youtube

21 March 2016

குட்டிசாத்ததான் விஸ்ணுமாயா எனும் குரளி வசியம்

குட்டிசாத்ததான் விஸ்ணுமாயா எனும் குரளி வசியம்

குட்டிசாத்ததான் விஸ்ணுமாயா எனும் குரளி வசியம்
குட்டிசாத்தான் சிவகணம் அம்சம் .இதற்கு எதவாது ஒரு வேலையை கொடுத்து கொண்டு இருக்க வேண்டும்.எந்த வேலை இருந்தாலும் மிக எளிதில் செய்ய கூடியாது
மூல மந்திரம்
ஓம்  குட்டிசாத்தா பகவதி சேவியா ஸ்ரீம் றீம் வயநமசி சாத்தா வாவா உன் ஆணை என்னானை உன்னையும் என்னையும் படைத்த பிரம்மாவின் ஆணை சக்தி ஆனை சங்கரன் ஆணை வா உம் படு சுவஹா

வீதி இருகும் பிராத்தம் உள்ள நண்பர்கள் சித்தி செய்து கொல்லாம்

சில முக்கியமான ஆன்மீக தகவல்கள்

சில முக்கியமான ஆன்மீக தகவல்கள் :-

விநாயகப்பெருமானின் பெருவயிறு, இந்தப் பிரபஞ்சம் முழுவதும் இறைவனுக்குள் அடக்கம் என்பதை உணர்த்தும் அறிய தத்துவமாகும்.

சிவன் சன்னதியில் பிரதட்சிணம் செய்யும்போது நந்திதேவரையும் சேர்த்தே பிரதட்சணம் செய்தல் வேண்டும். அதைவிடுத்து சிவனுக்கும் நந்திக்கும் இடையே சென்று கோவிலைச் சுற்றி வருதல் கூடாது.

* பூஜை சாமான்களை எவர்சில்வர் தட்டுக்களில் வைக்கக்கூடாது. வெள்ளி பித்தளை, செம்பு வெண் கலம் ஆகிய தட்டுகளிலேயே வைக்க வேண்டும்.

* பசுவின் உடலெல்லாம் பாலாக இருப்பினும், அதை கறந்து வெளிப்படுத்தும் இடம் அதன் மடிதான். அது போல பகவான் அருளைச் சுரக்கும் இடம் ஆலயமாகும். எனவே திருக்கோவில்களுககுச் சென்று இறைவனை வழிபடுவதால், நம் வினைகள் யாவும் வெந்து, எரிந்து நீராகி, நம் விருப்பங்கள் நிறைவேறுகின்றன.

* சிதம்பரத்தைத் தரிசித்தாலும், காசியில் இறந்தாலும், திருவாரூரில் பிறந்தாலும், திருவண்ணாமலையை நினைத்தாலும் மோட்சம் கிட்டும் என்பது ஆன்றோர் முடிவு.

* விநாயகனை ஒருமுறை வலம் வரவேண்டும். சிவ பிரானை மூன்று முறையும், அம்பாளை நான்கு முறை யும், முருகனை மூன்று முறையும் சுற்றி பிரதட்சணம் செய்தல் வேண்டும்.

* காலையில் படுக்கையில் இருந்நு கண் விழித்தெழுந் ததும் அவரவர் உள்ளங்கையில் கண் விழிப்பதே நற் பலன்களை நல்கும் என்பது இந்து தர்ம சாஸ்திரம் கூறும் நெறி.

*வீடுகளில் மணியடித்து பூஜை செய்து விட்டு, அந்த மணியைத் தரையின் மேல் வைக்கக்கூடாது. ஏதாவ தொரு அடுக்குப் பகுதியின் மேல் வைக்க வேண்டும்.
................

தீபாராதனை காட்டுவது ஏன.........

நம் வீட்டில் ,கோயில்களில் கற்பூர தீபாராதனையும், நெய்விளக்கு தீபாராதனையும் காட்டப்படுகின்றன. கற்பூரமும் நெய்விளக்கும் கடைசிவரை எரிந்து போகும். எதுவும் மிஞ்சாது.

மனிதன் இறந்த பிறகும் இதே நிலை தான். எஞ்சும் சாம்பல் கூட தண்ணீரில் கரைக்கப்பட்டு விடுகிறது. இந்த தத்துவத்தை உணர்த்தவே கோயில்களில் தீபாராதனை காட்டப்படுகிறது.

எனவே இந்த தத்துவத்தின் படி எதுவுமே மிச்சமில்லாமல் நம்மை இறைவனுக்கு அர்ப்பணிப்போம்.

இதர வகை வழிபாடுகளில் பிரசாதமாக ஏதேனும் மிஞ்சும். ஆனால், கற்பூர வழிபாட்டில் எதுவுமே மிஞ்சாது. நாமும் கற்பூரத்தை போல் நம்மை முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணித்து வழிபட்டால் இறைவனது ஜோதி தரிசனம் கிடைக்கும் என்பதையே கற்பூர தீபாராதனை உணர்த்துகிறது

ராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்களும் அதன் பயன்களும்

ராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்களும் அதன் பயன்களும்

ராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்களும் அதன் பயன்களும்
பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது.

தீர்த்தமும் பலனும்:

1.மகாலட்சுமி தீர்த்தம்: (செல்வவளம்)

2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி)

3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் பத்தினி)

4. சரஸ்வதி தீர்த்தம்: (கல்வி அபிவிருத்தி)

5. சங்கு தீர்த்தம்: (வாழ்க்கை வசதி அதிகரிப்பு)

6. சக்கர தீர்த்தம்: (மனஉறுதி பெறுதல்)

7. சேது மாதவ தீர்த்தம்: (தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்).

8. நள தீர்த்தம்,

9. நீல தீர்த்தம்,

10.கவய தீர்த்தம்,

11.கவாட்ச தீர்த்தம்,

12. கந்தமாதன தீர்த்தம்: (எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்).

13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,(பாவங்கள் விலகுதல்)

14. கங்கா தீர்த்தம்,

15. யமுனை தீர்த்தம்,

16. கயா தீர்த்தம்,

17: சர்வ தீர்த்தம்: (எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்)

18. சிவ தீர்த்தம்: (சகல பீடைகளும் ஒழிதல்)

19. சத்யாமிர்த தீர்த்தம்: (ஆயுள் விருத்தி)

20. சந்திர தீர்த்தம்: (கலையார்வம் பெருகுதல்)

21. சூரிய தீர்த்தம்: (முதன்மை ஸ்தானம் அடைதல்)

22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை

கட்டுக்கொடியின் மருத்துவ குணங்கள்

கட்டுக்கொடியின் மருத்துவ குணங்கள்

கட்டுக்கொடியின் மருத்துவ குணங்கள் :-
கட்டுக்கொடி ஓர் ஏறு கொடியினம். முனை மழுங்கிய இலைகளுடன் வேலிகளிலும், புதர்களிலும், மானாவாரி, விவசாய நிலங்களிலும் படர்ந்து வளரக்கூடியது. இதில் சிறு கட்டுக்கொடி பெருகட்டுக் கொடி என இரு வகையுண்டு. இரண்டிற்கும் மருத்துவ குணம் ஒன்றே. ஒரே கட்டிலிருந்து பல கொடிகள் உண்டாகும். மண்ணில் பதிந்தால் வேர் விட்டு இன விருத்தியாகும். விதை மூலமும் இன விருத்தி செய்யப்படும்.மருத்துவப் பயன்கள் :-

இது குளிர்ச்சியுட்டாக்கியாகவும் உமிழ்நீர்ப் பெருக்கியாகவும் செயற்படும்.பாக்களவு இலையை மென்று தின்ன இரத்த பேதி, சீதபேதி, மூலக்கடுப்பு எரிச்சல் தீரும்.
இலை, வேப்பங்கொழுந்து சம அளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வர நீரிழிவு, களைப்பு, ஆயாசம், தேக எரிவு, அதிதாகம், பகு மூத்திரம் தீரும். சிறுநீர்ச் சர்கரையும் தீரும். சூரணமாக்கியும் சாப்பிடலாம்.
பெருங்கட்டுக் கொடி இலை அரை எலுமிச்சை அளவு அரைத்து எருமைத் தயிருடன் கொடுக்க பெரும்பாடு தீரும்.
இலையுடன் மாம்பருப்பும் சமன் அரைத்து பால், சர்கரை சேர்த்து காலை, மாலை கொடுக்க பேதி தீரும். கஞ்சி ஆகாரம் மட்டும் கொடுக்கவும்.
சிறுதளவு வேரும், ஒரு துண்டு சுக்கு, 4 மிளகுடன் காய்ச்சிக் கொடுக்க வாதவலி, வாத நோய், கீல் நோய் தீரும்.
இலைச்சாற்றை சர்கரை கலந்து நீரில் வைத்து வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும். இதை அதிகாலையில் சாப்பிட்டுவர வெள்ளை, வெட்டை, சீதக் கழிச்சல் ஆகியவை தீரும்.
கட்டுக்கொடி வேரையும், கழற்சிப் பருப்பையும் இழைத்து விழுதாக்கிக் கலந்து அரை தேக்கரண்டி நீரில் கலந்து கொடுக்கக் குழந்தைகளுக்குக் காணும் வயிற்றுவலி தீரும்.
கென்யாவில் இதன் இலையை வயிற்று வலிக்குப் பயன் படுத்துகிறார்கள். பாக்கிஸ்தானிலும் இந்தியாவிலும் நரம்புத் தளர்ச்சிக்காகப் பயன் படுத்துகிறார்கள் சைனாவில் வேரை உடல் பருமனைக் குறைக்கப் பயன் படுத்துகிறார்கள். ராஜஸ்த்தானில் இலையை சமைத்து மாலைக்கண் உண்டாவதைக் குணப்படுத்துகிறார்கள். இதன் இரு கொடிகளையும் பிலிப்பையின்ஸ் மற்றும் ஆப்பிரிக்காவில் கூடைகள் செய்யவும் பயன் படுத்திகிறார்கள். தமிழ் நாட்டில் இந்தக் கொடியை பிரமணை செய்வதற்கும், சிம்மாடு செயவதற்கும் பயன் படுத்துகிறார்கள்.

ஆன்மிகம் பொதுஅறிவு

ஆன்மிகம் பொதுஅறிவு

.   ஆன்மிகம் பொதுஅறிவு     1. இருகண்புருவ மத்தியில் எல்லா நாடிக்கும் ஆதாரமாக உள்ளது சுழிமுனை.
2. இடது மூக்கு துவாரம் வரை - சூரியகலை.
3. வலது மூக்கின் வரை - சந்திரக் கலை.
4. வலது கண்ணின் வரை - புருடன்.
5. இடது கண்ணின் வரை - காந்தாரி.
6. வலது காது வரை - அத்தி.
7. இடது காது வரை - அலம்புடை.
8. மூலாதலத்திலிருந்து - சங்கினி.
9. உள் நாக்கு முடியும் வரை - சிங்குவை.
10. அபான வரை - குரு.

தசநாடிகளின் சுற்று.சூரியகலை - வலது கால் பெருவிரல் முதல் இடது நாசி.
சந்திரகலை - இடது கால் பெருவிரல் முதல் வலது நாசி.
சுழிமுனை - மூலாதரத்தில ஆரம்பித்து எல்லா நாடிகளுக்கு நடு நாடியாகும்.
சிங்குவை - மூலாதரம் தொடங்கி உள் நாக்கிலே நன்று விழுங்கச் செய்வது.
புருடன் - மூலாதரம் தொடங்கி வலது கண் வரை நிற்பது.
காந்தாரி - மூலாதரம் தொடங்கி இடதுகண் வரை நற்பது.
அத்தி - மூலாதரம் தொடங்கி வலது காது வரை நிற்பது.
அலம்புடை - மூலாதரம் தொடங்கி இடது காது வரை நிற்பது.
சங்கினி - மூலாதரம் தொடங்கி குறியின் அளவு நிற்கும்.
குரு - மூலாதரத்திலிருந்து அபானத்தில் நிறுகும்.
நமது உடலில் 72000 நாடிகள் தசநாடியில் சூரியகலை, சந்திரகலை, சுழிமுனை, முக்கிய நாடிகளாகும் ஆக வாதம் மலத்தில் பித்தம் நீரில் சிலேத்மம் - விந்தில்..

தச வாயுக்களின் சுற்று.
1. உயிர் காற்று. (பிராணன்)
2. மலக்காற்று. (அபானன்)
3. தொழில் காற்று. (வியானன்)
4. ஒலிக்காற்று. (உதானன்)
5. நிரவுக்காற்று.( சமானன்)
6. தும்மல் காற்று. (நாகன்)
7. விழிக்காற்று. (கூர்மன்)
8. கொட்டாவிக் காற்று. (கிருகரன்)
9. இமைக் காற்று. (தேவதத்தன்)
10. வீங்கற் காற்று. ( தனசெயன்)

பிராணன் - மூலாதரத்தில் ஆரம்பித்து மூக்கு வழியாக மூச்சு விடல், பூச உதவமு குரல்வளையில் உள்ளது. கை,கால்களை வேலை செய்ய பெரு விரல் உள்ளது.
அபானன் - சுவாதிட்டானத்தில் இருந்து வெளிப்பட்டு மலத்தை கீழ் நோக்கி தள்ளும், ஆசனவாயை சுருக்கும். அன்னத்தை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும்.குறியில் காம வேகத்தை உண்டு பண்ணும்.

வியானன் - தோளிலிருந்து எல்லா நரம்பிலும் அசையும் அசையாபொருளில் உருப்புக்களைநீட்ட மடக்க உணர்ச்சிகளை அறியவும் உணவின் சாரத்தை கொடுத்து உடலைக்காக்கும்.

உதானன் - உணவின் சாரத்தை கொண்டு செல்லும் உடலை எழுந்து நிற்க உதவும். மேல் நோக்கி இயங்கும் வாயு.

சமானன் - நாபியிலிருந்து கால் வரை பரவும் வாயுக்களை அதிகப்படாமல் சரி செய்யும், உண்ட உணவு செரித்தவுடன் எல்லா இடங்களுக்கும் அனுப்புகிறது.

நாகன் - அறிவை வளர்க்கும், கண்களை திறப்பதற்கும், மயிர் சிலிர்க்க, இமை மூட வேலை செய்யும். வாந்தி எடுத்தால் துப்புதல் ஆகிய வேலை செய்யும்.

கூர்மன் - மனதில் கிளம்பி, கண் இமை, கொட்டாவி, வாய் மூட, கண்திறந்து மூட, கண்ணீர் வர வேலை செய்யும்.

கிருகரன் - நாக்கில் கசிவு, நாசி கசிவு உண்டுபண்ணும், பசி வர வைக்கும், செயல் புரிய, தும்மல் இருமலை உண்டு பண்ண.

தேவதத்தன் - சோம்பல், தூங்கி எழுகையில் அயர்ச்சி, தாக்குதல், கண்களை அசைத்தல், சண்டையிடுதல், தர்க்கம் பேசல்.

தனஞ்செயன் - மூக்கிலிருந்து உடல் முழுதும் வீக்கம் பண்ணும், காதில் கடல் அலை இரைச்சல் போல் இரைத்தல், இறந்த மூன்றாம் நாள் தலை வழியாகவெழியே செல்லுதல்.

ஆறு ஆதாரத்தின் பங்கு.
1. மூலாதாரம். 2. சுவாதிட்டானம். 3. மணிப்பூரகம். 4. அனாகதம்.5. விசுத்தி.
6. ஆக்கினை.

(1) மனம் சித்தமாக நெற்றி புருவ மத்தியில் உள்ளது. இதுவே ஆங்ஞை அல்லது ஆக்கினை என்கின்றோம்.
(2) ஆகாய தத்துவத்தில் சக்கரம் விசுத்தி கழுத்தில் உள்ளது.
(3) வாயு தத்துவத்தில் அநாவிரதம் மார்பு பகுதியில் உள்ளது.
(4) அக்கினி தத்துவத்தில் மணிபூரகம் வயிற்று பக்கத்தில் உள்ளது.
(5) நீர் தத்திவத்தில் அவாதித்தனம் குறிபகுதியில் உள்ளது.
(6) பூமிதத்துவத்தில் மூலாதாரம் குத பகுதியில் உள்ளது

மூல துர்காவின் மந்தரம்:

மூல துர்காவின் மந்தரம்:

ஓம் ஹ்ரீம் துர்க்காயை நம:
வன துர்காவின் மந்த்ரம் :
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் தும்
உத்திஷ்ட புருஷி கிம்ஸ்வபிஷி பயம்மே
ஸமுபஸ்திதம் யதிசக்ய மசக்யம்வா தன்மே
பகவதி சமய ஸ்வாஹா

சூலினி துர்காவின் மந்த்ரம் :

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ச்ரௌம் தும்
ஜ்வல ஜ்வல சூலினிதுஷ்ட க்ரஹ
ஸும் பட் ஸ்வாஹா

ஜாதவேதோ துர்காவின் மந்த்ரம் :

ஜாதவேதஸே ஸுனவாம ஸோமமராதியதோ
நிதஹாதி வேத: ஸந: பர்ஷததி துர்காணி
விச்வா நாவேவ ஸிந்தும் துரிதாத்யக்னி:

சாந்தி துர்காவின் மந்த்ரம் :

ஓம் ஹ்ரீம் தும் துர்காம் தேவீம்
சரணமஹம் ப்ரபத்யே

சபரி துர்காவின் மந்த்ரம்

ஹ்ராம் ஹ்ரீம் ஸெள: க்லௌம் ஐம் ஸ்ரீம்
ஜ்வலத் துர்கே ஏஹ்யேஹி
ஸ்புரப்ரஸ்புர ஆதிவிஷ்ணு ஸோதரி, அஸ்த்ர
ஜ்வலத்துர்கே, ஆவசயாவேசய ஜ்வலத்துர்காய
வித்மஹே ஜாஜ்வல்யமானாய தீமஹி தன்னோ
படபாநல: ப்ரசோதயாத், வமலவரயூம் ஜ்வலத்
துரகாஸ்த்ரே ஹும்பட் ஸ்வாஹா

வைண துர்காவின் மந்த்ரம் :

ஓம் சிடி சிடி சண்டால்யை மஹா
சண்டால்யை அமுகம்மே வசமானய ஸ்வாஹா

தீப துர்காவின் மந்த்ரம் :

ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் அமும்
துர்கே ஏஹ்யேஹி ஆவேசய ஆவேசய க்ரோம்
தும் துர்கே க்ரோம் ஹ்ரீம் ஆம் ஹும்பட் ஸ்வாஹா

ஆசூரி துர்காவின் மந்த்ரம் :

ஓம் கடுகே கடுகபத்ரே அஸுபகே ஆசூரி ரக்தே
ரக்தவாஸஸே அதர்வணஸ்யதுஹிதே அகோரேகோர
கர்ம காரிகே அமுகஸ்ய கதிம் தஹ தஹ உபவிஷ்டஸ்ய
குதம் தஹதஹ ஸுப்தஸ்யமனோ தஹதஹ
ப்ரபுத்தஸ்ய ஹ்ருதயம் தஹதஹ ஹனஹன பசபச
தாவத்தஹ தாவத்பச யாவன்மே வசமாயாதி ஹும்பட் ஸ்வாஹா

ஜயதுர்காவின் மந்த்ரம் :

ஓம் துர்கே துர்கே ரக்ஷினி ஸ்வாஹா

திருஷ்டி துர்காவின் மந்த்ரம் :

ஓம் ஹ்ரீம் தும் துர்கே பகவதி
மனோக்ரஹம் மதமத ஜிஹ்வாபிசாசீருத்ஸாத
யோருத்ஸாதய, ஹித திருஷ்டி அதிக திருஷ்டி
பரதிருஷ்டி, ஸர்பதிருஷ்டி, ஸர்வதிருஷ்டி
விஷம்நாசம் நாசய ஹும்பட் ஸ்வாஹா

மூகாம்பிகா மந்திரம்

ஓம் ஐம் கௌரி ஐம் கௌரி ஐம்
பரமேஸ்வரி ஐம் ஸ்வாஹா

ம ந்திர தியானத்திற்குப்

ம ந்திர தியானத்திற்குப்

ம ந்திர தியானத்திற்குப் பயன்படுத்தப்படும் சொற்களில் முதலிடம் வகிப்பது ”ஓம்”. பிரணவ மந்திரமாகக் கருதப்படும் இம்மந்திரம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. கடவுளர்களின் பெயரை ஜபிக்கும் போது கூட இந்துக்கள் இந்த ஓமை சேர்த்தே ஜபிக்கின்றனர். ஓம் நமச்சிவாயா, ஓம் நமோ நாராயணாய ஆகியவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

கிறிஸ்துவ தியானத்தில் ஜான் மெய்ன் “மாராநாதா” என்கிற மந்திரத்தை உபயோகித்தார். இது ஏசுநாதர் வாழ்ந்த காலத்தில் அவர் பேசிய அராமிக் மொழிச் சொல் எனப்படுகிறது. இதற்கு ஏசுவே வாருங்கள், அல்லது ஏசு வருகிறார் என்பது பொருள் என்கிறார்கள். செயிண்ட் பாலும், செயிண்ட் ஜானும் இந்த பிரார்த்தனை சொல்லைப் பயன்படுத்தி இருப்பதாக சொல்லப் படுகிறது.

புத்த மதத்தில் ”ஓம் மணி பத்மே ஹம்” என்ற மந்திரம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. மற்ற மதத்தினர் தங்கள் புனித நூல்களில் உள்ள சொற்களில் ஏதாவது ஒன்றை மந்திர தியானத்திற்குப் பயன்படுத்துகிறார்கள்

ஸ்ரீ ஸப்த மாதாக்களுக்கு உரிய காயத்ரி மந்திரங்கள்..

ஸ்ரீ ஸப்த மாதாக்களுக்கு உரிய காயத்ரி மந்திரங்கள்..

ப்ராம்ஹி..

ஓம் ஹம்ஸ யுக்தாய வித்மஹே
மஹா சக்தியைச தீமஹி
தந்நோ ப்ராம்ஹீ: ப்ரசோதயாத்||

மாஹேஸ்வரி..

ஓம் மஹா தேவ்யைச வித்மஹே
ருத்ர பத்னியைச தீமஹி
தந்நோ மாஹேஸ்வரி: ப்ரசோதயாத்||

கௌமாரி..
ஓம்சக்தி தராயை வித்மஹே
காமரூபாயை தீமஹி
தந்நோ கௌமாரி: ப்ரசோதயாத்||

வைஷ்ணவி..

ஓம் கதாஸங்கராயை வித்மஹே
மஹாவல்லபாயை தீமஹி
தந்நோ வைஷ்ணவீ: ப்ரசோதயாத்||

வாராஹி..

ஓம் உக்ர ரூபாயை வித்மஹே
தம்ஷ்ட்ராகாரன்யை தீமஹி
தந்நோ வாராஹீ: ப்ரசோதயாத்||

இந்த்ராணி..

ஓம் மஹர் வஜ்ராயை வித்மஹே
ஸஹஸ்ர நயநாயை தீமஹி
தந்நோ இந்த்ராணீ: ப்ரசோதயாத்||

சாமுண்டி..

ஓம் கராள வதநாயை வித்மஹே
சிரோமலாயை தீமஹி
தந்நோ சாமுண்டீ: ப்ரசோதயாத்||

நோய் தீர்க்கும் மலை:

நோய் தீர்க்கும் மலை:
சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள்.
சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர். திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.
தாணிப்பாறை அடிவாரம் – கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம் * மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை “சஞ்சீவி மலை’ என்கின்றனர்.
*சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.
* பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.
*இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள்.
*மகாலிங்கம் கோயிலின் வடக்கே “ஊஞ்சல் கருப்பண சாமி’ கோயில் உள்ளது.
சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க ” கஞ்சி மடம் ‘ உள்ளது. உங்களுக்கு குறைந்த பட்சம், கஞ்சியோ , கூழோ , பழைய சோறோ – நிச்சயம் கிடைக்கும். 24 மணி நேரமும் என்பதுதான் விசேஷம். மிகப் பெரிய குழுவாக சென்றால், முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும்.
சதுரகிரி தல வரலாறு :
சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான்.
இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி.
மனைவி சடைமங்கை.
இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள்.
ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.
வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார்.
பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான்.
தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு “சடதாரி’ என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார்.
மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.
சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது.
ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார்.
இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.
சிவபெருமான் அவனை தேற்றி, “” நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,” என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி “மகாலிங்கம்’ என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார்.
இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.
தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும். மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும்.
செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன. இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம்.
சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம்.
அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு.
இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி.
கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம். இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம்.
சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள்.
பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம்.
மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.
இரட்டை லிங்கம்:
ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர்.
இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார். “”சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்,”என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார்.
அவளோ, “”நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,” என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.
பிலாவடி கருப்பு:
வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், “”சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்,” என்றார்.
வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை “பிலாவடி கருப்பர்’ என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.
பெரிய மகாலிங்கம்:
நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை “பெரிய மகாலிங்கம்’ என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
தவசிப்பாறை:
மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம்.
இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம்.
பாறைக்கு செல்லும் வழியில் “மஞ்சள் ஊத்து’ தீர்த்தம் உள்ளது. தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது.
குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும்.
இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை “நவக் கிரக கல்’ என்கிறார்கள்.
இதற்கு அடுத்துள்ள “ஏசி’ பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும்.
தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் “வெள்ளைப்பிள்ளையார்’ பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது.
அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது. சுந்தரமூர்த்தி கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும்.
சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை “கும்ப மலை’
என்கின்றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் “சுந்தரமூர்த்தி லிங்கம்’ எனப்படுகிறது.
அருளை வழங்குவது “சுந்தரமகாலிங்கம்’, பொருளை வழங்குவது “சுந்தரமூர்த்தி லிங்கம்’ என்று கூறுவர்.
சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது.
இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.
பார்வதி பூஜித்த லிங்கம் :
சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள்.
தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து “அர்த்தநாரீஸ்வரர்’ ஆனார் என தல வரலாறு கூறுகிறது.
பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும் இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர்.
பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர். இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.
இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது. லிங்க வடிவ அம்பிகை சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் “ஆனந்தவல்லி’ என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள்.
சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.
சதுரகிரியில் தீர்த்தங்கள் சந்திர தீர்த்தம் சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் ‘சந்திர தீர்த்தம்’ இருக்கிறது.இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெறலாம்.
கெளண்டின்னிய தீர்த்தம். சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது இந்தத் தீர்த்தம். இது தெய்வீகத் தன்மை வாய்ந்த நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட, ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம்.
கங்கை, கோதாரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை முதலிய புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு. இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு ”பாவகரி நதி” என்னும் பெயரும் உண்டு. சந்தன மகாலிங்கம் தீர்த்தம். இச்சதுரகிரியின் மேல் ‘காளிவனம்’ என்கிற இருண்டவனம் ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
உமையாள் பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து, அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும். இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால், எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும்.
இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய ‘திருமஞ்சனப் பொய்கை’ உண்டு.
காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட ‘பிரம்மதீர்த்தம்’ ஒன்று சதுரகிரி மலைக் காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது.
இது தவிர கோரக்கர், இராமதேவர், போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட ‘பொய்கைத் தீர்த்தம்”, ”பசுக்கிடைத் தீர்த்தம்”, ‘குளிராட்டித் தீர்த்தம்’ போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன.
மகாலிங்கம் கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள்.
பொதுவாகவே மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும், ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும், மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள் யாவும் இருக்கின்றன. இவைகளைத் தழுவி வரும் காற்று நம் மீதுபட்டவுடன் உடலில் உள்ள நோய்கள் தீர்கின்றன.
அபூர்வ மூலிகைகள் :
இங்கே கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது . முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.
பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன.
இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.
தவிர கோரக்க முனிவரால் ‘உதகம்’ என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம், செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது. இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் ‘உதகம்’ என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது. விபரங்கள் அறிந்தவர்க்ளின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாக பயன்படுத்த வேண்டும்.
சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது. இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும். அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும். விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.
அதேபோல் ‘ஏர் அழிஞ்ச மரம்’ என்றொரு மரம் உண்டு. இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். இடையில் மழை, காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் வந்து ஒட்டிக்கொள்ளும். இந்த ‘ஏர் அழிஞ்ச மரத்தின்’ கொட்டைகளை எடுத்து எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும் மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.
சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும். அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும்.
இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு. இந்த விருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும். வெட்டினால் பால் கொட்டும். நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும்.
இவை எல்லாவற்றையும் விட தூக்கி சாப்பிடும் விஷயம் ஒன்று உள்ளது. மலையில் மிக அடர்ந்த பகுதியில் – ” மதி மயக்கி வனம்” என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள் , மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர்.
கிராமத்துக் காரர் ஒருவர் வழி தவறி உள்ளே சென்று மாட்டிக்கொண்டு விட்டார். “மகாலிங்கம் காப்பாத்து, காப்பாத்து” என்று மூன்று நாட்கள் கதறி, ஒரு வழியாக அந்த வனத்திலிருந்து வெளியே வந்து விட்டார். அடர்ந்த காடு, நிறைய பூச்செடிகள் இருந்தது. ஆட்களே யாரும் இல்லை. பசியே தெரியவில்லை. வெளியே வந்தது ஆண்டவன் அருள் என்று, இன்றும் அவர் திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டே இருக்கிறார்.
இன்றும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் – சித்தர்கள், ரிஷிகள் – மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர். கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் மலைப்பகுதிகளில் விழுகின்றன. வீடியோ காமிராக்களில் அதை நிறைய பகதர்கள் பதிவு செய்து இருக்கின்றனர்.
இறை நம்பிக்கை உள்ள பக்தர்கள் , வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மகாலிங்கத்தையும் , சந்தன மகா லிங்கத்தையும் – மனமுருக பூஜித்து வழிபட்டு வாருங்கள்.
சதுரகிரி மலை – ஒரு ஆன்மிக உலா சாதாரண மலைகளைப் போலல்ல இது. வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற இரகசியங்களைத் தன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை.
சித்தர்களின் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களின் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளின் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவின் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவன்மலை என்றும் மகாலிங்க மலை என்றும் அழைக்கப்படுகிறது.
சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களின் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ஆராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது.
இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுடன் மக்களின் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

அக்னி சுடாமல் தடுக்க ஜாலம் வித்தை

அக்னி சுடாமல் தடுக்க ஜாலம் வித்தை
ஓம் நமோ அக்னிரூபாய மமசரீரேஸ்தம்
பனம் குரு குரு ஸ்வாஹா
இந்த
21அச்சர மந்திரத்தை 108தடவை உரு ஜெபித்தால் மந்திரம் சித்தியாகும்

தவளைகொழுப்பு எடுத்து கற்றாலைச்  சாற்றில் அரைத்து உடம்பு முழுவதும் தடவிக் கொண்டல் அக்னி சுடாது

பசு எருமை அடக்கல் ஜாலம் வித்தை

பசு எருமை அடக்கல் ஜாலம் வித்தை
ஒட்டகத்தின் எலும்பை முளையாக்கி அவற்றை நாலாபுறமும் பூமியில் புதைக்கவும் இதனால் பசுவும் எருமையும் ஸ்தம்பித்து நிற்கும்

மேலும்ஒட்டகத்தின் ரோமத்தை பிராணிகள் மேல் போட்டாலும் பிராணிகள் அசையாது

பிச்சைக்காரன் திரைப்பட கதையும் பலஆயிரம் வருடங்களுக்கு மூன் சித்தர்கள் கூறிய பிச்சைஎடுக்கும் சூட்சுமும்

பிச்சைக்காரன் திரைப்பட கதையும் பலஆயிரம் வருடங்களுக்கு மூன் சித்தர்கள் கூறிய பிச்சைஎடுக்கும் சூட்சுமும்...

ஒருவர் தன் வாழ்க்கையில் கர்மா என்ற விதிப்படி  பல அடுக்கடுக்காக துன்பங்கள் மற்றும் பேரிழப்புகளை சந்தித்து வாழ்க்கையே வேண்டாம் முடிந்து விட்டது என்று நினைக்கும் தருவாயில் தான் யாரென்றே தெரியாத ஒரு ஊரில் சென்று அனைத்து உறவுகளையும் மறந்து முன்று நாட்கள் வெறும் பிச்சை மட்டுமே எடுத்து உண்டு வாழ்ந்து விட்டால் அவன் விதியின்படி  தலையெழுத்தே மாறி அவனுக்கு புது வாழ்வு ஏற்படும்.இதற்கு மிகபெரிய உதரணமாக பட்டினத்தார் சுவாமிகள் வரலாறு படியுங்கள்..அவர் மிகபெரிய செல்வந்தர்.ஒரு கட்டத்தில் அனைத்தும் துறந்து முக்தி பெற்று சிவனை கண்டார்..
சமிபத்தில் ஆங்கில பத்திரிகை ஒன்றில் வந்த செய்தி குஜராத்தில் உள்ள ஒரு செல்வந்தன் காசிக்கு சென்று 9 நாட்கள் பிச்சை எடுத்து இறைவனிடம்  வாழ்வு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.. ஒம் நமசிவாய ஒரு சித்தர் நினைத்தால் உன் வாழ்க்கையே மாற்றலாம்..ஆகையால் சித்தர்கள்,குருமார்கள் மற்றும் மகான்களை எங்கு பார்த்தாலும் அவர்களிடம் சென்று ஆசி வாங்குங்கள்... ஒம் நமசிவாய


20 March 2016

நிம்மதியாக வாழ சிவ வழிபாடு:

நிம்மதியாக வாழ சிவ வழிபாடு:

உங்கள் நட்சத்திரப்பாடல்களுடன்
கீழே அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்குரிய ஒவ்வொரு தேவாரப்பாடல் தரப்பட்டுள்ளன.
நீங்கள் உங்களது பிறந்த நட்சத்திரத்தின் பாடலை ஒவ்வொரு நாளும் மூன்று தடவை பாடி,
சிவபெருமானை வணங்கி வந்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நிம்மதியாக வாழலாம்.

அசுவினி:
தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்து
உந்தன் சரண் புகுந்தேன்
எக்கால் எப்பயன் நின் திறம்
அல்லால் எனக்கு உளதே
மிக்கார் தில்லையுள் விருப்பா
மிக வடமேரு என்னும்
திக்கா! திருச்சத்தி முற்றத்து
உறையும் சிவக்கொழுந்தே.

பரணி:
கரும்பினும் இனியான் தன்னைக்
காய்கதிர்ச் சோதியானை
இருங்கடல் அமுதம் தன்னை
இறப்பொடு பிறப்பு இலானைப்
பெரும்பொருள் கிளவியானைப்
பெருந்தவ முனிவர் ஏத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்சம்
அழகிதாம் நினைந்தவாறே.

கார்த்திகை/கிருத்திகை:
செல்வியைப் பாகம் கொண்டார்
சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணியோடு
மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரை இலாத
காஞ்சி மாநகர் தன்னுள்ளார்
எல்லிய விளங்க நின்றார்
இலங்கு மேற்றளியனாரே.

ரோகிணி:
எங்கேனும் இருந்து உன்
அடியேன் உனை நினைந்தால்
அங்கே வந்து என்னோடும்
உடன் ஆகி நின்றருளி
இங்கே என் வினையை
அறுத்திட்டு எனை ஆளும்
கங்கா நாயகனே
கழிப்பாலை மேயோனே.

மிருக சீரிடம்:
பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

திருவாதிரை/ஆதிரை:
கவ்வைக் கடல் கதறிக் கொணர்
முத்தம் கரைக்கு ஏற்றக்
கொவ்வைத் துவர் வாயார்
குடைந்து ஆடும் திருச்சுழியல்
தெய்வத்தினை வழிபாடு செய்து
எழுவார் அடி தொழுவார்
அவ்வத் திசைக்கு அரசு
ஆகுவர் அலராள் பிரியாளே.

புனர்பூசம்:
மன்னும் மலைமகள் கையால்
வருடின மாமறைகள்
சொன்ன துறைதொறும் தூப்பொருள்
ஆயின தூக்கமலத்து
அன்னவடிவின அன்புடைத்
தொண்டர்க்கு அமுது அருத்தி
இன்னல் களைவன இன்னம்பரான்
தன் இணை அடியே.

பூசம்:
பொருவிடை ஒன்றுடைப் புண்ணிய
மூர்த்திப் புலி அதளன்
உருவுடை அம்மலைமங்கை
மணாளன் உலகுக்கு எல்லாம்
திருவுடை அந்தணர் வாழ்கின்ற
தில்லை சிற்றம்பலவன்
திருவடியைக் கண்ட கண்கொண்டு
மற்று இனிக் காண்பது என்னே.

ஆயில்யம்:
கருநட்ட கண்டனை அண்டத்
தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதில் எய்ய
வல்லானைச் செந்நீ முழங்கத்
திருநட்டம் ஆடியைத் தில்லைக்கு
இறையைச் சிற்றம்பலத்துப்
பெருநட்டம் ஆடியை வானவர்
கோன் என்று வாழ்த்துவனே.

மகம்:
பொடி ஆர் மேனியனே! புரிநூல்
ஒருபால் பொருந்த
வடி ஆர் மூவிலை வேல் வளர்
கங்கையின் மங்கையொடும்
கடிஆர் கொன்றையனே! கடவூர்
தனுள் வீரட்டத்து எம்
அடிகேள்! என் அமுதே!
எனக்கு ஆர்துணை நீ அலதே.

பூரம்:
நூல் அடைந்த கொள்கையாலே
நுன் அடி கூடுதற்கு
மால் அடைந்த நால்வர் கேட்க
நல்கிய நல்லறத்தை
ஆல் அடைந்த நீழல் மேவி
அருமறை சொன்னது என்னே
சேல் அடைந்த தண்கழனிச்
சேய்ன்ஞலூர் மேயவனே.

உத்திரம்:
போழும் மதியும் புனக் கொன்றைப்
புனர்சேர் சென்னிப் புண்ணியா!
சூழம் அரவச் சுடர்ச் சோதீ
உன்னைத் தொழுவார் துயர் போக
வாழும் அவர்கள் அங்கங்கே
வைத்த சிந்தை உய்த்து ஆட்ட
ஆழும் திரைக்காவிரிக் கோட்டத்து
ஐயாறு உடைய அடிகளே.

அஸ்தம்:
வேதியா வேத கீதா விண்ணவர்
அண்ணா என்று
ஓதியே மலர்கள் தூவி ஒருங்கு
நின் கழல்கள் காணப்
பாதி ஓர் பெண்ணை வைத்தாய்
படர் சடை மதியம் சூடும்
ஆதியே ஆலவாயில் அப்பனே
அருள் செயாயே.

சித்திரை:
நின் அடியே வழிபடுவான்
நிமலா நினைக் கருத
என் அடியான் உயிரை வவ்வேல்
என்று அடர்கூற்று உதைத்த
பொன் அடியே இடர் களையாய்
நெடுங்களம் மேயவனே.

சுவாதி:
காவினை இட்டும் குளம் பல
தொட்டும் கனி மனத்தால்
ஏவினையால் எயில் மூன்று
எரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி
போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்து எமைத்
தீண்டப்பெறா திருநீலகண்டம்.

விசாகம்:
விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை
வேதம் தான் விரித்து ஓத வல்லனை
நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை
நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண்ணில் தொல்புகழாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்று உடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

அனுஷம்:
மயிலார் சாயல் மாது ஓர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தை தன்
குயிலார் சோலைக் கோலக்காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே.

கேட்டை:
முல்லை நன்முறுவல் உமை பங்கனார்
தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்
கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்கு
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே.

மூலம்:
கீளார் கோவணமும் திருநீறும்
மெய்பூசி உன் தன்
தாளே வந்து அடைந்தேன் தலைவா
எனை ஏற்றுக்கொள் நீ
வாள் ஆர் கண்ணி பங்கா!
மழபாடியுள் மாணிக்கமே
ஆளாய் நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே.

பூராடம்:
நின் ஆவார் பிறர் அன்றி நீயே ஆனாய்
நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய்
மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய்
மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய்
பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய்
பூமி மேல் புகழ்தக்கப் பொருளே உன்னை
என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால்
ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே.

உத்திராடம்:
குறைவிலா நிறைவே குணக்குன்றே
கூத்தனே குழைக்காது உடையோனே
உறவு இலேன் உனை அன்றி மற்று அறியேன்
ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே
சிறைவண்டு ஆர் பொழில் சூழ்திருவாரூர்ச்
செம்பொனே திருவடுதுறையுள்
அறவோனே எனை அஞ்சல் என்று அருளாய்
ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே

திருவோணம்/ஓணம்:
வேதம் ஓதி வெண்நூல் பூண்ட
வெள்ளை எருது ஏறி
பூதம் சூழப் பொலிய வருவார்
புலியின் உரிதோலார்
நாதா எனவும் நக்கா எனவும்
நம்பா என நின்று
பாதம் தொழுவார் பாவம்
தீர்ப்பார் பழன நகராரே.

அவிட்டம் :
எண்ணும் எழுத்தும் குறியும்
அறிபவர் தாம் மொழியப்
பண்ணின் இடைமொழி பாடிய
வானவரதா பணிவார்
திண்ணென் வினைகளைத்
தீர்க்கும் பிரா திருவேதிக்குடி
நண்ணரிய அமுதினை
நாம் அடைந்து ஆடுதுமே.

சதயம் :
கூடிய இலயம் சதி பிழையாமைக்
கொடி இடை இமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்கு உற்றாய் என்று
தேடிய வானோர் சேர் திருமுல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே.

பூரட்டாதி:
முடி கொண்ட மத்தமும் முக்கண்ணனின்
நோக்கும் முறுவலிப்பும்
துடிகொண்ட கையும் துதைந்த
வெண்ணீறும் சுரிகுழலாள்
படி கொண்ட பாகமும் பாய்புலித்
தோலும் என் பாவி நெஞ்சில்
குடி கொண்டவா தில்லை அம்பலக்
கூத்தன் குரை கழலே.

உத்திரட்டாதி:
நாளாய போகாமே நஞ்சு
அணியும் கண்டனுக்கு
ஆளாய அன்பு செய்வோம்
மட நெஞ்சே அரன் நாமம்
கேளாய் நம் கிளை கிளைக்கும்
கேடுபடாத்திறம் அருளிக்
கோள் ஆய நீக்குமவன்
கோளிலி எம்பெருமானே.

ரேவதி:
நாயினும் கடைப்பட்டேனை
நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த
அமுதனே அமுதம் ஒத்து
நீயும் என் நெஞ்சினுள் நிலாவிளாய்
நிலாவி நிற்க
நோயவை சாரும் ஆகில் நோக்கி
நீ அருள் செய்வாயே.
🙏🙏🙏🙏
பங்குனி உத்திரத்தின் மகிமையும் சிறப்பும்:

மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.

நாம் எவ்வாறு ஒரு சுப காரியத்தைச் செய்யும் போது நாள் நட்சத்திரம் பார்த்து செய்கிறோமோ அதுபோலத்தான் தெய்வங்களும் அவர்களது திருமணங்களை நல்ல நாட்களில் நடத்தி இருப்பர்.

அதன்படி, உத்திரத்திற்கு தெய்வங்களே சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு. அதாவது பார்வதி - பரமேஸ்வரன், தெய்வயானை- முருகன், ஆண்டாள் - ரங்க மன்னார், மீனாட்சி சுந்தரேஸ்வரர் என் பல தெய்வத் தம்பதிகளின் திருமணங்கள் இந்த பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில்தான் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

இதைவிடச் சிறப்பான மற்றொரு விஷயம், ராமாயணத்தில் வரும் தசரதச் சக்ரவர்த்தியின் நான்கு புதல்வர்களும் பங்குனி உத்திரத்தில்தான் தங்களது திருமண வாழ்க்கையில் நுழைந்துள்ளனர்.

தெய்வங்களின் திருமணம் மட்டுமல்லாது, பல தெய்வ அவதாரங்களும் இந்த பங்குனி உத்திரத்தில் நடந்துள்ளது.

வள்ளியின் அவதாரமும், ஸ்ரீ ஐயப்பனின் அவதாரமும், அர்ஜ்ஜுனன் தோன்றியதும் இந்த நந்நாளில்தான்.

தெய்வங்களெல்லாம் தேர்ந்தெடுத்து சிறப்பித்த இந்த பங்குனி உத்திர நட்சத்திரத்தன்று விரதம் இருப்பதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும் உகந்த நாள் என்று கருதப்படுகிறது.

இந்த நந்நாளில் கோயில்களில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் :

பழனியில் காவடி உற்சவம், மயிலாப்பூரில் அறுபத்து மூவர் உற்சவம், சுவாமி மலையிலும், திருச்செந்தூரிலும் வள்ளி கல்யாணம், காஞ்சிபுரத்தில் கல்யாண உற்சவம், மதுரையில் மீனாட்சி திருமணம் என அன்று பல முக்கியக் கோயில்களிலும் திருவிழாக்கள் களை கட்டும்.

இவ்வளவு சிறப்பு மிக்க இந்த பங்குனி உத்திரத்திற்கு இந்த ஆண்டு மேலும் ஒரு சிறப்பாக அந்த நாளில் புனித வெள்ளி, ஹோலி, மிலாது நபி என அனைத்து மனத பண்டிகைகளையும் கொண்டுள்ளது. அதோடு அல்லாமல் அன்று பெளர்ணமியும் உள்ளது.

இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திர நாளில் ஆலயம் சென்று வழிபடுவோம். பக்தர்கள், எளியோருக்கு அன்னதானம் செய்து அவர்களது ஆசியைப் பெறுவோம்
கஷ்டம் தீர்க்கும் ஏழுமலையான் ஸ்லோகம்

ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்
ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே !

பொதுப் பொருள்: திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

இத்துதியால் ஏழுமலையானைப் பாடி வணங்க, ஏழ்மை விலகி, சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். தவிர புதன், சனி கிரக பாதிப்புகளும் விலகும்.

‘அரோகரா’ என்றால் என்ன தெரியுமா?

‘அரோஹரா’ அல்லது ‘அரோகரா’ என்பது ‘அர ஹரோ ஹரா’ என்ற சொற்களின் சுருக்கம். இதற்கான பொருள், ‘இறைவனே, துன்பங்களை நீக்கி எங்களுக்கு நற்கதியை அருள்வாயாக’ என்பதாகும்.
கனவு சாஸ்திரம்

கருத்தரித்திருக்கும் பெண்மணி கனவில் தாமரை மற்றும் வெள்ளை நிற மலர்கள், பழங்கள் முக்கியமாக மாம்பழம் அல்லது மாங்காய் போன்றவை வந்தால் பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கும் என பலன் கொள்ளலாம்.
செம்பருத்தி,ரோஜா மலர்கள், வாழைப்பழம் கனவில் வருவது பெண் குழந்தை பிறப்பை உறுதி செய்யும் ஒன்றாகும்.
கனவில் தெய்வங்கள், பிராமணர்கள், உயிருள்ள காளை அல்லது பசு மாடு, கோவில், சர்ச், மசூதியில் பூஜை செய்பவர்கள், நீர் நிலைகள், எறியும் நெருப்பு போன்றவை தோன்ற உடல் நிலை முன்னேற்றம் மற்றும் இருக்கும் நோய்கள் விலகப்போவதின் அறிகுறியாக எடுத்து கொள்ளலாம். மேற்கண்டவை அசுத்தமான சூழலில் தென்பட்டால், அழுக்குடைகளுடன் அல்லது அசுத்தமான நீர் நிலை, இறந்த காளை அல்லது பசு, இடிந்த நிலையில் தெய்வீக இடங்கள் போன்றவையாக இருப்பின் உடல் தீங்கு பெரும் நோய் நேர்வதற்கான அறிகுறி.
கனவு சாஸ்திரம்-2
மரணம் வருவதை கனவுகள் பலருக்கு முன் கூட்டியே உணர்த்திவிடும். அதை பெரும்பாலானோர் உணர்வதில்லை. ஆரோக்யமாக உள்ள ஒருவருக்கு கூட சில பிரத்யேக கனவுகள் வரின் எனில், மரணம் உணர்த்தபடுகிறது எனலாம். அவற்றை அடுத்த பதிவுகளில் பாப்போம்.
பொதுவாக உறங்க ஆரம்பித்தவுடன் முதல் 2 மணி நேரத்தில் வரும் கனவுகள் ஒரு வருடத்திலும்,அடுத்த இரண்டு மணி நேரத்திலும் மற்றும் மதிய நேரத்தில் உறங்குவோருக்கும் வரும் கனவுகள் அடுத்த ஆறு மாதத்திற்குள்ளும் அடுத்த இரண்டு மணி மணி நேரத்தில் வரும் கனவுகள் மூன்று மாதத்திலும் கடைசி அதிகாலை கனவுகள் பத்தே நாட்களில் நடந்தேறும் என்கிறது 'ஹரித சம்ஹிதை' .
கனவு சாஸ்திரம் 3
கனவில் எறும்புகளை கண்டால் கவலை தரும் செய்தி ஒன்று வரவிருப்பதையும், பறவைகள் இடமாற்றத்தையும், காளைகள் நெருக்கடிகள் வரப்போவதையும், நீந்தும் மீன்கள் புதிய வாய்ப்புகளையும், நாய்கள் நன்மையையும், குறைக்கும் நாய் எனில் 'பெரும் பிரச்னை ஒன்றில் இருந்து நாம் விடுபடபோவதையும், நாய் கடிக்கும் படி கனவு வர- கஷ்டங்கள் வரப்போவதையும்,உயர பறக்கும் கழுகுகளை காணின் பெரும் அதிர்ஷ்டம்-செல்வ வரவையும், கிளிகள் வெளிநாட்டு பயணத்தையும், எலிகள் தொல்லைகள் வரப்போவதையும் உணர்த்தும் ஒன்றாகும். பாம்பை கொல்வதை போன்ற கனவு நாம் பெரிய எதிரி தொல்லையில் இருந்து ஜெயிப்பதற்கான அறிகுறியாகும். (நிஜத்தில் பாம்பை அடிப்பது-கொல்வது நேரெதிர் பலனை தரும் என்பதை நினைவில் கொள்க) .


பொதுவாக, குளங்களிலும் நீர்நிலைகளிலுல் நாம் காசுகளைப் (நாணயங்களை) போடுவோம். இப்பழக்கம் தொன்று தொட்டே நம்மிடம் இருக்கிறது. இதற்கான காரணம் என்னவென்று கேட்டால், அவ்வாறு செய்வதால் ஆகூழ் (அதிர்ஷ்டம்) வந்து சேரும் என்று கூறுவார்கள்.

உண்மையில் இதன் பின்னால் ஓர் அறிவியல் கூறு மறைந்திருக்கிறது. இப்பொழுது, துருப்பிடிக்கா எஃகால் செய்யப்படும் காசுகள் போல் அல்லாமல், முற்காலத்தில் காசுகள் செம்புகளால் தான் செய்யப்பட்டன. செம்பு நம் உடலுக்கு மிகவும் அவசியமான ஒரு கனிமம் ஆகும். செம்பு தாது குறைபாடால் மூட்டுவலி, மாரடைப்பு என்று பல கோளாறுகள் ஏற்படும். எனவே, நம் முன்னோர்கள் செம்பு காசுகளை குளங்களில் போட்டனர். செம்புக் காசுகளில் இருக்கும் செம்பு அணுக்கள் நீருடன் கலக்கும், அதைக் குடிக்கும் மக்கள் உடலுக்கும் செம்பு தாது சேரும். முற்காலத்தில் குளத்து நீர்தான் ஊர்மக்கள் எல்லாருக்கும் குடிநீராகப் பயன்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே பழக்கம் நாளடைவில் பொருளிழந்து தற்பொழுது நாமும் துருப்பிடிக்கா எஃகால் ஆன காசுகளைக் குளங்களில் போடுகிறோம்.

பின்னர், கனிமநீரை (mineral water) வாங்கி அருந்துகிறோம்.

  1. செம்பு குடங்களில் நீரைப் வைத்து அருந்துவது சிறப்பு. செம்பு நீர், புற்றுநோயைத் தவிர்க்கும் பண்புடையதாக அறிவியல் உலகம் கூறுகிறது.

19 March 2016

காணாமல் மறையும் ஜாலம் வித்தை

காணாமல் மறையும் ஜாலம் வித்தை
ஆமைக்கு 7 நாட்கள்  வரை  மனச் சிலை அரிதாரம் இவ்விரண்டையும் சாப்பிடச் செய்யவும் .பிறகு அதன் மலத்தை கையில் பூசிக்கொண்டால் காணாமல் மறைந்து போவார்

பல மைல்கள் நடக்க வித்தை ஜாலம்

பல மைல்கள் நடக்க வித்தை ஜாலம்
சக்கரையோடுவெள்ளை குன்றி மணி வேரைக் கலந்து ஒரு சாதகன் கால்களில் பூசிக்கொண்டால் அவர் ஆயிரம் மைலையும்  கடந்து செல்வார்

பூதங்ககளைக் காண ஜாலம்

பூதங்ககளைக்   காண ஜாலம்
அழிஞ்சில் தைலத்தினால் விளக்கு ஏற்றி வைத்தால் அவர் அந்த வெளிச்சத்தில் இரவு நேரத்தில் பூமியில் வானில் போகும் பூதங்ககளைப் பார்க்கலாம்

மாயமாய் மறையும் ஜாலம்

மாயமாய் மறையும் ஜாலம்
அழிஞ்சில் தைலத்தில் வெள்ளைக் கடுகை வைத்து மூன்று உலோகத்தில் சுற்றி அந்த தாயத்தை முகத்தில் வைத்து கொண்டால் அந்த ஆள் மாயமாய் மறைவான்

மாயமாய் மறையும் ஜாலம்

மாயமாய் மறையும் ஜாலம்
அரிதாரத்தை கறுப்பு எருமைபாலை  அழிஞ்சில் தைலத்தோடு கலந்து ஒருவர் தனது சரீரத்தில் பூசிக் கொண்டால் அவர் மறைந்து போவார் என்பது சித்தர்கல் வாக்கு

மாயமாய் மறையும் ஜாலம்

மாயமாய் மறையும் ஜாலம்

அழிஞ்சில் தைலத்தில் வசம்பை தினங்கள் ஊறவைத்து உலோகத்தில் சுற்றி அந்த தாயத்தை முகத்தில் வைத்து கொண்டால் அந்த ஆள் மாயமாய் மறைவான்

18 March 2016

சித்தர்கள் காக்கும் புண்ணிய பூமி

சித்தர்கள் காக்கும் புண்ணிய பூமி

NASA விண்வெளி ஆய்வு மையத்தின் ஆய்வாளர் திரு.கிறிஸ்டின் நெகுரியாது கூறும் செய்தியை பல ஆயிரம் ஆண்டுகட்கு முன் நமது சித்தர்கள்ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்து உள்ளனர். இதை அகத்தியர் தமது ஜீவ நாடியில்,
‘‘ஈரிசு எனுங் கொடுங்கோளன்று பருதி வட்டத்தை கலி தோன்றி யாயிரப்பஞ்சங் கழிய நெருங்கப் பாரே! பலனெனுங் கேடு தம்மால் புவிச் சூடு கூடுமே! யெரிகிரி சீற துருவங்கரைய புவிவாழ் சீவர் சலனமுறப் பாரீரே’’ என்றார்.

தற்போது தட்பவெப்பநிலை மாறுபாடு ஏற்பட, ERIS என்னும் கோள்ஒன்று SOLAR SYSTEM அருகில் வருகையில் இது நடக்கும் என்கிறார் சித்தர். இதனையே விஞ் ஞானிகள்எரிமலை சீற்றம் காண்பதும், துருவம் விளங்கும் பனிப் பாறைகள்உருகி கடல் நீர் மட்டம் உயரவும், மழை பொய்க்கவும், காற்று மண்டலம் வெப்பம் மண்டலம் மேலிட்டு நூதன நோய்கள்தோன்றவும் ஏதுவாகும் என்கின்றனர்.

இந்த PLANET ஐ NIBIRU, MARDUK, NEMISIS, HERCOLUBUS, THE GOD’s PLANET , THE PLANET OF EMPIRE, THE CROSS PLANET, RED PLANET என்றெல்லாம் விஞ்ஞானிகள்பெயரிட்டு அழைக்கின்றனர்.

அகத்தியர் தமது ஓலைச்சுவடியில்,
‘‘சுபாநு தனில் பாலமர் தலத்து தூரதிருட்டி
ஆடி வழி விழுமிது பின்துவியாண்டுகழியவே
நிழலாட நாமமிது டிசோமியமென்பரே’’-
-என்றும்
‘‘நவச் சதுர்ச் சதமாண்டேகமிது புவி நெருங்க
காலமிது கடிதாம் கண்டோம்-
உவர்ப்பு நீரேரப்
பாரு-பரங்கியருக்காகதன்றி பாதாளத்த
படுவரே’’ எனச் செய்யுள்ஜீவநாடியில் நீள்கின்றது.
2003-ம் ஆண்டு இதனை பாலமர் என்னும் தலத்திலிருந்து காணலாம் என்கிறது நாடி, OCTOBER 21, 2003 ல் CALIFORNIA- ல் உள்ள MOUNT PALOMAR என்ற இடத்தில் இருந்து 1.22 OSCHIN TELESCOPE வழியே இக்கோள்அறியப்பட்டது. இந்த கோளுக்கு 2005 ல் DYSNOMIA எனப் பெயரிடப்பட்டது. இதனை முன்பே அகத்தியர் கூறியிருப்பது நோக்கத்தக்கது. மேலும் இந்த ERIS / NIBIRU என்னும் கோள்ஒவ்வொரு 3600 ஆண்டுகட்கு ஒருமுறை சூர்ய மண்டலத்தை நெருங்கும் என்ற விஞ்ஞானிகள்கூற்றை முன்பேயே அகத்தியர் எழுதியமை நம்மை வியக்க வைக்கின்றது. ஒவ்வொரு முறை ERIS கிரகம் சூரிய மண்டலத்தை நெருங்குகையிலும், பனிப்பாறைகள்உருகுதலும், புவி வெப்பம் கூடுதலும் காணும்.

 சீதோஷ்ணம் மாறும் என்ற அகத்தியர் வாக்கு பொய்யல்ல. அவர் நீர் தன்மை கடினமாகும், உப்புச் சத்து கூடும். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள்சற்று திணறும் என்கின்றார்.

பூமிக்கு வெகு அருகாமையில் இருக்கும் வியாழன் மற்றும் செவ்வாய் கிரகங்களின் இடையில் இந்த GOD's PLANET சஞ்சாரம் செய்துள்ளது. இதனால் பூகம்பம் ஏற்பட்டது. அன்டார்டிகாவின் பனி உருகி வெள்ளப் பெருக்கு காணப்பட்டது. இது சுமார் இன்று தொட்டு 7,200 ஆண்டுகட்கு முன் நிகழ்ந்தது. எனவே POLLUTION எனும் மா சுபடுவதன் காரணம் மட்டுமே பருவநிலை மாறுபாட்டுக்கு காரணம் அல்ல.

அகத்தியர் தமது ஓலைச் சுவடியில்,
‘‘நூதனமாய் வாலோடு விளங்குங் கோளன்று
பருதிக் கூடத்து புகுந்தாட- பூமகள்நடுங்க
வடிப்பானாய் நிற்போரும் செயலிழப்ப
துவாரங் காணுமன்றி சில வழியுமே’’
என்ற பாடல் உற்று நோக்கத்தக்கது.

 IMMANUAL VELIKOVSKY எனும் ரஷ்ய விஞ் ஞானி WORLD’S IN COLLISION என்ற தமது ஆய்வறிக்கையில், ‘‘A Celestial body that recently entered our solar system- a new comet-came very close to earth, (causting-A/N) that eventual disappearance of the glacial layer’’என குறிப்பிட்டமை முன்னைய அகத்தியர் தம் சொல்லின் மெய்மையை பறைசாற்றுகின்றது. அவர் மேலும் Poles glaciers melting is accelerating என்பது மெச்சத்தக்க உண்மை.

அகத்தியர் தமது ஜீவ நாடியில் ஓதும் வாக்கு ஆயத்தக்கது.
‘‘மரூவனன் திரிதன் தஞ்சூடு கூட
தாயுங் கொதிப்ப வியாழனுறை கற்குழியுஞ்
சீறி கொப்பளிக்க, கண்டோமே, மங்களமும்
சிவப்ப மந்தனாரின் வெம்மை வோத
வொண்ணாது மேல்புக புவி தாங்குமோ?’’

என்னும் பாடல் மிக நுட்பமானது.
மரூவனன் என்பது PLUTO என்ற தாய் கிரகத்தையும், திரிதன் என்பது அதனுடைய உப கிரகத்தையும் (SATELLITE) குறிக்கின்றார்.

 ஆங்கிலத்தில் PLUTO வின் நிலவை TRITON என்பர். இந்த TRITON வெப்பமடைவது தாய் கிரகமான PLUTO ஐ அதிக வெப்பம் கூட்ட, பூமியின் வெப்பம் எதிர்பார்த்த அளவை விட ஏறுகின்றது. செவ்வாய் கிரகமும் வெப்பம் ஏற்றம் கண்டு நிற்பதினால், சனி கிரகமும் மெத்தச் சூடாகி தட்ப வெப்பத்தை அதிகரிக்கிறது. இந்த அகத்தியரின் வாக்கை, அமெரிக்காவின் MASSACHUSETTS INSTITUTE OF TECHNOLOGY NOV 2002 ல் ஆய்வு செய்து PLUTO வும் அதன் MOONம் வெப்பம் ஏறி நிற்கிறது என்கிறது. DECEMBER 7, 2002ல் ABC News THE WARMING OF MARS என்ற தலைப்பில் ஆய்வறிக்கையை உலகிற்கு பறைசாற்றியது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் University of California தனது ஆய்வின் முடிவில் the superior atmosphere of Saturn is much higher than estimated என்றது.
‘‘மங்கள குருயிடை கச்சை தோன்றுமே’’

என்னும் செய்யுளை ஆய்கையில், வானசாஸ்திரத்தில் வல்லுநர்களாக விளங்கிய சுமேரியர்கள்பாடல்களை நினைவூட்டுகிறது. இவ் வாக்கை DR.BROWN என்ற விஞ்ஞானி PLANET 2003-FL 61 suffered a terrible collision with another celestial body at the begining of the solar system என குறிப்பிட்டுள்ளார். இதனை சுமேரியர்கள், NIBIRU என்னும் கோள், TIAMAT என்ற மற்றோர் கோளில் மோத creating a sky the ASTEROID BELT BETWEEN MARS AND JUPITER என குறிப்பிட்டமை காண்க. கச்சை என்றால் BELT என்று பொருள்.
NIBIRU என்ற கோளை 2003ல் விஞ்ஞானிகள்கண்டனர்.

பைபிளில் ERIS PLANET ஐ பற்றி CHAPTER 21:2,12,16 வசனங்கள்பேசுகின்றன. இதனை NEW JERUSALEM (ERIS/SALEM) என்றும் DIAMETER 2400 KM எனவும் இருப்பதை காணலாம். இது நமது சித்தர்களின் வாக்கை ஒத்து நிற்பதை காண்க.

‘‘மைமீனொன்று பூமியை யத்து நிற்ப’’ எனும் வாக்கை தமது ஜீவநாடியில் கூறும் அகத்தியர் கூற்றை APRIL 25,2007 ல் NASA COMMUNICATED OFFICIALLY the discovery of the planet 581 C-which is possibly to be like earth. This is actually DAK STAR என்றது. மை என்றால் கருப்பு என்பது பொருள்.

விஞ்ஞானிகள்கூற்று இதுகாறும் அகத்தியரின் கூற்றை ஒத்து இருப்பினும் சிலவற்றில் மாறுபாடுஇருப்பதை தற்போது ஆய்வோம்.

நார்வே நாட்டின் பிரதமர் திரு. ஜென்ஸ் ஸ்டோல்டென் பெர்க். இவர் ஒரு விஞ்ஞானியும் ஆவார், ‘‘THE FORCES OF NATURE’’ என்ற தலைப்பில் பேசுகையில், ‘We hope and work for the best, but we must be ready for the worst’ No further comments என்றார். உயிர்வாழ அத்தியாவசியமான உணவுப் பண்டங்களின் விதைகளை பனிமலையில் பாதுகாப்பாக பதுக்கி வைக்கவும் விஞ்ஞானிகள் செய்தனர்.

 இதில் நோபல் பரிசு பெற்றவர்களும் Europian commission president-ம் அடக்கம். ஏன்? என்றால் NIBIRU எனும் கோள்பூமியின் மீது மோதி பெரும் சிதைவை உண்டாக்கும் என்ற அச்சமே. ஆனால், இவ்வாறு அச்சம் கொள்ளத் தேவை இல்லை, இறை இருந்து காப்பான் என்கிறது அகத்தியரின் ஜீவ நாடிச் சுவடி;

‘‘எந்தளந் தான்படினும் ஆக்க மழியுமாதலின்
கொடுங் கோளை தவிடு பொடி
செய்வான் முக்கண்ணன்- திரிபுர
மெரித்தானுக் காகததேது வோது.
மாந்தர் குலங் காத்து நிற்பான்
அச்சந் தவிரய்யமிலையே’’

ERIS எனும் இத் தீய கோள், பூமியில் எந்த இடத்தை தொட்டாலும் பெருங்கேடு விளையும், என்கின்றனர் விஞ்ஞானிகள். DETROIT மாநகர வானில் இந்த ஆண்டு இரவில் முக்கோண வடிவத்தில், தீப்பந்து போன்று வானத்தில் ஒளிபிழம்பு சுற்றியதை மக்கள்கண்டனர். இதனை NASA விஞ்ஞானிகள்MYSTERIOUS LIGHTS என்றனர். இதையே NIBIRU என WIKILEAKS NASA வின் ரகசியத்தை அம்பலப்படுத்தியது.

 ஆனாலும் ஓலைச்சுவடி அழிவு என்பது துளியும் இல்லை. மூன்று கண்களை கொண்டவனும், முப்புறத்தை எரித்து நின்ற சிவபெருமான் இந்த பூமியில் வாழும் எந்த உயிரினத்திற்கும் கேடு வராது காப்பான் என்று பிரமாணப் பத்திரம் வழங்குவது போற்றத்தக்கது. மயன் காலண்டர் உள்ளிட்ட பல நாட்காட்டிகளும், பிறரும் பூமி அழியலாம் என்று சந்தேகத்தை கிளப்பினாலும், நமது சித்தர் பெருமக்கள்அழிவு ஏதும் வராது என்றே பேசுகின்றனர்.

காகபுஜண்டர் என்னும் சித்தர்,
‘‘நீடு நிலைக்கும் இப்புவிசீவ
ருக்கு சேதமேதும்
கோளால் வராது காணீர்- பருவ நிலை
மாறி அலைகழிக்குமல்லால் சிவனவன்
சீவனனைத்துங் காத்து நிற்பனே’’ என்றார்.
திருமூலரோ ‘‘ பொய்யே பொய்யே புவி
யழியுமெனுஞ் சொல் பொய்யே’’
என்றார்.

ஜமதக்கினி முனிவர்,
‘‘காலமெல்லாம் கலி நடக்க
நடக்குங் காலமெல்லாம் விபரீத
மேதும் வாராது வாழ்விப்பான் வள்ளல்
பெருமானே’’
என்றார்.

பாம்படியாரோ,
‘‘அச்சமது விடுத்து அல்லலிலா
பெரு வாழ்வு வாழ்ந்திடலாம்.
வருங்காலம் பொற்காலம்-தேவருலகு
மாந்தரும் நம்மிடம் நட்பு பூணப்
பாரு வருங் கலிகாலத்தே’’
என்றார்.

எனவே ALIEN என்ற வேற்று கிரக மனிதர்களுடன் கூட இந்த பூமியில் வாழும் மனிதர்களுடன் நட்பு உறவு உண்டாகும். அச்சம் விடுத்து சுபமாக ஜீவித்திருங்கள்என்கிறது பாடல். ஆக, எதையும் தாங்கும் இதயம் இருந்தாலும், பூமியில் எந்த பயமும் இன்றி சுதந்திரமாக நாம் ஜீவித்திருக்க சித்தர்கள்காட்டும் பாதையை பற்றுவோமே!

 பூமியில் மட்டும் ஏன் ஜீவராசிகள்
தோன்றியது !?
 இந்த பிரபஞ்சத்தின் மூலசக்தியாகிய ஓம்
என்கிற மூல அணுவின் மூலம் தோன்றிய
எழுவகை சக்திகள் (1) ஆகாயம் (2)பேரண்டம்
(3) உருமி இடிவாயு (4)அக்னி மின்னல் (5)
பூமி (6)சூரியன் (7) வாணம்
என்பது.
மேற்கண்ட ஏழுசக்திகளும்ஆகும்.இவைகள்
ஒன்றோடு ஒன்று இணைந்து தன்னுடைய
ஆகர்ஷன சக்தியால் பூமியில்
செயல்படுகின்றன.நிலம், நீர்,நெருப்பு,க
ாற்று,ஆகாயம் என ஐந்தும் தன்னைத்தானே
ஒன்றை ஒன்று பற்றிக் கொண்டு ஒரு
கோளமாக சுற்றிக் கொண்டு இருக்கின்றன.இந்
த பஞ்ச பூதங்கள் ஒன்றோடு ஒன்று
இணைந்து நிற்பதுவே பூமிக் கோள்.அதனை
இயக்குவது தான் சூரியன்.ஆம் எப்படி ?
பூமிக்கு சூரியனின் ஒளிக்கதிர்கள் மட்டும்
ஒளி பரப்பவில்லை என்றால் எந்த உயிரும்
உண்டாகாது,பிழைக்காது அழிந்துவிடும்
என்பது யாவரும் அறிந்த ஒன்றே.பிறகு எப்படி
ஜீவராசிகள் தோன்றுகிறது?என்ற கேள்வி
எழுவது இயல்பு?பூமியானத
ு பஞ்சபூதங்களை ஒன்றோடு ஒன்று
இணைந்த கூட்டு கலவையே அவை
ஜடப்பொருளாக உலகத்தில்
தோன்றுகின்றன.எப்படித் தோன்றுகிறது?
என்று ஆய்வு செய்கின்றபோது பஞ்சபூதம்
ஐந்தும் அணுக்களின் கூட்டமைப்பே.பூம
ிக்கோள் சுத்துகின்ற போது அதனுடைய
ஆகர்ஷண சக்தியால் ஒன்றை ஒன்று
ஈர்ப்பதுபோல பஞ்சபூதத்தில் உள்ள
ஒவ்வொரு பூதத்திலும் உள்ள அணுக்களும்
ஒன்றை ஒன்று ஈர்த்து பஞ்சபூத கூட்டுக்
கலவையாக ஜீவராசிகளை உருவாக்குகின்றன
.அதனாலேதான் பல் , பூண்டு முதல் மனிதன்
வரை அனைத்து ஜீவராசிகளும் உருவாகும்
இடத்திலும் ஐந்து பூதத் தத்துவங்கள்
அடங்கியிக்கின்றன
ஆம்.
ஜடப்பொருளான பஞ்சபூதமான பூமியில்
ஜீவராசிகள் தோன்றுவதற்கு முதல் காரணமாக
இருப்பது சூரியன்.சூரியனின் ஒளிக் கதிர்கள்
பூமியில் பட்டவுடன் அதற்கேற்ற அணுக்கள்
முளைக்க ஆரம்பிக்கின்றன.அதுவும் கூட்டம்
கூட்டமாக முளைக்க ஆரம்பிக்கும்.இத
ை காகபுசுண்டர் கீழ்வரும் பாடலில்
தெளிவாகக் கூறுகிறார்.
“காணிந்தச் சூரியனார் மடிந்த போது
கங்குலது வந்துவிடும் மறைவார் சீவர்
பூணிந்தச் சூரியனார் வருவார் வந்தால்
பூமிதனிற் புற்றீசல் வந்தாப் போலத்
தோணிந்த சீவர்களும் புற்பூண்டோடு
தோன்றிடுவர் மண்ணிலிருந் தேறுவாரே”
-காகபுசுண்டர்
மேற்கண்ட பாடல் விளக்கமானது சூரியன்
தோன்றவில்லை என்றால் எல்லா ஜீவன்களும்
மறையும் என்றும் சூரியன் தோன்றினால்தான்
புற்றீசல் போல் எல்லா உயிர்களும் தோன்றி
பூமியை அழங்கரிக்கும் என்கின்றார்.

.