youtube

30 July 2012

லைப்பு: கால சர்ப்ப தோஷம் Cum யோகம் அதென்ன தோஷம் cum யோகம் என்று அனேகம் பேர்களுக்கு சந்தேகம் வரும். ஒன்று தோஷம் என்று சொல்ல வேண்டும் அல்லது யோகம் என்று சொல்ல வேண்டும் - அதுதானே முறை! அல்ல! ஒரு குழந்தையை வளர்த்துப் பட்டப்படிப்பு படிக்க வைக்கின்ற வயதுவரை - சுமார் 21 வருட காலம் என்று வைத்துக் கொள்வோம் - செலவு செய்ய வேண்டிய காலம். அதே குழந்தை படித்துமுடித்தவுடன் வேலை கிடைத்துச் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால், அதற்குப் பிறகு அது வரவு வரும் காலமாக மாறிவிடும் அல்லவா - அது போலத்தான் இதுவும். கால சர்ப்ப தோஷம் அமைந்த ஜாதகன் முதலில் பல சிரமங்களை அனுபவிக்க நேரிடும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தோஷம் நீங்கி அவன் வாழ்க்கை அசுர வேகத்தில் செழிப்பு மற்றும் சந்தோஷம் மிக்கதாக மாறிவிடும். அந்த செழிப்பு மற்றும் சந்தோஷத்தின் அளவு அவனுடைய ஜாதகத்தில் (Basic Chart) உள்ள கிரகங்களின் சுய பலத்தையும், அமைப்பை யும் வைத்து மாறுபடும் சரி, கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன? அதை முதலில் தெரிந்து கொள்வோம். ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு தீய கிரகங்கள், வானவெளியில் 180 டிகிரியில் இன்றை ஒன்று எதிர் நோக்கியவாறு இருக்கும். சுழற்சியில் இரண்டின் வேகமும் ஒரே அளவு என்பதால். அந்த 180 டிகிரில் ஒரு இம்மி கூட மாற்றம் இருக்காது. அவை இரண்டைத் தவிர மற்றும் உள்ள ஏழு கிரகங்கள், அடுத்தடுத்தோ அல்லது கூட்டாகவோ அந்த இரண்டு கிரகங்களுக்கு நடுவே வானவெளியில் இருக்கும் சூழ்நிலையில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகத்தில், ராகு மற்றும் கேதுவிற்கு இடையில் அந்த கிரகங்கள் மாட்டிக்கொண்டுவிடும். All the other seven planets will be hemmed or sandwitched between Rahu and Ketu. This position in a horoscope is called as Kala Sarppa Dosha அதன் கால அளவு பற்றி இரண்டு விதமான கருத்துக்கள் உண்டு. சிலர் அதை 33 வருட காலம் என்று சொல்வார்கள். வேறு சிலர் அதை லக்கினத்தில் எத்தனை பரல்கள் உள்ளனவோ, அததனை வருடம் அது உணடெ ன்பார்கள். அந்தக் கருத்துப் பிரச்சினைகள் எல்லாம் இடையில் பல ஜோதிட வல்லுனர்களால் ஏற்பட்டவை.பொதுவாக முப்பது ஆண்டுகள் என்பதுதான் அனுபவ உண்மை. நடக்கப்போகும் நன்மையைப் பிறகு பார்த்துக்கொள்வோம். அதற்குத் தீர்வு உண்டா என்றால் இல்லை. அனுபவித்துத்தான் ஆகவேண்டும். You can't shift or shed down it பரிகாரம் உண்டா? உண்டு! அது இறைவழிபாடு மட்டுமே! கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநாகேச்சுவரம் கோவில், காஞ்சிபுரத்தில் ஊள்ள சித்திர குப்த சுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம், ஸ்ரீகாளஹஸ்தி ஆகிய ஊர்களில் உள்ள கோவில்கள் அதற்குரிய ஸ்தலங்களாகும். அங்கே சென்று மனமுருகி வழிபட்டால், வரும் தீமைகளை எதிர் கொள்ளும் சக்தியைப் பெறலாம். நன்றாகக் கவனிக்கவும் - தீமைகள் இம்மிகூடக் குறையாது. ஆனால் அதை Just like that எதிர் கொள்ளும் மன வலிமை கிடைக்கும். காலசர்ப்ப தோசத்தினால் ஏற்படும் தீமைகளை வகைப் படுத்த முடியுமா? முடியும்! அதைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்! (தொடரும்) ------------------------------------------------------------------------------------------ காலசர்ப்ப தோசத்தினால் இளம் வயதில் மிகவும் சிரமப்பட்டுப் பிறகு சிறப்பானதொரு வாழ்வைப்பெற்ற - நமக்கெல்லாம் மிகவும் பரீட்சயமான இருவரின் ஜாதகங்களைக் கீழே கொடுத்துள்ளேன். அது உங்கள் பார்வைக்காக! பயிற்சி வகுப்பு:(Practical Class) 1 பாக்யராஜ் அவர்களின் ஜாதகத்தில் லக்கினாதிபதி எங்கே இருக்கிறார்? அதன் சிறப்பு என்ன? உச்சம்பெற்ற கிரகம் எது? அதன் பலன் என்ன? அவருடைய ஜாதகத்தில் மிகவும் சிறப்பான இடத்தில் அமர்ந்திருக்கும் கிரகம் எது? சிறப்பு என்று சொல்வதன் காரணம் என்ன? 2. இளையராஜா அவர்களின் ஜாதகத்தில் லக்கினாதிபதி யார்? அவர் யாருடன் சேர்க்கை பெற்றிருக்கிறார்? அதன் பலன் என்ன? பரிவத்தனை பெற்ற கிரகங்கள் எவை? லக்கினத்தில் சனி வந்து அமர்ந்ததின் சிறப்பு என்ன? முன்பு நடத்திய பாடங்கள் மறக்காமல் இருந்தால் இதற்குப் பதில் சொல்லலாம்? சரி, யார் யார் சரியாகப் பதில் சொல்லப்போகிறீர்கள் - யார் யார் பெஞ்ச் மேல் நிற்கப்போகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்

No comments: