youtube

14 December 2016

தக்ஷிணகாளிகே என்றதும் காளியின் சாந்நித்யம் ஏற்பட்டுவிடும். தட்சிணாமூர்த்தி

தக்ஷிணகாளிகே என்றதும் காளியின் சாந்நித்யம் ஏற்பட்டுவிடும். தட்சிணாமூர்த்தி வடிவினரான பைரவரால் ஆராதிக்கப்பட்டதால் தக்ஷிணா. தக்ஷிணா(வலது) புருஷனையும் வாமா(இடது) ஸ்திரீயையும் குறிப்பதால் தக்ஷிணசக்தி, சிவன்; வாமசக்தி காளி. சிவனையும் மிஞ்சி பக்தர்களைக் காத்து முக்தியளிப்பவளாக போற்றப்படுகிறாள் என்கிறது காமாக்யா தந்திரம் எனும் நூல். தக்ஷிணா எனும் பதம் தெற்கு திசையையும் குறிக்கும். தெற்கு யமனின் திசை. அவன் காளி எனும் பெயரைக் கேட்டாலே காத தூரம் ஓடிச் சென்றுவிடுவானாம். தக்ஷிணா எனில் வல்லவள் என்றும் ஒரு பொருள் உண்டு. பக்தர்களுக்கு வரமளிப்பதில் மற்ற தெய்வங்களை விட வல்லவள் இவள். மோட்சப் பிரதாயினி, பரப்ரஹ்ம ஸ்வரூபிணி, தேஜஸ்வினீ, பராசக்தி, திகம்பரீ, சித்விலாஸினி, சின்மயி, அறம், பொருள், விரும்பியதை நல்கும் தர்மம், மோட்சம் என்ற சதுர்வித புருஷார்த்தங்களையும் அருளும் பலஸித்திதாயினீ என அவள் பத மலர்களைப் பணிவோம். கலியில் காளிதேவி சட்டென்று அருள்பவள். இந்த தேவியை உபாசனை செய்தால் இன்பம், துன்பம், அழகு, கோரம், அன்பு, வெறுப்பு, அறம், அதர்மம் என யாவுமே ஒன்றாகவே தெரியும். எருக்கம்பூ, வாழைப்பூ, அரளி, செந்நிறமலர்கள் ஆகியவற்றால், அஷ்டமி, நவமி, அமாவாசை, சிவராத்திரி, பரணி நட்சத்திரம் ஆகிய தினங்களில் அர்ச்சித்தால் வறுமை நீங்கி வளமான வாழ்வு பெருக, தேடி வந்து அருள்வாள் தேவி. இவள் பூஜையில் நறுமணம் மிக்க சாம்பிராணி, குங்குலியம் போன்ற தூபங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும். இந்த காளியின் மந்திரத்தை நதிக்கரையோரம், கடற்கரையோரம், ஏரிக்கரை ஓரம், நல்லநீர் தளும்பும் குளத்தின் கரையோரம், மயானம் போன்ற இடங்களில் ஜபிக்க வேண்டும். இவளை துதிப்பதால் அளவற்ற தைரியம், வாக்குவன்மை, நிகரற்ற செல்வம், தீர்க்க தரிசனம், முக்தி போன்றவை கிட்டும். வாக்கு, மனங்களுக்கு எட்டாத சக்தி படைத்த பராசக்தியான காளியை, வணங்குவோர் வாழ்வில் வளம் பல தந்தருளும் தேவியை வழிபடுவோம். பலனடைவோம்.

No comments: