youtube

28 January 2014

குண்டலினி என்றால் என்ன?

குண்டலினி என்றால் என்ன?

குண்டலினி ஒரு நுட்பமான ப்ராண சக்தி. இது கண்ணினால் பார்க்கக் கூடிய உடலுறுப்பு அல்ல.
குண்டலினி சூட்சும பௌதிக சக்தி.
இதன் உறைவிடம் முதுகில் உள்ள தண்டுவடம் என்கின்றனர் சில யோகிகள் 
தொப்புளுக்கும், தண்டுவட ( முதுகெலும்பு ) அடிபாகத்துக்கும் நடுவே உள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
குண்டலினி எல்லோருக்கும் கைவசப்படும் மாந்திரீகம் அல்ல. அது ஒரு ப்ராண சக்தி.
யோகிகள் முதுகெலும்பில் ( தண்டுவடத்தில் ) 3 'நாடிகள்' ( பாதைகள் ) உள்ளன. இவை - சூர்ய, சந்திர, சூட்சும நாடிகள். குண்டலினி சக்தி இந்த 3 நாடிகளில் மூலமாக இயங்குகிறது என்கின்றனர். நாடிகளின் வழியே பிராண வாயு இயங்குகிறது. 
மூலாதாரம்
நமது மூளையில் உள்ள "சஹஸ்ராமம்" என்னும் ஒரு துருவம். கீழே ஆண்குறிக்கும், குதத்திற்கும் இடைப்பட்ட மூலாதாரம் இன்னொரு துருவம். கீழ் மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தி மேலெழும்பி, மேல் மூலாதாரத்தை அடைகிறது என்கின்றனர் யோகிகள்.
குண்டலினியின் வடிவம்
குண்டலம் என்றால் வட்டம் என்று பொருள். எல்லா மனிதர்களின் உடல்களில் உறங்கிக் கொண்டிருக்கும் சக்தி. பாம்பு வடிவில் சுருண்டு படுத்திருக்கும். மூன்று குணங்களான சத்துவ, ரஜோ, தமோ குணத்துக்கு அடங்கி நடக்கும் ஆற்றல் என்பதால், குண்டலினி முக்கோண வடிவிக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.
குண்டலினி பிரபஞ்ச சக்தியாக கூறப்படுகிறது. அண்டமும் (உலகமும்) பிண்டமும் (உடல்) குண்டலினியே. பிரபஞ்சத்தில் உள்ள அணுக்களுக்கு மாபெரும் சக்தி உள்ளது. இந்த அணு சக்தி மாபெரும் ஆற்றலுடையது - இதனால் அணு குண்டுகள் செயல்படுகின்றன. இந்த சக்தி அணுவை 'பிரிக்கும்' போது உண்டாகும் சக்தி பிரபஞ்சத்தை போல், உடலும் 'அணுக்கள்' நிறைந்தது. யூரேனியம் போன்ற குறிப்பிட்ட சில பொருட்களிலிருந்து அணு சக்தி அடையப்படுவது போல, உடலில் ஒரு புள்ளியில் மையம் கொண்டுள்ள குண்டலினியை எழுப்பினால், அது கீழ் மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு தலையில் உள்ள உச்சி மூலாதாரத்தை அடைந்து விட்டால் பல சித்துக்கள், ஆற்றல்கள் கைவசப்படும் என்று யோகிகள் நம்புகின்றனர்.

குண்டலினி மேலெழும்பும் பாதைகள் 
உசுப்பி எழுப்பப்பட்ட குண்டலினி, சூட்சும நாடி மூலம் அல்லது முதுகெலும்பு மையப் பகுதியின் வழியே மூளையை அடைகிறது. இங்கு எது பரம்பொருளுடன் சேர்கிறது. ஒரே தடவையாக உடனேயே குண்டலினி கீழிருந்து மேல் தாவி விடாது. வழியில் ஒவ்வொன்றாக 6 சக்கரங்கள் உள்ளன. இவற்றை கடக்க வேண்டும். முன்பே இரண்டு மூலாதாரங்கள் கூறப்பட்டன. கீழ் மூலாதாரத்திலிருந்து எழுப்பப்பட்ட குண்டலினி, ஆறு 'சக்கரங்கள்' வழியே மேல் நோக்கி பயணிக்கிறது. இந்த 'சக்கரங்கள்' தாமரை மலராக கருதப்படுகின்றன. மேலெழும்பும் பாதையிலுள்ள ஒவ்வொரு தாமரையும், ஒரு ஆன்மீக படியை தாண்டி வருவதை குறிக்கும். ஒரு அடையாளமாக, கற்பனையில் உருவகப்படுத்தப்படுகின்றன.
ஆறு மலர்கள்
அடி மூலாதாரத்திலிருப்பது (தண்டுவடத்தின் அடிபாகம்) சிகப்பு நிற தாமரை, சிகப்பு வண்ணமாக, 4 இதழ்கள் உடையதாக நினைக்கப்படுகிறது. இந்த நிலையை அடைந்த மனிதருக்கு ஞாபக சக்தியும், உள்மனதை கட்டுப்படுத்தும் திறனும் கிட்டும். இந்த நிலை அடைந்தவுடன் மொட்டு போலிருக்கும் தாமரை மலரும்.
இரண்டாவது சக்கரத்தில் 6 இதழ்கள் உள்ள குங்கும சிவப்பு மலர். இங்கு இருப்பது மனிதரின் மிருக வெறி - பிறப்புறுப்புகளில் உறைவது. இந்த 'வெறியை' ஆன்மிக சக்தியாக மாற்றும் சக்தி, இரண்டாவது சக்கரத்தை அடைந்தவர்களுக்கு ஏற்படும்.
தொப்புளில் இருப்பது மூன்றாவது சக்கரம். இது தாமரை மிகுந்த சிவப்பு வண்ணத்துடன் 10 இதழ்களாக இருக்கும். இந்த இடம் வந்தவுடன் உலகின் இன்பங்கள், லௌகிக சாதனைகள் நமக்கு முழுதிருப்தியை தராது என்ற உண்மை புலப்படும். இந்த மூன்றாவது இடத்தில் தான் குண்டலினி சாதகர்கள் கவனமாக இருக்க வேண்டும். இங்கு கீழே தள்ளும் வாயு பலமாக இருப்பதால் குண்டலினி முறைகளை சரியாக கடைப்பிடிக்காதவர்கள் கீழே தள்ளப்படுவார்கள். இதற்கு மேல் 4 வது கட்டத்தை அடைந்து விட்டால் இந்த பயம் இல்லை. அதன் பிறகு மேல்நோக்கி பயணம் தான்.
இதயமே நான்காவது சக்கரம். 12 இதழ்கள் உள்ள நீல நிற தாமரை இதன் அடையாளம். இந்த நிலையில் அமைதி, உலகத்தில் உள்ள அனைவரின் மேல் அன்பு இவை ஏற்படும்.
ஐந்தாவது சக்கரம் கழுத்து 16 இதழ்களுடைய பழுப்பு தாமரை இதன் சின்னம். அழகு, நல்லகுணம், உண்மை இந்த குணங்கள் இந்த இடத்தை அடைந்த யோகிகளுக்கு உண்டாகும். இந்த நிலை தூய்மையான நிலை.
ஆறாவது நிலை, கண் புருவங்கள். இந்த சக்கர தாமரை 2 இதழ்கள் உள்ள வெண் தாமரை. இங்கு யோகிகளுக்கு முழுமையான ஞானம் ஏற்படும்.
இந்த ஆறு சக்கரங்களுக்கு அப்பால் உள்ளது, முன்பு சொன்ன "சஹஸ்ராரம்" என்ற மூலாதாரம். சஹஸ்ராரம் என்றால் ஆயிரம் தாமரைகள், தூய்மையான, சிறந்த வெண்மை நிறத்தை உடையவை. இங்கு தான் குண்டலினி பரம் பொருளுடன் சேர்ந்து சமாதியடைகிறது. ஒவ்வொரு யோகியின் லட்சியம் இந்த சமாதி தான். இந்த நிலை அனுபவிக்க வேண்டியது. வார்த்தைகளால் விவரிக்க முடியாது

No comments: