youtube

25 February 2016

செம்பானது ஐந்து மாற்று தங்கமாக கிடைக்கும்

தேரையரின் "தேரையர் வைத்திய சாரம்" என்னும் நூலில் இருந்து பெறப்பட்ட தகவல் இது. புகழான கொக்கு மந்தாரைப் பூச்சாற்றால் நாட்டடா செம்புவிராக னெடையும் பத்து நலமாக ஏழுவிசைக் காய்ச்சித் தோய்த்து ஆட்டடா குகைக்குள்ளே வைத்துருகும் போதிலே அப்பனே கழஞ்சியெடைச் செந்தூரம் போடு தேட்டடா வுருகுவெள்ளி கண்விட் டாடும் தெளிவாக செய்திடில் ஐந்ததுவாகும் மாத்தே. - தேரையர். ஒரு விராகன் எடை அளவு செம்பினை எடுத்து அதனை கொக்கு மந்தாரைப் பூச்சாற்றில் நன்கு தோய்த்து எடுத்து உருக்கிக் கொள்ள கூறுகிறார். அதே செம்பினை மீண்டும் மீண்டும் ஏழுதடவை கொக்கு மந்தாரை பூச்சாற்றில் தோய்த்து எடுத்து உருக்கி எடுத்துக் கொள்ள வேண்டுமாம். இப்படி மீண்டும் மீண்டும் உருக்கி எடுத்த செம்பினை குகையில் வைத்து மீண்டும் உருக்க வேண்டுமாம். அப்படி குகையில் வைத்து உருக்கும் போது முன்னர் செய்து வைத்துள்ள துருசு செந்தூரத்தில் ஒரு கழஞ்சி எடை எடுத்து செம்புடன் சேர்த்து உருக்க வேண்டுமாம். அவ்வாறு சேர்த்து உருகும் போது வெள்ளி கண்விட்டாடுமாம் அப்போது அதை இறக்கிவிட கூடாது என்றும் அந்த நேரதில் மிகக் கவனத்துடன் உருக்கி எடுத்தால் செம்பானது ஐந்து மாற்று தங்கமாக கிடைக்கும் என்கிறார்.

No comments: