youtube

9 September 2014

அனுமன் வழிப்பாட்டின் மகிமை !!

அனுமன் வழிப்பாட்டின் மகிமை !!

இளநீர் உடம்பின் வெப்பத்தை அகற்றி சக்தியைக் தரும் வல்லமையுடயது. ஹனுமான் என்றும் சிரஞ்சீவி ஆதலால், அவருக்கு இளநீர் அபிஷேகமோ அல்லது நிவேதனமோ செய்வதால், பக்தர்களை அனுக்கிரஹித்து எவ்வித கஷ்டமும் இன்றி அதிக நாட்கள் இப்பூலகில் வாழ வரமளிப்பார். அனுமானுக்கு பால் அபிஷேகம் செய்தால் எடுத்த காரியங்கள் நிறைவேறும் நல்ல செய்திகள் கிடைக்கும். குளிர்ச்சியான தயிரை அனுமனுக்கு அபிஷேகம் செய்தால் அனுமன் மனம் குளிர்ந்து நமக்கு அருள் புரிவார். தயிரை அபிஷேகம் செய்தால் மக்கட்பேறு உண்டாகும். அனுமானுக்கு நல்லெண்ணை காப்பு சாற்றுவதன் மூலம் குளிர்ச்சி தரும், அவரும் மனம் குளிர்ந்து அருள்வார் என்பது நம்பிக்கை எலுமிச்சம் பழம் ராஜகனி, புளியில்லாத எலுமிச்சம் பழமே சிறந்தது. எலுமிச்சம் பழத்தை அனுமானுக்கு மாலை சாற்றினால் திருஷ்டியினால் உண்டாகும் கோளாறுகள் விலகும். ஏவல், பில்லி, சூனியம் விலகும்

No comments: