youtube

9 November 2012

சளித் தொந்தரவு நீக்கும் திப்பிலி

 

25 Medicinal Uses Piperaceae Herbal Aid0090
The Healing Village
திப்பிலி என்பது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். பொடியாகவும் கிடைக்கும். இது மணமுடைய மெல்லிய தண்டு கொடி வகையை சார்ந்தது. வெப்பமான பகுதிகளில் காணப்படும் திப்பிலி இந்தியாவில் அஸ்ஸாம், மேற்கு வங்காளம்,மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கொங்கன், கேரளாவில் வளர்கிறது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் காணப்படுகிறது. இதில் நீண்ட சங்கிலி அமைப்புடைய ஹைடிரோகார்பன்கள், மனோ மற்றும் செஸ்க்யூடெர்பின்கள்,கெரியோஃபில் லென் போன்றவை உள்ளன. மேலும் பிபிரோலேக்டம் போன்றவையும் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.
கனிகளும் வேரும் மருத்துவத்தில் பயன்படுகின்றன. நாட்டு மருந்து கடைகளில் அதிகம் கிடைக்கும் திப்பிலி மூச்சு உறுப்புகளின் நோய்கள், வயிற்றுப்போக்கு, தோல்நோய்கள்,பித்தநீர்ப்பை நோய்கள்,வலிகளை போக்குவதற்காக பயன்படுத்தப்படுகிறது.
சளித் தொல்லையை குணப்படுத்தும்
சிறிதளவு எடுத்து தேனில் கலந்து இரு வேலையும் கொடுத்தால் , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள தொண்டை கட்டு, கோழை, குரல் கம்மல், உணவில் சுவையின்மை ஆகியவை தீரும். இதை சிறிதளவு எடுத்து வெந்நீரில் போட்டு காய்ச்சி வடித்து குடித்தாலும் அனைத்து வியாதிகளும் நீங்கும். தேனுடன் கலந்த பொடி சளி, இருமல், ஆஸ்துமா, விக்கல் ஆகியவற்றை குணப்படுத்தும்.
திப்பிலி கனி, வேர் மற்றும் மிளகு, இஞ்சி ஆகியவை
சமஅளவு கலந்த கலவை குடல்வலி, உப்புசம், இருமல் மற்றும் தொண்டை கரகரப்பு போக்க வல்லது.
குடல்புழுவை அகற்றும்
மிளகுடன் கலந்த திப்பிலி பொடி மயக்கம் மற்றும் உணர்வின்மைகளில் உணர்வு தூண்டும் மூக்குப்பொடியாக செயல்படுகிறது.
குழந்தை பெற்ற பெண்களுக்கு இளம் சூடான நீரில் திப்பிலி பொடியை கலந்து கொடுப்பதால் ரத்தப்போக்கு, காய்ச்சல் குணமாகும். குழந்தைகளின் குடல் நோயில் புழு அகற்றுவியாக திப்பிலி செயல்படுகிறது.

No comments: