youtube

21 August 2015

அதிசயக் குகை சுருளி மலை சதுரகிரி மலைத் தொடர்

அதிசயக் குகை சுருளி மலை சதுரகிரி மலைத் தொடர்
அத் தவத்தைக் கண்டு சிவபெருமான் தவம் செய்த முனிவர், ரிஷிகளுக்கு தேவலோக வாழ்வைக் கொடுத்து தாமும் “மகா லிங்க” சொரூப மாய் அங்கேயே அமர்ந்திருந்தார். அந்த சொரூபந்தான் இப்போது இருக்கின்ற சதுரகிரி மலை மூலவராகிய மகாலிங்கமாகும்.
பின்பு தேவலோக வாழ்வைப் பெற்ற ரிஷி, முனிவர்கள் மன மகிழ்வோடு “ககன குளிகை” இட்டு ஆகாய வெளியில் பறந்து போகும் போது சுருளி மலையை கடக்கும் போது அங்கு ஏராளமான ரிஷிகளும், முனிவர்களும், சித்தர்களும் அருந்தவம் செய்து கொண்டிருப்பதையும், அந்த வனத்தின் அழகும், தேவலோக கானல்களையும், வனப்பூஞ் சோலைகளும், சப்த கன்னிமார்கள் சிவபெருமானுக்கு புஷ்பம் எடுத்துப் போகின்ற நேர்மைகளும், உதகநீர் அங்காங்கு மிகுதியாய் இருப்பதும், அந்த உதக நீரில் இறங்கிய மனிதர்கள் கல்லாக மாறி இருப்பதும், போன்ற ஏராளமான அதிசயங்கள் நிறைந்த இம் மலையில் தவம் செய்வது முக்கியம் எனத் தெரிந்து அங்கு இறங்கி சில காலம் தவம் செய்து பின்பு கைலாயம் செல்கின்றனர்.
கைலாயத்தில் உள்ளே துர்வாச மகரிஷி, கண்ணுவ மகரிஷி முதலான ரிஷிகள் செல்லும் போது எதிரே இமயகிரி சித்தர் வருகின்றார். ரிஷிகளை வணங்கி ‘சுவாமி தாங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள்’ என்று கேட்க அதற்கு ரிஷிகள் கூறியது ” நாங்கள் சதுரகிரி தபோவனம் என்னும் மாவூற்றில் அருந்தவம் செய்து இறைவன் சிவபெருமானால் கைலாய வாழ்வைப் பெற்று இங்கு வருகையில் சுருளிமலையின் பெருமைகளை அறிந்து அங்கு சில காலம் தவம் செய்து இப்போது தான் இங்கு வருகின்றோம் ” என்றனர்.
இதனைக் கேட்ட இமயகிரி சித்தர் மனம் மகிழ்ந்து உடனே புறப்பட்டு சுருளிமலைக்கு வந்து அங்கு தவம் செய்யும் ரிஷி, முனிவர், சித்தர்களைப் பார்த்து தவம் செய்ய விரும்பி அங்கிருந்த சித்தர்களில் ஒருவரான “பூத நாராயண சித்தரை” அழைத்து மலையில் இருக்கின்ற பூஞ்சோலைகளை கண்டு மகிழ்ந்து குகை வாசம் செய்வதற்கு புடவு செய்ய இடம் பார்த்து ஆற்றோரம் இருக்கின்ற குண்டு மலையில் தலை மட்டும் நுழையும் படியாகவும் உள்ளே விசாலமாகவும் புடவு செய்து [குகை] குகைக்கு முன் பூத நாராயண சித்தரை காவலிருக்க வைத்துச் சொன்னதாவது,
இந்த குகைக்குள் வரவேண்டுமென்ற விருப்பம் உள்ளவர்கள் தவ சிரேஷ்டர்களாக இருந்தால் மட்டும் உள்ளே நுழைய இடம் கொடுக்கும். உள்ளே வரலாம், இவை அல்லாதவர்கள் குகைக்குள்ளே தலையை விட்டால் தலை நுழையாது என்று சொல்லி குகைக்குள் நுழைந்து தவம் செய்து கொண்டிருக்கும் காலத்தில்,
கைலாயத்தில் சிவபெருமானார் நம்மை தினந்தோறும் பூசிக்கின்ற இமயகிரி சித்தரை காணோம் என்று ஞான திருஷ்டியால் பார்க்க அவர் சுருளி மலையில் தவம் செய்வதை அறிகின்றார். சித்தருக்கு வரம் கொடுக்க விரும்பி அம்மை உமையவளுடன் இறைவனும் சுருளி மலைக்கு எழுந்தருள்கின்றார்.
சுருளிமலையில் தவம் செய்கின்ற ரிஷிகள், முனிவர், சித்தர்கள் இறைவனை கண்டு தரிசனம் செய்கின்றனர். அப்போது சிவபெருமான் அவர்களைப் பார்த்து, “அருந்தவ ரிஷி,முனி,சித்தர்களே உங்கள் தவம் முடிந்தவுடன் கைலாய வாழ்வு கொடுப்போம்” என்று சொல்லி விட்டு மாயா சொரூபமாய் இமயகிரி சித்தர் இருக்கின்ற குகைக்குள் நுழைந்தார்.
அந்த புடவுக்குள்ளே வந்த சிவபெருமானைக் கண்டு இமயகிரி சித்தர் மெய் பதறி அடி வணங்கி தெண்டனிட அவரை அழைத்துக் கொண்டு இறைவன் வெளிவருகின்றார்.
வெளியே வந்த இறைவன் சித்தரிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்க அவர் சுவாமி அடியேன் இந்த சுருளிமலையில் புடவில் சில காலம் வசிக்க விரும்புகின்றேன். ஆகையால் தங்களை யான் கைலாயத்தில் தினமும் பூசித்த வழக்கப்படி இங்கேயும் பூசிக்கும் வரம் வேண்டும் என்று கேட்க அதற்கு சிவபெருமானும்,அம்மையும் அப்படியே கொடுத்தோம் என வாக்கருளி, சுவாமி லிங்க சொரூபமாயும், தாய் அம்மை சொரூபமாயும் அமர்ந்தனர்.
அப்போது அங்கிருந்த ரிஷி,முனி,சித்தர்கள் அனைவரும் பார்த்து இறைவன் சிவபெருமானே இந்தப் புடவுக்குள் [குகைக்குள்] நுழைந்தமையால் இந்தப் புடவுக்கு “கைலாசப் புடவு” என்ற பெயருடன் விளங்கட்டும் என்று பெயரிட்டனர். அன்று முதல் இந்தப் புடவு என்ற “கைலாச புடவு” “கைலாசநாதர் குகை” என்ற பெயருடன் இன்று வரை விளங்கு கின்றது. [ கோரக்கர் மலை வாகடம் ]
இந்தியாவிலேயே வேறெங்கும் இல்லாத சிறப்பு மிக்க இறைவன் நுழைந்த அதிசயக் குகை இது ஒன்றுதான்.
Post a Comment