youtube

26 August 2015

கர்ணன் ஏன் விரலைச் சப்பினான்?

கர்ணன் வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட தான் செய்தபுண்ணியங்கள் அனைத்தையும் தானம் கொடுத்தவன். தானத்திற்கே பெயர் பெற்றவன்.தானம் என்றால் என்ன என்பதை உலகிற்குக் காட்டியவன். அவன் இறந்ததும் கண்ணனால் சுவர்க்கத்துக்கு அனுப்பப்பட்டவன்.
அங்கு சென்று சகலவசதிகளுடன் இருந்தும் அவனுக்கு ஏனோ பசி அடங்கவில்லை. எப்பொழுதும் வயிற்றுப்பசி இருந்து கொண்டே இருந்தது. அவனும் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்துப் போனான். பிறகு சுவர்க்கத்தின தலைவனிடம் சென்று கேட்டான். நான் எவ்வளவு தான தருமங்கள் செய்திருக்கிறேன் எனக்கு ஏன் இக்கொடிய தண்டனைஎனக்கு ஏன் இப்படிப் பசிக்கிறது எனக் கேட்டான்.
தலைவனோ கர்ணா நீ பூவுலகில் வாழ்ந்த காலத்தில் பொன்னும் பொருளும் மனியும் ஏன் உன்னுயிரும்தானமாகக் கொடுத்து பெரும் புகழ் பெற்றவன். ஆனால் சிந்தித்துச் சொல் எப்போழுதாவது யாருக்காகவாது அன்ன தானம் செய்திருக்கிறாயா எனக் கேட்டான்.
கர்ணனுக்குஅன்ன தான செய்ததாக நினைவு இல்லை. அன்ன தானம் செய்யாததால் தான் இப்பொழுது வயிற்றுப்பசி அடங்க வில்லை எனவும் கூறக் கேட்டான். அப்படியானால் இதற்குஎன்ன தான் வழி எனக் கேட்ட போது தலைவன் கூறினான் உனது வலது கை ஆள்காட்டி விரலை வாயில் வைத்துக் கொள் பசி அடங்கி விடும் என்றான்.
கர்ணனுக்கு ஒன்றும் புரியவில்லை. விரலைச் சப்பினால் பசி அடங்குமா என்ன இது என ஐயப்பாடு இருந்தாலும் வேறு வழி இல்லை என வலது கை ஆள் காட்டி விரலைவாயில் வைத்து சப்ப பசி உடனே அடங்கிற்று.
ஒன்றும் புரியாத கர்ணன் இது எப்படி மாய மந்திரம் எனக் கேட்க தலைவன் கூறினான் அன்பின் கர்ணா நீ பூவுலகில் வாழும் போது உன்னிடம் ஒரு வறியவன் பசியுடன் வந்து எங்கு அன்னதானச் சத்திரம் இருக்கிறதென்று கேட்க நீயும் உனது வலது கை ஆள்காட்டிவிரலால் இதோ இப்பக்கம் செல்க என வழி காட்டினாய். அந்த புண்ணியச் செயல் நற்செயல் உனக்கு இப்பொழுது உதவுகிறது எனக் கூற -கர்ணனும் அன்ன தான மகிமையை உணர்ந்தான்.

No comments: