youtube

20 February 2016

மஹா ம்ருத்யுஞ்ஜய’ மந்திரம்

மஹா ம்ருத்யுஞ்ஜய’ மந்திரம்

     
‘ஓம் த்ரையம்பகம் யஜாமஹே
ஸுகந்திம் புஷ்டி வர்த்தனம்!
உர்வாருக மிவ பந்தனான்
ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்!!’

இம்மந்திரத்தை தினமும் 108 அல்லது 48 என்ற எண்ணிக்கையில் கூறி வந்தால், ஆரோக்கியமான வாழ்வை நிச்சயமாக அடையலாம். ஜபத்தின் எண்ணிக்கைக்கு ருத்ராட்ச மாலையைப் பயன்படுத்த வேண்டும். இதிலும் வழக்கம் போல அசைவ உணவைத் தவிர்க்க வேண்டும்.

இம்மந்திரத்தை காலை, மாலை உச்சாடணம் செய்து வருவது விரைவான பலன்களை அளிக்கவல்லது. இந்த மந்திரத்தை சுத்தத் திருநீற்றில் 48 முறை பிரயோகம் செய்து அணிந்து கொள்வது மிகவும் விசேஷமானதாகும். உடலின் எந்தப் பகுதி பாதிப்படைந்திருக்கிறதோ அந்தப் பகுதியில் மந்திர உச்சாடணம் செய்த விபூதியைப் பூசலாம்.

அத்தகைய விபூதி சர்வ ரோக நிவாரணியாகச் செயல்படுவதால் உடல் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பூசலாம். சிறிது விபூதியை வலது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு மேற்கண்ட மந்திரத்தை குறிப்பிட்ட அளவு  ஜபம் செய்து விட்டு அந்தத் திருநீற்றினை வெள்ளி அல்லது செம்பு டம்ளரில் வைக்கப்பட்ட சுத்த ஜலத்தில் போட்டு அதை அருந்தி விடலாம். இதற்கு மிக நல்ல பலன் கிடைக்கும். ஆனால், திருநீறு சுத்தமான பசுஞ்சாணத்தில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்

No comments: