youtube

20 November 2012

வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்

படுக்கை அறையில் வை

வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்

. “படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை வரும்  உண்மைதான் எனக்கும் எனது கணவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடந்து கொண்டுதான் இருந்தது. நீங்கள் எழுதியதைப் படித்த பிறகுதான் அதற்குக் காரணம் புரிந்தது. எங்கள் படுக்கை அறையில் தையல் மெஷின் ஒன்றை வைத்திருக்கிறேன். உடனே அதை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றிவிட்டேன். அதை மாற்றிய பிறகு எங்கள் இருவருக்கும் இடையில் சண்டை நடக்கும் வாய்ப்புகள் குறைந்துவிட்டது” என்று கூறிய அவர் மேலும் பல விஷயங்களுக்கு விளக்கம் கேட்டுத் தெரிந்து கொண்டார். வாஸ்து முறையில் பணக்காரராக சில ரகசியங்கள் வாஸ்து என்பது மிகவும் அற்புதமான ஒரு சாஸ்திரம். இதை சரியான முறையில் பின்பற்றினால் நீங்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம். ஆனால், அதில் தவறு ஏற்பட்டால், நீங்கள் அதள பாதாளத்தில் விழுந்து விடுவீர்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது. உங்கள் கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது மேற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டும். அதாவது, நீங்கள் தூங்கும் போது உங்கள் தலை மேற்குப் பக்கமாக இருக்க வேண்டும். சூரியன் உதிக்கும் பக்கத்திற்கு எதிர்ப்பக்கமாக இருப்பது மேற்கு பக்கம். இந்த பக்கம் தலை வைக்கும் விதத்தில் உங்கள் கட்டிலை திருப்பி வைத்துக்கொள்ளுங்கள். எவ்வளவுதான் கஸ்டப்பட்டு வேலை செய்தாலும் அதற்கு ஏற்ற விதத்தில் பணம் கிடைக்காமல் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த முறை நிறையவே பயன்தரும். பணம் அதிகமாக கைமாறும் காரியம் ஒன்றில் நீங்கள் கலந்துகொள்ளச் செல்லும் போது, காணி விற்றல், வீடு கட்டல், சிகப்பு அல்லது இளம் சாம்பல் நிற உடைகளை அணிந்து செல்லுங்கள். உடைகள் இல்லையென்றால் இந்த நிறத்தில் கைக்குட்டை ஒன்றையாவது எடுத்துச் செல்லுங்கள். இதனால் சில அதிசயங்களும் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. உங்கள் வீட்டில் உள்ள குழாய்களில் அடிக்கடி தண்ணீர் ஒழுகிக் கொண்டிருக்கிறதா என்பதில் கவனமாக இருங்கள் சில வீடுகளில் உள்ள பைப்புகளில் பார்த்தால் சொட்டுச் சொட்டாக தண்ணீர் ஒழுகிக் கொண்டே இருக்கும் இப்படி நடப்பதனால் அந்த வீட்டில் செலவு அதிகமாகவே இருக்கும். இதேபோல், வீட்டினுள் எந்தப் பகுதியிலும் ஈரத்தன்மை இல்லாமலும், பூசணம் பிடிக்காமலும் வைத்திருப்பதில் கவனமாக இருங்கள். எக்காரணம் கொண்டும் வடக்குப் பக்கம் தலை வைத்துப்படுக்காதீர்கள். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் சோம்பேறிகளாகி விடுவீர்கள். அதேபோல், பணம் சம்பாதிக்கும் ஆர்வமும் குறைந்துவிடும். உங்கள் வீட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் எந்த இடத்திலாவது சில்லறை காசுகள் போட்ட பானை ஒன்றை வையுங்கள். இதற்காக சிறுவர்கள் கூட்டாஞ்சோறு ஆக்கும் பானை ஒன்றை நீங்கள் பயன்படுத்துவதுதான் சிறப்பு. இந்த பானை நிறைய மாற்றப்பட்ட சில்லறைக் காசுகளைப் போட்டு அதன் வாயை மூடாமல் கிழக்கு பக்கத்தின் ஒரு பகுதியில் வையுங்கள். முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், இப்படி ஒரு பானை அந்தப் பகுதியில் இருப்பது எவருக்கும் தெரியக்கூடாது. அதாவது, யாருடைய பார்வையிலும் படாத ஓர் இடத்தில் தான் இந்தப் பானையை வைக்க வேண்டும். சாதாரண அறைகளில் குடியிருப்பவர்கள் கிழக்கு பக்கத்தில் உள்ள ஓர் இடத்தில் இந்தப் பானையை வைக்கலாம். இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு மேலதிகமாக பணம் வந்து சேருவதை நீங்கள் அனுபவ ரீதியாக பார்த்துக் கொள்ளலாம். உங்களது சாப்பாட்டு அறையில் பிரேம் போட்ட வட்ட வடிவமான கண்ணாடி ஒன்றை மாட்டி வையுங்கள். இதிலும் முக்கியமான ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். அதாவது, சாப்பாட்டு அறை சுவற்றில் மாட்டப்படும் அந்தக் கண்ணாடியில் மேசைமீதுள்ள உணவுவகைகள் தெரிய வேண்டும். இப்படி செய்வதன் மூலம், உங்களுக்குக் கிடைக்கும் பணம் இரண்டு மடங்காக அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும். உங்கள் வீட்டுக்குள் தென்கிழக்குப் பகுதி எது என்பதைக் கண்டுபிடித்து அந்தப் பகுதியில் ஒன்பது மீன்கள் கொண்ட மீன் தொட்டி ஒன்றை வையுங்கள். இதிலும் முக்கியமான ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது தொட்டியில் இருக்கும் மீன்களின் எண்ணிக்கை ஒன்பதாகத்தான் இருக்க வேண்டும். அதில் எட்டு மீன்கள் கோல்பிஷ் என்று சொல்லப்படும் மீன்களும் (சிவப்பு அல்லது பொன்நிறம்) ஒரு மீன் கருப்பு நிறத்திலும் இருக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் பணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்டும்

No comments: