youtube

4 September 2012

பஞ்சமி தீபவழிபாடு (பஞ்சமி திதியன்று)

பஞ்சமி தீபவழிபாடு (பஞ்சமி திதியன்று) பஞ்சமி திதி ஓர் மகத்தான சக்தி. பஞ்சமி சக்தி தேவியை வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் உண்டாகும். அமாவாசை முடிந்த ஐந்தாம் நாள் மற்றும் பவுர்ணமி முடிந்த ஐந்தாம் நாள் வருவது பஞ்சமி திதி. பஞ்ச என்றால் ஐந்து எனப்பொருள். திதி என்பது சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கோள்களுக்கிடையே உள்ள இடைவெளி தூரத்தின் ஆதிக்கம் ஆகும். பஞ்சமி திதி அன்று ஐந்து எண்ணெய் கலந்து குத்துவிளக்கின் ஐந்து முகத்தினையும் ஏற்றி வழிபட வேண்டும். வேண்டுதல்களை மனதிற்குள் நினைத்துக் கொண்டே ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி கற்கண்டு அல்லது பழம் நைவேத்தியம் செய்ய வேண்டும். ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ.

No comments: