youtube

16 August 2012

வசியம். தேவவசியம்'' நாக மல்லி என்கின்ற செடியைப் பிடுங்க மந்திரத்தை சொல்லப் பாடுகிறேன் கேள் "ஜெய ஜெய ஓம் கிலியும் பகவதா" என்று மந்திரம் ஜெபித்து பிடுங்கிவந்து நிழலில் காயவைத்துப் பொடிசெய்து துணியில் வைத்து உருட்டி திரியாக்கி ஒரு விளக்கில் காராம் பசுவின் நெய் விட்டு முன் செய்த திரியை அதில் போட்டு எரித்து அந்த மையை எடுத்து திலகமாக நெற்றியில் இட்டால் தேவர்கள் எல்லாம் வசியமாவார்கள் என்கிறார் கருவூரார் பலதிரட்டு என்ற நூலில் மிருகவசியம் வெண் குன்றி மூலிகை வேர் எடுக்க, "வம் வம் வசி வசி மிருகவசீகரி ஓம்" என்கின்ற மந்திரத்தை சொல்லி, வேரைப் பிடுங்கி எடுத்து வாயில் போட்டுக் கொண்டு எந்த மிருகத்தை அழைக்கிறோமோ அது வசியமாகும் என்கிறார் கருவூரார் பலதிரட்டு என்ற நூலில் லோகவசியம் கோணான வானை எனும் (ஆனை வணங்கி) மூலிகையின் சாபம் நீக்குவதற்கு மந்திரம் "றீங்ரீ" என்று லட்முரு ஓதி எடுத்து உன்னுடன் வைத்துக் கொண்டால் உன்னை எதிர்த்து வரும் கோடிப் படையானாலும் தலை வணங்கும் மூலிகை தானே, என்கிறார் அகத்தியர் தனது மாந்திரீக காவியத்தில். இன்னுமொரு முறை > விஷ்ணு கறந்தை செடிக்கு சாபம் நீக்குவதற்கு மந்திரம் எதுவென்றால், என் மாணவர்கள் அறிந்து கொள்வதற்காய் சொல்கிறேன். "சிம் சிம் சிம்" என்று ஒருலட்சம் முறை செபித்து பிடுங்கி வைத்துக் கொண்டால், இந்த உலகத்தில் சித்தனென்ற பெயரெடுக்கலாம். என்கிறார் அகத்தியர் தனது மாந்திரீக காவியத்தில். லோகவசியம் பூனை வணங்கி என்கின்ற செடிக்கு சாபம் நீக்குவதற்கு மந்திரம் எதுவென்றால் "தூ தூ " என்று ஓத சாபம் நிவர்த்தியாகும். சகல பலம் பொருந்திய மன்னரையே மயக்கக் கூடிய இந்தத் தழைக்கு ஒருலட்சம் தடவை "தூ தூ " என்று ஓதி உருக்கொடுத்து பிடுங்கி வைத்துக் கொண்டால் இந்த நாடு எல்லாமே உனக்கு வசியமாகும். என்கிறார் அகத்தியர் தனது மாந்திரீக காவியத்தில்

No comments: