youtube

9 May 2017

ஜோதிடம் ஆன்மீகத்தின் நுழைவாசல்!!!

ஜோதிடம் ஆன்மீகத்தின் நுழைவாசல்!!!

விநாயகரை தேய்பிறை சதுர்த்தி வரும் நாளிலும்,முருகக்கடவுளை செவ்வாய்க்கிழமையன்றும் வழிபட அவர்களின் அருள் மொத்தமாகக் கிடைக்கும்;

குலதெய்வத்தை எந்த நாளிலும்,அண்ணாமலையாரை எந்த கிழமையிலும்,எந்த நாளிலும் வழிபடலாம்;

மஹவிஷ்ணுவை புதன் கிழமையன்றும்,மகாலட்சுமியை வெள்ளிக்கிழமையன்றும் வழிபட அவர்களின் அருள் கிட்டும்;

காலபைரவப்பெருமானை தேய்பிறை அஷ்டமியிலும்,வராகியை தேய்பிறைபஞ்சமியிலும் வழிபட்டால் வரங்கள் பெறமுடியும்;

உக்கிரமான பெண்தெய்வங்களான காளி,மாரி,முத்துமாரி,அங்காள பரமேஸ்வரி,புன்னைநல்லூர் மாரி,சமயபுரம்மாரி,இருக்கன் குடி மாரி,கன்னியாக்குமரி,புற்றுமாரி,நாகவல்லி,நாகேஸ்வரி முதலான தெய்வங்களின் அருள் கிட்டிட பவுர்ணமி நாட்களே சிறந்தது;

இவைகளை எல்லாம் ஒரே நிமிடத்தில் வாசித்துவிட்டோம்;ஆனால்,சித்தர்கள் இந்த தேவ ரகசியங்களை அறிய பல நூற்றாண்டுகளாகத் தவம் இருந்தனர்;


ஒன்றரை ஆண்டுக்கு ஒருமுறை செவ்வாய்க் கிரகம் நீசமடையும்;அந்த 45 நாட்களில் செவ்வாயின் ராசிகளான மேஷராசி,விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் கவுரவ இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும்;

அதே போல ஆண்டுக்கு ஒருமுறை சூரியன்,புதன்,சுக்கிரன் வெவ்வேறு மாதங்களில் நீசமடைவர்;அப்போது சிம்மராசி(சூரியனின் ராசி),ரிஷபராசி மற்றும் துலாம் ராசி(சுக்கிரனின் ராசி); மிதுனம் மற்றும் கன்னிராசி(புதனின் ராசி)யில் பிறந்தவர்கள் அவமானத்தை/அவதூறைச் சந்திக்க வேண்டியிருக்கும்;இதை முன் கூட்டியே கணிக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு? ஜோதிடம் அறிந்தவர்களுக்கு மட்டுமே உண்டு;


அதே போல பஞ்சபட்சி சாஸ்திரம் என்ற ஒரு ரகசியக் கலை இருக்கிறது.ஜோதிடத்தின் உச்சக்கலை இது;இந்தக் கலையின் படி ஆலோசனை பெற்றவர்கள்,வர்த்தகத்தில் கொடி கட்டிப் பறக்கின்றனர்;

அமாவாசைத் திதி அல்லது பவுர்ணமித் திதியில் பிறந்தவர்களுக்கு பஞ்சபட்சியில் தீய நேரமான படுபட்சி நாள் என்பதே கிடையாது;15 நாட்கள் காலண்டர் அடிப்படையில் பஞ்சபட்சி சாஸ்திரம் ஒவ்வொருவருக்கும் செயல்படுகிறது;இதன்படி ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் 15 நாட்களுக்கு ஒருமுறை படுபட்சி நாள் என்று ஒன்று வரும்;அந்த நாட்களில் எடுக்கும் காரியங்களில் ஜெயிப்பது கடினம்;தமிழ்நாட்டு அரசியல்தலைவர்கள் இதில் தேர்ச்சி பெற்ற ஜோதிடர்களின் ஆலோசனைப்படியே முக்கிய அரசியல் முடிவுகள் எடுக்கிறார்கள்;அரசியல்தலைவர்கள் மட்டுமா? பெரும் தொழிலதிபர்களும்,அரசுப்பணியில் உயர்ந்த பதவியில் இருப்பவர்களும் இந்த ஆலோசனையைப் பின்பற்றுகிறார்கள்;


மேஷராசியினர் மகரராசியினரால் அதிகமான நன்மைகளைப் பெறுவர்;துலாம் ராசியினரிடம் நட்பு பெறுவர்;
இதே போல எந்த ராசியினருக்கு எந்த ராசியினர் உதவி செய்வார்கள்;எந்த ஜாதியில் பிறந்த மனிதர்களால் உதவி கிடைக்கும்;எந்த ஜாதியில் பிறந்தவர்களால் தொல்லை உண்டாகும் என்பதையும் ஜோதிட ஆலோசனையின் படி தெரிவிக்க முடியும்;

சிலருக்கு குறிப்பிட்ட வருடங்கள் வரை மட்டுமே அருள்வாக்கு கைகூடும் என்பதையும் ஜோதிடத்தின் மூலமாக மட்டுமே கண்டறிய முடியும்;

சிலர் இப்பிறவியிலேயே சிவதரிசனத்தைப் பெறவே பிறந்திருப்பர்;அது அவர்களின் பிறந்த ஜாதகத்தில் நவக்கிரகங்கள் அமைப்பைப் பொறுத்துக் கண்டறியலாம்;

சிலர் 10,000 ஆண்டுகள் வரை வாழ்வார்கள் என்பதையும் கண்டறிய ஜோதிடம் மட்டுமே துணை;

ஜோதிட நம்பிக்கை இருப்பவர்களுக்கே ஆன்மீகம் விரைவாகக் கைகூடுகிறது என்பதற்கு கோடிக்கணக்கான சம்பவங்கள் ஆதாரமாக எல்லா யுகங்களிலும்,எல்லா காலங்களிலும்,எல்லா ஜாதி மக்களிடமும் நிகழ்ந்துள்ளன;நிகழ்ந்து வருகின்றன;

தமிழ்நாட்டில் ஒரு மனிதன், தன்னையறியாமலேயே மிகவும் சுபமான லக்னம் உதயமாகும் நேரத்தில்,முதல் வீடு கட்ட ஆரம்பிக்க,அதன் பிறகு அந்த மனிதன் தன்னுடைய வாழ்நாள் முழுக்கவும் வீடுகள் கட்டிக் கொண்டே இருந்துள்ளான்;முதல் வீடு கட்ட ஆரம்பித்த சுப லக்னமானது அவனைக் கோடீஸ்வரனாக்கியிருக்கிறது;ஆனால்,அந்த மனிதனின் ஜாதகப்படி ஒரே ஒரு சொந்த வீடு கட்டும் யோகம் கூட இல்லை;இந்த சம்பவத்தை ஒருமுறை கூர்ந்து கவனித்த ஒரு சித்தர் பெருமான்,இந்த சம்பவத்தின் அடிப்படையில் நவக்கிரகங்கள் சூட்சுமமாகச் செய்யும் அதிசயங்களை பல ஆண்டுகளாக ஆராய்ந்திருக்கிறார்;அப்படி ஆராய்ந்து,ஆய்வு முடிவுகளைத் தொகுத்து உலகத்திலேயே தலைசிறந்த ஜோதிட ஆராய்ச்சி நூலை வெளியிட்டார்;அதுதான் காலப்பிரகாசிகை!


இதே போல பல ஜோதிட அனுபவஸ்தர்கள் தமது ஜோதிட அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்;அது புதிய ஜோதிடர்களுக்கு பக்கபலமாக இருக்கிறது;பல லட்சம்தமிழர்கள் அதனால் வளமான,நலமான வாழ்வை அடைந்து கொண்டே இருக்கிறார்கள்:

பஞ்சபட்சியை சதாசிவன் முதன் முதலில் ரோமரிஷிக்கு உபதேசித்தார்;அதன் பிறகு,அந்தக் கலையானது குரு சீடன் பரம்பரை மூலமாக பல கோடி ஆண்டுகளாக பல லட்சம் ஜோதிடர்களால் இன்று நம்மிடையே பரவியிருக்கிறது;முதன் முதலில் ரோமரிஷி பஞ்சபட்சியைக் கற்றுக் கொண்டதால் சாகா வரம் பெற்று இன்றும் சூட்சுமமாக வாழ்ந்து வருகிறார்;தவம் செய்து வருகிறார்;பூமியில் 435 கோடி வருடங்கள் கடந்தால் பிரம்மாவுக்கு ஒரு நாள்;இப்படி பிரம்மாவுக்கு 100 வயது ஆகிவிட்டால்,அந்த பிரம்மாவின் ஆயுள் முடிந்ததாக அர்த்தம்;ஒரு பிரம்மா இறந்தால் ரோமரிஷியின் உடலில் இருந்து ஒரு ரோமம் உதிரும்;இது ரோமரிஷி பஞ்சபட்சியைக் கற்றதனால் கிடைத்த புகழ் ! பஞ்ச பட்சிக்கு அடிப்படையே ஜோதிடம் தான்;

இதே பஞ்சபட்சி சாஸ்திரத்தில் நிபுணராக இருப்பவர் காகபுஜண்டர் சித்தர்;இவர் அழிவே இல்லாத மகா சித்தர்;இவர் கூறுகிறார்;நாம் வாழ்ந்து வரும் பூமி இதுவரை ஆறு முறை அழிக்கப்பட்டிருக்கிறாதாம்;அதற்கு சாட்சியாக இருந்து வருபவர் அவர் மட்டுமே!


ஜோதிடம் ஒரு துல்லியமான அறிவியல் என்பதை மேல்நாட்டின் புரிந்து கொண்டதால் தான் அவர்களுடைய முக்கியமான பணிகளுக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் போது,ஜோதிட ஆலோசனையைக் கேட்கின்றனர்;சி.ஐ.ஏ.வுக்கே ஜோதிட ஆலோசனைப்படியே ஒற்றர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்;தமிழ்நாட்டில் ஒரு தினசரி செய்தித்தாள் ஜோதிடத்தின் அடிப்படையிலேயே தனது எடிட்டோரியலுக்கு ஆட்களைத் தேர்வு செய்கிறது;


ஜோதிடம் ஒரு துல்லியமான அறிவியல் என்பதாலேயே பிரிட்டன் அரசு,இந்தியாவில் மெக்காலே கல்வித் திட்டத்தையும்,கிறிஸ்தவத்தையும் கட்டாயப்படுத்திப் பரப்பியது;இதன் மூலமாக அடுத்தடுத்து வரும் இந்தியத் தலைமுறையினரை இந்து தர்மத்தில் இருந்து பிரித்துவிடலாம்;என்பதே அவர்களின் அரசியல் தொலைநோக்குத் திட்டம்;இதில் பெருமளவு வெற்றியும் பெற்றுவிட்டனர்;


ஜோதிடம் ஒரு துல்லியமான அறிவியல் என்பதாலேயே இருப்பதிலேயே மோசமான நேரத்தைத் தேர்ந்தெடுத்து,அந்த நேரத்தில் நமக்கு சுதந்திரம் தந்தது பிரிட்டன்;நமது கண்களை,நமது கைகளாலேயே குத்த வைப்பது என்பது இதுதானோ?!!!


ஜோதிடத்தின் மூலமாக வேற்றுக்கிரக மனிதர்களை நாம் எப்போது சந்திப்போம் என்பதைக் கணிக்க முடியும்;
மூன்றாம் உலகப் போர் எப்போது எந்த நாட்டினரால் ஆரம்பமாகும்;அதன் முடிவு என்னவாக இருக்கும்;என்பதையும் கணிக்கலாம்;


பூமியில் விடுபடாத புதிர்களை ஜோதிடத்தின் மூலமாக விடுவிக்க முடியும்;

எந்த நாடு எப்போது இரண்டு மூன்று துண்டுகளாக உடையும் என்பதையும் கணிக்கலாம்;

ஜோதிடம் ஒரு மஹா சமுத்திரம்;

ஜோதிடத்தை தொழில்முறையாகக் கற்றாலும் சரி;பொழுதுபோக்காகக் கற்றாலும் சரி;ஜோதிடம் கற்பவர்கள் சமஸ்க்ருதம் கற்பது அவசியம்;
Post a Comment