youtube

11 December 2012

பிரமிடின் ஆற்றல்

"பிரமிடின் ஆற்றல்"

அடிப்பாகம் சதுரமாகவும், அதன் நான்கு பக்கங்களை, நான்கு சமமான, இருசமபக்க முக்கோணங்களின் அடிப்பக்கமாகவும் கொண்டு வடிவமைக்கப்பட்டு ஒரு கன வடிவமே-கூம்பு கோபுரமே, பிரமிடாகும். நான்கு முகோணங்களின் உச்சிப்புள்ளிகள் ஒன்று சேரும் புள்ளி பிரமிடின் உச்சிப்புள்ளியாகும்.
இவ்வாறாக வடிவமைக்கப்பட்ட வடிவ கணித கனவடிவமான பிரமிட், பிரபஞ்ச சக்தியை ஒன்றுதிரட்டி சேமிக்கும் தன்மையுடையது என்ற உண்மையை, பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னரே, அக்கால எகிப்திய அறிஞர்கள் அறிந்திருந்தனர். எனவே பிரமிடை வடிவமைத்து, பயன்படுத்தினர். அண்டத்தில் உள்ள சக்தியை ஈர்த்து தன்னுள் தக்க வைக்கும் ஒன்றுதான் பிரமிடாகும். பிரபஞ்ச சக்தியின் வீச்சும், புவி ஈர்ப்பு விசையும் சேர்ந்த கலவையால் பெறப்படும் ஆற்றல் தான் பிரமிடின் ஆற்றலாகும்.
விழிப்புணர்விடன் நிகழும் அகவுடல் பயணத்தில் பெறப்படும் அறிவின் துணைகொண்டு அக்கால அறிஞர்கள் "கீஜாவில்" பெரிய பிரமிடை கட்டினார்கள். இது நம்மை மிக உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் சாதனமாக அமைக்கப்பட்ட கருவியாகும்.

பிரமிட் தியானம்
பிரமிடின் கீழ் அல்லது பிரமிடுக்குள் அமர்ந்து செய்யும் தியானம் 'பிரமிட் தியான'மாகும். பிரமிடினுள் அமர்ந்து செய்யும் தியானத்தில் சாந்தமான மனநிலையிலிருந்து, மிக உன்னதமான நன்னிலை உணர்வைப் பெறும் அனுபவத் திறனையும் பலர் பெற்றுள்ளனர்.
பிரமிடினுள் அமர்ந்து தியானம் செய்யும் பொழுது, பிரமிட் இல்லாமல் செய்யும் தியானத்தில் பெறும் ஆற்றலைவிட மும்மடங்கு ஆற்றலைப் பெறுகின்றோம்.
பிரமிட் தியானத்தில் தேவையற்ற உணர்ச்சிகளும் எண்ணங்களும் நீங்கி, உடல் முழுவதும் ஒரு ஒய்வு நிலையை அடைந்து, மனம் ஒருநிலைப்பட்டு உள்நோக்கி பயணம் செய்யும் உன்னதமான உணர்வு நிலையைத் தருவதாகப் பலர் கூறுகின்றனர்.
தியானத்தின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு மிக அதிகமன ஆற்றலுள்ள சூழ்நிலையை பிரமிட் உருவாக்குகின்றது. மன அழுத்தம், மனச்சோர்வு இவற்றை நீக்க, பிரமிட் உதவுகின்றது.
பிரமிடினுள் செய்யப்பட்ட பல சோதனைகளிலிருந்து
கீழ்கண்ட உண்மைகள் தெரியவருகின்றன.

பதப்படுத்தி காத்தல்
சாதரணமாக கெட்டுப்போகும் பழம், பால் போன்றவை பிரமிடின் உள்ளே கெட்டுப்போகாமல் இருக்கின்றன். காபி, ஒயின், பழச்சாறு போன்றவற்றின் ருசி அதிகமாகின்றது. பிளேடு, கத்தி போன்றவற்றின் கூர்மை மழுங்காமல் இருக்கின்றன. துர்நாற்றத்தை நீக்கி, அறையின் தூய்மையைக் காக்கின்றது பிரமிட்.

சிகிச்சை அளித்தல்
காயங்கள், கட்டிகள், சிராய்ப்புகள் முதலியான விரைவில் குணமடைகின்றன. உடல் பருமனைக் குறைத்து, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றது. ஆஸ்துமா, பல்வலி, தலைவலி, சளித்தொந்திரவு, இரத்த அழுத்தம், மூட்டுவலி, இதயத்துடிப்பு, தூக்கமின்மை போன்றவற்றை குணப்படுத்துகின்றது. கண் சம்பந்தப்பட்ட நோய். ஜீரணக்கோளாறு, தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் இவைகளை குணப்படுத்தி இளமையை அளிக்கின்றது. பிரமிட் சக்தி!

அகவுடல் பயண அனுபவங்கள்
பிரமிடினுள் தியானம் செய்யும் பொழுது அகவுடல் (சூட்சும சரீரம்) பிரயாணம் மிக எளிதாக நிகழ்கின்றது. பிரமிட் தியானத்தினால் கனவுகள் மிகத் தெளிவாக நினைவில் இருப்பதால் அன்றாட வாழ்வின் அர்த்ததத்தை நன்கு புரிந்துகொள்ள இவை உதவுகின்றன.

பிரமிட் செய்யும் முறை
எந்தப் பொருளைக்கொண்டும் பிரமிட் செய்யலாம். ஒரு பிரமிடின் உயரம் 1 அடி எனில் அதன் அடிப்பக்கத்தின் நீளம் 1.5708 அடியாகவும், முக்கோணத்தின் இருசம பக்கத்தின் நீளம் 1.4945 அடி நீளமாகவும் இருக்கவேண்டும். இங்கு உயரம் என்பது பிரமிடின் உச்சிப்புள்ளியிலிருந்து அடிப்பாகம் வரை உள்ள உயரமாகும்.
ஒவ்வொரு முக்கோணத்தின் இருசம பக்கங்களின் ஒரு பக்கம் அடிப் பக்கத்துடன் உண்டாக்கும் கோணம் 51டிகிரி, 52 நிமிடமாகும். இப்பிரமிட் பெரிய எகிப்திய "கீஜா" பிரமிடின் சிறிய வடிவமாகும். பிரமிடை வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்குத் திசைகளோடு இணைந்திருக்குமாறு, பொருந்துமாறு, நிலை நிறுத்த வேண்டும்.

பிரமிடின் அளவுகள் (அடியில்)
அடிப்பக்கம் உயரம் முக்கோணத்தின் பக்கம்
    4                 2.548                    3.806
    6                 3.822                    5.709
   10                6.370                    9.516
   15                9.555                   14.24
   20               12.740                 19.032

No comments: