பெண்களுக்கு பலம் தரும் சதகுப்பை உணவுகள்
கொத்தமல்லி போன்ற கீரை வகையை சேர்ந்தது, சதகுப்பை கீரை.
இதை சமையலுக்கு பயன்படுத்தலாம்.
பல்வேறு விதமான சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன.
இதற்கு சோயிக்கீரை என்ற பெயரும் உண்டு.
இந்த கீரையின் விதைதான், சதகுப்பை.
இது சிறந்த மருத்துவதன்மை கொண்டது.
சதகுப்பை வயிற்று உப்புசத்தை நீக்கும்.
ஜீரணத்தை மேம்படுத்தும்.
உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும்.
சிறுநீரை அதிகரிக்கும்.
மாதவிடாய் கால சிக்கலை நீக்கும்.
உடலுக்கு வெப்பத்தை அளித்து, உற்சாகம் கொடுக்கும்.
பசியை அதிகரிக்கும்.
குழந்தைகள் வயிற்று வலியால் அவதிப்படும்போது, சதகுப்பை கீரை சாறு 20 மி.லி. அளவுக்கு எடுத்து, ஒரு தேக் கரண்டி தேனுடன் கலந்து கொடுத்தால், வலி நீங்கும்.
பிரச வித்த தாய்மார்களுக்கு இந்த கீரையை சமைத்து கொடுத்தால் கருப்பை அழுக்குகள் வெளியேறும்.
ஜீரணமும் சீராகும்.
சதகுப்பை விதையில் சார்வோன் மற்றும் லிம்மோனின் என்ற இருவித நறுமண எண்ணெய் உள்ளது.
இதன் மருத்துவ குணத்திற்கு இந்த மருத்துவ எண்ணெய்தான் காரணம்.
இவை தசைகளை தளரச் செய்து வலியை நீக்கும்.
மாதவிடாய் சுழற்சி சரியாக அமையாமல் அவதிப்படுகிறவர்கள், மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்னரே சதகுப்பை, எள், கருஞ்சீரகம் போன்றவற்றை சம அளவு எடுத்து லேசாக வறுத்து பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பனைவெல்லத்துடன் கலந்து உருண்டை செய்து தினம் இருவேளை சாப்பிட்டுவர வேண்டும்.
இதன் மூலம் மாதவிடாய் சுழற்சி சீராகும்.
அந்த காலகட்டத்தில் ஏற்படும் வலியும், சோர்வும் நீங்கும்.
கருப்பையும் பலமடையும்.
சதகுப்பை, ஆளிவிதை, ஆமணக்கு விதை ஆகியவற்றை அரைத்து மூட்டு வீக்கங்களுக்கு பற்றிடலாம்.
சளியுடன் கூடிய தலைவலி, காதுவலி, மூக்கில் நீர் வழிதல் போன்றவை ஏற்படும்போது ஒரு தேக்கரண்டி சதகுப்பையை 200 மி.லி. நீரில் நன்கு கொதிக்கவைத்து வடிகட்டி பருகுங்கள்.
நலம் பெறலாம்.
பிரசவித்த காலகட்டத்தில் பெண்கள் இது போல் தயாரித்து பருகினால் வயிற்றுக்கு இதமாக இருக்கும்.
வலி நீங்கும்.
ஜீரணம் மேம்படும்.
சிறுநீர் கழிப்பதில் தொந்தரவு இருக்காது. உடல் எடையும் அதிகரிக்காது.
அரை தேக்கரண்டி சதகுப்பை பொடியுடன், அரை தேக்கரண்டி அமுக்கரா சூரணம் கலந்து, சிறிது வெல்லமும் சேர்த்து சாப்பிட்டால் பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்கும்.
கைக்குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்று தொந்தரவு ஏற்படும்.
பால் ஜீரணமாகாமல் வாந்தி எடுக்கும்.
இந்த அவஸ்தைகளால் அவ்வப்போது அழுதுகொண்டே இருக்கும்.
இதற்கு அரை தேக்கரண்டி சதகுப்பை, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகத்தை வறுத்து 100 மி.லி. நீரில் கலந்து நன்கு கொதிக்கவைத்து ஊட்டவேண்டும்.
இதை தினம் இருமுறை புதிதாக தயார் செய்து புகட்டவேண்டும்.
ஒரு மாத குழந்தைக்கு ஒரு தேக்கரண்டி கொடுக்கலாம்.
மாதம் ஆக ஆக அளவை அதிகரித்துக் கொள்ளலாம்.
இது எந்த வித பக்க விளைவையும் ஏற்படுத்தாது.
சதகுப்பை குழந்தைகளுக்கான வயிற்றுவலி மருந்துகள், ஜீரணத்தை மேம்படுத்த உதவும் மருந்துகள், வலி மருந்துகள், பிரசவத்திற்கு பின் கொடுக்கப்படும் லேகியங்கள், சளி இருமல் மற்றும் தலைவலிக்கான மருந்துகளில் சேர்க்கப்படுகிறது

No comments:
Post a Comment