youtube

21 November 2019

1சூரிய ஹோரை: உ

1சூரிய ஹோரை: உத்தியோகம், வியாபாரம் செய்ய ஒருவருடைய தயவு பெற மேல் அதிகாரிகளைக் காண்பது/சந்திப்பது, உயில் சாசனம் ஆகியவை செய்வதற்கு நலம் உகந்ததாகும்.


2சந்திர ஹோரை: பெண்களைப் பற்றிப் பேசுவது வியாபாரம் கேள்விகள் கேட்பது பிரயாணம், கப்பலில் விமானத்தில் பயணம் செய்ய ஒருவரைக் காண்பது மிகவும் நலம். குறிப்பு: தேய்பிறைச் சந்திரன் உகந்ததல்ல.
.
3செவ்வாய்/அங்காரகன் ஹோரை: உள்ளக் கருத்துக்களை மறைமுகமாக வைத்தல் யோசிக்காமல் வெளியிடுவது, கெடுதல் விளைவிக்கும். குறிப்பு; இக்காலத்தை சகலவித காரியங்களுக்கும் தவிர்ப்பது மிகவும் நலம் பயக்கும்
.
4புதன் ஹோரை: தந்திகள்/அவசரச் செய்திகள் அனுப்புவது, வக்கீல்களைப் பார்க்கவும், அனைத்து எழுத்து வேலைகளுக்கு, தேர்வு எழுதவும், ஜோதிட சாஸ்திர ஆராய்ச்சி செய்யவும், அம்மான்
வர்க்கத்தாரைப் பற்றிப் பேச நலம் பயக்கும்.

5சுக்கிர ஹோரை: எல்லாவித/அனைத்துச் சுப வேலைகளுக்கும்/ சுப காரியங்கள் நடத்தவும், பெண்களைப் பற்றிப் பேசவும், கலை நிகழ்ச்சி, வாகனங்கள் வாங்க, மருந்து சாப்பிடுவதற்கு, களத்ர
வர்க்கத்தாரோடு பேசுவதற்கு பிறர் தயவைப் பெறுவதற்கு, விருந்துன்பதற்கு, கடன் வசூல் செய்வதற்கு மிகவும் உகந்ததாகும்.

6குருஹோரை: அனைத்துக் காரியத்திற்கும் நன்மைபயக்கும். செல்வந்தரைக் காண, அனைத்துத்தரப்பட்ட சாமான்களை வாங்குவது உத்தியோகங்கள் பணவிஷய விவரங்களைத் தொடங்க ஆடை ஆபரணங்களை வாங்க சேர்க்க காரியங்கள் தடையின்றி நடைபெற கடன்களைப் பெறுவது ஆகமொத்தத்தில் அமைத்துக் காரியங்களைச் செயல்படுத்த நலம் உகந்ததாகும்.

7சனிஹோரை: இந்த ஹோரை மிகவும் கொடியதாகும். இருப்பினும் நிலங்களைப் பார்க்க/வாங்க, அவை சம்பந்தப்பட்ட சொத்துக்களைப் பற்றி நடவடிக்கை எடுக்க தோப்பு துறைவுகளைப் பற்றி பேசவும் நலம் உகந்ததாகும்.

அசுர சுக்கிரனின் அற்புதங்கள்; பொதுவாக ஒரு மனிதர்க்கு அவரது அன்பான மனைவியின் மூலமாக, நியாயமாமக் கிடைக்கும் சுகபோகங்கள் அனைத்தும் நல்கி, பலவித நன்மைகளைச் செய்பவர், அசுர
சுக்கிரன் ஆகவே தான் இவருக்கு களத்ரகாரகன் என்ற சிறப்பும் இவர்களுக்கு உண்டு. உலகில் எவ்வளவு பெரிய முரடர்கள் அரக்க குணமுடைய சுரப்புலிகளாகவிருந்தாலும், தங்களுடைய வசீகரத்தாலும், கவர்ச்சி மிக்க நளினமான பேச்சு சாதுரியத்தாலும், தங்கள் வசப்படுத்தியும், காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் திறமை சக்தி ஆகியவை, சுக்கிர பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்ட ஜாதகர்கள் அடையப்பெறுவர் என்பது ஜோதிட சாஸ்திர விதியாகும்.

No comments: