youtube

5 July 2016

அகத்தியர் குழந்தைப்பேறு தரும் மந்திரம்

அகத்தியர் குழந்தைப்பேறு தரும் மந்திரம்\
"அட்சரமாஞ் சிகாரமுதல் சகலபூவாம்
சிறப்புனனே யிருந்துதான் வருணன்மூலை
நிசமான தாமரையின் மணிதானாவல்
நிலையான பலகையது நீலவஸ்த்ரம்
தலையான வருவைந்து நூறுபோடு
சகலபில்லி சூனியங்கள் தெறித்துப்போகும்
மலையாதே பெரும்பாடு முடனேதீரும்
மங்கையர்க்கு மதலையுண்டா மலங்கிடாதே."

                                                                                                  - அகத்தியர் -


நாவல் மரத்தின் பலகை ஒன்றை எடுத்து அதில் சிவயநமஎன்கிற சிவ மந்திரத்தை எழுதிட வேண்டும். பின்னர் அந்த பலகையின் மீது தாமரை மணிகளையும், ஒரு பூவினையும் வைத்திட வேண்டுமாம். நீல நிறத்திலான ஆடை அணிந்து கொண்டு, மேற்கு முகமாய் அமர்ந்து நாவல் மரத்தின் பலகையை முன்னர் வைத்துக் கொள்ள வேண்டும். சிவயநமஎன்கிற சிவ மந்திரத்தை செபித்தவாறே ஒவ்வொரு பூவாக, ஐநூறு முறை அந்த பலகையின் மீது பூக்களை போட வேண்டுமாம்.

இவ்வாறு செய்வதன் மூலம் பெண்களை பிடித்திருக்கும் பில்லி,சூனியம் போன்றவை விலகி, பெரும்பாடு என்ற நோயும் தீர்ந்து போவதுடன் குழந்தை பாக்கியமும் கிட்டும் என்கிறார் அகத்தியர். தேவையுள்ளவர்களுக்கு இந்த முறையை பரிந்துரைக்கலாம்.

No comments: