youtube

13 March 2016

சுக்கிர பகவான்.

ஜாதகத்தில் சுக்கிரன் கெட்டு இருந்தாலும், பலம் குறைந்து இருந்தாலும், திசை/ புக்தி நடந்தாலும் செய்யவேண்டிய சிறப்பு பரிகாரம்.

1. வெள்ளிக்கிழமையில் மொச்சை(வெள்ளை) பண்டங்கள் செய்து பிறருக்கு தானம் கொடுக்கலாம், அல்லது வீட்டுக்கு வரும் உறவினருக்கு கொடுக்கலாம், தானும் சாப்பிடலாம்.

2. திருமணமாக விருக்கும் கன்னி பெண்களுக்கு வஸ்திரம் வாங்கி (தானம்)கொடுக்காலம்.

3. ஏழ்மையில் இருக்கும் புதிதாக வயதுக்கு வந்த பெண்களுக்கு உடை, இனிப்பு வாங்கி கொடுத்து ஆசீர்வாதம் செய்யவும்.

4. வெள்ளிக்கிழமையில் அத்தி மரத்தை சுற்றிலும் சுத்தம் செய்து வழிபடவும், முடிந்தால் சுற்றி தீபம் வைத்து தூபம் காட்டி வழிபடலாம்.( பிறந்த நட்சத்திரம் மற்றும் வெள்ளிக்கிழமை சேர்ந்து வரும் தினம் மிக விஷேசம்)

5. வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஓரையில் (காலை 6.00 - 7.00) வீட்டின் அல்லது பூஜை அறையின் கிழக்கு பகுதியில் ஒரு தீபம் கிழக்கு முகமாக வைத்து, தீபம் முன் வெண்தாமரை மலர்கள் வைத்து, ஓம் சுக்கிரயா நமஹா என்று 108 முறை சொல்லி வழிபடவும்.

6. வெள்ளிக்கிழமை காலை சுக்கிர ஓரையில், ஒரு தாம்பாளத்தில் சிறிது வெண் மொச்சை பரப்பி வைத்து அதன்மேல் 20 அகல்கள் நல்லெண்ணை ஊற்றி ஏற்றி வைத்து, துபாம் காண்பித்து கற்பூர ஆராதனை செய்யவும். சுக்கிர நாமாவளி/ காயத்ரி 108 முறை செல்லவும். கிழக்கு மூலையில் கிழக்கு முகமாக ஏற்ற வேண்டும்.

7. பெண் தெய்வங்களுக்கு பூஜைகள் செய்து வழிபடலாம். பெண் தெய்வங்களுக்கு தரமான சேலைகள் வாங்கி சமர்ப்பிக்கலாம்.

8.நல்ல சுத்தமான சாம்பிராணியில் லவங்கத்தை நன்கு பொடி செய்து போட்டு வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி படத்திற்கு தூபம் போட்டு வீடு முழுவதும் போடவும்.

இதானல் வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள், எல்ல கலைகளிலும் தேர்ச்சி உண்டாகும், கலைத்துறையில் வெற்றி �

No comments: