youtube

30 August 2012

ஜோதிட பாடங்கள்

இந்த வார சிறப்புக் கட்டுரை : ஜோதிட பாடங்கள் - எட்டு முடிந்த நிலையில், ஓரளவுக்கு நீங்கள் அடிப்படை தெரிந்து இருப்பீர்கள் என நம்புகிறேன். இன்று , நாம் பார்க்க விருப்பது - ஒரு மிக நுணுக்கமான - காலத்தின் ரகசியம் பற்றி. உங்கள் அருகில், உங்களுக்கு தெரிந்தவர்கள் - நீங்கள் மிக நன்றாக பழகியவர்கள் - ஓஹோ என இருந்தவர்கள் (அல்லது) இருக்க வேண்டிய அளவுக்கு திறமை இருப்பவர்கள் , திடீரென்று ... ஒட்டு மொத்தமாக அவர்களின் இமேஜ் சரிந்து , பாவமாய் இருப்பார்கள்.. கவனித்து இருக்கிறீர்களா? பொதுவில் யார் யாருக்கெல்லாம், சந்திர தசை நடக்கும்போது - ஏழரை சனி அல்லது அஷ்டம சனி , சேர்ந்து வருகிறதோ - அவர்களுக்கு , சொல்ல முடியாத அளவுக்கு கஷ்டங்கள் ஏற்படுகின்றன. குடும்பம், மனைவி, குழந்தைகள் , நண்பர்கள் என எந்த இடத்திலும் உதவி கிடைக்காத அளவுக்கு, அல்லது அவர்களிடம் ஏதாவது தகராறு ஏற்பட்டு , பிரச்னை ஆகி விடுகிறது. மொத்தத்தில் , யாரையாவது கொன்று விடும் அளவுக்கு அவர்களுக்கு வெறி வருகிறது. அல்லது தற்கொலை செய்யும் அளவுக்கு விரக்தி எண்ணம் ஏற்படுகிறது.. அந்த அளவுக்கு , வாழ்வில் ஒடுங்கிப் போய் , மற்றவர்களின் கேலிக்கும், பரிதாபத்துக்கும் ஆளாகும் நிலை ஏற்படுகிறது. சந்திரன் - மனோ காரகன்.... சந்திரன் பலம் இழந்து ஜாதகத்தில் இருக்க , அவருக்கு சந்திர தசை நடக்கும்போது - சிலருக்கு புத்தியே பேதலித்து விடுகிறது. சந்திர தசை - சனி புக்தி ( அல்லது ) சனி தசை - சந்திர புக்தி - இரண்டும் - அவ்வளவு மோசமான நேரங்கள் . இந்த கால கட்டத்தில் - ஒருவருக்கு பொருள் விரயம் ஏற்பட்டால் , வியாபார ரீதியாக நஷ்டம் ஏற்பட்டால், இதுவரை அவர் சம்பாதித்த அத்தனையும் இழந்து - வெளியில் கடன் வாங்கி , தப்பிக்கவே முடியவில்லை என்று சூழ்நிலை வந்தால்... அவர் எவ்வளவோ புண்ணியம் செய்து இருக்கிறார் என்று அர்த்தம்.. ஆம், சந்தேகமே இல்லை... உண்மையிலேயே நல்லவர்களுக்கு , அவர்கள் செய்த தவறுகளை மன்னித்து, இறைவன் இதோடு நிறுத்திக் கொள்கிறார். இந்த கால கட்டத்தில் - பொருள் இழப்பு / உயிர் இழப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாது என ஜோதிட விதிகள் கூறுகின்றன. பெரும்பாலோருக்கு , அவர் மனைவியை பிரிந்து விடும் சூழ்நிலை ஏற்படுகிறது. விவாக ரத்து அல்லது உயிர் பிரிதல். . இந்த மாதிரி ஒரு நிலை வருவதற்கு , பொருள் இழப்பே பரவா இல்லை அல்லவா? சமீபத்தில் ஏழரை சனி நடந்து முடிந்த கடக ராசி அன்பர்களும், சிம்ம ராசி நேயர்களும்.. பெரும்பாலோர் இந்த கால கட்டத்தை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கும். ஒரு சிலருக்கு சந்திர தசை - சனி புக்தி , அருகில் வர விருக்கும் சூழ் நிலை இருக்கும். உங்களால் முடிந்த அளவுக்கு, வழிபாடுகள் மேற்கொண்டு இறை பலத்துடன், முழு கவனத்துடன் , இந்த கால கட்டத்தை நீங்கள் எதிர் கொள்ளுதல் நலம். சாதாரண நேரங்களில் சின்ன சின்ன ஊடல் களாய் முடிந்து இருக்க வேண்டிய விஷயங்கள் , இந்த நேரத்தில் - பூதாகரமாய் இருக்கும். இந்த கால கட்டத்தில் , உங்களுக்கு தேவையான மனோ பலம் தருவது - இறையருள் மட்டுமே. அந்த பரம சிவனின் திருவடி நிழலை தஞ்சம் அடைய, தலைக்கு வந்தது , தலைப் பாகையோடு போக வைக்கும், அருகில் இருக்கும் சிவ ஆலயத்திற்கு , செல்வதை வழக்கமாக கொள்ளுங்கள். சந்திர தசை நடக்கும் அன்பர்கள், சோம வார விரதம் ஆரம்பித்து , சிவ நாமம் சொல்லி ஜெபித்து வர , உங்களுக்கு ஏற்படும் தீமைகள் அனைத்தும், உங்களை நெருங்கவே நெருங்காது. நமது இந்து மத மரபுப்படி , ஒரு சில தினங்களில் விரதம் அனுஷ்டிக்கும் முறை இருந்து வருகிறது.. ஒவ்வொரு மாதமும் ஏகாதசி இரண்டு முறை வருகிறது.. இந்த தினங்களில் விரதம் கடை பிடிப்பது , ஏராளமானோரின் பழக்கம். கிரகண நேரத்தைப் போலே, ஒரு சில கிரக கதிர்வீச்சுக்கள் இந்த தினங்களில் அதிகம் இருப்பதாகவும், செரிமானம் மிக கடினமாவதாகவும் , கண்டுபிடித்த நம் முன்னோர்கள் - இந்த ஏகாதசி தினத்தை விரத தினமாக கடை பிடித்தனர். பகவான் விஷ்ணுவின் பரிபூரண அருள் , இந்த விரதம் கடைபிடிப்பவர்களுக்கு கிடைக்கிறது. விரதங்கள் , மனம் ஐம்பொறிகளின் தன்மைக்கு ஆட்பட்டு அலைபாயாது, பொய்யான ஆசைகளுக்கு ஆட்படாமல் மெய்ஞான வழியில் தங்களது நினைவை செலுத்த, நெறி பிறழாத நினைவால் இறைவனை ஒரு நிலைப்படுத்திய வழக்காக சில நியமங்களைக் கைக் கொள்ள வேண்டியுள்ளது. முதலாவது மனக்கட்டுப்பாட்டுடன் உணவுக் கட்டுப் பாட்டினையும் கடைப்பிடித்திட வேண்டும். உணவின் தன்மைக் கேற்ற நமது சிந்தனைகள் மென்மை, கடினம் என்ற நிலையைப் பாதிப்பதால் உணவுகட்டுப்பாடு ஒழுக்கத்துடன், நமது முன்னோர்கள். விரதங்களை கடைப்பிடித்தனர் - . கீழே காணப்படும் ஒன்பது விரதங்கள் - சிவ பெருமான் அருள் கிடைக்க உதவும் சக்தி வாய்ந்த விரதங்கள் ஆகும். . சோம வாரவிரதம், திருவாதிரை விரதம், உமா மகேஸ்வரி விரதம், சிவ ராத்திரி விரதம், கேதார விரதம், கல்யாண சுந்தர விரதம், சூல விரதம், இடப விரதம், பிரதோஷ விரதம், கந்த சஷ்டி விரதம் ஆகும். சோம வார விரதம் சோம வார விரதம் - கார்த்திகை மாதம் முதல் சோம வாரத்திலிருந்து இருத்தல் வேண்டும் சோமா வாரத்தில் உண்ணா நோன்பு மேற்கொள்வது முறை இவ்விரதம் வாழ்நாள் முழுமையோ, ஓராண்டு , மூன்று ஆண்டுகள், 12 ஆண்டுகள் என்ற கணக்கில் அனுஷ்டிப் பதே முறை. திருவாதிரை விரதம் மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று இருவேளை உண்ணா நோன்பும். இரவு பால், பழத்தடன் முடித்துக் கொள்வது. உமா மகேஸ்வரி விரதம் இவ்விரதம் கார்த்திகை பௌர்ணமியில் இருக்க வேண்டும். இந்நாளில் ஒரு பொழுது பகல் உணவு அருந்தலாம். இரவு பலகாரம் பழம் சாப்பிடலாம். சிவராத்திரி விரதம் இவ்விரதம் மாசி கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று இருத்தல் வேண்டும். அன்று உண்ணா நோன்பு மேற்கொள்வது சிறப்பு. நான்கு ஜாமங்களும் உறங்காது சிவபூஜை செய்வது மிக நல்லது. கேதார விரதம் இந்த விரதம் புரட்டாசி மாதம் சுக்கிலபட்ச அஷ்டமி முதல் 21 நாட்களும் கிருஷ்ணபட்ச பிரதமை முதல் 14 நாட்களும் கிருஷ்ணபட்சத்து அஷ்டமி முதல் 7 நாட்களும் கிருஷ்ணபட்சத்து சதுர்த்தியன்றும் இருத்தல் வழக்கம். இந்த விரதம் அனுஷ்டிக்கும் போது இருபத்தொரு நூலிழைகளினால் காப்புகட்டிக் கொள்வது முறை ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டுதல் வேண்டும். இவ்விரதம் நிகழ்முறை முதல் 20 நாட்கள் ஒரு பொழுது மட்டும் உணவு கொள்ள வேண்டும். இறுதி நாளன்று உண்ணாவிரத இருத்தல் முறை. கல்யாண சுந்தர விரதம் இவ்விரதம் பங்குனி உத்திரத்தன்று மேற்கொள்ளப்படும் ஒரு பொழுது மட்டும் உணவு கொள்ளலாம் இரவில் பால் அருந்தலாம். சூல விரதம் இந்த விரதம் தை மாசம் அமாவாசையன்று இருக்க வேண்டும். ஒரு பொழுது மட்டும் பகல் உணவு உட்கொள்ளலாம் . இரவு உண்ணா நோன்பு இருக்க வேண்டும். இடப விரதம் இவ்விரதம் சுக்கிலபட்சம் அட்டமியன்று மேற்கொள்ள வேண்டும். ஒரு பொழுது பகல் உணவு மட்டும் உண்ணலாம். பிரதோஷ விரதம் இவ்விரதம் சுக்கிலபட்ச திரயோதசி, கிருஷ்ணபட்ச திரயோதசி ஐப்பசி அல்லது கார்த்திகை அல்லது வைகாசி மாதங்களில் சனி பிரதோஷம் முதல் மேற்கொள்ள வேண்டும். பகலில் உணவு உட்கொள்ளக்கூடாது. பிரதோஷம் கழிந்த பின் உணவு அருந்தலாம். கந்த சஷ்டி விரதம் ஐப்பசி மாதம் சுக்கிலபட்சம் பிரதமை முதல் சஷ்டி வரை விரதம் மேற்கொள்ள வேண்டும். ஆறு நாட்களும் உண்ணா நோன்பிருத்தல் மிகமிக சிறப்பு ஒன்று முதல் ஐந்து நாட்கள் ஒரு பொழுது உணவு கொண்டு ஆறாம் நாள் முழுமையா உண்ணா விரதம் இருத்தல். இது ஆறு ஆண்டுகள் தொடர்ந்து செய்வது மிகமிக சிறப்பான நலம் பெறுதல் உண்டு. திருச்செந்தூர் சென்று விரதம் இருக்க விரும்புவோர், முன்கூட்டிய தேவஸ்தான நிர்வாக அதிகாரியைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவும். அவர்கள் நமது தேவைக்குரிய வைகளை ஏற்பாடு செய்து தருவதுடன் அதற்குரிய ஒரு சிறு கட்டணமாக பணம் செலுத்தச் சொல்வார்கள். சூரசம் ஹாரம் முடிந்து பிரசாதங்களுடன் வீடு வந்து சேரலாம். விருச்சிக ராசி அன்பர்கள் , ஏழரை சனி, அஷ்டம சனி நடக்கும் அன்பர்கள் - முறைப்படி விரதம் இருந்து, பௌர்ணமி கிரிவலம் சென்று வந்தால் - மனோ காரகனின் பலம் கூடும். .. உங்களுக்கு வாழ்க்கை நல்ல முறையில் அமைய, அந்த சந்திர சேகரர் - ஆசிர்வாதம் அளிப்பார்... !!

No comments: