youtube

23 November 2012

சக்தி உபாசனையில் ஸ்ரீ பஞ்ச தசாஷரி மந்திரம்

சக்தி உபாசனையில் ஸ்ரீ பஞ்ச தசாஷரி மந்திரம்

சக்தி உபாசனையில் ஸ்ரீ பஞ்ச தசாஷரி மந்திரம்
அம்பிகை சக்திவடிவானவள் அவள் மந்நிர தந்திர யந்திர வடிவானவள். ஆவளை சான்றோர் இம்மூன்று வடிவிலும் வழிபடுகின்றனர். ஆத்மாத்த வடிவம் மந்திர வடிவமே. இதில் பஞ்ச தசாஷரி மந்திரம் சக்தி உபாசகர்களுக்கு உபாசனை செய்ய சிறந்தது. பஞ்ச என்றால் ஐந்து தசம் என்றால் பத்து பஞ்ச தசாஷரி என்பது பதினைந்து அச்சரங்களைக் கொண்டது என்பது கருத்து.
பஞ்ச தசாஷரி மந்திர அட்சரங்கள் மூன்று தொகுதிகளைக் கொண்டதாக அமைகின்றது. உடலும் மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகின்றது. அக்னிமண்டலம், ஆதித்திய மண்டலம், சோமமண்டலம் கீழ் இருந்து மேலாகப் பிரிக்கின்றனர். இதற்குள் ஆறு ஆதாரங்களை உட்படுத்துகின்றனர். கீழ்லிருந்து மேலாக மூலாதாரத்தையும் சுவாதிஷ்டானத்தையும் அக்னிமண்டலத்திலும் மணிப்பூரகத்தையும் அநாஹதத்தையும் ஆதித்திய மண்டலத்திலும் விசுத்தியும் ஆக்ஞையும் சோமமண்டலத்திலும் அடக்கி அம்பிகை சிதக்னிகுண்டத்தில் அதாவது யாககுண்டத்தில் இருந்து தோன்றிய போது முதலில் தோன்றியது முகமண்டலமே வெளிப்பட்டு ‘அகத்தின் உருவம் முகத்தில் தெரியும்’ என்பர் மனத்தின் வெளிப்பாட்டை வெளிப்படுத்தக் கூடிய கருவிகளான முகம் வாக்கை முக்கியமாகக் கொண்ட முகமண்டத்திலிருந்து தோன்றியது ‘வாக்பவம்’ கூறு அது ‘க ஏ ஈ ல ஹ்ரீம்’ நான்கு அட்சரங்கள் என்பதாகும். இது தேவியின் மந்திர வடிவில் ஞாசக்தியாகும்.
அடியேன் வழிபாட்டில் உள்ள காஞ்சி காமகோடி பீடத்தில் பெறப்பட்ட ஸ்ரீசக்ர மேரு
அடியேனின் வழிபாட்டில் உள்ள காஞ்சி காமகோடி பீடத்தில் பெறப்பட்ட ஸ்ரீசக்ர மேரு
கழுத்திலிருந்து இடுப்புவரையான பகுதி மத்திய பகுதியாகும் இது மத்திகூடம் என அழைக்கப்படும் இங்கு பஞ்ச தசாஷரியின் நடுப்பகுதி இதில் ‘ ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்’ என்னும் மந்திரம் ஆறு அட்சரம்கள் பிரையோகிக்கப்படு கின்றது. இது விருப்பம் வெளிப்படுத்தும் இடமாதலால் இச்சாசக்தி வடிவமாகவும் காமராச கூடமாகவும் கருதப்படுகின்றது.
இடுப்பின் கீழ்பகுதி படைக்கும் சக்தியான கிரியாசக்தி வெளிப்படுத்தும் இடமாகும். இங்கு மந்திரத்தின் இறுதிப்பகுதியான ‘ ஸ க ல ஹ்ரீம்’ எனும் நான்கு அட்சரங்களைக் கொண்டது இது சக்தி கூடம் எனப்படும்.
பஞ்ச தசாஷரி மந்திரத்தின் அட்ச்சரங்கள் சில சக்தி அம்சங்களாகவும் சிவ அம்சங்களாகவும் மேலும் சில சிவசக்தி அம்சங்களாகவும் அமையும். மேய் எழுத்துக்கள் எல்லாம் சிவ அம்சங்களாகவும் உயிர் எழுத்துக்கள் சக்தி அம்சங்களாகவும் கொள்வதுண்டு. இம் மந்திரத்தின் மொத்த சக்தியும் ‘ஹ்ரீம்’ இல் ‘ஈம்’ னில் உள்ளடங்கும் இதனால் ‘ஈம்’ ‘காமகலா’ என்பர். இதுவே மூலமந்திரம் ஆகும். இதனை தியானத்தில் உட்படுத்தி வசீகரண சக்தியை பெறமுடியும்.
ஸ்ரீ லலிதா த்ரிசதி தேவியின் முந்நூறு ஸ்ரீ லலித சஹஸ்திர நாமங்களைக் கொண்டது. பராசக்தியின் ‘காதி வித்தை’ என்னும் ஸ்ரீ பஞ்சதசாட்சரி ஒரு அட்ச்சரத்துக்கு இருபது நாமங்களாக பதினைந்து அட்ச்சரத்துக்கு முந்நூறு நாமங்களாக பரிணமிக்கின்றது. அகத்தியமுனிவர் ஸ்ரீ ஹயக்ரீவரிடம் ஸ்ரீ லலிதோபாக்யானம் ஸ்ரீ லலித சஹஸ்திர நாகத்தைக் கேட்டு அடையாத இன்பத்தை அடைந்தார் என்பது வரலாறு.
ஸ்ரீ சக்கர பூஜயில் ஆரம்பதிதில் மண்டபசுத்தி, திரவியசுத்தி, பிண்ட சுத்தி, பிம்பசுத்தி என்பவை செய்த பின் ஆத்ம பூஜா செய்து யந்திரத்தில் ஆவாகணம் செய்யும் போது தேவியை ஸ்ரீ பஞ்சதசாட்சரி மந்திரத்தின் மூலமே மும் பிண்டலத்திலிருந்து அங்கங்களையும் இச்சா, கிரியா, ஞான சக்திளை ஆவாகணம் செய்து 64 சக்தி பூஜா செய்து அம்பிகையின் உபாசனா சக்தியைப் பெறுகின்றோம். இது கிரியை முறை. இதனையே போகமாக்கி எம்முள் உள்ள ஜீவநான சிவத்துடன் கலந்து சதாசிவாக்கியத்தையும் அழியா நித்தியாணந்த்தத்தையும் அனுபவிக்க முடியும். அதுவே நாம் பெற்ற பேறு.
பஞ்ச தசாஷரி மந்திரம்

ஸ்ரீ சக்கர அல்லது ஸ்ரீ சக்கரமேரு பூஜா வில் அம்பிகையை ஆவாகணம் செய்யும் போது பின்வரும் மந்திரத்தை பிரையோகித்து ஆவாகணம் செய்வர்.
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம்: க ஏ ஈ ல ஹ்ரீம் அம் அக்னி மண்டலாய தர்மப்ரததச கலாத்மனே ஸ்ரீ மஹொத்ரிபுரஸூந்தர்யா விசேஷார்க்ய பாத்ர ஆதாராய நம:
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம்: ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் உம் ஸூர்ய மண்டலாய அர்த்தப்ரத த்வாதசகலாத்மனே ஸ்ரீ மஹாத்ரிபுரஸூந்தர் விசேஷார்க்ய பாத்ராய நம: இதி ஆதாரோபரிஸம்ஸ்தாப்ய:
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸெள: ஸ க ல ஹ்ரீம் மம் ஸோம மண்டலாய காமப்ரதயாஷொடசலாத்மனே ஸ்ரீமஹாத்ரிபுரஸூந்தர்யா விசேஷார்க்ய அம்தாய நம:
என இம்மந்திரத்தை யந்திரத்தில் பிரையோகித்து சக்தியைப் பெற்று இதை தியானத்தில் உள்வாங்கிக் கொள்ளவதே சிறந்த வழியாடாகும்.

No comments: