youtube

6 December 2016

சிவன் தன் தந்தை பற்றி கூறிய கதை உங்களுக்கு தெரியுமா

சிவன் தன் தந்தை பற்றி கூறிய கதை உங்களுக்கு தெரியுமா

  சிவன் என்பவன் ஆதியும், அந்தமும் அற்றவன். அனைத்தும் திறந்த யோகி தான் சிவன். இதுவரை நாம் அறிந்த கதைகளில் சிவனின் குடும்பத்தை அறிந்திருப்போம். மனைவி பார்வதி, பிள்ளைகள் விநாயகனும், முருகனும் ஆனால், சிவனுக்கே தந்தை யார் என முனி ஒருவர் வினவிய கதையும் உண்டு.

சிவனை ஆதியும், அந்தமும் அற்றவன் என கூறுவதுண்டு. சிவனை தான் நாம் பிரபஞ்சமாக பார்க்கிறோம். காரணம் பிரபஞ்சமும் ஆதியும் அந்தமும் அற்ற வெற்று இடமாகும். ஒரு முனிவர் ஒருமுறை சிவனை கண்டு, உன் தந்தை யாரென வினவினார். அதற்கு சிவன், 'பிரம்மா தான் என் தந்தை" என பதிலளித்தார்.

அப்போது 'அவனுடைய தந்தை (தாத்தா) யார்?" என மீண்டும் கேள்வி எழுப்பினார். அதற்கு, விஷ்ணு தான் அவனுடைய தந்தை (தாத்தா) என பதிலளித்தார் சிவன். தொடர்ந்து விஷ்ணுவின் தந்தை யார் என வினவினார் அந்த முனிவர். அதற்கு, 'நான் தான்" என பதிலளித்தார் சிவன்.

கணிதத்தில் வட்டத்திற்கு அளிக்கப்படும் விளக்கம் தான் சிவனின் பிறப்பும், வட்டத்திற்குள் தான் ஆரம்பம், முடிவு என்பது கிடையாது. தொடக்கமும், முடிவும் அற்றது.

இதை தான் நாம் ஆதியும், அந்தமும் என கூறுகிறோம்.

No comments: