7இந்த ஸ்ரீ சூரிய குரு பூஜையை வெறும் தரையில்
இருந்து செய்யக்கூடாது
ஒரு தொட்டியோ, அல்லது ஒரு பேஷனோ, பதம் முழுகும்
அளவு உள்ள அகண்ட பாத்திரமோ எது தங்களிடம் உள்ளதோ அதை சுத்தபடுத்தி அதில் சுத்தமான
நீர் பாதம் அல்லது முட்டி வரை மூழ்கும் அளவு நீரை கொட்டி அதில் கல் உப்பு ஒரு கை
பிடி அளவு குறையாமல் போட்டு (மேற்கொண்டு எவ்வளவு உப்பு வேண்டுமானாலும் போடலாம்)
கலக்கி சிறிது மஞ்சள் தூளும் போட்டு அதில் ஏறி நின்று கிழக்கு பார்த்து வணங்க
வேண்டும். வீட்டிற்குள் செய்ய கூடாது. வெளிக்காற்று படும்படியான இடமாக இருக்க
வேண்டும். வாசல், மொட்டை மாடியகவும் இருக்கலாம். தங்கள் பகுதியில் கடல், குளம்,
ஆறு, எரி போன்ற நீர் உள்ள இடங்கள் இருந்தால் தான் தண்ணிரில் உப்ப்பு, மஞ்சள் தூள்
போட வேண்டும். வெளியிட நீர் நிலைகளில் எதுவும் வேண்டாம். அப்படியே பூஜை செய்யலாம்.
எங்கு செய்வதாக இருந்தாலும் தினமும் ஒரே இடமாகத்தான் செய்ய வேண்டும். இடம் மாற்றி
மாற்றி செய்ய கூடாது. கிழக்கு பார்த்தார் போல் நின்று தான் பூஜை செய்ய வேண்டும்.
தண்ணிரை தொட்டு வணங்கிய பின்னரே அதில் இறங்கி நின்று வணங்க வேண்டும். எதற்குமே
மரியாதையை கொடுக்கும் பழக்கம் இருக்க வேண்டும். அப்போது தான் ஸ்ரீ சூரிய
பகவன் உங்களுக்கு குருவாக சம்மதிப்பார்.
ஸ்ரீ சூரிய பகவானுக்கும் அவர் பிள்ளைகளுக்கும் மிகவும் பிடித்தமானது தர்மம். எனவே உங்களால் இயன்ற
தர்மங்களை வாய்ப்பு கிடைக்கும் போது செய்ய வேண்டும். அவ்வாறு செய்தல் நீங்கள்
செய்ததை விட ஆயிரம் மடங்கு உங்களுக்கு குருவாக இருந்த திருப்பி செய்வர். எந்த
தர்மத்தையும் உங்களுக்காக பயன்படுத்த கூடாது. உதரணமாக நாம் தர்மம் செய்தால் நான்
செய்த தர்மம் என் தலை காக்கும். என் பிள்ளை குட்டிகளை காக்கும் என வேண்டி
கொள்வோம். அனால் அவ்வாறு வேண்டி கொள்ளக் கூடாது.. இறைவா எனக்கு மேலும் மேலும்
தர்மம் செய்ய வைப்பு தாருங்கள் என வேண்டவும். வாய்ப்பு தந்தமைக்கு என்றும் தங்கள்
பாதங்களை வணங்குகிறேன் என கூறவும். மற்றவரையும் தர்மம் செய்ய தூண்டுவதும் தர்மமே.
எனவே எந்த தர்மத்தையும் நாம் கொண்டாடாமல் இறைவனுக்கே அணைத்து தர்மத்தையும்
சமர்ப்பணம் செய்கிறேன் என வேண்டிக் கொள்ளவும். அவ்வாறு வேண்டினால் தான் இறைவன் நம்
தர்மத்தை பெற்று நம் பாவங்களை போக்கி ஆசைகளை பூர்த்தி செய்து கொடுப்பார்.
தர்மம் மட்டும் கிடையாது நாம் எந்த தெய்வ
மந்திரம் பூஜைகள் செய்தலும் இறுதியில் தங்களுக்கே சமர்ப்பணம் செய்கிறேன். நான்
கேட்கும் வரம் இது தான் தாருங்கள் என கேட்க வேண்டும். (இதுவும் தேவ ரகசியமே)
அப்போது தான் அருள் புரிவார்கள்.
ஆக மேற்கண்ட செயல்களை ஸ்ரீ சூரிய குருவானவர்
குரு தட்சணையாக பெற்று நமக்கு சித்திகளை பிச்சை இடுவார். (இந்த லோகத்தில் வாழும்
ஏட்டு கல்வி, செயல்முறை குருவை இதில் சம்பந்த படுத்த கூடாது. இல்லையேல் யாருக்கும்
சித்தி கிடைக்காது. இது அனுபவத்தில் வெற்றி கண்டவர்கள் ரகசியமாக வைத்து வழிபடும்
குருமுறையாகும். வெற்றி கண்டவர்கள் மற்றவரை வெற்றி அடையவிடுவதில்லை. எனவே இந்த
சூட்சும குருவை மறைத்து விட்டார்கள். உங்களுக்கு இனி அந்த குறையில்லை என்பதை
நினைத்து சந்தொஷபடுங்கள்)
ஆக மேற்கண்ட வழிமுறைகள் மிக முக்கியமானது என்பதை
மனதில் நிறுத்தி பயிற்சியைக் தொடருங்கள். உங்களுக்கு எவ்வித சந்தேகமும் இடையில்
வந்து விடக்குடதே என்பதற்காக தான் விளக்கமாக கூறியுள்ளேன். ஏன் எதற்காக என்ற
சந்தேகம் நம் முதல் விரோதியாகும். நமக்கு விளக்கம் கிடைத்து விட்டால்
சந்தேகத்திற்கு இடமில்லை. எனவே தான் எந்த பயிற்சியும் விளக்கமாக கூறுகிறேன்.
இனி தொடர்ந்து பயிற்சியை காணுங்கள். தண்ணீரில்
கிழக்கு பார்த்து நின்று முதல் நாள் மட்டும் வெற்றிலை பக்கு, வாழை பழம், வைத்து
ஊதுவத்தி ஏற்றி தேங்காய் ஒடித்து வைத்து கற்பூரம் ஏற்றி தீபத்தை வணங்கி நிமிர்ந்து
நின்று இரு கைகளையும் ஒன்றாக இணைத்து தலைக்கு மேல் கைகளை தூக்கி வணங்கவும்.
ஓம் நமோ ஆதித்யாய நம:
(இம்மந்திரத்தை ஒன்பது முறை கூறவும்)
பிறகு உயர்த்திய கைகைகளை இறக்கி, இரு கைகளையும்
பிச்சை கேட்பது போல் ஒன்றாக வைத்து (இஸ்லாமியர்கள் தொழுகையின் போது இரு கையை
இணைத்து வைத்திருப்பார்கள் அதை போல வைக்கவும்) மார்புக்கு நேராக கை மரபில்
ஒட்டாமல் சற்று தள்ளி வைத்துக் கொண்டு சூரிய திசை பார்த்து (கிழக்கு) அண்ணாந்து
கீழ்காணும் அற்புத மந்திரத்தை கூறவும். கூறும் போது உதடு பிரிய கூடாது. அதாவது
வாய் திறந்து செல்லக்கூடாது. உங்கள் நெற்றிக்கண் தான் வாய் என்று கற்பனை செய்து
நெற்றிக்கண் தான் மந்திரம் செபிக்க்றது என்ற உணர்வோடு மந்திரம் கூறவும். (எந்த
மந்திரத்தையும் அப்படிதான் கூறவும், தன்னால் மனம் நிலைப்படும். யாரை பார்த்தாலும்
நெற்றிகன்னால் பார்ப்பதாக உணருங்கள். எதை கேட்டாலும் நெற்றி கண் தான் காது என
நினைத்து கேளுங்கள். அவ்வாறு செய்தல் ஞானக்கண், எப்பொழுதும் திறந்தே இருக்கும்.
ஞானக்கண் ஐந்து நிமிடத்தில் இவ்வாறு செயல்பட்டால் விழித்து கொள்ளும்.
எதோ ஒன்றும் நெற்றிக்கண்ணில் ஒட்டிக் கொண்டு
உறுத்துவது போல தோன்றும். அதுவே ஞானக்கண் தோன்ற ஆரம்பிகிறது என்பதை அறியலாம்.
(இதுவும் தேவ ரகசியமே) பூஜை அல்லாத நேரத்திலும், இவ்வாறு செயல்படுங்கள்
வெகுவிரைவில் காற்றும், மனமும் வசப்படும் கூடவே தெய்வமும் வசப்படும்.
ஆக கீழ்காணும் மந்திரம் நெற்றிக்கண்ணே கூறுகிறது
என்பதை கவனித்து மந்திரம் மனதிற்குள் கூறுங்கள். முறையோ அல்லது அதற்கு மேலோ இந்த
மந்திரத்தை கூறவும். இந்த எண்ணிக்கைக்கு ஜபமாலை எதுவும் கூடாது. எல்லாம் மன
கணக்கில் தான் எண்ண வேண்டும். இரு கைகளையும் ஒன்றாக சேர்த்துள்ளதால் கைகளை வேறு
எந்த செயலுக்கும் பயன்படுத்த கூடாது. மனக்கணக்கில் எண்ணிக்கை வைத்து கொள்ள முடியவில்லை
என்றால் எவ்வளவு மந்திரம் சொல்ல முடியுமோ அவ்வளவு மந்திரம் கூறுங்கள்.
அதிகப்படியாக கூறினாலும் தவறில்லை. இதில் ஒரே ஒரு நிபந்தனை உண்டு. அதாவது இந்த
கைகூப்பி மந்திரம் கூறும் போது யாராவது பார்த்து ஏளனமாக நினைபர்களா என
கூச்சபடகூடாது. எப்படா பூஜை முடியும் என்று என்ன கூடாது. தண்ணிரை விட்டு எப்போது
வெளியேறுவோம் என்றும், எண்ணக்கூடாது முழுமையாக மனம் லயித்து உங்கள் குருவை சரணாகதி
அடைந்து அவரை வாழ்நாள் முழுவதும் குருவாக அடைய செய்யும் பிரார்த்தனை இது என்பதை
உணர்ந்து செயல்படுங்கள். சலிப்பு வராது மாறாக பிரார்த்தனை பாசத்தோடு அதிகரிக்கும்
முதல் நாள் மட்டும் தேங்காய் உடைத்து வைத்து படிக்கவும். 11 நாளும் தேவை இல்லை. அனால் அவசியம் தாம்ப்பூலம்
வைத்து ஊதுவத்தி ஏற்றியே மந்திரம் கூறவும். இந்த 11 தினமும் இடத்தையும்,
நேரத்தையும் மாற்ற வேண்டாம். மந்திரமும் வேக வேகமாகக் கூறக்கூடாது. ஒரே மூச்சில்
மந்திரம் கூற வேண்டும். ஒரே சீராக முதல் தடவை ஆரம்பித்த வேகம் தோனி கடைசி வரை
மாறாமல் பார்த்துக் கொள்ளவும். சீக்கிரமாக 108 எண்ணிக்கையை
முடித்து விட வேண்டும் என வேகமெல்லாம் மந்திர ஜெபத்தின் போது பயன்படுத்த
கூடாது.
No comments:
Post a Comment