ஐந்தெழுத்து மந்திரம் மாக மந்திரம்
எல்லா அஞ்செழுத்தும் அஞ்சுமு கமாக
ஏகமாய் ஒரு நூற்று இருபத்தஞ்சாய்
எதிரில்லா விஞ்சையாய்க் கலைக்கியானமாகி
இதமதிதம் இரண்டுக்கும் முன்னேயாகி
எதிரில்லாத் தோற்றுவித்து எழுவகையுமாகி
எழுவகையின் தோற்றத்தில் லோகமாகி
எதிரில்லா மந்திரத்தின் மகிமைதனை
எண்ணுகிறேன் ஒவ்வொன்றுக்கு இருபத்தஞ்சே
"நமசிவாய" என்ற ஐந்தெழுத்தை ஐந்து முகமாக பிரித்து பார்க்க இருபத்தைந்தாம்.இதை ஐந்து முகமாக பார்க்க (25*5) நூற்று இருபத்தைந்தாகும். இதற்கு சமமான மந்திரங்கள் இல்லை எனலாகும்.
ஏழுவகை தோற்றமும் ஏழுவகை தோற்றத்தில் உருவான உலகமும் இதில் அடங்கும்.
அஞ்சுமுகமும் ஒவ்வோன்றுக்கு இருபத்தஞ்சும்
அறுபத்து நாலு சித்தும் ஆடி நிற்கும்
பஞ்சமுக மாயிருந்த பூரணத்தைச் சேர்க்கும்
பராபரனாம் வாழ்நாளும் ஆறுதலம் பாயும்
துஞ்சாது ஒருநாளும் வளர்ந்து தோன்றும்
சுத்தருக்கு இந்தமுறை தொடர்ச்சியாகும்
பிஞ்சாகும் காயாகும் பூவுமாகும்
பேசரிய பலகோடி அண்டமாமே ...
- கருவூரார்
ஐந்து முகம் ஒவ்வோன்றிக்கும் இருபத்தைந்து அட்சாரமாகும் இதனால் அறுபத்து நான்கு சித்துகளும் உண்டாகும். இதுவே பூரணம் என்ற முழுமையை உண்டாக்கும் பராபரனான வாழ்நாளில் ஆறுதலமும் பாயும் ஒவ்வொரு நாளும் வளர்ச்சியே அன்றி குறைகள் வராது.
சுத்தமான மனது உடையவருக்கு இந்த முறை நன்மை அடைய செய்யும் .
பிஞ்சாகி,காயாகி,பூவுமாகும் . பலகோடி அண்டத்திற்கு மேலானது"நமசிவாய" எனும் ஐந்தெழுத்து..

No comments:
Post a Comment