youtube

5 January 2013

பிரதோச மகிமை பகுதி:1

திருச்சிற்றம்பலம் 

கோவிலில் கருவறைக்கு பின்னால் இருக்கும் லிங்கோத்பவர் கதை நாம் அறிந்ததே. பொய் கூறியதால் பிரம்மாவிற்கு சிவ அபச்சாரம் எற்பட்டது. இதை போக்க பிரம்மா சிவனை வழிபட பூமியில் தேர்ந்து எடுத்த இடம் தான் திருவண்ணாமலை. அங்கு வந்த பிரம்மா மலையே லிங்க வடிவமாக இருக்கிறதே என்று அதை வளம் வர ஆரம்பித்தார்( திருவண்ணாமலை கிரி வலம் முதலில் வந்தவர் பிரம்மா). இரவு பகல் பாராமல் சிவனை வழிபட்டு கிரி வலம் வந்தார். பல நூறு ஆண்டுகள் கழிந்தன, அவருக்கு சிவ அபச்சாரம் நீங்கவில்லை, கால்கள் தேய்ந்தன அப்படியும் வலம்வந்தார், உடம்பு தேய்ந்தன வெறும் ஊயிருடன் வலம் வந்தார், என்று நம் முன்னோர்கள் எழுதி வைத்தார்கள். அப்படி வலம் வந்துகொண்டிருக்கும் போது, ஒருநாள் அசரிரி ஓலித்தது ' ஹே பிரம்மா ஏன் இவ்வளவு கஷ்ட படுகிறாய் நாளை சனி மஹா பிரதோஷம் நீ விரதம் இருந்து சிவனை வணங்கினால் உன் தோஷம் தீரும் என்று கூறியது '. அவ்வாறே வழிபட்ட பிரம்மாவிர்க்கு  சிவ அபச்சாரம் நீங்கியது. அதேபோல் தேவாதி தேவர்கள் பாற்கடல் கடைந்த போது சிவ அபச்சாரத்திற்கு உள்ளானார்கள், அதை போக்க பிரதோச தினத்தில்(திரயோதசி திதி) சிவனை வழிபட்டார்கள்  

சிவனுக்கு மிகவும் உகந்த நாளாக கருத படும் பிரதோஷம் தினத்தில் சிவ ஆலயம் சென்று சிவனை வழிபட்டால் நாம் எல்லை இல்லா பலன் பெறலாம்.
நாம் செய்த பாவங்களை  நீக்க  கூடிய நாள் பிரதோஷம். பிறர் தோசத்தை நீக்க கூடிய நாள் ஆகியதால் அதற்கு பிரதோஷம் என்று பெயர் வந்தது

No comments: