youtube

30 July 2012

கு மாதிரி அடிப்பவரும் இல்லை; கேது மாதிரி ஞானத்தைக் கெடுப்பவரும் இல்லை என்பார்கள். ராகு என்ன நம் விரோதியா? பேட்டை தாதாவா? அவராக வந்து அடிப்பதற்கு? பூர்வ புண்ணியப் பலன்களின் படி, எதைத் தரவேண்டுமோ, அதைத் தருவார். எங்கே அடிக்க வேண்டுமோ, அங்கே அடிப்பார். சிலரை அடிக்காமலும் விட்டுவிடுவார். சிலரைச் சும்மா தட்டுவார். சிலரை லத்தி வைத்துத் தட்டுவார். சிலரை நனைய வைத்து அடிப்பார். சிலரைத் தொங்க விட்டு அடிப்பார். அது அவரவர் வாங்கி வந்த வரத்தைப் பொறுத்து மாறுபடும்.ஜாதகத்தில் உள்ள பல நல்ல அம்சங்கள், நம்மை அடி வாங்காமல் பாதுகாக்கும். அல்லது வாங்கிய அடிகளுக்கு ஒத்தடம் கொடுத்து நம்மைத் தேற்றும். நம் ஜாதகத்தின் படி என்னென்ன பலாபலன்கள் உள்ளதோ - அதாவது நம் கர்மவினைப்படி என்ன பலன்கள் store ஆகியுள்ளதோ - அதைக் கொடுப்பது கிரகங்களின் பணி! அவ்வளவுதான். ஆகவே கிரகங்களின் பெயர்ச்சியைக் கண்டு பயப்பட வேண்டாம். +++++++++++++++++++++++++++++++++++++++++ ஒரு ரயில்வே ஸ்டேசனுக்குத் தினமும் பல ரயில்கள் வந்து செல்லும். இரண்டு அல்லது மூன்று திசைகளில் இருந்து வந்து செல்லும். அப்படி வரும் ரயில்களில் விரைவு ரயில்களும் இருக்கும், சாதாரணப் பயணிகள் ரயிலும் இருக்கும், சரக்கு ரயில்களும் இருக்கும். அந்த நிலைய மேலாளருக்கு அவற்றால் வேலைப் பளு இருந்தாலும், பழகிப்போயிருக்கும். கவலைப் பட மாட்டார். அவருக்கு அத்தனை வண்டிகளும் ஒன்றுதான். அவருடைய நிலைய எல்லையைத் தாண்டி அவற்றை அனுப்பி விட்டால் போதும், அவருடைய வேலை முடிந்து விடும். அவருக்கு பல நவீன சாதனங்களின் உதவிகள் இருக்கும், சில நிலையங்களில் இரு வழிப்பாதைக்கான தண்டவாளங்கள் இருக்கும். அப்படி இருப்பவைகள் அவருடைய வேலையை எளிமைப் படுத்திவிடும். அதுபோல நமது ஜாதகத்தில் அடிப்படை விஷயங்கள் வலுவாக இருந்தாலும், நல்ல தசா புத்தி என்னும் இருவழிப் பாதைகள் இருந்தாலும், இந்த வந்துபோகும் ரயில்களுக்காக (அதாவது பெயர்ச்சியில் வரும் கிரகங்களுக்காக) நாம் கவலைப்படத் தேவையில்லை! ++++++++++++++++++++++++++++++++++++++++++ அக்டோபர் மாதம் 27ஆ‌ம் தே‌தி செவ்வாய்க்கிழமை, காலை 9:15 மணிக்கு ராகு பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்கும், கேது பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும் இடம் பெயர்கிறார்கள். சுமார் ஒன்றரை ஆண்டு காலம் அந்த ராசிகளில் சஞ்சரிப்பார்கள். அதாவது இருப்பார்கள். அதை ஒட்டி 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் பலா பலன்களைச் சுருக்கமாகக் கீழே கொடுத்துள்ளேன். ++++++++++++++++++++++++++++++++++++++++++ மற்ற கிரகங்கள் எல்லாம் கடிகாரச் சுற்றில் வலம் வரும். ராகுவும் கேதுவும் கடிகாரச் சுற்றிற்கு எதிர்ச் சுற்றில் வலம் வரும். இரண்டும் ஒரு முழுச்சுற்றைச் சுற்றி முடிக்க 18 ஆண்டு காலம் ஆகும்! ராகு கேது பெயர்ச்சியால் நன்மை அடையவிருக்கும் ராசிகள்: மேஷம், கடகம், சிம்மம் , துலாம், மகரம், கும்பம் சற்று சிரமங்களை அனுபவிக்க இருக்கும் ராசிகள்: ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிகம், தனுசு, மீனம் ------------------------------------------------------- சிரமங்கள் என்பது, பண வரவு குறையலாம், செலவுகள் எகிறலாம். செய்யும் வேலையில் தடைகள் எதிர்ப்படலாம். அலைச்சல்கள் இருக்கலாம். தாமதங்கள் ஏற்பட்டு நம்முடைய பொறுமையைச் சோதிக்கலாம். உடல் உபாதைகள் ஏற்படலாம். மனைவி, உற்றார் உறனருடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். வம்பு வழக்குக்கள் உண்டாகலாம். நிலுவையில் இருக்கும் வழக்குகளில், தோல்விகள் ஏற்படலாம். இப்படிப் பலருக்கும் பலவிதமான வழிகளில் உபத்திரவங்கள் ஏற்படலாம். பரிகாரம்: ராகு, கேது பகவானைத் துதிப்பதுதான் பரிகாரம். ராகுவிற்கான பரிகாரப் பாடல்: அரவெனும் ராகு ஐயனே போற்றி கரவாது அருள்வாய் கடும் துயர் போற்றி இறவா இன்பம் எதிலும் வெற்றி ராகு தேவே இறைவா போற்றி! கேதுவிற்கான பரிகாரப் பாடல்: கேது தேவே கீர்த்தி திருவே பாதம் போற்றிபாவம் தீர்ப்பாய் வாதம் வம்பு வழக்குகளின்றி கேது தேவா கேண்மையாய் ரட்சி (பரிகாரப் பாடல் உபயம்: நன்றி தினமலர் நாளிதழ்) இ‌ந்த ராகு, கேது பெயர்ச்சியினால் ஒவ்வொரு ராசிதாரரின் வாழ்விலும் ஏற்படக்கூடிய மாற்றங்கள், பாதிப்புகள் அதற்கான பரிகாரங்கள் ஆகியன ராசி வாரியாக தொகுத்து கீழே உள்ள தளங்களில் கொடுக்கப்பெற்றுள்ளது! விரிவான பெயர்ச்சிப் பொதுப்பலன்களுக்கான தளங்கள் அவைகள்! உங்கள் ராசிக்கான பகுதியைக் க்ளிக் செய்து, படித்து முழு விவரங்களையும் அறிந்து கொள்ளுங்கள். அதற்கான சுட்டி கீழே உள்ளது. ---------------------------------------------------- இந்தப் பொதுப்பலன்களைப் பற்றி ஒரு விஷயம். அவைகள் பொதுவானவை அவ்வளவுதான். அவர்கள், பத்திரிக்கைகள் தங்கள் வாசகர்களுக்காகப் பொதுப் பலன்களை எழுதுகிறார்கள். நாமும் மாய்ந்து மாய்ந்து படிக்கிறோம். அது எப்படி நமக்குப் பொருந்தும்? ராகுல் காந்திக்கும், நடிகை ரகசியாவிற்கும், கே.எஸ், ரவிகுமாருக்கும், நடிகர் சூரியாவிற்கும் அய்யம்பேட்டை ஆரோக்கியசாமிக்கும், தஞ்சாவூர் தமிழரசனுக்கும் ஒரே ராசி என்று வைத்துக் கொள்ளூங்கள், இந்தப் பொதுப் பலன்களின்படியா, அவர்கள் அனைவருக்கும் இன்ப, துன்பங்கள் வரப் போகின்றன. இல்லை! 110 கோடி மக்கள் வகுத்தல் 12 ராசிகள் = 9.16 கோடி மக்கள் இந்த 9.16 கோடி மக்களுக்கும் எப்படிப் பலன் ஒருவிதமாகப் பொருந்தும்? அவரவர்களின் ஜாதகப்படிதான் பலன்கள் அமையும். ++++++++++++++++++++++++++++++++++++++++ 1. உங்கள் ஜாதகத்தில் ஏகப்பட்ட யோகங்கள் இருந்து, அதற்கான தசாபுத்தி நடந்து கொண்டிருந்தால், இந்தக் கோச்சாரங்கள் வழிவிட்டு விடும். 2. நல்ல தசை அல்லது புத்தி நடந்து கொண்டிருந்தாலும் கோள்சாரங்கள் பாதிப்பை ஏற்படுத்தாது. சுருங்கச் சொன்னால், கோள்சாரத்தைவிட, தசை/புத்தி முக்கியம். இன்னொரு முக்கியமான விஷ்யம். அக்கிரகங்கள் இடம் மாறியுள்ள உங்கள் ராசியில் 30ம் அதற்கு மேற்பட்ட பரல்களும் இருக்குமாயின், இந்த மாற்றங்களால் உங்களுக்கு பாதிப்புக்கள் இருக்காது! ஒரு சாலையில் முதலமைச்சர் வருகிறார். அவருக்கு முன், அவருடைய பைலட் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் வருகின்றன என்றால் மொத்த சாலையும் துடைக்கப்பட்டு, வழி ஏற்படுத்தப் பட்டிருக்கும் இல்லையா? ஏன் தப்பித்தவறி நீங்கள் சென்றாலும், வழி விட்டு ஒதுங்கி நிற்ப்பீர்கள் இல்லையா? அதுபோலத்தான் இதுவும். ------------------------------------------------------------------ முழு பொதுப்பலன்களுக்கான சுட்டிகள் இங்கே! 1. தினமலர்: 2. தினத்தந்தி: ============================================= அன்புடன் வாத்தியார் வாழ்க வளமுடன்! இடுகையிட்டது SP.VR. SUBBAIYA நேரம் 7:04 AM 74 கருத்துரைகள் Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook லேபிள்கள்: Astrology, classroom, Lessons 251 - 260 27.10.09 Lessons on yogas: ஆதி யோகம்! +++++++++++++++++++++++++++++++++++++++++ Lessons on yogas: ஆதி யோகம்! புதன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று சுபக் கிரகங்களும், ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 6, 7, 8 ஆம் வீடுகளில் இருந்தால், தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ இருந்தால், அது ஆதியோகம் எனப்படும். அந்த வீடுகள் ஒன்றில் அல்லது இரண்டில் அல்லது மூன்றிலுமே அவைகள் இருந்தாலும் அது இந்த யோகத்தைக் கொடுக்கும்! பலன்: ஜாதகன் செல்வாக்குடன் இருப்பான். ஆரோக்கியத்துடனும், செல்வங்களுடனும் இருப்பான். நோய், எதிரிகள், பயம் என்று எந்த அவலமும் அவனை அனுகாது! Adhi Yoga : This is caused if the benefic planets - Mercury, Jupiter and Venus - are situated in the 6th, 7th and 8th houses from the Moon. These planets should be present in any one, two or in all the above-mentioned houses. A native with this Yoga will be very influential, healthy and wealthy. He will possess no fear, disease or enemy. +++++++++++++++++++++++++++++++++++++++++++++ ”சார், அவற்றில் எனக்கு இரண்டு இருக்கிறது. பாதி யோகம் கிடக்குமா?” என்று யாரும் கேட்க வேண்டாம்! கிடைக்காது. யானை என்று எழுதுவதற்குப் பதிலாகப் பூனை என்று எழுதிவிட்டேன். இரண்டிலுமே ”னை” என்று இருப்பதால் பாதி மார்க் போடுங்கள் என்று சொல்வதைப் போன்றது அது! அன்புடன், வாத்தியார்!

Post a Comment