உடற்கட்டு பயிற்சிஇந்த பயிற்சியின் அவசியம்
அறிந்து கொள்ளுங்கள். இந்த லோகத்தில் நல்ல சக்தி தீய சக்தி என எவளவோ சுற்றி
கொண்டிருக்கிறார்கள். அதில் துஷ்டமாக இறந்து போன கேட்ட எண்ணம் கொண்ட ஆத்மாக்களும்
அலைந்து கொண்டிருக்கின்றன. அவைகளுக்கு நிலைப்பட்ட மனம் கொண்ட ஒரு உடல் கிடைத்தல்
கூடு பாய்ந்து விடும். அதாவது நம் உடலில் நுழைந்து அதன் இஷ்டத்திற்கு நம்மை ஆட்டுவிக்கும். புத்தியை கெடுத்து விடும். பிறகு
குடும்பத்தையே கெடுத்து விடும். இப்படியும் துன்பம் வரலாம். மற்றொன்று மந்திர
உச்சரிப்புகளில் சில தவறு நேர்ந்தாலும் தேவதையின் கோபத்திற்கு ஆளாகலாம். மேலும் சக
மாந்திரீகர்கள் நம்மை விட பெரிய ஆளாக இவன் வந்து விட கூடாது என நமக்கு கட்டு
கட்டலாம். (அதாவது செயலிழக்க ஸெஇதல௦ உடல் உஷ்ணத்தால் நம் இந்தியர்கள் வெளியாகி
நம்மை தீட்டக்கலாம். நாய் நம்மை முகர்ந்தால் மந்திரம் செயலிழக்கும் நிலை
உருவாகும். இதனாலும் நமக்கு கெடுதல் உண்டாகலாம். வேறொரு தேவதை நம் உருவேற்றிய
மந்திரத்தை சக்தியை அபகரிக்கலாம். இது போன்ற செயல்களில் இருந்து நம்மை பாதுகாத்து
கொள்ளவும். நாம் விரும்பிய தெய்வம் மட்டும் நம்மை அணுகி அருள்புரியவும் ஏற்படுத்தி
கொள்ளும் மந்திர கட்டு அதாவது மந்திர பாதுகாப்பே இந்த உடற்கட்டு மந்திரம் ஆகும்.
நாம் நினைவு மறந்து இருக்கும் தருணத்தை பயன்படுத்தி பல தீய சக்திகள் நம் உடல்
உறுப்பை பாதிக்க செய்யும். இதில் இருந்தும் தப்பிக்கவும், நமக்கு ஒரு கேடயம் போல்
நம்மை சுற்றி பாதுகாக்கவும் நமக்கு நாமே போட்டு கொள்ளும் வேலியே இந்த உடற்கட்டு
மந்திரமாகும். எனவே இதை தினமும் 11 முறை கூற வேண்டும். பூஜை ஆரம்பிக்கும் முன்
தீபம் ஏற்றி உங்கள் ஆசனத்தில் அமர்ந்து கையில் விபூதி எடுத்து தங்களை சுற்றி
போட்டு கொள்ளவும். இதுவே தெய்வ பாதுகாப்பு இதை தாண்டி வேறு சக்திகள் நுழைய
முடியாது. நாம் விரும்பும் சக்திகள் மட்டுமே வர அனுமதிக்கும். பின்பு தான் மற்ற
மூல மந்திரங்களை உரு ஏற்ற வேண்டும். பாதுகாப்பான முறையே உங்களுக்கும்
குடும்பத்திற்கும் நல்லது. எனவே உடர்கட்டின் அவசியத்தை இப்போது
அறிந்திருப்பீர்கள்.
மேலும் கட்டு மந்திரம் உச்சரிக்கும் பொது எந்த
தேவதையை எந்த பக்கத்தை காக்க சொல்லி சொல்கிரிர்களோ. அந்த பாகத்தை கற்பனையில் செய்ய
வேண்டும். உதாரணமாக கைகளை அம்பிகை காக்க
வேண்டும் என்று மந்திரத்தில் இருந்தால் அதை சொல்லும் பொது கைகளை கற்பனையில்
பார்க்க வேண்டும். தேகத்தை காக்க வேண்டும் என்று இருந்தால் தேகத்தை ஒருமுறை
முழுமையாக ஒரு நொடியில் கற்பனையில் பார்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் தான்
உணர்வு பூர்வமாக உங்களுக்கு ஒரு பாத்து காப்பு கிடைக்கும். பாதுகாப்பு கிடைத்ததை
நிச்சயம் உணர்விர்கள். காவல் தெய்வமான நாய்கள் உங்களை கண்டாலே அன்போடு அருகில்
வரும். விளையாட பார்க்கும். இது நிகழும் அப்போதே கட்டு மந்திரம் உங்களுக்கு வேலை
செய்வதை உணர்வீர்கள் இதுவும் தேவ ரகசியமாகும். இனி மந்திர்ணகளை காண்க. இந்த கட்டு
மந்திரம் எந்த சூழலிலும் ஒருவருக்கும் தெரிய கூடாது கவனம். கையில் விபூதியை
எடுத்து கொண்டு இம்மந்திரங்களை கூறவும்.
ஓம் கம் கணபதயே நம:
ஓம் நன்றாழ்க்க குரு வாழ்க குருவே துணை
(இம்மந்திரத்தை மூன்று முறை கூறவும் ) பிறகு
ஓம் பகவதி ஈஸ்வரி என்றே தேகத்தில் பஞ்சாட்சர
மூர்த்திக் காவல், கைகளில் அம்பிகை மகேஸ்வரி சாமுண்டீஸ்வரி காவல் என்றே, சிரசு
முதல் பாதங்கள் வரை ஓம் என்ற அட்சரமும் காதில் வீரபத்ர தேவரும், நவதுவரத்தில் நவ
கிரகங்களும் என்னை சுற்றி கால பையிரவனும் காத்து ரட்சிக்க வேண்டும் .
(அன்றாடம் பதினோரு முறை கூற வேண்டும்)
இம்மந்திரத்தை பதினோரு முறை கூறவும். கூறிய
பின்பு உங்கள் உடலை சுற்றி கையில் வைத்து உள்ள விபூதியை போட்டு கொள்ளவும். இந்த
உடற்கட்டு பூஜையை விளக்கு ஏற்றிய உடன் முதல் வேலையாக செய்யவும். பிறகு மற்ற மூல
மந்திர பூஜையை கையாளலாம். இதழ் வாழ் நாள் முழுவதும் கடைபிடிக்கவும். வெளியிடம் செல்லும்
சூழல் அமைந்தாலும் அன்தும் இந்த உடற்கட்டு பூஜையை நின்ற இடத்தில் இருந்தே செய்யலாம்.
வடக்கு அல்லது வடகிழக்கு மூலை பார்த்து மந்திரம் சொல்ல சிறப்பு.
உடற்கட்டு பூஜை முற்றிற்று காலை மாலை இருவேளை
பூஜியின் போடும் உடற்கட்டு பண்ணவும். வாழ்நாள் முழுக்கவும் இந்த முறையை
பின்பற்றவும்.
No comments:
Post a Comment