youtube

15 February 2017

அகத்தியர் சித்தரின் மெய்பொருள் - விளக்கம்:

"தோணிபோல் காணுமடா அந்த வீடு சொல்லாதே ஒருவருக்கும்"

அதாவது இறைவன் நம் உடலில் இருக்கும் இடம் தோணிபோல் காணும் என்கிறார்.

நம் உடலில் கண் தோணிபோல் தானே இருக்கிறது?

இந்த தோணியே தான் இறைவன்-ஜீவன் குடியிருக்கும் வீடு.

சீர்காழி ஊரில் குடிகொண்டிருக்கும் சிவனுக்கு தோணியப்பர் என்ற பெயர் இதனால்தான் வழங்கப்படுகிறது.

"காணுகின்ற ஓங்கார வட்டம் சற்றுக்
கனலெழும்பிக் கண்ணினிலே கடுப்புத் தோன்றும்"

நமது கண்ணைத்தான் ஓங்கார வட்டம் என்கிறார்.

அங்கே ஜீவ ஒளி உள்ளது. நமது நினைவை கண்மணியில் நிறுத்தி, சாதனை புரிந்தால் கனல் எழும்பும். அப்போது கண்ணில் கடுப்பு தோன்றும் என்று தனது அனுபவ நிலை பற்றி எந்த மறைப்புமின்றி வெளிப்படுத்தியிருக்கிறார்.

பற்றுங்கள், பற்றிக்கொள்ளும்! பெரும் நெருப்பாகும்!

அந்த சுத்த உஷ்ணம் உடல் முழுவதும் வியாபித்து ஒளி உடலாகும்.

மேலும் "தேகமதில் ஓரெழுத்தை காண்போன் ஞானி " என்கிறார்.

அதாவது நமது தேகமதில் நாம் காண வேண்டியது உள்ளே உறைந்திருக்கும் இறைவனை.

அவர் ஒளியாக உள்ளார்.

 ந - ம - சி - வ - ய என்ற பஞ்ச பூதத்தில் ஒரு எழுத்தாகிய 'சி' என்ற அக்னி கலையை யார் காண்கிறார்களோ அவர்களே ஞானி எனக் கூறுகிறார்.

"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"

"ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"

No comments: