youtube

24 November 2016

திருநீற்றிற்கு விபூதி, பசுமம், பசிதம், சாரம் இரட்சை என பல பெயர்கள் உண்டு.

திருநீற்றிற்கு விபூதி, பசுமம், பசிதம், சாரம் இரட்சை என பல பெயர்கள் உண்டு.

1. விபூதி                  - மேலான ஐசுவரியத்தைத் தருவது.

2. பசிதம்                 - அறியாமையை அழித்து, சிவஞான

                              சிவதத்துவத்தைத் தருவது.

3. சாரம்                   - ஆன்மாக்களின் மலமாசினை அகற்றுவது.

4. இரட்சை             - ஆன்மாக்களை துன்பத்தினின்றும் நீக்கி

                              பேரின்ப வாழ்வு தருவது.

5. திருநீறு              - பாவங்களை எல்லாம் நீறு செய்வது.

6. பஸ்மம்              - பழைய வினைகளை பஸ்மமாக்குவது.

திருநீற்றிற்கு வேறு காரணத்திற்காகவும் வேறு பெயர்கள் உண்டென்று வீராகம சுலோகங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

“சத்யோ சாதாத் விபூதிச்ச வாமாத் பசிதமே வச

அகோராத் பஸ்ம சம்சாத் புருசாத் சார நாமச”

அதாவது சிவனின் ஐந்து முகங்களிலும் இருந்து ஐந்து வகை பசுக்கள் தோன்றியதாகவும். அந்ததந்த பசுவின் சாணத்தில் செய்ப்படும் திருநீற்றிற்கு ஒரு பெயர் கூறப்பட்டுள்ளது.

1. ஈசானிய முகத்தில் இருந்து தோன்றிய சிகப்பு நிற பசு சுமனையாகும். அதன் சாணத்தில் செய்யப்பட்ட திருநீறு ரட்சை எனப்படும்.

2. தற்புருச முகத்தில் இருந்து தோன்றிய புகை நிற பசு சுசீலையாகும். அதன் சாணத்தில் செய்யப்பட்ட திருநீறு சாரம் எனப்படும்.

3. அகோர முகத்தில் இருந்து தோன்றிய கருப்பு நிற பசு சுரபியாகும். அதன் சாணத்தில் செய்யப்பட்ட திருநீறு பஸ்மம் எனப்படும்.

4. வாமதேவ முகத்தில் இருந்து தோன்றிய வெள்ளை நிற பசு பத்திரையாகும். அதன் சாணத்தில் செய்யப்பட்ட திருநீறு பசிதம் எனப்படும்.

5. சத்தியோசாத முகத்தில் இருந்து தோன்றிய கபில நிற பசு தந்தையாகும். அதன் சாணத்தில் செய்யப்பட்ட திருநீறு விபூதி எனப்படும்.



பசுக்களின் நிறத்தின் அடிப்படையில் விபூதியின் வகைகளைப் பார்த்தோம். சாணம் சேகரிக்கும் முறையின் அடிப்படையிலும், சேகரித்த சாணத்தினை பஸ்பமாக்கும் முறையின் அடிப்படையிலும் விபூதியினை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர். அவை

1. கல்பம்              2. அணுகல்பம்

3. உபகல்பம்          4. அகல்பம்

கல்பம்

கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பதே கல்பத் திருநீறு எனப்படும்.

அணுகல்பம்

ஆரண்யங்களில் (காடுகளில்) கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.

உபகல்பம்

மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்துஇ பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.

அகல்பம்

அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்.


  • இவற்றில் கல்ப வகை திருநீறே உயர்ந்ததாக கருதப்படுகிறது

No comments: