youtube

30 July 2012

sreerenukadevitemple in amathur at tamil nadu

ருமுறை பிரும்மாவின் வேண்டுகோளை ஏற்று உமாதேவி விதர்பாவை ஆண்டு வந்த ஒரு மன்னனின் மகளாகப் பிறந்தாள். பிறந்த அவள் பல சக்திகளைப் பெற்று இருந்த தெய்வீக மங்கையாகவே இருந்தாள். ஏன் எனில் அவள் பிறந்த நோக்கமே உலகைக் காப்பதற்கு மட்டுமே . அவளுக்கு ரேணுகா எனப் பெயர் சூடப்பட்டது. வயதுக்கு வந்த ரேணுகா பல இடங்களிலும் தமது காவலர்களுடன் சுற்றித் திரிந்தபடி இருந்தபோது அவள் இந்த இடத்துக்கு வந்தபோது வனப்பகுதியில் தவத்தில் இருந்த ஜமதக்கினி முனிவரைக் கண்டாள். அவரைக் கண்டதும் அவரையே மணக்க விரும்பியவள் அவரிடம் அது குறித்துக் கேட்க அவர் இருந்த பர்ணசாலைக்குச் சென்றபோது ஜமதக்கினியின் சீடர்கள் அவர்களைத் தடுத்தார்கள். ஆகவே கோபம் அடைந்த ரேணுகா தனது சக்தியை பயன்படுத்தி பெரும் தீப்பிழம்பை பர்ணசாலையை சுற்றி இருந்த வனப்பிரதேசத்தில் தோற்றுவிக்க ஜமதக்கினி முனிவர் அதை தனது சக்தியை பயன்படுத்தி கமண்டலத்தில் இருந்த நீரினால் அணைத்தார். இன்னொரு கதையின்படி ரேணுகா தேவி சாமுண்டி தேவியை வணங்கித் துதிக்க அவளே தனது மூன்றாம் கண்ணினால் தீப்பிழம்பை தோற்றுவித்து ஜமதக்கினி முனிவர் இருந்த வனப் பகுதியை அழிக்க உடனே ஜமதக்கினி முனிவர் அனைத்து புனித நதிகளையும் வேண்டிக் கொண்டு தமது கமண்டலத்தில் அவற்றை அடக்கி அந்த நீரை அங்கே ஊற்றினார் என்றும் கூறுகிறார்கள். அதுவே பெரிய நதியாக மாறிவிட்டதாகவும் கூறுகிறார்கள். கமண்டலத்தில் இருந்த நீரினால் அத்தனைப் பெரிய தீயை அணைக்க முடியுமா என வியந்தவள் தான் தேடிக் கொண்டு இருந்த மனிதர் அவரே என்பதை உணர்ந்தாள். உடனே அசரீயாக குரல் எழுப்பி ஜமதக்கினி முனிவரை ரேணுகாவை மணந்து கொள்ளுமாறு ஆணையிட்டாள். ரேணுகாவின் பிறப்பின் ரகசியத்தை உணர்ந்து கொண்ட முனிவரும் அவளை மணந்து கொள்ள சம்மதித்தார். இப்படியாக ரேணுகா மற்றும் ஜமதக்கினி முனிவரின் திருமணம் நடந்தது. அவர்களுக்கு பரசுராமர் பிறந்தார் . கமண்டலத்தில் இருந்து ஜமதக்கினி முனிவர் கொட்டிய நீர் நதியாகி ஓட அதன் பெயர் கமண்டல நதி என ஆயிற்று. தினமும் ரேணுகா நதியில் சென்று குளித்துவிட்டு அங்கிருந்து முனிவரின் பூஜைக்கான தண்ணீர் கொண்டு வருவாள் . அப்படி ஜமதக்கினி முனிவருக்கு சேவை செய்து வருகையில் ஒருநாள் நதியில் குளித்துக் கொண்டு இருந்த ஒரு கந்தர்வ புருஷர்களின் காம கேளிக்கைகளைப் பார்த்த ரேணுகாவின் மனம் ஒரு நிமிடம் நிலை தடுமாறியது. பர்ணசாலைக்கு திரும்பியவளின் அந்த மன ஓட்டத்தைக் கண்ட முனிவரினால் அவள் தனது கற்பை இழந்தவளாகக் கருதப்பட்டாள். ஆகவே தனது மகன் பரசுராமரை கற்பை இழந்ததாக தாம் கருதும் அவளுடைய தலையை வெட்டி எரியுமாறு ஆணையிட தந்தையின் ஆணையை ஏற்று அவரும் அவள் தலையை வெட்டி எறிந்தார். ஆனால் ஒரு மகனாக தனது தாயாரின் உயிரை மீண்டும் தர அவரையே வேண்டிக் கொள்ள ஜமதக்னி முனிவரும் வெட்டிய அவள் தலைக்கு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பினார். ரேணுகா தேவியின் வெட்டப்பட்ட தலை விழுந்த இடமே படவேடு என்றும் ஆகவே அவள் அங்கு ஸ்வயம்புவாக எழுந்த இடத்தில் ரேணுகாதேவியின் ஆலயம் அமைந்தது என்றும் கூறுகிறார்கள். இந்த ஆலயம் மிகவும் சக்தி வாய்ந்த சக்திதேவியின் ஆலயம் என்பது ஐதீகம். ரேணுகாதேவியின் துண்டிக்கப்பட்ட தலை மட்டும் இங்கு விழுந்ததினால் இந்த ஆலயத்து சன்னதியில் பார்வதி தேவியின் அவதாரமான ரேணுகாம்பாளின் தலை மட்டுமே உருவமாக இருக்க அவளுக்குத் துணையாக சிவன், விஷ்ணு மற்றும் பிரும்மா போன்ற மூவரும் சூட்சும உருவில் இருக்கின்றார்களாம். ஆனால் ஒருவகை மரத்திலான ரேணுகாம்பாளின் முழு உருவத்தையும் செய்து அந்த தலையின் உருவத்தின் பின்னால் வைத்து உள்ளார்கள். ஆகவே இங்கு வந்து ரேணுகா அம்மனை வணங்கினால் சிவன், விஷ்ணு மற்றும் பிரும்மாவை சேர்த்து வணங்கியதான புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள். ஆலயத்தின் சன்னதிக்குச் செல்லும் முன்னால் மஹா மண்டபம் உள்ளது. இந்த ஆலயத்தின் மகிமையை கூறுகையில் கீழ்க்கண்டவற்றைக் கூறுகிறார்கள். அனைத்து சக்தி தேவியின் ஆலயங்களிலும் இருக்கும் சிங்கம், பிற மிருகங்கள் போன்ற வாகனங்கள் இங்கு காணப்படவில்லை. இந்த ஆலயத்தில் ஆதிசங்கரர் வந்து சக்தி தேவி , பாண லிங்கம் போன்றவற்றை பிரதிஷ்டை செய்து, நானாகர்ஷன சக்கரத்தை ஸ்தாபித்து உள்ளார். இந்த ஆலயத்தில் ரேணுகா அம்மனின் தலை மட்டுமே மூலவராக இருந்தபடி கிழக்கு நோக்கிப் பார்த்தபடி உள்ளது ஆலயப் பிரசாதமாக குங்குமத்தை தராமல் கமண்டல நதி அருகில் உள்ள ஜமதக்கினி யாகசாலையின் வீபுதியைத் தருகிறார்கள் ஆலயத்தின் தென் பகுதியில் விநாயகர் சன்னதியும், தென் மேற்குப் பகுதியில் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் உள்ள சன்னதியும் உள்ளது

No comments: