youtube

9 March 2016

பஞ்சாட்சரம் என்பது ஐந்து எழுத்துகளால் ஆனது என்று பொருள். இவை "நமசிவய" என்பதாகும்.



"நமசிவய" என்னும் ஐந்தெழுத்து மந்திரம் சிவனின் மூல மந்திரம். சிவம் என்றால் காரணமில்லாத மங்களம் என்று பொருள்.

பிரபஞ்சம் நாதம் அல்லது ஓசையின் தூலவடிவே. இறைவன் நாதமாயும், நாதத்திற்கு அப்பாற்பட்டும் உள்ளான்.

நாதத்தின் நாயகனை நாதத்தால்தான் கட்ட இயலும். "நமசிவய" என்னும் மூலமந்திரத்தை ஓதவேண்டும்.

மந்திரத்தை வாய்விட்டுச் சொல்லுதல் தூலஜபம். ஒலி வெளிவராமலும் நாவசைந்து ஓதுதல் சூக்கும ஜபம். நாவசையாது, ஒலி வெளிவராது உள்ளுக்குள்ளே ஓதுதல்தான் உன்னத காரண நிலை.

"நமசிவய"

இந்த எழுத்துக்களில், ந- பிருதிவியையும், ம- அப்புவையும், சி- தேயுவையும், வ-வாயுவையும், ய-ஆகாயத்தையும் குறிக்கும்.

மனித உடம்பில் சாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம்,விசுத்தி, ஆக்ஞை என்கின்ற ஆதாரங்கள் இந்த பஞ்சபூதங்களுக்கு உரிய இடமாகும் என்கிறார் திருமூலர்.

மேலும், மனித இடம்பில் நமசிவாய என்பது, ந -சுவாதிஷ்டானதில், ம-மணிபூரகத்தில், சி அனாகதத்தில், வ- சிசுத்தியில், ய- ஆக்ஞையில் இருப்பதாக சொல்கிறார்.

திருஞான சம்பந்தர் நான்கு வேதங்களுக்கும் மெய்பொருளாகவிளங்குவது "நமசிவாய" இது எல்லாவற்றிற்குமான நாதன் நாமம் என்றும் சொல்கிறார்.

"நானேயோ தவம் செய்தேன் சிவயநம எனப்பெற்றேன்" என்று பஞ்சாட்சர மகிமையை மாணிக்க வாசகரும் கூறுகிறார்.

No comments: