youtube

9 September 2014

யட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், ஜின் வசிய பூஜா 3


உடற்கட்டுக்கு மந்திரமும், காவல் தெய்வ மந்திரமும் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. நாம் பெற்ற வரங்களை கொள்ளையடிக்க தீய சக்திகள் முயற்சிக்கும். தீட்டு உண்டாக்கி நம்மிடம் இருக்கும் மந்திர சக்தியை விளக்க பார்க்கும். போலி சாமியார்கள் நம்மை ஏமாற்றி மந்திர சக்தியை ஆசியாக பெற்று அவர்கள் தவறான வழியில் பயன்படுத்தும் போது சக்தி கொடுத்த நம் சக்தியும் விரையமாக பார்க்கும். இது போன்ற நிகழ்வுகள் நம்மை பாதிக்காமல் இருக்க, அவசியம் மேற்கண்ட பூஜை முறைகள் நம்மை காக்கும் என்பதை அறிக. தேவ ரகசியத்தில் இதுவும் ஒன்று.
      சிவன் மலைக்கும், சித்த சமாதிக்கும் சென்று வந்த உடனே நாமும் தீட்சை வாங்கி இருக்கிறோம். எனவே நாமும் சாமிதான் என அலங்காரம் செய்து கொள்ள கூடாது. அடக்கமான பேச்சு ரொம்ப முக்கியம். மற்றவர்களை போல் இறைவனுக்கு நானும் ஒரு பக்தன் அவ்வளவுதான் என்ற எண்ணம் இருக்க வேண்டும். இல்லையேல் மனதில் ஆணவம் புகுந்து சித்தர் ஆசியை பெற விடாது. நிறைய கோவிலுக்கும், சித்தர்கள்  ஜீவ சமாதிக்கும் சென்று வாருங்கள். அடிக்கடி சென்று வாருங்கள். உங்கள் குடும்பத்தில் இறந்தவர்களையும் வழிபடுங்கள், சக்தி பெருக்கம் கூடிகொண்டே போகும். சக்தி கூட கூட இந்த உலகமே உங்களது என்று சொல்ல தோன்றும் பூரிப்பாக, ஆனால் அதில் ஆணவம் மட்டும் இல்லாமல் அன்பான வார்தையாக இருக்க வேண்டும். தன்னடக்கம் மிக முக்கியம். ஆன்மிகத்தால் அந்த அடக்கம் முக சாந்த்தை கொடுக்கும். அதுவே முக்கிய வசியமாகும்.
     நீங்கள் சேர்த்து வைக்கும் விரத மகிமை, செய்யும் தர்மங்கள், செபிக்கும் மந்திரங்கள், ஒழுக்கம் இவைகள் உங்களிடம் உள்ள விற்பனை பொருள். இதன் மூலம் தான் மற்றவர் துன்பம் மற்றும் கோரிக்கையை நிகழ்த்தி கொடுக்க பயன்பதுத்த முடியும். மேற்கண்ட மூலதனம் சிறப்பாக இருந்தால் இறைவனுக்கு அதை சமர்ப்பணம் செய்து வருவோரின் கோரிக்கையை வெற்றியாக முடித்து கொடுக்க முடியும். எனவே மூலதனத்தை எவ்வளவுக்கு எவ்வளவு பெருக்குகிறீர்களோ அவ்வளவு லாபம். பணம் மட்டும் லாபம் என நினைக்க வேண்டாம். இது ஒன்றும் ஆண்மிகவதிகளுக்கு முக்கியமல்ல என்று தெரியும். இருப்பினும் வெளிப்படையான உண்மைகள் தேவைகள் பற்றி கூறுவதில் பிழை இல்லை என்பதால் கூறினோம். ஆத்ம பலம், மன பூரிப்பு, மற்றவர்க்கு உதவிய திருப்தி, பிறவிப்பயன் ஆண்டவன் அருள் போன்ற எண்ணற்றவைகளையும் சேர்த்தே லாபம் என்று கூறினேன். இவைகள் நமக்கு கிடைக்க கூடிய அளவிட முடியத சொத்துக்களாகும்.
     மாந்த்ரீக முறைகளை முறையான ஒழுக்கங்களை கடைபிடித்தால் யாரும் போலிசாமியார் என்று கூற முடியாது.
      

ஆண்மிகத்தில் சம்பாதிப்பதில் ஒரு சதவீதம் தர்மம் செய்யுங்கள. அதுபோல் கூறும் மந்திரத்தில் பத்து சதவிதம் யாகத்தில் தேவதைக்கு அர்ப்பணம் செய்யுங்கள்.

           எல்லா தெய்வதிற்கும் காத்தல், அழித்தல், படைத்தல் சக்தி இருக்கின்றது. மனிதனுக்கும் அவ்வாறே உண்டு. ஒவ்வொரு மனிதரை கேட்டு பார்த்தாலும் அது உண்மை என புரியம். அது போல முத்தொழிலும் புரிவது போல முக்காலமும் உணரும் சக்தி ஒரு சில தெய்வங்களுக்கு மட்டுமே உண்டு. அது போல மனிதருக்கும் ஒரு சிலருக்கே உண்டு. அந்த ஒரு சிலரில் நீங்களும் இடம் பெற இந்த பயிற்சியை கடை பிடியுங்கள்.
     நாம் சந்தோசம் பெருகத்தான் இறைவனை நாடுகிறோம், வேண்டுகிறோம். தர்மங்கள் செய்கின்றோம், இது இறைவனுக்கு தெரியும். எனவே கட்டுபாடுகள் உங்கள் ஆத்மாவுக்கு புறம்பாக இருக்க கூடாது. மனதில் ஒரு ஆசை வைத்து கொண்டு கட்டுப்படுகளால் ஆத்மாவை அடக்கி இறைவன் கோபித்து கொள்வார் என நினைத்து மன இருக்கதோடு பூஜைகள் செய்தல் பலன் கிடைக்காது. ஒன்று ஆசைகளை விலக்க வேண்டும், அல்லது அதை அனுபவித்து விட வண்டும். மனதை லேசாக இறுக்கமில்லாமல் வைத்திருக்க வேண்டும். ஆசைகளின் கூடாரமாக அது இருக்க கூடாது. அப்போதுதான் இறை சக்தியை பெற முடியும். நியாயமான சந்தோசங்களை இறைவன் எப்போதும் தடுக்க மாட்டார்.
இறந்தவருக்கு தலை அருகில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். அது புது தீபமாக இருக்க வேண்டும். அது அகலாகவும் இருக்கலாம், காமாட்சி அம்மன் விளக்காகவும் இருக்கலாம். இவர்களுக்கு பயன்படுத்திய விளக்கை தெய்வ பூஜைக்கு பயன்படுத்தகூடாது. குடும்பம் சிரமத்திற்குள்ளாகும். அவசர நிலையில் குடும்பத்தில் பூஜைக்கு பயன்படுத்திய விளக்கை எடுத்து பயன்படுத்தினால் பாதகமிராது. அனால் அந்த விளக்கை மீண்டும் பூஜைக்கு பயன்படுத்துதல் சிறப்பில்லை. குறிப்பாக மாந்திரிக பூஜைக்கு அது போன்ற தீபத்தை பயன்படுத்த கூடாது. அது போன்ற தீபங்கள் குடும்பதில் தலைமுறை விளக்கு என பாதுகாக்கும் வழக்கம் உண்டு. அதை நன்று கேட்டு அறிந்து விளக்கி விடவும். நல்ல தீபமே பழையது இருந்தாலும் தேவதைக்கென செம்பினால் ஆனா புது காமாட்சி அம்மன் தீபம் வாங்கியே பயன்படுத்தவும். துணை விளக்காக இருப்பதை பயன்படுத்தி கொள்ளலாம்.
       தியானத்தின் போது மந்திரங்கள் ஆகாயத்திற்கோ பூமிக்கோ செல்ல கூடாது. இரண்டிற்கும் ஈர்ப்பு சக்தி உண்டு. எனவே ஆகாயத்தின் ஈர்ப்பில் இருந்து தப்பிக்க ப்ரனாயாமம் செய்து நாமே அங்குகிருக்கின்ற சக்தியை உறிஞ்சு கொள்கிறோம். அதை நம் உடலோடு சக்தி பெருக்கத்திற்கு பயன்படுத்துகிறோம். அடுத்து பூமி தன் சக்தியை எப்போதும் யாருக்கும் கொடுக்காது. வேண்டுமானால் இதில் வாழ்ந்து கொள்ளலாம். பிறகு இதிலே தான் அழிய வேண்டும். அதே போல வானத்திலிருந்து பெறப்பட்ட சக்தி வானத்திற்கே சென்று விடும். இதை தான் உயிர் பிரிந்து சென்று விட்டது என்று ஆகாயத்தை பார்த்து வழிபடுவார்கள்.  இது அனைவரும் அறிந்த ஒன்று. மண் ஆகாய சொத்தையும், ஆகாயம் மண் சொத்தையும் அபகரிக்காது. அதனால் தான் நீரை ஆவியாக்கி ஆவியாக்கி எடுத்து கொண்டாலும் மீண்டும் மழையாக கொட்டிவிடும். இதில் களவானியே மனிதன் தான். ஆகாய சக்தியை பெற மூச்சு பயிற்சி செய்வது போல, பூமி தன் சக்தியை இழக்காமல் இருக்க வெறும் தரையில் அமர்ந்து தியானம் செய்யாமல் ஆசனங்கள் மீது அமர்ந்து செய்தார்கள்.  அந்த ஆசனம் மா, பலா, அத்தி, அரசு, வில்வம், ஆலம், இல்லுப்பை போன்ற பல வகையான மரங்களால் ஆன பலகையிலும், கடினமான துனிகாளால் ஆன கம்பளம், பட்டு, சணல் கோணி இவைகளின் மேல் அமர்ந்து தியானம் செய்தாள் பூமி தன் தன சக்தியை நம் மீது செலுத்தி பாதிப்பை தராது என அறிந்து இருந்தனர். நீங்களும் உங்களுக்கு எந்த வகை ஆசனம் கிடைக்குமோ அதை பயன்படுத்துங்கள். கம்பளி ஆசனம் தவிர்க்கவும். தர்ப்பைப்புல் ஆசனம், வெண்பட்டு (அ) சிவப்பு பட்டு ஆசனம், சனலால் ஆன கோணி ஆசனம். இதுவும் இல்லையெனில் சுத்த பருத்தியால் ஆன கனமான விரிப்பு இவைகள் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து உங்களுக்கு ஆசனமாக் வைத்து கொள்ளுங்கள். இதுவே போதும், சிறப்பானதும் இதுதான். உங்கள் ஆசனத்தை வேறொருவர் பயன்பதுத்த கூடாது. ஆசனத்தில் ஒரே பக்கத்தைத்தான் பயன் படுத்தவேண்டும். மர ஆசனத்திற்கு நீங்கள் தேர்வு செய்வதனால் பொதுவானதாக மா பலகை அதனை பெரிய மனையாக செய்து வைத்து பயன்படுத்துங்கள் காலத்திற்கு வரும்.
ஆக மந்திரம் தங்கள் பூஜையில் அமர்ந்து படிக்கும் போதெல்லாம் ஆசனத்தை பயன்படுத்த வேண்டும். மற்ற வெளி இடங்களில் சாதரணமாக நீங்கள் வைத்திருக்கும் காவி துண்டை பரப்பி அதன் மேல் அமர்ந்து ஜெபம் படிக்கலாம். எந்த ஆசனத்தை தேர்ந்தெடுத்தாலும் முன்னமே தேர்ந்தெடுத்து, ஒன்றையே தான் அது பழுதடையும் வரை பயன்படுத்த வேண்டும். மாற்றி மாற்றி பயன்படுத்த கூடாது.
.....................நாளை தொடரும்
Post a Comment