youtube

20 December 2019

தரித்திரத்தை அழிக்கும் #சிவ #மஹாமந்திரம்

தரித்திரத்தை அழிக்கும்
#சிவ #மஹாமந்திரம்

இந்த ஸ்லோகத்தை தினசரி படிப்பதன் மூலம், பிறவிக்கடன், பொருளாதாரக் கடன் நீங்கி, நல்ல புத்திரர்களை அடைந்து தேக ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளோடு, சொர்க்க அனுபவத்தை அடைவார்கள். 👇👇👇

#தாரித்திரியதஹணசிவஸ்தோத்திரம் :

விச்வேச்வராய நரகார்ணவதாரணாய
கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய
கர்பூரகாந்தி தவளாய ஜடாதராய
தாரித்ரியதுஹ்க தஹநாய
நமசிவாய.

கௌரீப்ரியா யரஜநீச கலாதராய
கலாந்தகாய புஜகாதி பகங்கணாய
கங்காதராய கஜராஜ விமர்தநாய
தாரித்ரியதுஹ்க தஹநாய
நமசிவாய.

பக்திப்ரியாய பவரோக பயோபஹாய
உக்ராய துர்கபவஸாகர தாரணாய
ஜ்யோதிர்மயாய குணநாம ஸுஹ்ருந்யகாய
தாரித்ரியதுஹ்க தஹநாய
நமசிவாய.

சர்மாம்பராய சவபஸ்மவிலேபநாய
பாலோக்ஷணாய மணிகுண்டல மண்டிதாய
மஞ்ரபாதயுகளாக ஜடாதராய
தாரித்ரியதுஹ்க தஹநாய
 நமசிவாய.

பஞ்சாநநாய பணிராஜ விபூஷணாய
ஹேமாம்சுகாய புவனத்ரணமண்டி தாய
ஆனந்த பூமிவரதாய தாமோயாய
தாரித்ரியதுஹ்க தஹநாய
நமசிவாய.

பானுப்ரியாய பவஸாகரதார ணாய
காலாந்தகாய கமலாஸந பூஜிதாய
நேத்ரத்ரயாய சுபலக்ஷக்ஷ்ண லக்ஷிதாய
தாரித்ரியதுஹ்க தஹநாய
நமசிவாய.

ராமப்ரியாய ரகுநாத வரப்ரதாய
நாகப்ரியாய நரகார்ண வதாரணாய
புண்யேஷு புண்யபரிதாயஸுரார்சிதாய
தாரித்ரியதுஹ்க தஹநாய
நமசிவாய.

முக்தேச்வராய பலதாயகணேச்வராய
கீதப்ரியாய வ்ருஷபேச்வர வவாஹராய
மாதங்கசர்மவஸநாய மஹேச்வராய
தாரித்ரியதுகஹ்க தஹநாய
 நமசிவாய.

வஸஷ்டே நக்ருதம் ஸ்தோத்திரம்
ஸர்வரோக நிவாரணம்
ஸர்வஸ்ம்பத்கரம் சீக்ரம் புத்ர
பௌத்ராதி வர்த்தனம்
திரிஸந்த்யம்ய: படேந்நித்யம்
ஸஹிஸ்வர்கமவாப்னுயாத்

இதில் ஸ்ரீ வஸிஷ்ட விரசிதம் தாரித்ரிய
தஹந சிவஸ்தோத்திரம் ஸம்பூர்ணம்
 
#ஓம்நமசிவாய #பிரதோஷம்
#சனிமஹாபிரதோஷம் #திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய அனுமன் ஆர் கே சாமி

21 November 2019

1சூரிய ஹோரை: உ

1சூரிய ஹோரை: உத்தியோகம், வியாபாரம் செய்ய ஒருவருடைய தயவு பெற மேல் அதிகாரிகளைக் காண்பது/சந்திப்பது, உயில் சாசனம் ஆகியவை செய்வதற்கு நலம் உகந்ததாகும்.


2சந்திர ஹோரை: பெண்களைப் பற்றிப் பேசுவது வியாபாரம் கேள்விகள் கேட்பது பிரயாணம், கப்பலில் விமானத்தில் பயணம் செய்ய ஒருவரைக் காண்பது மிகவும் நலம். குறிப்பு: தேய்பிறைச் சந்திரன் உகந்ததல்ல.
.
3செவ்வாய்/அங்காரகன் ஹோரை: உள்ளக் கருத்துக்களை மறைமுகமாக வைத்தல் யோசிக்காமல் வெளியிடுவது, கெடுதல் விளைவிக்கும். குறிப்பு; இக்காலத்தை சகலவித காரியங்களுக்கும் தவிர்ப்பது மிகவும் நலம் பயக்கும்
.
4புதன் ஹோரை: தந்திகள்/அவசரச் செய்திகள் அனுப்புவது, வக்கீல்களைப் பார்க்கவும், அனைத்து எழுத்து வேலைகளுக்கு, தேர்வு எழுதவும், ஜோதிட சாஸ்திர ஆராய்ச்சி செய்யவும், அம்மான்
வர்க்கத்தாரைப் பற்றிப் பேச நலம் பயக்கும்.

5சுக்கிர ஹோரை: எல்லாவித/அனைத்துச் சுப வேலைகளுக்கும்/ சுப காரியங்கள் நடத்தவும், பெண்களைப் பற்றிப் பேசவும், கலை நிகழ்ச்சி, வாகனங்கள் வாங்க, மருந்து சாப்பிடுவதற்கு, களத்ர
வர்க்கத்தாரோடு பேசுவதற்கு பிறர் தயவைப் பெறுவதற்கு, விருந்துன்பதற்கு, கடன் வசூல் செய்வதற்கு மிகவும் உகந்ததாகும்.

6குருஹோரை: அனைத்துக் காரியத்திற்கும் நன்மைபயக்கும். செல்வந்தரைக் காண, அனைத்துத்தரப்பட்ட சாமான்களை வாங்குவது உத்தியோகங்கள் பணவிஷய விவரங்களைத் தொடங்க ஆடை ஆபரணங்களை வாங்க சேர்க்க காரியங்கள் தடையின்றி நடைபெற கடன்களைப் பெறுவது ஆகமொத்தத்தில் அமைத்துக் காரியங்களைச் செயல்படுத்த நலம் உகந்ததாகும்.

7சனிஹோரை: இந்த ஹோரை மிகவும் கொடியதாகும். இருப்பினும் நிலங்களைப் பார்க்க/வாங்க, அவை சம்பந்தப்பட்ட சொத்துக்களைப் பற்றி நடவடிக்கை எடுக்க தோப்பு துறைவுகளைப் பற்றி பேசவும் நலம் உகந்ததாகும்.

அசுர சுக்கிரனின் அற்புதங்கள்; பொதுவாக ஒரு மனிதர்க்கு அவரது அன்பான மனைவியின் மூலமாக, நியாயமாமக் கிடைக்கும் சுகபோகங்கள் அனைத்தும் நல்கி, பலவித நன்மைகளைச் செய்பவர், அசுர
சுக்கிரன் ஆகவே தான் இவருக்கு களத்ரகாரகன் என்ற சிறப்பும் இவர்களுக்கு உண்டு. உலகில் எவ்வளவு பெரிய முரடர்கள் அரக்க குணமுடைய சுரப்புலிகளாகவிருந்தாலும், தங்களுடைய வசீகரத்தாலும், கவர்ச்சி மிக்க நளினமான பேச்சு சாதுரியத்தாலும், தங்கள் வசப்படுத்தியும், காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் திறமை சக்தி ஆகியவை, சுக்கிர பகவானின் ஆதிக்கத்திற்குட்பட்ட ஜாதகர்கள் அடையப்பெறுவர் என்பது ஜோதிட சாஸ்திர விதியாகும்.

15 November 2019

தான தருமங்கள் விருக்ஷாற்சனப் பலன்கள்

🌹🙏🌸🍀🔱உலகின் மாபெரும் சக்தியினை பெற்ற ஶ்ரீகருட புராணம் - பகுதி(4 )🔱🍀🌸🙏🌹

தான தருமங்கள் விருக்ஷாற்சனப் பலன்கள்
=====================

ஒருவன் தனது மரண காலத்திற்கு முன்பே கோதானம் முதலிய தானங்களைச் செய்வது நல்லது.

பாத்திரம் அறிந்து தானம் செய்ய வேண்டும்.

தான இடமும் நல் க்ஷேத்திரமாக இருக்க வேண்டும். இத்தனையும் கூடியிருக்க ஒருவன் அகத்தூய்மையோடு இருந்தால் ஒரு கோடிப் பயனைத் தரும்.

எனவே, உத்தமப் பயனடைய, கோதானம் ஆகியவற்றை வேத சாஸ்திரங்களை ஓதி, உணர்ந்த செந்தண்மை பூண்ட அந்தணனான உத்தமனுக்கே கொடுக்கவேண்டும்.

 ஒரு பசுவை ஒருவனுக்கே தானம் கொடுக்க வேண்டும்.

சாதுக்களிடம் நல்ல பொருள்களைப் பக்தி சிரத்தையோடு தானம் செய்பவன் அப்பிறவியிலாவது, மறு பிறவியிலாவது அதற்குரிய பலனைச் சந்தேகமின்றி அடைவான்.

சொற்ப அளவுடைய தான தர்மம் ஆனாலும் வாழுங் காலத்திலேயே தானமளிப்பவன் செல்வனாகி பலனை அடைந்து விடுவான்.

 அன்னதானம், கோதானம் முதலியவற்றைத் தன் கையாலேயே செய்து விட்டால் மரணத்துக்குப் பின் பசி தாகம் அடையாமல் நல்லுலகைச் சேர்ந்து சுகிப்பான்.

விருக்ஷாற்சனம் என்ற புண்ணிய கர்மத்தின் மகிமையால் உத்தம காலத்தில், உத்தம தலத்தில், உத்தம பிராமணனுக்கு தானம் கொடுத்தால் அதன் பலன் நிச்சயம் கைகூடும்.

 யாகம் செய்வதையும், கோதானம் முதலிய சிறந்த தானங்களைச் செய்வதையும் விட விருக்ஷாற்சவம் செய்வது மிகவும் முக்கியமான, உத்தமமான நற்கருமமாகும்.

எனவே, ஒரு மனிதன் நற்கதி அடைவதற்கு முதற்காரணமாக அமைவது விருக்ஷாற்சனமே.

 இந்த விருக்ஷாற்சனம் சிறந்தவனைக் குறித்துச் செய்யப்பட்டால் உடனடியாக ஏகோதிஷ்ட சிரார்த்தத்தையும் செய்து விடவேண்டும். விருக்ஷாற்சனம் செய்யாவிட்டால் பிரேத ஜன்மம் பற்றாமல் விடாது.

முன்பு கூறிய நாட்களில் ஒரு நாள் தலசுத்தி செய்த பிறகு அக்கினிப் பிரதிஷ்டை செய்து ஒரே நிறமாக உள்ள காளைக் கன்று ஒன்றையும், அதற்குச் சிறிதான கிடாரி கன்று ஒன்றையும் மஞ்சள் நீராட்டி ஆடை ஆபரணங்களால் அலங்காரம் செய்து, அவற்றின் வாலில் தர்ப்பணம் செய்துவிடுத்து, நாந்தி சிரார்த்தம் செய்து ஒரு பக்ஷம் பதினைந்து நாட்கள் வரையில் பிராமணர்களுக்குப் போஜனம் செய்வித்து வெள்ளி, திலம், உதகக் கும்பம், ஆடைகள் ஆகியவற்றை தானம் செய்தால் நூற்றொரு தலைமுறையில் உள்ளவர்களும் சுவர்க்கத்தை அடைவர். இதற்கு காமிய விருக்ஷாற்சன சர்க்கம் என்று பெயர்.

 பகவான் மேலும் தான தரும விசேஷங்களையும், விருக்ஷாற்சனம் பற்றியும் கூறுகிறார்.

 ஒருவன் மரித்த பதினொன்றாம் நாளிலாவது சோடச சிரார்த்தத்தைச் சபிண்டி கரணத்துக்கு முன்னதாகவே செய்து ததியாராதனம் செய்து பல தானமும் கொடுக்கவேண்டும்.

பருத்தி ஆடையின் மீது செம்பினால் வட்டில் செய்து வைத்து அதில் சாளக்கிராமம் வைத்து, ஆடை முதலியவற்றால் அலங்கரித்து ஆராதனை செய்து நற்பிராமணனுக்கு அதையும் தானமாகக் கொடுக்க வேண்டும்.

வைதரணி நதியைக் கடக்க, கரும்பினால் ஓடம் செய்து வெண்பட்டினால் அதனைச் சுற்றி நெய் நிரம்பிய வெண்கலப் பாத்திரத்தை அதனுள் வைத்து ஸ்ரீமந்நாராயணனை அர்ச்சித்து அந்த ஓடத்தை பிராமணனுக்கு தானமாகக் கொடுக்க வேண்டும்.

சக்தியை அனுசரித்துப் பொருள் கொடுத்துத் தில தானமும், சய்யா தானமும் செய்ய வேண்டும்.

மரித்தவரைக் குறித்து கிரியைகளைச் செய்யும்போது அந்தணர்களுக்குப் பூரி (தட்சிணை) கொடுப்பவன் தான் வேண்டிய நல்லவற்றை எல்லாம் அடைந்து மகிழ்வான். அவன் பிரேத ஜன்மத்தை அடைய மாட்டான். புண்ணியலோகம் அவனுக்குக் கிட்டும்.

தானங்கள் நான்கு வகைப்படும். அவையாவன:

1. பலனை எதிர்பாராமல் ஓர் உத்தம அந்தணர்க்குச் செய்யும் தானம் நித்திய தானம் எனப்படும்.

2. தீமை நீங்க (அ) தவமாகக் கொடுக்கும் தானம் நைமித்திக தானம் எனப்படும்.

3. புத்திர சந்தானம், வெற்றி, தனம் வேண்டிச் செய்வது காம்ய தானம்

4. பகவானைத் திருப்தி படுத்துவதற்காகவே கொடுக்கப்படும் தானம் விமல தானம் ஆகும்.

🌹தொடரும்🌹

விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய பரிபூஜிதா🔱🍀🌸🙏🌹வெற்றிவேல்🔱🍀🌸🙏🌹

6 November 2019

தனவசிய மாந்திரிக ரகசிய குறிப்புகள்

தனவசிய மாந்திரிக ரகசிய குறிப்புகள்.
********************************************

மல்லிகை பூவை பணம் வைக்கும் இடத்தில்
வைத்தால் பணம் பெருகும்

விட்டு வாசல்படியில் நற்பவி என்று எழதி வைக்க நன்மைகள் நடக்கும்

வலம்புரி சங்கின் சப்தம் கேட்டும் இடத்தில்
பணபுழக்கம் அதிகரிக்கும்

பிராமணர்களுக்கு அன்னதானம் அளகத்தால் சகல தோஷங்களும் நீங்கும் செல்வ செழிப்பு உண்டாகும்.

தினமும் சுத்தமான பசும்சாண விபூதி நேற்றியில் உடலில் பூசிவந்தால் லக்ஷ்மி கடாஷம் உண்டாகும்.

வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் துளசி செடி வில்வம் மரம் நெல்லி மரம்
மல்லிகை செடி வளர்த்து வந்தால் செல்வம் அதிகரிகாகும்.

வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடத்தில்
சாளகிராமம் ருத்திராச்சம் தாமரை பாதரசம்
பசும்சாணம் வைத்தால் செல்வ செழிப்பு உண்டாகும்

வெள்ளிக்கிழமை அன்று வரும் பெளர்ணமி
அன்று சுக்ர ஹோரையில் வில்வம் துளசி செந்நாயுருவி செடிகளுக்கு முறையாக காப்புகட்டி இதன் வேர்களை தன்னிடம்
வைத்து இருந்தாலும் வீட்டில்தொழில் செய்யும் இடத்தில் பணம் வைக்கும்
இடத்தில் வைத்தால் அவன் பணக்காரனாவது உறுதி.

நம் வீட்டின் 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எட்டி திசைகளிலிருந்தும் ஆறு குளம் ஏரி கடல் போன்ற இடங்களிலிருந்து நீர்
எடுத்து செம்புப் பாத்திரத்தில் செம்பில்
நீரப்பி வீட்டின் எட்டு திசைகளிலும் புதைக்க சகல சுபிட்சங்களும் உண்டாகும்.

கரையான்புற்று பாம்பு புற்று தேன்கூடு குருவி கூடு இவைகனை கலைக்கக்கூடாது
கலைத்தால் குழந்தை பாக்கியம் உண்டாகாது.

பெளர்ணமி அன்று சுக்ரஹோரையில் செந்நாருவி செடிளின் வேரை எடுத்து இவ்வேரில் தினமும் காலையில் பல்துலக்கி
வரவும் இப்படி 48 நாட்கள்
பல்துலக்கி வரவும் பல் துலக்கிய சக்கையை தனியே சேர்த்து வைத்து பெளர்ணமி அன்று அதை புது சட்டியில் போட்டு எரித்து சாம்பலாக்கி அதனுடன் ஜவ்வாது கலந்து நெற்றியில் இட்டு வரவும் இந்த வேரில் பல் துலக்கும் போது வாய் புண்ணாகி விடும் எனவே பல் துலக்கியவுடன் பச்சை பசும்பாலில் வாய் கொப்பளித்து பச்சை பாலை 1டம்ளர் அருந்திவும்.
இப்படி 48நாட்கள் செய்துவர முகத்தில் வசிய சக்தி ஏற்படும் தொழில் வசியம் ஏற்படும் லட்சுமி வசியம் உண்டாகும்
பணப்பிரச்சனை தீரும் பணப்புழக்கம் ஏற்பட்டு தனவசியம் உண்டாகும்.

ஆட்டின் கால் தூசு , கழுதையின் புழுதி
விளக்குமாற்றின் புழுதி , பெண்கள் நடக்கும் போது ஏற்படும் புழுதி இவைகள் யார்மீது படுகிறதோ அவர்களுக்கு பணக்கஷ்டம் தரித்திரம் உண்டாகும்.

வீட்டில் பப்பாளி மரம் , கருவேப்பிலை செடி ,
வளர்க்க கூடாது. கருவேப்பிலை செடி ஆண்களுக்கும் பப்பாளிமரம் பெண்களுக்கும் பாதிப்பை உண்டாக்கும்.

தலைமுடியில் இருந்து வழியும் வியர்வை துணியை அலசி பிழியும் தண்ணீர் துடைப்பதின் புழுதி புடைக்கும் முறத்தின் காற்று உடலில் பட்டால் தரித்திரம் உண்டாகும்.

நகம் தலைமுடி மிதக்கும் தண்ணீரை குடிக்கக்கூடாது.

உடலின் பின்பகுதியில் (புட்டம்) தாளம்
போடக்கூடாது நகத்தால் புல்லை கிள்ளக்கூடாது பூமியில் காலால் கையால்
கீறக்கூடாது உடலினை தட்டி தாளம் போடக் கூடாது.

தினம் தூய்மையான உடை அணிய வேண்டும். இருட்டிலும் விளக்கு இல்லாத இடத்திலும் படுத்து தூங்கக்கூடாது.

விளக்கேற்றிய பின் குப்பையை பெருக்கக் கூடாது. எச்சில் கையால் தலையை தொடக்கூடாது.

நகம் முள் கரித்துண்டு சாக்பீஸ் துண்டு ரத்தம் தண்ணீர் இவற்றால் தரையில் எழதுவதோ கோலம் போடுவதோ கூடாது.

அசுத்தமாக இருக்கும் போது சூரிய சந்திரனை பார்க்கக் கூடாது.

பகலில் உடலுறவு கொள்ளக்கூடாது சிக்கு விழந்த முடியுடனும் தலைமுடி விரித்துக் கொண்டும் இருக்கக் கூடாது.

மலம் ஜலம் கழித்த பிறகு திரும்பிப் பார்க்கக் கூடாது.

கை கால் கழவாமல் படுக்கக் கூடாது.

காலை காலால் தேய்த்து கழவக்கூடாது
ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.

நீர்வாணமாக படுத்து உறங்கக்கூடாது
நகத்தினை தரையில் கிறுக்கக் கூடாது
தண்ணீர்ரால் தரையில் கிறுக்கக் கூடாது
உடைந்த ஆசனப் பலகையை பயன் படுத்தக் கூடாது.

வாசலில், மிளகாய் எலுமிச்சை, கரி கட்டுவது ஏன்?*

*வாசலில், மிளகாய் எலுமிச்சை, கரி கட்டுவது ஏன்?*



நாம் கடைபிடித்து வந்த ஒவ்வொரு சிறிய விஷயங்களுக்கு முன்பும், ஏதோ ஒரு நல்ல விஷயம் புதைந்திருக்கிறது. காலப்போக்கில் அவற்றை மறந்து, நாம் அதை மூட நம்பிக்கை என கூற துவங்கிவிட்டோம்.

அதில் ஒன்று தான், வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டுவது. இதை நமது முன்னோர்கள் எதற்காக செய்தனர்; மூட நம்பிக்கையா; நிச்சயம் இல்லை, இதன் பின்னணியிலும் அறிவியல், மருத்துவ காரணங்கள் புதைந்துள்ளன.

எலுமிச்சை, சிவப்பு மிளகாய், கரி சேர்த்து வீடு, அலுவலகம் வாசலில் கட்டுவது ஏன் என்று கேட்டால். பெரும்பாலும் அனைவரும், அலட்சுமி கதை தான் கூறுவார். அலட்சுமி என்பது, மஹாலட்சுமியின் சகோதரி மூதேவியாவாள். இவள், வீட்டில் உள்ள செழிப்பை எடுத்து சென்று விடுவாள் என கூறுவர்.

புளிப்பு, காரம், சூடான பொருட்களை அலட்சுமி விரும்புவாள். அதனால் வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய், கரி சேர்த்து கட்டி வைப்பதால், அவருக்கு பிடித்தமான இவற்றை சாப்பிட்டு, வீட்டுக்குள் நுழையாமல் சென்றுவிடுவாள். இதனால், செழிப்பு தங்கும் என நம்புகிறார்கள்.
சரி அறிவியல் என்ன கூறுகிறது

எலுமிச்சை மற்றும் மிளகாயில், ‘வைட்டமின் சி’ சக்தி அதிகம் உள்ளது. இதில் கயிறு கோர்த்து கட்டும் போது. காட்டன் கயிறு அந்த ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிக் கொள்ளும். மெல்ல, மெல்ல அது ஆவியாக வெளிப்படும்.

இவ்வாறு வெளிப்படும் காற்றை சுவாசிப்பதால் சில ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. எலுமிச்சை, மிளகாயில் இருந்து வெளிப்படும் வாசம், வீட்டுக்குள், விஷ சக்திகள், நுழையாமல் பாதுகாக்கின்றன. இதனால், நோய் தொற்றுகள் அண்டாமல் பாதுகாப்பாக இருக்க முடியும்.

வாசலில் கட்டி வீசிய பழைய எலுமிச்சை, மிளகாயை காலால் மிதிக்க கூடாது. மிதித்துவிட்டால், கால்களை கழுவாமல் அப்படியே வீட்டுக்குள் வரக் கூடாது என கூறுவார். கழற்றி எறிந்த பழைய எலுமிச்சை ,மிளகாயில், நிறைய நச்சுக்கள் அடங்கியிருக்கும். இதை மிதித்து ,அப்படியே

வீட்டுக்குள் வந்தால் நச்சுக்கள் பரவும் என்பதால் தான். இதை மிதிக்க கூடாது என்கிறார்கள்.இப்போது, புரிந்திருக்கும், நமது முன்னோர்கள் எவ்வளவு கெட்டிக்காரர்கள் என்பது.

5 November 2019

ஸ்ரீசீதா தேவி தந்த மந்திரம்

ஸ்ரீசீதா தேவி தந்த மந்திரம்

மாமாத்ய தேவோ வடமூல வாஸிம்
க்ருபா விசேஷாத் க்ருதஸன்னிதான :
ஓம்கார ரூபாம் உபதிஸ்ய வித்யாம்
அவித்ய கத்வாந்தம் அபாகரோது.”

பெண்கள் தங்கள் குடும்பங்களில் நிலவுகின்ற துன்பங்களையும், சச்சரவுகளையும் முன்கூட்டியே அறிந்து கொள்வார்கள் எனில், அவைகளின் விளைவுகளிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள இயலுமல்லவா? ஆனால், இது நடைமுறையில் சாத்தியமானதா? என்ற கேள்வி எழலாம்.

இச்சுலோகத்தை உச்சரிப்பவர் இல்லத்தில் சுற்றுப்புற சூழ்நிலையின் தீய சக்திகள் தணிகின்றன. இந்த ஆன்மீக்ச் சூழ்நிலையில் இந்த சுலோகத்தின் மஹிமையால் நமக்கு வரவிருக்கின்ற பிரச்சனைகளை, மனோரீதியில் முன்னரே அறியும்  [TELEPATHY] மன ஆற்றல் உருவாகிறது. ”             
இவ்வாறு மனோரீதியாக உணர்ந்தபின் நம்முடைய பூஜைகளை நெறிப்படுத்தி ஜப தப முறைகளைப் பெருக்கி, அவற்றை எதிர்கொள்ளத் தயாராகிறோம். இது அபரிமிதமான மனோ வலிமையையும், எத்துயர்வரினும் சாந்தத்துடன் அணுகும் தன்மையையும் அளிக்கின்றது. இதனால், உயர் குறை இரத்த அழுத்தம் [High & Low Blood Pressure] நரம்புத் தளர்ச்சி [ Nervous Weakness] குடல் வீக்கம், மாரடைப்பு, [Heart Attack] போன்ற நோய்களையும் அறவே தடுக்கலாம். இந்த எளிதான ஸ்லோகம் கலியுகப் பெண்களுக்கு நலன்கள் அனைத்தையும் தரவல்ல ஒரு வரப்பிரசாதமாகும்.
சீதாதேவியை நினைத்து இந்த மந்திரத்தை ஜபித்துப் பெண்கள் தங்கள் குடும்ப பிரச்சனைகள் தீர நல்வழி காணுவார்களாக!