youtube

29 August 2017

ஜோதிடம் / ஜாதகம் (தொடர்ச்சி )

ஜோதிடம் / ஜாதகம் (தொடர்ச்சி )

ஜோதிடம் / ஜாதகம் (தொடர்ச்சி )

                                ஒரு பெரும் செல்வந்தரின் ஒரே மகனுக்கு திருமணம் முடிப்பதற்காக5 ஜோதிடரிடம் பொருத்தம் பார்த்ததில் ஐவரும் வெகு பிரமாதம்  . 
என்று கூறிவிட்டனர். திருமணத்திற்கு நாளும்  குறித்து  திருமணம் நடக்க ஒருவாரம் இருக்கும் போது , மாப்பிள்ளை விபத்தில் இறந்துவிட்டார். இது ஏன் நடந்தது ?
                                         ராமாயணத்தில் ராமருக்கு  பட்டாபிஷேகம் நடக்க நாள் குறித்தவர் வசிஷ்ட மகரிஷி . அவர் குறித்த நேரத்தில் பட்டாபிஷேகம் நடக்கவில்லை. ராமன்  காட்டிற்கு சென்றார் . இது ஏன் நடந்தது ?

                                        இயேசு அருள் நிறைந்தவர் , தேவகுமாரன் , மகாவல்லமை   உடைவர் , இறந்தவரை உயிர்பிக்க செய்தார் , குஷ்டரோகியை குணமாக்கினார் .பிற்காலத்தில்         நடக்கப்போவதை  உணர்ந்தவர் . அவர் கூறுகிறார் " எவனுடைய பாதத்தை
கழுவி நான் முத்தமிடுகிறேனோ அவன் என்னைக்  காட்டிக்கொடுப்பான் . பேதுரு என்ற சீடனை நோக்கி " பேதுரு கோழி கூவுவதற்கு முன் என்னை நீ 3 முறை மறுதலிப்பாய் ; நான் இறந்தவுடன் என் ஆடைகளை பங்கு போட்டுக்கொள்வார்கள் " என கூறினார் .அப்படியே நடந்தது ,பிதாவின் கட்டளை எதுவோ அது நடக்கட்டும் என  இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார் .

No comments: