youtube

11 December 2012

சூரிய பகவான்

சூரிய பகவான்



(செம்பருத்திப் பூவின் நிறம் உடையவன். கச்யபரின் புதல்வன், மிகவும் பிரகாசம் உடையவன், இருட்டின் பகைவன் எல்லாப் பாவங்களையும் அளிப்பவன், அப்பகலவனைப் பணிகிறேன்.)
பிரமன் – விஷ்ணு-சிவன் என்ற மும்மூர்த்திகளின் பிரதிநிதியாகவும், கண்ணாரக் காணக் கொடிய ஏக மூர்த்தியாகவும் விளங்குபவன் சூரியன்.
ஒருவனாக எப்போதும் சஞ்சரிப்பவன் எவன்? என்ற கேள்விக்கு யட்சப்பிரச்சன்த்தில் விடை தரப்படுகிறது. அவன் சூரியனே என்று.
கதிரவன் நிலைபெறும் இடம் எது? என்பது மற்றொரு கேள்வி. அதற்கு விடை- சத்யம் எனும் பிரமாதம் ரூபத்தில் கதிரவன் நிலைபெறுவான் என்பது.
ஆன்மான்வைப் பிரதிபலிப்பவன் சூரியன், ஜோதிட சாஸ்திரத்தின்படி நவக்கிரகங்களில் சூரியனே அரசன். ஒருவருக்கு ஆத்ம பலம் அமைய வேண்டுமானால் சூரிய பலம் ஜாதகத்தில் அமையவேண்டும்.
ஆதித்ய ஹிருதய மந்திரத்தால் இராமன், இராவணனை வெல்லும் ஆற்றல் பெற்றான் என்பது இராமாயணத்தின் கூற்று.
வேத மந்திரங்களின் தலை சிறந்த மந்திரம், காயத்ரி, காயத்திரிக்கு உரியவன் கதிரவன்
சூரிய நமஸ்காரம் என்று ஒரு விசேட வழிபாடு முறை உண்டு. இதைச் செய்வதன் மூலம் சரீர பலமும் ஆன்மீக பலமும் அடைய முடியும் என்பது அனுபவம் கண்ட உண்மை.
ஜனன லக்னம் என்பது ஜாதகத்தில் முக்கியமான முதல்பாவம் அல்லவா? இந்த பாவத்திற்குக்காரகன் சூரியன், சுயநிலை, சுயஉயர்வு, செல்வாக்கு, கௌரவம், ஆற்றல், வீரம், பராக்ரமாமா, சரீர சுகம், நன்னடத்தை, நேத்திரம், உஷ்ணம், ஒழி அரசாங்க ஆதரவு முதலியவற்றின் காரகன் சூரியன்.
சூரியனே பிதுர்காரகன் என்பதை நாம் அறிவோம்.
சூரியனது குணம்சாத்வீக குணம் தாமிர உலோகத்திற்கு உரியவன். இருண்ட சிவப்பு அவனது நிறம். உடல் எலும்புக்கு உரியவன் கதிரோன் உடல்கார்ப்புச் சுவைக்குச் சூரியனது நிலையே உரைகல்.
கீழ்த்திசை கதிரவன் திக்கு ஆகும். சமஸ்கிருத மொழியில் திரந்த அறிவு சூரிய பலத்தால் உண்டாகும். இந்தச் சூரியன் ஒரு ஜாதகத்தில் பலம் பெற்றிருந்தால் ராஜரீக வாழ்வு உண்டாகும். க்ஷத்திரிய இனத்தைச் சேர்ந்தவன் சூரியன் என்பது ஜோதிடசாஸ்திர முடிவு.
சாம, தான, பேத, தண்ட உபாயங்களில் தண்ட உபாயம் சூரியனைச் சார்ந்தது. அக்னியை அதிதேவதையாகக் கொண்டவன் ஆதவன்.
ஆண்-பெண்-அலி என முப்பிரிவில் ஆண் கிரகம் ஆவான் ‘ஆதித்தன். ஓர் ஆண்மகனது ஜாதகத்தில் சுரியபலம் ஒங்கியிருந்தால் ஆண்மை என்னும் ஆற்றலில் அவன் சிறந்து விளங்கத் தடையிராது. ஒரு பெண்மணியின் ஜாதகத்தில் சூரிய பலம் சிறப்பாக இருந்தால் ஆக்ரஷன சக்தி ஏற்படும். சிறந்த கற்புடையவளாகத் திகழ்வாள்.
சூரியனது சொந்த வீடு சிம்மம், உச்ச வீடு மேஷம், நீச வீடு துலாம், ரிஷபம், மகரம், கும்பம் மூன்றும் பகை வீடுகள்.
சூரியனுக்குச் சந்திரன், செவ்வாய், குறு மூவரும் நண்பர்கள் ஜாதகத்தில் தான் இருக்குமிடத்திலிருந்து 7-ம் இடத்தை முழுப்பார்வையாகப் பார்க்கும் ஆற்றல் கதிரவனுக்குண்டு.
கிருத்திகை, உத்திரம், உத்திராடம் என்று மூன்று நக்ஷத்திரங்களுக்கும் நாயகன் சூரியன்.
பாபக் கிரகங்களை ஒருவனாக இடம் பெற்றிருந்தாலும் இந்த சூரியனுக்கு உன்னதமான ஆற்றலும் பொறுப்பும் உண்டு என்பது நிச்சயம்.
தலைமை ஸ்தானத்தில் சூரியனை வைத்துக் கணிக்கப்படுகிற கணிதமுரைக்குச் சூரிய சித்தாந்தம் என்று பெயர். செளரமானம் என்பது இவ்வகைக் கணித அடிப்படையைக் கொண்டது.
வேதத்தில் சூரிய மந்திரங்கள் சிறப்பாக் இருக்கின்ற நீ மகான! வெற்றியுடையவன் என்கிறது யஜீர் வேதம். எங்களைத் தீ வினைகளிலிருந்து மீட்பாயாக் என்று வேண்டுகோள் விடுக்கிறது சாமவேதம்.
நவக்கிரக் கீர்த்தனங்களை இயற்றிய தீக்ஷிதர். சூரியமூர்த்தே நமேச்தே என்று தொடங்கிப் பாடுகிறார். சூரியனே கிரகங்களில் சிறந்தவன் என்றும் சுய ஒழி படைத்தோன் என்றும் போற்றுகிறார் இவர்.
ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் வேதத்தின் எழு சந்தங்களை ஏழு குதிரைகாகக் கொண்டு பூட்டிப் பவனி வருகிறான் இந்த பகலவன்.
ஞாயிறு போற்றும்! என்று நாவார முழக்கி, அந்தச் சுடர் கடவுளின் அருளை வேண்டிபிரார்த்தனை செய்வோம். சூரியனார் கோவிலில் மூலவர் ஒளிவீசுகிறார். உஷாதேவி, சாயாதேவி ஆகிய தேவியருடன் விளங்குகிறார். அக்னி இவருக்கு அதிதேவதை ருத்ரன் இவருக்குப் பிரத்யாதி தேவதை வாகனம் ஏழு குதிரைகள் பூட்டிய இரத்தத்தில் காணப்படுகிறார். இவரது ராசி சிம்மம்


சித்தர்கள், தேவர்கள், அசுரர்கள் வணங்கும் பரம்பொருள் (லிங்காஷ்டகம் 3)


ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
சித்த சுராசுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்


ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம் - எல்லாவிதமான நறுமணப் பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம்

புத்தி விவர்த்தன காரண லிங்கம் - உண்மையறிவு அடையக் காரணமாக இருக்கும் லிங்கம்

சித்த சுராசுர வந்தித லிங்கம் - சித்தர்களாலும் தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

Friday, April 25, 2008

அழியாத செல்வமா? அழியும் செல்வமா? (பஜ கோவிந்தம் 2)


மூட ஜஹீஹி தனாகம த்ருஷ்ணாம்
குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்
யல்லபஸே நிஜ கர்மோப்பாத்தம்
வித்தம் தேன வினோதய சித்தம்
மூட - ஏ மூடனே

ஜஹீஹி தன ஆகம த்ருஷ்ணாம் - அளவற்ற செல்வம் சேர்க்கும் உன் தணியாத தாகத்தை விட்டுவிடு

வித்ருஷ்ணாம் மனஸி ஸத் புத்திம் குரு - சஞ்சலமும் பேராசையும் இல்லாமல் மெய்ப்பொருளைப் பற்றிய எண்ணங்களை உன் மனதில் நினை.

யத் லபஸே நிஜ கர்ம உபாத்தம் வித்தம் - நீ அடையும் செல்வம் எல்லாமே நீ செய்யும் வினைகளாலும் வினைப்பயன்களாலும் தான்.

தேன வினோதய சித்தம் - அதைக் கொண்டு உன் மனதில் திருப்தி அடை.

நீ கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய்.

***

25 ஏப்ரல் 2008 அன்று சேர்த்த பகுதி:

பஜகோவிந்தம் பாடல்கள் எல்லாம் இல்லறத்தாரை விட துறவறத்தாருக்கே இன்னும் ஏற்றது என்பதோர் கருத்து எனக்கும் உண்டு. பல பாடல்களில் தெளிவாக அந்த அறிவுரை துறவிகளுக்கே என்று தெரியும். இந்தப் பாடலில் கருத்தோ எல்லோருக்கும் உரியதாகத் தெரிகிறது.

இந்தப் பாடலில் எடுத்தவுடனேயே மூடனே என்று தான் தொடங்குகிறார். அழியாத செல்வத்தை அடைய நேரத்தைச் செலவழிக்க வேண்டியிருக்க அழியும் செல்வத்தில் மனத்தைச் செலுத்துகிறாயே என்று கேட்கிறார். செய்யும் செயல்களுக்கு ஏற்ப பயன் கிடைக்கும். இங்கே கர்ம என்ற சொல்லுக்கு செயல்கள் என்றும் பொருள் கொள்ளலாம்; வினைப்பயன்கள் என்றும் பொருள் கொள்ளலாம். இரண்டு வகையிலும் கிடைக்க வேண்டிய செல்வம் கிடைத்தே தீரும். கிடைப்பதை வைத்து மனத்தைத் திருப்தி படுத்திக் கொண்டு நிலையான செல்வத்தை அடைவதில் மனத்தைச் செலுத்து என்று சொல்கிறார் இந்த சுலோகத்தில்.

Tuesday, April 22, 2008

ஆதித்ய ஹ்ருதயம் - 2


ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தின் முதல் ஐந்து சுலோகங்களை சென்ற பகுதியில் பார்த்தோம். இந்தப் பகுதியில் ஆறாவது சுலோகத்திலிருந்து பார்க்கலாம்.

ரஸ்மிமந்தம் ஸமுத்யந்தம் தேவாசுர நமஸ்க்ருதம்
பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம் 6

rasmimantham samudyantham dEvAsura namaskrutham
puujayasva vivasvantham bhAskaram bhuvanEsvaram 6


ரஸ்மிமந்தம் - இதமான பொன்னிறக் கதிர்களை உடையவன். ரஸ்மி என்றால் பொன்னிறக் கதிர்கள். ரஸ்மிமந்தம் என்றால் பொன்னிறக் கதிர்களை உடையவன்.

ஸமுத்யந்தம் - தினந்தோறும் தவறாமல் உதிப்பவன்; எந்தவித வேறுபாடும் இல்லாமல் எல்லோருக்கும் சமமாக ஒளி தருபவன்.

தேவாசுர நமஸ்க்ருதம் - தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படுபவன். எல்லோருக்கும் சமமாக ஒளி தருவதால் தேவர்களும் அசுரர்களும் இவனை வணங்குகிறார்கள். (தேவர்களும் அசுரர்களும் இரு வேறு இனத்தவர்கள் என்றொரு கருத்தாக்கம் இப்போது வழங்கி வருகிறது. அந்தக் கருத்தாக்கம் உண்மையெனில் இந்த சொற்றொடர் இரு இனத்தவர்களும் சூரியனை வணங்கிவந்தார்கள் என்பதைச் சுட்டுகிறது. உலகில் எல்லா இனங்களும் பகலவனைப் போற்றியிருக்கிறார்கள் என்பது இப்போது தெரிவதும் அந்த எண்ணத்திற்குத் துணை செய்கிறது).

பூஜயஸ்வ - வணங்கத் தகுந்தவன். எல்லோருக்கும் சமமாக ஒளி தருபவன்; கடமைக்கு ஒரு நேரடி எடுத்துக்காட்டாக இருப்பவன். அதனால் எல்லோராலும் வணங்கப்படுபவன்; அப்படி வணங்கத் தகுந்தவன்.

விவஸ்வந்தம் - தன்னுடைய ஒளியால் சூரிய மண்டலத்தை வலம் வருபவன். பகலவனின் ஒளி வெகு தூரம் பாய்கிறது. அங்கெல்லாம் அவன் வலம் வருகிறான். அதனால் அவனுக்கு விவஸ்வான் என்று பெயர்.

பாஸ்கரம் - ஒளியை உண்டு பண்ணுபவன். உலகத்தில் தோன்றும் எல்லா சோதிகளும் இவனை அடிப்படையாகக் கொண்டவையே. பகலவனாகத் தானே ஒளிர்கிறான்; சந்திரனுக்குத் தன் ஒளியைத் தந்து ஒளிர வைக்கிறான். இவன் ஒளியால் தோன்றிய பொருட்களில் தீயை உண்டு பண்ணி தீயை ஒளிர வைக்கிறான்.அதனால் இவனே எல்லா ஒளிகளையும் உண்டுபண்ணுபவன். பாஸ்கரன்.

புவனேஸ்வரம் - இப்படி எல்லா இயக்கங்களுக்கும் காரணமாக இருப்பதால் இவனே உலகங்களுக்கெல்லாம் தலைவன்.

ஸர்வ தேவாத்மகோ ஹ்யேச தேஜஸ்வீ ரஸ்மிபாவன:
ஏச தேவாசுர கணான் லோகான் பாதி கபஸ்திபி: 7

sarva dEvAthmakO hyEsa tEjasvee rasmibhavana:
yEsa dEvAsura ganAn lOkAn pAti gabhastibhi: 7

ஸர்வ தேவாத்மகோ ஹ்யேச - இவனே எல்லா தேவர்களாகவும் இருக்கிறான். ஸர்வ தேவ ஆத்மக: என்றால் 'எல்லா தேவர்களின் உருவமாக' என்று பொருள். ஹி என்றால் 'உறுதியாக இருக்கிறான்' என்று பொருள். ஏச என்றால் இவன்; இந்த புருஷன் என்று பொருள்.

தேஜஸ்வீ - ஒளிமயமானவன்; வீரன்.

ரஸ்மிபாவன: - தன்னுடைய இதமானப் பொன்னிறக் கதிர்களால் எல்லாவற்றையும் பாதுகாப்பவன்.

ஏச - இவனே

தேவாசுர கணான் - தேவர்களின் கூட்டத்தையும் அசுரர்களின் கூட்டத்தையும்

லோகான் - எல்லா உலகங்களையும்

பாதி கபஸ்திபி: - தன்னுடைய கதிர்களால் பாதுகாக்கிறான்.

ஏச ப்ரஹ்மாச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்த: ப்ரஜாபதி:
மஹேந்த்ரோ தனத: காலோ யம: ஸோமோ ஹ்யபாம்பதி: 8

yEsa brahmAcha vishnusca siva: skanda: prajApathi:
mahEndrO dhanada: kAlO yama: sOmO hyapAmpati: 8

ஏச - இவனே

ப்ரஹ்மா ச - படைக்கும் கடவுளாகிய பிரம்மனும், பெரிதிலும் பெரிதானவனும் (ப்ரஹம என்றால் பெரியது என்று பொருள்)

விஷ்ணுச்ச - காக்கும் கடவுளாகிய விஷ்ணுவும், எங்கும் நிறைந்திருப்பவனும் (விஷ்ணு என்றால் எங்கும் நிறைந்தது என்று பொருள்)

சிவ: - அழிக்கும் கடவுளாகிய சிவனும், மங்கல உருவானவனும் (சிவ என்றால் மங்கலம் என்று பொருள்)

ஸ்கந்த: - தேவ சேனையின் தலைவனான முருகனும், அனைத்தையும் இணைப்பவனும் (ஸ்கந்த என்றால் இணைப்பு என்று ஒரு பொருள்), அன்பிற்கும் அறிவிற்கும் அனைத்திற்கும் ஊற்றாக இருப்பவனும் (ஸ்கந்த என்றால் ஊறவைப்பவன் என்றும் ஒரு பொருள்)

ப்ரஜாபதி: - மக்களின் தலைவனும்

மஹேந்த்ரோ - தலைவர்களுக்கெல்லாம் தலைவனான தேவேந்திரனும்

தனத: - செல்வத்தை அருளும் குபேரனும்

காலோ - காலமும்

யம: - யமனும், தண்டித்து நல்வழிப்படுத்துபவனும் (யம என்றால் தண்டிப்பவன், நல்வழிப்படுத்துபவன் என்று பொருள்)

ஸோமோ - சந்திரனும்

ஹி - உறுதியாக

அபாம்பதி: - நீரின் தலைவனான வருணனும்

முதலில் மும்மூர்த்திகளாக இருப்பவன் சூரியன் என்று சொல்லிவிட்டு பின்னர் மற்ற தெய்வங்களை எல்லாம் சொல்லி வருகிறார். மும்மூர்த்திகளுக்கு அடுத்து முருகனை முதலில் சொன்னதைப் பார்த்தால் வைதீக தெய்வங்களில் முருகனின் முதன்மை தெரியும். அகத்தியர் தன் குருவான முருகனை முதலில் சொன்னார் என்றாலும் சரியே.

பிரஜாபதி என்று பிரம்ம தேவரைத் தான் சொல்வார்கள். மும்மூர்த்திகளைச் சொல்லும் போதே பிரம்ம தேவரைச் சொல்லிவிட்டார் ஆகையால் மீண்டும் ப்ரஜாபதி என்று யாரைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. கணபதியை ப்ரம்மணஸ்பதி என்று தொடக்கக் கால மந்திரங்கள் சொல்வதால் இங்கே கணபதியைக் குறிக்கிறாரோ என்ற எண்ணம் உண்டு. ஸ்கந்தனைச் சொன்னவுடனே ப்ரஜாபதியைச் சொன்னதால் அது ப்ரம்மணஸ்பதியாகிய கணபதியாக இருக்கவும் வாய்ப்புண்டு.

அதற்கடுத்து முறையே தேவர்களில் முதன்மையானவர்களான இந்திரன், குபேரன், காலன், யமன், யமன், ஸோமன், வருணன் ஆகியோர் கூறப்படுகிறார்கள்.

பிதரோ வஸவ: சாத்யா ஹ்யஸ்வினௌ மருதோ மநு:
வாயு: வஹ்னி: ப்ரஜா ப்ராண: ருது கர்தா ப்ரபாகர: 9

pitarO vasava: sAdhyaa hyasvinau maruthO manu:
vAyu: vahni: prajA prAna: rutu karthA prabhAkara: 9

பிதரோ - பித்ரு தேவதைகளும், முன்னோர்களும்

வஸவ: - உலகத்தின் எல்லா இயற்கை செல்வங்களும் ஆன எட்டு வசுக்களும் (அபன், துருவன், சோமன், தரன், அனிலன், அனலன், ப்ரத்யுஷா, ப்ரபாசா என்ற இவர்களே எட்டு வசுக்கள்)

சாத்யா - என்றுமே கருமவசப்படாத நித்யர்களும் (அனந்தன், கருடன், விஸ்வக்சேனன், பாஞ்சஜன்யன், சுதர்சனன் போன்றவர்கள்)

ஹி - உறுதியாக

அஸ்வினௌ - தேவ மருத்துவர்களான அஸ்வினி தேவர்களும்

மருதோ - காற்றின் துணைவர்களான மருத் தேவர்களும்

மநு: - வைவஸ்வத மனுவும்

வாயு: - காற்று தேவனும்

அஹ்னி: - தீக்கடவுளும்

ப்ரஜா ப்ராண: - மக்களின் உயிர்க்காற்றும்

ருது கர்தா - பருவங்களை உண்டாக்குபவனும்

ப்ரபாகர: - ஒளியை உண்டாக்குபவனும், புகழைத்தருபவனும்

ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக: பூஷா கபஸ்திமான்
ஸ்வர்ண சத்ருசோ பானு: ஹிரண்யரேதோ திவாகர: 10

Aditya: SavithA: Suurya: kaga: puushA gabhasthimAn
Suvarna sadrusO bAnu: hiranyarEtO divAkara: 10


ஆதித்ய: - அதிதியின் மகனும்

ஸவிதா - அறிவானவனும், அனைவருக்கும் தந்தையும்

ஸூர்ய: - புலன்களைச் செயலாற்றத் தூண்டுபவனும்

கக: - வானவெளியில் நடமாடுபவனும்

பூஷா - அனைவருக்கும் உணவளித்து வளர்ப்பவனும்

கபஸ்திமான் - ஒளிச்சுடர்களை உடையவனும்

ஸ்வர்ண சத்ருசோ - பொன்னிறத்தை உடையவனும்

பானு: - வட்டவடிவமானவனும்

ஹிரண்யரேதோ - அனைத்தையும் படைக்கும் திறன் கொண்டவனும்

திவாகர: - பகலொளியை உண்டாக்குபனும்

இவனே உறுதியாக பிரம்மனும், விஷ்ணுவும், சிவனும், ஸ்கந்தனும், பிரஜாபதியும், இந்திரனும், குபேரனும், காலமும், யமனும், ஸோமனும், வருணனும், பித்ரு தேவர்களும், வசுக்களும், சாத்யர்களும், அஸ்வினி தேவர்களும், மருத் தேவர்களும், மனுவும், வாயுவும், அக்னியும், பிராணனும் ஆக இருக்கிறான். இவனே பருவங்களையும், பகலொளியையும் உண்டாக்குபவன். இவன் பெயர்கள் ஆதித்யன், ஸவிதா, சூரியன், ககன், பூஷா, கபஸ்திமான், பானு என்று பலவாறானவை.
அடுத்த பகுதியில் பதினொன்றாம் சுலோகத்திலிருந்து பார்க்கலாம்.

Saturday, April 19, 2008

ராவண தர்ப விநாசன லிங்கம் (லிங்காஷ்டகம் 2)



தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப வினாஷன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம் - தேவர்களிலும் ரிஷிகளிலும் சிறந்தவர்களாக இருப்பவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்

காம தஹன கருணாகர லிங்கம் - மறைந்திருந்து மலர்க்கணைகளை விட்ட காமனை எரித்து பின்னர் அவனை மீண்டும் உயிர்ப்பித்த கருணையுடன் கூடிய லிங்கம்

ராவண தர்ப வினாஷன லிங்கம் - இராவணனின் கர்வத்தை கால் கட்டை விரலால் நசுக்கி அழித்த லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

இந்தப் பகுதி வரை 8 அக்டோபர் 2006 அன்று லிங்காஷ்டகம் பதிவில் இடப்பட்டது. மேல் விளக்கங்களாக கீழே உள்ள பகுதி இன்று எழுதப்பட்டது.

***

ப்ரவர என்றால் மூத்தவர், முதன்மையானவர், தலைவர், சிறந்தவர் என்று ஒருவரைக் குறிக்கும் பல பொருளும் சில இடங்களில் பரம்பரை என்ற பொருளும் இருக்கின்றன. இங்கே இந்த பொருட்களில் (அர்த்தங்களில்) எதனை எடுத்துக் கொண்டாலும் பொருத்தமே. தேவர்களிலும் ரிஷிகளிலும் முதன்மையானவர்கள், மூத்தவர்கள், தலைவர்கள், சிறந்தவர்களால் வணங்கப்படும், தொழப்படும், அருச்சிக்கப்படும் லிங்கம் என்று சொன்னாலும் சரியே. தேவர்கள், ரிஷிகள் பரம்பரையினரால் அருச்சிக்கப்படும் லிங்கம் என்று சொன்னாலும் சரியே.

Friday, April 18, 2008

மரண வாயிலில் இலக்கணம் உதவுமா? (பஜகோவிந்தம் 1)


பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்
கோவிந்தம் பஜ மூடமதே
ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே
நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே - ஏ மூட மனமே! கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய்.

ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே - நாம் போகும் காலம் வரும் போது

நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே - நாம் படித்த எந்த கல்வியும் உடன் வராது. வீணாக பொய்க்கல்விகளில் நேரத்தை வீணாக்காதே.

நீ கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய்.

***

18 ஏப்ரல் 2008 அன்று சேர்க்கப்பட்டது:

வயதில் மிகவும் மூத்த ஒரு முதியவர் 'டுக்ருங்கரணே' என்ற இலக்கணப்பாடத்தை மனப்பாடம் செய்து கொண்டிருந்ததை ஆதிசங்கரர் கண்டார். அதனைக் கண்ட போது 'மரண வாயிலில் இருக்கும் இவருக்கு இந்த இலக்கணப் பாடமா வந்து உதவப் போகிறது?' என்ற எண்ணம் தோன்றி ஆதிசங்கரர் இந்த 'பஜகோவிந்தம்' பனுவலைப் பாடினார் என்பது வரலாற்றுத் தொன்மம்.

Thursday, April 17, 2008

லிங்காஷ்டகம் - 1


ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஸித ஸோபித லிங்கம்
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம் - நான்முகப் பிரம்மனாலும் முரனை அழித்த முராரியாம் விஷ்ணுவாலும் எல்லாத் தேவர்களாலும் அர்ச்சிக்கப் பட்ட லிங்கம்

நிர்மல பாஸித ஸோபித லிங்கம் - குற்றமற்ற மிகுந்த ஒளியுடன் ஜொலிக்கும் லிங்கம்

ஜன்மஜ துக்க வினாசக லிங்கம் - பிறப்பு இறப்பினால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை அடியேன் வணங்குகிறேன்.

***

லிங்கம் என்ற வடமொழிச் சொல்லுக்கு அடையாளம் என்று பொருள். சிவலிங்கம் என்றால் சிவனைக் குறிக்கும் ஒரு அடையாளம் என்று பொருள். ஆனால் பழம் என்றாலே வாழைப்பழம், பூ என்றாலே தாமரைப்பூ, ஸஹஸ்ரநாமம் என்றாலே விஷ்ணு ஸஹஸ்ரநாமம், தமிழ்கடவுள் என்றால் முருகப்பெருமான் என்று ஆனது போல் லிங்கம் என்றாலே அது சிவலிங்கம் என்றே பொருள் என்று ஆகிவிட்டது. அதனால் இந்தப் பாடல் முழுவதும் சிவலிங்கம் என்ற பொருளில் லிங்கம் என்ற சொல்லே பயன்படுத்தப் பட்டுள்ளது.

Friday, April 11, 2008

ஆதித்ய ஹ்ருதயம் - 1


உலகத்தின் எல்லா நிகழ்வுகளுக்கும் காரணமான சக்தியை சரியான தொலைவிலிருந்து வழங்கி வருகின்ற சூரியனை வணங்குவது தொன்று தொட்டு உலகமெங்கும் நடைபெற்று வந்திருக்கிறது. பெருமதங்கள் தோன்றிய போது முன்பிருந்த சூரிய வழிபாடான சௌரம் அந்தப் பெருமதங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்றைக்கும் நேரடியாக சூரியனை மட்டும் வழிபடாமல் பெருமதங்களின் தெய்வ உருவில் கதிரவனை வணங்கிவருகிறார்கள்.

இந்திய சமயங்களில் பெருஞ்சமயங்களாக ஆதிசங்கரரால் முறைப்படுத்தப்பட்ட ஆறு சமயங்களான சௌரம், காணபத்யம், சாக்தம், கௌமாரம், சைவம், வைஷ்ணவம் என்பவற்றுள் பகலவன் வழிபாடான சௌரம் இன்றைக்கு சைவ வைணவங்களில் கலந்துவிட்டது. சிவசூரியன் என்றும் சூரியநாராயணன் என்றும் இன்றைக்கு சூரியன் வழிபடப்படுகிறான். சூரிய நமஸ்காரம் என்று ஒரு வழிபாட்டு முறை சேரலமாம் கேரளத்தில் இருக்கிறது. தமிழகத்தில் பலரும் அதிகாலையில் நீராடி விட்டு சூரியனை நோக்கி வணங்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

சூரிய பகவானுக்கான வடமொழிப் பனுவல் என்று எண்ணும் போது மனத்தில் முதன்மையாக வந்து நிற்பது 'ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம்'. இது சூரிய குலத்தில் உதித்த இராமபிரானுக்கு தமிழ் முனிவர் அகத்தியர் உபதேசித்ததாக வால்மீகி இராமாயணத்தில் வரும் ஒரு பகுதி. இந்த ஸ்தோத்திரத்தை ஒரே நேரத்தில் அடுத்தடுத்து ஒன்பது முறை ஜபித்தால் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் என்பது ஓர் நம்பிக்கை. அடியேன் தினந்தோறும் காலையில் சொல்லிக் கொண்டிருந்த ஸ்தோத்திரம் இது. (இப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் சொல்லாவிட்டாலும் நினைவிற்கு வரும் போதெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்). ஒன்பது முறை தொடர்ந்து சொல்லி நினைத்த காரியங்களில் வெற்றி பெற்றதும் உண்டு.

பகலவன் இராசிச் சக்கரத்தின் கடைசி இராசியான மீனராசியிலிருந்து (பங்குனி) முதல் இராசியான மேஷராசிக்குச் (சித்திரை) செல்லும் இந்த நேரத்தில், இராமபிரானின் திருவவதார நன்னாள் வருகின்ற இந்த நேரத்தில் இருவர் தொடர்பும் உடைய இந்த வடமொழிப் பனுவலைப் படிப்பது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

இந்த இடுகை தொடங்கி இனி வரும் இடுகைகளில் சூரிய தேவனை முழுமுதற்கடவுளாகப் போற்றும் இந்தப் பனுவலைப் பொருளுடன் பார்ப்போம்.

இராம இராவண யுத்தத்தின் தொடக்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சி இது. முதல் இரு சுலோகங்கள் சூழ்நிலையை விவரிக்கின்றன. மூன்றாவது சுலோகம் அகத்தியர் இராமபிரானை விளித்துக் கூறுவதாக அமைந்திருக்கிறது. நான்காவது சுலோகம் முதல் முப்பதாம் சுலோகம் வரை ஆதித்ய ஹ்ருதயம் என்னும் நூல். முப்பத்தி ஒன்றாம் சுலோகம் இந்தத் துதியால் மகிழ்ந்த சூரியன் இராமனை வாழ்த்துவதைக் கூறுவதாக அமைந்திருக்கிறது.

ததோ யுத்த பரிச்ராந்தம் சமரே சிந்தயா ஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய சமுபஸ்திதம் 1

tatO yuddha parisrantam samarE chintayA Sthitam
rAvanam chAgratO drustvA yuddhAya samupasthitam 1


ததோ - அந்த இராமன்
யுத்த பரிச்ராந்தம் - போர்க்களத்தில்
சமரே சிந்தயா ஸ்திதம் - போர் செய்வதைப் பற்றிய சிந்தனைகளுடன் நிற்பதை
அக்ரதோ த்ருஷ்ட்வா - முதலில் பார்த்துவிட்டு (பின்னர்)
யுத்தாய சமுபஸ்திதம் - போர் செய்வதற்காக நெருங்கி வரும்
ராவணம் ச த்ருஷ்ட்வா - இராவணனையும் பார்த்தார் அகத்திய முனிவர்

போர்க்களத்தில் போருக்கு முனைப்பாக நிற்கும் இராமனையும் இராவணனையும் கண்டார் அகத்தியர். அகத்தியர் போர்க்களத்திற்கு ஏன் வந்தார் என்பதை அடுத்த சுலோகம் சொல்கிறது.

தைவதைஸ்ச சமாகம்ய த்ரஷ்டும் அப்யாகதோ ரணம்
உபாகம்ய அப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவான் ருஷி: 2

daivathaisca samAgamya drastum abhyAgatO ranam
upAkamya abraviid rAmam agastyO bhagavAn rshi: 2

த்ரஷ்டும் அப்யா கதோ ரணம் - போரைப் பார்ப்பதற்காக வந்திருக்கும்
தைவத ஏவ ச - தேவர்களுடனே
சம ஆகம்ய - வந்திருக்கும்
அகஸ்த்யோ பகவான் ருஷி: - ரிஷியான அகத்திய பகவான்
உபாகம்ய அப்ரவீத் ராமம் -அருகில் வந்து இராமனிடம் பேசத் தொடங்கினார்

தேவர்கள் எல்லாம் இராம இராவண யுத்தத்தைப் பார்ப்பதற்காகத் திரண்டு வந்திருக்கிறார்கள். அவர்களுடன் பல ரிஷிகளும் வந்திருக்கிறார்கள். அவர்களின் நடுவே அகத்தியரும் இருக்கிறார். போருக்கு முனைப்பாக இருக்கும் இராம இராவணர்களைப் பார்த்த பின்னர் அகத்தியர் இராமனை நெருங்கி வந்து பின்வருமாறு பேசத்தொடங்கினார்.

ராம ராம மஹாபாஹோ ச்ருணு குஹ்யம் சனாதனம்
யேன சர்வான் நரீன் வத்ஸ சமரே விஜயிஷ்யஸி 3

rAma rAma mahAbAhO srunu guhyam sanAtanam
yEna sarva nareen vatsa samarE vijayisyasi 3


ராம ராம மஹாபாஹோ - பெரும் தோள் வலிமை கொண்ட இராமா!
யேன சர்வான் நரீன் - எதன் மூலம் எல்லா மக்களும்
சமரே விஜயிஷ்யஸி - போர்க்களத்தில் வெல்கிறார்களோ
சனாதனம் - காலம் காலமாக அழிவில்லாத
குஹ்யம் - (அந்த) இரகசியத்தை
ச்ருணு - கேள்
வத்ஸ - குழந்தாய்

தோள் வலிமையில் சிறந்த இராமா! குழந்தாய்! என்றும் அழிவில்லாத எந்த இரகசியத்தால் மக்கள் போர்க்களங்களில் வெல்கிறார்களோ அந்த மறைபொருளை நான் இப்போது உனக்குச் சொல்கிறேன். கேள்.

ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசனம்
ஜயாவஹம் ஜபேந்நித்யம் அக்ஷயம் பரமம் சிவம் 4

Aditya hrudhayam punyam sarva satru vinAsanam
jayAvaham japEnnithyam akshayam paramam sivam 4


ஆதித்ய ஹ்ருதயம் - (அந்த இரகசியத்திற்குப் பெயர்) ஆதித்ய ஹ்ருதயம்
புண்யம் - அது நல்வினைப்பயன்களைத் தருவது
ஸர்வ சத்ரு விநாசனம் - எல்லாவிதமான எதிரிகளையும் அழிப்பது (உட்பகை, வெளிப்பகை இரண்டையும்)
ஜய ஆவஹம் - வெற்றியைத் தருவது
ஜபேத் நித்யம் - நாள்தோறும் சொல்லக்கூடியது (ஜபிக்கக்கூடியது)
அக்ஷயம் - அழிவற்றது
பரமம் - மிகப்பெருமை கொண்டது
சிவம் - மங்களம் தருவது

புண்ணியத்தைத் தருவதும் எல்லா எதிர்ப்புகளையும் முறியடிப்பதும் வெற்றியைத் தருவதும் நாள்தோறும் பன்னிப் போற்றத் தகுந்ததும் அழிவற்றதும் பெருமை கொண்டதும் மங்களம் தருவதுமான அந்த இரகசியத்திற்குப் பெயர் ஆதித்ய ஹ்ருதயம்

ஸர்வ மங்கள் மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரநாசனம்
சிந்தா சோக ப்ரசமனம் ஆயுர் வர்த்தனம் உத்தமம் 5

sarva mangala mAngkalyam sarva pApa pranAsanam
cintaa sOka prasamanam Ayurvardhanam utthamam 5


ஸர்வ மங்கள் மாங்கல்யம் - மங்களங்கள் எல்லாவற்றிலும் சிறந்த மங்களம் ஆனது.
ஸர்வ பாப ப்ரநாசனம் - எல்லா பாவங்களையும் அழிப்பது
சிந்தா சோக ப்ரசமனம் - கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது
ஆயுர் வர்த்தனம் - வாழ்நாளை வளர்ப்பது
உத்தமம் - சிறந்தது

இந்த அதித்ய ஹ்ருதயம் என்ற துதி மங்களங்களில் சிறந்தது, பாவங்களையும் கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது, வாழ்நாளை நீட்டிப்பது, மிகவும் சிறந்தது.

அடுத்த சுலோகத்திலிருந்து சூரியனைப் போற்றத் தொடங்குகிறார்.

Tuesday, April 8, 2008

ஷடானனம் ப்ரஹ்மண்ய தேவம்...


ஷடானனம் சந்தன லிபித காத்ரம்
மஹோரசம் திவ்ய மயூர வாஹனம்
ருத்ரஸ்ய ஸூனும் சுரலோக நாதம்
ப்ரம்ஹண்ய தேவம் சரணம் ப்ரபத்யே


shadAnanam chandana libitha ghAthram
mahOrasam dhivya mayuura vAhanam
rudhrasya suunum suralOka nAtham
brahmanya dEvam saranam prabhathyE
அண்ணனை வணங்கியபிறகு தம்பியை வணங்குவது தானே முறை. அதற்குப் பின்னர் யாரை வேண்டுமானாலும் வணங்கிக் கொள்ளலாம். அதனால் தான் ஆனைமுகனை வணங்கிவிட்டு இப்போது ஆறுமுகனை வணங்குகிறோம்.

ஷடானனம் - ஷட் + ஆனனம் - ஆறு முகங்கள் கொண்டவரும்

சந்தன லிபித காத்ரம் - சந்தனம் பூசிய திருமேனியைக் கொண்டவரும்

மஹோரசம் - பெரும் இரசிகரும் (கலைகளை எல்லாம் இரசிப்பவரும் வளர்ப்பவரும் அருள்பவரும்)

திவ்ய மயூர வாஹனம் - தெய்வீக மயில் வாகனம் கொண்டவரும்

ருத்ரஸ்ய ஸூனும் - ருத்ரனாகிய சிவபெருமானின் திருமகனும்

சுரலோக நாதம் - தேவலோகத்தின் தலைவனும் (தேவசேனாபதியும்)

ப்ரம்ஹண்ய தேவம் - பரம்பொருள் ஆனவரும் ஆன சுப்ரமண்ய தேவரின்

சரணம் ப்ரபத்யே - திருவடிகளைத் தஞ்சமடைகிறேன்

எடுத்தவுடனேயே திருமுருகனின் தனிச்சிறப்பான ஆறுமுகங்களைக் கூறுகிறது இந்த சுலோகம். ஆனைமுகனை கஜானனம் என்றும் ஐந்துமுகனான சிவபெருமானை பஞ்சானனம் என்றும் நான்முகனைச் சதுரானனம் என்றும் சொல்லிக் கேட்டிருப்போம். அவற்றை நினைவில் கொண்டால் ஷட் + ஆனனம் என்ற இந்தச் சொல்லையும் எளிதாக நினைவில் கொள்ளலாம்.

இன்றைக்கும் ஆறுமுகனடியார்கள் காவடி எடுக்கும் போதும் முடிகாணிக்கை செலுத்திய பின்னரும் தங்கள் மேனிகளில் சந்தனம் பூசிக் கொள்கிறார்கள். சேந்தனின் திருமேனியிலும் அதே சந்தனம் இருக்கின்றது போலும். அதனால் அதனை அடுத்தாகச் சொல்கிறது சுலோகம். ஷடானனம் சந்தன லிபித காத்ரம். நோயற்ற உடலைக் கொண்டவர்களை திடகாத்திரமாக இருக்கிறார்கள் என்று சொல்வார்களே - அதனை நினைவில் கொண்டால் இங்கே சொல்லப்பட்டிருக்கும் காத்ரம் என்ற சொல்லின் பொருள் மனத்தில் நிற்கும். லிபி என்றால் எழுத்து என்று பலருக்கும் தெரிந்திருக்கும். சந்தனம் எழுதிய திருமேனி என்பதற்கு இங்கே லிபித காத்ரம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

கலைகளை அருள்பவனும் அவற்றைக் காப்பவனும் ஆன திருமுருகன் மஹா ரசிகனாகவும் இருக்கத் தானே வேண்டும். அதனால் அவனை மஹோரசம் என்று போற்றுகிறது இந்த சுலோகம்.

கலைகளைச் சொன்னவுடனே நாதத்தையும் விந்துவையும் சொல்ல வேண்டுமே? நாத தத்துவமான மயிலை வாகனமாகக் கொண்டவன் என்று உடனே போற்றுகிறது இந்த சுலோகம்.

ருத்திரனின் நெற்றிக்கண்களிலிருந்து தோன்றிய திருமுருகனை திருக்குமரன் என்று அழைக்கும் விதமான ருத்ரஸ்ய ஸூனும் என்கிறது அடுத்த வரி.

தேவர்களின் படைகளுக்குத் தளபதியான தேவசேனாபதியே தேவலோகத்தைக் காத்து அருள்பவன் என்பதால் தேவலோகத்தின் தலைவன் என்கிறது அடுத்த பதம். தேவசேனாபதி என்பது இரண்டு விதமாகப் பிரிந்து அழகான பொருளைத் தருவதைக் காணலாம். தேவசேனாவின் பதி என்று ஒரு பொருளும் தேவர்களின் சேனாபதி என்று ஒரு பொருளும் அமைவது அழகு.

இப்படியெல்லாம் போற்றப்படும் சுப்ரமண்ய தேவரை அடியேன் தஞ்சமாக அடைகிறேன் என்று இறுதியில் சரணாகதி செய்யப்படுகிறது. தஞ்சம் அவனன்றிப் பிறிதில்லை.

Wednesday, April 2, 2008

சுக்லாம்பரதரம் விஷ்ணும்...

சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
ப்ரசன்னவதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே


suklaambharadharam vishnum sasivarnam chathurpujam
prasannavathanam dhyAyEth sarva viknObha saanthayE
கொஞ்சமேனும் இறை நம்பிக்கை உடையவர்களில் பெரும்பாலோனோருக்கு இந்த சுலோகம் தெரிந்திருக்கும். குறைந்தது கேட்டாவது இருப்பார்கள். வடமொழியில் நடக்கும் எல்லா வழிபாடுகளும் இந்த சுலோகத்தைச் சொல்லியே தொடங்குகின்றன. பொதுவாக இந்தச் சுலோகம் விநாயகரை வணங்கும் சுலோகமாகக் கருதப்படுகின்றது.

சுக்லாம் பரதரம் என்று இந்த சுலோகத்தின் தொடக்கத்தில் இருக்கும் சொற்றொடரை இரு சொற்களாகப் பிரித்து உச்சரிப்பது பொருளினை உணர்வதற்குத் தடையாக அமைகிறதோ என்றொரு எண்ணம் உண்டு. சுக்ல அம்பர தரம் என்ற மூன்று சொற்களின் கூட்டுச் சொல் சுக்லாம்பரதரம் என்பது. சுக்லாம் என்பதற்கும் பரதரம் என்பதற்கும் இடையில் இடைவெளி விடாமல் பலுக்கினால் (உச்சரித்தால்) பொருள் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்.

இந்த சுலோகம் விஷ்ணுவிற்கான சுலோகம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. விஷ்ணும் என்றும் ப்ரசன்ன வதனம் என்றும் இருப்பதால் யானை முகனான கணேசனுக்கு உரிய சுலோகம் இல்லை இது என்றொரு கருத்து இருக்கிறது. ஆனால் இந்த சுலோகத்தில் எப்படி கணேசனுக்குப் பொருந்தாது என்று தோன்றுகிறதோ அதே போல் விஷ்ணுவிற்கும் பொருந்தாதது என்று சொல்லத் தக்க சில சொற்களும் இருக்கின்றன. இங்கே இந்த சுலோகத்திற்கு இரண்டு வகையிலும் பொருள் தருகிறேன். எது பொருத்தம் என்று தோன்றுகிறதோ அதனை எடுத்துக் கொள்ளுங்கள்.

விநாயகர்:



சுக்லாம்பரதரம் - சுக்ல + அம்பர + தரம் = வெண்மையான ஆடையை அணிந்தவர் (பெரும்பாலும் விநாயகர் பீதாம்பரம் = பீத + அம்பரம் மஞ்சள் ஆடையை அணிந்தவராகத் தான் அறியப்படுகிறார். ஆனாலும் வெண்ணிற ஆடையை அணிந்தவர் என்பதில் எந்த முரணும் இல்லை).
விஷ்ணும் - எங்கும் நிறைந்திருப்பவர்
சசிவர்ணம் - சந்திரனைப் போன்ற நிறம் கொண்டவர்
சதுர்புஜம் - நான்கு கைகளை உடையவர்
ப்ரசன்ன வதனம் - மகிழ்ச்சி ததும்பும் அழகிய திருமுகத்தை உடையவர்
த்யாயேத் - தியானிக்கிறேன்
சர்வ விக்ன உபசாந்தயே - எல்லா தடைகளும் நீங்கட்டும்

விஷ்ணு:

சுக்லாம்பரதரம் - சுக்ல + அம்பர + தரம் = வெண்மையான ஆடையை அணிந்தவர் (பெரும்பாலும் பெருமாள் பீதாம்பரம் = பீத + அம்பரம் மஞ்சள் ஆடையை அணிந்தவராகத் தான் அறியப்படுகிறார். ஆனாலும் வெண்ணிற ஆடையை அணிந்தவர் என்பதில் எந்த முரணும் இல்லை).
விஷ்ணும் - எங்கும் நிறைந்திருப்பவர்
சசிவர்ணம் - சந்திரனைப் போன்ற நிறம் கொண்டவர் (பெரும்பாலும் நீல நிறம் கொண்டவர் என்று அறியப்பட்டாலும் வ்யூஹ அவதாரங்களில் ஒரு உருவம் சந்திர நிறம் கொண்டவர்)
சதுர்புஜம் - நான்கு கைகளை உடையவர்
ப்ரசன்ன வதனம் - மகிழ்ச்சி ததும்பும் அழகிய திருமுகத்தை உடையவர்
த்யாயேத் - தியானிக்கிறேன்
சர்வ விக்ன உபசாந்தயே - எல்லா தடைகளும் நீங்கட்டும்

Tuesday, April 1, 2008

ஸ்தோத்ரமாலா - முதல் வணக்கம்



பல நாட்களாக, மாதங்களாக, வருடங்களாக இருந்து வரும் ஆசை இது. வடமொழிப் பனுவல்களுக்காக ஒரு தனிப்பதிவு தொடங்கி இயன்ற போதெல்லாம் வடமொழிப் பனுவல்களுக்குப் பொருள் சொல்ல வேண்டும் என்று. ஆனைமுகனை வணங்கி இன்று தொடங்கிவிட்டேன். இனி அவன் செயல்.

மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாசக பாத நமஸ்தே


muushika vaakana mOthaka hastha
saamara karna vilambitha suuthra
vaamana ruupa mahEsvara puthra
vigna vinaasaka paatha namasthE

மூஷிக வாகன - மூஷிகம் என்றும் மூஞ்சுறு/எலியை ஊர்தியாகக் கொண்டவரும்

மோதக ஹஸ்த - கொழுக்கட்டையை திருக்கைகளில் ஏந்தியவரும்

சாமர கர்ண - விசிறி போன்ற திருக்காதுகளைக் கொண்டவரும்

விளம்பித சூத்ர - கயிற்றினை இடையைச் சுற்றி அணிந்தவரும்

வாமன ரூப - குறுகிய உருவை உடையவரும்

மஹேஸ்வர புத்ர - மஹேஸ்வரனாம் சிவபெருமானின் திருமகனும் ஆன

விக்ன விநாசக - தடைகளை நீக்கும் விநாயகரின்

பாத நமஸ்தே - திருப்பாதங்களை வணங்குகிறேன்.

செவ்வாய் தோஷம் நீங்க, செல்வவளம் பெருக

செவ்வாய் தோஷம் நீங்க, செல்வவளம் பெருக...

செவ்வாய் தோஷம் நீங்க, செல்வவளம் பெருக...



நாரதாதி மஹாயோகி ஸித்த கந்தர்வ ஸேவிதம்
நவவீரை: பூஜிதாங்க்ரிம் தேஹிமே விபுலாம் ச்ரியம்
பகவான் பார்வதி ஸூநோ ஸ்வாமின் பக்தார்திபஞ்ஜன
பவத் பாதாப்ஜயோர்பக்திம் தேஹி மே விபுலாம் ச்ரியம்
    -ஸுப்ரமண்ய மூலமந்த்ர ஸ்தோத்ரம் (குமார தந்த்ரம்)

பொதுப் பொருள்: நாரதர் முதலான சிறந்த யோகிகளாலும் சித்தர்களாலும் கந்தர்வர்களாலும் வணங்கப்பட்டவரே முருகப் பெருமானே, நமஸ்காரம். வீரபாகு முதலான ஒன்பது வீரர்களால் பூஜிக்கப்பட்ட பாதங்களை உடையவரே, நமஸ்காரம். என் வாழ்வில் வளம் சேர்க்க அருள் புரிவீராக! பகவானே, பார்வதி குமாரனே, ஈசனே, செவ்வாய் கிரக பாதிப்புகளை நீக்குபவரே, பக்தர்தம் கவலையெல்லாம் போக்கும் முருகப் பெருமானே நமஸ்காரம்.
(தைப்பூச தினத்தன்று  இந்த துதியை பாராயணம் செய்தால் முருகப் பெருமான் அருளால் செவ்வாய் தோஷம் தீரும். செல்வ வளம் பெருகும்

மூல நட்சத்திரத்தில்

அடியார்
மூல நட்சத்திரத்தில்

ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். இறைவன் படைத்த 27 நட்சத்திர தேவியர் அனைவருமே புனிதமானவர்கள். மக்கள் சமுதாயத்திற்குத் தொண்டாற்ற அல்லும் பகலும் அயராது உழைப்பவர்கள், மூர்த்தி, தீர்த்தம், தலங்களை முறையாக தரிசித்து அந்த பூஜா பலன்களை எல்லாம் நம்முடைய முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்பவர்கள். சுயநலம் ஒரு சிறிதும் அற்ற உத்தம தெய்வங்களே நட்சத்திர தேவியர் என்பதை உணர்ந்தால் உங்கள் கேள்விக்குரிய பதிலை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள். 63 நாயன்மார்கள், பன்னிரு ஆழ்வார்கள், சித்தர்கள், மகான்கள், யோகிகள், உத்தம மனிதர்கள் எல்லா நட்சத்திரங்களிலும் பிறந்திருக்கிறார்கள். அவர்கள் விரும்பியிருந்தால் நல்ல நட்சத்திரங்கள் என்று நீங்கள் நினைக்கும் நட்சத்திரங்களில் மட்டும் பிறந்திருக்கலாமே? இதை யோசித்துப் பார்த்தீர்களா?
பெருமாள் ஆலயங்களில் துவார பாலகராக அருள்புரியும் தெய்வமே ஸ்ரீவிஷ்வக்சேனர் என்றழைக்கப்படும் சேனை முதலியார் ஆவார். திருமகளைக் கொடியில் ஏந்திய இவரைத் தரிசித்து பெருமாள் பிரசாதமான துளசித் தீர்த்தத்தை அருந்தி வந்தால் விந்து குற்றங்கள் நீங்கும்.
மக்களின் அறியாமைக்குக் காரணம், ’... பெண் மூலம் நிர்மூலம்’ என்ற பழமொழியை வழக்கம்போல் தவறாகப் புரிந்து கொண்டதுதான். ’நிருத்தி திக்கில் இருக்கும் மூலப் பிரபுவை வணங்கிய பெண் நலம் பெறுவாள்,’ என்பதே இந்தப் பழமொழியின் உண்மைப் பொருள். நிருதி திக்கு என்பது தென் மேற்கு திசை, இது கன்னி மூலை என்றும் வழங்கப்படும். தென் மேற்கு திசையில் குடிகொண்டிருப்பவர் யார்? எல்லாவற்றிற்கும் முதன்மையாக வழிபட வேண்டிய முழுமுதற் கடவுளான மூலப் பிரபு கணபதியே கன்னி மூலை கணபதியாக எல்லா சிவாலயங்களிலும் எழுந்தருளியுள்ளார். மணமாகாத கன்னிப் பெண்கள் இந்தக் கன்னி மூலை கணபதியை வணங்கினால் அவர்களுக்கு எளிதில் திருமணம் கை கூடும்.
மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் காரிய சாதனைகள் புரிவர். அடியேனுக்குத் தெரிந்த பல பெண்கள் மிகச் சிறந்த குழந்தை மருத்துவர்களாகவும், பெண்ணியல் உடல் மருத்துவர்களாகவும், கர்ப்பிணி சிசிச்சை வல்லுநர்களாகவும் சிறந்து விளங்கி புகழுடன் வாழ்கிறார்கள். அவர்கள் அனைவரும் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களே. மூல நட்சத்தில் பிறந்தவர்களின் குணாதிசயத்தை, அவர்களின் எதிர்காலத்தை அறிய வேண்டுமானால் அவர்கள் எந்த நட்சத்திரப் பாதத்தில் பிறந்தார்கள், அந்த நட்சத்திர பாதம் எந்தக் கிரகங்களின் பார்வையைப் பெற்றுள்ளது, அதன் நவாம்ச வீடு என்ன, திரேகாணம், துவிதாம்சத்தில் எந்த வீடுகளில் உள்ளது போன்ற விவரங்களை எல்லாம் கணித்துப் பார்க்க வேண்டும். வெறுமனே மூல நட்சத்திரத்தில் பிறந்ததை மட்டும் பார்த்து ஒரு முடிவுக்கு வருவது சரியான ஜோதிட அணுகு முறை ஆகாது.

மூல நட்சத்திரத்தில் நிறைவேற்றும் நற்காரியங்கள் பன் மடங்காக விருத்தியாகும் தன்மை உடையன. உதாரணமாக, மூல நட்சத்திரத்தில் ஒரு தங்கக் காசு வாங்கினால் மூன்று காசு வாங்க வசதி வரும்.
‘மூலத் தங்கம் முழு முதற் பொருளாய் ஆகி
காலத் தாமதத்தைக் கவினுறக் கழித்திட வழி செய்யும் பாரேன்‘
என்று அகத்திய நாடி உரைக்கிறது.
120 ஆண்டுகள் மனித உடலில் வாழ்ந்து, உயிர் உடலை விட்டுப் பிரிந்த பின்பும் மற்றவர்களுக்காக தன் உடலைப் பாதுகாத்து அருள்புரியும் உடையவர் என்னும் ராமானுஜர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவரே. மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அதில் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள். காரிய சாதனைகள் பல புரியவல்லவர்கள் மூல நட்சத்திரக்காரர்கள்.
மூல நட்சத்திர தினத்தன்று திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருதல் சிறப்பாகும். ‘குத்துச் செடி‘ என்று அழைக்கப்படும் ஒரு அற்புதமான மூலிகை உண்டு. சதுரகிரி மலை, திருஅண்ணாமலை, ஜவ்வாது மலை, சுருளி மலை, மருந்துவாழ் மலை, திருக்குற்றால மலை போன்ற மலைத் தலங்களில் மட்டுமே வளரக் கூடிய மூலிகை. இதன் குணம் கருதி இதை ’பங்காளிச் செடி’ என்றும் சொல்வது உண்டு. மூல நட்சத்திரத்தில் மட்டுமே இந்தச் செடி வளரும், மூல நட்சத்திரம் முடிந்தவுடன் பூமியின் அடியில் சென்று மறைந்து விடும். நிலம் புரண்டி என்ற ஒரு தெய்வீக மூலிகையைப் பற்றி அடியேன் உங்களுக்கு ஏற்கனவே விளக்கி உள்ளேன்.. அதைத் தொட்டாலே சிவபெருமான் பிரத்யட்சியமாக அதைத் தொட்டவர் கண் முன்னே நிற்க வேண்டும் என்பது இறை நியதி. அப்படிப்பட்ட அற்புத ஆற்றல் படைத்த நிலம்புரண்டிக்கு மூலமாக இருப்பதாலும், மூல நட்சத்திரம் அன்று மட்டுமே தோன்றுவதாலும் பங்காளிச் செடியை ‘மூல நிலம்புரண்டி‘ என்றும் சொல்வது உண்டு. இதன் காற்று மனிதர்கள் மேல் பட்டால் பங்காளிச் சண்டைகள், சொத்துத் தகராறுகள் மறையும்.
கான்சர், ஆஸ்துமா, பக்கவாதம் போன்ற கடுமையான வியாதிகளால் அவதியுறுவோர் தாங்கள் ஏற்கும் மருந்துகளைக் கையில் ஏந்தி மூல நட்சத்திரம் அன்று திருஅண்ணமலையைக் கிரிவலம் வந்து பின்னர் அவற்றைப் பயன்படுத்துவதால் நோயின் கடுமை படிப்படியாகக் குறைவதைக் கண்கூடாகக் காணலாம். புதிய மருந்துகள், விஞ்ஞானக் கண்டு பிடிப்புகள், கம்ப்யூட்டர் ப்ராஜக்ட்டுகள் போன்றவற்றை மூல நட்சத்திர தினத்தில் தொடங்குவது நலம். சில மருந்துகள் மூல நட்சத்திரத்தில் மட்டுமே செய்யப்படுகின்றன. மூல நட்சத்திரத்தன்று மருந்துகளின் வீரிய சக்தி அதிகரிக்கிறது.
Sulpha drugs என்று அழைக்கப்படும் கந்தக மருந்து வகைகளை மூல நட்சத்திரத்தன்று தயாரிப்பது விசேஷம். குளிகைகள் தயாரிக்க, பிரதிஷ்டை செய்ய மூல நட்சத்திரம் உகந்தது. மார்கண்டேய மகரிஷி திருஅண்ணாலையைச் சுற்றி குளிகைகளைப் பூமி அடியில் பதித்து வைக்கும் புனித பூஜைகளை மூல நட்சத்திர தினத்தில்தான் றிறைவேற்றினார். இன்றும் ஆஞ்சநேய மூர்த்தி ஒவ்வொரு மூல நட்சத்திரம் அன்று திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து அற்புதமான குளிகைகளை திருஅண்ணாமலை கிரிவலப் பாதை எங்கும் மக்களின் நலனுக்காக நிரவி வருகிறார் என்பது பலரும் அறியாத இரகசியம். இதனால்தான் திருஅண்ணாமலையில் எங்கு சென்றாலும் பாதணிகள் அணியாமல் வெறுங்காலுடன் செல்லுதல் சிறப்பு என்று சித்தர்கள் வலியுறுத்துகிறார்கள்.

வீட்டிற்குத் தேவையான மளிகை சாமான்களை மூல நட்சத்திரத்தன்று வாங்கலாம். மருத்துவர்கள், மருந்துகள் தயாரிப்போர், மருந்து கம்பெனிகளில் பணிபுரிவோர், பெண்ணியல் நோய் வல்லுநர்கள், குழந்தை மருத்துவர்கள் போன்றோர் மூல நட்சத்திர தினத்தன்று திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருவதால் நல்ல கைராசியுடன், தங்கள் தொழிலில் சிறந்து விளங்கி பேரும் புகழும் எய்துவர். மூல நட்சத்திரத்தில் தொடங்கும் வியாபாரம், தொழில் முயற்சிகள் நன்முறையில் வளர்ச்சி பெற்று சிறப்படையும்.
அடியேனுக்குத் தெரிந்த ஒரு தொழிலதிபர் இதை நடைமுறையில் செயல்படுத்தி நன்மை அடைந்து வருகிறார். அவர் ஒரு முறை 150 விமானங்களை வாங்கினார். முதலில் ஜெர்மானிய விமானங்களை வாங்க நினைத்த அவர், பிறகு தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு பிரான்ஸ் நாட்டு விமானங்களை வாங்கினார். இதனால் பல கோடி ரூபாய் அந்நியச் செலாவணி அவருக்கு மிச்சமாயிற்று. அவர் தன் முடிவை திடீரென மாற்றிக் கொண்டதற்குக் காரணம் பிரான்ஸ் நாட்டு விமானங்களின் தயாரிப்பு மூல நட்சத்திரம் அன்று தொடங்கப்பட்டது என்பதை கம்பெனியின் ஆவணங்களிலிருந்து தெரிந்து கொண்டதுதான்.
அடியார்
  உன்னுடைய சந்தேகம் நியாயமானதே. பச்சைக் கிளி, புறா, மயில் போன்றவற்றை கூண்டில் அடைத்து வைத்து வீட்டில் வளர்த்தால் அவ்வாறு அடைத்தவர்கள் எதிர்காலத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பதை நாம் வசுதேவர் வாசுகியின் வரலாற்றிலிருந்து அறிகிறோம். ஒரு கிளியை ஒரு வருட காலம் ஒருவர் கூட்டில் அடைத்துவைத்தால் அவர் ஒரு வருட காலம் சிறையில் அடைக்கப்படுவார் என்று கணக்குக் கிடையாது, ஒரு வருடம் என்பது இரண்டு வருட ஆயுள் உள்ள கிளிக்கு பாதி ஆயுள் காலமாக அமைவதால், அவருடைய பாதி ஆயுட்காலம் சிறையில் அடைக்கப்படுவார் என்பதே இறை நியதி. ஆனால், கிளிகள், குருவிகள் சுதந்திரமாக வந்து அமர்ந்து, உணவு, நீர் அருந்தும் வகையில் மரக்கூடுகள், பரண்கள் அமைப்பதில் தவறில்லை. உண்மையில் அத்தகைய கூடுகள் மக்களிடம் மன ஒற்றுமையை வளர்த்து, குடும்பத்தில் அமைதியை நிலை நாட்டும். குடும்பத்தில் பண வரவும் ஏற்படும்.
மீன் வளர்ப்பு என்பது குடும்பத்தில், சமுதாயத்தில் அமைதியை நிலைநாட்ட உதவும் அறப் பணியே. மீன் வளர்ப்பதற்கு முன் அவற்றின் தெய்வீகத் தன்மைகளைப் பற்றி ஆத்ம விசாரம் செய்து பாருங்கள். மிகவும் சுத்தமான ஒரு ஜீவன் என்று சொன்னால் மீனைச் சொல்லலாம். உப்பு நீரிலேயே இருந்தாலும் அதன் உடம்பில் உப்பு சேர்வதில்லை. அதன் தெய்வீகத் தன்மை பற்றியே சிவபெருமானும் செம்படவனாக வந்தார், அன்ன பராசக்தியும் மீனாட்சியாக மதுரையில் தோன்றினாள். பெருமாளும் மச்ச அவதாரம் கொண்டு பூவுலகைக் காத்தருளினார்.
பல மகான்களும் மீன்களின் நல்வாழ்விற்காக அருந்தொண்டாற்றி வந்துள்ளனர். காசி ராஜனின் மகள் உருபதி என்பவள் மீன் குலத்தின் நன்மைக்காக அரும் பெரும் பூஜைகள் செய்தவள். மீன்கள் முக்தி பெற வேண்டும், தண்ணீருக்குள் கண் சிமிட்டாமல் காட்சி பெற வேண்டும், கடல் வளம் பெருக வேண்டும். அது மட்டுமல்ல உலகம் உய்வடைய உத்தம மகனைப் பெற வேண்டும் என்று இவ்வாறு பல உத்தம பிரார்த்தனைகளுடன் வாழ்ந்த உருபதியே மச்சகந்தி என்னும் பெயருடன் கங்கையில் படகோட்டியாய் வந்தாள். அப்போது பராசர மகரிஷி அப்படகில் ஏறி வரவே அவர் மூலம் புனித கங்கையின் சாட்சியாக மச்சகந்தி வியாச மகரிஷியைக் குழந்தையாகப் பெற்றாள். பராசரரும், மச்சகந்தியும் கால நேரம் எதையும் செய்யும், எத்தகைய தெய்வீகப் பிரார்த்தனைகளையும் நிறைவேற்றும் என்ற இறை நியதிக்கு கருவியாய்ச் செயல்பட்டவர்களே. பராசரர் புதல்வரான வியாசர் நான்கு வேதங்களைத் தொகுத்ததோடு மட்டுமல்லாமல் மக்களின் காமத்தை முறைப்படுத்தும் காமசூத்திரங்களையும் உலகிற்கு அளித்துள்ளார்.
மீன் கண்களையுடைய மீனாட்சியாய் மதுரையை ஆட்சி செய்த பராசக்தியின் வல்லமை நீங்கள் அறிந்ததே. கண்களாலேயே ஆட்சி செய்தவள் மீனாட்சி. இன்றைக்கும் உண்மையான ஆளுமைத் திறன் உள்ளவர்கள் தங்கள் பார்வையாலேயே அனைத்தையும் சாதித்துக் கொள்வார்கள். அக்கம்பக்கத்து நாட்டு மன்னர்கள் மீனாட்சி தேவியின் மகிமை அறியாது ஒருமுறை மதுரை மீது படை எடுத்து வந்தபோது அம்மை போர்க்களம் கொண்டு போர்க்களத்திற்குச் சென்றாள். அப்போதிருந்த போர் யானைகளின் உயரம் குறைந்தது 200 அடி இருக்கும். அப்படி 200, 300 அடி உயரம் கொண்ட போர் யானைகள் எல்லாம் குதிரை மேல் பாய்ந்து வரும் தேவியைப் பார்த்தவுடன் தரையில் மண்டி இட்டு வணங்கின. பராசக்தியைப் பார்த்த மன்னர்கள் எல்லாம் தங்கள் தேரிலிருந்து இறங்கி தரையில் வீழ்ந்து வணங்கினர். கண்களால் அனைத்துப் பகைவர்களையும் வென்று வெற்றி வாகை சூடினாள் மீனாட்சி.
மீன்களில் சாத்வீக குணமுள்ள மீன்களையே வளர்க்க வேண்டும். கோல்ட், ஏஞ்சல், மூன் லைட் போன்ற பெயருள்ள மீன்களைத் தேர்ந்தெடுத்து வளர்ப்பது சிறப்பு. பைட்டர் போன்ற பெயருள்ள மீன் வகைகளைத் தவிர்க்கவும். திருமாலின் திருமார்பில் லட்சுமி உறைவதால் திருமால் அவதாரமான மீனிலும் லட்சுமி கடாட்சம் பெருகி மீன் வளர்ப்போரின் வறுமை நீங்க ஏதுவாகிறது. மீன் தொட்டியில் மீன்கள் நன்கு வெளியில் தெரியுமாறு பச்சை, ஆரஞ்ச், மஞ்சள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கலாம். இரண்டு, மூன்று மின் மோட்டர்களை வைத்து மீன் தொட்டியில் எப்போதும் காற்று சுழற்சி இருக்குமாறு மின் விசிறி வசதி செய்யவும். 24 மணி நேரமும் மீன்களுக்கு ஆக்ஸிஜன் காற்றோட்டம் நிறைந்திருப்பது முக்கியம். மீன் தொட்டிக்குள் சிவலிங்கம், நந்தி, கோயில் கோபுரங்கள், மான், மயில், தவளை, ஆமை போன்ற கடவுள் நினைவுகளை ஏற்படுத்தும் பொம்மைகளை வைத்திருத்தல் நலம்.
மனதில் குழப்பம் ஏந்படும்போதெல்லாம் இந்த மீன்களைப் பார்த்துக் கொண்டிருந்தால் பல குழப்பமான சந்தர்ப்பங்களில் நல்ல முடிவுகளை எடுக்கும் மனத்தெளிவு கிட்டும். மீன்கள் பல சமயங்களில் நாம் சந்திக்க இருக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி நம்மிடம் தெரிவிக்கும். தொடர்ந்து மீன்களுடன் பழகி வந்தால் நாளடைவில் அவை நம்மிடம் தெரிவிக்கும் செய்திகளை மனோரீதியாகத் தெரிந்து கொள்ளலாம். உதாரணமாக, ஒரு மீன் அதே இனத்தைச் சேர்த்த மற்றொரு மீனைத் துரத்திச் செல்வதைப் பார்க்க நேர்ந்தால் உனக்கு எதிராக உன் எதிரிகள் ஏதோ திட்டமிடுகிறார்கள் என்று அர்த்தம். மீன் உன்னைப் பார்த்து வாயை அகலத் திறந்து மூடினார் நீ பிறரிடம் வாக்குக் கொடுப்பதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அர்த்தம். மீன் உன்னைப் பார்க்கும்போது கண்ணைத் திறந்து மூடினால் உன்னுடைய மகனோ, மகளோ அவர்கள் மணம் முடித்துச் சென்ற இடத்தில் ஏதோ பிரச்னையை எதிர்நோக்கி உள்ளார்கள் என்பது குறிப்பாகும்.
அடியார்
குருதேவா, தந்திர சாஸ்திரத்தைப் பற்றி பலவிதமான குழப்பங்கள் தற்போது நிலவுகிறதே. அதன் உண்மையான விளக்கத்தை அறிந்து கொள்ள விரும்புகிறோம்.
சற்குரு
மிகவும் துரிதமாக இறைவனைக் காட்டும் மார்கமே தந்திர மார்கமாகும். ஆனால், புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமான வித்தையும் அதுவே. அடியேனுடைய ஆசான் இடியாப்ப சித்தர் அடியேனிடம் கடைசியாக தெரிவித்த குருவாய் மொழியான, ‘பாரு பாரு நல்லா பாரு‘ என்ற மாமந்திரத்தை ஆழ்ந்து ஆத்ம விசாரம் செய்து வந்தால் தந்திர மார்கத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் நீ உத்தமன், நல்லவன். உன்னுடைய பிரதிபலிப்புதான் இந்த உலகம். அப்படியானால் இந்த உலகத்தில் நீ நல்லவர்களையும், உத்தமர்களையும்தானே பார்க்க வேண்டும். உண்மையில் நீ பார்ப்பது என்ன? உன்னைச் சுற்றி கள்வர்களும், நயவஞ்சகர்களும், ஏமாற்றுக்காரர்களும் இருப்பதைத்தானே தினமும் பார்க்கிறாய். இதற்குக் காரணம் என்ன? உன்னை நீ முதலில் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. உன்னைச் சரியாகப் புரிந்து கொள்ளாததற்குக் காரணம், உன்னுடைய எந்தச் செயலிலும் மனம் குவிவது கிடையாது. மனம் ஒருமித்த நிலை என்பது உங்களுக்கு ஏட்டுச் சுரைக்காய் அளவிலேயே இருக்கிறது.
கலியக மனிதனின் மனதை ஒருமைப்படுத்தும் பல வழிமுறைகளுள் சக்தி வாய்ந்த வழிபாட்டு முறையே குறிபாதுகாப்புப் பூஜைகளாகும்.
சூரியனார் கோவில்
எவன் ஒருவன் தன்னுடைய குறியைப் பாதுகாக்கிறானோ அவனுடைய விந்து கெட்டிப்படும். விந்து கெட்டிப்பட்டால் மனம் ஒரு விஷயத்தில் குவியும். குவிந்த மனம் அவனை தியானத்தில் செலுத்தும். தியானத்தில் ஈடுபட்டால் அவன் கடவுளை அடைவான். ஒரு பொருளை அல்லது விஷயத்தைத் இடைவெளியின்றித் தொடர்ந்து 12 வினாடி நேரம் நினைக்க முடிந்தால் அது மனம் குவிதல் எனப்படும், அதாவது கான்சென்ட்ரேஷன். 12ன் 12 மடங்கான 144 விநாடிகள் மனம் ஓரிடத்தில் குவிந்தால் அப்போது தியானம் கை கூடும். 144ன் 144மடங்கான 20736 விநாடி நேரம் தியானத்தில் ஆழ்ந்தால் அதுவே சமாதி நிலையாகும்.
அடியார்
குருதேவா, முறையான குறி பாதுகாப்பு கடவுளைக் காட்டும் என்றால், குறியைப் பாதுகாப்பது எப்படி என்ற இரகசியத்தையும் எடுத்துரைக்க வேண்டுகிறேன்.
சற்குரு
குறியைப் பாதுகாக்க ஆண்கள் கோவணம் அணிய வேண்டும். கோவண இரகசியத்தைப் பற்றி மட்டுமே அகஸ்தியரின் பிரதம சீடரான போகர் 300,000 லட்சம் பாடல்களை எழுதியுள்ளார். இதில் என்ன விதமான துணியில் கோவணம் கட்ட வேண்டும், யார் யார் என்ன நீள அகல அளவுகள் உள்ள கோவணத்தை அணிய வேண்டும், எப்படி அதன் ஓரத்தைத் தைக்க வேண்டும், எப்போது ஈர கோவணம் கட்டலாம் போன்ற பல அற்புத விஷயங்கள் எல்லாம் அவருடைய கோவண கீதையில் அடங்கியுள்ளன. கோவண இரகசியங்களைப் பற்றி நீங்கள் மேலும் அறிந்து கொள்ள வேண்டுமானால் பழநி முருகன் திருக்கோயிலில் ஜீவ சமாதி கொண்டு அருளும் போகர் சித்தரை அடிக்கடி வழிபட்டு வாருங்கள். கலியுகத்தில் கண் கண்ட தெய்வமான பழநி முருகனும், கலியுக மக்களைக் கரையேற்ற வந்த எம் ஈசன் இடியாப்ப சித்தரும் கோவணாண்டிகள்தான் என்பது நீங்கள் அறிந்ததே.
ஆண்கள் புதன், சனிக் கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குறைந்தது மூன்று மணி நேரமேனும் எண்ணெய் தலையில் ஊற வேண்டும். தேங்காய் எண்ணெய் தேய்த்தால் தண்ணீரிலும் (குளிர்ந்த நீர், சாதாரண நீர்), நல்லெண்ணெய் தேய்த்தால் வெந்நீரிலும் நீராட வேண்டும். எண்ணெய்க் குளியல் பகல் நேரத்தில்தான் அமைய வேண்டும்.
நாம் எடுக்கும் முடிவுகளைப் பொருத்தே நம் வாழ்க்கை அமைகிறது. மனிதனின் முடிவுகளை தீர்மானிப்பதே நம் தலையில் உள்ள கபால சூடு என்னும் ஒரு வகைச் சூடாகும். இந்தக் கபாலச் சூட்டை சரியானை நிலையில் வைத்திருப்பதே எண்ணெய்க் குளியலாகும். வேறு எந்த முறையாலும் இந்தக் கபாலச் சூட்டை சீரமைக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வானங்கள் ஓட்டும்போது நாலா பக்கங்களிலும் பார்த்து, பார்த்து உடனுக்குடன் பல முடிவுகளை எடுக்க வேண்டியிருப்பதால் வாகனம் ஓட்டுபவர்களின் மூளை அதிகம் வேலை செய்து கபாலச் சூடு அதிகரிக்கிறது. வாகனம் அதிகம் ஓட்ட வேண்டிய நிலையில் இருப்பவர்களும், கம்ப்யூட்டரில் பணி புரிபவர்களும் கட்டாயம் எண்ணெய்க் குளியலை மேற்கொண்டாக வேண்டும்.
துடையூரில் இரு பத்தினிகளுடன்
எழுந்தருளியிருக்கும் சூரிய பகவான்
உடல் சூட்டை மூன்று வகையாக சித்தர்கள் பிரிக்கிறார்கள். அவை உள்சூடு, நடுசூடு, வெளிசூடு என்பவையாகும். பெண் யோனியும், ஆண்குறியும் நடுசூடு தத்துவத்தில் அமைகின்றன. ஆண்களின் உன்னங் கை வெளிசூடு தத்துவத்தில் அமைகிறது. இதனால் கைமைதுனத்தில் ஈடுபடும் ஆண்களுக்கு சூட்டு பேதத்தால் குறி நரம்புகள் சீர்கேடு அடைகின்றன.
ஆண்களின் விந்துப் பையில் மட்டும் மூவாயிரம் நரம்புகள் உள்ளன. இந்த நரம்புகள் விந்தைச் சுத்திகரிப்பதற்கும், விந்தைக் குறித்த இடத்திற்கு அனுப்புவதற்கும் பயன்படுகின்றன. இவ்வாறு 3000 நரம்புகளால் துõய்மையாக்கப்பட்ட விந்து, மனிதனின் மூன்று இதழ்கள் உடைய சூக்கும முக்கோணச் சக்கரம் வழியாக வெளியேறும்போது மேலும் அது துõய்மை அடைகிறது. கைமைதுனத்தால் விந்து வெளியேறும்போது உடல் நரம்புகள் பலமிழந்து போவதோடு, சூக்கும யோகச் சக்கரங்களும் பலவித தோஷங்களுக்கு உள்ளாகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிவலிங்கம் மட்டும் அல்லாது கோயில் கோபுரங்களில் உள்ள ஆண் பெண் புணர்ச்சி காட்சிகளும் ஆண் பெண் குறி பாதுகாப்பைப் பற்றிய இரகசியங்களைத் தெரிவிக்கின்றன.
அடியார்
குருதேவா, கோபுரத்தில் உள்ள புணர்ச்சி காட்சிகள் மக்கள் மனதில் விரசத்தைத் துõண்டுவதாகச் சொல்கிறார்களே?
சற்குரு
விரசம் உன் மனதில்தான் இருக்கிறது. கோபுரக் காட்சிகளில் விரசம் இல்லை. அந்தக் காட்சிகள் எல்லாம் குறி பாதுகாப்பு முறைகளையே விளக்குகின்றன. அந்தக் காட்சிகளைக் கூர்ந்து கவனித்து வந்தால் இந்த உண்மை நாளடைவில் விளங்கும். சந்தியா வந்தன வழிபாடுகளிலும் குறி பாதுகாப்பு இரகசிய மந்திரங்கள் உண்டு. இவற்றைத் தக்க குருமார்கள் மூலம் அறிந்து கடைபிடித்து வருதல் நலம். தினந்தோறும் ரிஷிகளுக்கு தேவர்களுக்கு அர்க்ய ஆராதனைகள் அளிப்பது போல தன்னுடைய குறிக்கும் அர்க்யம் அளித்து வருவதும் ஒரு வழிபாட்டு முறையே.
முறையாகத் தன்னுடைய குறியை வழிபடத் தெரிந்தவன் கோயிலுக்குக் கூட செல்லத் தேவையில்லை. கோயிலுக்குக் கொடிமரம் அமைவது போல மனித உடலின் கொடி மரமாக விளங்குவது குறியாகும் என்பது சித்தர்கள் சொல்லும் இரகசியம். இந்த உண்மையை உலகிற்கு எடுத்துக் கூறியவரே உமாபதி சிவாசாரியார் என்னும் உத்தமர் ஆவார். உமாபதி சிவாசாரியார் அருளிய கொடிக்கவி துதியை தினமும் ஒதி வந்தால் குறி பாதுகாப்பு இரகசியங்கள் நல்லோர்கள் மூலம் தெரிய வரும். குறி பாதுகாப்பிற்குத் துணை புரியும் பல யோகாசன வழிபாட்டு முறைகள் உண்டு. இவற்றைத் தக்க குருமார்கள் மூலம் அறிந்து நிறைவேற்றி வருதல் நலம்.
சற்குருமார்களின் வருகை கலியுகத்தில் அருகி விடும் என்பதைத் தன் தீர்க தரிசனத்தால் அறிந்த அகஸ்திய மகாபிரபு காமத்தை முறைப்படுத்தி இறைவனை அடையும் மார்கமாக அருளிய சூரிய நமஸ்கார வழிபாட்டு முறையை உங்களுக்கு விளக்குகிறேன். நம் உடலில் இட நாடி, பிங்கள நாடி, சுசும்னா நாடி (சூரிய, சந்திர, சுழுமுனை நாடி) என மூன்று முக்கிய நாடிகள் உண்டு. இவை ஒவ்வொன்றும் அப்பு, வாயு, பிருத்வி, தேயு பூதங்களுடன் தொடர்பு கொள்ளும்போது 12 நாடிகளாகப் பரிணமித்து, அந்த 12 நாடிகளும் ஒன்பது சூக்கும தேகத்தில் நிலை கொள்ளும்போது 108 நாடிகளாக கணக்கிடப்படுகின்றன. இதனால்தான் சுவாமிக்கு அஷ்டோத்திர சத நாமாவளி என்று 108 போற்றிகளைச் சொல்லி வழிபடும்போது மனித உடலில் உள்ள 108 நாடிகளும் துõய்மை அடைந்து அவன் இறைவனை நோக்கி முன்னேறுகிறான்.
யார் ஒருவர் ஸ்ரீஅகஸ்தியர் அருளிய சூரிய நமஸ்கார வழிபாட்டைத் தொடர்ந்து 12 வருடங்கள் நிறைவேற்றி வருகிறாரோ அவருக்குக் கடவுள் தரிசனம் கிட்டும் என்பது உறுதி. 12 ஆசனங்களை, 12 முறை, 12 வருடங்களில் நிறைவேற்றி வந்தால் அது எப்படி தியான, சமாதி நிலைகளைத் தந்து கடவுளிடம் உங்களை இட்டுச் செல்லும் என்ற தத்துவம் ஏற்கனவே உங்களுக்கு விளக்கப்பட்டது.

விடியற்காலை ஆரம்பித்து சூரிய உதயத்திற்குள் இந்தச் சூரிய நமஸ்கார வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும் என்பது விதிமுறை. அவரவர் உடல் நிலையைப் பொறுத்து இந்த வழிபாட்டை நிறைவேற்ற குறைந்தது மூன்று மணி நேரம் ஆகும் என்பதால் அதற்குத் தக்கவாறு தங்கள் துõக்க நேரத்தை அமைத்துக் கொள்ளவும். காலையில் எழுந்து நீராடி, நெற்றிக்கு அணிந்து நல்ல காற்றோட்டமான இடத்தில் இந்த ஆசனங்களை செய்வது நலம். ஒரு நாளைக்கு ஒரு முறை இந்த வழிபாட்டைச் செய்து வந்தாலே போதுமானது. இங்கே 12 ஆசனங்களும் அதற்குரித்தான மந்திரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த 12 ஆசனங்களையும் 12 முறை நிறைவேற்றி வருவது ஒரு நாளைக்குரிய வழிபாடாகும். தங்கள் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு முதலில் ஒரு முறை இந்த 12 ஆசனங்களையும் இட்டுப் பழகி, அல்லது ஒவ்வொரு ஆசனங்களையும் 12 முறை இட்டுப் பழகி, பிறகு படிப்படியாக 12 முறை ஆசனங்களை இட்டு வழிபடுவது நல்லது. எல்லா ஆசனங்களையும் கிழக்கு நோக்கி இட்டு வழிபடவும்.
ஒரு கெட்டியான போர்வை அல்லது ஜமுக்காளத்தை விரித்து அதன் மேல் ஆசனங்களை இடவும். வெறுந் தரையில் எவ்விதமான இறை வழிபாட்டையும் மேற் கொள்ள வேண்டாம். வழிபாட்டிற்கு முன் பிள்ளையார், பெற்றோர்கள், இஷ்ட தெய்வம், குரு இவர்களை மனதில் தியானித்து பின் வழிபாட்டைத் தொடங்குதல் நலம்.

சூரிய நமஸ்கார ஆசனம் ஒன்று
இரண்டு கால்களையும் நேரே நீட்டி அமரவும். பத்மாசனம் இடவும். வலது காலை இடது தொடையின் மேல் வைத்து அல்லது இடது காலை வலது தொடையின் மேல் வைத்தோ பத்மாசனம் இடலாம். இரண்டு கைகளையும் உள்ளங்கைகள் பூமியைப் பார்க்குமாறு பக்க வாட்டில் நீட்டிக் கொள்ளவும். மெதுவாக மூச்சை உள்ளே இழுக்கவும். நன்றாக மூச்சை உள்ளே இழுத்த பின், மூச்சை நிறுத்தி வைக்கவும். மெதுவாகக் குனிந்து தலையால் தரையைத் தொடவும். உள்ளங்கைகள் தரையைத் தொடாமல் தரையிலிருந்து சுமார் ஒரு அங்குல உயரத்தில் வைத்துக் கொள்ளவும். மூச்சை வெளியே விடாமல் நிறுத்தி வைத்துக் கொண்டு ‘ஓம் மித்ராய நமஹ‘ என்று 12 முறை மனதிற்குள் சொல்லவும். மெதுவாக தலையைத் துõக்கி நிமிர்ந்த நிலைக்கு வரவும். மெதுவாக மூச்சை வெளியே விடவும். சகஜமான நிலையில் ஓய்வெடுத்துக் கொண்டு இரண்டாம் ஆசனத்திற்குத் தயாராகவும்.
சூரிய நமஸ்கார ஆசனம் இரண்டு
பத்மானம் இட்ட நிலையில் அமரவும். மூச்சை மெதுவாக, நன்றாக உள்ளிழுக்கவும். கைகளை கால்களுக்குள் நுழைத்து குக்குட்டாசன நிலையில் நிற்கவும். நிமிர்ந்து நேரே பார்க்கவும். மூச்சைக் காற்றை வெளியே விடாமல் றுத்தி வைத்துக் கொண்டு ‘ஓம் ரவியே நமஹ‘ என்று 12 முறை மனதிற்குள் கூறவும். குக்குட்டாசன நிலையிலிருந்து தரையில் அமரவும். மெதுவாக மூச்சை வெளியே விடவும். சகஜ நிலைக்குத் திரும்பி ஓய்வெடுத்துக் கொள்ளவும்.
சூரிய நமஸ்கார ஆசனம் மூன்று
பத்மாசனம் இட்டு அமரவும். மெதுவாகப் பின்னால் சாய்ந்து தரையில் படுக்கவும். கைகளை மடக்காமல் பக்கவாட்டில் உள்ளங்கை வானத்தைப் பார்க்குமாறு வைத்துக் கொள்ளவும். மெதுவாக மூச்சை உள்ளிழுக்கவும். மூச்சுக் காற்றை வெளியே விடாமல் வைத்துக் கொண்டு ’ஓம் சூர்யாய நமஹ’ என்று 12 முறை மனதிற்குள் கூறவும். மூச்சை மெதுவாக வெளியே விடவும். சகஜ நிலைக்குத் திரும்பி ஓய்வெடுத்துக் கொள்ளவும்.
சூரிய நமஸ்கார ஆசனம் நான்கு
பத்மாசனம் இட்டு அமரவும். மெதுவாகப் பின்னால் சாய்ந்து தரையில் படுக்கவும். மெதுவாக மூச்சை உள்ளே இழுக்கவும். கால்கள், இடுப்பை மேலே துõக்கி வைத்துக் கொண்டு கைகளால் இடுப்பை பிடித்துக் கொள்ளவும். உடல் பகுதி நேராகவும். தலைக்கு 90 டிகிரி கோணத்தில் இருக்குமாறும் வைத்துக் கொள்ளவும். மூச்சுக் காற்று வெளியே போகாமல் வைத்துக் கொண்டு ‘ஓம் பாணவே நமஹ‘ என்று 12 முறை மனதிற்குள் கூறவும். மெதுவாக இடுப்பு, கால்களை கீழே இறக்கவும். மூச்சை மெதுவாக வெளியே விடவும். சகஜ நிலைக்குத் திரும்பி ஓய்வெடுத்துக் கொள்ளவும்.
சூரிய நமஸ்கார ஆசனம் ஐந்து
சுகாசனத்தில் அமரவும். கைகளைப் பின்னால் கட்டிக் கொள்ளவும். நேரே பார்க்கவும். மூச்சை மெதுவாக உள்ளே இழுக்கவும். நன்றாக மூச்சை இழுத்து, மூச்சுக் காற்று வெளியே போகாமல் வைத்துக் கொண்டு ’ஓம் ககாய நமஹ‘ என்று 12 முறை மனதிற்குள். கூறவும். மூச்சை மெதுவாக வெளியே விடவும். சகஜ நிலைக்குத் திரும்பி ஓய்வெடுத்துக் கொள்ளவும்.
சூரிய நமஸ்கார ஆசனம் ஆறு
சுகாசனத்தில் அமரவும். கைகளைப் பின்னால் கட்டிக் கொள்ளவும். நேரே பார்க்கவும். மூச்சை மெதுவாக உள்ளே இழுக்கவும். மெதுவாக குனிந்து தலையால் தரையைத் தொடவும். மூச்சுக் காற்று வெளியே விடாமல் வைத்துக் கொண்டு ’ஓம் பூஷ்ணே நமஹ‘ என்று 12 முறை மனதிற்குள் சொல்லவும். மெதுவாகத் தலையைத் துõக்கி நேரே பார்க்கவும். மெதுவாக மூச்சை வெளியே விடவும். சகஜ நிலைக்குத் திரும்பி ஓய்வெடுத்துக் கொள்ளவும்.
சூரிய நமஸ்கார ஆசுனம் ஏழு சாதாரணமாக அமரவும். வலது கையால் வலது காலை சுற்றி வளைத்து வலது கை சனி விரலால் வலது கால் கட்டை விரலைப் பிடித்துக் கொள்ளவும். வலது கால் கட்டை விரலைப் பார்க்கவும். வலது கால் பூமிக்குச் சமமாக இருக்கும்படி வைத்துக் கொள்ளவும். மெதுவாக மூச்சை உள்ளே இழுக்கவும். மூச்சை வெளியே விடாமல் வைத்துக் கொண்டு ’ஒம் ஹிரண்யகர்ப்பாய நமஹ‘ என்று 12 முறை மனதிற்குள் சொல்லவும். மெதுவாக மூச்சை வெளியே விடவும். காலை விடுவித்து சகஜ நிலைக்குத் திரும்பி ஓய்வெடுத்துக் கொள்ளவும்.
சூரிய நமஸ்கார ஆசனம் எட்டு
தண்டால் எடுப்பது போன்ற நிலையில் கை, கால்களை வைத்துக் கொள்ளவும். மூச்சை மெதுவாக உள்ளே இழுக்கவும். மெதுவாக தண்டால் எடுப்பது போன்ற நிலைக்கு வந்து, மூச்சை வெளியே விடாமல் வைத்துக் கொண்டு ‘ஓம் மரீசயே நமஹ‘ என்று 12 முறை மனதிற்குள் சொல்லவும். பழைய நிலைக்குத் திரும்பவும்.மூச்சை மெதுவாக வெளியே விடவும். சகஜ நிலைக்குத் திரும்பி ஓய்வெடுத்துக் கொள்ளவும்.
சூரிய நமஸ்-கார ஆசனம் ஒன்பது
கால்களுக்கு இடையில் சுமார் ஆறு அங்குலம் இடைவெளி இருக்குமாறு வைத்துக் கொண்டு நேரே நிற்கவும். இரு கைகளையும் மெதுவாக தலைக்கு மேலே உயர்த்தி உள்ளங்கைகள் கிழக்கு திசையைப் பார்க்குமாறு வைத்துக் கொள்ளவும். கைகளை உயர்த்தும்போதே, மூச்சை மெதுவாக உள்ளே இழுக்கவும், மூச்சை இழுத்துக் கொண்டே மெதுவாக முடிந்த வரை பின்னே சாயவும். மூச்சை வெளியே விடாமல் வைத்துக் கொண்டு ‘ஓம் ஆதித்யாய நமஹ‘ என்று 12 முறை மனதிற்குள் சொல்லவும். மெதுவாக உடலை நேர் நிலைக்குக் கொண்டு வரவும். மெதுவாக மூச்சை வெளியே விடவும். கைகளைத் தொங்கும் நிலைக்குக் கொண்டு வரவும். சகஜ நிலைக்குத் திரும்பி ஓய்வெடுத்துக் கொள்ளவும்.

சூரிய நமஸ்கார ஆசனம் பத்து
இரண்டு கால்களையும் ஒன்றாக சேர்த்து வைத்துக் கொள்ளவும். மெதுவாக மூச்சை உள்ளே இழுக்கவும். மெதுகாவக் குனிந்து இரண்டு கைகளால் தரையைத் தொடவும். இரண்டு உள்ளங் கைகளும் தரையில் சமமாக படும்படி வைத்துக் கொண்டு முடிந்தால் தலையால் முழங்கால்களைத் தொடவும். மூச்சை வெளியே விடாமல் வைத்துக் கொண்டு ‘ஓம் சவித்ரே நமஹ‘ என்று 12 முறை மனதிற்குள் சொல்லவும். மெதுவாக தலையைத் துõக்கி நேரே பார்க்கவும். மெதுவாக மூச்சை வெளியே விடவும். சகஜ நிலைக்குத் திரும்பி ஓய்வெடுத்துக் கொள்ளவும்.
சூரிய நமஸ்கார ஆசனம் பதினொன்று
இரண்டு கால்களுக்கு இடையில் சுமார் ஒன்பது அங்குலம் இடைவெளி இருக்குமாறு நேரே நிற்கவும். கைகளை மெதுவாக தலைக்கு மேலே உயர்த்தி, உள்ளங்கைகள் கிழக்கு திசையைப் பார்க்குமாறு வைத்துக் கொள்ளவும். கைகளை உயர்த்தும்போதே மூச்சை மெதுவாக உள்ளே இழுக்கவும். மெதுவாக வலது பக்கம் உடலை முடிந்த மட்டும் வளைக்கவும். மூச்சை வெளிவிடாமல் நிறுத்திக் கொண்டு ‘ஓம் அர்க்காய நமஹ‘ என்று 12 முறை மனதிற்குள் சொல்லவும். மெதுவாக நின்ற நிலைக்கு வரவும். கைகளை இறக்கிக் கொள்ளவும். மூச்சை மெதுவாக வெளியே விடவும். சகஜ நிலைக்கு வந்து ஓய்வெடுத்துக் கொள்ளவும்.
சூரிய நமஸ்கார ஆசனம் பன்னிரெண்டு
இரண்டு கால்களுக்கு இடையில் சுமார் ஒன்பது அங்குலம் இடைவெளி இருக்குமாறு நேரேநின்று கொள்ளவும். கைகளை மெதுவாக தலைக்கு மேலே உயர்த்தி உள்ளங் கைகள் கிழக்கு திசையைப் பார்க்குமாறு வைத்துக் கொள்ளவும். கைகைளை உயர்த்தும்போதே மூச்சை மெதுவாக உள்ளே இழுக்கவும்.மெதுவாக இடது பக்கம் உடலை முடிந்த மட்டும் வளைக்கவும். மூச்சை வெளி விடாமல நிறுத்திக் கொண்டு ‘ஓம் பாஸ்-கராய நமஹ’ என்று 12 முறை மனதிற்குள் சொல்லவும். மெதுவாக நின்ற நிலைக்கு வரவும். கைகளை இறக்கிக் கொள்ளவும். மூச்சை மெதுவாக வெளியே விடவும். சகஜ நிலைக்கு வந்து ஓய்வெடுத்துக் கொள்ளவும்.
இங்கே குறிப்பிட்ட 12 ஆசனங்களையும் தொடர்ந்து செய்வது ஒரு சுற்றாகும். இவ்வாறு 12 சுற்றுகள் செய்தால் சூரிய நமஸ்கார பூஜை நிறைவு பெறுகிறது. இந்த 12 சுற்று ஆசனப் பூஜைகளை நிகழ்த்த சுமார் மூன்று மணி நேரம் ஆகும். ஆசனங்களை இட்ட பின் உங்கள் மூச்சு வலது நாசியில் வருவதை உணர முடிந்தால் உங்களுடைய ஆசன முறை சரியாக அமைந்துள்ளது என்று அர்த்தமாகும். அவ்வாறு மூச்சுக் காற்று வலது நாசியில் வரா விட்டால், நீங்கள் சரியான முறையில் ஆசனங்களை இடவில்லை என்பதைப் புரிந்து கொள்ளவும். இந்நிலையில் நீங்கள் ஆசனங்களைத் தொடர்ந்து செய்வது உசிதமல்ல. உடனே எமது ஆஸ்ரமத்தைத் தொடர்பு கொண்டு விளக்கங்களைப் பெற்று சரியான முறையில் ஆசனங்களை இட்டுப் பழகுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
முக்கிய குறிப்புகள்
ஜாதி, மத, இன பேதமின்றி அனைவரும் நிறைவேற்றக் கூடியவையே இங்கு அளித்துள்ள சூரிய நமஸ்கார பூஜை முறைகள்.
ஓரளவு யோகாசனம் தெரிந்து, அதை முறையாகப் பழகியவர்கள் எளிதில் மேற்கண்ட ஆசனங்களை கற்றுக் கொள்ளலாம். யோகாசனம் பற்றி எந்த முன் பயிற்சியும் இல்லாதவர்கள் எமது ஆஸ்மர அடியார்களைத் தொடர்பு கொண்டு நேரடிப் பார்வையிலேயே ஆசனங்களைப் பயிலுமாறு கேட்டுக் கொள்கிறோம். இங்கு குறிப்பிட்ட 12 ஆசனங்களையும் முதலில் ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டு, பின்னர் எல்லா ஆசனங்களையும் ஒரே சமயத்தில் பயிற்சி செய்யலாம்.
ஆரோக்ய நிலையில் உள்ள அனைவரும் இந்தப் பயிற்சிகளால் நன்மை அடைவர். வயது வரம்பு எதுவும் இந்த சூரிய நமஸ்கார பூஜைகளுக்கு விதிக்கப்படவில்லை. குறிப்பாக, இளைய சமுதாய மக்களுக்கு இது அபரிமிதமான பலன்களை அளிக்கக் கூடியது.

12 ஆசனங்களையும் 12 சுற்றுகள் பயில்வதால் பூரண பலன்கள் கிடைக்கும் என்றாலும் அலுவலகம், பள்ளி, இயற்கை சூழ்நிலை இவற்றால் 12 சுற்றுகள் பயில முடியாதவர்கள் முடிந்தவரை 3, 6, 9 சுற்றுகள் ஆசனங்கள் இடுவதால் நல்ல உடல் ஆரோக்யம், மனத் தெளிவு, உன்ன வலிமையைப் பெறுவார்கள் என்பது உறுதி. இவ்வாறு 12 ஆசனங்களையும் பழக முடியாதவர்கள் அவர்கள் விரும்பும் ஏதாவது ஒன்றிரண்டு ஆசனங்களை இட்டு சூரிய நமஸ்கார மந்திரங்களை ஓதி வந்தாலும் அதற்குரித்தான உடல், மன, உள்ள ஆரோக்யத்தைப் பெறுவார்கள் என்பதும் உண்மையே.
குளியல், நெற்றிக்கு இடுதல், கடுக்கன், பூணுõல், தீட்சை போன்ற காப்புச் சாதனங்கள் சூரிய நமஸ்கார பூஜைகளின் பலன்களை பன்மடங்காக விருத்தி செய்யும். முடிந்த மட்டும் இறைச் சின்னங்களை அணிந்து கூடுதல் பூஜா பலன்களைப் பெற்று நலம் அடைய கேட்டுக் கொள்கிறோம்.

பிரமிடின் ஆற்றல்

"பிரமிடின் ஆற்றல்"

அடிப்பாகம் சதுரமாகவும், அதன் நான்கு பக்கங்களை, நான்கு சமமான, இருசமபக்க முக்கோணங்களின் அடிப்பக்கமாகவும் கொண்டு வடிவமைக்கப்பட்டு ஒரு கன வடிவமே-கூம்பு கோபுரமே, பிரமிடாகும். நான்கு முகோணங்களின் உச்சிப்புள்ளிகள் ஒன்று சேரும் புள்ளி பிரமிடின் உச்சிப்புள்ளியாகும்.
இவ்வாறாக வடிவமைக்கப்பட்ட வடிவ கணித கனவடிவமான பிரமிட், பிரபஞ்ச சக்தியை ஒன்றுதிரட்டி சேமிக்கும் தன்மையுடையது என்ற உண்மையை, பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னரே, அக்கால எகிப்திய அறிஞர்கள் அறிந்திருந்தனர். எனவே பிரமிடை வடிவமைத்து, பயன்படுத்தினர். அண்டத்தில் உள்ள சக்தியை ஈர்த்து தன்னுள் தக்க வைக்கும் ஒன்றுதான் பிரமிடாகும். பிரபஞ்ச சக்தியின் வீச்சும், புவி ஈர்ப்பு விசையும் சேர்ந்த கலவையால் பெறப்படும் ஆற்றல் தான் பிரமிடின் ஆற்றலாகும்.
விழிப்புணர்விடன் நிகழும் அகவுடல் பயணத்தில் பெறப்படும் அறிவின் துணைகொண்டு அக்கால அறிஞர்கள் "கீஜாவில்" பெரிய பிரமிடை கட்டினார்கள். இது நம்மை மிக உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும் சாதனமாக அமைக்கப்பட்ட கருவியாகும்.

பிரமிட் தியானம்
பிரமிடின் கீழ் அல்லது பிரமிடுக்குள் அமர்ந்து செய்யும் தியானம் 'பிரமிட் தியான'மாகும். பிரமிடினுள் அமர்ந்து செய்யும் தியானத்தில் சாந்தமான மனநிலையிலிருந்து, மிக உன்னதமான நன்னிலை உணர்வைப் பெறும் அனுபவத் திறனையும் பலர் பெற்றுள்ளனர்.
பிரமிடினுள் அமர்ந்து தியானம் செய்யும் பொழுது, பிரமிட் இல்லாமல் செய்யும் தியானத்தில் பெறும் ஆற்றலைவிட மும்மடங்கு ஆற்றலைப் பெறுகின்றோம்.
பிரமிட் தியானத்தில் தேவையற்ற உணர்ச்சிகளும் எண்ணங்களும் நீங்கி, உடல் முழுவதும் ஒரு ஒய்வு நிலையை அடைந்து, மனம் ஒருநிலைப்பட்டு உள்நோக்கி பயணம் செய்யும் உன்னதமான உணர்வு நிலையைத் தருவதாகப் பலர் கூறுகின்றனர்.
தியானத்தின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு மிக அதிகமன ஆற்றலுள்ள சூழ்நிலையை பிரமிட் உருவாக்குகின்றது. மன அழுத்தம், மனச்சோர்வு இவற்றை நீக்க, பிரமிட் உதவுகின்றது.
பிரமிடினுள் செய்யப்பட்ட பல சோதனைகளிலிருந்து
கீழ்கண்ட உண்மைகள் தெரியவருகின்றன.

பதப்படுத்தி காத்தல்
சாதரணமாக கெட்டுப்போகும் பழம், பால் போன்றவை பிரமிடின் உள்ளே கெட்டுப்போகாமல் இருக்கின்றன். காபி, ஒயின், பழச்சாறு போன்றவற்றின் ருசி அதிகமாகின்றது. பிளேடு, கத்தி போன்றவற்றின் கூர்மை மழுங்காமல் இருக்கின்றன. துர்நாற்றத்தை நீக்கி, அறையின் தூய்மையைக் காக்கின்றது பிரமிட்.

சிகிச்சை அளித்தல்
காயங்கள், கட்டிகள், சிராய்ப்புகள் முதலியான விரைவில் குணமடைகின்றன. உடல் பருமனைக் குறைத்து, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றது. ஆஸ்துமா, பல்வலி, தலைவலி, சளித்தொந்திரவு, இரத்த அழுத்தம், மூட்டுவலி, இதயத்துடிப்பு, தூக்கமின்மை போன்றவற்றை குணப்படுத்துகின்றது. கண் சம்பந்தப்பட்ட நோய். ஜீரணக்கோளாறு, தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் இவைகளை குணப்படுத்தி இளமையை அளிக்கின்றது. பிரமிட் சக்தி!

அகவுடல் பயண அனுபவங்கள்
பிரமிடினுள் தியானம் செய்யும் பொழுது அகவுடல் (சூட்சும சரீரம்) பிரயாணம் மிக எளிதாக நிகழ்கின்றது. பிரமிட் தியானத்தினால் கனவுகள் மிகத் தெளிவாக நினைவில் இருப்பதால் அன்றாட வாழ்வின் அர்த்ததத்தை நன்கு புரிந்துகொள்ள இவை உதவுகின்றன.

பிரமிட் செய்யும் முறை
எந்தப் பொருளைக்கொண்டும் பிரமிட் செய்யலாம். ஒரு பிரமிடின் உயரம் 1 அடி எனில் அதன் அடிப்பக்கத்தின் நீளம் 1.5708 அடியாகவும், முக்கோணத்தின் இருசம பக்கத்தின் நீளம் 1.4945 அடி நீளமாகவும் இருக்கவேண்டும். இங்கு உயரம் என்பது பிரமிடின் உச்சிப்புள்ளியிலிருந்து அடிப்பாகம் வரை உள்ள உயரமாகும்.
ஒவ்வொரு முக்கோணத்தின் இருசம பக்கங்களின் ஒரு பக்கம் அடிப் பக்கத்துடன் உண்டாக்கும் கோணம் 51டிகிரி, 52 நிமிடமாகும். இப்பிரமிட் பெரிய எகிப்திய "கீஜா" பிரமிடின் சிறிய வடிவமாகும். பிரமிடை வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்குத் திசைகளோடு இணைந்திருக்குமாறு, பொருந்துமாறு, நிலை நிறுத்த வேண்டும்.

பிரமிடின் அளவுகள் (அடியில்)
அடிப்பக்கம் உயரம் முக்கோணத்தின் பக்கம்
    4                 2.548                    3.806
    6                 3.822                    5.709
   10                6.370                    9.516
   15                9.555                   14.24
   20               12.740                 19.032