youtube

22 March 2016

சரகலைபயிற்சி - Sarakalai- சரவித்தை

சரகலைபயிற்சி - Sarakalai- சரவித்தை

சித்தர் கலைகளில் உயர்நிலை கலைகளில்
முதன்மையான கலையே சரகலை
ஆகும்.இக்கலையினை ஆதியில் எம்பெருமான்
ஈசன் மகாசக்தியான அன்னை உமையவளுக்கு
உபதேசித்த உன்னத கலையாகும்.
சித்தர் கலைகள் அனைத்தும் இறைவனாகிய
சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்டு பின்
அடுத்தடுத்து குருகுல வழி உபதேசமாக
சித்தர் பெருமக்களுக்கு உபதேசிக்கப்
பட்டவைகள் ஆகும்.

சிவன் சக்திக்குச் சொல்ல
சக்தி நந்திக்குச் சொல்ல
நந்தி காளங்கிக்குச் சொல்ல
காளங்கி மூலருக்குச் சொல்ல
மூலர் அகத்தியருக்குச் சொல்ல
என்ற சித்தர் பாடலின் படி ஆதி முதல் சித்தர்
எம்பெருமான் ஈசனே ஆகும்.

சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதே
பட்சி தெரிந்தவனை பகை கொள்ளாதே -
சரம் பார்ப்பான் பரம் பார்ப்பான் -
இவை முன்னோர் வாக்காகும். சரம்
தெரிந்தவனிடம் சரசமாடாதே என்பதன் பொருள்
சரகலையை இயக்கத் தெரிந்த வனிடம் சரசம்
என்ற விளையாட்டுத் தனமாக நடந்து
கொண்டால் சரம் கற்றவன் சீறி, சினந்து வாக்கு
விட்டால் அது அப்படியே பலித்து
விடும்.ஏனென்றால் பஞ்சபூத சக்திகள்
அனைத்தும் சரகலையில் தேர்ச்சி பெற்றவனின்
உடல், மனம் ,வாக்கு மூன்றிலும்
ஒருங்கிணைந்து ஆட்சி செய்யும்.
ஆனால் தெய்வீகக் கலையான சரகலையினை
முறைப்படி குருகுல முறையாக தீட்சை
பெற்று இதன் இரகசியங் களை பயிற்சி செய்து
சித்தி பெற்ற வருக்கு மட்டுமே இது
சாத்தியம். சித்தர் நூல்களை படித்து
தானாகவே பயிற்சி செய்து சித்தி பெறுவது
என்பது சாத்தியமாகாது.

ஏனென்றால் சரகலை
எனும் தெய்வீகக் கலையினை அனுபவ
முறையாக சித்தி செய்யும் சூட்சும
இரகசியங்கள் எந்த ஒரு சித்தர் நூல்களிலும்
பகிரங்கமாக வெளியிடப்பட
வில்லை. நவக்கிரகங்களின் செயல்பாடுகளை
கட்டுப்படுத்தும் வல்லமையும், பஞ்சபூத
சக்திகள் இக்கலைக்கு இணங்கி வேலை
செய்வதாலும் சித்தர் பெருமக்கள் இதன்
உண்மை இரகசியங்களை நூல்களில் பதிவு
செய்ய வில்லை. மேலும் தனக்கு இணக்கமான
சீடருக்கு மட்டும் குணம் ,தகுதி அறிந்து
உபதேசமாக தீட்சை அளித்து வந்துள்ளனர்.

நாம் மேலோர் எனப் போற்றப்படும்
மகான்கள்,யோகிகள், சித்தர்கள்,
முனிவர்கள்,ரிஷிகள்,அனைவரும் தெய்வீகக்
கலையான சரகலையில் தேர்ச்சி
பெற்றவர்களே.தான் இறைநிலையில் சித்தி
பெற்று,தன்னை நாடி வரும்
அன்பர்கள் குறையினை நீக்கி நல்வழி
காட்டவும் சரகலையினை பிரயோகம்
செய்துள்ளனர்.

சரகலையின் பிரயோக முறையால் மனம்
சார்ந்த பிரச்சினைகள், உடற்பிணிகள்,தொழில்
முன்னேற்றம்,தலைமைப் பண்பு,அனைத்து
காரிய வெற்றி,தேர்வில் வெற்றி,வெளியூர்
பயணங்களில் வெற்றி,நவகிரகங்களின்
தீமையை அகற்றவும்,கோர்ட் வழக்குகள்
வெற்றி,அனைத்து கலைகளில்
தேர்ச்சி,ஜோதிடம், மாந்திரீகம், மருத்துவம்,
போன்ற துறைகளில் வெற்றி பெறவும்,கடன்
நீங்கி பணம் வருவாய் பெறவும்,வாக்கு சித்தி
பெறவும்,மேலும் தனக்கு வரும் நன்மை
தீமைகளை அறிந்து தானே நிவர்த்தி செய்து
கொள்ளவும்,தன்னை நாடி வரும் அன்பருக்கு
உதவும் பொருட்டு அமையப்பெற்றது சரகலை
சாஸ்திரம் ஆகும்.

மேலும் சரகலை கற்று தேர்ச்சி பெற்றால்
இல்லறத்தில் பூரணத்துவ
நிம்மதி,சந்தோசம்,மகிழ்ச்சி பெறுவதுடன் சரம்
பார்ப்பான் பரம் பார்ப்பான் என்பதற்கிணங்க
ஆன்மீக இறைநிலை மெய்ஞான சித்தியும்
அடையலாம்.

சகோதர சகோதரிகளுக்கு பணிவான
வேண்டுகோள், பதிவு நீளம் பெரிதாக
இருக்களாம், இருப்பினும் ஒருமுறைக்கு
பலமுறை ஊன்றி படிக்கவும். காரணம்
என்னவென்றால் ஆன்மீகத்தில் காலடி எடுத்து
வைக்கும் ஒவ்வொருவரும் இந்த
சரவித்தையை தெரிந்துவைத்து கொள்வது
இன்றியமையாதது. ஏனென்றால் இது உங்கள்
வாழ்க்கையையே மாற்றி அமைக்கும் வள்ளமை
கொண்டது.

நாள், கோள், நட்சத்திரம் இவை முதலான
சோதிட நுட்பங்கள் எதுவுமே அறியாதவர்கள்
தங்கள் மன நினைவினாலே ஐயங்களை
தீர்த்துக் கொள்ள ஏதேனும் வழி உள்ளதா??
என்று உமாதேவி கேட்க!! அதற்கு
சிவபெருமான் உபதேசித்த கலையே சரகலை
அல்லது சரவித்தை.

கலைகளிலேயே முதன்மையானதும்
சிறப்பானதும் இந்த சரகலைதான் என்பது
அனுபவஸ்தர்கள் வாக்கு. காலை எழுந்தது
முதல் இரவு உறங்கப்போகும் வரை
உங்களுக்கும், உங்களை சுற்றி
உள்ளவர்களுக்கும் என்ன நடக்கப் போகின்றது
என்பதை இந்த சரகலையை கொண்டு 100%
சரியாக கணித்துவிடலாம். உங்களிடம் ஒருவர்
நல்லதுக்காக வருகிறாரா?? அவர் பேசுவது
உண்மையா?? இந்த நாள் உங்களுக்கு எப்படி??
போகும் காரியம் வெற்றி பெருமா?? என
அனைத்தையும் துள்ளியமாக
கணித்துவிடலாம்.
சரம் என்றால் சுவாசம் என்று பொருள்.

பொதுவாக நமது சுவாசம் மூன்று விதமாக
இயங்குகின்றது. அதாவது சுவாசம் இடது
பக்கமாக ஓடினால் இடகலை அல்லது
சந்திரகலை என்றும், வலது பக்கமாக ஓடினால்
பின்கலை அல்லது சூரியகலை என்றும்,
இரண்டிலும் ஓடினால் சுழுமுனை என்று
கூறுவர். இந்த சுழுமுனை சுவாசம் ஓடினால்
எந்த வேலையும் செய்யாமல் தியானத்தில்
மட்டும் அமர்ந்திருப்பதே நல்லது, மற்ற
வேலைகள் செய்தால் நடக்காது. சுவாசம்
வலது பக்கமாக ஓடினால் உடலால் செய்யும்
கடினமான வேலைகளை செய்வது சிறந்தது.

சுவாசம் இடது பக்கமாக ஓடினால் மனதால்
செய்யும் வேலையே சிறந்தது. மேலும்
சுவாசம் எந்த பக்கம் ஓடுகின்றதோ அதை
பூரணம் என்றும், சுவாசம் ஓடாத பக்கம்
சூனியம் என்றும் வகுத்துள்ளனர்.

உதாரணத்திற்கு உங்களுக்கு வலது பக்கம்
சுவாசம் ஓடுகின்றது என்று வைத்து
கொண்டால், வலது பக்கத்தை பூரணம்
என்றும், சுவாசம் ஓடாத இடது பக்கத்தை
சூனியம் என்று பொருள் கொள்ள வேண்டும்.

சரமாகிய சுவாசம் ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு பக்கத்தில் தொடங்க வேண்டும்
என்ற விதியுள்ளது. அது யாதெனில் திங்கள்,
புதன், வியாழன்(வளர்பிறை), வெள்ளி ஆகிய
நாட்களில் சுவாசம் இடது பக்கத்திலிருந்து தொடங்க வேண்டும். அதே போல் செவ்வாய்,
வியாழன்(தேய்பிறை), சனி, ஞாயிறு ஆகிய
நாட்களில் சுவாசம் வலது பக்கத்திலிருந்து தொடங்க வேண்டும். ஒருவேலை அந்த
நாளுக்குரிய சரம் ஓடாமல் வேறு சரம்
ஓடினால் நோய், பொருள் இழப்பு, மனக்கஷ்டம்
போன்றவை ஏற்படும். உதாரணதிற்கு திங்கள்
அன்று சுவாசம் இடது பக்கம் தொடங்காமல்
வலதில் தொடங்கினால் நோய் உண்டாகும்.

ஒருவருடைய சரம் சரியாக இயங்குகின்றது
என்பதை எப்படி கண்டுணர்வது என்றால்,
காலையில் கண்விழித்த உடனே உங்களது சரம்
(சுவாசம்) அந்நாளுக்குரிய சரத்தில்
ஓடுகின்றதா?? என்று கவனியுங்கள்.
அப்படி
ஓடினால் அந்நாள் உங்களுக்கு நன்மையான
நாள். உதாரணதிற்கு திங்கள் அன்று
கண்விழித்த உடனே உங்கள் சுவாசத்தை
கவனித்தால் இடதுபக்கத்தில் ஓடி
கொண்டிருக்க வேண்டும். அதற்கு பிறகு
சுவாசம் எந்த பக்கம் வேண்டுமானாலும்
மாறிக்கொள்ளலாம். தவறில்லை. ஆனால்
அப்படி ஓடாமல் திங்களன்று சூரியனுக்குரிய
வலதுகலையில் தொடங்கினால் நோய்
ஏற்படுவது 100% உறுதி. எழுந்த உடனே
சுவாசத்தை கவனித்து சரத்தை மாற்ற
கற்றுக்கொண்டால் நோயிலிருந்து தப்பித்துக்
கொள்ளலாம்.

அக்காலத்தில் முனிவர்கள் கையில் தண்டம்
என்ற ஒன்றை வைத்திருப்பார்கள்.
அது இந்த
சுவாசத்தை மாற்ற உதவும் கருவியே தவிர
வேறு ஒன்றுமில்லை. சுவாசத்தை எப்படி
மாற்ற வேண்டும் என்றால் அதற்கு பல வழிகள்
உண்டு. அவை

1. படுக்கையிலிருந்து எழும்போது எந்த
காலை முதலில் தரையில் அழுத்தி
ஊணுகின்றீர்களோ அந்த பக்கம் சுவாசம்
மாறிக்கொள்ளும்.

2. படுக்கையிலிருந்து எழாமல் எந்த பக்கம்
ஓடவேண்டுமோ அதற்கு எதிர் பக்கம் திரும்பி
படுத்துக்கொண்டு சுவாத்தை கவனிக்க
வேண்டும். உதாரணதிற்கு வலது பக்கம் சரம்
ஓடவேண்டும் என்று வைத்துக் கொள்வோம்,
உடனே இடது பக்கமாக திரும்பி படுத்து,
இடது கையை மடித்து தலைக்கு கீழே
வைத்து, கால்களை நீட்டி வலது கையை
வலது தொடை மீது வைத்துக்கொண்டு
உங்கள் சுவாசத்தை கவனித்தால், தானாகவே
சுவாசம் வலது கலைக்கு மாறிகொள்ளும்.

3. அல்லது நிமிர்ந்து உட்கார்ந்து இடது
தொடை மீது வலது காலைப் போட்டு
உட்கார்ந்தால் சுவாசம் வலதில் மாறியோடும்.
இதுவே கால்மேல் கால் போட்டு உட்காரும்
முறை. ஷிரடி பாபா படத்தை பார்த்தால்
புரியும்.

4.அல்லது உட்காரும்போது இடது கையை
தரையில் அழுத்தி சற்று இடது பக்கம்
சாய்ந்தவாறு உட்கார்ந்தால் சரம் வலதில்
மாறியோடும்.

5.அல்லது இடது அக்குலில் ஒரு கணமான
துண்டை மடித்து வைத்து கொண்டால்,
சுவாசம் வலதில் மாறிக்கொள்ளும்.

இவை அனைத்தும் சூரிய உதயத்திற்கு 20
நிமிடத்திற்கு முன்போ அல்லது உதயத்திற்கு
பின் 20 நிமிடத்திற்கு உள்ளாகவோ செய்து
கொண்டால் கூட போதுமானது. பிரம்ம
முகுர்த்தத்தில் செய்தால் மிக்க பயன் உண்டு,
அதாவது சூரிய உதயத்திற்கு 1 1/2 (4.30
A.M)மணி நேரத்திற்கு முன் உள்ள காலம்.

சுவாசத்தை கவனித்தல் என்பது இயற்கையான
தியான முறையாகும். எனவே இதில்
தியானமும் அடக்கம். புத்தரின் விபாசான
சுவாசத்தை என்னேரமும் கவனித்தலே ஆகும்.
இப்படி கவனிப்பதால் சரம் இடம்,வலம்,சுழுமுனை என மாறுவதை கவனிக்க முடிவும்.

மேலும் சுழுமுனை சுவாசம் ஓடும்போது
கவனித்தலே தியானமுறைகளில் சிறந்தது,
இதற்கென்று வேறு எதுவும் தேவையில்லை.

இப்படி கவனிக்கும் போது உங்களை சுற்றி
என்ன நடக்கின்றது?? எது உண்மை?? என
அனைத்தையும் துள்ளியமாக கண்டறிய
முடிவும்.

அது எப்படி?? ஒருவர் உங்களிடம் பேசுகின்றார்
என்றால், அவர் எந்த பக்கத்தில் வந்து
நிற்கின்றார் என கவனிக்கவும். அதாவது
உங்களின் வலது பக்கமாவா? அல்லது இடது
பக்கமாவா? என்று கவனிக்கவும். அவர்
உயரமான இடத்தில் நின்று பேசினாலோ
அல்லது உங்களிடம் நேருக்கு நேர் நின்று
பேசினாலோ அல்லது இடது பக்கத்தில் நின்று
பேசினாலோ உங்களின் இடது பக்கத்தில்
நிற்கின்றார் என கொள்ளவேண்டும். இதுவே
உங்கள் வலது பக்கத்தில் நன்றாலோ அல்லது
உங்களை விட தாழ்வான இடத்தில் நின்றாலோ
அல்லது உங்களுக்கு பின்னாடி நின்றாலோ
உங்களின் வலது என கொள்ளவேண்டும்.

இப்படி வலது, இடது என்பதை வைத்தே
அனைத்தையும் கணித்து விடலாம். முன்பே
கண்டது போல பூரணம் என்பது சரம் ஓடும்
பக்கம், அதுபோல் ஓடாத பக்கம் சூனியம்.

ஒருவர் சரம் ஓடும் பக்கம் நின்று எதாவது
பேசினால் அல்லது கேட்டால் அது உண்மை
மற்றும் நடக்கும் என்று பொருள், ஓடாத பக்கம்
நின்றால் அது பொய் மற்றும் நடக்காது என்று
பொருள். இது போன்று சகலத்தையும்
துள்ளியமாக கணிக்கலாம்.

திசைகளில் சூரியனுக்குரிய திசை கிழக்கு
மற்றும் வடக்கு ஆகும். அதுபோல்
சந்திரனுக்குரிய திசை மேற்கு மற்றும் தெற்கு
ஆகும். ஒருவருக்கு சரம் வலதில் ஓடும்
காலத்தில் சூரியனுக்குரிய திசையில் பயணம்
செய்தால் காரியம் நன்மையில் முடியும்.

அதுபோல் இடதில் ஓடினால் சந்திரனுக்குரிய
திசையில் செல்வது நல்லது. சந்திரன்
ஓடும்போது சூரியதிசையிலோ அல்லது
சூரியன் ஓடும்போது சந்திரதிசையிலோ
சென்றால் காரியம் சித்திக்காது.

சூரியசரம் நடக்கும்போது அதற்குரிய
திசையில் செல்லாமல் மாறாக
செல்லவேண்டும் என்றால் வலது காலை
முன்வைத்து ஒற்றையடியாக மூன்றடி தூரம்
நடந்துவிட்டுப் பயணத்தை தொடங்க
வேண்டும்.இதேபோல் சந்திரசரத்திற்கு இடதுகாலை முன்வைத்து செல்ல
வேண்டும். இரண்டுசரமும் ஒன்றாக நடந்தால்
இரண்டு கால்களையும் ஒன்றாகக்
கூட்டிவைத்து மூச்சடக்கி தத்தித்தத்தி
மூன்றுமுறை சென்றுபின் பயணம் செய்ய
வேண்டும்.

அதேபோல் ஒரு நல்ல ஒழுக்கநெறியுள்ள
உயர்ந்த மனிதரை சந்திக்கும் போது உங்களில்
பூரண பக்கத்தில் அவர் உள்ளபடி
நின்றுகொண்டால் மிக்க நன்மை தரும்.

அதேபோல் வழக்கு, தீயவர் போன்றோரை
சந்திக்க நேர்ந்தால் உங்களின் சூனிய
பக்கத்தில் அவர் உள்ளபடி செய்து கொண்டால்
அவர் பலம் குன்றிவிடும்.

கோவிலுக்கு செல்லும்போதும் உங்கள்
பூரணபக்கம் சுவாமியும், சுவாமியின்
பூரணபக்கம் நிங்களும் இருந்தால் மிக்க பலன்
உண்டு. அந்தந்த நாளுக்குரிய சரம் சுவாமிக்கு
முழுவதுமாக ஓடுவதாக கணக்கில் கொள்ள
வேண்டும்.

#எச்சரிக்கை- உலகையே ஆண்டுவந்த
ராஜவம்சத்தினர் இன்று இருந்த தடம்
தெரியாமல் அழிந்து மண்ணான காரணம், இது
போன்ற தெய்வ கலையை தவறாக தன்
சுயநலத்திற்காக பயன்படுத்தினதால்தான்
என்பது மறுக்க முடியாத உண்மை.

"சரம் பார்ப்பவனிடம் சரசம் கொள்ளாதே"
என்பது முன்னோர் வாக்கு. ஏன்னென்றால் "
சரம் பார்ப்பவன் பரம் பார்ப்பவன் ஆவான்".
எனவே நல்லவழியில் இதை பயன்படுத்தினால்
தெய்வத்திற்கு நிகராக கொண்டு செல்லும்
என்பது உறுதி.

#குறிப்பு- அடிப்படை சரவித்தையை மட்டுமே
இங்கு பதிவுசெய்ய பட்டுள்ளது. அனைத்தும்
தெரிய வேண்டும் என்றும் படத்தில் உள்ள
புத்தகத்தை கையில் வைத்து கொள்ளுங்கள்.

மேலும் சரவித்தையை குருமுகமாகதான்
மட்டுமே கற்க வேண்டும் என்று
சொல்வார்கள். அதை நம்ப வேண்டாம்.
இலவசமாக கிடைத்தால் கற்று கொள்ளுங்கள்.

பணம் கொடுத்து கிடைத்தால் இதையேதான்
சொல்ல போகிறார்கள். முன்பே கூறியது
போல் "சரம் பார்ப்பவன் பரம் பார்ப்பவன்". பணம்
பார்ப்பவன் அல்ல. குருவின் மீதும் திருவின்
மீதும் நம்பிக்கை வைத்து தொடங்குங்கள்.

மற்றவை தானாகவே வந்து சேரும்.இயற்கையு
ம் இறைவனும் கண்டிப்பாக ஒருவனுக்கு
நன்மையை மட்டுமே செய்வார்கள்.

வருடத்தில் எல்லா நாட்களும் எல்லா
நேரங்களிலும் சரம் பார்க்க வேண்டும் என்ற
அவசியம் இருந்தாலும், சரம் தானாகவே
சரியாக நடக்க ஒரு வழி உண்டு. அதாவது சரம்
பார்ப்பதில் நாள் சரம், நட்சத்திர சரம், திதி சரம்,
பஞ்சபூத சரம் மற்றும் அயன சரம் என்ற
முறைகள் உண்டு. இதில் அயன சரத்தை தவிர
மற்ற எல்லா சரங்களும் அடிக்கடி பார்த்து
சரிசெய்வது. ஆனால் அயன சரம் மட்டும்
வருடத்தில் இரண்டே நாட்கள் மட்டுமே பார்க்க
முடியும். மேலும் இந்த இரண்டு நாட்களில்
சரத்தை சரியாக நடக்கவிட்டால் போதும்,
வருடத்தில் எல்லா நாட்களிலும் சரம் சரியாக
நடக்கும்.

ஆடி மாதம் முதல் தேதி முதல் சூரியன்
தெற்கு நோக்கி நகரும் தட்சிணாயண காலம்
என்றும், வடக்கு நோக்கி நகரும் காலம் தை
மாதம் முதல் தேதி முதல் உத்தராயண காலம்
என்றும் சொல்வர். அயனம் ஆரம்பமாவதற்கு
முதல் நாள் பகலில் ஒருபொழுது மட்டுமே
உணவு உண்டு பரிசுத்தமாக இருந்து மறுநாள்
உத்தராயண மாகிய தைமாதம் முதல் தேதி
பொழுது விடிவதற்கு முன் ஐந்து நாழிகை
இருக்கும்பொழுது சரம் பார்க்க வேண்டும்.

அப்படி பார்க்கும் பொழுது எந்த நாளாக
இருந்தாலும் கவனிக்க தேவையில்லை. சரம்
இடதுபக்கமாக ஐந்து நாழிகை நேரம் சிதறாமல்
ஓட வேண்டும். தட்சிணாயணம் ஆடி மாதம்
முதல் தேதியானால் சரம் வலது பக்கத்தில்
ஐந்து நாழிகை நேரம் சிதறாமல் ஓட
வேண்டும். அவ்வாறு சரம் ஓடினால்
வருடத்தில் எல்லா நாட்களும் நலமாக
அமையும்.

இந்த சரவித்தையை படிப்பதோடு மட்டும்
விட்டுவிடாமல் உங்கள் வாழ்க்கையில் இதை
ஒரு அங்கமாக கொண்டால் அனைத்தும்
நன்மையாகவே நடக்கும் என்பது உறுதி.

அனைத்தையும் நன்கு புரியும்வரை
ஒருமுறைக்கு பலமுறை படித்து பலன் பெற
வேண்டும் என்பது பணிவான வேண்டுகோள்.

சரம் பார்த்தலை அதிகாலை 4 முதல் 6 மணி
வரை பார்த்து, தவறாக நடந்தால் சரிசெய்து
கொள்ள வேண்டும். துள்ளியமாக
கூறவேண்டும் என்றால் சூரிய உதயத்திற்கு
இரண்டு மணி நேரத்திற்கு முன் பார்க்க
வேண்டும். இதை பிரம்மமுகுர்த்த நேரம்
என்றும் வள்ளலார் இதை அமுதகாற்று
இறங்கும் நேரம் என்றும் கூறுவார்.

வள்ளலாரின் உபதேசத்தில் (அதிகாலை
எழுந்திருந்து இறைவனை வணங்குதல்)
என்பதன் காரணம் இதுதானாகும். இப்படி
எழுபவர்களுக்கு அந்த நாள் முழுவதும்
கிடைக்க வேண்டிய பயன் அந்த இரண்டு மணி
நேரத்திலேயே கிடைத்துவிடும் என்பார்.

சொல்ல கணக்கில்லாத பல நன்மைகளை இந்த
இரண்டு மணி நேரம் தன்னுல் அடக்கியுள்ளது.

வள்ளலார் உபதேசங்களை நன்கு அறிந்தவர்
இந்நேரத்தை சிறப்பாக பயன்படுத்திகொள்வர்.

முடியாதவர்கள் இதற்காக கஷ்டபட
தேவையில்லை, 4.30 மணிக்கு விழிப்பு
வந்ததும் சரத்தை கவனித்து அதற்கு ஏற்றது
போல் திரும்பி படுத்துக் கொண்டு உங்கள்
சுவாசத்தை கவனித்தலோ, இறை பிராத்தனை
செய்தலோ, அங், மோ, ஓம் போன்ற எதோ ஒரு
மந்திரத்தை மனதால் தொடர்ந்து உட்சரிப்பதோ,
கண்களை மூடி உள்ளே தெரியும் இருளை
கவனிப்பதோ போன்ற எதாவது ஒன்றே
போதுமானது, படுக்கையிலிருந்து
எழவேண்டிய அவசியமில்லை.
புறதூய்மையை விட அகதூய்மையே
சிறந்தது. இந்நேரம் நீங்கள் செய்யும்
செயலுக்கு பலன் ஆயிரம் மடங்கு அதிகமாக
கிடைக்கும் என்பது உறுதி. முயற்சி செய்து
பாருங்கள் தியானத்திற்கு என்று தனி நேரம்
ஒதுக்க தேவை இருக்காது. உங்கள் உள்ளினும்
உங்களை சுற்றியும் நல்ல மாற்றத்தை உணர
ஆரம்பிப்பீர்கள்.

இருப்பினும் திங்கள் காலையில் எழுந்தவுடன்
சரம் பார்க்க மறந்துவிட்டிர்கள் என்று
வைத்துக்கொள்வோம். அந்த நாளில்
முதல்முதலாக நீங்கள் கவனிக்கும்
சுவாசத்தையே கணக்கில் கொள்ள வேண்டும்.

அது பகலாகட்டும், மதியமாகட்டும்,
மாலையாகட்டும் நீங்கள் கவனிக்கும் முதல்
சுவாசம் இடதில் ஓடும். அதன்பின் ஐந்து
நிமிடத்திலோ அல்லது அதற்குமேல் பார்த்தால்
சரம் மாறிக்கொள்ளும் அதில் தவறில்லை.

அப்படி இல்லாமல் நீங்கள் கவனிக்கும் முதல்
சரம் வலது பக்கத்தில் நடந்தால், சரத்தை
இடது பக்கத்தில் மாற்றி கொண்டாலே
போதுமானது. சிலருக்கு காலை எழுந்தவுடன்
சரம் சரியாக நடக்கும் பின் சிறிது நேரம்
கழித்து சரம் மாறி நடக்கும். அதில் எந்த ஒரு
தவறும் இல்லை. நீங்கள் கவனிக்கும்
முதல்முதல் சரத்தையே கணக்கில் கொண்டு
சரி செய்ய வேண்டும். அதற்கடுத்து நடக்கும்
சரங்கள் மாறி நடந்தால் தவறில்லை.

நாம் சில முக்கிய காரியங்கள் செய்யும்முன்,
அச்செயலுக்கு ஏற்ற சர ஓட்டத்தை
மாற்றிவிட்டு செய்தால் அது நிச்சயம்
பலிக்கும். அல்லது சர ஓட்டத்திற்கு தக்கபடி
செயல்களில் ஈடுபட்டால் செய்யும் காரியம்
தோல்வியை தழுவாது, வெற்றியை
கொடுக்கும்.

நமக்கு #வலப்புறம் (பிங்கலை)
மூச்சோட்டம் செல்லும்போது செய்யப்பட
வேண்டிய காரியங்கள்:-
1. உணவு உட்கொள்வதற்கு.
2. குளிப்பதற்கு.
3. மலம் கழிப்பதற்கு.
4. முக்கியமானவரைக் காணுவதற்கு.
5. விஞ்ஞான, கணித ஆய்வு செய்வதற்கு.
6. கடினமான தொழில் செய்வதற்கு.
7. பணம் கோரி பெறுவதற்கு.
8. தன் பொருளை விற்பணை செய்வதற்கு.
9. நோய் தீருவதற்கு, மருந்து
உட்கொள்வதற்கு.
10. போதனை செய்வதற்கு.
11. தீராத வழக்கு தீருவதற்கு. 12.
உறங்குவதற்கு. மேற்கண்ட காரியங்களை
நமது மூச்சோட்டம் சூரியகலையில்
இருக்கும்போது செய்ய, அவை சுபமாக
முடியும். சூரியகலை ஆண்தன்மையுடையது.

நமக்கு #இடப்புறம் (இடகலை) மூச்சோட்டம்
செல்லும்போது செய்யப்பட வேண்டிய
காரியங்கள்:-
1. தாகம் தீர்க்க நீர் அருந்துதல். 2. பொருள்
வாங்குதல்.
3. ஜலம் (சிறுநீர்) கழிப்பதற்கு. 4. சொத்துகள்
வாங்குவதற்கும், பதிவு செய்வதற்கும்.
5. வீடுகட்ட, கடகால் தோண்டுவதற்கு.
6. புதுமனை புகுதல்.
7. சிகை அலங்கரிக்க.
8. ஆடை, ஆபரணம் வாங்குவதற்கு.
9. விவசாய நாற்று நடுவதற்கு. 10. தாலுக்கு
பொன் வாங்குவதற்கு.
11. தாலி கட்டுவதற்கு.
12. கிணறு வெட்டுவதற்கு.
13. புதிய படிப்பு படிக்க.
14. அரசியல் அமைச்சர்களை பார்க்க.
மேற்கண்ட காரியங்களை நமது மூச்சோட்டம்
சந்திரகலையில் இருக்கும்போது செய்ய,
அவை சுபமாக முடியும், என்று ஞான சர
நூல் கூறுகிறது. சந்திர கலை பெண்
தன்மையுடையது.

நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர் நாளை
இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும்
கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்று
கூறுகின்றார் என வைத்துக் கொள்வோம்.

தொலைக்காட்சி உங்களுக்கு இடது பக்கத்தில்
உள்ளது என வைத்துக் கொள்வோம்.

உங்களுக்கு அந்நேரம் இடது பக்கத்தில் சரம்
நடந்தால் முதலில் சொன்ன இந்தியாவுக்கு
வெற்றி எனவும், சரம் வலது பக்கம் நடந்தால்
இரண்டாவதாக சொன்ன ஆஸ்திரேலியாவுக்கு
வெற்றி என பொருள். இதேபோல் உங்கள்
மனைவி உங்களது வலது பக்கத்தில் நின்று
கொண்டு தனக்கு வரவேண்டிய 1000
பணத்தை தன் தோழியிடம் வாங்கி வருகிறேன்
என கூறும்போது உங்களுக்கு வலது பக்கம்
சரம் ஓடினால் கிடைக்கும் என்றும், இடது
பக்கம் ஓடினால் கிடைக்காது என்று பொருள்.

அதுபோல் கூட்டத்தில் இருக்கும் போது
ஒருவர் பேசிக்கொண்டிருப்பதை நீங்கள் கேட்க
நேர்ந்தால் அதிலும் உங்களுக்கு அவர் பக்கம்
மூச்சு ஓடவில்லை என்றால் அவர் பேசுவது
பொய் என பொருள்.

இவ்வாறு வழக்கு, அரசியல் என
அனைத்தையும் நீங்கள் உங்களது மூச்சை
கவனித்து சரியான படி நடந்தும், துஷ்டரை
கண்டால் தூர விலகியும், முடிந்தவரை
நன்னெறி கூறி திருத்தியும், உண்மைக்கு
புறம்பாகவும் சுயநலமாகவும் நடக்காதபடி
நல்வழி செல்லவும் நல்வழி காட்டியாக இந்த
சரசாஸ்திரமே அமையும்.

மேலும் உங்களிடம் ஒருவர் தனது நோய்
குணமாகுமா?? என கேட்டால், கேட்பவர் பக்கம்
உங்கள் சரம் ஓடினால் குணமாகிவிடும் என்று
பொருள். அதேபோல் உங்களுக்கு அவர் பக்கம்
மூச்சோடி அவருக்கும் உங்கள் பக்கம்
மூச்சோடினால் அந்நோயானது அவர்
வீட்டிற்கு செல்லும் முன்பே குணமாகிவிடும்.

மேலும் இருவருக்கும் எதிர்எதிர் திசையில்
மூச்சோடினால் அந்நோய் தற்போது குணமாக
வாய்ப்பில்லை என்று பொருள். எதிரே
உள்ளவரின் சரத்தை நாம் எப்படி
கண்டுபிடிப்பது என்றால்??

அவர் உட்கார்ந்திருந்தாலோ அல்லது
நின்றாலோ, அவர் உடம்பின் எப்பக்கம் அழுத்தம்
கொடுத்திருக்கின்றது என கண்டு அதற்கு
எதிர்திசையில் சரம் ஓடுவதாக எடுத்து
கொள்ள வேண்டும். மேலும் வந்தவர்
பெரும்பாலும் சரசாஸ்திரத்தை பற்றி அறிய
வாய்ப்பில்லை, எனவே அக்கிழமையின்படி
அவருக்கு எத்திசையில் ஓடுகின்றது என்பதை
எடுத்து கொள்ளலாம். அவர் உங்கள் வீட்டின்
உள்ளே வரும்போது எந்த காலை முதலில்
வைத்து வருகின்றார் என கவினித்து அதற்கு
எதிர் திசையில் ஓடுவதாக கணிக்கலாம்.

வருபவர் வலதுகாலை முதலடியாக வைத்தால்
அவருக்கு இடதுகலை நடக்கின்றது எனவும்,
இடதுகாலை முதலடியாக வைத்தால்
வலதுகலை நடக்கின்றது என கொள்ள
வேண்டும்.

மேலும் அவர் பேசிய முதல் வார்த்தையை
நன்கு கவனித்து அவ்வார்த்தையில் உள்ள
எழுத்துக்களை எண்ணி, அது ஒற்றை படையாக
அமைந்தால் அவர் இடதுபக்கம் அழுத்தம்
கொடுக்கின்றார் என அர்த்தம், எனவே
அவருக்கு சூரியகலை ஓடுகின்றது என
கணிக்க வேண்டும். இதேபோல் பேசிய
வார்த்தைகளின் எண்ணிக்கை இரட்டைபடை
எனில் வலதுபக்க அழுத்தம் எனக்கொண்டு
அவருக்கு இடதுகலை நடக்கின்றது என
கொள்ளவேண்டும். மேலும் அவர் உங்களுக்கு
முன்பக்கமாகவோ, இடதுபக்கமாகவோ அல்லது
உயரமான இடத்திலிருந்தோ கேட்கின்றாரெனில்
அவருக்கு இடது கலை ஓடுவதாக கொள்ள
வேண்டும். அதேபோல் வந்தவர் உங்களுக்கு
பின்பக்கமாகவோ, வலதுபக்கமாகவோ அல்லது
உங்களைவிட தாழ்வான இடத்தில் இருந்து
கேட்டால் அவருக்கு வலதுகலை நடப்பதாக
எடுத்துக் கொள்ள வேண்டும். இதை சரியாக
புரிந்து கொண்டு பறவை, மிருகம்,. என
அனைத்தும் அருகிலிருந்தாலும் சரி
தூரத்திலிருந்தாலும் சரி அவருக்கு ஓடும்
மூச்சானது உங்களுக்கு தெரிந்துவிடும்.

சிவ சிவ எல்லாம் ஐந்து தான் எம்பெருமானுக்கு

சிவ சிவ

 எல்லாம் ஐந்து தான் எம்பெருமானுக்கு

1.பஞ்ச பூதங்கள்

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்

2. பஞ்சாட்சரம் ஐந்து

நமசிவாய - தூல பஞ்சாட்சரம்
சிவாயநம - சூக்கும பஞ்சாட்சரம்
சிவயசிவ - அதிசூக்கும பஞ்சாட்சரம்
சிவசிவ     - காரண பஞ்சாட்சரம்
சி                  - மகா காரண பஞ்சாட்சரம்

3.சிவமூர்த்தங்கள்

1.பைரவர்                      -வக்கிர மூர்த்தி
2.தட்சிணாமூர்த்தி   -சாந்த மூர்த்தி
3.பிச்சாடனர்               -வசீகர மூர்த்தி
4.நடராசர்                     -ஆனந்த மூர்த்தி
5.சோமாஸ்கந்தர்    - கருணா மூர்த்தி

4.பஞ்சலிங்க சேத்திரங்கள்

1.முக்திலிங்கம் -கேதாரம்
2.வரலிங்கம்       -நேபாளம்
3.போகலிங்கம்  -சிருங்கேரி
4.ஏகலிங்கம்        -காஞ்சி
5.மோட்சலிங்கம் -சிதம்பரம்

5.பஞ்சவனதலங்கள்

1.முல்லை வனம்   -திருக்கருகாவூர்
2.பாதிரி வனம்         -அவளிவணல்லூர்
3.வன்னிவனம்        -அரதைபெரும்பாழி
4.பூளை வனம்         -திருஇரும்பூளை
5.வில்வ வனம்       -திருக்கொள்ளம்புதூர்

6.பஞ்ச ஆரண்ய தலங்கள்

1.இலந்தைக்காடு -திருவெண்பாக்கம்
2.மூங்கில் காடு     -திருப்பாசூர்
3.ஈக்காடு                  -திருவேப்பூர்
4.ஆலங்காடு          -திருவாலங்காடு
5.தர்ப்பைக்காடு    -திருவிற்குடி

7.பஞ்ச சபைகள்

1.திருவாலங்காடு -இரத்தின சபை
2.சிதம்பரம்               -பொன் சபை
3.மதுரை                    -வெள்ளி சபை
4.திருநெல்வேலி   -தாமிர சபை
5.திருக்குற்றாலம் -சித்திர சபை

8.ஐந்து முகங்கள்

1.ஈசானம் - மேல் நோக்கி
2.தத்புருடம் -கிழக்கு
3.அகோரம் -தெற்கு
4.வாம தேவம் -வடக்கு
5.சத்யோசாதம் -மேற்கு

9.ஐந்தொழில்கள்

1.படைத்தல்
2.காத்தல்
3.அழித்தல்
4.மறைத்தல்
5.அருளல்

10.ஐந்து தாண்டவங்கள்

1.காளிகா தாண்டவம்
2.சந்தியா தாண்டவம்
3.திரிபுரத் தாண்டவம்
4.ஊர்த்துவ தாண்டவம்
5.ஆனந்த தாண்டவம்

11.பஞ்சபூத தலங்கள்

1.நிலம்        -திருவாரூர்
2.நீர்               -திருவானைக்கா
3.நெருப்பு   -திருவண்ணாமலை
4.காற்று      -திருக்காளத்தி
5.ஆகாயம் -தில்லை

12.இறைவனும் பஞ்சபூதமும்

1.நிலம்        - 5 வகை பண்புகளையுடையது
  (மணம் ,சுவை ,ஒளி ,ஊறு ,ஓசை )
2.நீர்               - 4 வகை பண்புகளையுடையது
            (சுவை ,ஒளி ,ஊறு ,ஓசை )
3.நெருப்பு   - 3 வகை பண்புகளையுடையது
            (ஒளி ,ஊறு ,ஓசை )
4.காற்று      - 2 வகை பண்புகளையுடையது
             (ஊறு ,ஓசை )
5.ஆகாயம் - 1 வகை பண்புகளையுடையது
              (ஓசை )

13.ஆன் ஐந்து

பால் ,தயிர் ,நெய் ,கோமியம் ,கோசலம்

14.ஐங்கலைகள்

1.நிவர்த்தி கலை
2.பிரதிட்டை கலை
3.வித்தை கலை
4.சாந்தி கலை
5.சாந்தி அதீத கலை

15.பஞ்ச வில்வம்

1.நொச்சி
2.விளா
3.வில்வம்
4.கிளுவை
5.மாவிலங்கம்

16. ஐந்து நிறங்கள்

1.ஈசானம் - மேல் நோக்கி - பளிங்கு நிறம்
2.தத்புருடம் -கிழக்கு           - பொன் நிறம்
3.அகோரம் -தெற்கு              - கருமை நிறம்
4.வாம தேவம் -வடக்கு      - சிவப்பு நிறம்
5.சத்யோசாதம் -மேற்கு    - வெண்மை நிறம்

17.பஞ்ச புராணம்
1.தேவாரம்
2.திருவாசகம்
3.திருவிசைப்பா
4.திருப்பல்லாண்டு
5.பெரியபுராணம்

18.இறைவன் விரும்ப நாம் செய்யும்  ஐந்து

1.திருநீறு பூசுதல்
2.உருத்ராட்சம் அணிதல்
3.பஞ்சாட்சரம் ஜெபித்தல்
4.வில்வ அர்ச்சனை புரிதல்
5.திருமுறை ஓதுதல்

19.பஞ்சோபசாரம்
1.சந்தனமிடல்
2.மலர் தூவி அர்ச்சித்தல்
3.தூபமிடல்
4.தீபமிடல்
5.அமுதூட்டல்
 
           திருச்சிற்றம்பலம் உடையான்

இன்று பங்குனிஉத்திரத் தின் சிறப்பு

இன்று பங்குனிஉத்திரத் தின் சிறப்பு

முருகப் பெருமான்- தெய்வானை திருமணம் நடந்த நாள். வள்ளி அவதரித்த தினம். பார்வதி தேவியை பரமேஸ்வரன் கரம்பிடித்த நாள் இது. மேலும் மதுரையில் மீனாட்சிதேவி- சுந்தரேசர் திருக்கல்யாண வைபவம் பங்குனி உத்திரத்தன்று நடைபெறும். தேவேந்திரன்- இந்திராணி திருமணம் நடைபெற்ற நாள். ராமபிரான்- சீதாதேவி, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்னன்- ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த தினம். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் - ரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம் நிகழ்ந்த திருநாளும் பங்குனி உத்திரமே.

பங்குனி உத்திர விரத மகிமையால், அழகு மிக்க 27 கன்னியரை சந்திரன் மனைவியாகக் கொண்டதாகச் சொல்வர். இந்த நாளில் விரதம் மேற்கொண்ட மகா லட்சுமி, விஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் பேறு பெற்றாள்.

தனது தவத்தைக் கலைத்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர், தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு இரங்கி, மன்மதனை மீண்டும் சிவனார் உயிர்ப்பித்தது பங்குனி உத்திரம் திருநாளில்தான்.

சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் பரமன் காட்சி தந்தது இந்த நாளில்தான். பிரம்மன் தன் நாவில் சரஸ்வதியை வைத்த தினம், பங்குனி உத்திரம் என்பர். சாஸ்தா அவதரித்தது பங்குனி உத்திர திருநாளில். அர்ஜுனன் அவதரித்தது இந்த நாளில்தான். காரைக்கால் அம்மையார் பங்குனி மாதத்தில்தான் முக்தி பெற்றார்.

வடநாட்டில், ஹோலிப் பண்டிகை கொண்டாடுவது, வசந்தகாலம் துவங்குவது என்று பங்குனி உத்திரத்துக்கு பல பெருமைகள் உண்டு.

காஞ்சியில், பௌர்ணமி திதி கூடிய பங்குனி உத்திரத்தன்று, காமாட்சி- ஏகாம்பரேஸ்வரர் திருமணம் நடக்கும். அப்போது அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வர். இந்த நாளில் காஞ்சி வரதராஜர் கோயில்- பெருந்தேவி தாயார் சந்நிதியில், தேவி-பூதேவி, மலையாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவி தாயார் சகிதம் காட்சி தருகிறார் வரதராஜ பெருமாள்.

மேல்கோட்டை என்ற திரு நாராயணபுரத்தில்- பங்குனி மாதத்தில் வைரமுடி சேவை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் தலம் ‘தென்னக பத்ரிகாஸ்ரமம்’ எனப்படும். வடபத்ரிகாஸ்ரமம் செல்ல இயலாதவர்கள் இங்கு வந்து, நாராயண பெருமாளை தரிசித்தால், பத்ரி போய் வந்த புண்ணியம் உண்டு என்பது ஐதீகம்.

திருவையாறு அருகே உள்ள நவக்கிரக (சந்திரன்) சேத்திரம், திங்களூர். இங்குள்ள சிவாலயத்தில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர நன்னாளில், காலையில் 6 மணிக்கு சூரியக் கதிர்களும், மறு நாள் மாலை 6.00 மணிக்கு சந்திரனின் ஒளியும் சிவலிங்கத்தின் மீது விழுகின்றன. அப்போது, இங்கு சூரிய- சந்திர பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இந்த பூஜையை தரிசித்தால் எல்லா வளமும் பெறலாம் என்பது பக்தர்களது நம்பிக்கை.

திருவையாறு அருகிலுள்ள புண்ணிய திருத்தலம் திருமழபாடியில், பங்குனி மாதத்தில் நடைபெறும் நந்திதேவரின் திருமண வைபவம் வெகு பிரசித்தி. திருமண தோஷம் உள்ளவர்கள், திருமழப்பாடி சென்று இந்த வைபவத்தை தரிசித்தால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

‘நந்தி கல்யாணம் பார்த்தால் முந்தி கல்யாணம் நடக்கும்’ என்று பழமொழியே உண்டு.

சரியாக பங்குனி உத்திரம் அன்று அதிகாலை  ஏதாவது பழைமையான முருகன் கோயிலுக்கு சென்று முருகனை தரிசித்து கந்த சஷ்டிகவசம் படித்து வணங்கி வாருங்கள்.

- .

21 March 2016

குட்டிசாத்ததான் விஸ்ணுமாயா எனும் குரளி வசியம்

குட்டிசாத்ததான் விஸ்ணுமாயா எனும் குரளி வசியம்

குட்டிசாத்ததான் விஸ்ணுமாயா எனும் குரளி வசியம்
குட்டிசாத்தான் சிவகணம் அம்சம் .இதற்கு எதவாது ஒரு வேலையை கொடுத்து கொண்டு இருக்க வேண்டும்.எந்த வேலை இருந்தாலும் மிக எளிதில் செய்ய கூடியாது
மூல மந்திரம்
ஓம்  குட்டிசாத்தா பகவதி சேவியா ஸ்ரீம் றீம் வயநமசி சாத்தா வாவா உன் ஆணை என்னானை உன்னையும் என்னையும் படைத்த பிரம்மாவின் ஆணை சக்தி ஆனை சங்கரன் ஆணை வா உம் படு சுவஹா

வீதி இருகும் பிராத்தம் உள்ள நண்பர்கள் சித்தி செய்து கொல்லாம்

சில முக்கியமான ஆன்மீக தகவல்கள்

சில முக்கியமான ஆன்மீக தகவல்கள் :-

விநாயகப்பெருமானின் பெருவயிறு, இந்தப் பிரபஞ்சம் முழுவதும் இறைவனுக்குள் அடக்கம் என்பதை உணர்த்தும் அறிய தத்துவமாகும்.

சிவன் சன்னதியில் பிரதட்சிணம் செய்யும்போது நந்திதேவரையும் சேர்த்தே பிரதட்சணம் செய்தல் வேண்டும். அதைவிடுத்து சிவனுக்கும் நந்திக்கும் இடையே சென்று கோவிலைச் சுற்றி வருதல் கூடாது.

* பூஜை சாமான்களை எவர்சில்வர் தட்டுக்களில் வைக்கக்கூடாது. வெள்ளி பித்தளை, செம்பு வெண் கலம் ஆகிய தட்டுகளிலேயே வைக்க வேண்டும்.

* பசுவின் உடலெல்லாம் பாலாக இருப்பினும், அதை கறந்து வெளிப்படுத்தும் இடம் அதன் மடிதான். அது போல பகவான் அருளைச் சுரக்கும் இடம் ஆலயமாகும். எனவே திருக்கோவில்களுககுச் சென்று இறைவனை வழிபடுவதால், நம் வினைகள் யாவும் வெந்து, எரிந்து நீராகி, நம் விருப்பங்கள் நிறைவேறுகின்றன.

* சிதம்பரத்தைத் தரிசித்தாலும், காசியில் இறந்தாலும், திருவாரூரில் பிறந்தாலும், திருவண்ணாமலையை நினைத்தாலும் மோட்சம் கிட்டும் என்பது ஆன்றோர் முடிவு.

* விநாயகனை ஒருமுறை வலம் வரவேண்டும். சிவ பிரானை மூன்று முறையும், அம்பாளை நான்கு முறை யும், முருகனை மூன்று முறையும் சுற்றி பிரதட்சணம் செய்தல் வேண்டும்.

* காலையில் படுக்கையில் இருந்நு கண் விழித்தெழுந் ததும் அவரவர் உள்ளங்கையில் கண் விழிப்பதே நற் பலன்களை நல்கும் என்பது இந்து தர்ம சாஸ்திரம் கூறும் நெறி.

*வீடுகளில் மணியடித்து பூஜை செய்து விட்டு, அந்த மணியைத் தரையின் மேல் வைக்கக்கூடாது. ஏதாவ தொரு அடுக்குப் பகுதியின் மேல் வைக்க வேண்டும்.
................

தீபாராதனை காட்டுவது ஏன.........

நம் வீட்டில் ,கோயில்களில் கற்பூர தீபாராதனையும், நெய்விளக்கு தீபாராதனையும் காட்டப்படுகின்றன. கற்பூரமும் நெய்விளக்கும் கடைசிவரை எரிந்து போகும். எதுவும் மிஞ்சாது.

மனிதன் இறந்த பிறகும் இதே நிலை தான். எஞ்சும் சாம்பல் கூட தண்ணீரில் கரைக்கப்பட்டு விடுகிறது. இந்த தத்துவத்தை உணர்த்தவே கோயில்களில் தீபாராதனை காட்டப்படுகிறது.

எனவே இந்த தத்துவத்தின் படி எதுவுமே மிச்சமில்லாமல் நம்மை இறைவனுக்கு அர்ப்பணிப்போம்.

இதர வகை வழிபாடுகளில் பிரசாதமாக ஏதேனும் மிஞ்சும். ஆனால், கற்பூர வழிபாட்டில் எதுவுமே மிஞ்சாது. நாமும் கற்பூரத்தை போல் நம்மை முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணித்து வழிபட்டால் இறைவனது ஜோதி தரிசனம் கிடைக்கும் என்பதையே கற்பூர தீபாராதனை உணர்த்துகிறது

ராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்களும் அதன் பயன்களும்

ராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்களும் அதன் பயன்களும்

ராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்களும் அதன் பயன்களும்
பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது.

தீர்த்தமும் பலனும்:

1.மகாலட்சுமி தீர்த்தம்: (செல்வவளம்)

2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி)

3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் பத்தினி)

4. சரஸ்வதி தீர்த்தம்: (கல்வி அபிவிருத்தி)

5. சங்கு தீர்த்தம்: (வாழ்க்கை வசதி அதிகரிப்பு)

6. சக்கர தீர்த்தம்: (மனஉறுதி பெறுதல்)

7. சேது மாதவ தீர்த்தம்: (தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்).

8. நள தீர்த்தம்,

9. நீல தீர்த்தம்,

10.கவய தீர்த்தம்,

11.கவாட்ச தீர்த்தம்,

12. கந்தமாதன தீர்த்தம்: (எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்).

13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,(பாவங்கள் விலகுதல்)

14. கங்கா தீர்த்தம்,

15. யமுனை தீர்த்தம்,

16. கயா தீர்த்தம்,

17: சர்வ தீர்த்தம்: (எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்)

18. சிவ தீர்த்தம்: (சகல பீடைகளும் ஒழிதல்)

19. சத்யாமிர்த தீர்த்தம்: (ஆயுள் விருத்தி)

20. சந்திர தீர்த்தம்: (கலையார்வம் பெருகுதல்)

21. சூரிய தீர்த்தம்: (முதன்மை ஸ்தானம் அடைதல்)

22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை

கட்டுக்கொடியின் மருத்துவ குணங்கள்

கட்டுக்கொடியின் மருத்துவ குணங்கள்

கட்டுக்கொடியின் மருத்துவ குணங்கள் :-
கட்டுக்கொடி ஓர் ஏறு கொடியினம். முனை மழுங்கிய இலைகளுடன் வேலிகளிலும், புதர்களிலும், மானாவாரி, விவசாய நிலங்களிலும் படர்ந்து வளரக்கூடியது. இதில் சிறு கட்டுக்கொடி பெருகட்டுக் கொடி என இரு வகையுண்டு. இரண்டிற்கும் மருத்துவ குணம் ஒன்றே. ஒரே கட்டிலிருந்து பல கொடிகள் உண்டாகும். மண்ணில் பதிந்தால் வேர் விட்டு இன விருத்தியாகும். விதை மூலமும் இன விருத்தி செய்யப்படும்.மருத்துவப் பயன்கள் :-

இது குளிர்ச்சியுட்டாக்கியாகவும் உமிழ்நீர்ப் பெருக்கியாகவும் செயற்படும்.பாக்களவு இலையை மென்று தின்ன இரத்த பேதி, சீதபேதி, மூலக்கடுப்பு எரிச்சல் தீரும்.
இலை, வேப்பங்கொழுந்து சம அளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வர நீரிழிவு, களைப்பு, ஆயாசம், தேக எரிவு, அதிதாகம், பகு மூத்திரம் தீரும். சிறுநீர்ச் சர்கரையும் தீரும். சூரணமாக்கியும் சாப்பிடலாம்.
பெருங்கட்டுக் கொடி இலை அரை எலுமிச்சை அளவு அரைத்து எருமைத் தயிருடன் கொடுக்க பெரும்பாடு தீரும்.
இலையுடன் மாம்பருப்பும் சமன் அரைத்து பால், சர்கரை சேர்த்து காலை, மாலை கொடுக்க பேதி தீரும். கஞ்சி ஆகாரம் மட்டும் கொடுக்கவும்.
சிறுதளவு வேரும், ஒரு துண்டு சுக்கு, 4 மிளகுடன் காய்ச்சிக் கொடுக்க வாதவலி, வாத நோய், கீல் நோய் தீரும்.
இலைச்சாற்றை சர்கரை கலந்து நீரில் வைத்து வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும். இதை அதிகாலையில் சாப்பிட்டுவர வெள்ளை, வெட்டை, சீதக் கழிச்சல் ஆகியவை தீரும்.
கட்டுக்கொடி வேரையும், கழற்சிப் பருப்பையும் இழைத்து விழுதாக்கிக் கலந்து அரை தேக்கரண்டி நீரில் கலந்து கொடுக்கக் குழந்தைகளுக்குக் காணும் வயிற்றுவலி தீரும்.
கென்யாவில் இதன் இலையை வயிற்று வலிக்குப் பயன் படுத்துகிறார்கள். பாக்கிஸ்தானிலும் இந்தியாவிலும் நரம்புத் தளர்ச்சிக்காகப் பயன் படுத்துகிறார்கள் சைனாவில் வேரை உடல் பருமனைக் குறைக்கப் பயன் படுத்துகிறார்கள். ராஜஸ்த்தானில் இலையை சமைத்து மாலைக்கண் உண்டாவதைக் குணப்படுத்துகிறார்கள். இதன் இரு கொடிகளையும் பிலிப்பையின்ஸ் மற்றும் ஆப்பிரிக்காவில் கூடைகள் செய்யவும் பயன் படுத்திகிறார்கள். தமிழ் நாட்டில் இந்தக் கொடியை பிரமணை செய்வதற்கும், சிம்மாடு செயவதற்கும் பயன் படுத்துகிறார்கள்.

ஆன்மிகம் பொதுஅறிவு

ஆன்மிகம் பொதுஅறிவு

.   ஆன்மிகம் பொதுஅறிவு     1. இருகண்புருவ மத்தியில் எல்லா நாடிக்கும் ஆதாரமாக உள்ளது சுழிமுனை.
2. இடது மூக்கு துவாரம் வரை - சூரியகலை.
3. வலது மூக்கின் வரை - சந்திரக் கலை.
4. வலது கண்ணின் வரை - புருடன்.
5. இடது கண்ணின் வரை - காந்தாரி.
6. வலது காது வரை - அத்தி.
7. இடது காது வரை - அலம்புடை.
8. மூலாதலத்திலிருந்து - சங்கினி.
9. உள் நாக்கு முடியும் வரை - சிங்குவை.
10. அபான வரை - குரு.

தசநாடிகளின் சுற்று.சூரியகலை - வலது கால் பெருவிரல் முதல் இடது நாசி.
சந்திரகலை - இடது கால் பெருவிரல் முதல் வலது நாசி.
சுழிமுனை - மூலாதரத்தில ஆரம்பித்து எல்லா நாடிகளுக்கு நடு நாடியாகும்.
சிங்குவை - மூலாதரம் தொடங்கி உள் நாக்கிலே நன்று விழுங்கச் செய்வது.
புருடன் - மூலாதரம் தொடங்கி வலது கண் வரை நிற்பது.
காந்தாரி - மூலாதரம் தொடங்கி இடதுகண் வரை நற்பது.
அத்தி - மூலாதரம் தொடங்கி வலது காது வரை நிற்பது.
அலம்புடை - மூலாதரம் தொடங்கி இடது காது வரை நிற்பது.
சங்கினி - மூலாதரம் தொடங்கி குறியின் அளவு நிற்கும்.
குரு - மூலாதரத்திலிருந்து அபானத்தில் நிறுகும்.
நமது உடலில் 72000 நாடிகள் தசநாடியில் சூரியகலை, சந்திரகலை, சுழிமுனை, முக்கிய நாடிகளாகும் ஆக வாதம் மலத்தில் பித்தம் நீரில் சிலேத்மம் - விந்தில்..

தச வாயுக்களின் சுற்று.
1. உயிர் காற்று. (பிராணன்)
2. மலக்காற்று. (அபானன்)
3. தொழில் காற்று. (வியானன்)
4. ஒலிக்காற்று. (உதானன்)
5. நிரவுக்காற்று.( சமானன்)
6. தும்மல் காற்று. (நாகன்)
7. விழிக்காற்று. (கூர்மன்)
8. கொட்டாவிக் காற்று. (கிருகரன்)
9. இமைக் காற்று. (தேவதத்தன்)
10. வீங்கற் காற்று. ( தனசெயன்)

பிராணன் - மூலாதரத்தில் ஆரம்பித்து மூக்கு வழியாக மூச்சு விடல், பூச உதவமு குரல்வளையில் உள்ளது. கை,கால்களை வேலை செய்ய பெரு விரல் உள்ளது.
அபானன் - சுவாதிட்டானத்தில் இருந்து வெளிப்பட்டு மலத்தை கீழ் நோக்கி தள்ளும், ஆசனவாயை சுருக்கும். அன்னத்தை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும்.குறியில் காம வேகத்தை உண்டு பண்ணும்.

வியானன் - தோளிலிருந்து எல்லா நரம்பிலும் அசையும் அசையாபொருளில் உருப்புக்களைநீட்ட மடக்க உணர்ச்சிகளை அறியவும் உணவின் சாரத்தை கொடுத்து உடலைக்காக்கும்.

உதானன் - உணவின் சாரத்தை கொண்டு செல்லும் உடலை எழுந்து நிற்க உதவும். மேல் நோக்கி இயங்கும் வாயு.

சமானன் - நாபியிலிருந்து கால் வரை பரவும் வாயுக்களை அதிகப்படாமல் சரி செய்யும், உண்ட உணவு செரித்தவுடன் எல்லா இடங்களுக்கும் அனுப்புகிறது.

நாகன் - அறிவை வளர்க்கும், கண்களை திறப்பதற்கும், மயிர் சிலிர்க்க, இமை மூட வேலை செய்யும். வாந்தி எடுத்தால் துப்புதல் ஆகிய வேலை செய்யும்.

கூர்மன் - மனதில் கிளம்பி, கண் இமை, கொட்டாவி, வாய் மூட, கண்திறந்து மூட, கண்ணீர் வர வேலை செய்யும்.

கிருகரன் - நாக்கில் கசிவு, நாசி கசிவு உண்டுபண்ணும், பசி வர வைக்கும், செயல் புரிய, தும்மல் இருமலை உண்டு பண்ண.

தேவதத்தன் - சோம்பல், தூங்கி எழுகையில் அயர்ச்சி, தாக்குதல், கண்களை அசைத்தல், சண்டையிடுதல், தர்க்கம் பேசல்.

தனஞ்செயன் - மூக்கிலிருந்து உடல் முழுதும் வீக்கம் பண்ணும், காதில் கடல் அலை இரைச்சல் போல் இரைத்தல், இறந்த மூன்றாம் நாள் தலை வழியாகவெழியே செல்லுதல்.

ஆறு ஆதாரத்தின் பங்கு.
1. மூலாதாரம். 2. சுவாதிட்டானம். 3. மணிப்பூரகம். 4. அனாகதம்.5. விசுத்தி.
6. ஆக்கினை.

(1) மனம் சித்தமாக நெற்றி புருவ மத்தியில் உள்ளது. இதுவே ஆங்ஞை அல்லது ஆக்கினை என்கின்றோம்.
(2) ஆகாய தத்துவத்தில் சக்கரம் விசுத்தி கழுத்தில் உள்ளது.
(3) வாயு தத்துவத்தில் அநாவிரதம் மார்பு பகுதியில் உள்ளது.
(4) அக்கினி தத்துவத்தில் மணிபூரகம் வயிற்று பக்கத்தில் உள்ளது.
(5) நீர் தத்திவத்தில் அவாதித்தனம் குறிபகுதியில் உள்ளது.
(6) பூமிதத்துவத்தில் மூலாதாரம் குத பகுதியில் உள்ளது

மூல துர்காவின் மந்தரம்:

மூல துர்காவின் மந்தரம்:

ஓம் ஹ்ரீம் துர்க்காயை நம:
வன துர்காவின் மந்த்ரம் :
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் தும்
உத்திஷ்ட புருஷி கிம்ஸ்வபிஷி பயம்மே
ஸமுபஸ்திதம் யதிசக்ய மசக்யம்வா தன்மே
பகவதி சமய ஸ்வாஹா

சூலினி துர்காவின் மந்த்ரம் :

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ச்ரௌம் தும்
ஜ்வல ஜ்வல சூலினிதுஷ்ட க்ரஹ
ஸும் பட் ஸ்வாஹா

ஜாதவேதோ துர்காவின் மந்த்ரம் :

ஜாதவேதஸே ஸுனவாம ஸோமமராதியதோ
நிதஹாதி வேத: ஸந: பர்ஷததி துர்காணி
விச்வா நாவேவ ஸிந்தும் துரிதாத்யக்னி:

சாந்தி துர்காவின் மந்த்ரம் :

ஓம் ஹ்ரீம் தும் துர்காம் தேவீம்
சரணமஹம் ப்ரபத்யே

சபரி துர்காவின் மந்த்ரம்

ஹ்ராம் ஹ்ரீம் ஸெள: க்லௌம் ஐம் ஸ்ரீம்
ஜ்வலத் துர்கே ஏஹ்யேஹி
ஸ்புரப்ரஸ்புர ஆதிவிஷ்ணு ஸோதரி, அஸ்த்ர
ஜ்வலத்துர்கே, ஆவசயாவேசய ஜ்வலத்துர்காய
வித்மஹே ஜாஜ்வல்யமானாய தீமஹி தன்னோ
படபாநல: ப்ரசோதயாத், வமலவரயூம் ஜ்வலத்
துரகாஸ்த்ரே ஹும்பட் ஸ்வாஹா

வைண துர்காவின் மந்த்ரம் :

ஓம் சிடி சிடி சண்டால்யை மஹா
சண்டால்யை அமுகம்மே வசமானய ஸ்வாஹா

தீப துர்காவின் மந்த்ரம் :

ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் அமும்
துர்கே ஏஹ்யேஹி ஆவேசய ஆவேசய க்ரோம்
தும் துர்கே க்ரோம் ஹ்ரீம் ஆம் ஹும்பட் ஸ்வாஹா

ஆசூரி துர்காவின் மந்த்ரம் :

ஓம் கடுகே கடுகபத்ரே அஸுபகே ஆசூரி ரக்தே
ரக்தவாஸஸே அதர்வணஸ்யதுஹிதே அகோரேகோர
கர்ம காரிகே அமுகஸ்ய கதிம் தஹ தஹ உபவிஷ்டஸ்ய
குதம் தஹதஹ ஸுப்தஸ்யமனோ தஹதஹ
ப்ரபுத்தஸ்ய ஹ்ருதயம் தஹதஹ ஹனஹன பசபச
தாவத்தஹ தாவத்பச யாவன்மே வசமாயாதி ஹும்பட் ஸ்வாஹா

ஜயதுர்காவின் மந்த்ரம் :

ஓம் துர்கே துர்கே ரக்ஷினி ஸ்வாஹா

திருஷ்டி துர்காவின் மந்த்ரம் :

ஓம் ஹ்ரீம் தும் துர்கே பகவதி
மனோக்ரஹம் மதமத ஜிஹ்வாபிசாசீருத்ஸாத
யோருத்ஸாதய, ஹித திருஷ்டி அதிக திருஷ்டி
பரதிருஷ்டி, ஸர்பதிருஷ்டி, ஸர்வதிருஷ்டி
விஷம்நாசம் நாசய ஹும்பட் ஸ்வாஹா

மூகாம்பிகா மந்திரம்

ஓம் ஐம் கௌரி ஐம் கௌரி ஐம்
பரமேஸ்வரி ஐம் ஸ்வாஹா

ம ந்திர தியானத்திற்குப்

ம ந்திர தியானத்திற்குப்

ம ந்திர தியானத்திற்குப் பயன்படுத்தப்படும் சொற்களில் முதலிடம் வகிப்பது ”ஓம்”. பிரணவ மந்திரமாகக் கருதப்படும் இம்மந்திரம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. கடவுளர்களின் பெயரை ஜபிக்கும் போது கூட இந்துக்கள் இந்த ஓமை சேர்த்தே ஜபிக்கின்றனர். ஓம் நமச்சிவாயா, ஓம் நமோ நாராயணாய ஆகியவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

கிறிஸ்துவ தியானத்தில் ஜான் மெய்ன் “மாராநாதா” என்கிற மந்திரத்தை உபயோகித்தார். இது ஏசுநாதர் வாழ்ந்த காலத்தில் அவர் பேசிய அராமிக் மொழிச் சொல் எனப்படுகிறது. இதற்கு ஏசுவே வாருங்கள், அல்லது ஏசு வருகிறார் என்பது பொருள் என்கிறார்கள். செயிண்ட் பாலும், செயிண்ட் ஜானும் இந்த பிரார்த்தனை சொல்லைப் பயன்படுத்தி இருப்பதாக சொல்லப் படுகிறது.

புத்த மதத்தில் ”ஓம் மணி பத்மே ஹம்” என்ற மந்திரம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. மற்ற மதத்தினர் தங்கள் புனித நூல்களில் உள்ள சொற்களில் ஏதாவது ஒன்றை மந்திர தியானத்திற்குப் பயன்படுத்துகிறார்கள்

ஸ்ரீ ஸப்த மாதாக்களுக்கு உரிய காயத்ரி மந்திரங்கள்..

ஸ்ரீ ஸப்த மாதாக்களுக்கு உரிய காயத்ரி மந்திரங்கள்..

ப்ராம்ஹி..

ஓம் ஹம்ஸ யுக்தாய வித்மஹே
மஹா சக்தியைச தீமஹி
தந்நோ ப்ராம்ஹீ: ப்ரசோதயாத்||

மாஹேஸ்வரி..

ஓம் மஹா தேவ்யைச வித்மஹே
ருத்ர பத்னியைச தீமஹி
தந்நோ மாஹேஸ்வரி: ப்ரசோதயாத்||

கௌமாரி..
ஓம்சக்தி தராயை வித்மஹே
காமரூபாயை தீமஹி
தந்நோ கௌமாரி: ப்ரசோதயாத்||

வைஷ்ணவி..

ஓம் கதாஸங்கராயை வித்மஹே
மஹாவல்லபாயை தீமஹி
தந்நோ வைஷ்ணவீ: ப்ரசோதயாத்||

வாராஹி..

ஓம் உக்ர ரூபாயை வித்மஹே
தம்ஷ்ட்ராகாரன்யை தீமஹி
தந்நோ வாராஹீ: ப்ரசோதயாத்||

இந்த்ராணி..

ஓம் மஹர் வஜ்ராயை வித்மஹே
ஸஹஸ்ர நயநாயை தீமஹி
தந்நோ இந்த்ராணீ: ப்ரசோதயாத்||

சாமுண்டி..

ஓம் கராள வதநாயை வித்மஹே
சிரோமலாயை தீமஹி
தந்நோ சாமுண்டீ: ப்ரசோதயாத்||

நோய் தீர்க்கும் மலை:

நோய் தீர்க்கும் மலை:
சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள்.
சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர். திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.
தாணிப்பாறை அடிவாரம் – கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம் * மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை “சஞ்சீவி மலை’ என்கின்றனர்.
*சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.
* பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.
*இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள்.
*மகாலிங்கம் கோயிலின் வடக்கே “ஊஞ்சல் கருப்பண சாமி’ கோயில் உள்ளது.
சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க ” கஞ்சி மடம் ‘ உள்ளது. உங்களுக்கு குறைந்த பட்சம், கஞ்சியோ , கூழோ , பழைய சோறோ – நிச்சயம் கிடைக்கும். 24 மணி நேரமும் என்பதுதான் விசேஷம். மிகப் பெரிய குழுவாக சென்றால், முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும்.
சதுரகிரி தல வரலாறு :
சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான்.
இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி.
மனைவி சடைமங்கை.
இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள்.
ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.
வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார்.
பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான்.
தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு “சடதாரி’ என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார்.
மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.
சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது.
ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார்.
இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.
சிவபெருமான் அவனை தேற்றி, “” நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,” என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி “மகாலிங்கம்’ என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார்.
இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.
தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும். மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும்.
செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன. இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம்.
சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம்.
அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு.
இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி.
கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம். இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம்.
சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள்.
பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம்.
மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.
இரட்டை லிங்கம்:
ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர்.
இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார். “”சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்,”என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார்.
அவளோ, “”நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,” என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.
பிலாவடி கருப்பு:
வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், “”சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்,” என்றார்.
வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை “பிலாவடி கருப்பர்’ என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.
பெரிய மகாலிங்கம்:
நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை “பெரிய மகாலிங்கம்’ என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
தவசிப்பாறை:
மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம்.
இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம்.
பாறைக்கு செல்லும் வழியில் “மஞ்சள் ஊத்து’ தீர்த்தம் உள்ளது. தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது.
குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும்.
இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை “நவக் கிரக கல்’ என்கிறார்கள்.
இதற்கு அடுத்துள்ள “ஏசி’ பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும்.
தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் “வெள்ளைப்பிள்ளையார்’ பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது.
அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது. சுந்தரமூர்த்தி கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும்.
சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை “கும்ப மலை’
என்கின்றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் “சுந்தரமூர்த்தி லிங்கம்’ எனப்படுகிறது.
அருளை வழங்குவது “சுந்தரமகாலிங்கம்’, பொருளை வழங்குவது “சுந்தரமூர்த்தி லிங்கம்’ என்று கூறுவர்.
சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது.
இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.
பார்வதி பூஜித்த லிங்கம் :
சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள்.
தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து “அர்த்தநாரீஸ்வரர்’ ஆனார் என தல வரலாறு கூறுகிறது.
பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும் இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர்.
பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர். இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.
இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது. லிங்க வடிவ அம்பிகை சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் “ஆனந்தவல்லி’ என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள்.
சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.
சதுரகிரியில் தீர்த்தங்கள் சந்திர தீர்த்தம் சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் ‘சந்திர தீர்த்தம்’ இருக்கிறது.இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெறலாம்.
கெளண்டின்னிய தீர்த்தம். சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது இந்தத் தீர்த்தம். இது தெய்வீகத் தன்மை வாய்ந்த நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட, ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம்.
கங்கை, கோதாரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை முதலிய புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு. இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு ”பாவகரி நதி” என்னும் பெயரும் உண்டு. சந்தன மகாலிங்கம் தீர்த்தம். இச்சதுரகிரியின் மேல் ‘காளிவனம்’ என்கிற இருண்டவனம் ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
உமையாள் பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து, அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும். இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால், எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும்.
இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய ‘திருமஞ்சனப் பொய்கை’ உண்டு.
காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட ‘பிரம்மதீர்த்தம்’ ஒன்று சதுரகிரி மலைக் காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது.
இது தவிர கோரக்கர், இராமதேவர், போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட ‘பொய்கைத் தீர்த்தம்”, ”பசுக்கிடைத் தீர்த்தம்”, ‘குளிராட்டித் தீர்த்தம்’ போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன.
மகாலிங்கம் கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள்.
பொதுவாகவே மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும், ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும், மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள் யாவும் இருக்கின்றன. இவைகளைத் தழுவி வரும் காற்று நம் மீதுபட்டவுடன் உடலில் உள்ள நோய்கள் தீர்கின்றன.
அபூர்வ மூலிகைகள் :
இங்கே கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது . முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.
பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன.
இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.
தவிர கோரக்க முனிவரால் ‘உதகம்’ என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம், செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது. இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் ‘உதகம்’ என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது. விபரங்கள் அறிந்தவர்க்ளின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாக பயன்படுத்த வேண்டும்.
சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது. இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும். அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும். விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.
அதேபோல் ‘ஏர் அழிஞ்ச மரம்’ என்றொரு மரம் உண்டு. இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். இடையில் மழை, காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் வந்து ஒட்டிக்கொள்ளும். இந்த ‘ஏர் அழிஞ்ச மரத்தின்’ கொட்டைகளை எடுத்து எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும் மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.
சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும். அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும்.
இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு. இந்த விருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும். வெட்டினால் பால் கொட்டும். நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும்.
இவை எல்லாவற்றையும் விட தூக்கி சாப்பிடும் விஷயம் ஒன்று உள்ளது. மலையில் மிக அடர்ந்த பகுதியில் – ” மதி மயக்கி வனம்” என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள் , மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர்.
கிராமத்துக் காரர் ஒருவர் வழி தவறி உள்ளே சென்று மாட்டிக்கொண்டு விட்டார். “மகாலிங்கம் காப்பாத்து, காப்பாத்து” என்று மூன்று நாட்கள் கதறி, ஒரு வழியாக அந்த வனத்திலிருந்து வெளியே வந்து விட்டார். அடர்ந்த காடு, நிறைய பூச்செடிகள் இருந்தது. ஆட்களே யாரும் இல்லை. பசியே தெரியவில்லை. வெளியே வந்தது ஆண்டவன் அருள் என்று, இன்றும் அவர் திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டே இருக்கிறார்.
இன்றும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் – சித்தர்கள், ரிஷிகள் – மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர். கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் மலைப்பகுதிகளில் விழுகின்றன. வீடியோ காமிராக்களில் அதை நிறைய பகதர்கள் பதிவு செய்து இருக்கின்றனர்.
இறை நம்பிக்கை உள்ள பக்தர்கள் , வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மகாலிங்கத்தையும் , சந்தன மகா லிங்கத்தையும் – மனமுருக பூஜித்து வழிபட்டு வாருங்கள்.
சதுரகிரி மலை – ஒரு ஆன்மிக உலா சாதாரண மலைகளைப் போலல்ல இது. வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற இரகசியங்களைத் தன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை.
சித்தர்களின் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களின் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளின் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவின் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவன்மலை என்றும் மகாலிங்க மலை என்றும் அழைக்கப்படுகிறது.
சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களின் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ஆராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது.
இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுடன் மக்களின் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.