youtube

23 June 2016

பிறையதிக சித்து

பிறையதிக சித்து
பாரப்பா இன்னுமொரு சேதிகேளு
 பண்பான பிறையதிகச் சித்து சொல்வேன்
காரப்பா திகைப்பூண்டு தனைக்கருக்கி
 கருவான ஏரண்டத் தெண்ணைவிட்டு
வீரப்பா செய்யாமல் கல்வத்தாட்ட
 விபரமுள்ள மைபோல வெளிச்சம் காணும்
சேரப்பா சிமிழ்தனிலே பதனம்பண்ணித்
 திருவான பதிநோக்கித் திலகம் போடே


போட்டவுடன் அமாவாசை இருட்டில் மைந்தா
 போக்குடனே நாலு திக்கும் பார்த்தாயானால்
நாட்டமுடன் பிறையதிக மாகத் தோன்றும்
 நாரான மானிடர்க்கு அப்படியே காணம்
வாட்டமுடன் இடது கண்ணை மூடிப்பார்த்தால்
 வளமான சூரியன் போல் வரிசை காணும்
காட்டாதே உலகிற்க்கு இந்தநூலை
 கர்தவிதி தீர்த்தவர்க்கு காட்டு காட்டே
                                                                           - அகத்தியர் 64 சித்துகள்

பொருள்:

                     திகை பூண்டை கருக்கி ஏரண்டதென்னை விட்டு  கல்வத்திலாட்ட  அது மை போலாகும். அதை ஒரு சிமிழில் பதனம் பண்ணவும். அம்மாவசை இரவில் அந்த மையை எடுத்து திலகமிட நாலு திசைகளும் வெளிச்சமாக தோன்றும். இடது கண்ணை மூடி வலது கண்ணில் பார்த்தால் சூரிய வெளிச்சத்தில் பார்ப்பது போல தெரியும்...  இதுவே பிறையதிக சித்துவாகும்

No comments: