youtube

20 April 2016

கிரக தொல்லைகளில் இருந்து விலக எளிய பரிகாரங்கள்

சூரியன் : தினசரி காலை சூரிய வழிபாடு செய்து வரவும்.காலை சூரியன் எழுவதை பார்த்து வருவது மிக பெரிய தடங்கல்களையும் விலக செய்யும். முடிந்தால் 'ஆதித்ய ஹ்ருதயம்' கூறி வரலாம். " ஓம் ஆதித்தியாய நமஹ"  108 முறை  கூறி வருவதும் பலன் அளிக்கும். மொட்டை மாடியில் அமர்ந்து பார்த்து வருபவர்கள் வெறும் தரையில் அமர கூடாது. எதாவது விரிப்பின் மேலோ , பலகையின் மேலோ  அமரலாம்.15 நிமிடங்கள் பார்த்து வரவும்.பின்பு மூன்று முறை சூரியனுக்கு நீர் வார்த்து  வணங்கி, தின வேலைகளை தொடரலாம்.

சந்திரன்: மன கவலைகளால் கஷ்டப்பட்டு கொண்டே இருப்பவர்கள், மன கலக்கம், அழுத்தம், ஞாபக மறதி உள்ளவர்கள் அனைவரும் தினசரி இரவு சந்திர தரிசனம் செய்து வர மேற்கண்ட குறைகள் நீங்கும். 15 நிமிடம் செய்தால் போதுமானது. நிலவை பார்த்து கொண்டிருக்கும் பொழுதே சிவபார்வதி சமேதராய் இருப்பதை போல் நினைத்து பார்த்து வரவும்.பார்த்து முடிந்ததும் 10 நிமிடங்கள் ஆழமாக நிதானமாக சுவாசம் செய்து முடிக்கவும்.

செவ்வாய் : தன்னம்பிக்கை இல்லாமை, இனம் தெரியாத பயம், எதிரிகளால் தொல்லை, குறைந்த இரத்த அழுத்தம் போன்றவை விலக : ஒரு பேப்பர் (வெள்ளை தாள்) எடுத்து அதில் குங்குமத்தில் தேன் குழைத்து ஒன்றரை அல்லது இரண்டு அங்குல அளவிற்கு வட்டம் இட்டு கொள்ளவும்-பின்பு சிகப்பு ஆடை அணிந்து உங்களுக்கு எதிரில் அந்த தாளை 2 அடி தள்ளி வைத்து அமர்ந்து  நிதானமாகவும் ஆழமாகவும் சுவாசம் செய்து அந்த வட்டத்தையே பார்த்து வரவும். 15 நிமிடம் செய்தால் போதுமானது. தினசரி செய்து வர மேற்கண்ட குறைகள் நீங்கும்.


No comments: