youtube

23 November 2012

பிராண பிரதிஷ்டை


பிராண பிரதிஷ்டை
                             பீடம் அமைத்து கும்பம் வைத்து செய்யப்படும் எந்த பூஜை முறைக்கும் பிராண பிரதிஸ்டை செய்வது மிக மிக அவசியமாகும். இதனை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

பிராண பிரதிஷ்டை மந்திரம்

ஓம் அஸ்யஸ்ரீ ப்ராண பிரதிஷ்ட மந்த்ரஸ்ய ப்ரஹ்ம விஷ்ணு மகேஸ்வர ரிஷி ருக் யஜூர் சாம அதர்வண மந்த்ரம் ஸ்ரீ சகல சக்தி ஹ்ரீ சைதன்ய ரூபிணி பிராண சக்தி தேவதா ஆம்பீஜம்; ஹ்ரீம்சக்தி க்ரோம்கீலகம் ஸ்வாஹா சக்தி ஹம்பீஜம்ச சக்தி அஸ்யபிராண பிரதிஷ்டாகரணே ஜெபே விநியோகஹ

நியாசம்:-

(உடலில் உள்ள அவயவங்களை அவற்றிற்குரிய மந்திரங்களைச் சொல்லி அவற்றை சுத்தம் செய்து அந்த மந்திரத்தைக் கொண்டே காப்புச் செய்து கொள்வதே நியாசம் ஆகும். தூய்மையான தண்ணீரினால் அந்தந்த உறுப்புக்களை தொட்டு நனைக்க வேண்டும்.)

“ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் அம் கம் கம், கம் கம் கம்ஙம் பிருதிவீயப்தஜோ வாய்வாஹாஸாத்மனே அங்குஸ் டாப்யாம் நம”
(கட்டை விரலைத் தொடவும்)

“அம் ஆம் ஹ்ரீம் இம் சம்சம் ச்சம் ஜம் ஜ்ஜம் ஞம் சப்தஸ்பரிச ரஸகந்தாத்மனே ஈம் தர்ஜனிப்யாம் நம”
(ஆள்காட்டி விரலைத் தொடவும்)

“ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் உம் டம்டம் டம்டம் டம்ஜிம் த்வக்சஷ ஸ்ரோத்ரா ஜிக்வ பிராணாத்மனே ஊம் மத்யமாப்யாம் நம”
(நடுவிரலைத் தொடவும்)


“ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் ஏம் தம்தம் தம்தம் தம்நம் வாக் பாணீ பாதபாயுர் உபஸ்தாத்மனே ஜம் அனாமிகாப்யாம் நம”
(மோதிர விரலைத் தொடவும்)


“ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் ஒளம் பம்பம் பம்பம் பம்பம் வசபாதன கமன விசர்க்க நந்தாத்மனே அம் கனுஷ்டிகாப்யாம் நம”
(சுண்டு விரலைத் தொடவும்)


“ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் அம்யம் நம் லம் வம் ஸம் சம் ஹம் ஹம் ஷம் மனோ புத்தி அகங்கார சித்தாத்மனே அம் கரதல கரப்ப்ருஷ்டாப்யாம் நம”
(புறங்கை முழுவதம் தடவவும்)

“ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் அம்கம் கம்கம் கம்நம் ப்ரதிவியாச தேஜோ வாய் வாஹாஸாத்மனே ஹ்ருதயாய நம”
(இருதயப் பகுதியை தொடவும்)


“அம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் இம்சம் ச்சம் ஜ்ஜம் ஞம் ச்ரத ஸ்பரிச ரூபரஸ கந்தாத்மனே இம் சஜரசே ஸ்வாஹா”
(தலையைத் தொடவும்)


“ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் உம்டம் டம்டம் டம்டம் த்வக் சஷரோத்ரா ஜிக்வ பிராணத்மனே ஊம் சிகாயை வஷட்”
(கூந்தலைத் தொடவும்)


“ஓம் ஹ்ரீம் ஹ்ரோம் ஏம் கம்தம் தம்தம் வாக்பாணீ பாதபாயூர் உபசஸ்தாத்மனே ஐம் கவசாய ஹ_ம்”
(பிறப்புறுப்புப் பகுதியைத் தொடவும்)


“ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் ஒளம் பம்பம் பம்பம் வசபாதன கமன விசர்க்க நந்தாத்மனே அம் நேந்திராய வஷட்”
(கண்களைத் தொடவும்)

“ ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் அம் யம் ரம் லம் வம் ஸம் சம் ஷப்ழம் ஷம் மனோ புத்தி அகங்கார சித்தாத்மனே அம் அஸ்திராய பட் பூர் புவஸ்வரோம் இதி திக்பந்த”
(எட்டு திக்கிற்கும் நீர் தெளித்து பந்தனம் செய்து கொள்ளவும்)


தியானம் :-

ரக்தாம் போதிஸ் ஸ்தபோதெல்லா சத்ருணா சரோஜாதீருடா ஹ்ராம்சை பாசம் கோதண்டம் மிச்சுத்வயமன குணம்ம்ப் அங்குசம் பஞ்சபாணம் பீப்ராணாம் ஸ்ருக்கவாள த்ரிநயன வசித பீண தேவி பாலார்க்க வருணா பவது சுகரீ ப்ராணசக்தி ப்ராணா வட்ரோரு கட்யா

மூலமந்திரம் :-


ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் பாசாங்குச புடாசக்தி சாந்தச சபித்து
ஹெளம் ஹம் ஸஹ யம் ரம் லம் சம் ஷம் ஸம் ஹம் ஸஹ
ஹெளம் ஸஹஸோகம் ஸோகம் ஹம் ஸஹ
அஸ்யபிராண மமபிரண மமஜீவ வாக்மன சட்சு ஸ்ரோத்ர ஜிக்வ
பிராண அபான உதான சமான வியான மானஸ்
சக கஸ்ய முகம் சிரம்
திஷ்டது ஸ்வாஹா



பூசை செய்யும்முறை :-
தூய்மையான நன்னீரீல் நீராடித் தூய்மையான ஆடையணிந்து, பத்மாசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து 1008 உரு ஜெபிக்க மந்திரம் சித்தியாகும். ஒரு தூய்மையான அறையில் மெழுகி கோலமிட்டு, கும்பம் வைக்க வேண்டும். பால், பழம், பாயாசம் ஆகியவற்றை நிவேதனமாக வைத்து, தாம்பூல தட்சணைகள் வைத்து, தேங்காய் உடைத்து தூப தீப ஆராதனை செய்து 1008 முறை மூலமந்திரத்தினை ஜெபிக்க சித்தியாகும். தூப தீப ஆராதனை செய்து பூசையினை நிறைவு செய்யவும்.
இந்த மந்திரம் சித்தியான பின்பு பீடம் அமைத்து, கும்பம் வைத்த செய்யும் எந்த பூசைக்கும் பிராணபிரதிஸ்டை மந்திரத்தை 108 முறை ஜெபித்து கலசம், யந்திரம், பூசையில் அமர்த்தியுள்ள தேவதையின் படம் அல்லது விக்கிரகம் ஆகியவற்றின் மீது அட்சதை (முனைமுறியாத பச்சரிசியினை மஞ்சளோடு கலந்து பிசைந்தது) எடுத்து போட்டால் மேற் சொன்னவற்றிற்கு உயிர்ப்பு(பிராணணன்) சக்தி உண்டாகும்.

பீடபூசை :-
ஓம் குருப்யோம் நம : கங் கணபதியே நம : தூம் துர்க்காயை நம : ஷம் ஷேத்திர பாலாய நம : ஆதார சக்தியே நம : மூலப்பிரகிருதியே நம : ஆதி கூர்மாயை நம : அனந்தாய நம : பிருத்வியை நம : ஸ்வேத ஷத்ராயை நம : சிதஸ்சாஸ்போம் நம : தர்மாயை நம : ஞானானாய நம : ஐஸ்வர்யாயை நம : வைராக்கியாய நம : ஓம் நமோ பகவதே சகல சக்தி யுக்தாய அனந்தாய மஹா யோக பீடாத்மனே நம

யந்திர பூசை செய்பவர்கள் யந்திரம் ஸ்தாபிக்கும் பீடத்திற்கும். விக்கிர ஆராதனை செய்பவர்கள் விக்கிரகத்தினை வைக்கும் பீடத்திற்கும் மேற்படி மந்திரத்தினைச் சொல்லி மலர்பளால் அர்ச்சனை செய்து தூப தீப ஆராதனை செய்யவேண்டும்.

கலச பூசை :-
ஒரு தலைவாழையிலையினைப் பரப்பி அதில் அரைப்படி பச்சரிசி அல்லது நெல்லினை பரப்பி நடுவில் ஓம் என்று எழுத வேண்டும். கும்பம் வைக்கும் செம்பிற்கு செம்பிற்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு மேற்படி வாழையிலையில் வைத்து கையால் மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

“கலசஸ்ய முகே விஷ்ணு கண்டே ருத்ர ஸ்மாச்ரித மூலேதத்ர ஸ்திதோ ப்ரஹ்மாத்மயே மாத்ருகணாஸ்ம் (அ)ருதாகு ஷெளது ஸாகரா ஸர்வே ஸப்தந்வீபா வஸ_ந்தரா ருக்வேதநாத யஜூர்வேத ஸாமவேதோம் யதர்வண அங்கைஸ்ய ஸஹ்தாஸ் ஸர்வே கலசாம்பு ஸமாச்ரிதா ஆயாந்த வேத பூஜார்த்தம் துரிதஷயகாரசா கங்கேசா யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி தீர்த்தே சந்நிதம் குரு”

பின்னர் கலச தீர்த்தத்தினால் பூசைப் பொருட்கள் மீதும் பூசைக்குரிய தேவதை மீதும், தன் மீதும் தெளித்துக் கொள்ள வேண்டும். அதற்கு பிறகு மாவிலை வைத்து, மஞ்சள் தடவி விபூதி, சந்தனம், குங்குமம் வைத்த தேங்காயினை வைக்க வேண்டும். கும்பத்திற்கு மாலையணிவித்து பிராண பிரதி
ஷ்டை மந்திரம் சொல்லி அட்சதை தூவ வேண்டும்.

No comments: