின்றாள். ‘‘அதை எனக்குச் சொல்லாத பொன்னம்மா... செம்பருத்திக்குச் சொல்லு... அதுதான் உன் பொண்ணை பூக்க வச்சுது...’’ என்று கூறிச் சிரித்தாள்.

செம்பருத்தி பூ பார்க்கறதுக்கு மட்டுமல்ல... வைத்தியத்துக்கும் ரொம்ப சிறப்பானது. அதோட வேர், இலை, மொட்டு, பூ எல்லாமே மருத்துவ குணம் நிறைஞ்சதுதான். இது பருத்தி வகையைச் சேர்ந்த ஒரு செடி. இதோட பூக்கள் இரண்டு வகையா இருக்கும். ஒரு வகை பூக்கள் அடுக்கடுக்கா காட்சியளிக்கும். இன்னொரு வகை, தனித்தனியா அகலமா காட்சியளிக்கும். இந்தச் செடி எட்டடி உயரம் வரைக்கும் நல்லா செழித்து வளரும். இதோட பூக்கள், வருஷம் முழுக்கப் பூத்துக்கிட்டே இருக்கும்.

உடல் உஷ்ணம் குறைய...
உடல் உஷ்ணம் அதிகமாகிவிட்டால் பலவித பிணிகள் வர வாய்ப்புண்டு. இதுபோல் வராமல் தடுக்க, ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறைஞ்சுடும். சாதாரண காய்ச்சலுக்கும் இந்த நீரைக் குடித்து நிவாரணம் பெறலாம்.

வெட்டை நோய் குணமாக...
ரகசிய வியாதிகளின் பிரிவைச் சேர்ந்த வெட்டை நோயை செம்பருத்திப் பூ குணமாக்குகிறது.

இந்தப் பூவினை அதிகாலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் இருந்தாலும் குணமாகும்.

இருதயம் பலம் பெற...இருதய பலவீனமானவர்களுக்குச் செம்பருத்தி பூ டானிக் சிறப்பாக உதவுகிறது.

செம்பருத்திப் பூவை 250 கிராம் கொண்டு வந்து துண்டு துண்டாக நறுக்கி, ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, காலையில் வெயிலில் வைக்கவும். பின்னர் மாலையில் எடுத்துப் பிசையவும். அப்போது சிவப்பான சாறு வரும். அந்தச் சாறை ஒரு சட்டியில் ஊற்றி சேர்க்க வேண்டிய சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

இதிலிருந்து காலை_மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் கலந்து குடிக்கவும். இதுபோன்று தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயமும் பலம் பெறும்.

பேன் தொல்லை ஒழிய...சில பெண்களக்கு பேன் பெருந்தொல்லை தரும். இதுபோன்றோர் செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று_நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும். தவிர, பொடுகு, சுண்டுகள் இருந்தாலும் நீங்கிவிடும்.

குழந்தையின் வளர்ச்சிக்கு...
சில குழந்தைகள் பிறக்கும்போதே பலகீனத்துடன் பிறப்பதுண்டு. இதனால் வயதிற்கேற்ப வளர்ச்சியில்லாமல் இருக்கும். இக்குறையைப் போக்கிட, ஐந்து செம்பருத்தி பூக்களை, ஒரு மண்பாண்டத்தில் போட்டு அரைலிட்டர் நீர் விட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி பனைவெல்லம் சேர்த்துக் கொடுத்து வர வேண்டும். தொடர்ந்து கொடுத்து வந்தால், சில நாட்களிலேயே குழந்தை வளர்ச்சியில் நல்ல பலன் தெரியும்.’’