youtube

31 December 2015

மகாபாரதம் சொல்லும் பயனுள்ள வாழ்க்கைப் பாடங்கள்

மகாபாரதம் சொல்லும் பயனுள்ள வாழ்க்கைப் பாடங்கள்

கிருஷ்ணர்: செல்லும் வழியைக் கொண்டு முடிவு நிர்ணயிக்கப்படுவதில்லை மகாபாரதப் போரில் பாண்டவர்களை வெற்றி கொள்ளச் செய்வதற்காக, விஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணர் எண்ணற்ற முறையற்ற செயல்களைச் செய்துள்ள...ார். அவருடைய பொய்களும், புரட்டுகளும் பாண்டவர்கள் போரில் வெற்றி பெறச் சாதகமாக இருந்தாலும், அந்த போராட்டத்தில் பாண்டவர்கள் இழந்தது மிகவும் அதிகமாகும். போருக்குப் பின்னர், ஆஸ்தினாபுரம் விதவைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் வசிக்கும் இடமாக மாறி விட்டது.

பீஷ்மர்: சுயநலமற்றவர், ஆனால் தொலைநோக்கு பார்வை இல்லை அஸ்தினாபுரத்து இராஜகுடும்பத்தின் மூத்த பெரியவர் மற்றும் வீரமிக்க போர்வீரரான பீஷ்மருக்கு தன்னுடைய மக்களையும், அரசையும் காப்பாற்ற சில வாய்ப்புகள் கிடைத்தன. பீஷ்மருடைய சிற்றன்னை பலமுறை அரசைப் பெற்றுக் கொள்ளுமாறும் மற்றும் திருமணம் செய்து கொள்ளுமாறும் மன்றாடிக் கேட்டும் பாராமுகமாய் இருந்து தன்னுடைய பிரம்மச்சரியத்தை அவர் கைவிடவில்லை. சுய-நேர்மை மிக்கவராக இல்லாத காரணத்தால், இவராலும் கூட போரைத் தவிர்க்க இயலவில்லை.

அர்ஜுனர்: ஒரு பெண்ணின் கோபத்தை விட மோசமானது எதுவும் இல்லை தேவலோக நாட்டிய கன்னியான ஊர்வசியின் முன்னேற்றத்தை அலட்சியம் செய்தார் அர்ஜுனர். இதன் காரணமாக ஒரு வருட காலத்திற்கு அர்ஜுனர் தனது ஆண்மையை இழந்து விடுவார் என்று அவள் சபித்தாள். வீரமிக்க அர்ஜுனர் ஒரு ஆண்டு காலத்திற்கு அலியாக காலம் தள்ளினார். எனவே, பெண்களை யாரும் இழிவுபடுத்த வேண்டாம்.

திரௌபதி: வாழ்க்கையில் உங்களுக்கு எல்லாமே இருப்பதில்லை தன்னுடைய முற்பிறப்பில் செய்த தவத்தின் பலனாக, தனக்கு வீரமிக்க, நேர்மையானவனாக, உடல் உறுதியானவனாக, மிகவும் கற்றறிந்தவனாக மற்றும் உலகிலேயே மிகவும் அழகானவனாக இருப்பவனே தன்னுடைய கணவனாக வர வேண்டும் என்ற வரத்தை சிவபெருமானிடம் கேட்டாள். அவள் கேட்டது கிடைத்தது, ஆனால் 5 வேறு வேறு கணவர்களிடம் இருந்து. ஒரே மனிதனிடம் இந்த 5 குணங்களும் இருக்காது மற்றும் நீங்கள் விரும்பியதெல்லாமே உங்களுக்கு கிடைத்திடுவதில்லை என்பது தான் இந்தக் கதையின் நீதியாகும்.

அபிமன்யு: அரை அறிவு ஆபத்தானது அர்ஜுனரின் மகனான அபிமன்யுவிற்கு சக்கர வியூகத்தை உடைத்து உள்ளே புக மட்டுமே வழி தெரியும், ஆனால் அதை விட்டு எப்படி வெளியே வர முடியும் என்று தெரியாது. எனினும், இந்த கடுமையான போர் வடிவத்திற்குள் புகுந்து செல்ல முயற்சி செய்ததன் பலனான தன்னுடைய உயிரையே விட்டு விட்டார் அபிமன்யு. இதன் காரணமாகத் தான் அரை அறிவு ஆபத்தானது என்று சொல்கிறார்கள். நீங்கள் எதைக் கற்றாலும் முழுமையாக கற்றுக் கொள்ளுங்கள் என்பது நீதி!

குந்தி : செய்யும் முன் கவனியுங்கள் திரௌபதியின் சுயம்வரத்தில் அர்ஜுனர் வெற்றி பெற்ற பின்னர், அவளை குந்தியிடம் அழைத்து வந்த போது, குந்தி தேவி சமைத்துக் கொண்டிருந்தாள். அர்ஜுனன் வெற்றி பெற்ற பரிசு என்ன என்பதை கவனிக்காமல், அவன் வென்ற பரிசை, சகோதரர்கள் அனைவரும் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று அவள் கூறி விட்டாள். எனவே, நீங்கள் சொல்லும் வார்த்தையின் விளைவுகள் என்ன என்று அறியாமல், எந்தவொரு வார்த்தையையும் விட்டு விடாதீர்கள்.

திருதராஷ்டிரர் : கண்மூடித்தனமான அன்பு ஆபத்தானது அஸ்தினாபுரத்தின் பார்வையற்ற அரசரான திருதராஷ்டிரரும் கூட ஒரு தவறை செய்திருக்கிறார். அவர் தன்னுடைய பிள்ளைகளை மிகவும் நேசித்ததால், யாரையும் கண்டிக்கவில்லை. ஓவ்வொரு தந்தை மற்றும் தாய்க்கும் தேவையான பாடமாக இது உள்ளது. உங்களுடைய குழந்தைகள் முழுமையாக கெட்டுப் போகும் முன்னர், அவர்களை சரியான நிலைக்கு கொண்டு வாருங்கள். கண்மூடித்தனமான அன்பினால் எந்தவிதமான பலனும் கிடையாது.

இந்தியாவின் மாபெரும் காவியமான மகாபாரதத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களாக இவை உள்ளன.

No comments: