youtube

13 March 2016

ஸ்ரீ மஹா லக்ஷ்மி

ஸ்ரீ மஹா லக்ஷ்மி

ஸ்ரீ மஹா லக்ஷ்மி எந்திரம்

1. ஓம் அன்பு இலட்சுமியே போற்றி
2.ஓம் அன்ன இலட்சுமியே  போற்றி
3. ஓம் அமிர்த இலட்சுமியே  போற்றி
4. ஓம் அம்ச இலட்சுமியே  போற்றி
5. ஓம் அருள் இலட்சுமியே  போற்றி

6. ஓம் அஷ்ட இலட்சுமியே  போற்றி
7. ஓம் அழகு இலட்சுமியே  போற்றி
8. ஓம் ஆனந்த இலட்சுமியே  போற்றி
9. ஓம் ஆதி இலட்சுமியே  போற்றி
10. ஓம் ஆத்ம இலட்சுமியே  போற்றி
11. ஓம் ஆளும் இலட்சுமியே  போற்றி
12. ஓம் இஷ்ட இலட்சுமியே  போற்றி
13. ஓம் இதய இலட்சுமியே  போற்றி
14. ஓம் இன்ப இலட்சுமியே  போற்றி
15. ஓம் ஈகை இலட்சுமியே  போற்றி
16. ஓம் உலக இலட்சுமியே  போற்றி
17. ஓம் உத்தம இலட்சுமியே  போற்றி
18. ஓம் எளிய இலட்சுமியே  போற்றி
19. ஓம் ஏகாந்த இலட்சுமியே  போற்றி
20. ஓம் ஒளி இலட்சுமியே  போற்றி
21. ஓம் ஓங்கார இலட்சுமியே  போற்றி
22. ஓம் கருணை இலட்சுமியே போற்றி
23. ஓம் கனக இலட்சுமியே  போற்றி
24. ஓம் கான இலட்சுமியே  போற்றி
25.ஓம் குண இலட்சுமியே  போற்றி
26. ஓம் குங்கும இலட்சுமியே  போற்றி
27. ஓம் குடும்ப இலட்சுமியே  போற்றி
28 .ஓம் குளிர் இலட்சுமியே  போற்றி
29. ஓம் கம்பீர இலட்சுமியே போற்றி
30. ஓம் கேசவ இலட்சுமியே  போற்றி
31. ஓம் கோவில் இலட்சுமியே போற்றி
32. ஓம் கோவிந்த இலட்சுமியே போற்றி
33. ஓம் கோமாதா இலட்சுமியே போற்றி
34. ஓம் சர்வ இலட்சுமியே  போற்றி
35. ஓம் சக்தி இலட்சுமியே  போற்றி
36. ஓம் சக்கர இலட்சுமியே  போற்றி
37. ஓம் சத்திய இலட்சுமியே  போற்றி
38. ஓம் சங்கு இலட்சுமியே  போற்றி
39.ஓம் சந்தான இலட்சுமியே  போற்றி
40. ஓம் சந்நிதி இலட்சுமியே  போற்றி
41. ஓம் சாந்த இலட்சுமியே  போற்றி
42. ஓம் சிங்கரா இலட்சுமியே போற்றி
43. ஓம் சீல இலட்சுமியே  போற்றி
44. ஓம் சீதா இலட்சுமியே  போற்றி
45. ஓம் சுப்பு இலட்சுமியே  போற்றி
46. ஓம் சூரிய இலட்சுமியே  போற்றி
47. ஓம் செல்வ இலட்சுமியே  போற்றி
48. ஓம் செந்தாமரை இலட்சுமியே  போற்றி
   49. ஓம் சொர்ண இலட்சுமியே  போற்றி
   50. ஓம் ஞான இலட்சுமியே  போற்றி
   51. ஓம் தங்க இலட்சுமியே  போற்றி
   52. ஓம் தானிய இலட்சுமியே  போற்றி
   53. ஓம் திரிபுர இலட்சுமியே  போற்றி
   54. ஓம் திருபுகழ் இலட்சுமியே  போற்றி
   55. ஓம் திலக இலட்சுமியே  போற்றி
   56. ஓம் தீப இலட்சுமியே  போற்றி
   57. ஓம் துளசி இலட்சுமியே  போற்றி
   58. ஓம் துர்க்கா இலட்சுமியே  போற்றி
   59. ஓம் தூய இலட்சுமியே  போற்றி
   60. ஓம் தெய்வ தேவ இலட்சுமியே  போற்றி
   61. ஓம் தைரிய இலட்சுமியே  போற்றி
   62. ஓம் பங்கய இலட்சுமியே  போற்றி
   63. ஓம் பாக்கிய இலட்சுமியே  போற்றி
   64. ஓம் பாற்கடல் இலட்சுமியே  போற்றி
   65. ஓம் புண்ணிய இலட்சுமியே  போற்றி
   66. ஓம் பொன்னிற இலட்சுமியே  போற்றி
   67. ஓம் போக  இலட்சுமியே  போற்றி
   68. ஓம் மங்கள இலட்சுமியே  போற்றி
   69. ஓம் மஹா இலட்சுமியே  போற்றி
   70. ஓம் மாதா இலட்சுமியே  போற்றி
   71. ஓம் மாங்கல்ய இலட்சுமியே  போற்றி
   72. ஓம் மாசிலா இலட்சுமியே  போற்றி
   73. ஓம் முக்தி இலட்சுமியே  போற்றி
   74. ஓம் முத்து இலட்சுமியே  போற்றி
   75. ஓம் மோஹண  இலட்சுமி
   76. ஓம் வரந்தரும் இலட்சுமியே  போற்றி
77. ஓம் விளக்கு இலட்சுமியே  போற்றி
79. ஓம் விஷ்ணு இலட்சுமியே  போற்றி
80. ஓம் வீட்டு இலட்சுமியே  போற்றி
81. ஓம் வெற்றி இலட்சுமியே  போற்றி
82. ஓம் வேங்கட இலட்சுமியே  போற்றி
83. ஓம் வைர இலட்சுமி யே  போற்றி
84.  ஓம் வைகுண்ட இலட்சுமி யே  போற்றி
85.  ஓம் நாராயண இலட்சுமி யே  போற்றி
86.  ஓம் நாக இலட்சுமியே  போற்றி
87.  ஓம் நித்தியா இலட்சுமி யே  போற்றி
88. ஓம் நீங்கா இலட்சுமியே  போற்றி
89. ஓம் ராம இலட்சுமியே  போற்றி
90. ஓம் ராஜ இலட்சுமியே  போற்றி
91. ஓம் ஐஸ்வரிய இலட்சுமியே  போற்றி
92. ஓம் ஜெய இலட்சுமியே  போற்றி
93. ஓம் ஜோதி இலட்சுமியே  போற்றி
94. ஓம் ஜீவ இலட்சுமியே  போற்றி
95. ஓம் குபேர இலட்சுமியே  போற்றி
96.ஓம் திருமாமகளே இலட்சுமியே  போற்றி

   97. ஓம்ஹம்ஸவாகினியேஇலட்சுமியே  போற்றி
98. ஓம் சௌபாக்கிய இலட்சுமியே  போற்றி
99. ஓம்  ஸ்ரீ இந்திர இலட்சுமியேபோற்றி
100. ஓம்  ஸ்ரீ அன்ன பூரணி இலட்சுமியே  போற்றி

   101. ஓம் ஸ்ரீ கஜலட்சுமி  போற்றியே  போற்றி
102.  ஓம் ஸ்ரீ ஆதிலட்சுமி போற்றி
103. ஓம் ஸ்ரீ சந்தானலட்சுமி போற்றி
104.ஓம் ஸ்ரீ தனலட்சுமி போற்றி
105. ஓம் ஸ்ரீ தான்யலட்சுமி போற்றி
106. ஓம் ஸ்ரீ விஜயலட்சுமி போற்றி
107. ஓம் ஸ்ரீ வீரலட்சுமிபோற்றி
108. ஓம் ஸ்ரீ மஹாலட்சுமிபோற்றி
ஓம் ஸ்ரீஇலட்சுமி போற்றி  போற்றி ஓம்

நைவேத்தியம் :    பால் பாயாசம்

லெட்சுமி வாசம் செய்யும் வீடுகள் :

1) எவர் இல்லத்தில் காலையில் பிரம்ம முகூர்த்த நீரத்தில் நீராடி தீபம் ஏற்றப்படுகிறதோ அங்கு லக்ஷ்மி தேவி பிரசன்னமாவாள்.
2) சண்டை சச்சரவு இல்லாத அமைதியான குடும்பத்தில் லக்ஷ்மி இருப்பாள் .
  3) எங்கு ஆச்சாரம் கடைபிடிக்கப் படுகிறதோ அங்கு இருப்பார்.
  4)எங்கு தெய்வ வழிபாடுகள் நடைபெறுகிறதோ அங்கு இருப்பார்.
 5)எங்கு பாத்திரங்கள் பரப்பப்படாமல் இருக்கிறதோ அங்குஇருப்பாள்.
6)எங்கு தானியங்களும், உணவுப் பொருள்களும் சிந்தாமலும், சிதறாமலும் இருக்கும் இடத்தில் இருப்பாள்.

இனி யாரிடம் லெட்சுமி தங்கமாட்டாள் என்பதைப் பார்ப்போம்:-
கலகம் செய்பவர், குரோதமாக பேசுபவர், பொய் கூறுபவர், சந்தியாகாலத்தில் உண்பவர், மயிர், கரி, எலும்பு இவைகளை மிதிப்பவர். கால் கழுவாமல் வீட்டிற்கு வருபவர், தாய்,தந்தை பணிவிடை செய்யாதவர், ஸ்வகர்மாவை செய்யாதவர், நகத்தைப் பல்லால் கடிப்பவர் ஆகியோர் வீட்டில் லெட்சுமி தங்கமாட்டாள்.

லெட்சுமி தங்கும் இடம்:

 தாமரை, காக்கும் கடவுளாகிய விஷ்ணுவின் மார்பு, பசு மாடு, பூர்ண கும்பம், மஞ்சள், குங்குமம், ஸ்ரீ சூரணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, சுவாஸ்திகா சின்னம், யானை, கண்ணாடி, ஆகியவை ஆகும். லெட்சுமிக்கு பிடித்தது வில்வம், பிடித்த பூ சம்மந்தி, அன்போடும், அழகோடும் கூடிய ஒற்றுமையான தம்பதியர், உள்ளத்தைக் கவரும் ஆடம்பரமற்ற ஆடைகள், அழகான அருமையான அணிகலன்கள் மனதிற்கும் நாவிற்கும் சுவையான உணவு, நறுமணம் கொண்ட நலம் தரும் தாம்பூலம், அற்புதமான மனத்தைக் கொள்ளை கொள்ளும் வாசனைத் திரவியம், உள்ளத்தையும் உணர்வையும் கொள்ளை கொள்ளும் இனிய இசை, மனம் கவரும் அழகான மலர்கள். இவைகள் அனைத்தையும் கொடுப்பாள்.

          இவளுக்கு பிடித்ததோ நெல்லிக்கனி. லெட்சுமியின் அருள் பெற்ற மரம் நெல்லிமரம். ஒரு வீட்டில் நெல்லி மரம் இருக்குமாயின் அங்கு லெட்சுமி நித்தியமாய் வாசம் செய்கிறாள். இந்த நெல்லிக்கனியை வெள்ளிகிழமை, அம்மாவாசை, மற்றும் இரவிலும் உண்ணக்கூடாது. தானத்தில் சிறந்த தானம் நெல்லிக்கனி தானம்...

இங்கனம் JSK ஆன்மீகம் - அறிவுரை-இந்து மதம்

No comments: