youtube

10 February 2016

அழியாத செல்வமா? அழியும் செல்வமா? (பஜ கோவிந்தம் 2

அழியாத செல்வமா? அழியும் செல்வமா? (பஜ கோவிந்தம் 2)


மூட ஜஹீஹி தனாகம த்ருஷ்ணாம்
குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்
யல்லபஸே நிஜ கர்மோப்பாத்தம்
வித்தம் தேன வினோதய சித்தம்
மூட - ஏ மூடனே

ஜஹீஹி தன ஆகம த்ருஷ்ணாம் - அளவற்ற செல்வம் சேர்க்கும் உன் தணியாத தாகத்தை விட்டுவிடு

வித்ருஷ்ணாம் மனஸி ஸத் புத்திம் குரு - சஞ்சலமும் பேராசையும் இல்லாமல் மெய்ப்பொருளைப் பற்றிய எண்ணங்களை உன் மனதில் நினை.

யத் லபஸே நிஜ கர்ம உபாத்தம் வித்தம் - நீ அடையும் செல்வம் எல்லாமே நீ செய்யும் வினைகளாலும் வினைப்பயன்களாலும் தான்.

தேன வினோதய சித்தம் - அதைக் கொண்டு உன் மனதில் திருப்தி அடை.

நீ கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய். கோவிந்தனை வணங்குவாய்.

***

25 ஏப்ரல் 2008 அன்று சேர்த்த பகுதி:

பஜகோவிந்தம் பாடல்கள் எல்லாம் இல்லறத்தாரை விட துறவறத்தாருக்கே இன்னும் ஏற்றது என்பதோர் கருத்து எனக்கும் உண்டு. பல பாடல்களில் தெளிவாக அந்த அறிவுரை துறவிகளுக்கே என்று தெரியும். இந்தப் பாடலில் கருத்தோ எல்லோருக்கும் உரியதாகத் தெரிகிறது.

இந்தப் பாடலில் எடுத்தவுடனேயே மூடனே என்று தான் தொடங்குகிறார். அழியாத செல்வத்தை அடைய நேரத்தைச் செலவழிக்க வேண்டியிருக்க அழியும் செல்வத்தில் மனத்தைச் செலுத்துகிறாயே என்று கேட்கிறார். செய்யும் செயல்களுக்கு ஏற்ப பயன் கிடைக்கும். இங்கே கர்ம என்ற சொல்லுக்கு செயல்கள் என்றும் பொருள் கொள்ளலாம்; வினைப்பயன்கள் என்றும் பொருள் கொள்ளலாம். இரண்டு வகையிலும் கிடைக்க வேண்டிய செல்வம் கிடைத்தே தீரும். கிடைப்பதை வைத்து மனத்தைத் திருப்தி படுத்திக் கொண்டு நிலையான செல்வத்தை அடைவதில் மனத்தைச் செலுத்து என்று சொல்கிறார் இந்த சுலோகத்தில்.

No comments: