youtube

27 August 2015


20 வகை பிரதோஷ வழிபாட்டு பலன்கள் ................

1. தினசரி பிரதோஷம் :

தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை உள்ள காலமாகும். இந்த நேரத்தில் ஈசனைத் தரிசனம் செய்வது உத்தமம் ஆகும். நித்தியப்பிரதோஷத்தை யார் ஒருவர் ஐந்து வருடங்கள் முறையாகச் செய்கிறார்களோ அவர்களுக்கு "முக்தி'' நிச்சயம் ஆகும் என்கிறது நமது சாஸ்திரம்.

2. பட்சப் பிரதோஷம் :

அமாவாசைக்குப் பிறகான, சுக்லபட்சம் என்ற வளர் பிறை காலத்தில் 13-வது திதியாக வரும் "திரயோதசி'' திதியே பட்சப் பிரதோஷம் ஆகும். இந்தத்திதியின் மாலை நேரத்தில் பட்சிலிங்க வழிபாடு செய்வது உத்தமம் ஆகும். குறிப்பாக அன்னை பார்வதி தேவி மயில் உருவாய் ஈசனை வழிபட்ட தலமாகிய மயிலாப்பூர் "கபாலீஸ்வரரை'' வழிபடுவது சிறப்பாகும்.

3. மாதப் பிரதோஷம் :

பவுர்ணமிக்குப் பிறகு வரும் கிருஷ்ணபட்சம் என்ற தேய்பிறை காலத்தில், 13-வது திதியாக வரும் "திர யோதசி'' திதியே மாதப் பிரதோஷம் ஆகும். இந்த திதியின் மாலை நேரத்தில் "பாணலிங்க'' வழிபாடு செய்வது உத்தம பலனைத் தரும்.

4. நட்சத்திரப் பிரதோஷம் :

பிரதோஷ திதியாகிய "திரயோதசி திதி''யில் வரும் நட்சத்திரத்திற்கு உரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திர பிரதோஷம் ஆகும்.

5. பூரண பிரதோஷம் :

திரயோதசி திதியும், சதுர்த்தசி திதியும் சேராத திரயோதசி திதி மட்டும் உள்ள பிரதோஷம் பூரண பிரதோஷம் ஆகும். இந்தப் பிரதோஷத்தின் போது "சுயம்பு லிங்கத்தை''த் தரிசனம் செய்வது உத்தம பலனை தரும். பூரண பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் இரட்டைப் பலனை அடைவார்கள்.

6. திவ்யப் பிரதோஷம் :

பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தாலோ அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்து வந்தாலோ அது "திவ்யப் பிரதோஷம்'' ஆகும். இந்த நாளன்று மரகத லிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

7.தீபப் பிரதோஷம் :

பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீப தானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களைத் தீபங்களால் அலங்கரித்து ஈசனை வழிபட சொந்த வீடு அமையும்.

8.அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் :

வானத்தில் "வ'' வடிவில் தெரியும் நடத்திர கூட்டங்களே, "சப்தரிஷி மண்டலம்'' ஆகும். இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தைத் தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம் ஆகும். இந்த வழிபாட்டை செய்பவர்களுக்கும் ஈசன் தரம் பார்க்காது அருள் புரிவான்.

9. மகா பிரதோஷம் :

ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாதம், சனிக்கிழமை, திரயோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் "மகா பிரதோஷம்'' ஆகும். இந்த மகா பிரதோஷத்து அன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனம் செய்வது மிகவும் உத்தமம் ஆகும்.

குறிப்பாக சென்னை வேளச்சேரியில் உள்ள, "தண்டீசுவர ஆலயம்''. திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகே உள்ள "திருப்பைஞ்ஞீலி'' சிவ ஆலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் உள்ள "ஸ்ரீவாஞ்சியம்'' சிவ ஆலயம், கும்ப கோணம் முதல் கதிராமங்கலம் சாலையில் உள்ள "திருக்கோடி காவல்'' சிவ ஆலயம் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாகும். மாசி மாதம் வரும் மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷமும், "மகா பிரதோஷம்'' எனப்படும்.

10. உத்தம மகா பிரதோஷம் :

சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

11. ஏகாட்சர பிரதோஷம் :

வருடத்தில் ஒரு முறை மட்டுமே வரும் மகா பிரதோஷத்தை `ஏகாட்சர பிரதோஷம்' என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று, `ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓத முடியுமோ, அத்தனை முறை ஓதுங்கள். பின், விநாயகரையும் வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினால் பல விதமான நன்மைகள் ஏற்படும்.

12. அர்த்தநாரி பிரதோஷம் :

வருடத்தில் இரண்டு முறை மகாபிரதோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் நடைபெறும். பிரிந்து வாழும் தம்பதி ஒன்று சேர்வார்கள்.

13. திரிகரண பிரதோஷம் :

வருடத்துக்கு மூன்று முறை மகாபிரதோஷம் வந்தால் அது திரிகரண பிரதோஷம். இதை முறையாகக் கடைப்பிடித்தால் அஷ்ட லட்சுமிகளின் ஆசியும் அருளும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்ட லட்சுமிகளுக்கும் பூஜை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

14. பிரம்மப் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் நான்கு மகா பிரதோஷம் வந்தால், அது பிரம்மப் பிரதோஷம். பிரம்மாவுக்கு திருவண்ணாமலையில் ஏற்பட்ட சாபம் நீங்குவதற்காக அவர் ஒரு வருடத்தில் நான்கு முறை சனிக்கிழமையும், திரயோதசியும் வரும் போது முறையாக பிரதோஷ வழிபாடு செய்து சாப விமோசனம் பெற்றார். நாமும் இந்தப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்மப் பாவம் நீங்கி, தோஷம் நீங்கி நன்மைகளை அடையலாம்.

15. அட்சரப் பிரதோஷம் :

வருடத்துக்கு ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷம். தாருகா வனத்து ரிஷிகள். `நான்' என்ற அகந்தையில் ஈசனை எதிர்த்தனர். ஈசன், பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகா வன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினார். தவறை உணர்ந்த ரிஷிகள், இந்தப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து பாவ விமோசனம் பெற்றனர்.

16. கந்தப் பிரதோஷம் :

சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்தப் பிரதோஷம். இது முருகப் பெருமான் சூரசம்ஹாரத்துக்கு முன் வழிபட்ட பிரதோஷ வழிபாடு. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் முருகன் அருள் கிட்டும்.

17. சட்ஜ பிரபா பிரதோஷம் :

ஒரு வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்தால் அது, `சட்ஜ பிரபா பிரதோஷம்'. தேவகியும் வாசுதேவரும் கம்சனால் சிறையிடப்பட்டனர். ஏழு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே, எட்டாவது குழந்தை பிறப்பதற்கு முன்பு ஒரு வருடத்தில் வரும் ஏழு மகா பிரதோஷத்தை முறையாக அவர்கள் அனுஷ்டித்ததால், கிருஷ்ணன் பிறந்தான். நாம் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தால் முற்பிறவி வினை நீங்கி பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கலாம்.

18. அஷ்ட திக் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் எட்டு மகா பிரதோஷ வழிபாட்டை முறையாகக் கடைப்பிடித்தால், அஷ்ட திக்குப் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

19. நவக்கிரகப் பிரதோஷம் :

ஒரு வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால், அது நவக்கிரகப் பிரதோஷம். இது மிகவும் அரிது. இந்தப் பிரதோஷத்தில் முறையாக விரதம் இருந்தால் சிவனின் அருளோடு நவக் கிரகங்களின் அருளும் கிடைக்கும்.

20. துத்தப் பிரதோஷம் :

அரிதிலும் அரிது பத்து மகாபிரதோஷம் ஒரு வருடத்தில் வருவது. அந்தப் பிரதோஷ வழிபாட்டைச் செய்தால் குருடரும் கண்பார்வை பெறுவார்கள். முடவன் நடப்பான். குஷ்டரோகம் நீங்கும். கண் சம்பந்தப்பட்ட வியாதியும் குணமாகும்

26 August 2015

கர்ணன் ஏன் விரலைச் சப்பினான்?

கர்ணன் வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட தான் செய்தபுண்ணியங்கள் அனைத்தையும் தானம் கொடுத்தவன். தானத்திற்கே பெயர் பெற்றவன்.தானம் என்றால் என்ன என்பதை உலகிற்குக் காட்டியவன். அவன் இறந்ததும் கண்ணனால் சுவர்க்கத்துக்கு அனுப்பப்பட்டவன்.
அங்கு சென்று சகலவசதிகளுடன் இருந்தும் அவனுக்கு ஏனோ பசி அடங்கவில்லை. எப்பொழுதும் வயிற்றுப்பசி இருந்து கொண்டே இருந்தது. அவனும் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்துப் போனான். பிறகு சுவர்க்கத்தின தலைவனிடம் சென்று கேட்டான். நான் எவ்வளவு தான தருமங்கள் செய்திருக்கிறேன் எனக்கு ஏன் இக்கொடிய தண்டனைஎனக்கு ஏன் இப்படிப் பசிக்கிறது எனக் கேட்டான்.
தலைவனோ கர்ணா நீ பூவுலகில் வாழ்ந்த காலத்தில் பொன்னும் பொருளும் மனியும் ஏன் உன்னுயிரும்தானமாகக் கொடுத்து பெரும் புகழ் பெற்றவன். ஆனால் சிந்தித்துச் சொல் எப்போழுதாவது யாருக்காகவாது அன்ன தானம் செய்திருக்கிறாயா எனக் கேட்டான்.
கர்ணனுக்குஅன்ன தான செய்ததாக நினைவு இல்லை. அன்ன தானம் செய்யாததால் தான் இப்பொழுது வயிற்றுப்பசி அடங்க வில்லை எனவும் கூறக் கேட்டான். அப்படியானால் இதற்குஎன்ன தான் வழி எனக் கேட்ட போது தலைவன் கூறினான் உனது வலது கை ஆள்காட்டி விரலை வாயில் வைத்துக் கொள் பசி அடங்கி விடும் என்றான்.
கர்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. விரலைச் சப்பினால் பசி அடங்குமா என்ன இது என ஐயப்பாடு இருந்தாலும் வேறு வழி இல்லை என வலது கை ஆள் காட்டி விரலைவாயில் வைத்து சப்ப பசி உடனே அடங்கிற்று.
ஒன்றும் புரியாத கர்ணன் இது எப்படி மாய மந்திரம் எனக் கேட்க தலைவன் கூறினான் அன்பின் கர்ணா நீ பூவுலகில் வாழும் போது உன்னிடம் ஒரு வறியவன் பசியுடன் வந்து எங்கு அன்னதானச் சத்திரம் இருக்கிறதென்று கேட்க நீயும் உனது வலது கை ஆள்காட்டிவிரலால் இதோ இப்பக்கம் செல்க என வழி காட்டினாய். அந்த புண்ணியச் செயல் நற்செயல் உனக்கு இப்பொழுது உதவுகிறது எனக் கூற -கர்ணனும் அன்ன தான மகிமையை உணர்ந்தான்.

23 August 2015

நல்ல பிள்ளை
இரண்யனைக் கொல்வதற்காக நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்டார். அதிபயங்கர உருவம். சிங்க முகம்...மனித உடல்...இதுவரை பார்க்காத வித்தியாசமான அமைப்பு. இதைப் பார்த்தார்களோ இல்லையோ...இரண்யனின் பணியாட்கள் தங்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர். தனிமையில் நின்ற இரண்யனை மகாவிஷ்ணு அப்படியே தூக்கி மடியில் வைத்தனர். குடலைப்பிடுங்கி மாலையாகப் போட்டார். இதைக் கண்டு வானவர்களே நடுங்கினர். அவர்கள் நரசிம்மரைத் துதித்து சாந்தியாகும்படி வேண்டினர். பயனில்லை. மகாலட்சுமிகூட அவர் அருகில் செல்ல பயந்தாள். என் கணவரை இப்படி ஒரு கோலத்தில் நான் பார்த்ததே இல்லை. முதலில் யாரையாவது அனுப்பி அவரை சாந்தமாக்குங்கள், பிறகு நான் அருகில் செல்கிறேன், என்றாள். அவர் அருகில் செல்லும் தகுதி அவரது பக்தனான பிரகலாதனுக்கு மட்டுமே இருந்தது.
தேவர்கள் அவனை நரசிம்மர் அருகில் அனுப்பினர். பிரகலாதன் அவரைக் கண்டு கலங்கவில்லை. அவனுக்காகத் தானே அவர் அங்கு வந்திருக்கிறார்! தன்னருகே வந்த பிரகலாதனை நரசிம்மர் அள்ளி எடுத்தார். மடியில் வைத்து நாக்கால் நக்கினார். பிரகலாதா! என்னை மன்னிப்பாயா? என்றார். அவனுக்கு தூக்கி வாரிபோட்டது. சுவாமி! தாங்கள் ஏன் இவ்வளவு பெரிய வார்த்தையைச் சொல்லுகிறீர்கள்? என்றான். உன்னை நான் அதிகமாகவே சோதித்து விட்டேன். சிறுவனான நீ, என் மீது கொண்ட பக்தியில் உறுதியாய் நிற்பதற்காக பல கஷ்டங்களை அனுபவித்து விட்டாய். உன்னைக் காப்பாற்ற மிகவும் தாமதமாக வந்திருக்கிறேன். அதற்காகத்தான் மன்னிப்பு, என்றார் நரசிம்மர். பிரகலாதனுக்கு கண்ணீர் வந்துவிட்டது. மகனே! என்னிடம் ஏதாவது வரம் கேள், என்ற நரசிம்மரிடம், பிரகலாதன்,ஐயனே! ஆசைகள் என் மனதில் தோன்றவே கூடாது, என்றான். பணம் இருக்கிறது, படிப்பு இருக்கிறது. ஆனால், ஆசை வேண்டாம் என்கிறான் பிரகலாதன். குருகுலத்தில் அவன் கற்றது சம்பாதிக்கவும், நாடாளவும் மட்டும் அல்ல! இறை சிந்தனையையும் வளர்த்துக் கொள்வதற்கு!
படித்தால் மட்டும் போதாது. பண்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பிரகலாதனின் இந்தப் பேச்சு நரசிம்மரின் மனதை உருக்கிவிட்டது. பகவானை கண்டு பக்தன் தான் உருகுவான். இங்கோ கோபமாய் வந்து, வேகமாய் இரண்யனின் உயிரெடுத்த பகவான் பக்தனைக் கண்டு உருகிப் போனான். இந்த சின்னவயதில் எவ்வளவு நல்ல மனது! ஆசை வேண்டாம் என்கிறானே! ஆனாலும், அவர் விடவில்லை. இல்லையில்லை!
ஏதாவது நீ கேட்டுத்தான் ஆக வேண்டும், நரசிம்மர் விடாமல் கெஞ்சினார். பகவான் இப்படி சொல்கிறார் என்றால், தன் மனதில் ஏதோ ஆசை இருக்கத்தான் வேண்டும் என்று முடிவெடுத்த பிரகலாதன், இறைவா! என் தந்தை உங்களை நிந்தித்து விட்டார். அதற்காக அவரைத் தண்டித்து விடாதீர்கள். அவருக்கு வைகுண்டம் அளியுங்கள், என்றான். நரசிம்மர் அவனிடம், பிரகலாதா! உன் தந்தை மட்டுமல்ல! உன்னைப் போல நல்ல பிள்ளைகளைப் பெற்ற தந்தையர் தவறே செய்தாலும், அவர்கள் என் இடத்திற்கு வந்துவிடுவார்கள். அவர்களின் 21 தலைமுறையினரும் புனிதமடைவர், என்றார். தந்தை கொடுமை செய்தாரே என்பதற்காக அவரை பழிவாங்கும் உணர்வு பிரகலாதனிடம் இல்லை.
எல்லோருக்கும் குரூதுரோகி தெரியும் குரூவே துரோகி தெரியும
ஏகலைவன்
மகாபாரத்தில் மிகவும் நல்ல மற்றும் பரிதாபத்திற்குரிய கதாபாத்திரம் எவர் என்றால் அது ஏகலைவன் மற்றும் கர்ணன் என்றும் சொல்லலாம். இந்த பதிவில் ஏகலைவனை பற்றி பார்போம். ஏகலைவன், வேடுவர் குடுத்திலே பிறந்தவன். இவனுக்கு வில் வித்தையை கற்கவேண்டும் என்கிற எண்ணம் இருந்தது அதனால் அவன் துரோணாச்சாரியரிடம் சகல கலைகளையும் பயிற்சி பெற குரு தட்சனை வைத்து அனுமதி கேட்டான். ஆனால் துரோணரோ ஏகலைவன் வேடுவர் குலத்தை சேரந்ததால் வில் வித்தையை கற்று தர மறுத்து விட்டார். சத்திரியர்களுக்கு மட்டுமே வில் வித்தை கற்று தருவேன் என்று கூறிவிட்டார். இதனால் மனம் மகிழ்ச்சிடையாத ஏகலைவன் மனத்தினை தளரவிடாது தனது இருப்பிடமான வனத்திற்குச் சென்றான். துரோணாச்சாரியாரைப் போலவே சிலையொன்றினை செய்தான்.
அந்தச் சிலையையே தமது குருவாக எண்ணி நாள் தோறும் வழிபாடு செய்து வித்தையைத் தாமே கற்றுக் கொள்ளத் துவங்கினான்.இதனால் இவனிடம் அமைந்து இருந்த குருபக்தியும் ஆர்வமும் சேர்ந்து மிகவும் திறமையுள்ளவனாகவும், போர்க் கலையில் தேர்ந்த பெருமகனாக இவன் உருவாக்கினான்.இவனிடம் வில் வித்தையின் நுணுக்கங்கள் ஒன்று சேர்ந்து இவனை பெரிய வில்லாளனாக மாற்றியிருந்தது. வில் வித்தையில் இவன் மிகவும் வல்லவனாக மாறி இருந்தான்.
இந்த நேரத்தில் துரோணரிடம் பயிற்சி பெற்று வந்த பாண்டவர்களும் கெளரவர்களும் வேட்டைக்காக வனத்திற்கு வந்தார்கள். துரோணரைப் பொறுத்த வரையில் அவருடைய பயிற்சியாளர்களிலே வில்வித்தையில் சிறந்தவன் எனப் பெயர் பெற்றவன் அர்ச்சுனன் ஆவான். இதனால் தான் வில்லுக்கு விஜயன் என்கிற பெயர் பெற்றான் அர்ச்சுனன். எனவே மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியாத நுணுக்கமான வித்தைகளை கூட இவனுக்குக் கற்பித்து இருந்தார் துரோணர். வேட்டைக்கு அர்ச்சுனனும் வந்திருந்தான். அவனைத் தவிரவும் வில்வித்தையில் சிறந்தவர் ஒருவர் யாரும் இருக்கக்கூடாது என்பது துரோணருடைய அபிப்பிராயமாக இருந்தது. இவர்கள் வேட்டைக்கு செல்கின்ற போது உடன் நாய்களும் அழைத்துக் கொண்டு சென்றிருந்தனர்.இதிலே ஒரு நாயானது ஏகலைவன் வில் வித்தையை பயிலும் இடத்திற்கு வந்திவிட்டது. தமது ஆற்றலினால் அந்த நாயினை அடக்கி வைத்திருந் தான் ஏகலைவன். அது அவனுடைய வில்லாற்றலினால் அடங்கிப் போய், துரோணரும் ராஜகுமாரர்களும் இருந்த இடத்திற்கு வந்தது.
நாய் அவ்வாறு அடக்கி வந்ததைக் கண்ட யாவரும் அதிசயித்துப் போனார்கள். இத்தகு ஆற்றல் உள்ளவன் யாரென்பதினை அறிந்து கொள்ள அவர்கள் வனம் முழுக்கத் தேடி, அத்தகு சிறந்த வீரர் ஏகலைவன் என்பதனை அறிந்து துரோணரிடம் வந்து அவனைப் பற்றிக் கூறினார்கள். துரோணருக்கு அவனைப் பற்றிய செய்தி மிகவும் வியப்பினைத் தந்தது. அவனைக் காண அவரே அவனைத் தேடிச் செல்கின்றார்.
துரோணரைக் கண்ட ஏகலைவன் அவரை வணங்கி வரவேற்று உபசரிப்பு செய்தான். நாயின் வாயைக் கட்டக்கூடிய வித்தையை உனக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள் என்று துரோணர் அவனிடம் வினாவினார்.எனது குருநாதர்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். யார் உன்னுடைய குரு?
நீங்கள் தான் துரோணாச்சாரியாரே--
அர்ச்சுனன் ஒருவனைத் தவிர இந்த வில் வித்தையை நான் யாருக்கும் சொல்லித் தரவில்லையே…. நீ என்னுடைய சீடனும் கிடையாது. என்னிடம் வித்தைகளைப் பயின்றவனும் கிடையாது. அப்படியிருக்க நான் எப்படி உனக்குக் கற்றுக் கொடுத்தேன்,உங்கள் உருவத்தினை செய்து அதனையே தாங்களாக நினைத்து எனது போக்கில் வித்தைகளைக் கற்றுக் கொண்டேன்.
அவ்வளவு குருபக்தியா உனக்கு என்னிடம். ஆமாம். உங்களிடம் வில்வித்தை கற்றுக் கொள்ள குருதட்சிணையோடு வந்தேன். ஆனால் நான் வேடுவன் என்பதினால் நீங்கள் கற்றுத் தரவில்லை. எனவே உங்களைப் போன்ற சிலையை செய்து நானே இவற்றினைக் கற்றுக் கொண்டேன்.
அப்படியானால் எனது வித்தைகளை கற்ற நீ… எனக்கு குருதட்சிணையாக எதைக் கேட்டாலும் தருவாயா? எப்போது நீங்கள் குரு என்றும் நான் உங்களின் சீடன் என்றும் அங்கீகாரம் அளித்தீர்களோ அப்போது உங்களுக்கு குருதட்சிணையாக எதுவும் தருவதற்கு நான் மிகவும் சித்தமாக உள்ளேன். எது வேண்டுமானாலும் கேளுங்கள் என்றான். உனது வலது கை கட்டை விரலை எனக்கு குரு தட்சினையாக தருவாயா? அப்படியே ஆகட்டும் என்று தமது வலது கைகட்டை விரலை அறுத்துக் கொடுத்தான் ஏகலைவன்.
இது தகாத செயல்தான், ஆனால் துரோணரைப் பொறுத்த வரையில் இது அவசியமான விஷயமாகும். இதனால் ஏகலைவனிடம் இருந்த தனுர் வேத நுணுக்கங்கள் மறைந்தன. வேடுவனுக்கு இக்கலை தேவையில்லை என்பதினாலேயே துரோணர் இவ்வாறு செய்தார் மேலும் எதிர்காலத்தில் பெரும் போர்கள் நேரிட்டால் அப்போது இவன் நம்க்கு எதரியாக மாறினால் அது பெரும் ஆபத்தை நமக்கு விளைக்கும் என்ற எண்ணத்திலும் துரோணர் இவ்வாறு கீழ்த்தரமாக நடந்துக் கொண்டார்.
இருந்தாலும் ஏகலைவன் மிகவும் புகழ்பெற்றவனாக இதன் பொருட்டு ஆளாகினான
அர்ஜுனனுக்கு கண்ணன் இன்னும்
கர்ணனை கொடை வள்ளல்
என்று சொல்வது பிடிக்கவில்லை.
அவருடன் வாதிட்டான்.
கண்ணன்
உடனே தங்கக்குன்று ஒன்றை உருவாக்கினார்.
அர்ஜுனனை அழைத்து,
''இன்று மாலைக்குள் இந்தக்
குன்று முழுவதையும் நீ தானம்
செய்து முடித்து விட்டால், நான்
உன்னை கர்ணனை விட சிறந்த
கொடை வள்ளல் என்று ஒத்துக்
கொள்கிறேன்,''என்றார்.
அர்ஜுனனும் ஊர் முழுக்க
செய்தியை பரப்பச்செய்து, ஆட்கள்
வரவர,
தங்கத்தை வெட்டி எடுத்து வழங்க
ஆரம்பித்தான்.
எவ்வளவோ பிரயாசைப்பட்டும்
அவனால் அன்று மாலைக்குள்
பாதி அளவு கூட தானம்
செய்து கொடுக்க முடியவில்லை.
அப்போது அந்தப் பக்கம் கர்ணன்
வரவே, கண்ணன் அவனை அழைத்து,
''கர்ணா, இந்தத் தங்கக்
குன்றை நாளை காலைக்குள் தானம்
செய்து கொடுத்து விட வேண்டும்,
உன்னால் முடியுமா?''என்று கேட்டார்.
கர்ணனும், ''இது என்ன பெரிய
வேலையா?'' என்று கூறிக்
கொண்டே அந்தப் பக்கம் வந்த
வறியவர் இருவரை அழைத்தான்.
அவர்களிடம், ''உங்கள் இருவருக்கும்
இந்த தங்க மலையை தானம்
அளிக்கிறேன்.
வெட்டி உபயோகித்துக்
கொள்ளங்கள்,''என
்று கூறியபடியே,சென்று விட்டான்.
அப்போது கண்ணன் அர்ஜுனனிடம்
சொன்னார்,
''இப்போது உனக்கு வித்தியாசம்
தெரிகிறதா? உனக்கு முழுமையாகக்
கொடுக்கலாம் என்ற எண்ணம்
கடைசி வரை வரவில்லை..
நீதி: தானமோ அன்போ நம் மனதின்
ஆழத்திலிருந்து முழுமையாக
கொடுக்காதவரை அதன்
சிறப்பு தெரிவதில்லை