youtube

5 March 2016

சிவராத்திரி என்ற உடனே இது ஆண்களுக்கான விரதம் என்ற முடிவுக்கு வந்து விடக்கூடாது. பார்வதியே, சிவனை நினைத்து 4 ஜாமங்களிலும் பூஜை செய்த தினம். அதனால பெண்கள் அவசியம் விரதம் இருந்து பூஜை செய்ய வேண்டும்.

திருமணமான பெண்கள் தன்னோட கணவன் மற்றும் பிள்ளைகள் நலனுக்காகவும் திருமணமாகாத பெண்கள் நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

சிவராத்திரியன்று விரதமிருந்தால் புத்தி முக்தி கிடைக்கும், அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும். கோடி பாவங்களும் தீரும், நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

சிவராத்திரியன்று விரதம் இருந்து தான் பிரம்மா சரஸ்வதியைப் பெற்றதுடன் உலக உயிர்களைப் படைக்கும் பதவியை அடைந்தார். மகாவிஷ்ணு விரதமிருந்து சக்ராயுதம் பெற்றதுடன் மகாலட்சுமியையும் உலக உயிர்களைக் காக்கும் உன்னதப் பதவியையும் அடைந்தார்.

2 March 2016

இந்த திருடன் பெயர் k.balakirshnan இவன் வலைபதிவு sathuragiripithan.blogspot.inஎனது வலைப்பதிவை பழுதுபார்க்கும் சமயத்தில் எனது வலைப்பதிவைganesapandian.blogspot.in domain ஹாகிங் செய்து உள்ளன்

இந்த திருடன் பெயர் k.balakirshnan இவன் வலைபதிவு sathuragiripithan.blogspot.inஎனது வலைப்பதிவை பழுதுபார்க்கும் சமயத்தில் எனது வலைப்பதிவைganesapandian.blogspot.in domain ஹாகிங் செய்து உள்ளன்


இந்த திருடன் பெயர் k.balakirshnan இவன் வலைபதிவு  sathuragiripithan.blogspot.inஎனது  வலைப்பதிவை பழுதுபார்க்கும் சமயத்தில் எனது வலைப்பதிவைganesapandian.blogspot.in  domain  ஹாகிங் செய்து உள்ளன்

இந்த திருடன் பெயர் k.balakirshnan இவன் வலைபதிவு sathuragiripithan.blogspot.inஎனது வலைப்பதிவை பழுதுபார்க்கும் சமயத்தில் எனது வலைப்பதிவைganesapandian.blogspot.in domain ஹாகிங் செய்து உள்ளன்


இந்த திருடன் பெயர் k.balakirshnan இவன் வலைபதிவு  sathuragiripithan.blogspot.inஎனது  வலைப்பதிவை பழுதுபார்க்கும் சமயத்தில் எனது வலைப்பதிவைganesapandian.blogspot.in  domain  ஹாகிங் செய்து உள்ளன்
நீங்கள் உங்கள் வலைப்பதிவை ரேட்டிங் செய்வதன் நோக்கம் கொண்டு எனது  வலைப்பதிவை பழுதுபார்க்கும் சமயத்தில் எனது வலைப்பதிவை ganesapandian.blogspot.in  domain  நீங்கள் ஹாகிங் செய்து  உள்ளேர் தயவு செய்து எனது ganesapandian.blogspot.in  domain  நீக்குமாறு  அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
தங்கள் அன்புள்ள 

http://sathuragiripithan.blogspot.in/2015/12/blog-post.htmlநீங்கள் உங்கள் வலைப்பதிவை ரேட்டிங் செய்வதன் நோக்கம் கொண்டு எனது வலைப்பதிவை பழுதுபார்க்கும் சமயத்தில் எனது வலைப்பதிவை ganesapandian.blogspot.in domain நீங்கள் ஹாகிங் செய்து உள்ளேர் தயவு செய்து எனது ganesapandian.blogspot.in domain நீக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு தங்கள் அன்புள்ள ganeshpandian

http://sathuragiripithan.blogspot.in/2015/12/blog-post.htmlநீங்கள் உங்கள் வலைப்பதிவை ரேட்டிங் செய்வதன் நோக்கம் கொண்டு எனது  வலைப்பதிவை பழுதுபார்க்கும் சமயத்தில் எனது வலைப்பதிவை ganesapandian.blogspot.in  domain  நீங்கள் ஹாகிங் செய்து  உள்ளேர் தயவு செய்து எனது ganesapandian.blogspot.in  domain  நீக்குமாறு  அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
தங்கள் அன்புள்ள

ganeshpandian

வாஸ்து முறையில் பணக்கார, கடன் பிரச்னை ஒழிய செல்வம் பெருக

வாஸ்து முறையில் பணக்கார, கடன் பிரச்னை ஒழிய செல்வம் பெருக
லட்சுமிகுபேர தன ஆகாஷ்சாணம் யந்திரம் மற்றும் தனதா யட்சிணி தேவி
இந்த எந்திரம் தனதா யட்சிணிதேவியை ஆதிசங்கர் திருப்பதி  எழுமலையான் வெங்கடாசலபதி சன்னதியில்  பிரதிஸ்டை செய்ததால் எழுமலையான்னுக்கு செல்வசெழிப்பு கொழிக்கின்றன.
தினமும் பல கோடி நகைகள் பணம் உண்டியலில் நிரம்புகின்றன.
நீங்களே யோசித்து பாருங்கள்  இந்தியாவில் எத்தனையோ கோவில் உள்ளது
பல கோவில்யில் அதன் பராமரிப்புக்கு கூட வருமானம் இல்லை
ஆனால் இந்த திருப்தி எழுமலையான் வெங்கடாசலபதி கோவில் மட்டும் தினம் பல கோடிகணக்கில் வருமானம்.
இந்த திருப்பதி  எழுமலையான் வெங்கடாசலபதி கோவில் வருமானம் பிரம்ம இரகசியம் இதுதான்
இந்த கோவில் சென்றால் தனதா யட்சிணிதேவி பார்வை நம்மீது படும்
இந்த யந்திரம் மற்றும் தனதாயட்சிணிதேவி உங்கள் வீட்டில் இருந்தால் திருப்பதி  எழுமலையான் வெங்கடாசலபதி செல்வம் கொழிப்பது போன்று உங்களுக்கு பணம்,நகைகள் செல்வளம் பெருகும்.
வருடத்திற்க்கு ஒருயாவது திருப்தி சென்று வாருங்கள்  தனதா யட்சிணிதேவி பார்வை உங்கள் மீது படும்.
இந்த ஆலயயத்தில் தனதா யட்சிணிதேவி இருப்பதால் இந்த ஆலயத்தில் பணம் கொழிகின்றன

இந்த யந்திரம் மற்றும் தனதா யட்சிணி தேவி நமது ஆலயத்தில் லட்சுமி குபேர பூஜை பிரனபிரிஸ்டை செய்து யந்திரம் மற்றும் தனதா

மலடு நீங்க குழந்தை பாக்கியம் தரும் குருவாயூர் நவநீத கிருஷ்ணன் மந்திரம் யந்திரம்

மலடு நீங்க குழந்தை பாக்கியம் தரும் குருவாயூர் நவநீத கிருஷ்ணன்
மந்திரம் யந்திரம்
திருமணம்மாகி வெகு நாட்கள் குழந்தை  இல்லாத ஆணும் பெண்ணும் இங்கு யந்திர  பூஜை முறைகள் கடைபிடித்தால் நவீத கிருஷ்ணன் அருளால் குருவாயூரப்பன் அருளால் மகப்பேறு கிடைகும்.
இந்த யந்திரத்தை பூஜை வைத்து ஒவ்வெரு கிழமையும் பால்,பாயசம் தயாரித்து அவல் பொரி,கடலை, நெய் விளக்கு கேற்றி கிழக்கு முகமாக அமர்த்து.
ஓம் நமோ நாராயண நமஹா
ஓம் நவநீதகிருஷ்ணன்  நமஹா
ஓம் நமோ குருவாயூரப்பனே நமஹா

இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும், இதே போல் 10 வியாழக்கிழமை விரதம் இருந்து . பூஜை முடித்த பிறகு குழந்தை பாக்கியம் கிடைகும்

காளி உபாசனை

காளி உபாசனை
மூலமந்திரம்
க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் தஷானே காளிகே

க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் சுவஹா

தினம் 108முறை  படையால் வைத்து உரு ஜெபித்தால் அன்னை நேரில்காட்சி அளிப்பார்கள்

குட்டிசாத்ததான் விஸ்ணுமாயா எனும் குரளி வசியம்

குட்டிசாத்ததான் விஸ்ணுமாயா எனும் குரளி வசியம்
குட்டிசாத்தான் சிவகணம் அம்சம் .இதற்கு எதவாது ஒரு வேலையை கொடுத்து கொண்டு இருக்க வேண்டும்.எந்த வேலை இருந்தாலும் மிக எளிதில் செய்ய கூடியாது
மூல மந்திரம்
ஓம்  குட்டிசாத்தா பகவதி சேவியா ஸ்ரீம் றீம் வயநமசி சாத்தா வாவா உன் ஆணை என்னானை உன்னையும் என்னையும் படைத்த பிரம்மாவின் ஆணை சக்தி ஆனை சங்கரன் ஆணை வா உம் படு சுவஹா

வீதி இருகும் பிராத்தம் உள்ள நண்பர்கள் சித்தி செய்து கொல்லாம்

வெளிநாடுகள் செல்பவர்களுக்கு பாதுகாப்பு தரும் கவசம் மந்திரம்

வெளிநாடுகள் செல்பவர்களுக்கு பாதுகாப்பு தரும் கவசம் மந்திரம்

ஒரு யந்திரத்தை வெள்ளி தகட்டில் எழுதி விளக்கின் அருகே வைத்து செம்பருத்தி மலர்களால் அலங்கரித்து அவல் பொரி பூ வைத்து கிழக்கு .முகமாக  அமர்ந்து விநாயகர்  பூஜை செய்து வணங்க வேண்டு.
‘’ஓம் நமசிவய ஓம்
ஓம் யவசிவந ஓம்
ஓம் வசிமநய ஓம்
ஓம் மநயசிவ ஓம்
ஓம்  சிய நமவ ஓம்
ஓம் நமயசிவ ஓம்
ஓம் வசியநம ஓம்
ஓம் நமசிய  ஓம்

108   முறைகள் கூறி நிவேதனம், கற்பூரம் தூபம் காட்டி வணங்கி யந்திரத் தகட்டை தாயத்தில் அடைத்து கொள்ளலாம். இதனால் வெளியூரில் எந்த ஆபத்து ஏற்படாது

வழக்குகளில் வெற்றி பெற யந்திரம் மந்திரமும்

வழக்குகளில் வெற்றி பெற யந்திரம் மந்திரமும்
யந்திரத்தை ஒரு செப்பு தகட்டில் எழுதி விளக்கு முன்னால் வைத்து விளக்கில் நெய்விட்டு ஏற்றி  வேண்டும்
முதலில் விநாயகர் பூஜைகள் முடித்து விட்டு மஞ்சள் நிற மலர்களில் தகட்டைஅர்ச்சனை செய்து இந்த  மந்திரத்தை கூற வேண்டும்
‘’ ஓம் ஓம் லம்
டம் லிங் சங்
மங் சங் வங்
ஐயும் சங் சிவா
கிளவும் லங் சிவா
சவ்வும் மங் சிவா
உவ்வும் சங் சிவா
மவ்வும் மவ் சிவா
இரிங் கிரிங் சிவா

108  முறைகள்  கூறி மஞ்சள் நிற மலர்ளால் யந்திரத் தகட்டிற்கு அர்ச்சனை செய்து கற்பூரம் தூபம் காட்டி  வணங்க வேண்டும் . இந்த யந்திரத்தை தாயத்தில் அடைத்து கையிலோ கழுத்திலோ கட்ட வேண்டும். இதனால் எல்லா வழக்குகளும் வெற்றி பெறும் . 

ஸ்ரீமாகலட்சுமி யட்சிணிதேவி

ஸ்ரீமாகலட்சுமி யட்சிணிதேவி
அன்னை அம்ஸம்மான இந்த தேவதை சுக்கிர ராசி தூலம் நட்சத்திரம் தில் அவதரித்தார்கள்.
பங்குவர்த்தகம்,வட்டி,பைன்னஸ், நகைகடை, முதலிய தொழில் செய்பவர்க்களுக்கு
.

இந்த  தேவதையை நாம் சித்தி செய்தல் நம்மிடம் முக்காலம் நமக்கு உணர்த்தும்.
இந்த தேவதை 21 நாள் மிக எளிதாக சித்து செய்துகொல்லாம்
எங்கள் ஆலயத்தில் பிரனபிரிதிச்டை செய்து விரதம் இருந்து கையால் யந்திரம் வரைந்து உங்களுக்கு வழங்கபடுகின்றன.
யட்சிணி தேவதை தெய்வ ஆகர்சணாம் அஞ்சனம் மை உடன் வழங்கப்படும்.
தேவதையை முறையாக ஆவகணம் செய்து மந்திர உரு ஜெபித்து பாவையாக வழங்கப்படும்

நாம் முறையாக பூஜை செய்து வந்தால் இந்த தேவியை நாம் சித்து செய்து கொள்ளலாம்.

ருத்திரசண்டி சக்கரம் மந்திரம்

ருத்திரசண்டி சக்கரம்  மந்திரம்
இந்த சக்கரம் பலவகையான நன்மைகளைக் கொடுக்கும். இதை பூஜை செய்து வந்தால் வேலை கிடைகாமல் திண்டாடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.உத்தயோகம் பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும். செல்வம் குவியும்
அரிஓம் யங் ரங் வங்  சுங்  கால சண்டி கபால சண்டி
அரி ஓம்ரங் வங் சங்யங் வீர சண்டி விவேக சண்டி
அரிஓம் வங் சங் யங் ரங் சூர சண்டி ருத்திர சண்டி
அரிஓம் வங் சங் யங் ரங் வங் எனைக் காப்பாய் சுவாகா

இந்த மகா மந்திரத்தை தினம் கூறி வந்தால் சகல நன்மைகள் பெருகும்.

ஆண்மை சக்திக்கு ஓரிதழ்தாமரை பொடி

ஆண்மை சக்திக்கு ஓரிதழ்தாமரை பொடி
5 கிராம் உணவிற்கு பின் தண்ணீர் கலந்த பாலில் கொத்திக்க வைத்து சாப்பிட வேண்டும்
.ஆண்கள் வலிமைக்கு சிறந்தது.தாதுகெட்டிபடும்.அணுக்கள் மிகும். ஆண்மைபெருகும்.
விந்து புஷ்டி பலப்படும்

பேய்,பிசாசு,ஏவல்,பில்லி,சூனியம், செய்வினை ஒழிய

பேய்,பிசாசு,ஏவல்,பில்லி,சூனியம், செய்வினை ஒழிய நடனசிங்கரா  கண்பதி மூலமந்திரம்
மேற்கு முகமாகய் தர்ப்பை ஆசனந்திலிருந்து, தாமரை மணியால்

ஓம் ஸ்ரீ கிலி நடனசிங்கார கனபதி என்று தினந்தோறும் 10008 வீதம் 10 நாள் ஜெபித்து வர  பேய்,பிசாசு,ஏவல்,பில்லி,சூனியம், செய்வினைமுதலியவைகள் ஒழியும். மற்றவர்களுக்கும் வீபூதியில் ஜெபித்து கொடுக்கலாம்  

சீறி சீறி அழும் பிள்ளைகளுக்கு வீபூதி மந்திரம்

சீறி சீறி அழும் பிள்ளைகளுக்கு வீபூதி மந்திரம்
வீபூதியை கையில்லெடுத்துக் கொண்டு,குரு குரு நமசிவாயா என்று கூறி
ஓம் பகவதி ஓங்காரி , சத்ரு சங்காரி சர்வ வல்லபே சத்தி சத்தி மகாசத்தி
வா வா ஓங்காரி றீங்கரி ஆக்ருஷ ஆக்ருஷ தல்லி வாவா நான் தொட்ட வீபூதி, நீ தொட்ட வீபூதி நான் சொன்ன மந்திரம் நீ சொன்ன மந்திரம் , ஏவல், பில்லி, சூன்யம், எதிர்சத்ராதி, சண்டி ,பேரண்டி, விஷம், தோஷம் பிணியும்,முனி பேய் பூதங்கள் எல்லாம் அடி அடி பிடி பிடி கொல்லு கொல்லு தாக்கு தாக்கு ஹரி ஓம் நமச்சிவாய குருவே துணை
பிரேயோகம்

இதில் கொஞ்சம் வீபூதி எடுத்து குழந்தைகள் பெரியவர்கள்  நெற்றிலிட பேய் பிசாசு பில்லி சூன்யம் விலகும்

வசிய மகா விபூதி மந்திரம்

வசிய மகா விபூதி மந்திரம்
ஓம் பகவதி கெளரி ,பஞ்சாசாத்தி,லோகவசி கரி,
மகாமோகினி,ஐயும்,கிலியும்,அரசனா,கலியாணி,
நாராயணிதேவி வீரலட்சுமி, என் வாக்கிலேயும்,
என் மனத்திலேயும் மோகித்துநிற்க, சிவா
இந்த மந்திரத்தை தேங்காய்-பழம் –பூ இவைகளை  வைத்து சாம்பிராணி சூடம் தீபாராதனை செய்து , மேற்கு நோக்கியிருந்து 1008 உரு ஜெபிக்கவும்,
பின்பு இலையில் விபூதி பரப்பி தான் நாடப் போகிற பேரை அந்த வீபூதி மீதிதெழுதி, சாம்பிராணி தூபம் போட்டு 108 உருதரம் இந்தத்  மந்திரத்தை சொல்லி வீபூதி எடுத்து பூசிக்கொண்டு போனால்  தான் சென்ற காரியம் உடனே சித்தியாகும்

பலன் தரும் ஸ்லோகம் : ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் கிட்டிட

பலன் தரும் ஸ்லோகம் : ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் கிட்டிட...


ஸ்ரீகண்ட பார்வதீநாத தேஜிநீபுரநாயக
ஆயுர்பலம் ஸ்ரியம் தேஹி ஹர மே
பாதகம் ஹர
கௌரீ வல்லப காமாரே காளகூட விஷாஸந
மாமுத்தராபதம்போதே: த்ரிபுரக்நந்தகாந்தக
- மங்கள ஸ்லோகங்கள்.

பொதுப்பொருள்: கழுத்தில் காளகூட விஷத்தை விருப்பத்துடன் ஏற்றுத் தரித்தவரே நமஸ்காரம். காத்யாயநியான பார்வதியின் கணவரே, திருவீழி
மிழலை தலத்தின் நாயகரே, நமஸ்காரம். எனக்கு ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் ஆகியவற்றை அருள்வீராக. சிவபெருமானே, என் பாவங்களைப்  போக்கி என்னைத் தூய்மைப்படுத்துங்கள். கௌரியின் கணவரே, மன்மதனை சாம்பலாக்கியவரே, தான் காளகூட விஷத்தை அருந்தி, பிற அனைவரை யும் காப்பாற்றிய சீலரே, நமஸ்காரம். த்ரிபுரஸம்ஹாரம் செய்தருளியவரே, காலகாலனே, என்னை ஆபத்துகளிலிருந்து காத்து அருள்வீராக.

(இத்துதியை பிரதோஷ தினங்களில் பாராயணம் செய்து வந்தால் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் மேன்மேலும் விருத்தியாகும். அனைத்து வித மான பயங்களும் தொலையும்

கஷ்ட, நஷ்டங்களை போக்கும் அனுமன் மந்திரம்

கஷ்ட, நஷ்டங்களை போக்கும் அனுமன் மந்திரம்

        
ஒருவரது லக்னம், லக்னாதிபதி, ராசி, ராசியாதிபதி, சூரியன், சந்திரன் ஆகியவை பாதிப்படைந்தோ, பலவீனமாகவோ இருந்தால் அவருக்கு கண் திருஷ்டியாலோ, எதிர்மறை சக்திகளாலோ கஷ்ட நஷ்டங்கள் உண்டாகும். 

6,8,12 ஆகிய இடங்கள் பலமாக இருந்து, கோச்சார நிலைகள் பாதகமாக இருந்தாலும் அவற்றின் திசா புத்தி காலங்களிலும் மேற்கண்ட பிரச்சினைகள் உண்டாகும். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல பலனைத்தரும், அனுமன் மீது அமைந்த இரண்டு முக்கியமான மந்திரங்களை இங்கு காணலாம். 

‘ஓம் நமோ ஹனுமதே ருத்ர 
அவதாராய பர யந்த்ர மந்த்ர 
தந்த்ர த்ராதக நாசகாய 
ஸ்ரீ ராம தூதாய ஸ்வாஹா’ 
‘புத்திர் பலம் யஸோ தைர்யம் 
நிர்பயத்வமரோகதா அஜாத்யம் 
வாக்படுத்வம் ச ஹநுமத் 
ஸ்மரணாத் பவேத்’ 

இதை ஒருவரது ஜன்ம நட்சத்திரத்தன்று காலையில் ஒரு அனுமனின் சன்னிதியில் இருந்து ஏதாவது ஒன்றை மட்டும் உச்சாடனம் செய்து ஆரம்பிக்க வேண்டும். பிறகு தினமும் காலையில் வீட்டிலிருந்தே ஜபம் செய்து வரலாம். இந்த மந்திரங்களை எப்போதுமே 48 அல்லது 108 என்ற எண்ணிக்கையிலேயே ஜபித்து வருதல் முக்கிய அம்சமாகும்

பணப்பிரச்சனைகளை தீர்க்கும் அனுமன் மந்திரம்

பணப்பிரச்சனைகளை தீர்க்கும் அனுமன் மந்திரம்

   ஆற்றலால் தமது இயல்பு பூரணமடைந்திருந்தாலும் எவ்வித வெளித்தோற்ற சஞ்சலங்களாலும் பாதிப்படையாமலும், அன்னை சீதா மகாலட்சுமியின் திவ்யமான அருள்பிரவாகத்தில் திளைத்து, ராமனின் உள்ளம் கவர்ந்த சுந்தரனாகவும் இருக்கும் அனுமனின் மீதமைந்த இந்த மந்திரம் உச்சரிப்பவரின் உள்ளம் உள்ளூர விரும்பும் நல்ல விளைவுகளை தந்தருளும் என்பது நிச்சயமாகும்.

ரத்த நோய்கள் விலக ஸ்லோகம்

ரத்த நோய்கள் விலக ஸ்லோகம்

     மஹாதேவாஜ்ஜாதம் சரவணபவம் மந்த்ரஸரபம் 
மஹத்தத்வாநந்தம் பரமலஹரீம் மந்த்ரமதுரம் 
மஹாதேவாதீதம் ஸுரகணயுதம் மந்த்ரவரதம் 
குஹம் வல்லீநாதம் மம ஹ்ருதி பஜே க்ருத்ரகிரீஸம் 
ஸுப்ரமண்ய பஞ்சக ஸ்தோத்திரம் 

சில சிவ மந்திரங்களை:

சில சிவ மந்திரங்களை:
ஓம் ஜகங் என தினமும் 108 முறை ஜபித்தால் கணபதியின் அருள் கிட்டும்.
ஓம் நமசிவாய என்று ஜெபித்தால் காலனை வெல்லலாம்.
ஓம் நமசிவாய நமா என ஜெபித்தால் பூதக்கூட்டங்கள் வசமாகும். துஷ்ட தேவதைகள் அழியும். மன்னர்கள் அருள் கிடைக்கும்.
ஓம் நூம் பயப்யுஞ் சிவாய நமா என்ற மந்திரத்தை ஜபித்தால் துன்பங்கள் விலகும்.ஆறு சாஸ்திரங்களையும், நான்கு வேதங்களையும் அறிய உதவும்.
சிவாய ஓம் என்று சொன்னால் திருமாலின் ஆற்றல் கிட்டும்.
மய நசிவ சுவாகா என ஓதினால் ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்கள் கீழிறங்கிவந்து சுமனக்குளிகை தருவார்கள்.
இங் சிங் ச்ங் ஓம் என்ற ஈசான மந்திரத்தை தனக்கு ஆபத்தான வேளைகளில் சூரியனுக்கு எதிராக நின்று கைகளை மேலே உயர்த்தி ஜபிப்பவன் எல்லா பாவங்களிலிருந்து முழுமையாக நீங்குவான்.
சிங் சிங் சிவாய ஓ என ஜபித்துவந்தால் முக்காலமும் அறியும் ஆற்றல் உண்டாகும்.
ஓங்கிறியும் ஓம் நமச்சிவாய என சொன்னால் வியாபாரம் நன்றாக நடக்கும்.
லீங் க்ஷும் சிவாய நம என ஜபித்தால் பெண்கள் வசியம் உண்டாகும்.
சவ்வும் நமசிவாயநமா என ஜபித்தால் அரச போகம் கிட்டும்.
மந்திர ஜபம் பற்றி சித்தர்கள் கூறியிருப்பது:
மசிவயந ஜபித்தாலும், நயவசிம ஜபித்தாலும் மோகனம் உண்டாகும்-அகத்திய மகரிஷி
சிவாயநம ஜபித்தால் மோகனம் உண்டாகும்-நந்தீசர் மகரிஷி

29 February 2016

மகா சிவராத்திரி 7.3.2016 திங்கட்கிழமை

மகா சிவராத்திரி 7.3.2016 திங்கட்கிழமை

 சிவம் என்ற சொல்லுக்கு ' சுகம்' என்ற பொருள் உண்டு. சிவராத்திரி என்பதற்கு மங்களகரமான இரவு, இன்பம் தரும் இரவு என்பது பொருள். இந்த உலகம் முழுவதும் மஹா பிரளய வெள்ளத்தில் சிவபெருமானிடம் ஒடுங்கிய நாளே 'மகா சிவராத்திரி ' என்று சைவ சமயம் கூறுகின்றது.



வருடந்தோறும், மாசி மாதக் கிருஷ்ணபட்சம் சதுர்த்தி திதி அன்று, அமாவாசைக்கு முந்திய நாள் சிவராத்திரி தினமாக உலகெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.



சிவராத்திரி ஐந்து வகைப்படும்.



நித்திய சிவராத்திரி : ஒவ்வொரு சதுர்த்தியிலும் சிவபூஜை செய்து, ஒரு வருடத்தில் இருபத்திநான்கு சிவராத்திரி பூஜை புரிவது நித்திய சிவராத்திரி.



பட்ச சிவராத்திரி : தை மாதம் கிருஷ்ண பிரதமை முதல் பதின்மூன்று நாட்கள் தினமும் ஒருவேளை உணவு உட்கொண்டு, சதுர்த்தியில் பூஜை செய்வது பட்ச சிவராத்திரி.



மாத சிவராத்திரி : தை மாதத்தில் சுக்ல திருதியை, மாசி மாதத்தில் கிருஷ்ண சதுர்த்தசி, பங்குனி மாதத்தில், முதலில் வரும் திருதியை, சித்திரையில் கிருஷ்ண அஷ்டமி, வைகாசி மாதம் முதல் அஷ்டமி, ஆனி சுக்ல சதுர்த்தி, ஆடி கிருஷ்ண பட்சமி, ஆவணி சுக்ல அஷ்டமி, புரட்டாசி முதல் திரயோதசி, ஐப்பசி சுக்ல துவாதசி, கார்த்திகை முதல் சப்தமியும் அஷ்டமியும், மார்கழி இருபட்ச சதுர்த்திகள் ஆகிய இவை அனைத்தும் மாத சிவராத்திரிகள்.



யோக சிவராத்திரி : சோம வாரத்தன்று அறுபது நாழிகையும் அமாவாசை இருந்தால் அது யோக சிவராத்திரி.



மகா சிவராத்திரி : மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி இரவு மகா சிவராத்திரி புண்ணிய காலமாகும். அன்றைய தினம் இரவு கடைசி பதினான்கு நாழிகை ( ஐந்து மணி முப்பத்தாறு நிமிடங்கள் ) லிங்கோத்பவ காலம் எனப்படும்.



இனி சிவராத்திரியின் மகிமையைக் காண்போம்



அகில நாயகி பார்வதிதேவி ஆடல் நாயகனாம் சிவபெருமானுடன் விளையாடச் சித்தம் கொண்டாள். ஒருமுறை, விளையாட்டாக அன்னை சிவபெருமானின் இரு கண்களையும் தன கரங்களால் மூடிக்கொண்டாள். சிவனின் இரு கண்களாகத் திகழும் சூரியனையும், சந்திரனையும் மறைத்து விட்டால், உலகில் ஒளியேது ? அகிலம் ( உலகம் ) முழுவதும் கணப்பொழுதில் இருண்டு போனது.



நட்சத்திரங்களின் ஒளிகூட இல்லாமல், உலகை இருள் சூழ்ந்து கொண்டது. அந்த நாளே ' சிவராத்திரி' என அழைக்கப்படுகிறது.



ஒளி வேண்டி அனைத்து உயிர்களும் சிவனை வேண்ட, உலகுக்கு ஒளி கொடுப்பதற்காக சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணைத் திறந்தார். வெப்பக்கனலாக வீசிய நெற்றிக்கண்ணின் ஒளி கண்டு பார்வதி தேவியே நடுநடுங்கினாள். அம்பிகையைக் கருணையுடன் நோக்கிய சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணிலிருந்து கிளம்பிய வெப்ப ஒளியைக் குளிர்நிலவாக்கி, அன்னையையும், தம் அடியவர்களையும் ஆட்கொண்டார். உலகுக்கு ஒளியேற்றிய சிவனுக்கு, அந்த நன்னாளில் நெய் தீபமேற்றி வழிபட்டால் துன்பங்கள் நீங்கும் என்பது பெரியோர் வாக்கு.



ஒரு வேடன் காட்டில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு புலி அவனை விரட்டியது. ஓடிச் சென்று அவன் ஒரு மரத்தில் ஏறிக்கொண்டான். அது ஒரு வில்வ மரம். மரத்தின் கீழே, புலி படுத்துக் கொண்டது. செய்வதறியாமல் திகைத்த வேடன், பொழுதைக் கழிக்கவும், தூக்கத்தை விலக்கவும் ( தூங்கினால், கீழே விழுந்து புலிக்கு இரையாகி விடுவானே) அந்த வில்வ மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக் கீழே போட்டுக் கொண்டிருந்தான்.



கீழே விழுந்த இலைகள், அந்த மரத்தினடியில் இருந்த சிவ லிங்கத்தின்மேல் விழுந்தன. வேடன் தான் செய்வது என்னவென்று அறியாமல் செய்த அந்தச் செயல், சிவனுக்குரிய அர்ச்சனையாக மாறி, அவனுக்குச் சிவனின் அருள் கிடைத்தது. அன்று சிவராத்திரியாதலால், கண் விழித்துப் பூஜை செய்த பயனும் கிடைத்தது. அதனால், வேடனின் பாவங்கள் நீங்கி, முத்தி பெற்றான்.



சிவராத்திரியன்று முழு இரவும் கண்விழித்துச் சிவபெருமானைப் போற்றி வழிபாடு செய்து, அவரது அருள் பெற்று வாழ்வோம்.

மகா பெரியவா

மகா பெரியவா பக்தர்களுக்கு அருளியது தொடர்பாக பல பதிவுகளை வெளியிட்டுள்ளோம். எந்த சூழ்நிலையிலும் மகா பெரியவா கோபங்கொண்டு எவரிடமும் பேசியது கிடையாது. சபித்தது கிடையாது. சில சமயம் பக்தர்கள் தவறுக்காக அவர் கோபப்படுவதுண்டு. காலில் விழுந்தவுடன் அடுத்த நொடி கோபம் நீங்கி சாந்தமாகிவிடுவார். தவறு செய்வது மனித இயல்பு அதை மன்னிப்பது மட்டுமல்ல மறப்பது தான் தெய்வ குணம் என்பது அவருக்கு தெரியும். ஆனால்… தவறுக்கும் தவறான தவறை ஒருவர் செய்த காரணத்தால் மகா பெரியவா எரிமலையாய் சீறி அனல் கக்கிய தருணம் பற்றி தெரியுமா?

2006 ஆம் ஆண்டு சக்தி விகடனில் வெளியான இந்த சம்பவத்தை படியுங்கள். பல இடங்களில் நமக்கு திக் திக் என்று இருக்கும். கண்ணீர் பொத்துக்கொண்டு வரும்.

மிராசுதாரை மிரள வைத்த மகா பெரியவா!

பல வருஷங்களுக்கு முன், ஒரு சித்ரா பௌர்ணமி தினம். திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க ஸ்வாமி கோயிலில் மஹாந்யாஸ ருத்ர ஜபத்துடன் ஓர் அபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. 11 வேத பண்டிதர்களை வைத்து அதை நடத்தியவர், திருவாரூரைச் சேர்ந்த மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர் என்பவர். காலை எட்டு மணிக்கு ஆரம்பித்த ருத்ராபிஷேகம், மதியம் ஒரு மணி அளவில் பூர்த்தி அடைந்தது.

காஞ்சி மகா ஸ்வாமிகளிடம் அபரிமிதமான பக்தி கொண்டவர் மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர். ‘எப்படியும் இந்த ருத்ராபிஷேகப் பிரசாதத்தை பெரியவாளிடம் சமர்ப்பித்துவிட வேண்டும்’ என்று தீர்மானித்தார். ருத்ராபிஷேகப் பிரசாதத்தை பயபக்தி யுடன் ஒரு வாழை இலையில் வைத்து, புதுப் பட்டு வஸ்திரத்தில் சுற்றி எடுத்துக் கொண்டார். அன்று மாலையே திருவிடைமருதூர் ரயில்வே ஸ்டேஷனில், மதுரை- சென்னை பாசஞ்சர் ரயிலில் ஏறினார் மிராசு தார். விடியற்காலம் செங்கல்பட்டு ஸ்டேஷனில் இறங்கி, பஸ் பிடித்து காஞ்சிபுரம் வந்து இறங்கினார் நாராயணஸ்வாமி ஐயர்.

அன்று மடத்தில் ஏகக் கூட்டம். ஸ்நானம் இத்யாதி களை முடித்துக் கொண்டு, பெரியவா தரிசனத்துக்காக பிரசாதத்துடன் காத்திருந்தார் மிராசுதார். நண்பகல் 12 மணி சுமாருக்கு, ஸ்ரீசந்திரமௌலீஸ்வர பூஜையை முடித்துவிட்டு வந்து உட்கார்ந்தார் மகா ஸ்வாமிகள். பக்தர்கள் கூட்டம் நெருக்கியடித்தது. மிராசுதாரால் ஸ்வாமிகளை நெருங்க முடியவில்லை. உடனே மிராசுதார், ‘‘எல்லாரும் நகருங்கோ… நகருங்கோ. நா பெரியவாளுக்கு திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி ருத்ராபிஷேகப் பிரசாதம் கொண்டு வந்திருக்கேன். அத அவர்ட்ட சமர்ப்பிக்கணும்’’ என்று பிரசாத மூட்டையைக் காட்டிக் கெஞ்சினார்.

ஒருவரும் நகருகிற வழியாகத் தெரியவில்லை. மிராசுதாரின் தவிப்பையும் பதற்றத்தையும் பார்த்த மடத்தைச் சேர்ந்த ஒருவர், வழி ஏற்படுத்திக் கொடுத்து நாராயணஸ்வாமி ஐயரை, பெரியவாளுக்கு அருகே அழைத்துச் சென்றார். பெரியவாளைப் பார்த்தவுடன் மிராசுதாருக்குக் கையும் காலும் ஓடவில்லை. தொபுக் கடீர் என்று சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து எழுந்தார். மகா ஸ்வாமிகள் அவரை அண்ணாந்து பார்த்தார்! ‘என்ன விஷயம்’ என்பதைப் போல புருவங்களை உயர்த்தினார்.

உடனே மிராசுதார் கைகள் உதற பிரசாத மூட்டை யைப் பிரித்துக் கொண்டே, ‘‘பிரசாதம்… பிரசாதம் பெரியவா’’ என்று குழறினார். மீண்டும் பெரியவா, ‘‘என்ன பிரசாதம்?’’ என்று கேட்டு அவரைப் பார்த்தார். அதற்குள், மூட்டையைப் பிரித்து, பிரசாதத்தை எடுத்து, அங்கிருந்த மூங்கில் தட்டு ஒன்றில் வைத்து, ஸ்வாமிகளுக்கு முன்பாகச் சமர்ப்பித்தார் மிராசுதார். அதில், ஒரு சிறிய வாழை இலையில் விபூதி, குங்குமம், சந்தனம் ஆகியவற்றுடன் கொஞ்சம் வில்வ தளம், இரண்டு தேங்காய் மூடிகள், பூவன் வாழைப்பழங்கள் சில இருந்தன.

மகா ஸ்வாமிகள், ‘‘இதெல்லாம் எந்த க்ஷேத்ர பிரசாதம்?’’ என்று கேட்டு மீண்டும் மிராசுதாரைப் பார்த்தார். மிராசுதார் சற்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டு மிக விநயமாக, ‘‘பெரியவா! நேத்திக்கு திருவிடைமருதூர்ல மகாலிங்க ஸ்வாமிக்கு ருத்ரா பிஷேகம் பண்ணி வெச்சேன். மஹாந்யாஸ ருத்ர ஜபத்தோட பெரிய அபிஷேகம். அந்தப் பிரசாதம்தான் இது. பெரியவா சந்தோஷப்படுவேளேங்கறதுக்காக எடுத்துண்டு ரயிலேறி ஓடி வந்தேன். வாங்கிண்டு அனுக்ரஹம் பண்ணணும்!’’ என்று சொல்லி முடித்தார்.

உடனே பெரியவா அந்த பிரசாத மூங்கில் தட்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுக் கேட்டார்: ‘‘நாராயணசாமி! நீ பெரிய மிராசுதான். இருந்தாலும் செலவுக்கு இன்னும் யாரை யாவது கூட்டு சேத்துண்டு இந்த ருத்ராபி ஷேகத்தை ஸ்வாமிக்கு பண்ணினயோ?’’

‘‘இல்லே பெரியவா… நானே என் சொந்தச் செலவுல பண்ணினேன்’’ என்று, அந்த ‘நானே’வுக்குச் சற்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார் மிராசுதார். பெரிய வாள் தனக்குள் சிரித்துக் கொண்டார். அத்துடன் விட வில்லை. ‘‘லோக க்ஷேமத்துக்காக (உலக நன்மைக்கு) மத்யார்ஜுன க்ஷேத்ரத்துலே (திருவிடைமருதூர்) ருத்ராபிஷேகத்தைப் பண்ணினாயாக்கும்?’’ என்று கேட்டார். உடனே மிராசுதார் ஆதங்கத்துடன், ‘‘இல்லே பெரியவா. ரெண்டு மூணு வருஷ மாவே வயல்கள்ல சரியான வெளச்சல் கிடை யாது. சில வயல்கள் தரிசாவே கெடக்கு. திருவிடைமருதூர் முத்து ஜோஸ்யரைப் போய்ப் பாத்தேன். அவர்தான், ‘சித்ரா பௌர்ணமி அன்னிக்கு மகாலிங்க ஸ்வாமிக்கு மஹாந்யாஸ ருத்ராபிஷேகம் நடத்து. அமோகமா வெளச்சல் கொடுக்கும்’னார்! அத நம்பித்தான் பண்ணி னேன் பெரியவா’’ என்று குழைந்தார்.

எதிரில் வைத்த பிரசாதம் அப்படியே இருந்தது. ஆசார்யாள் இன்னும் அதை ஸ்வீகரித்துக் கொள்ளவில்லை. ‘‘அப்டீன்னா ஆத்மார்த்தத் துக்காகவோ, லோக க்ஷேமார்த்தமாவோ நீ இதைப் பண்ணலேனு தெரியறது’’ என்று சொன்ன ஸ்வாமிகள், சற்று நேரம் கண் மூடி தியானத்தில் ஆழ்ந்து விட்டார்.

பதினைந்து நிமிடங்கள் கழித்து கண்களைத் திறந்தார் ஆசார்யாள். அவர் முகத்தில் அப்படி ஒரு தெளிவு! கண் மூடி தியானித்த பதினைந்து நிமிடங்களுக்குள், பல விஷயங்களைப் புரிந்து கொண்டு விட்ட ஒரு ஞானப் பார்வை. அனைவரும் அமைதியாக இருந்தனர். ஸ்வாமிகள் தொடர்ந்தார். ‘‘சரி… ருத்ர ஜபத்துக்கு எத்தனை வேத பிராமணாள் வந்திருந்தா?’’

‘‘பதினோரு வேத பண்டிதாளை ஏற்பாடு பண்ணியிருந்தேன் பெரியவா!’’ – இது மிராசுதார்.

உடனே ஸ்வாமிகள், ‘‘வைதீகாள் எல்லாம் யார் யாரு? எந்த ஊருன்னெல் லாம் தெரியுமோ? நீதானே எல்லா ஏற்பாடும் பண்ணினே?’’ என்று விடாப்பிடியாக விசாரித்தார்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பக்தர்களுக்கு, ‘பெரியவா ஏன் இப்படித் துருவித் துருவி விசாரணை செய்கிறார்!’ என வியப்பாக இருந்தது. இருந்தாலும், ஸ்வாமிகள் காரணமில்லாமல் இப்படி விசாரிக்க மாட்டார் என்பதையும் புரிந்து கொண்டார்கள். மிராசுதார், தன் இடுப்பில் செருகியிருந்த ஒரு பேப்பரைக் கையில் எடுத்தார்.

‘‘வாசிக்கறேன் பெரியவா. திருவிடைமருதூர் வெங்கட்ராம சாஸ்திரிகள், சீனுவாச கனபாடிகள், ராஜகோபால சிரௌதிகள், மருத்துவக்குடி சந்தான வாத்யார், சுந்தா சாஸ்திரிகள், சுப்பிரமணிய சாஸ்திரிகள், திருமங்கலக்குடி வெங்கிட்டு வாத்யார்… அப்புறம்…’’ என்று மிராசுதார் ஆரம்பிப்பதற்குள், ஸ்வாமிகள், ‘‘எல்லாம் நல்ல அயனான வேதவித்துகளாத்தான் ஏற்பாடு பண்ணிருக்கே. அது சரி… ஒன் லிஸ்ட்டுலே தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகள் பேரு இருக்கானு பாரு…’’ என்று இயல்பாகக் கேட்டார்.

உடனே மிராசுதார் மகிழ்ச்சி பொங்க, ‘‘இருக்கு பெரியவா… இருக்கு. அவரும் ஜபத் துக்கு வந்திருந்தார்!’’ என ஆச்சரியத்தோடு பதிலளித்தார்.

சூழ்ந்து நின்ற பக்தர்களுக்கெல்லாம் ‘பெரியவா எதற்காக ஒரு அபிஷேகம் நடந்த விஷயத்தைப் பற்றி, இப்படி துருவித் துருவி விசாரிக்கிறார்’ என்று வியப்பு. தவிர, ஒருவரும் வாய் திறக்கவில்லை. அமைதியாக நின்று கவனித்தனர்.

ஸ்வாமிகள், ‘‘பேஷ்… பேஷ்! வேங்கடேச கனபாடிகளையும் ஜபத்துக்குச் சொல்லிருந்தயா? ரொம்ப நல்ல காரியம். மகா வேத வித்து! இப்ப கனபாடிகளுக்கு ரொம்ப வயசாயிடுத்து. குரல் எழும்பறதுக்கே ரொம்பவும் சிரமப்படும். ஜபத்தை புடிச்சு (மூச்சடக்கி) சொல்றதுக்கு கஷ்டப்படுவார்’’ என்று கூறியதுதான் தாமதம்… மிராசுதார் படபடவென்று, உயர்ந்த குரலில், ‘‘ஆமாம் பெரியவா! நீங்க சொல்றது ரொம்ப சரிதான். அவர் சரியாவே ருத்ரம் ஜபிக்கலே! சில நேரம் வாயே திறக்காம கண்ண மூடிண்டு ஒக்காந்துருக்கார். அடிக்கடி கொட்டாவி விடறார். அதனால ஜப ‘ஸங்க்யை’யும் (எண்ணிக்கை) கொறயறது! நேத்திக்கு அவர் ரொம்ப சிரமம் கொடுத்துட்டார். ஏண்டா அவரை வரவழைச்சோம்னு ஆயிடுத்து பெரியவா’’ என்று சொல்லி முடித்ததுதான் தாமதம்… பொங்கி விட்டார் ஸ்வாமிகள்.

வார்த்தைகளில் கோபம் கொப்பளிக்க ஸ்வாமிகள், ‘‘என்ன சொன்னே… என்ன சொன்னே நீ? பணம் இருந்தால் எத வேணும்னாலும் பேசலாங்கிற திமிரோ! தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகளோட யோக்யதாம்சம் பத்தி நோக்கு என்ன தெரியும்? அந்த வேதவித்தோட கால்தூசி பெறுவயா நீ? அவரப் பத்தி என்னமா நீ அப்டிச் சொல்லலாம்? நேத்திக்கு மகாலிங்க ஸ்வாமி சந்நிதியிலே என்ன நடந்ததுங்கறத இப்போ நா புரிஞ்சுண்டுட்டேன்! நா கேக்கற கேள்விக்கு இப்போ நீ பதில் சொல்லு! நேத்திக்கு ஜப நேரத்துலே… கனபாடிகள் முடி யாமல் கண் மூடி ஒக்காந்திருந்த நேரத்துலே நீ அவர்ட்ட போய், கடுமையாக ‘ஏங்காணும், காசு வாங்கலே நீர்! இப்படி ஜபம் பண்ணாம வாயடச்சு ஒக்காந்திருக்கீரே’னு கத்தினது உண்டா, இல்லியா?’’ என்று பொரிந்து தள்ளிவிட்டார். விக்கித்து நின்றது மிராசு. கூட்டமும் பிரமித்துப் போனது.

‘‘என்ன சொன்னே… என்ன சொன்னே நீ? பணம் இருந்தால் எத வேணும்னாலும் பேசலாங்கிற திமிரோ! தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகளோட யோக்யதாம்சம் பத்தி நோக்கு என்ன தெரியும்? அந்த வேதவித்தோட கால்தூசி பெறுவயா நீ?

கை- கால்கள் நடுங்க சாஷ்டாங்க மாகப் பெரியவா கால்களில் விழுந்தார் நாராயணஸ்வாமி ஐயர். ஸ்வாமிகள் ஒன்றுமே சொல்லவில்லை. மிராசுதார் தானாகவே எழுந்தார். வாயைப் பொத்திக் கொண்டு நடுக்கத்துடன், ‘‘தப்புதான் பெரியவா! இப்போ நீங்க சொன்ன இதே வார்த்தைகளை நேத்திக்கு அந்த கனபாடிகளைப் பாத்து, ஸ்வாமி சந்நிதியிலே சொன்னது வாஸ்தவம்தான். என்னை மன்னிச்சுடணும் பெரியவா’’ என்று கெஞ்சினார். பெரியவா விடவில்லை.

‘‘இரு… இரு… நீ அந்த ஒரு தப்பை மாத்ரமா பண்ணினே? சொல்றேன் கேளு. எல்லாருக்கும் நீ தட்சிணை கொடுத்தியோல்லியோ… ஒவ்வொரு வைதீகாளுக்கும் எவ்ளவு தட்சிணை கொடுத்தே?’’ என்று கேட்டார். மிராசுதார் மென்று விழுங்கியபடியே, ‘‘தலைக்குப் பத்து ரூவா கொடுத்தேன் பெரியவா’’ என்றார் ஈனஸ்வரத்தில். ஸ்வாமிகள் நிறுத்தவில்லை. ‘‘சரியா சொல்லு! எல்லா வைதீகாளுக்கும் சமமா பத்துப் பத்து ரூவாயா கொடுத்தே! நேக்கு எல்லாம் தெரியும்’’ என்று மடக்கினார்.

மிராசுதார் மௌனமாக நின்றார். ஆனால், ஆசார்யாள் விடவில்லை! ‘‘நேத்திக்கு நீ என்ன பண்ணினேங்கறத நா சொல்றேன் கேட்டுக்கோ… நோக்கு சொல்ல வெக்கமாருக்கு போல. வைதீகாளை எல்லாம் வரிசையா சந்நிதியிலே ஒக்காத்தி தலைக்குப் பத்து ரூவா ஸம்பாவனை பண்ணிண்டே வந்தே. தேப்பெருமாநல்லூர் கனபாடிகள்கிட்டே வந்தபோது, ‘இவர்தான் சரியாவே ருத்ரம் சொல்லலியே… இவருக்கு எதுக்கு மத்தவா மாதிரி பத்து ரூவா கொடுக்கணும்?’னு தீர்மானிச்சு ஏழே ஏழு ரூவா சம்பாவனை பண்ணினே. ஏதோ அவரைப் பழி வாங்கிப்டதா எண்ணம் நோக்கு. கனபாடிகள் எதையாவது லட்சியம் பண்ணாரா பாத்தியா? நீ கொடுத்ததை வாங்கி அப்டியே தலப்பிலே முடிஞ்சுண்டுட்டார். நா சொல்றதெல்லாம் சரிதானே, சொல்லு’’ என்று உஷ்ணமானார் ஆசார்யாள்.

பக்தர்கள் அனைவரும் அப்படியே ஸ்தம்பித்து நின்றிருந்தனர்! ஒருவரும் வாய் திறக்கவில்லை!

‘நேற்று திருவிடைமருதூர் கோயிலில் நடந்த விஷயங்கள் பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?’ என அங்கே குழுமியிருந்த பக்தர்கள் ஆச்சரியப்பட்டனர். மிராசுதார் பெரியவா கால்களில் விழுந்து எழுந்து, ‘‘தப்புத்தான் பெரியவா! ஏதோ அஞ்ஞானத்தினாலே அப்படி நடந்துண்டுட்டேன். இனிமே அப்படி நடந்துக்கவே மாட்டேன்! என்னை நீங்க மன்னிச் சுடுங்கோ…’’ என்று சொல்லி முடிப்பதற்குள், பெரியவா, ‘‘இரு… இரு! இதோட முடிஞ்சுட்டாத்தான் பரவாயில்லையே… ஜப பிராமணாளுக்கெல்லாம் அங்க மகாதானத் தெரு ராமசந்த்ரையர் கிரஹத்துலதானே சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணியிருந்தே?’’ என்று கேள்வி போட்டார்.

‘‘ஆமாம் பெரியவா!’’ – இது மிராசுதார்.

உடனே ஆசார்யாள், ‘‘சாப்பா டெல்லாம் பரமானந்தமா நன்னாத் தான் போட்டே. பந்தியிலே, நெய் ஒழுக ஒழுக நெறய மிந்திரி பருப்பு, திராட்சை எல்லாம் போட்டு சக்கரைப் பொங்கல் பண்ணச் சொல்லி, ஒங் கையாலே நீயே பரிமாறினே… சரியா?’’ என்று கேட்டார். வெலவெலத்துப் போய் விட்டார் மிராசுதார் நாராயண ஸ்வாமி ஐயர்!

மிராசுதார் வாயைப் பொத்தியபடியே, ‘‘ஆமாம் பெரியவா! பந்தியிலே சக்கரைப் பொங்கலை மட்டும் என் கையால நானே பரிமாறினேன்!’’ என்று குழைந்தார்.

ஸ்வாமிகள் விடவில்லை. ‘‘சரி… அப்டி சக்கரைப் பொங்கலை நீ போடறச்சே, பந்தி தர்மத்தோடு பரிமாறினதா ஒம் மனசாட்சி சொல்றதா?’’ என்று கேட்டார் கடுமையாக.

வாய் திறக்கவே இல்லை மிராசு. ஆசார்யாளே பேசினார்: ‘‘நீ சொல்ல வேண்டாம்… நானே சொல்றேன்! நீ சக்கரைப் பொங்கல் போடறச்சே, அது பரம ருசியா இருந்ததாலே வைதீகாள்ளாம் கேட்டுக் கேட்டு வாங்கிச் சாப்டா! நீயும் நெறயப் போட்டே. ஆனா, தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகள் வாயவிட்டு, ‘சக்கரைப் பொங்கல் இன்னும் போடுடாப்பா… ரொம்ப ருசியாருக்கு’னு பல தடவை வாய்விட்டுக் கேட்டும்கூட நீ காதுலே வாங்கிண்டு அவருக்குப் போடாமலேயே போனயா இல்லியா? எத்தன தடவ வாய்விட்டுக் கேட்டார்! போடலியே நீ! பந்தி வஞ்சனை பண்ணிப்டியே… இது தர்மமா? ஒரு மஹா சாதுவ இப்டி அவமானப்படுத்திப்டியே…’’ _ மிகுந்த துக்கத்துடன் மௌனத்தில் ஆழ்ந்து விட்டார் ஸ்வாமிகள்!

மிராசுதார் தலை குனிந்து நின்றார். பக்தர்கள் வாயடைத்து நின்றனர். அனைவருக்கும் ஒரே பிரமிப்பாக இருந்தது. கண்களை மூடி, கால்கள் இரண்டையும் பின்புறமாக மடித்து, நிமிர்ந்து அமர்ந்து கொண்டார் ஆசார்யாள். சாட்சாத் பரமேஸ்வரனே அப்படி அமர்ந்திருப்பது போன்ற ஒரு திருமேனி விலாசம். அசையவில்லை.

பதினைந்து நிமிஷங்கள். மௌனம். பிறகு, கண்களைத் திறந்து, மௌனம் கலைந்தார் ஆசார்யாள். ஒருவரும் வாய் திறக்கவில்லை. ஆசார்யாளே நாராயணஸ்வாமி ஐயரைப் பார்த்து தீர்க்கமாகப் பேச ஆரம்பித்தார்.

‘‘மிராசுதார்வாள்! ஒண்ணு தெரிஞ்சுக்கணும். கனபாடிகளுக்கு இப்போ எண்பத்தோரு வயசாறது. தன்னோட பதினாறாவது வயசிலேருந்து எத்தனயோ சிவ க்ஷேத்ரங்கள்ளே ஸ்ரீருத்ர ஜபம் பண்ணியிருக்கார். ஸ்ரீருத்ரம் எப்பவுமே அவரோட நாடி நரம்புகள்ளேயும், ஸ்வாசத்திலேயும் ஓடிண்டே இருக்கு. அப்பேர்ப்பட்ட மகான் அவர். அவர்ட்ட நீ நடந்துண்ட விதம் மகா பாபமான கார்யம்… மஹா பாபமான கார்யம்!’’ _ மேலே பேச முடியவில்லை பெரியவாளால். கண் மூடி மௌனமாகி விட்டார். சற்றுப் பொறுத்து ஆசார்யாள் தொடர்ந்தார்:

‘‘நீ ‘பந்தி பேதம்’ பண்ணின காரிய மிருக்கே, அது கனபாடிகள் மனச ரொம்பவே பாதிச்சுடுத்து. அவர் என்ன காரியம் செஞ்சார் தெரியுமா நோக்கு? சொல்றேன் கேளு. நேத்திக்கு சாயங்காலம் அவர் நேரா தேப்பெருமாநல்லூர் போகலே. மகாலிங்க ஸ்வாமி கோயிலுக்குப் போனார். ‘அஸ்மேத’ (பெரிய பிராகார) பிரதட்சிணம் மூணு தடவை பண்ணினார். நேரா மகாலிங்க ஸ்வாமிக்கு முன்னாலே போய் நின்னார். கை கூப்பி நின்னுண்டு என்ன பிரார்த்திச்சார் தெரியுமா?’’ மேலே பேச முடியவில்லை பெரியவாளால். சற்று நிதானப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார்:

‘‘கண்ணுலேர்ந்து தாரையா நீர் வழிய, ‘அப்பா ஜோதி மகாலிங்கம்! நா ஒன் னோட பரமபக்தன். பால்யத்லேர்ந்து எத்தனையோ தடவ ஒன் சந்நிதியிலே மஹாந்யாஸ ஸ்ரீருத்ரம் ஜபிச்சிருக்கேன். நீ கேட்ருக்கே. இப்போ நேக்கு எம்ப்ளத்தோரு வயசாறது. மனசுலே பலமிருக்கு. வாக்குலே அந்த பலம் போயிடுத்துப்பா! இன்னிக்கு மத்யானம் சாப்படறச்சே நடந்தது, நோக்குத் தெரியாம இருக்காது. அந்த சக்கரப் பொங்கல் ரொம்ப ரொம்ப ருசியா இருந்துதேனு ‘இன்னும் கொஞ்சம் போடுங்கோ’னு வெக்கத்த விட்டு அந்த மிராசுதார்கிட்டே பல தடவ கேட்டேன். அவர் காதுல விழுந்தும் விழாத மாதிரி நகந்து போயிட்டார். நேக்கு சக்கரப் பொங்கல்னா உசுருங்கறது நோக்குதான் தெரியுமே. சபலப்பட்டுக் கேட்டும் அவர் போடலியேனு அப்போ ரொம்ப தாபப் பட்டேன்.

ஆனா, சாப்டு கையலம்பிண்டு வாசத் திண்ணைக்கு வந்து ஒக்காந்தப்புறம்தான், ‘இப்டியரு ஜிஹ்வா சபலம்’ (பதார்த்தத்தில் ஆசை) இந்த வயசுலே நமக்கு இருக்கலாமானு தோணித்து. அப்பா மகாலிங்கம்… இப்போ அதுக்காகத்தான் நோக்கு முன்னாடி வந்து நிக்கறேன். ஒன்னை மத்யஸ்தமா வெச்சுண்டு இந்த க்ஷணத்லேர்ந்து ஒரு பிரதிக்ஞை பண்ணிக்கறேன். எல்லாரும் காசிக்குப் போனா, புடிச்ச பதார்த்தத்த விடுவா. காசியிலேயும் நீதான்… இங்கயும் நீதான். அதனால ஒனக்கு முன்னாலே, ‘இனிமே என் சரீரத்தை விட்டு ஜீவன் பிரியற வரைக்கும் சக்கர பொங்கலையோ அல்லது வேற எந்தத் தித்திப்பு வஸ்துவையோ தொடவே மாட்டேன்! இது சத்யம்டாப்பா மகாலிங்கம்’னு வைராக்ய பிரமாணம் பண்ணிண்டு, ‘அப்பா ஜோதி மகாலிங்கம்! நா ஒங்கிட்ட உத்தரவு வாங்கிக்கறேன்’னு சொல்லி பன்னிரண்டு சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணினார். கனபாடிகள் கண்ணுலேர்ந்து பொலபொலன்னு கண்ணீர். ஊருக்குப் பொறப்டுட்டார்! இப்போ சொல்லு… நீ பண்ணின காரியம் தர்மமா? மகாலிங்கஸ்வாமி ஒப்புத்துப்பாரா?’’

பெரியவா நிறுத்தினார். அப்போது மதியம் மூணு மணி. ‘‘நேக்கு இன்னிக்கு பி¬க்ஷ வேண்டாம்!’’ என்று சொல்லி விட்டார் ஸ்வாமிகள். அங்கிருந்த ஒருவருமே நகரவில்லை. சாப்பிடவும் போகவில்லை. அமைதி நிலவியது. அனைவரது கண்களிலும் நீர். மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர் பிரமித்து நின்றிருந்தார். அவருக்குப் பேச நா எழவில்லை. பக்தர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘நேற்றைய தினம் திருவிடைமருதூர் க்ஷேத்திரத்தில் நடந்த அத்தனை விஷயங்களையும் உடன் இருந்து நேரில் பார்த்த மாதிரி பெரியவா சொல்றாளே, இது எப்படி?’ என்று அனைவரும் வியந்தனர்.

பெரியவா காலில் அப்படியே விழுந்தார் மிராசுதார். கேவிக் கேவி அழ ஆரம்பித்து விட்டார். அவர் நா தழுதழுத்தது: ‘‘பெரியவா! நா பண்ணது மகா பாவம்! அகம்பாவத்திலே அப்டி பண்ணிப்டேன். என்னை மன்னிச்சுடுங்கோ. இனி, என் ஜன்மாவிலே இப்டி நடந்துக்கவே மாட்டேன். ‘மன்னிச்சுட்டேன்’னு சொல்லணும் பெரியவா!’’ என்று கன்னத்தில் அறைந்து கொண்டார் மிராசுதார்.

பெரியவா காலில் அப்படியே விழுந்தார் மிராசுதார். கேவிக் கேவி அழ ஆரம்பித்து விட்டார். அவர் நா தழுதழுத்தது: ‘‘பெரியவா! நா பண்ணது மகா பாவம்! அகம்பாவத்திலே அப்டி பண்ணிப்டேன். என்னை மன்னிச்சுடுங்கோ. இனி, என் ஜன்மாவிலே இப்டி நடந்துக்கவே மாட்டேன். ‘மன்னிச்சுட்டேன்’னு சொல்லணும் பெரியவா!’’ என்று கன்னத்தில் அறைந்து கொண்டார் மிராசுதார்.

ஆசார்யாள் வாய் திறக்கவில்லை. விடவில்லை மிராசுதார். ‘‘பிரார்த்திக்கி றேன் பெரியவா. நீங்க இந்த மகாலிங்க ஸ்வாமி ருத்ராபிஷேகப் பிரசாதத்தை ஸ்வீகரிச்சுக்கணும்… என்னை மன்னிச்சுடுங்கோ!’’ என்று பிரசாதத் தட்டை நோக்கிக் கைகளைக் காண்பித்தார்.

உடனே ஆசார்யாள், ‘‘இருக்கட்டும்… இருக்கட்டும். நேக்கு அந்த மகாலிங்க ஸ்வாமியே ப்ரசாத அநுக்ரஹம் பண்ணுவார்’’ என்று சொல்லி முடிப்பதற்குள், ‘‘நகருங்கோ… நகருங்கோ’’ என்று ஒரு குரல் கூட்டத்துக்கு வெளியே கேட் டது. எல்லோரும் விலகி வழிவிட்டனர். தலையில் கட்டுக் குடுமி. பளிச்சென்று பஞ்ச கச்ச வேஷ்டி. இடுப்பில் பச்சைப் பட்டு வஸ்திரம். கழுத்தில் பெரிய ருத்ராட்ச மாலை. பட்டுத் துணியில் பத்திரப்படுத்தப்பட்ட பிரசாதத்தை ஒரு பித்தளைத் தட்டில் வைத்துக் கைகளில் பக்தியோடு ஏந்தியபடி சுமார் அறுபத்தைந்து வயது மதிக்கத் தக்க பெரியவர் ஒருவர், பெரியவாளுக்கருகே வந்து சேர்ந்தார். பிரசாதத் தட்டை ஆசார்யாளுக்கு முன்பு பவ்யமாகச் சமர்ப்பித்து விட்டு, ‘‘எம் பேரு மகாலிங்கம். திருவிடமருதூர் மகாலிங்க ஸ்வாமி ஆலய அர்ச்சகர். நேத்திக்கு ஸ்வாமிக்கு ருத்ராபிஷேகம் நடந்தது. ஒரு மிராசுதார் நடத்தினார். இந்தூர்லே எங்க அக்காவ (சகோதரி) கொடுத்துருக்கு. ஆசார்யாளுக்கும் அந்த பிரசாதத்தைக் கொடுத்துட்டு, அவளையும் பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன். நமஸ்காரம் பண்ணிக்கிறேன். பெரியவா அநுக்ரஹிக்கணும்’’ என்று நமஸ்கரிக்கப் போனவரைத் தடுத்தார் ஸ்வாமிகள்.

‘‘நீங்களெல்லாம் சிவதீட்சை வாங்கிண்டவா. நமஸ்காரம் பண்ணப்டாது’’ என்று சொன்ன பெரியவா, அவர் கொண்டு வந்த பிரசாதங்களை ஸ்வீகரித்துக் கொண்டு, சிவாச்சார்யாருக்கு மடத்து மரியாதை பண்ணச் சொன்னார். அதற்குள், சற்றுத் தள்ளி நின்றிருந்த மிராசுதாரைப் பார்த்துவிட்டார் சிவாச்சார்யார். ‘‘பெரியவா! இவர் தான் நேத்திக்கு அங்கே ருத்ராபிஷேகம் பண்ணி வெச்சவர். அவரே இங்கே வந்திருக்காரே!’’ என்று ஆச்சரியத்துடன் கூறிவிட்டு, உத்தரவு பெற்றுக் கொண்டு போயே விட்டார் அந்த மகாலிங்கம் சிவாச்சார்யார்.

ஆசார்யாளை மீண்டும் ஒரு முறை நமஸ்கரித்து எழுந்து, கன்னத்தில் போட்டுக் கொண்ட மிராசுதார் நாராயண ஸ்வாமி ஐயர், ‘‘திரும்பத் திரும்பப் பிரார்த் திக்கறேன் பெரியவா. நா பண்ணினது ரொம்ப பாவ காரியம்தான்! இதுக்கு நீங்கதான் ஒரு பிராயச்சித்தம் சொல்லணும்’’ என்று மன்றாடினார்.

விருட்டென்று ஸ்வாமிகள் எழுந்து விட்டார். ‘‘இதுக்கு பிராயச்சித்தம் நா சொல்ல முடியாது. தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகள்தான் சொல்லணும்’’ என்றார்!

‘‘இந்தப் பாவி பண்ணின காரியத்துக்கு கனபாடிகள் பிராயச்சித்தம் சொல்வாரா பெரியவா?’’ என்று தாபத்தோடு கேட்டார் மிராசுதார்.

உடனே ஸ்வாமிகள் சற்று உரத்த குரலில், ‘‘நோக்கு ‘ப்ராப்தம்’ இருந்தா நிச்சயம் சொல்வார்!’’ என்று கூறிவிட்டு, விடுவிடுவென்று உள்ளே சென்று விட்டார். அதன் பிறகு பெரியவா வெளியே வரவே இல்லை. சில மணி நேரம் காத்திருந்து பார்த்தார் மிராசுதார். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவராகப் புறப்பட்டு பஸ் பிடித்து செங்கல்பட்டு வந்து சேர்ந்தார். ரயிலைப் பிடித்து, அடுத்த நாள் காலை திருவிடைமருதூர் வந்து சேர்ந்தார்.

அங்கே காவிரி ஆற்றுக்குச் சென்று ஸ்நானத்தை முடித்துக்கொண்டு, ஒரு வைராக்கியத்துடன் அருகிலுள்ள தேப்பெருமாநல்லூரை நோக்கி நடையைக் கட்டினார். எப்படியும் வேங்கடேச கன பாடிகளைப் பார்த்து, அவர் காலில் சாஷ் டாங்கமாக விழுந்து, மன்னிப்புக் கேட்டு, அவர் கூறும் ‘பிராயச்சித்த’த்தைப் பூர்த்தி செய்து, பாபவிமோசனம் பெற்றுவிட வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் வேக வேகமாக நடந்தார்.

தேப்பெருமாநல்லூர் அக்ரஹா ரத்தில் நுழைந்தார் மிராசுதார். எதிர்ப்பட்ட ஒருவரிடம் கன பாடிகள் பெயரைச் சொல்லி, அவர் க்ருஹம் எங்கே என விசாரித் தார். உடனே அவர், வெளியே பலர் கூட்டமாக நின்றிருந்த ஒரு வீட்டைச் சுட்டிக் காட்டி, ‘‘துக்கம் விஜாரிக்க வந்திருக்கேளா? அதான் வேங்கடேச கனபாடிகள் வீடு. இன்னிக்கு விடியக் காலம் தான் கனபாடிகள் திடீர்னு காலமா யிட்டார். ‘அநாயாஸேன’ மரணம் (சிரமங்கள் இல்லாத சுலப மரணம்). போய்ப் பார்த்துட்டு வாங்கோ’’ என்று சொல்லிப் புறப்பட்டார்.

இதைக் கேட்டவுடன் பிரமித்து நின்று விட்டார், நாராயணஸ்வாமி ஐயர். யாரோ அவர் தலையில் சம்மட்டி கொண்டு தாக்கியது போலிருந்தது. நேற்று மடத்தில் ஆசார்யாள் உரத்த குரலில் ஆணித்தரமாகச் சொன்ன வாக்கியம் மீண்டும் அவர் காதுகளில் ஒலிப்பது போலிருந்தது: ‘நோக்கு ப்ராப்தம் இருந்தா நிச்சயம் சொல்வார்!’

‘பிராப்தம் இல்லேங்கறது நேத்திக்கே பெரியவாளுக்கு தெரிஞ்சிருக்கு’ என்பது மிராசுதாருக்கு இப்போது புரிந்தது. கனபாடி கள் வீட்டுக்குச் சென்றார் மிராசுதார். மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, கனபாடிகளின் பூத உடலுக்கு நமஸ்காரம் பண்ணினார். புறப்பட்டார்.

அதன் பிறகு, பல விதமான துன்பங்களுக்கு ஆளான மிராசுதார், ஓரிரு வருஷங்களுக்கு உள்ளாகவே தன் சொத்துகளையெல்லாம் இழக்க நேரிட்டது. வடக்கே சென்று பல சிவாலயங்களிலே திருமடப்பள்ளி கைங் கரியம் பண்ணிவிட்டு, காசி க்ஷேத்ரத்திலே காலகதி அடைந்தார்.

உத்தரகோச மங்கை புனித தலம் பற்றிய 60 சிறப்பு தகவல்கள்

இராமநாதபுரம் மாவட்டதில் அமைந்துள்ள உத்தரகோச மங்கை புனித தலம் பற்றிய 60 சிறப்பு தகவல்கள் :-

1. உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது.

2. உத்தரகோச மங்கை கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

3. உத்தரகோச மங்கையே சிவபெருமானின் சொந்த ஊர் என்று அழைக்கப்படுகிறது.

4. இத்தலத்துக்கு உமா மகேசுவரர் சன்னதி முன்பு நின்று வழிபாடுகள் செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும்.

5. திருவிளையாடல் புராணத்தில் வரும் ‘வலை வீசி மீன் பிடித்த படலம்‘ இத்தலத்தில்தான் நடந்தது.

6. உத்தரகோச மங்கை கோவிலில் முக்கிய திருப்பணிகளை பாண்டிய மன்னர்களே செய்தனர். பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில்

சிறந்து இருந்த போது, அவர்களது. தலைநகராக சிறிது காலத்துக்கு உத்திரகோசமங்கை இருந்தது.

7. ஆதி காலத்தில் இந்த தலம் சிவபுரம்,‘தெட்சிண கைலாயம்‘, சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப் பள்ளி, பத்ரிகா ஷேத்திரம்,

பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது.

8. மங்கள நாதர், மங்கள நாயகி இருவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் முழுமையான பலன்கிடைக்கும்.

9. இத்தலத்தில் வழிபாடுகள் செய்பவர்களுக்கு இம்மையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மறுமையில் முக்தி கிடைக்கும்.

10. மங்கள நாதர் தலத்தில் திருமணம் செய்தால் நிறைய மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே முகூர்த்த நாட்களில் நிறைய

திருமணங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.

11. மூலவருக்கு மங்களநாதர் என்ற பெயர் தவிர மங்களேசுவரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர் என்ற பெயர்களும் உண்டு.

12. இறைவிக்கு மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி ஆகிய பெயர்கள் உள்ளன.

13. இறைவி மங்களேசுவரி பெயரில் வ.த. சுப்பிரமணியப் பிள்ளை என்பவர் பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார். 1901-ம் ஆண்டு வெளியான

அந்த நூல் 1956-ம் ஆண்டு மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டது.

14. இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே இத்தலம் ராமாயண

காலத்துக்கும் முன்பே தோன்றியதற்கான ஆதாரமாக இந்த கல்வெட்டு கருதப்படுகிறது.

15. இத்தலத்தில் வேதவியாசர், காக புஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணிகிரிநாதர் ஆகியோர்

வழிபட்டு ஈசன் அருள் பேறு பெற்றுள்ளனர்.

16. இத்தலத்து பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாக உள்ளார்.

17. கோவில் வாசலில் விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் இடம் மாறியுள்ளனர்.

18. இத்தலத்து முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் அளித்தான்

என்று, இத்தலமான்மியமான ‘ஆதி சிதம்பர மகாத்மியம்’ கூறுகிறது.

19. ராமேஸ்வரத்தில் இருந்து 83 கிலோமீட்டர் தொலைவிலும், ராமநாதபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும் இவ்வாலயம் இருக்கிறது.

20. சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் “இலவந்திகைப் பள்ளி” என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்கிறார்கள். மேற்குறித்த

கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது.

21. மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம்.

22. இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று இப்பெருமான் போற்றப்படுகிறார்.

23. இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம்.

24. சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்துகொண்டு இத்தலத்திலேயே

அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, பின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

25. ஆதிசைவர்கள் வசமிருந்த இத்தலம் பின்னரே ராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதுமுதல் இன்றுவரை ராமநாதபுர

சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்து வருகிறது இத்தலம்.

26. உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன

பந்தை கொண்டுள்ளது. நாம் கையை நுழைத்துக்கூட பந்தை நகர்த்த முடியும்.

27. இத்தலத்து கோவில் குளத்தில் வாழும் மீன்கள் நல்ல நீரில் வாழும் மீன்கள் இல்லை. கடல்நீரில் வாழும் மீன்களாகும்.

28. பிரதோஷத்தன்று இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர்.இந்த கோவிலில்சிவனுக்கு அம்பாளுக்கு தாழம்பூ மாலை

கட்டிப்போட்டால் அனைத்து தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம். இதனால் திருமணம் உடனே கைகூடும்.

29. இங்கு ஆதிகாலத்து வராகி கோவில் உள்ளது இங்கு ஒவ்வொரு வெள்ளி,செவ்வாய்.ஞாயிறு தினங்களில் ராகுகாலத்தில் பூஜை

தொடர்ந்து செய்தால் தீராத பிரச்னைகள்,திருமண்த்தடை போன்றவை விலகுகின்றன.

30.ராமேஸ்வரம் வருபவர்கள் இந்த கோவிலுக்கு செல்லலாம்.

31. டெல்லியை தலைநகராகக் கொண்டு 1300-ம் ஆண்டு ஆட்சி செய்து வந்த அலாவுதீன் கில்ஜி, உத்தரகோச மங்கையில் மரகதகல்

நடராஜர் சிலை இருப்பதை அறிந்து அதை கொள்ளையடிக்க முயன்றான். மங்களநாதர் அருளால் அவன் முயற்சிக்கு வெற்றிகிடைக்கவில்லை.

32. இத்தலத்தில் தினமும் முதல் - அமைச்சரின் அன்னத்தானத்திட்டம் நடைபெறுகிறது. ரூ. 700 நன்கொடை வழங்கினால் 50 பேருக்குஅன்னதானம் கொடுக்கலாம்.

33. காகபுஜண்ட முனிவருக்கு கவுதம முனிவரால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்தான் நீங்கியது.

34. சிவனடியார்கள் 60 ஆயிரம் பேர் இத்தலத்தில் தான் ஞான உபதேசம் பெற்றனர்.

35. இத்தலத்தில் உள்ள மங்களநாதர் சன்னதி, மங்களேசுவரி சன்னதி, மரகதகல் நடராஜர் சன்னதி சகஸ்ரலிங்க சன்னதி நான்கும்

தனிதனி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரத்துடன் தனித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

36. நடராஜர் மரகத கல்லில் இருப்பதால் இத்தலத்தை சிலர் ரத்தின சபை என்கிறார்கள். ஆனால் உலகின் முதல் கோவில் என்பதால்

இது எந்த சபைக்கும் உட்படாதது என்றும் சொல்கிறார்கள்.

37. காரைக்கால் அம்மையாரும் இத்தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டு சென்றுள்ளார்.

38. உத்தரகோசமங்கை கோவிலின் கட்டிடக்கலை திராவிட கட்டிடக்கலையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்.

39. ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், கிருத்திகை, சதுர்த்தி நாட்களில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

40. சித்திரை மாதம் திருக்கல்யாண வைபவம் வைகாசி மாதம் வசந்த உற்சவம், ஆனி மாதம் பதுநாள் சிவ உற்சவம், ஐப்பதி மாதம்

அன்னாபிஷேகம், மார்கழி மாதம் திருவாதிரை விழா மாசி மாதம் சிவராத்திரி ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள்ஆகும்.

41. தினமும் இத்தலத்தில் காலை 5.30 மணிக்கு உஷத் காலம், 8 மணிக்கு கால சாந்தி, 10 மணிக்கு உச்சிக் காலம், மாலை 5 மணிக்கு

சாயரட்சை, இரவு 7 மணிக்கு இரண்டாம் காலம், இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜைகள் நடத்தப்படுகிறது.

42. மங்களநாதருக்கு தினமும் காலை 6 மணிக்கு, மதியம் 12.30 மணிக்கு, மாலை 5.30 மணிக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.

43. இத்தலத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் சாமி தரிசனம்செய்யலாம்.

44. மரகத கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.

45. இத்தலத்தில் மொத்தம் 11 விநாயகர்கள் உள்ளனர்.

46. மங்களநாதர் சன்னதியை சுற்றி வரும் போது இடது பக்க மூலையில் மகாலட்சுமியை வழிபடலாம்.

47. இத்தலத்தில் உள்ள ராஜகோபுரத்தில் சர்பேஸ்வரர் சிலை உள்ளது.

48. உலகத்தில் முதலில் தோன்றிய கோவில் என்ற சிறப்பு உத்தரகோசமங்கை தலத்துக்கு உண்டு. இந்த ஆலயம் சிதம்பரம் கோவிலுக்கு முன்பே தோன்றியது.

49. நடராஜர் இங்கு அறையில் ஆடிய பின்னர்தான் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடினார்.

50. இது அம்பிகைக்கு பிரணவப்பொருள் உபதேசித்த இடம்.

51. இங்குள்ள மங்களநாதர் லிங்க வடிவில் உள்ளார்.

52. தலவிருட்சமான இலந்தமரம் மிகமிகத் தொன்மையானதும் இன்று வரை உயிருடன் உள்ளதும் பல அருள் தலைமுறைகளையும்

முனிவர்கள் தரிசித்த தல விருட்சம் ஆகும். இந்த இலந்த மரம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது.

53. வேதவியாசரும், பாராசரும் காகபுஜண்டரிஜி மிருகண்டு முனிவர்கள் பூஜித்த தலம்.

54. உலகில் உள்ள 1087 சிவாலயங்களிலும் இருக்கும் அருட் சக்திகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் சகஸ்ரலிங்கம் இங்குள்ளது.

55. ஆண்டுக்கு இரண்டு திருவிழா இங்கு நடத்தப்படுகிறது. ஒன்று சித்திரைத் திருவிழா, இன்னொன்று மார்கழித் திருவாதிரைத் திருவிழா

56. இத்திருத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளது.

57. சிவபெருமானால் பரத நாட்டிய கலையை உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.

58. ஈசன் ஈஸ்வரி பிறந்த ஊரான உத்திரகோச மங்கையில் ஒரு முறை பக்தர்கள் வந்து மிதித்தால் சொர்க்கம் செல்லுவது நிச்சயாமாகும்.
59. உத்தர கோசமங்கை திருத்தலமானது ஸ்ரீராமருக்கு ஈசன் சிவலிங்கம் வழங்கி சேது சமுத்திரத்தில் பாலம் போட உத்தரவு வழங்கிய இடமாகும்.
60. இத்தலத்தில் மாணிக்கவாசகர் பாடிய பொன்னூஞ்சல் பாடலை குழந்தைகளை தாலாட்டும்போது பாடினால், குழந்தைகள்
உயரமாகவும், உன்னத மாகவும் வாழ்வார்கள் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.

எது தானம் ? எது தர்மம் ?

எது தானம் ? எது தர்மம் ?
~~~~~~~~~~~~~~~~~~~
மகாபாரதத்தில் உடலைப் பிரிந்த கர்ணனின் உயிரானது தன் தந்தை சூரிய தேவனுடன் பரம்பொருள் ஈசனை வணங்கி மகிழ்ந்து சுவர்க்க பேறு பெற்றது.

சூரிய தேவனுக்கோ மனதில் மிகப் பெரிய ஐயம் கலந்த வேதனை. எவரிடம் கேட்பது.? எவர் தெளிவாகக் கூறுவார்கள் ? குழப்பத்திலும் கோபத்திலும் சூரியனின் வெம்மை அதிகரித்தது.

இதை உணர்ந்த ஈசன், அவர் முன் எழுந்தருளினார்.

சூரியனே,
என்ன தடுமாற்றம் உன் மனதில் ?
கேட்டது ஈசன்.

பரம்பொருளே..
பலவிதமான தான தருமங்கள் செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை போரில் கொன்றது விதி என்று ஏற்றுக் கொண்டேன்.
ஆனால்,
எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாகத் தந்தபடியால் அவன் இன்னும் மிகப் பெரிய புண்ணியவான் ஆகிவிடுகிறானே. பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது?
இது அநீதி அல்லவா? என
கேட்டார் சூரியத் தேவன்.

இறை சிரித்தது.
சூரியனே...
நிறைய மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே உன்னை இந்தக் கேள்வியை எழுப்ப வைத்ததுள்ளது, சொல்கிறேன் கேள்...

தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ, அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம். புண்ணியக் கணக்கில் சேராது. ஏனெனில்.. இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட....

ஆனால்,  தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.

கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர  தர்மமாகப் பெறவில்லை.
எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான்.
அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. புரிந்ததா ?

கேட்ட ஈசனை வணங்கிய சூரியத் தேவன்.
புரிந்தது இறைவா !
தானமும்
தர்மமும்
பாவமும்
புண்ணியமும்
எல்லாமும் நீயே
என்பதும் புரிந்தது என்றார்.

கேட்டு கொடுப்பது தானம் !
கேட்காமல் அளிப்பது தர்மம்!

கிழக்கு நோக்கு ஜபம் செய்தால் வசியம்

கிழக்கு நோக்கு ஜபம் செய்தால் வசியம்
தென்கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் நோய் தீரும்
தெற்கு நோக்கி ஜபம் செய்தால் பெரும் தீமை
தென்மேற்கு நோக்கு ஜபம் செய்தால் வருமை
மேற்கு நோக்கு ஜபம் செய்தால் பொருட்செலவு
வடமேற்கு நோக்கி ஜபம் செய்தால் தீயசக்திகளை ஓட்டுதல்
வடக்கு நோக்கி ஜபம் செய்தால் தங்கம் கல்வி கிடைக்கும்
வடகிழ்க்கு நோக்கி ஜபம் செய்தால் முக்தி கிடைக்கும்

சித்தர்களின் மூல மந்திரம்.


சித்தர்களின் மூல மந்திரம்.

நந்தீச மூல மந்திரம் …”ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி!”

அகத்தியர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!”
திருமூலர் மூல மந்த்திரம்…
“ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!”
போகர் மூல மந்திரம்…
“ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!”
கோரக்கர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!”
தேரையர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!”
சுந்தரானந்தர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!”
புலிப்பாணி மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!”
பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!”
காக புசண்டர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி!”
இடைக்காடர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!”
சட்டைமுனி மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!”
அகப்பேய் சித்தர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி!”
கொங்கணவர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!”
சிவவாக்கியர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!”
உரோமரிஷி மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!”
குதம்பை சித்தர் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!”
கருவூரார் மூல மந்திரம்…
“ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!”